Showing posts with label சண்டை போடலாம்.. வாங்க... Show all posts
Showing posts with label சண்டை போடலாம்.. வாங்க... Show all posts

எனக்கும் வாசகர்கள் கடிதம் வந்திருச்சுடோய்ய்ய்ய்.. (மவனே.. கீசிடுவேன்)

Tuesday, 7 July 2009

(முன் குறிப்பு : உங்களுக்கு சிரிப்பு வரவில்லை என்பதற்காக சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டாம். யாரையும் புண்படுத்தும் நோக்கமல்ல.)


டியர் சோம்பேறி,

நீங்க ரொம்ப நல்லா எழுதுறீங்க மச்சி. முக்கியமா "என்னைப் பாத்தா $&*%$&*& மாதிரி இருக்கா" கதை படிச்சு படிச்சு வயிறே புண்ணாக்காகிடுச்சு. புரோட்டா குமாரின் உருவம் மனதில் இன்னும் நிற்குது.

நான் இதுக்கு முன்னாடி இப்படி மெயில் அனுப்பினது ஜாக்கி சானுக்கு மட்டும் தான். நீங்க என்ன மறுபடியும் எழுத வச்சிட்டீங்க. உங்க பதிவுக்கு பின்னூட்டம் போடனும்னு நெனைக்கும் போதெல்லாம், நீங்க குவாட்டர் அடிச்சுட்டு குப்புற விழுந்து கெடப்பீங்களோன்னு நெனச்சு தான் இப்ப மெயில் அனுப்புறேன். நமீதா-வ உங்க "நமீதாவுக்கும் உங்களுக்கும் ஒரு இதுவாமே" போஸ்ட் மூலமா தான் தெரிஞ்சிக்கிட்டேன்.

நீங்க $#%$%ன் வலைப்பூவில் ஒரு அனானி கமெண்ட் எழுதிருப்பீங்க "இனிமே எழுதினே கீசிடுவேன்"-ன்னு, அதே தான் இப்ப உங்களுக்கு நான் சொல்றேன் "மவனே! இனிமே எழுதினே கீசிடுவேன்". இது கடிதம் என்று தயவு செய்து நினைத்து விடாதீர்கள். கட்டளை...

இப்படிக்கு,
Mr. கொலவெறி குப்பன்

மை டியர் குட்டி சாத்தான் ஸாரி.. லொலவெறி குப்பன்,

நான் எப்போதோ எழுதுவதை நிறுத்தி விட்டேன். இப்போதெல்லாம் தட்டச்சுகிறேன்.

*.*.*.*.*.*.*.*.*.*

அன்புள்ள சோம்பேறி,

இரண்டு ஆண்டுகளாக உங்களை வாசிக்கிறேன். உருப்படியாக ஒன்றும் இருந்ததில்லை. ஆனாலும் சுவாரஸ்யத்துக்கு குறைவில்லை. விரைவில் உருப்படியாக எழுத ஆரம்பிப்பீர்கள் என்று எதிர்பார்க்கிறேன். நிகழுமா?

கு. கந்தசாமி, ஸ்பெய்ன்

அன்புள்ள கந்தசாமி,

நான் எழுத ஆரம்பித்தே ஆறு மாதங்கள் தான் ஆகிறது. ஒருவேளை இன்னும் நாற்பது வருடங்கள் கழித்து நீங்கள் எதிர்பார்க்கும் படியான விபரீதமெதுவும் நிகழலாம்.

பை த வே, ஸ்பெயினிலிருந்து வரும் போது, சாக்லேட்டும், செண்ட் பாட்டிலும் வாங்கி வருவீர்களென எதிர்பார்க்கிறேன். நிகழுமா?

*.*.*.*.*.*.*.*.*.*

மதிப்பிற்குரிய சோம்பேறி,

உங்கள் எழுத்துக்கள் பெரும்பாலும் மொக்கையாகவும் சப்பையாகவும் இருந்தாலும், சைட் பாரிலிருந்த ஜூஜூ பொம்மையின் அழகை ரசிப்பதற்காகவே, உங்கள் வலைப்பூவை நாளுக்கு நாற்பது முறை திறந்து பார்ப்பதுண்டு. ஏன் அதை இப்போது தூக்கிவிட்டீர்கள்? மறுபடி வைத்தால் சந்தோஷப்படுவேன். வைக்காவிட்டால் நிச்சயம் ரூம் போட்டு அழ மாட்டேன். அவ்வ்வ்வ்..

அப்புறம் உங்கள் வலைப்பூவை விட, வலைப்பூ கேப்ஷனிலிருக்கும் ஸ்மைலி அழகாக உள்ளது. நீங்க ரொம்ப அழகா சிரிக்கிறீங்க.

