Showing posts with label நகைச்சுவை. Show all posts
Showing posts with label நகைச்சுவை. Show all posts

வலையுலக சூப்பர் ஸ்டார் யார்? - லாஜிக்கலான தீர்(ப்பு)வு

Friday, 3 July 2009

இதில் யாருக்காவது மாற்றுக் கருத்து இருந்தால், பின்னூட்டத்தில் சொல்லுங்கள். என் தரப்பு ஞாயத்தை விளக்குகிறேன்.


(படத்துக்கும் இடுகைக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. பெரிதாக்கிப் பார்த்து டைம் வேஸ்ட் பண்ண வேண்டாம்)


ஒன்றிலிருந்து ஒன்பதுக்குள் ஒரு எண்ணைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். (உதாரணமாக 2)

விடையை மூன்றால் பெருக்கவும். (2 x 3 = 6)

அதை மூன்றைக் கூட்டவும். (6 + 3 = 9)

மீண்டும் விடையை மூன்றால் பெருக்கவும். (9 x 3 = 27)

விடையாகக் கிடைக்கும் இரண்டிலக்க எண்ணின், இரண்டு இலக்கங்களையும் கூட்டவும். (2 + 7 = 9)

உங்களுக்கு விடையாகக் கிடைத்த எண்ணிற்க்கு நேரே உள்ளவர் தானே, உங்கள் மனதில் இருக்கும் செலிப்ரிட்டி?


1. சோமாறி சே... சோம்பேறி

2. எஸ். ராம கிருஷ்ணன்

3. சாரு நிவேதிதா

4. ஜெய மோஹன்

5. நாகார்ஜூனன்

6. ஆமிர் கான்

7. பைத்தியக்காரன்

8. Fake IPL player

9. சக்கரை சுரேஷ்

10. சோம்பேறி (ஹி ஹி.. திரும்பத் திரும்ப வந்தாலாவது என் பேரை சொல்ல மாட்டீகளானு ஒரு நப்பாசை தான்)

ராஸ்ஸ்ஸ்ஸ்ஸ்கல்ஸ் - (சத்தியமாக உரையாடல் சிறுகதை போட்டிக்காக)

Monday, 29 June 2009

எம்.எல்.ஏ விடுதி வாசலில் ஏதோ தண்ணி பிரச்சனைக்காக நடிகர் சங்க கூட்டம். நயன்தாரா கூட வந்திருக்கிறாராம். அந்தப் புண்ணியவதியால் ஏற்பட்ட அதீத வாகன நெரிசல் காரணமாக, திருவல்லிக்கேணிக்கு போக வேண்டிய பேருந்து, மவுண்ட் ரோடிலேயே அனைத்துப் பயணிகளுக்கும் டாட்டா காட்டி விட்டுத் திரும்பியது. ஒலிப்பெருக்கியில் ராதாரவி குரல் மவுண்ட் ரோடு வரை அதிர்ந்தது. திரையில் காணக் கூடிய துணை நடிகர்கள் முகங்கள் சாலையில் சர்வசாதாரணமாய் தென்பட்டது.

அந்தக் கூட்டத்தைத் தாண்டி தான் லிஸியும், நித்தியும் போக வேண்டிய சென்னைப் பல்கலைக் கழக மகளிர் விடுதி. லிஸி அவள் கிராமத்திலிருந்து சென்னை வந்த இந்த ஒரு வருடத்தில், ஊர்க்காரர்களிடம் நான் கமலுடன் காப்பி சாப்பிட்டேன், சூர்யாவுடன் சூப் சாப்பிட்டேன் என்று அளந்து விட்டிருந்தாலும், மண்டை மனோகரைத் தவிர வேறு எந்த நடிக நடிகையரையும் நேரில் பார்த்ததில்லை. இப்போது நிஜமாகவே பார்க்கப் போகிறோம் என்றதும், கைபேசியிலிருந்த காமெராவை தயாராக வைத்துக் கொண்டாள்.

அவள் நினைத்ததை விட ரொம்பவே பெரிய கூட்டம். பெண்கள் சிலர் எக்கி எக்கி, மேடையை எட்டிப் பார்க்க முயன்று தோற்று, தொலைக்காட்சியில் பார்த்துக் கொள்ளலாமென திரும்பி நடந்தார்கள். அவளும், நித்தியும் 'எக்ஸ்க்யூஸ் மீ.. எக்ஸ்க்யூஸ் மீ..' என்றபடி நெரிசலான கூட்டத்திற்குள் ஒரு வழியாகப் புகுந்து விட்டார்கள்.

கூட்டத்தில் ஒருவன் லிஸி மேல் விழ, திடுக்கிட்டவள் சமாளித்துக் கொண்டு ஸாரி கேட்கப் போகிறானென நினைத்து 'இட்ஸ் ஓக்கே' என்றபடி திரும்பினாள். ஆறரை அடி உயரத்தில் வாட்ட சாட்டமாக இருந்த அவன், சொத்தைப் பல்லைக் காட்டி ஒரு மாதிரியாக சிரிக்க, 'ராஸ்ஸ்ஸ்ஸ்கல்' என்ற முனுமுனுப்புடன் முறைத்தபடி, நித்திக்குப் பின்னால் பத்திராமாக ஒண்டிக்கொண்டு, 'சீக்கிரம் போடீ' என அவசரப்படுத்தினாள்.

மறுபடி தகறாரான இடத்தில் கை வைக்கப்பட, 'உன் சொத்தைப் பல்லைப் பேத்துடுறேன் பாரு' என்பது போல் திரும்பி முறைத்தால், இது தலையில் காரக்கொழம்பு கொட்டிக் கொண்ட கிழிந்த ஜீன்ஸ்காரன். அதற்குள் வேறொரு பக்கத்திலிருந்து இன்னொரு ஐம்பத்தி சொச்ச வயசு வாலிபன், இன்னொரு குப்பத்துக் கிழிந்த பனியன்காரன், இன்னொரு ஸ்கூல் யூனிஃபார்ம்காரன்.

ம்ம்ஹூம்.. பெரும்பிழை. இந்தக் கூட்டத்தில் நுழைந்திருக்கவே கூடாது. நித்தியை நிறுத்தி 'வந்த வழிலயே திரும்பிப் போயிடலாமாடீ. ப்ளீஸ்' என அழாத குறையாக கேட்க, 'நானும் ரொம்ப நேரமா வந்த வழியை தான்டி தேடிகிட்டிருக்கேன்' என்றபடி திரும்பிய நித்தியின் கண்களில் ஓகேனக்கல் நீர்வீழ்ச்சி! சட்டையின் பொத்தான்கள் பிய்க்கப்பட்டிருந்தது.

திறந்தவெளி மிருகக்காட்சியில் காணாமல் போன குழந்தையின் மிரட்சியுடன், லிஸி கையில் வைத்திருந்த புத்தகத்தைப் பாதுகாப்பாக இன்னும் இறுக்கமாகக் கட்டிக் கொண்டாள்.

கொஞ்சம் தள்ளி, கூட்டத்தின் வேறொரு பகுதியில் டீசண்டாக, டையெல்லாம் கட்டிக் கொண்டு நின்றவர்கள் (மேன்ஷன் வாழ் பெருமக்களாக இருக்கக் கூடும்) பக்கமாக நகர்ந்தார்கள்.. அப்போது எருமைமாடு போல, முழு விசையுடன் வந்து ஒருவன் அவள் மேல் மோத, தடுமாறி பின்னாலிருந்தவன் மேல் விழுந்தவள், நித்தியின் கையை விட்டுவிட்டாள். நித்தி மேன்ஷன்வாசிகள் பக்கம் அடித்து செல்லப்பட்டு விட்டாள்.

நல்லவேளையாக, அவன்களுக்குள் ஒற்றுமை இல்லை. ஒருவன் கீழே தள்ளி விட முயன்றால், ஒருவன் வேறொரு பக்கம் இழுத்தான். ஆளுக்கு ஒரு பக்கம் இழுக்கவும், தள்ளி விடுவதுமாக பந்தாடிக் கொண்டிருந்தான்கள். அவளோ நாலரை அடி குள்ளி. சுற்றியிருந்தவர்கள் கெடா போல் இருந்தார்கள். அவளுக்கு எது நித்தி போன பக்கம்; எந்தப் பக்கமாக நகர போராடுவதென்றே தெரியவில்லை. இந்த சொத்தைப் பல்லனை அவள் நுழையும் போதே பார்த்தாள். சுற்றி சுற்றி ஆரம்பித்த இடத்திற்கே வந்து விட்டாளா அல்லது அவன் இவளைத் தேடி உள்ளே வந்து விட்டானா! ஒன்றும் விளங்கவில்லை.

அவர்கள் இம்சை அதிகமாகவே, கையில் வைத்திருந்த கனத்த புத்தகத்தால், பதிலுக்கு தாக்கத் தொடங்கினாள். அவர்கள் மேலும் உற்சாகமடைந்து, புத்தகம், கைப்பை அனைத்தையும் பிடுங்கி எறிந்து விட்டு, அதிகமாக சீண்டினார்கள். இவளது அலறல் ஸ்பீக்கர் சத்தத்தில் ஒன்றுமில்லாமல் போனது. கத்தி கத்தியே சக்தி முழுவதும் போய் விட, கொஞ்சம் கொஞ்சமாக நினைவிழந்து கொண்டே வந்தாள். கூடாது.. இப்போது மயங்கிக் கீழே விழுந்து விட்டால் சோலி முடிந்தது.

இன்னும் கொஞ்ச நேரம் எப்படியாவது சமாளித்து விட்டால் போதும். நித்தி யார் உதவியுடனாவது வந்து காப்பாற்றி விடுவாள், என்ற நம்பிக்கையுடன் போராடிக் கொண்டிருந்தவளின் எண்ணத்தில் தீ வைப்பது போல, நித்தியின் கதறல் வெகு அருகில் கேட்டது. அவளை விட நித்தி மோசமான நிலமையில் இருக்கிறாளெனப் புரிந்தது.

இப்போது சமக தலைவர் சரத்குமார் பேசுவார் என்ற அறிவிப்புடன் ஒலிப்பெருக்கி ஊமையானது. இது தான் சமயமென சக்தி முழுவதையும் ஒன்று திரட்டிய லிஸி 'யாராவது காப்பாத்துங்க. ப்ளீஸ்' என்று கத்த, அவளை சுற்றியிருந்தவர்கள் அதிக முன்னெச்சரிக்கையுடன், 'தலைவா' என்று மிகப் பெரிதாகக் கூக்குரலிட்டதில், அவள் குரல் ஒன்றுமில்லாமல் போனது.

இவ்வளவு பெரிய கூட்டத்தில் ஒரு நல்லவன் கூடவா இல்லை? வாய்ப்பு கிடைக்காத வரை எல்லாருமே நல்லவர்கள் தான் என்று எங்கேயோ படித்தது நினைவுக்கு வந்தது. பக்கத்தில் தானே கடல் இருக்கிறது. சுனாமி வந்து ஒரே அள்ளாய் இவனுகளை அள்ளிக் கொண்டு போகக் கூடாதா!

கூட்டத்திலிருந்த அந்த சொத்தைப் பல்லன், எப்போது அவன் பக்கம் தள்ளப் படுவாள். எங்கே தொட்டால் கிக் அதிகமாக இருக்கும் என்று பேராவலுடன் காத்திருந்தான். எரிகிற கொள்ளியில் நல்ல கொள்ளி இவன் தான் என்று முடிவு செய்து, அவனருகில் தள்ளப்பட்டதும் அவனை இறுக்க அணைத்துக் கொண்டு, 'ஸார்.. ப்ளீஸ் ஸார்.. என்னை எப்படியாவது வெளியே கொண்டு போய் விட்டுடுங்க ஸார்.. ப்ளீஸ்' என்று கதற, இதுவரை மன்சூரலிகான் போல கழுத்தை சாய்த்து கொண்டு லொக்கேஷன் தேடியவன், தமிழ் சினிமா க்ளைமேக்ஸ் வில்லன் போல திடீர் நல்லவனாகி 'த்தா.. டேய்.. உங்களைப் பெத்ததும் பொம்பளை தானடா' என்றவாறு ஒரு கையால் அவளை இறுக்கிக் கொண்டு, மறுகையால் மற்றவர்களைத் தள்ளி விட்டான்.

உதவியாக அவனது நண்பர்கள் போல இருவர், (அவர்களைத் தவிர) யாரும் தொட முடியாதபடி வந்து அவள் மீது அப்பிக் கொண்டனர். பாதுகாக்குறாங்களாமாம். தடவல்கள் தொடர்ந்து கொண்டிருந்தாலும், நால்வரும் ஒருவழியாக அந்த ஜன சமூத்திரத்திலிருந்து வெளியே வந்து விழுந்தார்கள்.

அங்கே, தரையில் கால் வைக்கக் கூட இடமில்லாமல், ஒருவர் மீதொருவராக பலர் அமர்ந்திருந்தனர். அவன்களும் கையை வைத்துக் கொண்டு சும்மா இல்லை. நோண்டியவர்களையும், காலை வாறி அவளைக் கீழே அமிழ்த்தி விட முயன்றவர்களையும், சமாளித்தவாறு, மேடைக்கருகில் நின்று கொண்டிருந்த போலீஸைப் பார்த்து 'ஸார்.. ஸார்..' என கத்த, அவரோ அப்போது மேடையில் ஆற்று ஆற்று என்று உரையாற்றிக் கொண்டிருந்த சரத்குமாரைப் பார்க்க தான் அவள் பரவசமாக பாய்ந்து வருகிறாள் என்று நினைத்தாரோ என்னவோ லட்டியை ஆட்டி 'இந்தப் பக்கமெல்லாம் வரக் கூடாது. போ' என்பது போல் சைகை செய்தார்.

"ஹாஸ்டல் ஸார்.. ஹாஸ்டலுக்கு போகனும்" என்று எரிச்சலும், பதற்றமுமாக விடுதியை நோக்கிக் கையைக் காட்டினாள்.

அவர் மூன்று அடி உயரத்தில் இருந்த தடுப்பைக் காட்டி, அந்தப் பக்கம் வழியில்லை, வந்த வழியே திரும்பப் போய் பீச் பக்கமாக சுற்றி விடுதிக்கு போகச் சொல்லி ரூட் காட்டினார்.

போலீஸைப் பார்த்த தைரியத்தில் காலை கஷ்டப்பட்டு விடுவித்துக் கொண்டு, நோண்டிக் கொண்டிருந்த ஒருவனை ஹை ஹீல்ஸ் செருப்பால் எட்டி உதைத்து, 'முண்டம்.. சோத்தை தானே திங்கிற' என்று கத்தினாள்.

இப்போது நிலைமை போலீஸுக்கு ஓரளவுக்கு புரிந்து போக, அங்கு நின்றபடியே விரல்களை அசைத்து வா என்பது போல் சைகை செய்தார். வந்து கொண்டிருந்த போதே ஒருவன் கை வைக்க, வேக நடையில் அங்கு வந்த போலீஸ் 'என்ன தைரியம் இருந்தா என் முன்னாலேயே கை வைப்ப' என்றபடி லட்டியால் அவன் தோள்பட்டையில் ஓங்கி ஒரு போடு போட்டார். நித்தி பற்றி சொல்ல, இரு காவலர்கள் உதவியுடன், முழுதாக கிழிந்து போன சட்டையும், தலைவிரி கோலமுமாக நித்தியும் வெளியே கொண்டு வரப்பட்டாள்.

நல்ல வேளையாக, இவ்வளவு களேபரத்தையும் பத்திரிக்கையாளர்கள் யாரும் கண்டு கொள்ளவில்லை. பார்த்திருந்தால் டமால் பனால் என்று, எதுகை மொகனையில் அவர்கள் பரம்பரையே நாண்டு கொண்டு சாகுமளவுக்கு ஏதாவது எழுதியிருப்பார்கள். தெய்வாதீனமாக அப்போது நயன்தாரா பேசவில்லை. பேசியிருந்தால் அந்த போலிஸ்காரர் கூட அவர்களை கண்டு கொண்டிருப்பாரா என்பது சந்தேகமே!

'சுத்தி வந்தா என்ன?’ என்று போலீஸ் லெக்சரைத் துவங்கினார். முன்ன பின்ன செத்திருந்தா தானே சுடுக்காட்டுக்கு எப்படி போறதுனு தெரியும்!

உதவிய(?!) அந்த மூவருக்கும் நன்றி சொல்ல திரும்ப எத்தனித்தாள். அடுத்த நாள் பஞ்சு மிட்டாய் கலர் பேண்ட், கிளிப்பச்சை நிற சட்டை போட்டுக் கொண்டு கையில் ரோசாப்பூவுடன் மூவரும் க்யூவில் நிற்கும் காட்சி, மனக்கண்ணில் 70MMமில் ஓடியதால், அந்த எண்ணத்தைக் கைவிட்டு திரும்பிப் பார்க்காமல் விறுவிறுவென விடுதிக்குள் நுழைந்தனர்.

அறையை தாழிட்டதும், அதற்கு மேலும் அழுகையை அடக்க முடியாத நித்தி 'நீ மட்டும் சரியான நேரத்தில வரலைனா என் நிலமை என்ன ஆயிருக்கும்? ஜஸ்ட் எஸ்கேப்ட்.. தெரியுமாடீ! நல்ல வேளை அப்படி எதுவும் நடந்திருந்தா செத்துருப்பேன்' என புலம்பலுடன் கதற ஆரம்பித்தாள்.

எவனோ நாதாரி செய்த தவறுக்கு இவள் ஏன் சாக வேண்டுமென லிஸிக்கு புரியவில்லை. ஹ்ம்ம்ம்.. ஏனென்று கேள்வி கேட்டால் தான் கண்ணகியாக முடியாது என்று மட்டும் புரிந்தது.

(எங்க குலசாமி மேல் சத்தியமாக உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு' நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது)

உரையாடல் போட்டிக்கான செந்தழலாரின் விமர்சனங்களுக்கு என் மதிப்பெண்

Wednesday, 24 June 2009

முதலில் இடுகைக்கு சம்மந்தமில்லாத ஒரு குட்டிக் கதை :

ஒரு ஊருல ரிவர்ஸ் ரிச்சர்ட் ரிவர்ஸ் ரிச்சர்ட்னு ஒருத்தன் இருந்தானாம். யாராவது எதையாவது செய்யக் கூடாதுனு சொல்லிட்டா போதும், அதுக்கு எதிர்மறையா, ஏட்டிக்கு போட்டியா ஏதாவது செஞ்சுட்டு தான் வேற வேலை பாப்பானாம். அவன் பொண்டாட்டி ரீட்டாவும் அவனைத் திருத்த எவ்வளவோ ட்ரை பண்ணி பாத்தாளாம். முடியல.

ஒரு நாள் அவனை பாழுங்கிணத்துப் பக்கம் கூட்டிட்டுப் போயி, 'பாத்துயா உள்ள உழுந்துடாத'னு சொன்னாளாம். உடனே ஓடிப் போயி சம்மர் சால்ட் அடிச்சு, கிணத்துக்குள்ள குதிச்சுட்டானாம். அவளும் 'ஒழிஞ்சதுடா சனி'னு கிளம்பி வீட்டுக்கு வந்துட்டாளாம்.

*.*.*.*.*.*.*.*

'இதனை தொடர்ந்து விவாதித்து மொக்கை போடாதீங்க, ப்ளீஸ்'னு செந்தழலார் சொன்னாலும், நம்ம கடமையை நாம செஞ்சு தானே ஆவனும். மத்தபடி ரிவர்ஸ் ரிச்சர்ட் ஆவி, எனக்கு உள்ளார பூந்துடுச்சான்னெல்லாம் கேக்கக் கூடாது.

செந்தழலா
ரின் விமர்சனங்களுக்கு என் சீரியஸான விமர்சனம்

முதலிலேயே ஒரு உண்மையை பகிரங்கமாக ஒப்புக் கொள்கிறேன். போட்டிக்கான அனைத்துக் கதைகளையும் நான் படிக்கவில்லை. செந்தழலாரின் விமர்சனத்தால் தூண்டப்பட்டு, நான்கு கதைகளை முழுசாக படித்ததற்கே, நடுமண்டையில் நட்டுவாக்காலி போட்டது போல வாயில் நுரை தள்ளி விட்டது. (நான் எழுதிய கருமத்தையே திரும்பப் படிக்க எனக்குப் பொருமையில்லை)

இது இப்படியிருக்க, சந்திப்பிழைகள், தொந்திப் பிழைகள் என்று ஒன்று விடாமல் அக்கு வேறு ஆணி வேறாக, வாசித்த அத்தனை கதைகளையும் ஐந்து வரிகளுக்குக் குறையாமல், விமர்சித்திருக்கும் செந்தழலாருக்கு இரண்டு கைகளாலும் ஒரு மிகப் பெரிய சல்யூட்.

இத்தினியூண்டு கதைகளுக்கு அதிக மதிப்பெண்கள் கொடுத்திருப்பதைப் பார்க்கையில், 'ஏன்யா இவ்ளோ பெரிசா எழுதி என் டவுசரைக் கிழிக்கிறீங்க' என்று மற்றவர்களைப் பார்த்து விமர்சகர் கதறுவது போல் தோன்றுகிறது. (அதிஷாவின் ஒரு வரிக் கதையோ, அறிவிலியின் ஒரு எழுத்து கதையோ, சோம்பேறியின் ஒரு எழவும் இல்லாத கதையோ போட்டியில் பங்கு பெற்றிருந்தால் சென்டம் வாங்கியிருக்க வாய்ப்பிருக்கிறது)

விஜய் டீவி ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியில் செய்வது போல, சில கதைகளை ஆஹா ஓஹோ என்று புகழ்ந்து விட்டு, பெயில் மார்க் போட்டிருப்பதைப் பார்க்கையில், விமர்சனம் எழுதி முடித்த பின், சரக்கடித்து விட்டு மார்க் போட்டிருக்கிறாரோ என்ற எண்ணமெழுவதையும் தவிர்க்க இயலவில்லை.

(ஒருவேளை, கதைகளுக்கு மட்டும் மதிப்பெண்ணிடாமல், சைடிலுள்ள ஜூஜூ பொம்மை, ஐஷ்வர்யா ராய் புகைப்படங்களுக்கும் சேர்த்து மார்க் போட்டிருக்கிறாரோ என்று சந்தேகம் வருகிறது...)

விமர்சகர் வரிசைக்கிரகமாகத் தான் கதைகளைப் படித்து, விமர்சித்து வருகிறார் என்று தெரிந்தும், 'என் கதை இல்லையா? என் கதைக்கான விமர்சனம் எப்போ வரும்? என் கதையை படிச்சுட்டு கொஞ்சம் திட்டுங்களேன்' என்று பலரும் கேட்டிருப்பதே விமர்சகரின் வெற்றியைக் காட்டுகிறது.

அட்லீஸ்ட் அவருக்கு சுட்டி அனுப்பியிருப்பவர்கள் கதைகளின் விமர்சனங்களை மட்டுமாவது, அவரது வலைப்பூவில் ஏற்றினால், கதைகளை எழுதிய எழுத்தாளர்களுக்கு ஒரு விளம்பரமும், என் போன்ற சோம்பேறி வாசகர்களுக்கு படிக்கும் ஆர்வமும் அதிகப்படும். நன்றி.

செந்தழலாரின் விமர்சனத்துக்கு என்னுடைய மதிப்பெண் 80 / 100

கடைசியாக இடுகைக்கு சம்மந்தமில்லாத ஒரு கவிதை(!?) :

ராவா குடிச்சவனும்
ராப்பகலா படிச்சவனும்
உருப்புட்டதா சரித்திரமே இல்ல.

ஸோ, சுமாரா படிங்க
சோடா ஊத்தி அடிங்க..

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

செந்தழலார் ஒவ்வொரு பகுதி விமர்சனத்தையும் உருவாக்க பல பாடாவதி கதைகளையும்(போர்னோ கதை உட்பட) படித்து ரத்தக் கண்ணீர் சிந்துகிறார். அதை எளிமையாக விமர்சனம் செய்திருக்கிறேன்.. செந்தழலாரின் விமர்சனம் அவரைப் பொறுத்தவரை சிறப்பானதே.. இது முழுக்க முழுக்க என்னுடைய பார்வை மட்டுமே...!!!

பொதுவாக பார்க்கும்போது, விமர்சனம் எழுதுகிறோம் என்றதும் செந்தழலார் அவர் ப்ரொஃபைல் புகைப்படத்தில் இருப்பது போல் அப்பாவியாக முகத்தை வைத்துக்கொள்வார் என்று கற்பனை செய்யத்தோன்றுகிறது,... அல்லது செம்மையான தழலுக்கு பஞ்சம்...

'எழுதியவனை பிஞ்ச செருப்பால அடிக்கலாம் என்று தோன்றுகிறது...', 'எழுத்தாளரை உச்சந்தலையில் நறுக்குன்னு கொட்டனும் போல வக்கிரமாக உள்ளது...' போன்ற ஒன்றிரண்டு வரிகளைத் தவிர்த்து முயற்சி கூட எடுக்கமாட்டேங்குறார் நம்ம ரெட் ஃபயர்...!!!

மற்ற பகுதிகளை நேரம் கிடைக்கும்போது விமர்சிப்பேன்...!!!! உங்கள் ஓட்டுகள், ப்ளஸ் கருத்துக்களை சொல்லிவிட்டு போங்க...!!!

ஒரு ட்ரம்ஸ் வயலின் வாசிக்கிறது அல்லது ஷ்ஷ்ஷங்கர் சேரனான கதை

Friday, 19 June 2009

எனக்கு பணக்காரர்கள் மீது வெறுப்பு வந்ததற்கு, இங்கே சொல்ல முடியாத பல காரணங்கள் இருந்தாலும், ஷங்கர் பட ஹீரோ போல, அவர்கள் பணத்தைக் கொள்ளையடித்து விட்டு, அவர்கள் அனைவரையும் கொன்றுவிட வேண்டும் என்ற கொலை வெறி வர காரணம், இயக்குனர் ஷங்கர் அல்ல எங்க கனேசன் அண்னன் தான்.

ஐந்தாம் வகுப்பு கோடை விடுமுறையின் போது தான் கனேசன் அண்னன் எனக்கு அறிமுகமானார். கிரிக்கெட் விளையாடும் போது பந்து அடிக்கடி இவர் வேலை பார்க்கும் கம்பெனிக்குள் போய் விழுந்து விடும். கேப்டனை விட அதி முக்கிய பொருப்பான பந்து பொறுக்கிப் போடும் பணியை நான் செய்து கொண்டிருந்ததால், அவரை அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அவர் பேச்சு கிரிக்கெட்டை விட சுவாரசியமாக இருந்ததால், முழு நேரமாக அந்த கம்பெனியிலேயே, நாளுக்கு ஐந்து ரூபாய் சம்பளத்தில் எடுபிடி வேலையில் சேர்ந்து விட்டேன். மற்றவர்கள் போல் குழந்தைகள் உலகத்துக்குள் நுழைய முயற்சிக்காமல், அவர் உலகத்துக்கு என்னை இழுத்து சென்றார்.

எனக்கு நிறைய கெட்ட வார்த்தைகளும் அதற்கு அர்த்தமும் கற்றுத் தந்தார். என் வயதுக்கு புரியுமளவு A ஜோக்குகள் சொல்வார். அதில் எனக்கு மிகவும் பிடித்த, இப்போது நினைத்தாலும் சிரிப்பு வரும் ஒன்றை மட்டும் சொல்கிறேன். இல்லை. வேண்டாம். என் மீது பகுத்தறிவாளர் என்ற முத்திரை குத்தப்படலாம்.

நாம இப்படி இருக்குறதுக்கு இந்தப் பணக்கார @&*$@*&கள் தான் காரணம் என்பார். எங்கள் ஊரைப் பொருத்த வரை அவர் சொல்வது உண்மை தான். இரண்டு தலைமுறைக்கு முன்பு வரை எங்கள் ஊரில் இரண்டே பிரிவினர் தான். 'நான் நாசமாய் போனாலும் பரவாயில்லை. மற்ற மூவரும் முன்னேற விட மாட்டேன்' என்று குல தெய்வம் கோவிலில் சத்தியம் செய்து கொண்ட நான்கு மேல் தட்டு பங்காளிகள். ஆட்டு மந்தைகள் போல அவர்களிடம் பதினைந்து ரூபாய்க்கு தினக்கூலி வேலை பார்த்த கீழ் தட்டு முட்டாள் மக்கள்.

(அந்த பதினைந்து ரூபாயையும் வடை, டீ என்று அன்றே செலவு செய்து விட்டு அவசரத் தேவைகளுக்கு வட்டிக்கு வாங்கிக் கொண்டிருப்பார்கள். கொஞ்சம் வசதியாக, சூப்பர்வைசர்களாக ஐம்பது, நூறு என்று வாங்குபவர்கள் சரக்கு, வடை என்று செலவழிப்பார்கள்)

எங்களுக்கு முந்தைய தலைமுறையில் தான் வெளிநாட்டில் கழிவறை கழுவியும், ஒட்டகத்தைக் குளிப்பாட்டியும் சில கீழ் வர்க்கத்தினர், தங்கள் பிள்ளைகளைப் படிக்க வைத்து நடுத்தர வர்க்கம் என்று புதிதாக ஒன்றைப் புகுத்தினர்.

என் அப்பா இதில் எந்த வகையிலும் சேராமல், பக்கத்து ஊரிலிருந்த மில்லில் மாத சம்பளத்துக்கு வேலை பார்த்து வந்தார். அவரது மேலாளரிடம் ஹிட்லர் பிச்சை எடுக்க வேண்டுமாம். ஒன்னுக்கு போனால் கூட அவரது மேலாளர் முறுக்கிய ஈர கயிற்றால் அடித்து இழுத்து வந்து, 'வேலையைப் பாருடா' என்பாராம். ஆனாலும் என் அப்பா உணர்ச்சி வசப்படாமல், எப்படி பணத்தைப் போல உழைப்பும் ஒரு மூலதனம் என்பதை லாஜிக்கலாக கம்யூனிஸ்ட்தனமாக விளக்குவார். அடிக்கடி மாநாடு, ஊர்வலம் என்று என்னையும் அழைத்துக் கொண்டு போய் பிரியானி வாங்கித் தருவார்.

ஆனால் கனேசன் அண்ணா எந்தக் கூட்டத்திலும் கலந்து கொள்வதில்லை. முதலாளிக்கு வாங்கிப் போகும் டீயில் கண்டதைக் கலப்பது, காயப் போடப் பட்டிருக்கும் முதலாளி மற்றும் அவர் மகன்களின் ஆடைகளில் செந்தட்டி எனப்படுமொரு வகை அரிப்பு ஏற்படுத்தும் செடியைத் தேய்த்து விடுவது என்று ஏதாவது செய்து அவர் வக்கிரத்தைத் தீர்த்துக் கொள்வார்.

குழந்தைகள் நலத்துறை அதிகாரிகளுக்கு (லஞ்சம் தர) பயந்து இருபது குழந்தைத் தொழிலாளர்களை பத்துக்கு பத்து அளவு கழிவறையில் அடைத்து வைத்து, அதில் நான்கு குழந்தைகள் நசுங்கி மூச்சு முட்டி இறந்தது போன்ற சம்பவங்களைப் பற்றி கேள்விப் பட்ட பிறகு அவர் செய்வது சரியென்றே பட்டது. வளர்ந்ததும் புலன் விசாரனை விஜயகாந்த் போல உடையணிந்து கொண்டு அந்த நாலு பேரையும் சுட்டுக் கொன்றுவிட வேண்டுமென முடிவு செய்து, அந்த வருட திருவிழாவிலிருந்தே ரெய்ன் கோட், ஷூ, கண்ணாடி, தொப்பி, தொப்பியில் மாட்டிக் கொள்ள இறகு எல்லாம் சேகரிக்க ஆரம்பித்தேன்.

ஆனால் கோடை விடுமுறை முடிந்து பள்ளி, டியூஷன், தேன் கூட்டுக்கு தீ வைத்து தேனெடுப்பது, பனியாரக் கிழவி வீட்டுக் கொல்லையில் கொடுக்காய்புளி பழம் திருடுவது, தவளை, கரட்டாண்டிகளைக் கொன்று விட்டு 'அய்யோ அண்ணே.. இப்படி அநியாயமா எங்களை விட்டுட்டுப் போயிட்டியே' என்று தலையிலடித்துக் கொண்டு அழுவது என்று வாழ்க்கை பிஸி ஆகி விட்டது.

என் அப்பாவும் வட்டி தொழில் ஆரம்பித்து, அது சக்கை போடு போட்டு நாங்களும் அந்தப் பணக்கார நாய்களில் ஒருவராகி விட்டதாலோ என்னவோ, ஷங்கர் பட ஹீரோவாகியிருக்க வேண்டிய நான், ஆட்டோக்ராஃப் பட ஹீரோவாகி உங்களுக்கு என் சுயசரிதையை சொல்லிக் கொண்டிருக்கிறேன் :-(

கதை முடிந்தது. இதற்கு மேல் படிக்காதீர்கள்.

நான் பள்ளிப் படிப்பு முடிக்கும் போது தான் தெரிந்தது, பல வருடங்களுக்கு முன் கனேசண்ணனின் காதலி அந்த நான்கில் ஒரு பணக்காரரைத் திருமணம் செய்து கொண்டு, இவரைக் கழட்டி விட்டு விட்டாராம். அதற்குப் பிறகு இவர் திருமணமே செய்து கொள்ளவில்லையாம்.

உங்களை கெஞ்சி கேட்டுக் கொள்கிறேன். தயவுசெய்து இதற்கு மேல் படிக்காதீர்கள்.

நான்கு வருடங்களுக்கு முன்பு தான் அவரைத் திருவிழாவில் பார்த்தேன். முன்னை விட கொஞ்சம் பூசினார் போல் இருந்தார். அக்னி சட்டி எடுத்துக் கொண்டு பல்லைக் கடித்தபடி பரவசமாக ஆடிக் கொண்டே வந்தவர், என்னைப் பார்த்ததும் ஆட்டத்தை நிறுத்தாமல் பல்லைக் கடித்தவாறு 'எப்ப வந்த? இங்க தான் இருக்கியா' என்று கேட்டார்.

எனக்கு ஆச்சரியமாகப் போய் விட்டது. (என்னை அடையாளம் கண்டு கொண்டார் என்பதற்காக அல்ல. எங்கள் உறவு அப்படி.) அவருக்கு கடவுள் பக்தி அறவே கிடையாது. அவரது A ஜோக்குகளில் அதிகம் சிக்கி சின்னாபின்னமாவது கடவுள்கள் தான். பொதுவாக எல்லாரையுமே ஏதாவது கெட்ட வார்த்தையை அடைமொழியாகக் கொண்டு தான் அழைப்பார் என்றாலும், கடவுளை அவருக்குத் தெரிந்ததிலேயே ஆகச் சிறந்த கெட்ட வார்த்தையால் தான் அழைப்பார்.

இப்போது கடவுள் நம்பிக்கை வந்திருக்கிறது. கொஞ்சம் ஊட்டமாகவும் இருக்கிறாரே என்று அப்போழுதே மைல்டாக சந்தேகம் வந்தது. இப்போது இரண்டு வருடங்களுக்கு முன்பு தான் ஊர்ஜிதமானது. இவரும் இவர் காதலியும் 'பழையபடி' ராசியாகி விட்டார்களாம். (நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போதே அவருக்கு நாற்பது வயதிருக்கும். அந்தம்மாவைப் பற்றித் தெரியவில்லை).

இவர்கள் விஷயம் அந்தப் பணக்காரருக்குத் தெரிந்து அவர் கண்டிக்க, அந்த அம்மா அவரிடமிருந்து லம்பாக பணம், நகை என்று லவட்டிக் கொண்டு கனேசன் அண்ணனுடன் ஊரை விட்டே ஓடிப் போய் விட்டார்களாம். அந்தப் பணக்காரரும் அவமானம் தாங்காமல் தற்கொலை செய்து கொண்டாராம்! ஹூம்ம்ம்ம்.. ஹீரோ ஹீரோ தான்..

32. உங்களுக்கும் நமீதாவுக்கும் ஒரு இதுவாமே?

Tuesday, 16 June 2009

முப்பதிரண்டு கேள்விகளில் சில எனக்கு உவப்பாக இல்லாததால், வேறு கேள்விகளால் ரீப்ளேஸ் செய்திருப்பதற்காக, தொடரை ஆரம்பித்த நிலாவும் அம்மாவும் அவர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். என்னை அழைத்த சென்ஷிக்கு மன்னிப்பு தமிழில் பிடிக்காத வார்த்தை என்பதால் அவரிடம் மாஃப் கரோ ஜி என்று கேட்டுக் கொள்கிறேன்.

கே : உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?

சோம்பேறி : Its not that i'm lazy. Its just i dont care. இதை யாரும் சரியாகப் புரிந்து கொள்வதில்லை அல்லது எனக்கு புரிய வைக்கத் தெரியவில்லை என்பதால், இந்தப் பெயர் அறவே பிடிக்கவில்லை. பிரபல பதிவர்ர்ர்ர் என்று பெயரை மாற்றிக் கொள்ள இருக்கிறேன்.

நிஜப் பெயர் : என் அப்பா, பிரபல பிண்ணனிப் பாடகருடைய குரலில் மயங்கி எனக்கு இந்தப் பெயர் வைத்தார்கள். எனக்கு பேச வந்ததும் என் குரலைக் கேட்டு அரண்டு எம்.ஆர்.ராதா என்று பெயரிட்டிருக்கலாம் என்று புலம்பினார்களாம்.

கே : உங்களுக்கும் நமீதாவுக்கும் ஒரு இது என்று ஒரு இது வலையுலகில் பரபரப்பாக இதாகிறதே! உண்மையா?

(வழிகிறார்) ஹி ஹி.. ஓரளவு நிஜம் தான்..

கே : எந்த அளவு என்று அளந்து காட்ட முடியுமா?

(உட மாட்டீங்களேடா டேய் என்பது போல் முறைக்கிறார்) எனக்கு அவர் மேல் ஒரு இது என்பது வரை உண்மை

கே : உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

ரொம்ப பிடிக்கும். செம ஸ்டைலிஷாக இருக்கும். என் உதவி இல்லாமல் யாராலும் என் எழுத்தைப் படித்து விட முடியாது. சமயங்களில் என்னாலேயே படிக்க முடியாது.

கே : நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?

(கொஞ்சம் தள்ளி உட்கார்கிறார்) மாட்டேன்.

கே : நீங்கள் வேறு யாராவதாக இருந்தால் உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?

நிச்சயம் மாட்டேன். ஹாய் ஹலோ என்பதுடன் நிறுத்திக் கொள்வேன். அதீத அன்பு காட்டி சாவடிப்பதில் நான் ஒரு தீவிரவாதி.

கே : கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?

கடல் தான் பிடிக்கும். (அண்ணாந்து விட்டத்தைப் பார்க்கிறார்) மிகவும் பிடித்த ஒருவரின் கையைப் பிடித்துக் கொண்டு, ஒவ்வொரு அலை வரும் போதும் குதித்தும், மூழ்கியும் அலைகளை எதிர்கொள்ளும் விளையாட்டு ரொம்ப பிடிக்கும்.

உள்ளே போகும் அலைகளும் வெளிவரும் அலைகளும் சந்திக்கும் சீற்றமிகுந்த இடத்தில் நின்று கொண்டு, கீழே விழுந்து அலைகளால் இழுத்து செல்லப்படும் போதும் ஒருவர் கையை மற்றவர் விடாமல் இறுக பற்றிக் கொண்டிருப்பது...

கே : ('போதும். நிறுத்து' என்பது போல் இடை மறிக்கிறார்) முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

புன்னகை. அதன் விசாலத்தை வைத்து, அவர் எந்த அளவு நம் நட்பை விரும்பிகிறார் என்பதை புரிந்து கொள்ளலாம்.

கே : உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விஷயம் எது?

