Views
யாகம் வளர்க்கையில், ஒவ்வொரு முறை நெய்யூற்றும் போதும் 'ஸ்வாகா' என்று மந்திரம் ஓதுவார்களே அது போல, முதன் முதலில் மேடையேறி பேசிய தலைமைச் செயலர் டி.ஜெய குமார் ஒவ்வொரு வாக்கியத்தை முடிக்கும் போதும், 'அம்மா உங்கள் ஆட்சியில் தான் அம்மா' என்ற மந்திரத்தை 108 முறை சொல்லாவிட்டாலும் 18 முறையாவது 'ஸ்வாகா' ராகத்தில் சொல்லியிருப்பார்.
விவசாயிகள் துயர் துடைத்தது 'அம்மா உங்கள் ஆட்சியில் தான் அம்மா'
வீரப்பனின் அட்டகாசத்தை ஒடுக்கியது 'அம்மா உங்கள் ஆட்சியில் தான் அம்மா' என்று ராகத்துடன் ஓதினார் மன்னிக்கவும் பேசினார்.
சுருக்கமாகப் பேசிய தா.பாண்டியன் அழகிரி ஜெயித்து விட்டால், கண்ணகி மதுரையை மீண்டும் எறித்து விடுவாள் என்ற ரீதியில் பேசிய போது, ஜெ முகம் க்ளோஸ் அப்பில் காட்டப் பட்டது. கை தட்டி சிரித்து ரசித்தார்.
அடலேறுகளே, பெரியோர்களே, தாய்மார்களே என்று ஜெ முதல் கடைசி மட்ட தொண்டர் வரை, ஒவ்வொருவரையும் தனித் தனியாக விளித்து வணக்கம் சொல்லவே வை.கோ.விற்கு ஐந்து நிமிடம் ஆனது.
எந்த வரையரைக்குள்ளுமே சிக்காதது தான் பின் நவீனத்துவம் என்றால், வை.கோவின் பேச்சு பின் நவீனத்துவ பேச்சு என்று அடித்துக் கூறுவேன். அவர் பேசியதில் பாதிக்கு பாதி வருணனைகள். அதில் பாதிக்கு பாதி எனக்குப் புரியவில்லை.
அடிக்கடி மேஜர் சுந்தரராஜன் போல் ஆங்கிலத்தில் பேசி விட்டு அதையே தமிழிலும் மொழி பெயர்த்தார்.
ஈழத் தமிழர் பற்றி பேசுகையில் உணர்ச்சிவசப்பட்டு, 'சோனியா அம்மையாருக்கு சித்த பிரமைப் பிடித்திருக்கிறதா' என்று கேட்டு விட்டு, சட்டென சுதாரித்துக் கொண்டு 'மன்னிக்க வேண்டும். இந்த வார்த்தையை பயன்படுத்தியதற்காக' என்றும் கேட்டுக் கொண்டார்.
ராமதாஸ் அம்மனுக்கு பட்டு சார்த்துவது போலவே, ஜெ.க்கு பட்டு அங்கவஸ்திரம் போல் இருந்த ஒன்றைக் கொடுத்து விட்டு உரையை ஆரம்பித்தார். அவர் பேசும் போது நான் ஸூஸு போய் விட்டதால் என்ன பேசினார் என்று தெரியவில்லை.
ஆனால் நிச்சயமாக, மணல் கொள்ளையில் பங்கு தராததால் தான் திமுகவிடமிருந்து கோபித்துக் கொண்டு வந்தேன் என்றோ, அதிமுகவில் தான் இருப்பேன் என்று பச்சை குத்திக் கொள்ளப் போவதாகவோ பேசியிருக்க மாட்டார்.
பிரகாஷ் காரத் 'சகோதரி அவர்களே! எனக்குத் தமிழ் புரியும். ஆனால் சரியாகப் பேச வராது' என்று நமீதா தமிழ் பேசி தன் உரையை ஆரம்பித்துவிட்டு, ஆங்கிலத்தில் தொடர்ந்தார்.