இப்படிக்கு,
Mr. அவ்வ்வ்வ்

திரு. அவ்வ்வ்வ்,

வாசகர் சந்தோஷம் தான் எனக்கு முக்கியம். :-) உரையாடல் போட்டியில் வென்றவுடன் (வெளங்கீரும்) :-) அந்த பொம்மையை பழைய இடத்தில் மீண்டும் காணலாம். :-)


*.*.*.*.*.*.*.*.*.*

அன்புள்ள சோம்பேறி,

உங்கள் ப்ரொஃபைல் புகைப்படத்தில், நீங்கள் குப்புறப் படுத்துத் தூங்கும் அழகை நாளெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கலாம். உங்கள் முழு மொகரையையும் பார்க்க பேராவல்.

பேரண்புடன்,
Miss. நமீ

உங்கள் அட்ரஸை மட்டும் மெயிலுங்க நமீ.. நீங்கள் அண்டார்ட்டிகாவில் இருந்தாலும் அஞ்சே நிமிஷத்தில வந்து உங்களை சந்திக்கிறேன்.

*.*.*.*.*.*.*.*.*.*

அன்புள்ள சோம்பேறி,

வணக்கம். நீங்கள் வலைப்பூ எழுதும் முன்பிருந்தே உங்களைப் படித்துக் கொண்டிருக்கிறேன். (10000 BC?)

பிறர் பதிவுகளில் பின்னூட்டுவதில்லை என்று பதிவெல்லாம் போட்டு சொன்னீர்கள். திடீரென்று ஒவ்வொருவர் வலைப்பூவிற்கும் வாண்டடாகப் போய் வம்பிழுக்கிறீர்கள். (ஆனால் அதில் எனக்கு சந்தோசம்தான்)

உங்கள் வெற்றி எதுவென்றால் மாதத்துக்கு ஒருவராவது சோம்பேறி ரோதனை தாங்காமல் தான் நான் பதிவுலகை விட்டு விடைபெறுகிறேன் என்று எஸ்ஸாவது தான்.

பி.கு : உங்கள் இடுகையை முடிக்கும்போது கொட்டாவியுடன் சோம்பேறி என்று நீங்கள் சொல்லுவது அவ்வளவு பிடிக்கும் எனக்கு. அதைப் படித்ததும் கொட்டாவி விட்டுட்டு, உங்கள் ப்ரொஃபைல் புகைப்படத்தில் இருப்பது போல குப்புற படுத்துத் தூங்கி விடுவேன்.

வாழ்க வளமுடன்

:-)

கொட்டாவியுடன் சோம்பேறி
*.*.*.*.*.*.*.*.*.*

டேய் டோமரு!

எங்கடா என் ஐநூறு ரூவா? செல்லை ஸ்விச் ஆஃப் பண்ணி வச்சுட்டா விட்டுருவோமா? நீ offlineல தான் ஒளிஞ்சிருக்கனு தெரியும். மரியாதையா வந்து பணமாவோ, சரக்காவோ கடனைத் திருப்பிக் குடுத்துட்டு போ. இல்ல.. ஆட்டோ தான் வரும்.

The user is offline. Will never come online. Please dont disturb him.

வலையுலக சூப்பர் ஸ்டார் யார்? - லாஜிக்கலான தீர்(ப்பு)வு

Friday, 3 July 2009

இதில் யாருக்காவது மாற்றுக் கருத்து இருந்தால், பின்னூட்டத்தில் சொல்லுங்கள். என் தரப்பு ஞாயத்தை விளக்குகிறேன்.


(படத்துக்கும் இடுகைக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. பெரிதாக்கிப் பார்த்து டைம் வேஸ்ட் பண்ண வேண்டாம்)


ஒன்றிலிருந்து ஒன்பதுக்குள் ஒரு எண்ணைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். (உதாரணமாக 2)

விடையை மூன்றால் பெருக்கவும். (2 x 3 = 6)

அதை மூன்றைக் கூட்டவும். (6 + 3 = 9)

மீண்டும் விடையை மூன்றால் பெருக்கவும். (9 x 3 = 27)

விடையாகக் கிடைக்கும் இரண்டிலக்க எண்ணின், இரண்டு இலக்கங்களையும் கூட்டவும். (2 + 7 = 9)

உங்களுக்கு விடையாகக் கிடைத்த எண்ணிற்க்கு நேரே உள்ளவர் தானே, உங்கள் மனதில் இருக்கும் செலிப்ரிட்டி?


1. சோமாறி சே... சோம்பேறி

2. எஸ். ராம கிருஷ்ணன்

3. சாரு நிவேதிதா

4. ஜெய மோஹன்

5. நாகார்ஜூனன்

6. ஆமிர் கான்

7. பைத்தியக்காரன்

8. Fake IPL player

9. சக்கரை சுரேஷ்

10. சோம்பேறி (ஹி ஹி.. திரும்பத் திரும்ப வந்தாலாவது என் பேரை சொல்ல மாட்டீகளானு ஒரு நப்பாசை தான்)
Blog Widget by LinkWithin
 
◄சோம்பேறி. Design by Pocket►