பிடித்தது : இன்னும் மூன்று மாதங்கள் கழித்து சொல்கிறேன்.
பிடிக்காதது : இன்னும் ஆறு மாதங்கள் கழித்து சொல்கிறேன்.

கே : (ரொம்ப முக்கியம் எங்களுக்கு) யார் பக்கத்தில் இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்?

நமீதா மற்றும் ஆஸ்ட்ரேலியாவிலிருக்கும் என் யக்கா மவ.

கே : திமுக தில்லியில் 16 சீட்கள் பெற்றது பற்றி..

அடங்கொன்னியா.. நெசமாவா? இது தெரியாம போன வாரம் நான் டெல்லி போனப்போ அன்ரிசர்வேஷன்ல பாத்ரூம்ல உக்காந்துகிட்டு வந்தேனேப்பா.. தெரிஞ்சிருந்தா அவங்க கைல கால்ல விழுந்தாவது ஒரு சீட் கேட்டு வாங்கி, அதில ஒண்டிகிட்டு போயிருப்பேன்.

கே : (உன் அரசியல் அறிவுல தீயை வச்சு கொழுத்த என்பது போல் முறைக்கிறார்) தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா? அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்? (டயர்டாகி மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்குகிறார். தண்ணீர் குடிக்கிறார்.)

இல்லை. தெரியாது.

கே : வர்ண பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?

வெளித் தோற்றம் எப்படி இருந்தால் என்ன? வெள்ளை நிற மையுடய பேனாவாக மாற விரும்புகிறேன். தவறுகளைத் திருத்த உதவும் என்பதால்.

கே : (தோடா.. தத்துவவியாதினு நெனப்பு மனசுல) உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு?

சென்ஷியின் 'வாயில் உமிழ்ந்தால் முத்தமா' என்ற கவிதை. ரொம்ப ஆழ்ந்து சிந்திக்க வைத்தது.

(படிக்காதவன் படத்தில் ரஜினி, ஆட்டுத் தலையுடன் குழந்தை பிறந்தது என்று கேள்விப் பட்டதும், ஆட்டுத் தலையோட எப்படி? முதல்ல ஆட்டோட எப்படி? என்று ஆழ்ந்து சிந்திப்பாரே அந்த ரீதியில்.)

கே : கந்தசாமி படத்தில் ஷ்ரேயா அணிந்த ஒரு உடையின் விலை ஒரு கோடியாமே!

(பெருமூச்சு விடுகிறார்) வர வர கர்சீப்பின் விலை அதிகமாகிக் கொண்டே வருகிறது.

கே : வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?

டெல்லி, ஷிம்லா, டார்ஜிலிங் போயிருக்கிறேன். எது அதிகபட்ச தொலைவு என்று தெரியவில்லை. ஷிம்லா மலை உச்சியிலிருந்து சீனா தெரிந்ததால் அது தான் அதிகபட்ச தொலைவு என்று நினைக்கிறேன்.

கே : உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

வாழ்க்கையைப் பற்றிய பயத்தை (யதார்த்தத்தை) எனக்குள் திணிக்க முயல்வது. (ஆனால் துரதிர்ஷ்டவசமாக என்னுடன் பழக ஆரம்பித்த சில நாட்களிலேயே எல்லாரும் அட்வைஸ் அம்புஜங்களாகவும், அறிவுரை ஆறுமுகங்களாகவும் மாறி விடுகிறார்கள்)

கே : உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

யாரையாவது கலாய்க்காவிட்டால் கையெல்லாம் நடுங்க ஆரம்பித்து விடுகிறது :-)

சீரியஸாக பதிலளிப்பது என்றால், ஏராளமான சாத்தான்கள் இருக்கின்றன. நமது நாதாரி சமுதாயம் எதையும் அவ்வளவு சீக்கிரம் தலை தூக்க விடுவதில்லை.

(எந்த நம்பிக்கையில் இப்படி ஒரு கேள்வி கேட்கிறீர்கள் என்று தெரியவில்லை. நான் ரொம்ம்ம்ம்ப நல்லவன் என்ற நமக்கு தெரிந்த யாரும் நம்மைப் பற்றி நம்பாத ஒரு தோற்றத்தை உருவாக்குவதற்கே சிலர் வலைப்பூ எழுதி வருகிறார்கள்(றோம்!?))

கே : எப்படிப்பட்ட திரைப்படம் பிடிக்கும்?

ஜாக்கி சான் படங்கள்

கே : (உஷாராகக் கொஞ்சம் நகர்ந்து உட்கார்கிறார்) உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?

வெனிஸ். தமிழக வெனிஸ் அல்ல நிஜ வெனிஸ். (கிரேக்கத்தில் இருக்கிறது என்று நினைக்கிறேன்)

கே : உங்களுக்கு பிடித்த சத்தம்? பிடிக்காத சத்தம்?

பிடித்தது : பல வருடங்களுக்குப் பிறகு சர்ப்ரைஸாக தொலைபேசி, 'நான் யாருனு கண்டுபுடி பாக்கலாம்' என்று கேட்கும் நண்பர்களின் குரல்.

பிடிக்காதது : பேருந்து, ஆட்டோக்களின் ஹாரன் சத்தங்களைக் கேட்கும் போது, டிரைவரின் பொடனியில் ஒரு போடு போடலாம் போல் இருக்கும். சமயத்தில் ரொம்ப டென்ஷனாகி இளைய தளபதி போல 'ஏஏஏஏஏஏஏய். சைலன்ஸ்' என்று கத்தி விடுவேன்.

கே : பிடித்த விளையாட்டு?

ஷக்தி குட்டியுடன் சொப்பு வைத்து விளையாடுவது.

கே : எப்படி விளையாடுவது?

முதலில் உங்களிடம் இருக்கும் அண்டா குண்டா மற்றும் இன்ன பிற பொம்மைகளையும் சா பூ த்ரீ அல்லது டிக் டாக் டோ போட்டு பிரித்துக் கொள்ளவும்.

அறையை இரண்டாகப் பிரித்து ஆளுக்கு பாதி எடுத்துக் கொண்டு, உங்களுக்குக் கிடைத்த பொருட்களால் உங்கள் இடத்தை அழகாக அடுக்கவும்.

அடுத்து 'அக்கா.. அக்கா.. நாங்க பக்கத்து வீட்டுக்கு புதுசா குடி வந்திருக்கோம். எங்க வீட்டுக்கு வாங்களேன்' என்று மற்றவருக்கு அழைப்பு விடுக்கவும்.

கே : இப்படி மாய்ந்து மாய்ந்து பதிவுகள் எழுதுகிறீரே. நீங்கள் எழுதியதை நீங்களே என்றாவது படித்துப் பார்ப்பதுண்டா?

நோ கமெண்ட்ஸ்.

கே : நீங்கள் பதிவர் ஆகாவிட்டால் என்ன ஆகியிருப்பீர்கள்?

ம்க்கும். நமீதாவின் குழந்தைக்கு அப்பா ஆகியிருப்பேன் என்றால் நம்பவா போகிறீர்கள்?

கே : நீங்கள் தான் அடுத்த பதிவுலக சூப்பர் ஸ்டார் என்று பரவலாக பேசப்படுகிறதே!

(கெக்கெபிக்கே என்று சிரிக்கிறார். உடம்பெல்லாம் புல்லரிக்கிறது) சரியாகக் காதில் விழவில்லை. இன்னொரு முறை சொல்ல முடியுமா?

கே : நீங்கள் தான் அடுத்த பதிவுலக சூப்பர் ஸ்டார் என்று பரவலாக பேசப்படுகிறதே என்று கேட்டேன்.

(ராகமாக) இன்னோரு முறை சொல்லுங்க..

கே : (காண்டாகி முறைக்கிறார். பல்லைக் கடித்தபடி) நீங்கள் தான் அடுத்த பதிவுலக சூப்பர் ஸ்டார் என்று பரலாக பேசப்படுகிறதே!

(ஆமானு சொன்னா அடி விழுமோ என்ற பயத்துடன்) இல்லை. இட்லிவடையின் தாக்கத்தில் இட்டாலிவடை என்று ஒரு பதிவர் வந்தது போல, சோம்பேறி என்ற என் பெயர் தாக்கத்தில் சோமாறி என்று ஒரு பதிவர் எப்போது வருகிறாரோ அன்று தான் நான் சூப்பர் ஸ்டார் என்று ஒப்புக் கொள்வேன்.

கே : நீங்க அழைக்கப் போகும் நபர்கள் யார் யார்? ஏன் உங்களுக்கு அவர்களை பிடித்து உள்ளது. அவர்களை அழைக்கக் காரணம் என்ன?

ஜாக்கி சான் - அழகாக அந்தரத்தில் பல்டி அடிப்பதால் (பல்டி அடித்துக் காட்டுகிறார்)

ரஜினி காந்த் - அழகாக அந்தர் பல்டி அடிக்கிறார் என்பதால் அல்ல.. சாரு நிவேதிதாவை அழைக்க இருப்பதால்..

சாரு நிவேதிதா - லக்கிலுக்கை அழைக்க இருப்பதால்..

நமீதா - என் ஃபாலோயர்கள் அனைவரையும் அழைக்க இருப்பதால்..

பிரபல பதிவர் சக்கரை சுரேசும், புஜ்ஜுக்குட்டி இட்லிவடையும்

Friday, 5 June 2009

'எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்பொருள் காண்பது அறிவு' என்று திருநர்சிம் ஸாரி திருவள்ளுவர் சொன்னதை நடைமுறைபடுத்தும் பொருட்டு, எனது இந்த ஐம்பதாவது (சரி.. சரி.. அம்பத்தி ஒன்னு) பதிவு முதல் பிரபல பதிவர் சக்கரை சுரேஷ் அவர்களின் ஐடியாவான சக்கரைக்கட்டியைப் போல் நானும் புஜ்ஜுக்குட்டி என்றொரு பகுதியை ஆரம்பித்திருக்கிறேன். அவர் கோபித்துக் கொண்டு கா விட்டு விட மாட்டார் என்று நம்புகிறேன். (கா விட்டாலும் பரவாயில்லை. காப்பி ரைட், கழுதைக் குட்டி என்று காந்தி தாத்தா நோட்டைக் கேட்காமல் இருந்தால் சரி)

அன்னாரைப் போலவே நானும் புதுபதிவர்களை அறிமுகப்படுத்தி உற்சாகப்படுத்தலாம் என்றிருக்கிறேன் (யாரிடமும் உதை படாமலிருக்கும் வரை). இந்த வார புஜ்ஜுக்குட்டியாக நான் அறிமுகப்படுத்தியிருப்பவர், சமீபத்தில் 1993 முதல், ஏழு வருடங்களாக எழுதிவரும் புத்தம்புதிய பதிவர் இட்லிவடை அவர்கள்.

உங்களுக்குப் வெளங்கும் படி இட்லிவடையைப் பற்றி வெளக்க வேண்டுமென்றால், இட்லிவடை ரமணா விஜயகாந்த் போல.

க்ளைமாக்ஸ் வரை விஜயகாந்த் அனானியாகவே தண்ணி காட்டிக் கொண்டிருப்பதைப் போல, க்ளைமாக்ஸ் வராததால் இன்னும் அனானியாகவே இருக்கிறார். புள்ளிவிவரத்தில் இவர் சூரப் புலி என்பது இவரது இந்த மற்றொரு வலைப்பூவைப் பார்த்தால் புரியும். போதாக்குறைக்கு 39 தொகுதிகளில் தேர்தல் டீம் என்று ரமணா போலவே ஒரு நெட்வொர்க் ஆரம்பித்திருக்கிறார்.

ரமணாவில் அரசு அதிகாரியான நாயகியின் மாமா மாற்றலானதை, கேப்டன் நாயகிக்கு முன்பே விஜயகாந்த் தெரிந்து வைத்திருப்பார். இட்லிவடை அவரை விட அப் டு டேட். எங்காவது கலவரம் நடந்தாலோ, யாராவது கட்சி மாறினாலோ இவரிடம் சொல்லி விட்டு தான் செய்வார்கள் போல; தொலைக்காட்சியில் ஃப்ளாஷ் நியூஸ் வரும் முன்பு இவர் பதிவில் விஷயம் வெளிவந்து விடும்.

இதனாலேயே இட்லிவடையில் ஒருவர் ஜோதிடர் சுப்பையாவாகவோ, ஸ்வாமி ஓம்காராகவோ இருக்கலாமென்று எனக்கொரு சந்தேகம். ஆனால் பலர் இவர்களில் ஒருவர் என்றும் அன்புடன் பாலாவாகவோ அல்லது பாராவாகவோ இருக்கலாம் என்று சந்தேகிக்கிறார்கள்.

மற்றபடி கேப்டன் போல இடது காலை சுவற்றில் உதைத்து, வலது காலால் சுழட்டி சுழட்டி அடிப்பாரா என்றெல்லாம் தெரியவில்லை.. ஆனால் 'பாயும் வேகம் ஜெட்லி தான்டா' என்று பன்ச் டயலாக் சொல்வதால் அதற்கும் சாத்தியமிருப்பதாகவே தோன்றுகிறது. (ஸோ இத்துடன் மீ த எஸ்கேப்பூ)

தமிழ்மண நிர்வாகிகளுக்கு: இட்லிவடை தனி நபர் அல்ல என்று ரகசிய சிபிஐ குழு கிசுகிசுக்கிறது. எனவே தனிநபரைத் தாக்கி விட்டேன் என்று என்னை தமிழ்மணத்திலிருந்து தூக்கி விட வேண்டாம் என்று கெஞ்சி கூத்தாடி கேட்டுக் கொள்கிறேன். நன்றி.

செல்லாத்தா.. டௌண்டு டன் டன்.. செல்ல மாரியாத்தா

Friday, 29 May 2009

நீங்கள் 'ஏன் இன்றைய பணிகளை நாளை செய்ய வேண்டும்? நாளை மறுநாள் இருக்கும் போது' என்று நினைப்பவரா?


காலடியில் விழுந்து கிடக்கும் தொலைக்காட்சி ரிமோட்டை குனிந்து எடுக்க சோம்பேறித்தனப்பட்டு, பக்கத்து ரூமிலிருப்பவரை தொலை பேசி அழைப்பவரா?


வாந்தியா, வயிற்றுப்போக்கா? (சே.. ஸாரி.. ஒரு ஃப்ளோல வந்துடுச்சு.. கம்மிங் டு த பாய்ன்ட்..)

அழைப்பு மணி அடித்தால் தூக்கத்தை துறந்து விட்டு, எழுந்து போய் கதவைத் திறக்க வேண்டியிருக்கிறதே என்று ரூம் போட்டு அழுபவரா? இது உங்களுக்கான பதிவு தான்.


உங்களுக்கு மேற்கூறிய தகுதிகள் இல்லையென்றாலும் பரவாயில்லை. 'ஏன் படிச்ச' என்று யாரும் பொடனியில் வந்து அடிக்கப் போவதில்லை. இது உங்களுக்கான பதிவும் தான்.

அழைப்பு மணியை அழுத்தியவர்களுக்கேற்ற பாடலை ஒலிபரப்பும் தொழில் நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டால், யாராருக்கு என்னென்ன பாடலை ஒலிபரப்பலாம்?

1) சர்க்கரை, காபிப் பொடி, நியூஸ் பேப்பர் கடன் வாங்க வரும்(பெரும்பாலும் திரும்ப வராது) பக்கத்து வீட்டு மாமிகள் அழைப்பு மணியை அழுத்தியதும் 'பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன் ஐயனே என் ஐயனே..' பாடல் ஒலிக்கும் படி செய்யலாம்.

இது ரோஷக்காரர்களுக்கு மட்டுமே பொருந்தும். சிலர் 'அட! இந்த காலிங் பெல் நல்லாருக்கே! எங்க வீட்டுல ரெண்டு நாள் மாட்டிட்டு திருப்பிக் குடுத்திடறேனே!' என்று சொல்லி அதையும் கடனாக வாங்கிக் கொண்டு போகும் அபாயமும் நேரலாம்.

2) மளிகை, பால், கேபிள் வாடகை வசூலிக்க வருபவர்களுக்கு 'ஆயிரம். ரெண்டாயிரம். பிம்பிலிக்கி பியாபி.. மாமா பிஸ்கோத்து' என்று உங்கள் குரலிலேயே ஏதாவது பதிவு செய்து ஒலிபரப்பலாம்.

3) விற்பனைப் பிரதிநிதிகள் வந்தால் 'ரேய்.. ஒதலவா.. நேனே சந்திரமுகி.. லக லக லக லக..' ஆணாக இருந்தால் இதை மட்டுமே திரும்பத் திரும்ப ஒலிபரப்பலாம்.

விற்பனைப் பிரதிநிதி பெண்ணாக இருந்தால் 'ரா ரா.. சரசக்கு ரா ரா' என்பதை மட்டுமே திரும்பத் திரும்ப ஒலிபரப்பலாம்.

4) வேண்டா விருந்தாளி வந்தால் 'போயா உன் மூஞ்சியில கைய வைக்க! உன் நெஞ்சிலுள்ள மஞ்சா சோத்தில் நெய்யை வைக்க'(சத்தியமாக இப்படி ஒரு பாடல் இருக்கிறது)

அதே விருந்தாளி அழகான தனது மகளுடன் வந்திருந்தால் 'மணமகளே.. மருமகளே வா. வா.'

5) மாரியம்மன் கோவிலில் கூழ் ஊத்துவதற்க்கு நிதி கேட்டு வருபவர்களுக்கு 'இறைவனிடம் கையேந்துங்கள்.. அவன் இல்லையென்று சொல்லுவதில்லை' பாடலை தேர்வு செய்யலாம். இஸ்லாமியராக மதம் மாறி விட்டோம் போல என்று நாலு வசவு வைது விட்டு போய் விடுவார்கள்.

ஆலய நிதி சம்மந்தமாக வரும் மற்ற மதத்தினருக்கு 'செல்லாத்தா.. டௌண்டு டன் டன்.. செல்ல மாரியாத்தா டௌண்டு டன் டன்..' பாடலை ஒலிபரப்பலாம். பாடலுக்கு முன்பு குலவை சத்தமும் இருந்தால் கூடுதல் நலம்.

6) நம் தூக்கத்தைக் கெடுப்பதற்காக, அழைப்பு மணியை அழுத்தி விட்டு ஓடி விடும் பக்கத்து வீட்டு வாண்டுக்கு 'குட்டிப் பிசாசே.. குட்டிப் பிசாசே.. உன்னால தூங்கலயே!'

அந்த வாண்டு மீது ஓங்கி அப்பும் அளவு கோபம் வந்தால் டி.ஆரின் 'ங்கொப்பன் மவனே! ங்கொப்பன் மவனே! டண்டனக்கா.. ஏ.. டண்டனக்கா..' என்ற பாடலைத் தேர்வு செய்யலாம்.

எப்பூடீ?

முக்கிய அறிவிப்பு : அன்பு மக்களே! சங்கமம் பேருந்து போட்டிக்காக பொள்ளாச்சி டூ மதுரை என்ற படைப்பை மிகச் சில மாற்றங்களுடன் அனுப்பியிருக்கிறேன். இந்த http://tamil.blogkut.com/contest/poll/poll0409.php லிங்கில் போய் அதைப் படித்துப் பார்த்து உங்களுக்கு பிடித்திருந்தால் வாக்களிக்கலாம்.

வோட் போடாதவங்க வோட் போடுங்க.. ஏற்கனவே வோட் பண்ணிட்டேன்னு சொல்றவங்க, தெரியாத்தனமா 5க்கு பதிலா 1ல வோட் பண்ணிட்டேன்னு சொல்றவங்க, கள்ள வோட் போடுங்க.. (சும்மா.. லுலுலாகாட்டிக்கும்) நன்றி..

முக்கிய பின்குறிப்பு : போட்டியில் ஜெயிக்கும் மூன்று படைப்புகளுக்கு ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பரிசுகள் வழங்கப்படும்

லூஸாப்பா நீங்கல்லாம்?

Tuesday, 26 May 2009

நேத்து எங்க சித்தப்பாவோட ட்ரீட்மெண்ட்டுக்காக ஒரு மெண்டல் ஹாஸ்பிட்டல் போயிருந்தோம். என் சித்தப்பா பார்க்க அசப்பில் பைத்தியக்காரன் போல் இருப்பார். நோ.. நோ.. ஆக்சுவலி ஐ மீன் தோழமைக்குரிய பதிவர் திரு பைத்தியக்காரன் அவர்கள் போல் இருப்பார் என்று சொல்ல வந்தேன்.

எங்க சித்தப்பா சாதாரணமா நார்மலா தான் இருப்பார். ஆனா குழந்தைகளைப் பாத்தா வெறி புடிச்சுடும். (சில வகை பெண்களைப் பாத்தா எனக்கும் பைத்தியம் பிடிக்கும் :-) அது வேற விஷயம்). என் சித்தப்பா ஏன் அப்படி ஆனாங்க அப்படிங்கறது ஐநூறு பக்க நாவல் எழுதுற அளவு பெரிய விஷயம். ஷார்ட்டா சொல்லனும்னா விவாகரத்து. இப்போ வியாதி ஆரம்ப கட்டத்துல இருக்குறதுனால ஈஸியா குணப்படுத்திடலாம்னு டாக்டர் சொல்லிருக்காங்க.

பெரும்பாலும் இந்த ஹாஸ்பிட்டலுக்கு வர்றவங்க, ஆரம்ப கட்ட நோயாளிகளா தான் இருப்பாங்க. ஆனா நேத்து ஹாஸ்பிடல்ல நான் பாத்த பையன் (பத்து வயசு இருக்கும்) ரொம்ப அப்நார்மலா பிஹேவ் பண்ணிட்டு இருந்தான். சேர் மேல ஏறி நிக்குறது. திடீர்னு வித்தியாசமான சத்தம் குடுக்குறது, பக்கத்துல இருக்குறவங்க பையை நோண்டுறது, முறைச்சுப் பாக்குற அவங்க முகத்துக்கு ரொம்ப பக்கத்துல இவன் முகத்தை கொண்டு போய் அவங்களை இமிடேட் பண்றதுனு ராவடி பண்ணிட்டு இருந்தான்.

அவனைக் கூட்டிட்டு வந்த பெரியவர்கிட்ட கம்பவுண்டர் போய் 'கொஞ்சம் உங்க பையனை பாத்துக்கோங்க ஸார்'னு புகார் பண்ணினாரு. கம்பவுண்டர் பேசி முடிக்கிற வரை இதுவரை நடந்த எல்லாத்தையும் அமைதியா பாத்துகிட்டு இருந்தவர், திடீர்னு கம்பவுண்டரைத் தள்ளி விட்டுட்டு ஓட்டமா ஓடிப்போய் அவன் தலையில நச் நச்னு குட்ட ஆரம்பிச்சுட்டாரு. அப்புறம் ரெண்டு பேரும் ஒருத்தர் முகத்தை ஒருத்தர் பாத்ததும், சத்தமா கெக்கே பிக்கேனு சிரிச்சுட்டு, கட்டிப் பிடிச்சு கொஞ்சிக்க ஆரம்பிச்சுட்டாங்க. ரெண்டு பேர் முகமுமே கொஞ்சம் டிஸ்லெக்சிக்கா தான் இருந்தது.

(படத்தைப் பெரிதாக்கிப் பார்க்க அது மேல க்ளிக்காதீங்க. அதோட சைஸே அவ்ளோ தான்.)

நான் என் சித்தப்பாகிட்ட 'இந்த ரெண்டு பேருல யார் லூசுனு கண்டுபுடி பாக்கலாம்'னு சொன்னேன். பக்கத்துல இருந்து பாத்துகிட்டிருந்த ஒரு அம்மா 'எக்ஸ்க்யூஸ் மீ'னு கேட்டாங்க. ஒரு ஆர்வத்துல நானும் அதையே அவங்ககிட்டயும் ரிப்பீட்டிட்டு வாயைக் கூட மூடல. அவங்க 'வாட் த ஹெல்' ஆச்சு போச்சுனு ஹாஸ்பிட்டலே அதிர்ற அளவு கத்த ஆரம்பிச்சுட்டாங்க.

சத்தத்தைக் கேட்டுட்டு ஓடி வந்த அந்த so called லூஸுங்க ரெண்டு பேரும் சொன்னதுக்கப்புறம் தான் தெரிஞ்சது. அவங்க ரெண்டு பேரும் இந்த அம்மாவோட மகனும் அப்பாவுமாம். இந்த அம்மாவுக்கு ஹிஸ்டீரியாவாம். அதாவது சின்ன விஷயத்துக்குக் கூட பயங்கரமா கோபப்பட்டு கத்துவாங்களாம். அதுக்கு ட்ரீட்மெண்ட் எடுத்துக்க தான் அப்பாவும் புள்ளையும் இவங்களைக் கூட்டிட்டு வந்திருக்காங்களாம். அட கொய்யாக்களா!!

எல்லாரும் எவ்வளவோ சமாதானம் சொல்லியும் அந்தம்மா அடங்குற மாதிரி தெரியல. ஸாரி கேட்டப்புறமும் விடாம, காது பிச்சுக்கற அளவு அம்பது டெஸிபெல்ல அலற ஆரம்பிச்சுட்டாங்க. எனக்கு வந்த ஆத்திரத்துல ரத்தம் குப்புனு பாதத்துல இருந்து உச்சந்தலைக்கு ஏறி, அந்தம்மா கொறவளைய கடிச்சுடலாம்னு அவங்க மேல பாயப் போகும் போது, ஒரு நாலஞ்சு பேர் ஓடி வந்து என்னை ஒரே அமுக்கா அமுக்கிட்டாங்க. நர்ஸ் அக்கா அவங்க கைக்கு கிடைச்ச இடத்துல சதக்னு ஊசியைக் குத்திட்டாங்க.

பதறி வாயடைச்சுப் போய் நின்னுகிட்டிருந்த அந்தம்மாகிட்ட எங்க சித்தப்பா 'என் மகன் கொஞ்சம் லூசு. சாதாரணமா நார்மலா தான் இருப்பான். ஆனா சத்தமா கத்துற பெண்களைப் பாத்தா வெறி புடிச்சுடும். (குழந்தைகளைப் பாத்தா எனக்கும் பைத்தியம் பிடிக்கும்:-( அது வேற விஷயம்)

அவன் ஏன் அப்படி ஆனான் அப்படிங்கறது ஐநூறு பக்க நாவல் எழுதுற அளவு பெரிய விஷயம். ஷார்ட்டா சொல்லனும்னா காதல் தோல்வி. வியாதி ஆரம்ப கட்டத்துல இருக்குறதுனால ஈஸியா குணப்படுத்திடலாம்னு டாக்டர் சொல்லிருக்காங்க' அப்படினு சொன்னது என் காதுல விழல அல்லது காதுல விழுந்ததுனு நான் நம்ப விரும்பல.

'அந்த' குஜிலி ஆண் பதிவர் இவர்தான் - ஆதாரங்களுடன் Exclusive

Monday, 25 May 2009

முன் குறிப்பு : இது ரொம்ப சீரியஸான பதிவு. எனவே முகத்தை நாயகன் ஜே.கே.ரித்தீஷ் எம்.பி. அவர்கள் போல சீரியஸாக வைத்துக் கொண்டு, அரிக்காவிட்டாலும் தாடையை சொறிந்து கொண்டு படிக்கவும் (பட்ஜெட் இடமளித்தால் ஒரு பஞ்சுமிட்டாய் கலர் சட்டை மற்றும் கூளிங் க்ளாஸுடன் படிக்கவும்..)

ஒரு இடத்தில் திருட்டு நடந்து விட்டால், முதலில் 'எவன்டா எடுத்தது?' என்று சவுண்டு விடுவது அந்த திருடனாகத் தான் இருக்கும். யெஸ்.பாலபாரதியின் பதிவிலும் சரி, குசும்பனின் பதிவிலும் சரி உணர்ச்சிவசப்பட்டு ஓவராக சவுண்டு விட்டது, நாகேஷ் படத்தை ப்ரொபைலில் வைத்துக் கொண்டு கமல்ஹாசன் வேலை செய்து வரும் 'அந்த' பதிவர் தான்.

(இதற்கு முன் 'வாயில் உமிழ்ந்தால் முத்தமா?' என்று அன்னியன் ரெமோ ரேஞ்சுக்கு பீல் பண்ணி கவிதையெழுதி வந்தவர் சமீப காலமாக 'வாஷ் பேஸினில் உமிழ்ந்தால் குத்தமா?' என்று அம்பி ரேஞ்சுக்கு பம்முகிறார்.)

க்ரைம் பிரான்ச் உயர் அதிகாரி என்ற முறையில் சொல்கிறேன் (யாருக்குத் தெரியப் போவுது) அணைத்து குற்றவாளிகளிடமும் காணப்படும் பொதுவான குணங்களில் மற்றொன்று, 'எங்கப்பன் குதுருக்குள்ள இல்லீங்கோ' என்று கூவுவது தான். சமீப காலமாக இவரது இடுகைகளில் பின்வரும் தொனிகள் தேவையில்லாமல் தினிக்கப்படுகின்றன என்று கீனாக அப்ஸர்வ் செய்து வருபவர்களுக்கு தெரிந்திருக்கும்.

1) எனக்கு இன்னும் திருமணமாகவில்லை. சத்தியமாக குழந்தைகள் எதுவும் இல்லை. (இனியும் திருமணம் செய்து கொள்வதாக இல்லை. ஆனால் எங்கள் குடும்ப ஜோதிடர் கொடுத்த நீலக்கல் மோதிரத்தைப் போட்டுக் கொண்டால் இன்னும் ஏழு மாதத்தில் நான்கு குழந்தைகள் பிறக்கும் என்று சொல்லியிருக்கிறார்)

2) என்னிடம் தொலைபேசியோ, கைபேசியோ, கால்பேசியோ கிடையாது. இனி வாங்கினாலும் உபயோகிப்பதாக இல்லை. (உபயோகிக்கவும் தெரியாது. நான் அஞ்சாப்பையே ஆறு வருஷம் படிச்சேன். தவிர, சில வருடங்களுக்கு முன் வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருண்டுகொண்டிருந்த ஒரு உருவமில்லாத உருண்டையை எடுத்ததிலிருந்தே வாய் பேச வருவதில்லை)

3) இதுவரை நடந்த எந்த பதிவர் சந்திப்பிலும் நான் கலந்து கொண்டதில்லை. கலந்து கொண்ட சந்திப்புகளில் எந்தப் பதிவரையும் சந்தித்ததில்லை. (சென்னை பதிவர் சந்திப்புக்கு நான் சென்ற போது மெரினாவில் தண்ணியில்லா குட்டைக்கு அருகில் நிற்பதாக சொல்லப்படும் காந்தித் தாத்தா கூட கம்பை ஊன்றியவாறு டி.ஐ.ஜி அலுவலகம் பக்கமாகப் போய் விட்டார்)

4) என்னிடம் கணினி இல்லை. பொருளாதார வீழ்ச்சி காரணமாக எங்கள் அலுவலகத்திலிருந்த கணினிகள் பிடுங்கப் பட்டு கால்குலேட்டரும், டைப்ரைட்டரும் திணிக்கப்பட்டுள்ளன. எங்க ஊர் பிரவுசிங் செண்டரில் உள்ள கணினியில் இனைய வசதி கிடையாது. தற்செயலாக கிடைக்கும் கணினிகளில் யாருக்கும் மெயில் அனுப்புவதில்லை. உரையாடியிலும் உரையாடுவதில்லை.

(முக்கியமாக ஏதாவது பெண்களின் மெயில் ஐடி தென்பட்டால், என் நாட்ரான் ஆன்டி(anti அல்ல aunty) வைரஸ் கீய்ங்க் கீய்ங்க் என்று அலறி கணினியை ரீ-ஸ்டார்ட் செய்து விடும்)



அநியாயத்தை பாத்தீங்களா மக்களே! நான் கொடுத்திருக்கும் க்ளூக்களை வைத்து உங்களால் அவர் யாரென்று கண்டுபிடிக்க முடிந்திருக்கும். இல்லையென்றால், கடைசியாக ஒரே ஒரு க்ளூ.. அவர் பெயர் செ-யில் ஆரம்பித்து ஷி யில் முடியும். நடுவில் ன் தவிர ஒன்றுமே கிடையாது.

இது தவிர வேறு தடயங்களை நீங்கள் கண்டுபிடித்தால், தயவுசெய்து நான் வாழ் நாள் உறுப்பினராக இருக்கும் முடிஞ்சு போனதை சொறிஞ்சு விடுவோர் சங்கத்திற்கோ, வெந்த புண்ணில் விரல் பாய்ச்சுவோர் சங்கத்திற்கோ, வினையை வெத்தலை பாக்கு வச்சு விருந்துக்கு அழைப்போர் சங்கத்திற்கோ, sombery@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உடனடியாகத் தெரியப்படுத்தவும்.

உபயோகமான துப்பு கொடுப்பவர்களுக்கு, (சங்கங்கள் இப்போது அபராததில் ஓடிக் கொண்டிருப்பதால்) சங்கத்தில் அமௌண்ட் சேர்ந்ததும் பரிசுப் பொருட்கள் உடனடியாக அனுப்பப்படும்.

*.*.*.*.*.*.*.*.*.*.*.*.*

பின்னெச்சரிக்கை (சென்ஷிக்கு மட்டும்) - த பாரு சென்ஷி நைனா.. மருவாதையா நான் கேட்ட Almond சாக்லேட்டை 24 அவர்ஸுக்குள்ள அனுப்பி வைக்கிற. இல்லாங்காட்டி தாம்பரத்துல தாலி அறுத்தது, ட்வின் டவர்ஸை ப்ளைட் வுட்டு இடிச்சது, அல்லாத்தையும் செஞ்சது நீ தாங்கற உண்மையையும் போட்டு உடைக்க வேண்டியது வரும். சாக்கிரத.

அக்காவின் டைரியும், அச்சிலேறும் என் புத்தகமும்

Monday, 18 May 2009

குழந்தை குட்டியுடன் குடும்ப இஸ்திரியாக குடுமிப்புடி சண்டை போட்டுக் கொண்டிருக்கும் என் அக்காவின் குறிப்பேடு, நேற்று தற்செயலாக கிடைத்தது. அவளுடையது காதல் திருமணமென்பதால், 'காதலிப்பது எப்படி' என்ற புத்தகத்தைத் திறப்பது போல பயபக்தியுடன் திறந்தேன்.

(மீ அண்ட் மை சிஸ்டர்)

முதல் பக்கத்திலேயே 'திறந்த வீட்டுக்குள் நாய் தான் நுழையும்' என்ற வாசகம் காறித் துப்பினாலும், 'கடவுள் மட்டும் காலிங் பெல் அடிச்சிட்டா வருவார்' என்று சமாதானப்படுத்திக் கொண்டு அடுத்த பக்கத்தைத் திறந்தேன். அதில் 'அடுத்த பக்கத்தையும் திருப்பினால் ரத்தம் கக்கி சாவாய்' என்று சிவப்பு மையில் எழுதப்பட்டிருந்தது. உயிர் மேல் உள்ள ஆசையால், அடுத்த பக்கத்தை விட்டு விட்டு, அதற்கடுத்த பக்கத்தைத் திறந்தேன்.

தமிழ் தானா!? லாரி டயரில் நசுங்கிய தவளை போன்ற அஷ்ட கோனலான எழுத்து. கஷ்டப்பட்டு வாசித்தால், மொழியும் தமிழ் போல் இல்லை. உங்களுக்கு இட்ல எய்ன பாஷை தெரியுமா? ஜெயம் படத்தில் புகைவண்டிக்கு பின்னால் எழுதப்பட்டிருக்குமே.. (இட்லன்ந்த = இந்த) அதில் எழுதப்பட்டிருந்தது.

என்னுடைய ராஜதந்திரம் அனைத்தும் வீணாகப் போகிறது என்று தெரியாமல், பொருமையாக எல்லா 'ட்ல'க்களையும் பேனாவால் அடித்து விட்டு படிக்க ஆரம்பித்தேன். ங்கொக்கா மக்க.. படிச்சு முடிச்சதும் வந்த கடுப்புல டைரியத் தூக்கி எறிஞ்சேன் பாருங்க. இன்னும் எங்க இருக்குதுன்னு கண்டுபுடிக்க முடியல. கண்டுபுடிச்சதும் முதல் வேலையா அதை ஏழுகடல் தாண்டி ஏழு மலை தாண்டி ஏதாவது அரசியல்வாதியோட தேர்தல் அறிக்கைக்குள்ள மறைச்சு வச்சிடனும்.

பின்ன, அவ பஸ்ல டிக்கட் எடுத்தது, பல் தேச்சதுனு ஒன்னு விடாம எழுதி வச்சிருந்தா, கஷ்டப்பட்டு டாவின்சி கோட் டாம் ஹேங்க்ஸ் ரேஞ்சுக்கு ஃபீல் பண்ணி டீகோட்(decode) பண்ணி படிச்ச எனக்கு காண்டாவாதா? சுவாரசியமா ஒரு விஷயம் கூடவா அவ வாழ்கைல நடக்கல? இந்த லட்சனத்துல அந்தக் கால ஹீரோயின் போல 'அப்பப்பா.. அதை என் வாழ்நாளில் மறக்க முடியாது'னு செல்ஃப் கமெண்ட் வேற. ஒரு வேளை வருஷத்துக்கு ஒருக்க தான் பல் தேப்பா போல! அதான் மறக்க முடியல.

அப்புறம், ப்ராக்டிகல் எக்ஸாம்ல இருபத்தைஞ்சுக்கு முட்டை மார்க் எடுத்திருந்ததைப் பத்தி எழுதியிருந்ததப் படிச்சதும் எனக்குள்ல ஒரு கவிதை ஊற்றெடுத்தது. (இக்கவிதையை வைரமுத்து பாணியில், ஒவ்வொரு வரியையும் இரண்டு முறை, மெய் எழுத்துக்களில் அழுத்தம் கொடுத்து, அடித் தொண்டையிலிருந்து ஏற்ற இறக்கத்துடன் படிக்கவும். முடியலைனா சாதாரணமாகவாவது படிக்கவும்.)

பரிச்சையை வச்சுகிட்டு
படிக்காம
பதினாறு
பக்கத்துக்கு
பல் விளக்குனதைப்
பத்தி எழுதினா
பாஸாக முடியுமா?

கவித சூப்பர்ல.. இதே போல் இன்னும் நிறைய கவிதைகள் தோன்றின. அவற்றை அச்சில் ஏற்றுவதற்கு ஆவன செய்து கொண்டிருக்கிறேன். அதற்கு முன்னோட்டமாக, என் மாஸ்டர் பீஸ் எனக் கருதும் ஒன்றை மட்டும் மேலே அளித்திருக்கிறேன்.

இந்தக் கவிதையை அவியலுக்கு பரிசலோ, குவியலுக்கு வாலோ, டரியலுக்கு குசும்பனோ, புதுசாக மறியல் எழுதப் போகும் வருங்கால பிரபலங்களோ பயன்படுத்தி கொல்லலாம் சே கொள்ளலாம். என் கவிதையால், உங்கள் ஃபாலோயர்கள் எண்ணிக்கை ஒரே நாளில் ஐநூறாக உயராவிட்டால் மீசையை எடுத்துவிடுறேன். (வளர்ந்ததும்)

நான் பின் வீட்டு ஜன்னலைப் பார்த்து ஜொள்ளுடன் சிரித்துக் கொண்டிருந்த போது எடுத்த புகைப்படம் ஒன்று இருக்கிறது. அதை க்ராபிக்ஸில் நிலா, பூ, கடல் என்று ஏதாவது ஒரு கருமத்தைப் பார்த்து சிரிப்பது போல மாற்றி புத்தகத்தின் முன் அட்டையில் போட்டு விடலாம்.

ஒரு முறை என் தம்பி என் தட்டிலிருந்த சிக்கன் பீஸைத் திருடியதும், நான் கோபமாக புருவத்தை நெரித்த போது எடுத்த புகைப்படத்தின் பிண்ணனியில், குண்டுகள் வெடிப்பது போல் மாற்றி அதைப் பின் அட்டையாக்கி விடலாம்.

மொட்டை மாடியில்
சுட்டெரிக்கும்
மொட்டை வெயிலில்
பட்டப் பகலில்
பட்டை
போட்டுக் கொண்டு
மட்டை ஆனபோது

எடுத்த புகைப்படத்தை புல்வெளியில் படுத்திருப்பது போல மாற்றி நடுப்பக்கமாக்கி விடலாம். மேற்கண்ட சுட்டெரிக்கும் கவிதையை, அதே பக்கத்தில் பிரசுரித்து விட்டால் புக் ஸேல் சும்மா பிச்சுக்கும்ல.

புத்தகத்தோட தலைப்பைக் கேட்டீங்க அசந்துடுவீங்க.

குழந்தை
குட்டியுடன்
குடும்ப இஸ்திரியாக
குடுமிச் சண்டை போடுபவரின்
குறிப்பேடு

'தலைப்பே கவிதையா!! தெய்வமே எங்கயோ போய்டீங்க..' அப்படினு நீங்க கரையறது தெரியுது. கூல் டவுன். கூல் டவுன். (இதை யார் வேண்டுமானாலும் டெம்ப்ளேட் பின்னூட்டமாக உபயோகப்படுத்திக் கொள்ளலாம். (சந்தேகமில்லாமல் இங்கே மட்டுமே))

உங்கள் மேலான பாராட்டுக்களை பின்னூட்டத்திலும், பரிசுப் பொருள்களை கூரியரிலும் அனுப்பி வைத்தால், புத்தகத்தின் பக்கங்களில் நூறை அதிகரித்த புண்ணியம் செய்தவராவீர்கள்.

தும்பிக்கையுடன் ஸாரி நம்பிக்கையுடன் சோம்பேறி

IPLலில் மொள்ளமாரித்தனம் - ஒரு டெம்ப்ளேட் இடுகை

Saturday, 16 May 2009

நான் கிரிக்கெட்டே பாக்குறது இல்லைங்க. எனக்கு புடிக்காது. ஏன்னா எனக்குப் புரியாது. இப்போ சியர் கேர்ல்ஸ் வர்றதுனாலயும், ஷாருக்கான் ஏதோ காமெடி பண்றாருனு முரளிகண்ணன் சொல்றதாலயும், ப்ரீத்தி ஜிந்தா எல்லாருக்கும் கட்டிப்புடி வைத்தியம் பண்றாங்கனு கேள்விப்பட்டதாலயும் ஒரே ஒரு நாள் பாத்தேன்.

எது இண்டியன் டீம், எது அமெரிக்கன் டீம்னு கூட எனக்கு கண்டுபுடிக்க தெரியல. நான் பரவாயில்ல.. என் கூட குப்ப கொட்டுற பிரகஸ்பதிங்களுக்கு எது ஸ்டெம்ப், எது பேட்னு கூட தெரியல. ஆனாலும் நாங்க கண்டுபுடிச்ச சில உண்மைகளை உங்க முன்னால போட்டு உடைக்கிறதுனு முடிவு பண்ணிட்டேன்.

மொள்ளமாரித்தனங்கள்:

1) கைல ball வச்சுகிட்டே No ballனு சொல்றாங்க

2) Overனு சொல்லிட்டு ஓவர் மேல ஓவரா போட்டுகிட்டே இருக்காங்க

3) All outனு சொன்னாங்க. ஆனா பத்து பேரு தான் அவுட் ஆனாங்க.

4) ஒரு ஓவருக்கு ஆறு பந்துனு சொன்னாங்க. ஆனா ஒரே பந்தை தான் வச்சிருந்தாங்க. (ஸ்பான்ஸர்ஸ் கவனிக்க)

5) ஒரு பேட்ஸ் மேன் அவுட்னா அம்பயர் ஒரு கையைத் தூக்குறாங்க. அப்போ ரெண்டு கையை தூக்கினா ரெண்டு பேட்ஸ் மேனும் அவுட் தான? ஆனா சிக்ஸ்னு சொல்றாங்க.

உங்களுக்கும் எங்களைப் போல ரத்தமெல்லாம் கொதிக்குதா? நானும் என்னோட நண்பர்களும் ரெண்டு அங்குல நீளத்துல ஒரு பேட் வாங்கி வச்சிருக்கோம். அதுல எங்க ஊர் நாட்டாமை உட்பட எல்லாரும் கையெழுத்து போட்டு வச்சிருக்கோம்.

நீங்களும் இந்த வேள்வியில் பங்கெடுக்க விரும்பினா வந்து கையெழுத்து போடலாம். ஸ்ரீவி வரைக்கும் வரமுடியாதேனு வருத்தப்படுறவங்க, பின்னூட்டத்துல உங்க பேரை வடை அல்லது அடைமொழியோட சொல்லிட்டு போங்க. உங்க கையெழுத்தை நானே போட்டுடுறேன்.

பின் குறிப்பு: இன்னிக்கு டெம்ப்ளேட் மாத்தினேன். அதை சோதனை பண்றதுக்காக, எனக்கு வந்த கைபேசி குறுஞ்செய்தியை கொஞ்சம் ஆல்டர் பண்ணி போட்ட டெம்ப்ளேட் இடுகை இது. நீங்க சீரியஸா எதையாவது எதிர்பார்த்து வந்திருந்தா ஐ ஆம் ஜோ ஜாரி.

நம்புங்கய்யா! நாலு கூட்டணிக்கும் ஓட்டு போட்டேன்!

Wednesday, 13 May 2009

எதுகை மொகனைக்காக சொல்லலைங்க.. மெய்யாலுமே நாலு கூட்டணிக்கும் ஓட்டு போட்டேன். அதைப் பத்தி சொல்றதுக்கு முந்தி, எங்க விருதுநகர் தொகுதி பத்தி கொஞ்சம் பில்டப் விட்டுக்கறேன்.

எனக்கு கார்த்திக்னா ரொம்ப ரொம்ப புடிக்கும். உள்ளத்தை அள்ளித்தா, பிஸ்தா படத்திலல்லாம் காமெடில கலக்கிருப்பாரு. அத விட விகடன் பேட்டில செமையா காமெடி பண்ணிருப்பாரு. என் விருதுநகர் தொகுதில கார்த்திக் நிக்கிறார்னு எப்போ தெரிஞ்சிச்சோ, அப்போவே அவருக்கு தான் என் ஓட்டுனு நெற்றியில் பச்சை குத்திக்கிட்டேன்.

ஆனா என் கூட சுத்துற வெளங்காத பசங்க, அவருக்கு ஓட்டு போடுற ஒரே ஆள் நீ மட்டும் தான். அதனால ஈசியா உன்னை ட்ரேஸ் பண்ணி, பதினாறாம் தேதி விடியும் முந்தி கட்சிக்காரங்க(காரர்), பத்திரிக்கைகாரங்கள்லாம் உங்க வீட்டு முன்னால பதவி, பேட்டி அது இதுனு குமிஞ்சுடுவாங்கனு பயமுறுத்திட்டாங்க.

நமக்கு இந்த பப்லிஸிட்டியெல்லாம் பிடிக்காதா.. அதனால அடுத்த ஆப்ஷனான விஜயகாந்த் பத்தி யோசிச்சேன். அவர் பிஎம் ஆயிட்டா நாட்டுல பொருளாதார நெருக்கடி கண்டிப்பா குறையும். அவரோட பாதுகாப்புக்காக தனியா செலவு செய்யத் தேவையில்ல. எந்தத் தீவிரவாதி டுப்பாக்கில டுமீல்னு சுட்டாலும் அவனுக்கே ஃபையர் பேக்காயிடும். தவிர பாக்கிஸ்தான் பார்டர்ல அவரை நிக்க வெச்சிட்டு, அங்க இருக்கற மத்த எல்லாரையும் வீட்டுக்கு அனுப்பிடலாமேனு கணக்கு போட்டேன்.

ஆனா விதி வேற மாதிரி கணக்கு போட்டுச்சு. கொஞ்ச நாள் முந்தி, காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்க தாகூர் எங்க ஊர் பக்கமா வரும்போது கட்சிக் கொடி பிடிச்சுகிட்டு நின்னவங்களுக்கு ஆளுக்கு அம்பது ரூபா குடுத்திருக்காங்க. கொடி பிடிக்குறதுக்கே இவ்ளோனா, ஓட்டு போடுறதுக்கு நிறைய குடுப்பாங்கனு எதிர்பாத்தேன். Not bad. நூத்தியம்பது ரூபா குடுத்திருக்காங்க. ஆனா எங்க ஊர்பக்கம் நாயக்கமார் அதிகம்கறதனால, எப்படியும் வைகோவுக்கோ, பாண்டிய ராஜனுக்கோ தான் ஓட்டு விழும்னு நினைச்சுட்டு, பாதி ஊருக்கு பணம் குடுக்காம அவங்களே அமுக்கிட்டாங்க.

எங்க அப்பா கம்யூனிஸ்ட் கட்சிக்காரரா.. அதனால நான் வைகோவோட பம்பரத்துக்கு ஓட்டு போட்டா, ரொம்ப நாளா அவரு ஒளிச்சு வச்சிருக்கிற _______(குச்சி மிட்டாய் குருவி ரொட்டி என்று உங்களுக்குப் பிடித்த பதார்த்தத்தால் நிரப்பிக் கொள்ளவும்) எனக்குத் தர்றதா ப்ராமிஸ் பண்ணிருக்காரு. தவிர அந்தக் கட்சிக்காரங்க அம்பது ரூபா குடுத்தாங்க.

தே.மு.தி.க.காரங்களுக்கு மேலிடத்துலயிருந்து பணம் ரொம்ப கொஞ்சமாதான் வந்துச்சாம். அந்தப் பணத்துக்கு அவங்க ஃபுல்லா ஃபுல் வாங்கி வச்சுட்டாங்களாம். தேமுதிகல இருக்குற என் ஃப்ரண்ட் கிட்ட நானும் எங்கம்மாவும், மத்த கட்சி நிலவரத்தை சொல்லி 'உங்களுக்கு ஓட்டு போட்டா எவ்ளோ தருவீங்க'னு கேட்டதுக்கு, 'ஆளுக்கு ஒரு அவுன்ஸ் தரோம். குடிச்சுட்டு போங்க'னு சொல்லீட்டான் லூசுப்பய. இது தவிர, இந்த தேர்தல்ல விஜயகாந்தோ, கார்த்திக்கோ ஜெயிச்சாலும் அவங்களால (உடனே) பிஎம் ஆவ முடியாதுனு கடைசில தான் தெரிஞ்சது.

கடைசியில் யாருக்கு வாக்களித்தேன்?????? முடிவை சின்னத்திரையில் காண்க.

*********************

நான் ஓட்டு போட்ட நாலு கூட்டணி பேரையும் சொல்றேன். நோட் பண்ணிக்கோங்க. இவங்கள்ல ஒருத்தராவது கண்டிப்பா மானாட மயிலாட ஃபைனல்ஸ்ல முதல் மூனு இடத்துக்குள்ல வருவாங்க.

அருண் + அப்ஸரா, அஸார் + ரஜினி, ஃபயாஸ் + தர்ஷினி, ரஞ்சித் + ஐஷ்வர்யா.

அருண் நான் கடவுள் ருத்ரனா வந்து சும்மா கலக்கிட்டாரு. ஆனா கனேஷ்கர் ஆர்த்தி மாதிரியே ஓட்டு கேக்கும் போது கூழைக் கும்பிடு போடுறது, மண்டி போட்டு தரைய நக்குறதுனு ரொம்ப ஓவரா பண்ணினது எனக்குப் புடிக்கல. ஆனா அதுக்கு முந்தி அருண் பல்டி அடிச்சப்பவே ஓட்டு போட்டுட்டேன்.

அஸார் ஜோடி நல்லா தான் ஆடுறாங்க. கான்செப்டும் நல்லா தான் இருந்தது. ஆனா அவங்களுக்கு ஓவர் கான்பிடன்ஸ். அது எனக்கு புடிக்கல. லோகேஷ் சுஜிபாலா நிலைமை இவங்களுக்கு வர வாய்ப்பு இருக்கு.

ஃபயாஸ் தர்ஷினிக்கு இவ்ளோ விசிறிங்க இருக்காங்கனு பொள்ளாச்சி போனப்போ தான் எனக்கே தெரிஞ்சது. ஃபயாஸ் எடுத்த நொண்டி கான்செப்ட் பழசு தான்னாலும், இதுக்கு முன்னால ஆடினவங்களை விட நிறைய ரிஸ்க் எடுத்து சூப்பரா ஆடிருந்தாரு.

ரஞ்சித் ஜோடி நல்லா ஆடினாங்க தான். அவங்களுக்கு நான் ஓட்டு போட்டதுக்கு முக்கிய காரணம், ஐஷ்வர்யா அண்ணாவோட எதிர்பாரா மரணம்.

நிவாஸ் கிருத்திகா, போன தடவை ஓட்டு கேட்ட விதம் ரொம்ப பிடிச்சுருந்தது (எனக்கு சினிமாவைத் தவிர வேறொன்னும் தெரியாதுனு நிவாஸ் சொன்னது டச்சிங்கா இருந்தது). அவங்க செமி ஃபைனல்ஸ் வர்றதுக்கு ரெண்டு வோட் போட்டேன். ஆனா இந்த தடவை நிவாஸ் ஜோடி, ஏற்கனவே ஸேண்டி எடுத்திருந்த சைனீஸ் கான்செப்ட் எடுத்து நல்லா சொதப்பிருந்தாங்க. அதனால வோட் பண்ணல.

ராம் ப்ரியா ஜோடிக்கு அவங்க choreographer ஸேண்டிக்காகவே ஓட்டு போடனும்னு நினைச்சேன். ஆனா பேலன்ஸ் காலி. பரவாயில்ல. நெக்ஸ்ட் டைம் ரெண்டு வோட் பண்றேன்.

மூத்த பதிவர்களின் முத்தம் வேண்டுமா?

Friday, 8 May 2009

நான் மற்றவர்கள் வலைப்பூக்களில் கும்மியடிக்காததாலோ என்னவோ சில பெரியமனதுக்காரர்களைத் தவிர எனக்கு பின்னூட்டுபவர்களில் பெரும்பாலானோர் அனானிமஸாகவும், கூகுள் கணக்கோடும் வரும் நண்பர்களே!

பெருந்தலைகளைத் திரும்பிப் பார்க்க வைக்க என்ன செய்யலாம் என்று யோசித்த போது எனக்கு சிக்கிய சில யோசனைகளை உங்களுக்கு சொல்கிறேன்.(நீங்கள் பின்பற்றி, வொர்க் அவுட் ஆனால் பிறகு நானும் பின்பற்ற ஆரம்பிக்கிறேன்.)

தாமிரா - தங்கமணிகளை சமாளிக்க பத்து யோசனைகள் என்ற தலைப்பில் சில யோசனைகள் தரலாம். யோசனைகள் வேலை செய்தால் உங்களுக்குக் கோவில் கட்டினாலும் கட்டுவார்.

நாமக்கல் சிபி - நவயுக தெய்வம் நயன்தாரா; (கேபிள் ஷங்கர் மற்றும் லோஷனுக்கு நமீதா என எடிட்டிக் கொள்ளவும்)

மாதவராஜ் - எதிர் வாக்களிப்பவர்களை எதிர்கொள்வது எப்படி?

நான் ஆதவன் - சேட்டனிண்ட சேட்டைகள்(A அல்ல U)

வால் பையன் - 'பகுத்தறிவாளர்களுக்கு ஒரு ஆப்பு' அல்லது 'ராவாக அடிப்பது எப்படி' என்ற தலைப்பில் எழுதலாம்.

உண்மைத்தமிழன் - ஒரு எழுத்துக்கதை எழுதுவது எப்படி என்ற தலைப்பில், 'காவல் கோட்டம்' அளவு ஒரு ஆயிரத்து சொச்ச பக்க நாவலை பதியவும்.

லக்கிலுக் - இந்த ஃபிகருக்கு எத்தனை மார்க் போடலாம்? என்று தலைப்பிடலாம். கருணாநிதியைக் கொஞ்சம் காரசாரமாகத் திட்டி பதிவிட்டால் அவர் வலைப்பூவில் உங்களுக்காக தனிப் பதிவிட்டு உங்களைப் பட்டுக் குஞ்சத்தால் கொஞ்சுவார்.

குசும்பன் - இவர் எழுதிய எதிர் கவுஜைக்கு, எதிர் எதிர் கவுஜை எழுதலாம். 'திருநெல்வேலிக்கே அல்வாவா?' என்று கேட்டு பின்னூட்ட வாய்ப்பிருக்கிறது.

ஜ்யோவ்ராம் சுந்தர் - தலைக்கு மேல் கைகளைத் தூக்கி ஒரு கும்பிடு போட்டு விட்டு, கணினியில் உ லாபம் என்று டைப்பவும். ஃபுல்லாக சரக்கடிக்கவும். பிகர்கள் இருக்கும் திசையிலுள்ள ஜன்னலை திறந்து விட்டுக் கொள்ளவும்.

இப்போது உங்கள் உள்ளத்தில் என்னவெல்லாம் தோன்றுகிறதோ, அதையெல்லாம் உள்ளத்தை அள்ளித்தா படத்தில் கவுண்டமணி ஆர்மோனியப் பெட்டியை வாசிப்பது போல, முழங்கையால் கணினியின் பொத்தான்களை கண்டபடி அழுத்தி டைப்பித் தள்ளிவிடவும். சோலி முடிஞ்சது.

இது தலைப்பிற்கு மட்டுமே! அவரைப் போல் பதிவெழுதுவது எப்படி என்று ஒரு புத்தகமெழுதலாம் என்றிருக்கிறேன்.

(இதையே மடக்கி மடக்கி கவிதை வடிவில் டைப்பினால் சென்ஷியின் பின்னூட்டத்தையும் பெற்று விடலாம்)

தூயா - வாயில் நுழையாத பதார்த்தத்துக்கு, வாயில் நுழையாத பெயரை வைத்து 'செய்வது எப்படி' என்று தலைப்பிடுங்கள்.

பரிசல்காரன் - இவர் பதிவிற்கு எதிர் பதிவிடலாம். அவரது வலைப் பூவில் 'இதெல்லாம் உனக்கு தேவையா' என்று கேட்டுக் கொண்டாலும், நம் பதிவில் ஜூப்பர் என்றே பின்னூட்டுவார். (இவரது பதிவில் முதல் பின்னூட்டம், காதலி/காதலனின் முதல் முத்தம் போல என்று குறிப்பிட்டிருந்தார். தலைப்பின் காரணம் இப்போது புரிகிறதா?)

டோண்டு ராகவன் - 'இங்கே தான் பிராமணன்' என்று தலைப்பிடலாம். ரொம்ப நாளாக எங்கே பிராமணன் என்று கேட்டு, அந்தத் தலைப்பிலேயே பதிவிட்டுக் கொண்டிருக்கிறார்.

அல்லது 'டோண்டு ராகவன் பெயரில் எனக்கு வந்த போலி பின்னூட்டம்' என்று தலைப்பிடலாம். பதிவைப் படிக்கிறாரோ இல்லையோ, 'நான் அவன் இல்லை' என்று பின்னூட்டி விட்டுப் போவார்.(அடி பலம் போல)

நர்சிம் - அடியார்க்கு நல்லார் உரை எழுத மறந்த ஏதாவது ஒரு சங்க கால பாடலுக்கு 'யாராவது விளக்கம் கொடுத்து உதவுங்களேன்' என்று தலைப்பிடலாம்.

இட்லிவடை - அனானியாக ஏதாவது பின்னூட்டம் வந்தால் இட்லிவடை என்று திருப்திப் பட்டுக் கொள்ளவும்.

அப்படியும் கல்லா கட்டவில்லையா.. தொடர் பதிவெழுத அழைப்பு விடுப்பது போல, நாளுக்கு ஐந்து பதிவர்களைப் பின்னூட்ட அழைப்பு விடுக்கலாம்.

பின் குறிப்பு: இதில் பாதிக்கு மேற்பட்டோர் எனக்குப் பின்னூட்டியிருக்கிறா(றீ)ர்கள். எனவே உங்களுக்கு சிரிப்பு வராவில்லை என்பதற்காக இதை சீரியஸாக எடுத்துக் கொள்ளாமல், சோக்காகவே எடுத்துக் கொள்ளவும்.

அதி முக்கிய அறிவிப்பு: சோம்பேறியைப் பின்னூட்ட வைக்க, சோம்பேறியின் அக்கவுண்டுக்கு பணம் அனுப்பலாம். மேலதிக விபரங்களுக்கு 'sombery@gmail.com'

அதிஷாவின் வலைப்பூவை படிப்பது எப்படி?

Wednesday, 29 April 2009

முன் குறிப்பு: யார் மனமாவது புண்பட்டதாக அறியப்படும் பட்சத்தில் இந்த இடுகை அழிக்கப்படும்.

அதிஷாவின்(பெயர் மாற்றப்பட்டுள்ளது) செம ஹாட் மச்சி, இன்பக் கதைகள் இன்ஃபினிட்டி(இந்தப் பெயர்களும் மாற்றப்பட்டுள்ளது) மாதிரி இடுகைகள் என்றாலே அனைவருக்கும் உள்ளுக்குள் அலாதி பிரியம்.

(இன்பக்கதைகள் இன்ஃபினிட்டி என்றால் என்னவென்றோ, அதிஷா என்றால் த்ரிஷாவின் தங்கச்சியா என்றோ நீங்கள் கேட்டால் இந்த பதிவு உங்களுக்கல்ல. உட்கார்ந்த இடத்திலேயே ஓட முடியாவிட்டாலும் பொடி நடையாக நடந்தாவது போய் விடுங்கள்)

என்னதான் அப்படிப்பட்ட பதிவுகளின் மேல் ஆசை இருக்கும் அளவுக்கு அதை படிப்பதற்கோ, அது போல் எழுதுவதற்கோ தைரியம் இருப்பதில்லை. ஸேம் ப்ளட் என்று சொல்லும் பட்சத்தில் இது உங்களுக்கு ஏற்ற பதிவுதான்.

யாம் பெற்ற இன்பக்கதைகள் பெறுக இவ்வையகம்.

* உங்கள் வீட்டிலோ அலுவலகத்திலோ உள்ளதிலேயே இருட்டான ஈசான மூலையைத் தேடிப் பிடித்து போய் அமர்ந்து கொள்ளுங்கள். உங்களிடம் மடிக்கணினி இருந்தால் பாத்ரூமில் போய் அமர்ந்து கொள்ளலாம். இது ஒரு பாதுகாப்பு யுக்தி அல்லது ராஜதந்திரம்.

* சோம்பேறி போன்ற அப்புரானிப் பதிவர்களின் தல புராணம், ஜல புராணம் போன்ற இடுகைகளைப் படிப்பது போல் பாசாங்கு செய்து கொண்டிருக்கவும். யாரும் உங்கள் பக்கத்திலேயே வரமாட்டார்கள். இது தான் சமயம். கப்பென
அதிஷா ஆன்லைனை திறந்து விடவும். (தொழில்முறை போட்டி காரணமாகவும், இதைப் படித்து முடிக்கும் முன் அங்கு ஓடி விடக் கூடாது என்பதற்காகவும் முகவரி தவறாகக் கொடுக்கப்பட்டுள்ளது)

* எப்படியோ உங்களை வலைப்பூவுக்குள் அழைத்து சென்றாகிவிட்டது. அடுத்த கட்டம் கொஞ்சம் டெக்னிக்கலாக இருப்பது போல் தோன்றினாலும், முக்கியமான கட்டம்.

சின்னப்புள்ளைத்தனமாக ஆன்லைனிலேயே படிக்கக் கூடாது. Save as போட்டு HTML file ஆக்கிக் கொள்ள வேண்டும். இப்போது bit_files, bit.html என்று இரண்டு ஃபைல்கள் உங்கள் கணினியில் இருக்கும். அதில் bit_filesஸில் நுழைந்து எடக்கு மடக்கான புகைப்படங்களை டெலிட்டி விடவும்.

அந்தப் படங்களுக்காகத் தான் அந்த வலைப்பூவிற்கே செல்கிறீர்கள் என்றால், அந்தப் படங்களை கட் செய்து, யாரும் சீண்டாத program files, E books போன்ற பகுதிகளுக்குள் மறைத்து வைத்துக் கொள்ளவும்.

அந்த புகைப்படத்தில் ஷகிலாவோ, சில்க் ஸ்மிதாவோ அல்லது நான்கு இன்ச்சுக்கும் குறைவாக பப்பரப்பா என்று உடுத்திக் கொண்டு பாப்பாக்களோ இருந்தால் வெற்றி உங்களுக்கே..! பல பிட்டுகள் உத்திரவாதம்.

* இப்போது படங்கள் எதுவும் இல்லாத அந்தப் பக்கங்களை எவ்வளவு சின்னதாக்க முடியுமோ அவ்வளவு சின்னதாக்கி ப்ரிண்ட் அவுட்(மினி ஜெராக்ஸ்) எடுத்துக் கொள்ளவும். (அந்தப் பக்கங்களைப் படிக்க பூதக் கண்ணாடி உங்கள் சொந்த செலவில் தான் வாங்கிக் கொள்ள வேண்டும். சர்வ நிச்சயமாக கம்பெனியிலிருந்து தரப்பட மாட்டாது)

* ப்ரிண்ட் அவுட் எடுத்த பக்கங்களை உங்கள் மினரல் வாட்டர் பாட்டிலில் சூயிங்கம் ஒட்டியோ, டோப்பாவுக்குளோ, ஷூ ஹீல்ஸுக்குள்ளோ அயன் பட சூர்யா போல மறைத்து வைத்துக் கொள்ளவும். முடிந்தால் ஒரு பத்து உலக பட டிவிடிக்கள் வாங்கி புதிதாக முயற்சிக்கவும். (கம்பெனியே அபராதத்தில் தான் ஓடிக்கொண்டிருக்கிறது என்பதால், டிவிடிக்கள் கம்பெனியிலிருந்து தரப்பட மாட்டாது)

* ஆற அமர அமர்ந்து கொண்டு ஒரு நீண்ட நெடிய பெருமூச்சு விட்டுக்கொள்ளவும்(சம்பிரதாயமாமாம்). மூச்சு விடாவிட்டால் கணினியில் இருந்து ஒரு கை வந்து உங்கள் பொடனியில் தட்டி மூச்சுவிட சொன்னாலும் சொல்லும்.

* இப்போது தேர்வெழுதும் போது பிட் அடிக்கும் லாவகத்துடன், யாராவது பார்க்கிறார்களா என்று கவனித்துக் கொண்டே கேப் கிடைக்கும் போதெல்லாம், ப்ரிண்ட் அவுட் எடுக்கப்பட்ட தாள்களை சரக் சரக்கென்று உருவி படிக்கவும். (இதற்குப் பெயர் தான் பிட் இடுகையோ!)

* ஸ்ஸ்ஸ்ஸப்பாடா ஒருவழியா படிக்க ஆரம்பிச்சாச்சா! பின்னூட்டங்கள் ஆரம்பிக்கும் முன்னால் அதாவது தலைப்பு துவங்கி சரியாக இரண்டு வரிகளுக்குள் நிச்சயம் ஒரு மிக நீண்ட பிட்டு கட்டாயம் இடம் பெறும். (ஒருவேளை பதிவு ஏமாற்றினாலும், பின்னூட்டத்தில் நிச்சயம் ஒரு துண்டு பிட்டாவது தேறும்.)

* பதிவை முழுமையாக படித்தபின் மறுபடியும் அதிஷா ஆன்லைனைத் திறந்து, அதில் 'இதெல்லாம் ஒரு பொழப்பா! தூ.. வந்துட்டானுங்க' என்று பின்னூட்டி விட்டு, அது குறித்து இந்து பொந்து ஆயாவூட்டு சந்து என எதில் வேண்டுமானாலும் எழுதி நீங்கள் தல புராணம் எழுதியதன் மூலம் இழந்த ஹிட்ஸை மீட்கலாம்.

அல்லது அதே பதிவை கதாபாத்திரங்களின் பெயர், ஊர் மட்டும் கொஞ்சம் ஆல்டர் செய்து, கிட்டத் தட்ட அதே தலைப்பில் பதிவிட்டு சூடான இடுகைக்கும் போகலாம்.

* இப்படி ஒரு வழியாக பிட்டு இடுகையை சே அதிஷாவின் இன்பக் கதைகள் இன்ஃபினிட்டி இடுகைகளைப் படித்து முடித்ததும் பரங்கிமலை ஜோதி ஆண்டவரை வணங்கி, வயிறு நிறைய பட்டை சாராயத்தைப் போட்டுக் கொண்டு பேசாமல் தனியாகப் படுத்து உறங்கவும்.

ஜோதி ஆண்டவரின் அருள் உங்களுக்கு சொந்தமாகுமாகிறதோ இல்லையோ, உங்களுக்கு பல நல்ல விஷயங்களைக் கற்றுக் கொடுத்த புண்ணியத்துக்கு எனக்கு நிச்சயம் கிடைக்கும்.

****************

பின் குறிப்பு அல்லது எச்சரிக்கை: உங்கள் நண்பர்கள் யாராவது இன்பக் கதைகள் இன்ஃபினிட்டி படிக்கிறார்களா என்று கேட்டுப் பார்க்கவும். அவர் பதில் சொல்லாமல் உங்களைப் பார்த்து வழிசலாக சிரித்தால் திருப்பி சிரித்து விடாதீர்கள். மீறி சிரித்தால் வரும் பின்விளைவுகளுக்கு கம்பெனி பொறுப்பாகாது.

*****************

இந்த பதிவுக்கு கிடைக்கும் வரவேற்ப்பை பொறுத்து அடுத்ததாக அதஷா போல எழுதுவது எப்படி என்றொரு பதிவும் இடலாம் என்கிற எண்ணமும் உண்டு.

****************

ஏ.. நீ ரெண்டாப்பு படிச்சியாய்யா..

Monday, 27 April 2009

எங்க பக்கத்து வீட்டு குட்டி சக்திக்கு நாளைக்கு பரிட்சையாம். 'உன் கூட வெளையாடிக்கிட்டு இருந்தா நான் எப்ப படிக்கறது'னு சொல்லி வீட்டுப் பக்கமே வர்றதில்ல. அவ நல்லா பரிட்சை எழுத என் வாழ்த்துக்கள்(ஆதவன் எங்க இருக்கீங்க. வந்து வாழ்த்துங்க)

செம போர். நிஜமா சொல்றேன் இவ மட்டும் இல்லைனா நான் என்னிக்கோ ஒரு உருப்படியான வேலையில சேந்து கோடிக் கணக்குல இல்லன்னாலும் ஆயிரக்கணக்குலயாவது(அட.. நூத்துக் கணக்குலயாவது) சம்பாரிச்சிருப்பேன். அடுத்து ரெண்டாப்பு போறாளாம். அலப்பரை தாங்க முடியல. வர்ற ஆத்திரத்துக்கு பேசாம ஏதாவது வேலைக்குப் போயிடலாமானு இருக்குது.

'ஏ.. நீ ரெண்டாப்பு படிச்சியாய்யா.. இப்ப மட்டும் ரெண்டாப்பு படிச்சிருந்த.. செத்துருப்ப.. ரெட்டை ஸ்கேலால முட்டிக்கு முட்டி தட்டிடுவாங்க தெரியுமா.. நல்ல வேளை தப்பிச்ச' அப்படிங்கறா.

இது கூட பரவாயில்ல. நேத்து என் கிட்ட வந்து 'உன் ரெண்டாப்பு புஸ்தகம் எனக்கு தர்றியாய்யா'னு கேக்குறா..

நான் போன வருஷம் பண்ணின ப்ராஜெக்ட் ரிப்போர்டே எங்க இருக்குதுனு தெரியல. ரெண்டாப்பு புத்தகத்துக்கு எங்க போக?

எப்ப பாத்தாலும் சுட்டி டிவி தான். அவ மட்டும் பாத்தா கூட பரவாயில்ல. அவ கூட சேந்து நானும் 'குதிங்க', 'குள்ள நரி திருடக் கூடாதுனு சொல்லுங்க', 'கோமாளித்தனமா டான்ஸ் ஆடுங்க'னு டோரா சொல்றதையெல்லாம் செய்யனும். இல்லைனா அடுத்த நாள் காலையில வந்து தூங்க விடாம பாடா படுத்துவா.

(நல்லா தூங்கிட்டு இருக்கும் போது அவ என் மேல வந்து பொத்துனு விழுந்ததும் 'சக்தீஈஈ'னு கத்தியே பழகிடுச்சா.. இப்ப பஸ்ல கூட்டத்துல யாராவது இடிச்சாலும் 'அய்யோ..அம்மா..' என்று கத்தாம 'சக்தி'னே கத்திடுறேன்.)

இந்த சுட்டி டிவிக்காரங்களும் ஒரு தடவ போட்ட எபிசோடையே திரும்ப திரும்ப போட்டுகிட்டு இருப்பாங்க. ஏன் பாத்ததையே திரும்பத் திரும்ப பாக்குறனு கேட்டா 'அப்பா மட்டும் நேத்து பாத்த செய்தியையே தினமும் பாக்குறாங்க'னு கேப்பா.

எங்கப்பாவும் என்னவோ எலெக்ஷன்ல எம்.பி. ஆகப் போற மாதிரி சன் செய்திகள், கலைஞர் செய்திகள் இவ்ளோ ஏன், செய்தி வாசிக்கற புள்ளையே திரும்ப பாக்காத ____ செய்திகளைக் கூட விடாம பாப்பாரு.

சக்தி என்னிக்காவது கையில பூவோட வந்தான்னா நான் தொலைஞ்சேன்னு அர்த்தம். எனக்கு பவுடர், கண்மை, பொட்டு, லிப்ஸ்டிக், மஸ்காரா எல்லாம் போட்டு விட்டு தலை வாரி, பூ வைச்சு சந்திரமுகி ஜோதிகா மாதிரி ஆக்கிடுவா..

இவளை மாதிரி சென்னைல எங்க மாமா வீட்டுப் பக்கத்தில, ஸாம்னு ஒரு குட்டிப் பையன் இருக்கான். அவனத் தனியாளா சமாளிக்க முடியாம ஒரு நாள் அவன் அம்மா என்னையும் சர்ச்சுக்குக் கூப்பிட்டுப் போனாங்க.

பிரார்த்தனை பண்றவங்க முக்காடைப் பிடிச்சு இழுக்கிறது, பாதிரியாரை இமிடேட் பண்றதுனு சின்னமலை சர்ச்சே திரும்பிப் பாக்குறளவு நாங்க அடிச்ச லூட்டில, அவங்கம்மா சர்ச்சை விட்டு பாதியிலேயே வெளி நடப்பு செஞ்சு, எங்க பொடனியில அடிச்சு வீட்டுக்கு இழுத்துகிட்டு வந்துட்டாங்க.

அவன் எல்.கே.ஜி படிக்கிறான். இப்போ எக்ஸாம் முடிஞ்சிடுச்சாம். அவனுக்கும் என் பிலேட்டட் வாழ்த்துக்கள்.

போன் பண்ணி அவனை வாழ்த்தலாம்னா என் கூட பேச ஆரம்பிச்சதும் 'எப்போ வருவ'னு கேட்டு அழ ஆரம்பிச்சுடுவான், அப்புறம் என்னால இங்க இருக்க முடியாது. ஏதாவது இன்டர்வியூவை சாக்கா வச்சு சென்னை போக வேண்டியது வரும். அப்புறம் வேலை ஏதாவது கிடைச்சுடுச்சுன்னா அங்கேயே தங்க வேண்டியது வரும். சக்தியப் பாக்காமலும் இருக்க முடியாது:-(

நேற்றைய பந்த் எதற்காக? கண்டுபிடிச்சுட்டாருய்யா கொலம்பசு

Thursday, 23 April 2009

ஜெயலலிதா நேற்று அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் வை.கோ மற்றும் P.மோகனை ஆதரித்துப் பேச, முறையே சிவகாசி மற்றும் மதுரைக்கு விஜயம் செய்திருந்தார். 'அதைத் தடுப்பதற்காகவே கருனாநிதி இந்த 'பந்த்'தை அறிவித்திருக்கிறார்' என்று நான் சொல்லவில்லை; நேற்று ஜெயா டிவியில் மன்னிக்கவும் விருதுநகர் பொதுக் கூட்டத்தில் பேசிய ஜெயலலிதா சொன்னார்.

மேலும், ஈழப் பிரச்சனைக்காக தீக்குளித்தவர்களுக்காக(குறிப்பாக அதிமுக தொண்டர் மணிக்காக) மௌன அஞ்சலி செலுத்தினார். இனி யாரும் அப்படி செய்யக் கூடாதென வேண்டிக் கொண்டார். தமிழ் திருநாட்டு அரசியல்வாதிகளின் செயல்களை ஊகிக்கவே முடிய வில்லை. நாளையே ஜெ கருனாநிதிக்காக ஓட்டு கேட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

மதுரை கள்ளழகர் திருவிழாவின் போது வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டு மக்களை பீதிக்கு உள்ளாக்குவதன் மூலம் கள்ள ஓட்டு போட அழகிரி திட்டமிட்டிருப்பதாக ஜெ.க்கு செய்தி வந்திருக்கிறதாம். ஏன்யா ஏன்.. ஏன் அந்தப் பச்சப் புள்ளையைப் பாத்து ஏன் இவ்ளோ பயப்படுறீங்க. ஜெ யூ டூ?

ஜெ பேசிய போது, பல இடங்களில் சென்னையில் பேசியதை மறு ஒளிபரப்பு செய்கிறார்களோ என்று சந்தேகம் வந்தது. அதிலும், 'எனக்கு உங்களை விட்டால் யாருமில்லை. உங்களைத் தான் நம்பியிருக்கிறேன்' என்ற வசனம், 'நாளை நமதே நாற்பதும் நமதே' போல ஜெவின் மற்றொரு பன்ச் டயலாக் ஆகி விட்டது போல. அடிக்கடி ரிப்பீட்டுகிறார். மண்டபத்தில் எழுதிக் கொடுத்த மகானே, ரஸ்ய பட டிவிடிகளிலிருந்து சுட்டாவது கொஞ்சம் சுவாரஸ்யமாக எழுதித் தரவும்.

(ஜெ மட்டும் சென்னைக் கூட்டத்தில் பேசியதையே ரிப்பீட்டலாம். நான் அந்தப் பதிவில் எடுத்த புகைப்படத்தை ரிப்பீட்டக் கூடாதா?)

விளம்பர இடைவேளையின் போது, கருனாநிதி பேட்டி ஒளிபரப்பானது. அதில் ஒரு நிருபர் கருனாநிதியிடம் 'ஈழ பிரச்சனைக்காக என்ன செய்யப் போகிறீர்கள்?' என்று கேட்கிறார். அதற்கு கருனாநிதி 'தீக்குளிக்கப் போகிறேன். நீயும் வர்றியா' என்று கேட்கிறார். பின்னனியில் 'இன்னும் எத்தனை காலம் தான் ஏமாறுவார் இந்த நாட்டிலே' என்ற பாடல் ஒளிபரப்பாகிறது.

மிகவும் சுவாரசியமான விளம்பர உத்தி. முந்தைய தேர்தல் போல் மொக்கையாக, இருபது நிமிடங்களுக்கு ஜெ டாட்டா போடுவதையே காட்டாமல், இந்த முறை புதிதாக முயற்சித்திருக்கிறார்கள்.

பின் குறிப்பு : நேற்று என் சித்தப்பா இந்தக் கூட்டத்தை (ஓரமாக நின்று வேடிக்கை) பார்க்கப் போயிருந்ததால், அவரை தொலைக்காட்சித் திரையில் பார்க்கும் அல்ப ஆசையின் விளைவாகவே ஜெயா டிவியில் இந்த கூட்டத்தைப் பார்த்தேன். மற்றபடி, இதுவே நான் அதிமுக பொதுக் கூட்டம் பற்றி எழுதும் இரண்டாம் மற்றும் இறுதி இடுகை என்று எங்கள் விருதுநகர் தொகுதி வேட்பாளர்கள் தலையிலடித்து சத்தியம் செய்கிறேன்.

என்னைப் பாத்தா @&$%^ மாதிரி இருக்கா?

கொலை வெறி என்பார்களே, அதில் எனக்கு விஜயகாந்த் போல கண்ணமெல்லாம் துடிக்க ஆரம்பித்து விட்டது. புரோட்டா குமார் வீட்டில் இருந்ததால், அவன் அம்மா முன் அவனைக் கெட்ட வார்த்தையில் திட்டவோ, கையில் கிடைத்த பொருளால் ஆத்திரம் தீர அடிக்கவோ முடிவில்லை.

மாதவி வீட்டிற்குப் போவதற்கு பொருள் வேண்டும் என்று கண்ணகியிடம் கேட்கப்பட்ட போது, அவளுக்கு கோவலனை வெட்டிப் போட வேண்டும் போல் கொலை வெறி வந்திருந்தாலும், சமூக மதிப்பீடுக்காக பல்லைக் கடித்துக் கொண்டு, புன்னகைத்துக் கொண்டே பணம் எடுத்துக் கொடுத்திருப்பாளே! அது போன்ற புன்னகையுடன், அவனுக்கு மட்டும் தெரியும் படி காறித் துப்பி விட்டு கிளம்பி வந்து விட்டேன்.

என் ஐம்பது ரூபாய் நஷ்டத்தை விளக்க, கண்ணகி அக்காவை வம்புக்கிழுத்தது உங்களுக்கு கொஞ்சம் அதிகப்படியான உருவகமாகத் தான் தோன்றும். ஸ்விஸ் வங்கியில் ஆயிரம் பில்லியன் திருட்டுப் போயிருந்தால், அது உங்களுக்கு ஒரு சுவாரசியமான செய்தி. அதுவே, உங்களுடைய ஆயிரம் ரூபாய் திருட்டுப் போயிருந்தால்..

அவனவனுக்கு அவனவன் கஷ்டம் தான் பெரிது. அதிலும் குறிப்பாக இவன் மீது கொலை வெறி வரக் காரணம், அட்டர் ஃப்ளாப்பான எல்லா பிசினஸுக்குமே இவன் தான் பிள்ளையார் சுழி போட்டவன் என்பதால் மட்டும் அல்ல.

நேற்று வரை நாங்கள் லோடுகளுக்கு பில் போடுவதில்லை என்பதால் மற்றவர்களை விட ஒரு நாளைக்கு குறைந்தது, இரண்டாயிரத்து சொச்சம் லாபம் கிடைக்கும். கைபேசி கட்டணம் மட்டும் மாதம் ஐம்பது ரூபாய் அதிகமாய் வரும். மற்ற படி ஒரு பைசா கூட முதலீடு செய்யத் தேவையில்லை.

இப்போது தேர்தல் நெருங்கி விட்டதால், அரசியல்வாதியான எங்கள் பார்ட்டியை அவர் எதிரிகள் கண் கொத்திப் பாம்பாக நோட்டம் விட்டுக் கொண்டிருக்கிறார்களாம். பில் போடாமல் பொருள் கொடுத்து, ரிஸ்க் எடுக்க முடியாது என்று சொல்லி விட்டார். இதனால் நாளுக்கு இருநூறு ரூபாய் நஷ்டம். டீலர்களும் ட்ரிப்பும் அதிகரிக்க அதிகரிக்க இந்த இருநூறு ரூபாய், முன்னூறு நானூறு என்று அதிகரித்துக் கொண்டே போகுமென்பதால், நால்வர் மொபைலும் ஸ்விட்ச் ஆஃபில் தான் இருக்கிறது.

மற்றவர்களைப் போல் இந்த இரு டீலர்களையும் கைபேசியிலேயே அனானியாக டீல் பண்ணியிருந்தால், இந்த இருநூறு ரூபாய் நஷ்டமும் வந்திருக்காது.

ஒன்னும் புரியலைல்ல. அது தான் எனக்கும் வேணும். ஏன்னா இது கொஞ்சம் இல்லீகல். யார் கிட்டயாவது புலம்பனும் போல இருந்தது. அதனால தான் உங்க கிட்ட மட்டும் சொல்றேன். நீங்க எதையும் மனசுல போட்டு குழப்பிக்காதீங்க. முக்கியமா போலீஸ்ல போட்டுக் குடுத்துடாதீங்க..

இதற்கு முன் நேர்மையாக (போலீஸ் உத்தியோகம் பார்க்கவில்லை) கூரியர் அனுப்பும் கவர் பிசினஸ் தான் செய்து வந்தோம். இதில் அளவுக்கதிக லாபம் கிடைப்பதால் அதை அப்படியே கைவிட்டு விட்டோம். அதில் ஒருவர் எங்களிடம் மொத்தமாக ஐந்தாயிரம் கவர்கள் வாங்கி விட்டு, பணம் நாளை தருகிறேன் என்றே இழுத்தடித்துக் கொண்டிருந்தார்.

நஷ்டத்தை கைக் காசிலிருந்து கொடுப்பதை விட அவரிடம் கொஞ்சம் கறாராகக் கேட்டு வாங்கி வா என்று புரோட்டா குமாரிடம் சொன்ன போது அவன் கூலாக 'அந்தாளு ஊரை விட்டு ஓடிப்போய் மாசக்கணக்குல ஆச்சே. அதான் பீர் இருக்கான்ல' என்றான்.

(பீர் (எ) ரன்பீர் தான் எங்கள் நண்பர் வட்டத்திலேயே வசதியானவன். இவன் தொழில்களுக்கு முதலில் முதல் போடும் இ.வா. அவன் தான். இப்போது என்னை விட கொலை வெறியுடன் பீர், குமாரைத் தேடிக் கொண்டிருக்கிறான். எதற்கு என்பது தேவையில்லாதது தான், என்றாலும் கடைசியில் சொல்கிறேன்.)

பொருப்பில்லாமல் 'பீர் இருக்கான்ல' என்று சொன்ன போது கூட எனக்குக் கொலை வெறி வரவில்லை. இவ்வளவுக்கும் ஊரை விட்டு ஓடிப்போனவன் இந்த செவிட்டு எழவு புரோட்டா குமார் பிடித்த கஸ்டமர் தான். செவிட்டு எழவு என்பது எங்கம்மா அவனுக்கு வைத்த செல்லப் பெயர். காதெல்லாம் ஒழுங்காகத் தான் கேட்கும். வேண்டுமென்றே தப்பு தப்பாக, கேட்ட கேள்விக்கு சம்மந்தமில்லாமல் பதில் சொல்வான் என்பதால் இப்பெயர்.

ஒரு முறை ஒரு குழந்தைக்கு மொட்டை போட்டு காது குத்தும் வைபவத்திற்காக கோவிலுக்கு வந்திருந்த கேட்டியிடம் 'என்ன இந்தப் பக்கம்' என்று கேட்டிருக்கிறான். அவள் 'மொட்டை போட' என்றதும் 'என்னது? புரோட்டா போடவா!' என்று கேட்டிருக்கிறான். (சோக் அடிக்கிறாராமாம்.. இதுக்கு நாங்க சிரிக்கோனுமாமாம்.)

இவனுக்கு செவிட்டு எழவு குமார், கொக்கி குமார், குவாட்டர் குமார், டோங்ரே குமார், மாயக்கா குமார் என ஆயிரத்தெட்டு பெயர்கள் இருந்தாலும் கேட்டி வைத்த காரணத்தால் புரோட்டா குமார் என்ற பெயராலேயே விளிக்கப்பட்டு வருகிறான்.

இன்னும் இரண்டு வருடத்தில், அவன் ஆள் கல்லூரிப் படிப்பை முடிப்பதற்குள் அவன் ஒரு சொந்த வீடு கட்டியாக வேண்டும். 'இல்லையென்றால் டாட்டா காட்டி விட்டுப் போய் விடுவேன்' என்ற கண்டிஷனோடு தான் அவள் அவன் காதலையே ஏற்றாள்.

அதற்காக காளான் வளர்ப்பு, தேன் கூடு வளர்ப்பு முதல் திருட்டு டிவிடி வாடகைக்கு விடுவது, டேட்டா என்ட்ரி வரை அவன் முயற்சிக்காத பிசினஸே இல்லை. முதல் போடுவதற்கு இளிச்சவாயர்கள் நாங்கள் மூவரும் இருக்கும் போது அவனுக்கென்ன?

இது வரை இவன் தொடங்கிய எல்லா பிசினஸுமே பெருங் காமெடியாகத் தான் முடிந்திருக்கிறது. அதிலும் அவன் வளர்த்த தேனீக்கள் அவன் அண்ணியைக் கொட்டி விட, அவர் வரதட்சனைக் கொடுமை என்று காவல் நிலையத்தில் புகார் கொடுக்க, இவனை காவல் நிலையத்தில் பப்பி ஷேமாக குந்த வைத்து கும்மி விட்டார்கள்.

அதிசயமாக இப்போது செய்து கொண்டிருக்கும் பிசினஸ் தான் நன்றாகப் போய்க் கொண்டிருந்தது. இது இல்லீகல் என்று சில நாட்களுக்கு முன்பு தான் தெரிந்தது. நிறைய பணம் பார்த்து பழகி விட்டதால் 'நான் ஒருவன் திருந்தி விட்டால் இந்தியா முன்னேறி விடுமா?' என்ற டிபிகல் சமாதானத்துடன் தொடர்ந்து கொண்டிருக்கிறேன்.

இதையே வேறு யாராவது செய்வது தெரிந்திருந்தால், 'சீ.. சோத்தையா தின்றானுங்க இவனுங்க' என்ற தலைப்பில் அவர்களைப் பற்றி இதே வலைப்பூவில் எழுதியிருக்கக் கூடும். (அரசியல்வாதியாக இருக்கும் எங்கள் பார்ட்டியின் கட்சி தேர்தலில் வென்று விட்டால் தங்கம், வைரம் என்று பெரிய அளவில் ஸ்மக்லிங் செய்யலாம் என்று சொல்லியிருக்கிறார்)

புரோட்டா குமாருக்கு சினிமா பித்து அதிகம். நண்பர்கள் யாரிடமாவது தொலைபேசினால் அழைப்பை ஏற்றதும் ஹலோ என்று சொல்ல மாட்டான். சமீபத்தில் பார்த்த சினிமாவின் பன்ச் டையலாகை தான் சொல்வான். சிவாஜி வந்த புதிதில்,

யாரோ: ஹலோ

குமார்: கூல்

யாரோ: எப்படி இருக்க?

குமார்: கூல்

யாரோ: எங்கடா இருக்க?

குமார்: கூல்

ரெண்டு கெட்ட வார்த்தையில் திட்டும் வரை இதே கூல் தான் ரிப்பீட் ஆகிக் கொண்டிருக்கும்.

நேற்று குமார் பீரின் கைபேசிக்கு அழைத்திருக்கிறான். பீருடைய மொபைலின் கெட்ட நேரத்துக்கு குமார் அருந்ததியா பார்த்திருக்க வேண்டும். அவன் அம்மா காதில் மொபைலை வைத்தது தான் தாமதம், 'அடியேஏஏஏஏஏஏஏய் அருந்ததி' என்று குமார் பிளிறிய பிளிறில் மொபைலை எங்கே எறிந்தார்கள் என்றே தெரியவில்லை. தேடி எடுக்கும் போது பீஸ் பீஸாகி இருந்திருக்கிறது. மவனே அவன் வரட்டும் என்று கருவிக் கொண்டிருக்கிறான்.

கதை முடியப் போகுது.. கொலை வெறி எதுக்குனு இன்னும் சொல்லலையே! இந்த குமார் நாதாரி தியேட்டர் கட்டப் போறானாம். அதுக்கு நான் பணம் தரனுமாம்.. என்னைப் பாத்தா ____ ____ மாதிரி இருக்கா?

ஜெ அம்மனுக்கு ஆராதனை - ஜெயா டிவியிலும், தீவுத்திடலிலும்

Friday, 17 April 2009

ஓப்பனிங் ஷாட்டில், கையில் மைக்குடன் தோன்றிய ரவி பெர்னார்ட் பிரச்சாரக் கூட்டத்தில் எதிர் பட்டவர்களிடமெல்லாம், உங்கள் ஓட்டு யாருக்கு என்று கேட்டு கலகலக்க வைத்தார். ஜெயலலிதா அப்போது எதிர்பட்டிருந்தால் அவரிடமும் மைக்கை நீட்டி, உங்கள் ஓட்டு திமுகவுக்கா? அதிமுகவுக்கா? என்று கேட்டிருப்பார் போல..

யாகம் வளர்க்கையில், ஒவ்வொரு முறை நெய்யூற்றும் போதும் 'ஸ்வாகா' என்று மந்திரம் ஓதுவார்களே அது போல, முதன் முதலில் மேடையேறி பேசிய தலைமைச் செயலர் டி.ஜெய குமார் ஒவ்வொரு வாக்கியத்தை முடிக்கும் போதும், 'அம்மா உங்கள் ஆட்சியில் தான் அம்மா' என்ற மந்திரத்தை 108 முறை சொல்லாவிட்டாலும் 18 முறையாவது 'ஸ்வாகா' ராகத்தில் சொல்லியிருப்பார்.

விவசாயிகள் துயர் துடைத்தது 'அம்மா உங்கள் ஆட்சியில் தான் அம்மா'

வீரப்பனின் அட்டகாசத்தை ஒடுக்கியது 'அம்மா உங்கள் ஆட்சியில் தான் அம்மா' என்று ராகத்துடன் ஓதினார் மன்னிக்கவும் பேசினார்.


சுருக்கமாகப் பேசிய தா.பாண்டியன் அழகிரி ஜெயித்து விட்டால், கண்ணகி மதுரையை மீண்டும் எறித்து விடுவாள் என்ற ரீதியில் பேசிய போது, ஜெ முகம் க்ளோஸ் அப்பில் காட்டப் பட்டது. கை தட்டி சிரித்து ரசித்தார்.


அடலேறுகளே, பெரியோர்களே, தாய்மார்களே என்று ஜெ முதல் கடைசி மட்ட தொண்டர் வரை, ஒவ்வொருவரையும் தனித் தனியாக விளித்து வணக்கம் சொல்லவே வை.கோ.விற்கு ஐந்து நிமிடம் ஆனது.

எந்த வரையரைக்குள்ளுமே சிக்காதது தான் பின் நவீனத்துவம் என்றால், வை.கோவின் பேச்சு பின் நவீனத்துவ பேச்சு என்று அடித்துக் கூறுவேன். அவர் பேசியதில் பாதிக்கு பாதி வருணனைகள். அதில் பாதிக்கு பாதி எனக்குப் புரியவில்லை.

அடிக்கடி மேஜர் சுந்தரராஜன் போல் ஆங்கிலத்தில் பேசி விட்டு அதையே தமிழிலும் மொழி பெயர்த்தார்.

ஈழத் தமிழர் பற்றி பேசுகையில் உணர்ச்சிவசப்பட்டு, 'சோனியா அம்மையாருக்கு சித்த பிரமைப் பிடித்திருக்கிறதா' என்று கேட்டு விட்டு, சட்டென சுதாரித்துக் கொண்டு 'மன்னிக்க வேண்டும். இந்த வார்த்தையை பயன்படுத்தியதற்காக' என்றும் கேட்டுக் கொண்டார்.


ராமதாஸ் அம்மனுக்கு பட்டு சார்த்துவது போலவே, ஜெ.க்கு பட்டு அங்கவஸ்திரம் போல் இருந்த ஒன்றைக் கொடுத்து விட்டு உரையை ஆரம்பித்தார். அவர் பேசும் போது நான் ஸூஸு போய் விட்டதால் என்ன பேசினார் என்று தெரியவில்லை.

ஆனால் நிச்சயமாக, மணல் கொள்ளையில் பங்கு தராததால் தான் திமுகவிடமிருந்து கோபித்துக் கொண்டு வந்தேன் என்றோ, அதிமுகவில் தான் இருப்பேன் என்று பச்சை குத்திக் கொள்ளப் போவதாகவோ பேசியிருக்க மாட்டார்.


பிரகாஷ் காரத் 'சகோதரி அவர்களே! எனக்குத் தமிழ் புரியும். ஆனால் சரியாகப் பேச வராது' என்று நமீதா தமிழ் பேசி தன் உரையை ஆரம்பித்துவிட்டு, ஆங்கிலத்தில் தொடர்ந்தார்.


நிறைவாக பலத்த கர கோஷத்துடன் ஜெ பேச ஆரம்பித்தார். என்ன ஒரு கான்ஃபிடண்ட் லெவல் அவர் பேச்சில்! ஒரு நிமிடம் இதற்காகவே அவருக்கு வோட்டு போடலாமோ என்று தோன்றியது.. ஆள்காட்டி விரலை உயர்த்தி பேசுவது ஜெ.யின் மேனரிஸமா என்ன?

இந்தத் தேர்தலில் அதிமுகவிற்கு முழு வெற்றி தர வேண்டும் என்று அன்புடன் வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறேன் என்றும் இரு கரம் கூப்பி வேண்டிக் கொள்கிறேன் என்றும் சொல்லும் போது கூட ஆள்காட்டி விரலை உயர்த்தி, கந்து வட்டிக்காரர்கள் கடனை வசூலிக்கும் தொனியில் தான் பேசினார்.
கடைசியில் நன்றி வணக்கம் என்று சொல்லும் போது தான் கை கூப்பினார்.

நான் செய்த பாவமோ கட்சிக்காரர்கள் செய்த புண்ணியமோ, அதிகம் எதிர்பார்த்திருந்த என்னை ஏமாற்றுவது போல் வேட்பாளர்கள் அறிமுகத்தின் போது, யாரும் ஜெ காலில் விழ வில்லை. சால்வை கொடுத்து கும்பிடு போட்டு விட்டு போய் விட்டார்கள்.

நான் பார்த்த வரை, யாருமே தி.மு.க. காங்கிரஸ் தவிர வேறு யாரையும் தாக்கி பேசவில்லை. ஆனால், மறக்காமல் ஈழத் தமிழர் பற்றி பேசினார்கள்.


இறுதியாகப் பேசிய ஓ. பண்ணீர் செல்வம், 'திமுக கூட்டணி திருடர்களோடு கூட்டனி.. அதிமுக கூட்டணி தெய்வத்துடன் கூட்டணி' என்று ஒரு போடு போட்டு கூட்டத்தை நிறைவு செய்தார்.


கூட்டம் நிறைவடைந்து ஜெயலலிதா மேடையை விட்டு இறங்கும் தருனத்தில் அவரை நிறுத்திய வை.கோ, சால்வை கொடுக்க மறந்த ஒரு வேட்பாளரை ஜெவிடம் அழைத்து சென்று சால்வை கொடுக்க வைத்து கும்பிடு போட வைத்தார்(எம்பூட்டு தெகிரியம்)

என் காதல் அனுபவம் அல்லது புனைவு - சங்கிலித் தொடர்(21- ஸ்பெஷல்)

Tuesday, 14 April 2009

இரவின் சூரியன் நிலா, தனது கதிர் கரங்களில் ஒன்றை, முகமெல்லாம் பல்லாக தன்னைப் பார்த்து ஜொள்ளு விட்டுக் கொண்டிருந்த அல்லி மலர் மீதும், மற்றொன்றை என் தோள் மீதும் போட்டிருந்த ஒரு அழகான இரவில், ஒரு இழவுக்காக என் அத்தை மகள் வீட்டிற்க்கு சென்றிருந்தோம்(அத்தை வீடு என்றும் சொல்லலாம்).

வரவேற்பறையில், தொலைக்காட்சி நெடுந்தொடரைப் பார்த்தபடி, அவள் அம்மாவும் என் அம்மாவும் ஓடிப் போனவர்கள் பற்றிய புள்ளி விவரங்களைப் பறிமாரிக் கொண்டிருந்தார்கள். அவள் அப்பாவும், என் அப்பாவும் காரியமாகக் கிளம்பி வெளியே போய் விட்டார்கள்(இழவு வீட்டில் என்ன காரியம் என்று நான் விளக்கத் தேவையில்லை).

அவள் வீட்டுத் தோட்டத்தில் நிலாவுக்கு வயிறெரியும் அளவு அல்லியை நெருங்கி முகர்ந்து கொண்டிருந்த அந்தத் தனிமையான இரவிலே.. ஒன்றும் நடக்கவில்லை. அது தான் தனிமையான இரவு என்று சொல்லி விட்டேனே!

கொலுசின் ஜலஜலப்பு, வளையலின் சலசலப்பு, பட்டுப்பாவாடை சரசரப்பு சகிதம் ஒரு கை பின்னாலிருந்து என் கண்களைப் பொத்தியது. அவள் முழங்கை வரை(மட்டுமே.. நிஜம்ம்ம்மா) தடவிப் பார்த்து விட்டு 'ஹேய்.. கேட்டி' என்றேன்.

'ஹைய்யோ.. எப்படிடா கண்டுபிடிச்ச' என்று விழி விரிய கேட்டுக் கொண்டே, என் பக்கத்தில் வந்து அவள் அமர்ந்த போது, சங்க காலத்திலிருந்து பல கவிஞர்களுக்கும் தோன்றிய அதே சந்தேகம் எனக்கும் தோன்றியது. 'பெண்கள் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் உண்டா' என்பது அல்ல. அழகுக்கும், அறிவுக்கும் ஏணி வைத்தாலும் எட்டாதோ என்று.

ஆனால், இத்தனை வருடங்கள் ஓங்கி அப்ப வேண்டும் போல கடுப்பேற்றிய அவள் லூசுத்தனம், இப்போது அள்ளிக் கொஞ்ச அவாவுறும் குழந்தைத் தனமாகத் தோன்றுகிறது. ஆறு மாதங்களுக்கு முன் கடவுளே வந்து 'நீ அவளைக் காதலிப்பாய்' என்று சொல்லியிருந்தால் கூட நம்பியிருக்க மாட்டேன்.

'நீ மாடிப் படியில இறங்கி வரும் போதே பாத்துட்டேன். போதாக்குறைக்கு ஆட்டக்காரி மாதிரி வளையலும், கொலுசும் வேற' என்றேன்.

அவளுக்கு கேத்தரீனா ஜீட்டா ஜோன்ஸ் போலவே, வில்லைப் போல் வளைந்த மேல் உதடு. அந்த உதடுகளை வில்லில் நாணேற்றுவது போல விரித்து பூத்த புன்னகையைப் பார்த்தவுடன்,
Sssssssstopppp thatt bull sh*t smile. Or i wil stop it with my fuc*ing lllips' என கத்த வேண்டும் போல எழுந்த ஆசையை நாகரீகம் கருதி புதைத்து விட்டேன்.

'காட்டு வாசிகளாவே இருந்திருக்கலாம். எவன்டா கண்டுபுடிச்சது இந்த நாகரீகத்தையெல்லாம்!' என்று நினைக்கும் போது கோபம் வந்தது.

கத்தியிருந்தாலும் அவளுக்கு புரிந்திருக்காது. குட்டி ஒன்னாப்பையே இரண்டு வருடம் படித்த பிரகஸ்பதி அவள். என்று நினைத்ததும் லேசாக சிரிப்பு வந்தது.

அந்த இதழ்களை ஒரு முறை முத்தமிட்டு விட்டு செத்துப் போ என்று சொன்னால் மறுபேச்சு பேசாமல் சம்மதித்து விடுவேன். ஆனால் அப்படி கேட்க யாருமில்லையே என்று நினைத்த போது துக்கப் பெருமூச்சு வந்தது.

அந்தப் புன்னகையையே
சமாளிக்க முடியாமல்
தினறிக் கொண்டிருந்த போது..

வார்த்தைகளெனும்
அம்பையும் இதழெனும்
வில்லில் ஏற்றி
என் இதயத்தில் எய்தாள்..
(கவிதை வருதானு முயற்சி செய்து பார்த்தேன். வரல.. ஸோ.. மடக்கி மடக்கி எழுதாம நேராவே எழுதுறேன்)

பெருமூச்சுடன் துளைக்கப் பட்ட நெஞ்சைப் பிடித்து ஆசுவாசப்படுத்திக் கொண்டு, அவளைப் பார்க்க முடியாமல் குனிந்து முழங்காலில் தலையால் முட்டிக் கொண்டேன்.

நொடிக்கு நூறு முக பாவனைகள் மாற்றும் என்னைப் பார்த்து அவள் பயந்திருக்க வேண்டும். 'என்னாச்சு! உடம்பு சரியில்லையா?' என்று கேட்டுக் கொண்டே என் நெற்றியில் கை வைத்ததும்.. ஹைய்யோ.. காதலிக்காதவர்களெல்லாம் f*ckng idiots.. பெரிய பாவம் செய்தவர்கள்.

சிறுவயது முதல் நாங்கள் இருவரும் பல முறை கட்டிப் புரண்டு சண்டை போட்டிருக்கிறோம். அப்போதெல்லாம் தோன்றாத உணர்வு அவள் விரல் நுனி என் மேல் பட்டதும்..

'இல்லை. ஒன்னுமில்லை. எனக்கென்ன.. am good.. ஆமா.. என்னவோ கேட்டியே' என்றேன்.

முகத்தையும் குரலையும் குழைத்துக் கொண்டு 'ஷா பத்தி ஏதாவது சொல்லேன்' என்றாள்.

ஆமா! அது யார் அந்த ஷா. அவளுடைய காதலன்.
(தொடரும்)

தொடர் விதிமுறைகள்:

1) உங்களுக்குள் தூங்கும் கவிதை எழுதும் மிருகத்தைத் தட்டி எழுப்புங்கள். ஒவ்வொரு பாகத்திலும் ஒரு கவிதையாவது இடம் பெற வேண்டும்.

2) கெட்ட வார்த்தைகள் எதையும் உபயோகிக்கக் கூடாது.(நான் இலக்கியவாதியாகும் முயற்சியில் தீவிரமாக இருப்பதால், என்னால் கெட்ட வார்த்தைகளைத் தவிர்க்க முடியவில்லை.)

3) இதைத் தொடர ஒருவருக்கு மட்டுமே அழைப்பு விடுக்க வேண்டும். நண்பர்களை பகைத்துக் கொள்ள விரும்பாமல், என் followers 9 பேரும், நான் follow செய்யும் 99 பேரும், இது வரை எனக்குப் பின்னூட்டியிருக்கும் 999 பேரும், நான் இதுவரை பின்னூட்டியிருக்கும் 9999 பேரும் என்றெல்லாம் டகால்டி வேலை செய்யக் கூடாது.

4) அடுத்த பதிவெழுத மேட்டர் சிக்காத காரணத்தாலோ, நம் அழைப்பிற்கு யாரும் வர மாட்டார்கள் என்ற என்னத்திலோ உங்களுக்கு நீங்களே அழைப்பு விடுத்துக் கொள்ளக் கூடாது.

5) விதிமுறைகளை உங்கள் இஷ்டத்துக்கு மாற்றி அமைத்துக் கொள்ளக் கூடாது. இந்த விதிமுறைகளை உங்கள் பதிவில் காப்பி பேஸ்ட் செய்து கொள்ளக் கூடாது. 'விதிமுறைகளைத் தெரிந்து கொள்ள முதல் பாகத்தைப் படிக்கவும்' என்று என் வலைப்பூவிற்கு லிங்க் கொடுத்து, ஓசி விளம்பரம் செய்ய வேண்டும்.

6) இது முக்கோனக் காதல் கதையாக இருந்தாலும், யாருடைய காதலும் தோல்வியில் முடியக் கூடாது. அப்படி யாரையாவது பிரிக்கும் பதிவரை ஆரும் பதிவர் சந்திப்பில் சேர்த்துக் கொள்ளக் கூடாது. ஆரும் follow பண்ணக் கூடாது. ஆரும் அவருக்குப் பின்னூட்டக் கூடாது. அவங்களோட பழகுறவங்களுக்கும் அதே கெதி தான். இது இந்த நாட்டாமையோட தீர்ப்புடா.... தீர்ப்புடா.... தீர்ப்புடா....

7) மனைவி காப்பியில் சர்க்கரை குறைவாக போட்ட கோபத்திலோ, தொழில் முறைப் போட்டி காரணமாகவோ அடுத்த பாகத்திலேயே ஒரே குண்டில் அனைவரும் போய் சேர்ந்து விட்டார்கள் என்று கதையை முடித்தால், முந்தைய பாகம் வேறொரு பொருப்பான, சாத்வீகமான, வெஜிட்டேரியன் பதிவரிடம் கொடுக்கப் படும்.

8) மேற்கூறிய ஏழு விதிமுறைகளில் ஆறை மட்டுமே சாய்ஸில் விடலாம்.

இதன் அடுத்த பாகத்தை எழுத நான் அழைப்பு விடுப்பது வல்லாளர், நல்லாளர், கொல்லாளர் பதிவர் சோம்பேறிக்கு. நான்காம் விதி முறையை சாய்ஸில் விட்டு விட்டேன்:-)

பின் குறிப்பு: அடுத்தவர் கையில் கொடுத்தால் தான் இதற்குப் பெயர் சங்கிலிப் பதிவு என்று வாதிடுபவர்களுக்கு, இந்தக் கதையில் வரும் 'நான்' பாத்திரத்தின் பெயர் சங்கிலி. இப்போது கங்குலி என்று மாற்றிக் கொண்டார்(பார்ப்பதற்கு சோடா புட்டி போடாத கங்குலி போல் இருப்பார்) என்றாலும், சங்கிலி என்ற பெயர் கேட்சியாக இருப்பதால் அட்ஜஸ்ட் செய்து கொள்ளவும்.

ச.ம.க.WIN 1977 மற்றும் நான் ஏன் பின்னூட்டுவதில்லை

Thursday, 9 April 2009

முன் குறிப்பு அல்லது எச்சரிக்கை: முட்டிக் கொள்ளும் தூரத்தில், பக்கத்தில் சுவர் எதுவும் இருந்தால், 1977 திரைப்படம் பற்றி எழுதப் பட்டிருக்கும் முதல் பகுதியைப் படிப்பதைத் தவிர்த்து விடுங்கள். மண்டை உடைய வாய்ப்பிருக்கிறது.

பொதுவாக டிவிடியில் படம் பார்க்கும் பொழுது, எனக்குப் பிடிக்காத காட்சிகளை fast forward செய்து விடுவது வழக்கம். ஆனால் முழுப்படத்தையும் fast forwardடியே பார்த்தது இது தான் இரண்டாவது முறை. (முதல் படம் 'பிரிவோம்.. சந்திப்போம்..'. மோசமான படம் என்பதற்காக அல்ல. திரைக்கதையின் வேகம் அப்படி. X20யில் fast forward செய்தும் படம் வேகமாக நகர வில்லை).

ஆரம்பக் காட்சியிலேயே 1977ன் அழகு தெரிந்து விட்டது. அறிமுகக் காட்சியிலேயே சரத் உடம்பில் மண்ணென்னை ஊற்றிக் கொண்டு, என்னைக் கொளுத்து கொளுத்து என்று சொல்லும் போது அவர் கையிலிருக்கும் தீக்குச்சியைப் பிடுங்கிக் கொளுத்தி விடலாமா என்றாகி விட்டது.

The League of Extraordinary Gentleman(LXG) திரைப்படம் பார்த்திருக்கிறீர்களா? அதில் வரும் Dorian என்பவருக்கு பதில், அவருடைய ஓவியத்துக்கு வயதாகும். அவரை எந்த ஆயுதத்தாலும் சாகடிக்க முடியாது. அவர் புகைப் படத்தை எப்போது நேருக்கு நேர் பார்க்கிறாரோ அப்போது தான் அவருக்கு மரணம்.

இந்தப் படத்திலும் 'சரத் நியூஸ் பேப்பரில் எதையோ பார்த்ததும் இறந்து விடுகிறார்' என்று கேள்விப் பட்டதும், LXG போல ஏதோ இருக்கும் என்று நினைத்து, கடைசி வரை பொருமையாக X20யில் பார்த்துக் கொண்டிருந்த நான்..

கதாநாயகி வரும் போது நம்ம்ம்ம்ம்பி ப்ளே பட்டனை அழுத்தினேன். சரத்தும் அவரும் பார்க்கும் போதெல்லாம் போல இடித்துக் கொள்கிறார்கள்(நன்றி: அருணாச்சலம் என்று கூட போட வில்லை). காதல் வந்து விடுகிறதாம். எங்க ஊர் பிள்ளைகளை இடித்தால் செருப்பு தான் வருகிறது.

நமீதா இன்னும் ஒரு வருடத்திற்குக் குளிக்கவே தேவையில்லை. அந்தக் குளி குளித்திருக்கிறார் படத்தில். அவர் கைகள் ஒவ்வொன்றும் ரம்பா தொடை போல இருக்கின்றன(நன்றி: விவேக்). உடைகளை மட்டும் குறைத்தால் போதாது ஆத்தா; கொஞ்சம் உடம்பையும் குறைங்க..

அப்பா சரத் செய்தித் தாளில் அப்படி எதைப் பார்த்து பயந்து செத்துப் போனார்னு சொல்ல மறந்துட்டேனே.. அவர் மனைவியின் புகைப்படத்தைப் பார்த்து.

இயக்குனர் எக்ஸ்.தாமிரா வலைப்பூவின் வாசகராய் இருப்பாரோ?

நான் ஏன் பின்னூட்டுவதில்லை

திரட்டிகளில் சரியாக இணைத்துக் கொள்ளாததாலோ, word verification enable செய்திருந்ததாலோ தெரியவில்லை, என் பத்தாவது பதிவு வரை 'தமிழில் டைப் செய்வது எப்படி?' என்று கேட்டு கூட எனக்கு பின்னூட்டம் வந்ததில்லை. ஏன், நானே கூட எனக்குப் பின்னூட்டிக் கொண்டதில்லை.

offlineனில் கூட நமக்குப் படிக்க பொருமையில்லாத சில பதிவுகளில் ஆஹா ஓஹோ எனப் புகழ்ந்து வரும் பின்னூட்டங்களைப் பார்த்திருக்கிறீர்களா? பலருக்கும் followerராக (சமயங்களில் அடிப்பொடியாக) இருப்பதாலோ, பல பதிவுகளிலும் கன்னா பின்னாவென்று பின்னூட்டுவதாலோ தான் இவர்களுக்கெல்லாம் பின்னூட்டங்கள் வருகிறதோ என்று எனக்கு சந்தேகம் வந்ததால், என் கோபம், வருத்தம், மகிழ்ச்சி என்று எதையும் யார் வலைப்பூவிலும் பதிவதில்லை. followவும் செய்வதில்லை.

ஆரம்ப காலத்தில் நான்கு முறை பின்னூட்டியிருக்கிறேன்.(யாருக்குமே பின்னூட்டாத இட்லி வடை பதிவில், தன் லிங்கை என் பதிவில் பின்னூட்டி பார்க்க சொன்ன ஒரு நண்பரின் பதிவில், ஒரு பதிவரின் பழைய பதிவில், அணிமாவிற்கு word verification பற்றிய அறிவுறைக்கு நன்றி சொல்ல ஒன்று)

இப்போது என் வலைப்பூவின் தரம் ஓரளவு தெரிந்து விட்டதால், இனி பல கடைகளில் புகுந்து விளையாடலாம் என முடிவு செய்து விட்டேன். முதல் ஐந்து பின்னூட்டங்களை 1977 படத்துக்கு விமர்சனம் எழுதிய அஞ்சா நெஞ்சர்களுக்கு இட்டு கௌரவிக்கலாம் என நினைக்கிறேன். வடிவேலு பாணியில் 'சாவடிக்கறவனா வீரன். சாவடி அடிச்ச பிறகும் உசுரோட இருக்கறவன் தான் வீரன்'.

இது வரை எழுதிய 28 பதிவுகளிலும் பின்னூட்டிய அன்பு நண்பர்கள் அணைவருக்கும் என் நன்றி. நீங்கள் பாராட்டிய ஒவ்வொரு வார்த்தையையும் உண்மையாக உணர்கிறேன். உங்கள் ஒவ்வொருவருக்கும் தனிப் பட்ட முறையில் நன்றி சொல்லும் விதமாக, அடுத்தப் பதிவிடும் வரை, உங்கள் பெயரை சைட் பாரில் டிஸ்ப்ளே செய்திருக்கிறேன்.

(இதை 25வது பதிவாக ஏற்றம் செய்ய நினைத்திருந்தேன். நாசமாய் போன ஞாபக மறதி காரணமாக கொஞ்சம் தாமதமாகி விட்டது. ஞாபகப் படுத்தியதற்கு நன்றி சக்கரை சுரேஷ்)

இதுவரை இங்கு வருகை தந்த, பின்னூட்டிய, வாக்களித்த, என்னை follow செய்யும் மற்றும் செய்த(followersஸாக இருந்து இப்போது எஸ் ஆன) அனைவருக்கும் என் மனப்பூர்வமான நன்றிகள்.

திரட்டிகளில் இணைக்காத என் எல்லா பழைய பதிவுகளையும் படித்து விட்டு பாராட்டிய பெயரில்லா நண்பர்

படித்ததுடன் தன் எதிர் கருத்தைப் பதிந்த ___(யார் பேரையாவது விட்டுடுவேனோனு பயம் தான்)

அனானியாக வந்து தொடர் ஆதரவு தரும் விஜய்

ரஜினியைக் கலாய்த்ததற்காக 'கா' விட்டு வெளிநடப்பு செய்த ____

தனது ஆரோக்யமான கருத்தைப் பல விவாதத்திற்குறிய பழைய பதிவுகளிலும் பதிந்த ______

எனக்கு முதலில் பின்னூட்டிய மற்றும் word verificationனைத் தூக்கி விடும் படி அறிவுரைத்த அணிமா

என்னை நம்பியோ, எனக்கு ஊக்கமளிக்க நினைத்தோ என்னை முதலில் follow செய்தவர்கள் _____

இவர்கள் எழுவருக்கும் என் ஸ்பெஷல் நன்றி(உங்கள் பின்னூட்டங்களைத் சமீபத்தில் தான் பார்த்தேன். பதிலளித்திருக்கிறேன்).

யாருக்கு உறுத்த வேண்டும் என்று நினைத்து எழுதினேனோ அவர்களில் ஒருவரையாவது சென்றடைந்து விட்டது என்ற திருப்தியைக் கொடுத்த எதிர் வாக்காளர்களுக்கு மிகவும் ஸ்பெஷல் நன்றி.

இதுவரை 48, 49, 50 என்று குட்டி ஒன்னாப்பு குழந்தைகள் போல் கணிதம் கற்றுக் கொள்ளவோ, 'எறும்புக்கு ஏப்பம் வருமா? கொசுவுக்குக் கொட்டாவி வருமா?' என்ற மாபெரும் சம்மந்தமில்லா சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்வதற்கோ யாரும் எனக்குப் பின்னூட்டியதில்லை என்று பெருமையுடன் சொல்லிக் கொள்கிறேன்.

இனியும் அது போன்ற பின்னூட்டங்களை மட்டுறுத்த நேர்ந்தால் நண்பர்கள் தயவுசெய்து கோபித்துக் கொள்ளாதீர்கள். ஒரு பதிவருக்கு மகிழ்ச்சி அளிப்பது கருத்துரைகளின் எண்ணிக்கை அல்ல. கருத்துரையிட்டவர்களின் எண்ணிக்கையும், (சில சீரியசான பதிவுகளில்) கருத்துகளின் ஆழமும் தான்.

மேலும் பண்படுத்தும் அறிவுரைகளும், பண்பாக இடித்துரைக்கும் எதிர்கருத்துகளும் ஒரு பதிவருக்கு கூடுதலாக மட்டற்ற மகிழ்ச்சியைக் கொடுக்கும் என்பது என் கருத்து.

மீண்டும் அனைவருக்கும் என் நன்றிகள்.
Blog Widget by LinkWithin
 
◄சோம்பேறி. Design by Pocket►