நேற்றைய பந்த் எதற்காக? கண்டுபிடிச்சுட்டாருய்யா கொலம்பசு

Thursday, 23 April, 2009

Views

ஜெயலலிதா நேற்று அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் வை.கோ மற்றும் P.மோகனை ஆதரித்துப் பேச, முறையே சிவகாசி மற்றும் மதுரைக்கு விஜயம் செய்திருந்தார். 'அதைத் தடுப்பதற்காகவே கருனாநிதி இந்த 'பந்த்'தை அறிவித்திருக்கிறார்' என்று நான் சொல்லவில்லை; நேற்று ஜெயா டிவியில் மன்னிக்கவும் விருதுநகர் பொதுக் கூட்டத்தில் பேசிய ஜெயலலிதா சொன்னார்.

மேலும், ஈழப் பிரச்சனைக்காக தீக்குளித்தவர்களுக்காக(குறிப்பாக அதிமுக தொண்டர் மணிக்காக) மௌன அஞ்சலி செலுத்தினார். இனி யாரும் அப்படி செய்யக் கூடாதென வேண்டிக் கொண்டார். தமிழ் திருநாட்டு அரசியல்வாதிகளின் செயல்களை ஊகிக்கவே முடிய வில்லை. நாளையே ஜெ கருனாநிதிக்காக ஓட்டு கேட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

மதுரை கள்ளழகர் திருவிழாவின் போது வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டு மக்களை பீதிக்கு உள்ளாக்குவதன் மூலம் கள்ள ஓட்டு போட அழகிரி திட்டமிட்டிருப்பதாக ஜெ.க்கு செய்தி வந்திருக்கிறதாம். ஏன்யா ஏன்.. ஏன் அந்தப் பச்சப் புள்ளையைப் பாத்து ஏன் இவ்ளோ பயப்படுறீங்க. ஜெ யூ டூ?

ஜெ பேசிய போது, பல இடங்களில் சென்னையில் பேசியதை மறு ஒளிபரப்பு செய்கிறார்களோ என்று சந்தேகம் வந்தது. அதிலும், 'எனக்கு உங்களை விட்டால் யாருமில்லை. உங்களைத் தான் நம்பியிருக்கிறேன்' என்ற வசனம், 'நாளை நமதே நாற்பதும் நமதே' போல ஜெவின் மற்றொரு பன்ச் டயலாக் ஆகி விட்டது போல. அடிக்கடி ரிப்பீட்டுகிறார். மண்டபத்தில் எழுதிக் கொடுத்த மகானே, ரஸ்ய பட டிவிடிகளிலிருந்து சுட்டாவது கொஞ்சம் சுவாரஸ்யமாக எழுதித் தரவும்.

(ஜெ மட்டும் சென்னைக் கூட்டத்தில் பேசியதையே ரிப்பீட்டலாம். நான் அந்தப் பதிவில் எடுத்த புகைப்படத்தை ரிப்பீட்டக் கூடாதா?)

விளம்பர இடைவேளையின் போது, கருனாநிதி பேட்டி ஒளிபரப்பானது. அதில் ஒரு நிருபர் கருனாநிதியிடம் 'ஈழ பிரச்சனைக்காக என்ன செய்யப் போகிறீர்கள்?' என்று கேட்கிறார். அதற்கு கருனாநிதி 'தீக்குளிக்கப் போகிறேன். நீயும் வர்றியா' என்று கேட்கிறார். பின்னனியில் 'இன்னும் எத்தனை காலம் தான் ஏமாறுவார் இந்த நாட்டிலே' என்ற பாடல் ஒளிபரப்பாகிறது.

மிகவும் சுவாரசியமான விளம்பர உத்தி. முந்தைய தேர்தல் போல் மொக்கையாக, இருபது நிமிடங்களுக்கு ஜெ டாட்டா போடுவதையே காட்டாமல், இந்த முறை புதிதாக முயற்சித்திருக்கிறார்கள்.

பின் குறிப்பு : நேற்று என் சித்தப்பா இந்தக் கூட்டத்தை (ஓரமாக நின்று வேடிக்கை) பார்க்கப் போயிருந்ததால், அவரை தொலைக்காட்சித் திரையில் பார்க்கும் அல்ப ஆசையின் விளைவாகவே ஜெயா டிவியில் இந்த கூட்டத்தைப் பார்த்தேன். மற்றபடி, இதுவே நான் அதிமுக பொதுக் கூட்டம் பற்றி எழுதும் இரண்டாம் மற்றும் இறுதி இடுகை என்று எங்கள் விருதுநகர் தொகுதி வேட்பாளர்கள் தலையிலடித்து சத்தியம் செய்கிறேன்.

18 மச்சீஸ் சொல்றாங்க:

Anonymous said...

//இதுவே நான் அதிமுக பொதுக் கூட்டம் பற்றி எழுதும் இரண்டாம் மற்றும் இறுதி இடுகை என்று எங்கள் விருதுநகர் தொகுதி வேட்பாளர்கள் தலையிலடித்து சத்தியம் செய்கிறேன்.//

விருதுநகர்மக்களே & ஸ்ரீவில்லிபுத்தூர் மக்களே இதை நம்பதிர்கள் ---Vijay

சோம்பேறி said...

எங்கள் விருதுநகர் தொகுதி மக்கள் தலையிலடித்து சத்தியம் செய்கிறேன். இப்போ நம்புறீங்களா விஜய்?

வந்தியத்தேவன் said...

இன்னொரு பஞ்ச் டயலாக்கை விட்டுவிட்டீர்கள் சோம்பேறி. அதிமுக கூட்டணிக்கு உங்கள் வாக்குகளை அளிக்குமாறு வேண்டி விரும்பிக்கேட்டுக்கொள்கின்றேன். அதிமுக வேட்பாளர்கள் ஜெ காலில் மேடையில் வீழ்ந்துவணங்கிய படங்கள் கிடைக்கவில்லையா?

சோம்பேறி said...

/* இன்னொரு பஞ்ச் டயலாக்கை விட்டுவிட்டீர்கள் சோம்பேறி. அதிமுக கூட்டணிக்கு உங்கள் வாக்குகளை அளிக்குமாறு வேண்டி விரும்பிக்கேட்டுக்கொள்கின்றேன்.*/

அட.. ஆமாங்க வந்தியத்தேவன். இது திடீரென்று என்ன பேசுவது என்று மறந்துவிடும் போது உபயோகிக்கும் வசனம் போல இருந்தது.

/*அதிமுக வேட்பாளர்கள் ஜெ காலில் மேடையில் வீழ்ந்துவணங்கிய படங்கள் கிடைக்கவில்லையா?*/

மிஸ் பண்ணிட்டேனே! மிஸ் பண்ணிட்டேனே! சென்ற பொதுக் கூட்டத்தைக் கூட அந்தக் கண் கொள்ளாக் காட்சியை கண்டு களிப்பதற்காகவே பார்த்து ஏமாந்தேன்:-(

Anonymous said...

தேர்தல் முடிந்தஉடண் நம்புகிறேண் - விஜய்

சோம்பேறி said...

அவ்வ்வ்வ்வ்வ்.. வொய் திஸ் மர்டர் வெறி? இந்தத் தேர்தல் முடிந்த பிறகு நம்புவீங்களா.. அல்லது விஜயகாந்த் முதல்வராகும் தேர்தல் முடிந்த பிறகா? நம்புங்கய்யா.. நம்புங்க..

தீப்பெட்டி said...

என்னமோ போங்க...
நாங்க நல்லா இருந்தா சரிதான்

m bala said...

'எனக்கு உங்களை விட்டால் யாருமில்லை. உங்களைத் தான் நம்பியிருக்கிறேன்' என்ற வசனம், 'நாளை நமதே நாற்பதும் நமதே' போல ஜெவின் மற்றொரு பன்ச் டயலாக் ஆகி விட்டது போல.

good punch dialogue sir.

நான் ஆதவன் said...

உங்கள பச்சை பச்சையா திட்டுனா தான் அடங்குவீங்க போல...

சோம்பேறி said...

/*தீப்பெட்டி said...
என்னமோ போங்க...
நாங்க நல்லா இருந்தா சரிதான்*/

ஏங்க? ஏன்.. ஏன்.. நம்ம நல்லா இருந்தா சரிதான் சொல்லுங்க தீப்பெட்டி.

/*good punch dialogue sir.*/

அப்படியெல்லாம் பொத்தாம் பொதுவாக சொல்லாதீங்க பாலா.. அடுத்த படத்தில் சிம்பு யூஸ் பண்ணிடப் போறாரு.

சோம்பேறி said...

அடப் போங்க ஆதவன். நம்ம பச்ச அம்மாவுக்கு மஞ்சாத் துண்டு போட்ட அய்யாவைத் திட்டவே நேரமில்லை.

நோ அம்மா fans.. நோ.. நோ.. பேட் வேர்ட்ஸ்..

உருப்புடாதது_அணிமா said...

நானும் இங்க தான் இருக்கேன்னு மட்டும் சொல்லிக்கிறேண்//

சோம்பேறி said...

சும்மா பயப்படாதீங்க அணிமா.. நேத்து மண்டபத்துல வச்சு நீங்க தான் இந்தப் பதிவை எழுதிக் குடுத்தீங்கனு யார் கிட்டயும் சொல்ல மாட்டேன்.

உருப்புடாதது_அணிமா said...

வர வர சோம்பேறி அதிமுக உறுப்பினர் ஆகிவிட்டரோன்னு எனக்கு டவுட் டவுட்டா வருது..

உருப்புடாதது_அணிமா said...

///இதுவே நான் அதிமுக பொதுக் கூட்டம் பற்றி எழுதும் இரண்டாம் மற்றும் இறுதி இடுகை என்று எங்கள் விருதுநகர் தொகுதி வேட்பாளர்கள் தலையிலடித்து சத்தியம் செய்கிறேன்.///

ஏன் அதுக்குள்ளே ஆட்டோகாரங்களுக்கு அட்ரஸ் தெரிஞ்சி போச்சா???

சோம்பேறி said...

/*ஏன் அதுக்குள்ளே ஆட்டோகாரங்களுக்கு அட்ரஸ் தெரிஞ்சி போச்சா???*/

அட்ரஸ் இல்லா தெருவும் ஆட்டோக்காரன் வருவான்னு சொல்றாங்களே! அவுங்களுக்கு என் வீட்டைக் கண்டுபிடிக்கறது கஷ்டமா என்ன?

பிரச்சனை அதில்லை அணிமா.. எல்லாரும் "வர வர சோம்பேறி அதிமுக உறுப்பினர் ஆகிவிட்டரோன்னு எனக்கு டவுட் டவுட்டா வருது.." அப்படின்னு கேக்குறாங்க.. அதான் இனிமே அந்தம்மா கட்சியைப் பத்தி எழுத வேணாம்னு நினைக்கிறேன்:-)

தமிழ் பிரியன் said...

என்னங்க போன வருடம் வந்த ஜெயா டிவியின் கலைஞரின் கைமாறு மறந்து போச்சா? .. ;-)))

சோம்பேறி said...

அது எதுவும் இந்த 'ஞாபகம் வருதே' அளவு சுவாரஸ்யமாக இல்லை என்று நினைக்கிறேன்.

அந்த வருடம் கருனாநிதியும் இந்த அளவு காமெடியாகப் பேசியதில்லை என்பதும் ஒரு காரனமாக இருக்கலாம்.

Post a Comment

தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு.

Blog Widget by LinkWithin
 
சோம்பேறி. Design by Pocket