நிறைவாக பலத்த கர கோஷத்துடன் ஜெ பேச ஆரம்பித்தார். என்ன ஒரு கான்ஃபிடண்ட் லெவல் அவர் பேச்சில்! ஒரு நிமிடம் இதற்காகவே அவருக்கு வோட்டு போடலாமோ என்று தோன்றியது.. ஆள்காட்டி விரலை உயர்த்தி பேசுவது ஜெ.யின் மேனரிஸமா என்ன?
இந்தத் தேர்தலில் அதிமுகவிற்கு முழு வெற்றி தர வேண்டும் என்று அன்புடன் வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறேன் என்றும் இரு கரம் கூப்பி வேண்டிக் கொள்கிறேன் என்றும் சொல்லும் போது கூட ஆள்காட்டி விரலை உயர்த்தி, கந்து வட்டிக்காரர்கள் கடனை வசூலிக்கும் தொனியில் தான் பேசினார்.
கடைசியில் நன்றி வணக்கம் என்று சொல்லும் போது தான் கை கூப்பினார்.
நான் செய்த பாவமோ கட்சிக்காரர்கள் செய்த புண்ணியமோ, அதிகம் எதிர்பார்த்திருந்த என்னை ஏமாற்றுவது போல் வேட்பாளர்கள் அறிமுகத்தின் போது, யாரும் ஜெ காலில் விழ வில்லை. சால்வை கொடுத்து கும்பிடு போட்டு விட்டு போய் விட்டார்கள்.
நான் பார்த்த வரை, யாருமே தி.மு.க. காங்கிரஸ் தவிர வேறு யாரையும் தாக்கி பேசவில்லை. ஆனால், மறக்காமல் ஈழத் தமிழர் பற்றி பேசினார்கள்.
இறுதியாகப் பேசிய ஓ. பண்ணீர் செல்வம், 'திமுக கூட்டணி திருடர்களோடு கூட்டனி.. அதிமுக கூட்டணி தெய்வத்துடன் கூட்டணி' என்று ஒரு போடு போட்டு கூட்டத்தை நிறைவு செய்தார்.
கூட்டம் நிறைவடைந்து ஜெயலலிதா மேடையை விட்டு இறங்கும் தருனத்தில் அவரை நிறுத்திய வை.கோ, சால்வை கொடுக்க மறந்த ஒரு வேட்பாளரை ஜெவிடம் அழைத்து சென்று சால்வை கொடுக்க வைத்து கும்பிடு போட வைத்தார்(எம்பூட்டு தெகிரியம்)
29 மச்சீஸ் சொல்றாங்க:
//நான் செய்த பாவமோ கட்சிக்காரர்கள் செய்த புண்ணியமோ, அதிகம் எதிர்பார்த்திருந்த என்னை ஏமாற்றுவது போல் வேட்பாளர்கள் அறிமுகத்தின் போது, யாரும் ஜெ காலில் விழ வில்லை. சால்வை கொடுத்து கும்பிடு போட்டு விட்டு போய் விட்டார்கள்.//
என்ன கொடுமை சரவணன் இது...விஜய்
ஆமா விஜய். செய்தித் தாள்களில் மட்டுமே பார்த்து வந்த காலில் விழும் வைபவத்தை நேரில் பார்க்கப் போகிறோம் என்று ஆர்வமாகக் காத்திருந்தேன். ஏமாற்றி விட்டார்கள்:-(
//அவர் பேசும் போது நான் ஸூஸு போய் விட்டதால்//
அந்தளவுக்கா பயமுறுத்தினார் அவர்? :))))
அன்புடன்,
டோண்டு ராகவன்
அப்படியல்ல. திரையரங்கில் இடைவேளையின் போதும், தெரு நாடகங்களில் 'மேயாத மானை'யே இருபது முறை ரிப்பீட்டும் போதும் ஸூஸு போவதில்லையா.. அது போல..(ஜெ பற்றி பதிவெழுதினா தான் வருவீங்க போல!)
நிஜமாகவே அன்புடன்,
சோம்பேறி
இதே மாதிரி ஒவ்வொரு அதிமுக பொதுக்கூட்டத்தைப் பற்றியும் எழுதவும்.
போலியான காண்டுடன்,
ஜ்யோவ்ராம் சுந்தர்
நிச்சயமாக. நீங்கள் கேட்டால் நான் மாட்டேன் என்றா சொல்வேன் ஜ்யோவ்ராம் சுந்தர். போலியாகவே இருக்கட்டும் காண்டு..
மதுரையில இருந்து எழுதுற தகிரியமா???
லுலூலாயி அன்புடன்
நான் ஆதவன்
அனானியா எழுதுறதுக்கு என்ன தகிரியம் வேண்டிக் கெடக்கு எனக்கு?
ங்கொப்புரான் சத்தியமா அன்புடன்
சோம்பேறி
வழக்கம் போலவே கலக்கல்..
ஹ ஹா..
//வணக்கம் சொல்லவே வை.கோ.விற்கு ஐந்து நிமிடம் ஆனது.///
அப்புறம் அவரு எவ்ளோ நேரம் தான் பேசுனாரு??
எம்பூட்டு தெகிரியம்) ???//
பதிவ எழுதுன உங்களுக்கா?? இல்லாகாட்டி அவருக்கா??
மிகவும் நன்றி அணிமா.
///சோம்பேறி said...
மிகவும் நன்றி அணிமா.///
மூணு பின்னூட்டம் போட்டா, ஒரே பின்னூட்டத்தில் பதிலா??
நான் இதை கண்டித்து வெளி நடப்பு செய்கிறேன்
அம்மா மட்டும் மேடையில இல்லைனா அன்னிக்கு முழுக்க பேசிகிட்டிருந்திருப்பார்.
ஜெ 'இரு கரம் கூப்பி வேண்டிக் கொள்கிறேன்' என்று ஆள்காட்டி விரலை உயர்த்தி மிரட்டியதை ஸாரி பேசியதைத் தொலைக்காட்சியில் பார்த்தே பயந்து விட்டேன். அதை நேரில் பார்த்த அவருக்கு தான் தெகிரியம் ஜாஸ்தி.
நான் பார்க்கும் போது உங்க முதல் பின்னூட்டம் மட்டும் தான் இருந்தது. இது போங்கு.
///சோம்பேறி said...
நான் பார்க்கும் போது உங்க முதல் பின்னூட்டம் மட்டும் தான் இருந்தது. இது போங்கு.///
உங்க போங்கு ஆட்டம் சரி இல்லை...
தீவிர பயிற்சி தேவை...
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. நான் போங்கு ஆட்டம்னு சொன்னது உங்களை. பச்சப் புள்ளைய அழுக வச்சு பாக்குறீங்களே.. ஞாயமா?
அடிமை கருணாநிதியை மீட்க ஜெயலலிதாவால் மட்டுமே முடியும்.
no one can't do this http://tinyurl.com/ctnoky
உங்களால் இதை செய முடியாது http://tinyurl.com/ctnoky
/*tamil said...
அடிமை கருணாநிதியை மீட்க ஜெயலலிதாவால் மட்டுமே முடியும்.
Anonymous said...
no one can't do this http://tinyurl.com/ctnoky*/
குஷ்டம் தான்.. ஸாரி.. கஷ்டம் தான்..
/*graphpapersurvey said...
உங்களால் இதை செய முடியாது http://tinyurl.com/ctnoky*/
ஒத்துக்கறேன்.. குஷ்டம் தான்.. ஸாரி.. கஷ்டம் தான்.. ஒத்துக்கறேன்..
:-))
Really Nice
Thanks..
ஸ்கூல் பசங்க மேடையில் ரைம்ஸ் சொல்றப்போ மறந்துபோச்சுன்னா, ங்கேனு முழுச்சிட்டு, தடுமாறி , திரும்ப முதல்ல இருந்து ஆரம்பிப்பாங்களே.. அது மாதிரி பல இடத்துல அம்மா செஞ்சது செம காமெடி
ஹா.. ஹா.. மண்டபத்தில் யாரோ எழுதிக் கொடுத்து தான் பேசுகிறாரோ என்ற சந்தேகம் எனக்கும் வந்தது. அவர் உடல் மொழிக்கும், பேசிய வசனத்துக்கும் சம்மந்தமே இல்லை.
ஆனால் வை.கோ வை இந்த விஷயத்தில் பாராட்டியே ஆக வேண்டும்.
அப்படின்றீங்க.....
அட.. ஆமாங்கறேன்..
ennoda blog visit pannathuikku nantri..
And thanks for your suggestion too.
Post a Comment
தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு.