உரையாடல் போட்டிக்கான செந்தழலாரின் விமர்சனங்களுக்கு என் மதிப்பெண்

Wednesday, 24 June, 2009

Views

முதலில் இடுகைக்கு சம்மந்தமில்லாத ஒரு குட்டிக் கதை :

ஒரு ஊருல ரிவர்ஸ் ரிச்சர்ட் ரிவர்ஸ் ரிச்சர்ட்னு ஒருத்தன் இருந்தானாம். யாராவது எதையாவது செய்யக் கூடாதுனு சொல்லிட்டா போதும், அதுக்கு எதிர்மறையா, ஏட்டிக்கு போட்டியா ஏதாவது செஞ்சுட்டு தான் வேற வேலை பாப்பானாம். அவன் பொண்டாட்டி ரீட்டாவும் அவனைத் திருத்த எவ்வளவோ ட்ரை பண்ணி பாத்தாளாம். முடியல.

ஒரு நாள் அவனை பாழுங்கிணத்துப் பக்கம் கூட்டிட்டுப் போயி, 'பாத்துயா உள்ள உழுந்துடாத'னு சொன்னாளாம். உடனே ஓடிப் போயி சம்மர் சால்ட் அடிச்சு, கிணத்துக்குள்ள குதிச்சுட்டானாம். அவளும் 'ஒழிஞ்சதுடா சனி'னு கிளம்பி வீட்டுக்கு வந்துட்டாளாம்.

*.*.*.*.*.*.*.*

'இதனை தொடர்ந்து விவாதித்து மொக்கை போடாதீங்க, ப்ளீஸ்'னு செந்தழலார் சொன்னாலும், நம்ம கடமையை நாம செஞ்சு தானே ஆவனும். மத்தபடி ரிவர்ஸ் ரிச்சர்ட் ஆவி, எனக்கு உள்ளார பூந்துடுச்சான்னெல்லாம் கேக்கக் கூடாது.

செந்தழலா
ரின் விமர்சனங்களுக்கு என் சீரியஸான விமர்சனம்

முதலிலேயே ஒரு உண்மையை பகிரங்கமாக ஒப்புக் கொள்கிறேன். போட்டிக்கான அனைத்துக் கதைகளையும் நான் படிக்கவில்லை. செந்தழலாரின் விமர்சனத்தால் தூண்டப்பட்டு, நான்கு கதைகளை முழுசாக படித்ததற்கே, நடுமண்டையில் நட்டுவாக்காலி போட்டது போல வாயில் நுரை தள்ளி விட்டது. (நான் எழுதிய கருமத்தையே திரும்பப் படிக்க எனக்குப் பொருமையில்லை)

இது இப்படியிருக்க, சந்திப்பிழைகள், தொந்திப் பிழைகள் என்று ஒன்று விடாமல் அக்கு வேறு ஆணி வேறாக, வாசித்த அத்தனை கதைகளையும் ஐந்து வரிகளுக்குக் குறையாமல், விமர்சித்திருக்கும் செந்தழலாருக்கு இரண்டு கைகளாலும் ஒரு மிகப் பெரிய சல்யூட்.

இத்தினியூண்டு கதைகளுக்கு அதிக மதிப்பெண்கள் கொடுத்திருப்பதைப் பார்க்கையில், 'ஏன்யா இவ்ளோ பெரிசா எழுதி என் டவுசரைக் கிழிக்கிறீங்க' என்று மற்றவர்களைப் பார்த்து விமர்சகர் கதறுவது போல் தோன்றுகிறது. (அதிஷாவின் ஒரு வரிக் கதையோ, அறிவிலியின் ஒரு எழுத்து கதையோ, சோம்பேறியின் ஒரு எழவும் இல்லாத கதையோ போட்டியில் பங்கு பெற்றிருந்தால் சென்டம் வாங்கியிருக்க வாய்ப்பிருக்கிறது)

விஜய் டீவி ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியில் செய்வது போல, சில கதைகளை ஆஹா ஓஹோ என்று புகழ்ந்து விட்டு, பெயில் மார்க் போட்டிருப்பதைப் பார்க்கையில், விமர்சனம் எழுதி முடித்த பின், சரக்கடித்து விட்டு மார்க் போட்டிருக்கிறாரோ என்ற எண்ணமெழுவதையும் தவிர்க்க இயலவில்லை.

(ஒருவேளை, கதைகளுக்கு மட்டும் மதிப்பெண்ணிடாமல், சைடிலுள்ள ஜூஜூ பொம்மை, ஐஷ்வர்யா ராய் புகைப்படங்களுக்கும் சேர்த்து மார்க் போட்டிருக்கிறாரோ என்று சந்தேகம் வருகிறது...)

விமர்சகர் வரிசைக்கிரகமாகத் தான் கதைகளைப் படித்து, விமர்சித்து வருகிறார் என்று தெரிந்தும், 'என் கதை இல்லையா? என் கதைக்கான விமர்சனம் எப்போ வரும்? என் கதையை படிச்சுட்டு கொஞ்சம் திட்டுங்களேன்' என்று பலரும் கேட்டிருப்பதே விமர்சகரின் வெற்றியைக் காட்டுகிறது.

அட்லீஸ்ட் அவருக்கு சுட்டி அனுப்பியிருப்பவர்கள் கதைகளின் விமர்சனங்களை மட்டுமாவது, அவரது வலைப்பூவில் ஏற்றினால், கதைகளை எழுதிய எழுத்தாளர்களுக்கு ஒரு விளம்பரமும், என் போன்ற சோம்பேறி வாசகர்களுக்கு படிக்கும் ஆர்வமும் அதிகப்படும். நன்றி.

செந்தழலாரின் விமர்சனத்துக்கு என்னுடைய மதிப்பெண் 80 / 100

கடைசியாக இடுகைக்கு சம்மந்தமில்லாத ஒரு கவிதை(!?) :

ராவா குடிச்சவனும்
ராப்பகலா படிச்சவனும்
உருப்புட்டதா சரித்திரமே இல்ல.

ஸோ, சுமாரா படிங்க
சோடா ஊத்தி அடிங்க..

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

செந்தழலார் ஒவ்வொரு பகுதி விமர்சனத்தையும் உருவாக்க பல பாடாவதி கதைகளையும்(போர்னோ கதை உட்பட) படித்து ரத்தக் கண்ணீர் சிந்துகிறார். அதை எளிமையாக விமர்சனம் செய்திருக்கிறேன்.. செந்தழலாரின் விமர்சனம் அவரைப் பொறுத்தவரை சிறப்பானதே.. இது முழுக்க முழுக்க என்னுடைய பார்வை மட்டுமே...!!!

பொதுவாக பார்க்கும்போது, விமர்சனம் எழுதுகிறோம் என்றதும் செந்தழலார் அவர் ப்ரொஃபைல் புகைப்படத்தில் இருப்பது போல் அப்பாவியாக முகத்தை வைத்துக்கொள்வார் என்று கற்பனை செய்யத்தோன்றுகிறது,... அல்லது செம்மையான தழலுக்கு பஞ்சம்...

'எழுதியவனை பிஞ்ச செருப்பால அடிக்கலாம் என்று தோன்றுகிறது...', 'எழுத்தாளரை உச்சந்தலையில் நறுக்குன்னு கொட்டனும் போல வக்கிரமாக உள்ளது...' போன்ற ஒன்றிரண்டு வரிகளைத் தவிர்த்து முயற்சி கூட எடுக்கமாட்டேங்குறார் நம்ம ரெட் ஃபயர்...!!!

மற்ற பகுதிகளை நேரம் கிடைக்கும்போது விமர்சிப்பேன்...!!!! உங்கள் ஓட்டுகள், ப்ளஸ் கருத்துக்களை சொல்லிவிட்டு போங்க...!!!

42 மச்சீஸ் சொல்றாங்க:

Vijay Anand said...

ஒரு குட்டிக் கதை - சூப்பர்

சில பேரை இப்படி தான் திருத்தனும்..

Vijay Anand said...

ஒரு குட்டிக் கதை - சூப்பர்

சில பேரை இப்படி தான் திருத்தனும்..

திருத்தனும் இல்ல இப்படி தான் முடிகணும்

♫சோம்பேறி♫ said...

நன்றி விஜய்.. :-)

rapp said...

ஆஆஆஆஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.......................நாலு கதைய படிச்ச உத்தம மனசா உங்களுக்கு?

//ராவா குடிச்சவனும்
ராப்பகலா படிச்சவனும்
உருப்புட்டதா சரித்திரமே இல்ல.

ஸோ, சுமாரா படிங்க
சோடா ஊத்தி அடிங்க..//

கன்னாபின்னாவென வழிமொழிகிறேன்:):):)

இப்படிக்கு,
சுமாரா படிச்சு சோக்கா செட்டில் ஆனோர் சங்கம்

சென்ஷி said...

//மத்தபடி ரிவர்ஸ் ரிச்சர்ட் ஆவி, எனக்கு உள்ளார பூந்துடுச்சான்னெல்லாம் கேக்கக் கூடாது.//

ஆவின்னெல்லாம் நினைக்கத் தோணலை. ரிவர்ஸ் ரிச்சர்டுதான் சோம்பேறி பேர்ல எழுதுறதா சீக்ரட் சர்வீஸ் சொல்லியாச்சு :)))

மத்தபடி பதிவுக்கு நோ கமெண்ட்ஸ்.. யாரு சொல்லி நாம கேட்டிருக்கோம். ரவி சொல்லி மொக்க போடாம இருக்க. நீங்க அடிச்சு ஆடுங்க தலை!

♫சோம்பேறி♫ said...

/* ஆஆஆஆஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.......................நாலு கதைய படிச்ச உத்தம மனசா உங்களுக்கு? */

சும்மா ஒரு ரைமிங்குக்காக சொன்னேன் ராப்.. ஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏழெட்டு கதை படிச்சிருக்கேன்.

/* கன்னாபின்னாவென வழிமொழிகிறேன்:):):)

இப்படிக்கு,
சுமாரா படிச்சு சோக்கா செட்டில் ஆனோர் சங்கம் */

நன்றி ராப்.

இப்படிக்கு,
டி.ஆர் வீட்டில் டீ ஆத்தியோர் சங்கம்

♫சோம்பேறி♫ said...

/* சென்ஷி said...
மத்தபடி பதிவுக்கு நோ கமெண்ட்ஸ்.. */

அவ்வ்வ்வ்.. கமெண்ட்டுக்கு நோ கமெண்ட்ஸ்..

☀நான் ஆதவன்☀ said...

//ஒரு ஊருல ரிவர்ஸ் ரிச்சர்ட் ரிவர்ஸ் ரிச்சர்ட்னு ஒருத்தன் இருந்தானாம்.//

ஒருத்தரா?? இரண்டு பேரா??
:D

இப்படிக்கு
மொக்க சோக்கு சொல்லி வாய்விட்டு சிரிப்போர் சங்கம்

☀நான் ஆதவன்☀ said...

இது ஏதோ உங்க கதைய ரெடி பண்ணிட்டு, ரவியோட பேசிவச்சுகிட்டு போட்ட பதிவு மாதிரி இருக்கே!!

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

இந்தப் பதிவிற்கு என்னுடைய மதிப்பெண் 1200. அதுவும் நூத்துக்கு :)

☀நான் ஆதவன்☀ said...

//ஒருவேளை, கதைகளுக்கு மட்டும் மதிப்பெண்ணிடாமல், சைடிலுள்ள ஜூஜூ பொம்மை, ஐஷ்வர்யா ராய் புகைப்படங்களுக்கும் சேர்த்து மார்க் போட்டிருக்கிறாரோ என்று சந்தேகம் வருகிறது...//

யார சொல்றீங்கன்னு தெரிஞ்சு போச்சு :)

♫சோம்பேறி♫ said...

/* ☀நான் ஆதவன்☀ said...
ஒருத்தரா?? இரண்டு பேரா??
:D
இப்படிக்கு
மொக்க சோக்கு சொல்லி வாய்விட்டு சிரிப்போர் சங்கம் */

டிஷ்யூம்.. டிஷ்யூம்..

இப்படிக்கு
மொக்க சோக்கு சொல்பவர்களை மொத்துவோர் சங்கம்


/* இது ஏதோ உங்க கதைய ரெடி பண்ணிட்டு, ரவியோட பேசிவச்சுகிட்டு போட்ட பதிவு மாதிரி இருக்கே!! */

அடக் கொடுமையே! நான் உங்களுக்காக தான் பேசிகிட்டு இருக்கேன் ஆதவன்.

//புகைப்படங்களுக்கும் சேர்த்து மார்க் போட்டிருக்கிறாரோ என்று சந்தேகம் வருகிறது...//
யார சொல்றீங்கன்னு தெரிஞ்சு போச்சு :) */

அய்யா சாமீ.. நான் பொதுவா சொன்னேன்.

♫சோம்பேறி♫ said...

/* ஜ்யோவ்ராம் சுந்தர் said...
இந்தப் பதிவிற்கு என்னுடைய மதிப்பெண் 1200. அதுவும் நூத்துக்கு :) */

ஆஹா.. ரொம்ப ரொம்ப சந்தோஷம் ஜ்யோவ்ராம் சுந்தர் ஜி.

பதிவிட்ட பொழுதினும் பெரிதுவக்கும் தன் பதிவு டிஸ்டிங்க்ஷனில் பாஸ் எனக் கேட்ட மனசு.

Karthikeyan G said...

//ராவா குடிச்சவனும்
ராப்பகலா படிச்சவனும்
உருப்புட்டதா சரித்திரமே இல்ல.

ஸோ, சுமாரா படிங்க
சோடா ஊத்தி அடிங்க..//

இந்த நவீன யதார்த்த (New realisam) கவிதை உலகின் ஒவ்வொருவரிம் இருந்ததும் வெளிப்பட காத்திருக்கும் பிறழ்வின் குரலாக ஒலிக்கிறது.

உங்கள் கவிதைகள் சங்க கால கவி "சீத்தலை சாத்தனாரின்" கவிதைகளை போல் உலகை நேசித்து செம்மைபடுத்தும பாங்கு தெரிகிறது.
:)

♫சோம்பேறி♫ said...

/* Karthikeyan G said...
ஸோ, சுமாரா படிங்க
சோடா ஊத்தி அடிங்க..//

இந்த நவீன யதார்த்த (New realisam) கவிதை உலகின் ஒவ்வொருவரிம் இருந்ததும் வெளிப்பட காத்திருக்கும் பிறழ்வின் குரலாக ஒலிக்கிறது. */

ஒன்னும் புரியல.. ஆனா பிறழ்வுனா லூசுனு மட்டும் தெரியும். (ஒத்துக்குறேன் நீங்க பெரிய கவிஞர்னு ஒத்துக்குறேன்)

/* உங்கள் கவிதைகள் சங்க கால கவி "சீத்தலை சாத்தனாரின்" கவிதைகளை போல் உலகை நேசித்து செம்மைபடுத்தும பாங்கு தெரிகிறது. :) */

நூறு சதவீதம் உண்மை கார்த்தி ஜி.. இங்க வேற யாருக்கு புரியுது.. ஹூம்ம்ம்..

ஆனா இப்படி உண்மைய சொல்லிட்டு கடைசில ஸ்மைலி போடுறது தான் நல்லா இல்ல. (உங்க கிட்ட ஓப்பனிங் எல்லாம் நல்லா தான் இருக்கு. ஃபினிஷிங் சரியில்லையேப்பா..)

செந்தழல் ரவி said...

அவ்வ்வ்வ்........

இந்த பதிவுக்கு தெரியாத்தனமா ரெண்டு கள்ள ஓட்டு போட்டுட்டனே....!!!!!!!!!!

பித்தன் said...

//ராவா குடிச்சவனும்
ராப்பகலா படிச்சவனும்
உருப்புட்டதா சரித்திரமே இல்ல.

ஸோ, சுமாரா படிங்க
சோடா ஊத்தி அடிங்க..
//

கவித்தா கவித்தா ச்சி கவிதை கவிதை

♫சோம்பேறி♫ said...

/* செந்தழல் ரவி said...
அவ்வ்வ்வ்........
இந்த பதிவுக்கு தெரியாத்தனமா ரெண்டு கள்ள ஓட்டு போட்டுட்டனே....!!!!!!!!!! */

பரவாயில்லை செந்தழலாரே! தெரியாம தானே போட்டீங்க.. இப்போ தெரிஞ்சு ரெண்டு வோட்டு போடுங்க.

(உங்களை மாதிரியே நானும் ரெண்டு மாசமா ஒரு கதை எழுத ட்ரை பண்ணிகிட்டு இருக்கேன். எழுதி முடிச்சதும் சுட்டி அனுப்புறேன். உங்க வலைப்பூவில அதோட விமர்சனத்தை பப்லிஷ் பண்ணி எனக்கு ஓசி விளம்பரம் குடுக்கனும். டீல்?)

♫சோம்பேறி♫ said...

/*பித்தன் said...
ஸோ, சுமாரா படிங்க
சோடா ஊத்தி அடிங்க..
//

கவித்தா கவித்தா ச்சி கவிதை கவிதை */


நன்றி பித்தன். :-)

(பாஸ்.. நீங்க சோடா ஊத்தி அடிச்சுட்டு அப்புறம் கொஞ்சம் தெளிவா படிங்க.. )

அய்யனார் said...

ஸோ, சுமாரா படிங்க
சோடா ஊத்தி அடிங்க.

சமீபத்தில் படித்த மிகச் சிறந்த கவிதை அருமை :)

♫சோம்பேறி♫ said...

ரொம்ப நன்றி அய்யனார்..

ஹலோ..
என்னை வச்சு
காமெடி கீமெடி
பண்ணலயே!

இந்தக் கவிதை எப்படி இருக்கு?

வருங்கால முதல்வர் said...

சோம்பேறியாரே (தமிழக வழக்கப்படி மரியாதை) கலக்கிடீங்க.

குடுகுடுப்பை

Anonymous said...

குட்டிக் கதையும், கவுஜையும் சூப்பரோ சுப்பர்.

//ராப்பகலா படிச்சவனும்
உருப்புட்டதா சரித்திரமே இல்ல.//

ஹும்.. நாங்க படிச்சப்போ, யாரும் இப்டி கவுஜ எழுதி எங்க அறிவுக்கண்ணை திறக்கலையே?

அளவிலா சோகத்துடன்,
சித்ரா
(கொஞ்சம்) சூப்பராகப் படித்தும் சுமாராகக்கூட செட்டில் ஆகாதவர் சங்கம்

Anonymous said...

இது போன்ற குட்டி கதை, கவிஜகளை அவ்வப்போது எழுதவும்.

// மற்ற பகுதிகளை நேரம் கிடைக்கும்போது விமர்சிப்பேன்...!!!! //

வெய்ட்டிங்.

உண்மையை சொன்னதுக்கும், கடமையை சரிவர செஞ்சதுக்கும் பாராட்டுகள்.

சித்ரா

♫சோம்பேறி♫ said...

/* வருங்கால முதல்வர் said...
சோம்பேறியாரே (தமிழக வழக்கப்படி மரியாதை) கலக்கிடீங்க.
குடுகுடுப்பை */

ரொம்ப நன்றி குடுகுடுப்பையாரே! (எதிர் மருவாத முதல்வரே!)

♫சோம்பேறி♫ said...

/* Anonymous said...
குட்டிக் கதையும், கவுஜையும் சூப்பரோ சுப்பர். */

டேங்க்ஸ் சித்ரா. (அடங்கொன்னியா! இதுக்குப் பேர் தான் கவுஜையா!)

/* அளவிலா சோகத்துடன், சித்ரா
(கொஞ்சம்) சூப்பராகப் படித்தும் சுமாராகக்கூட செட்டில் ஆகாதவர் சங்கம் */

:-( என்ன சித்ரா! இப்படி சொல்லிட்டீங்க. உங்க அளவிலா சோகம் என்னையும் தாக்கிடுச்சு. :-(

'சரக்கடிக்க காரணம் கிடச்சிடுச்சுடோய்' என்ற அளவிலா குஷியுடன்
சோம்பேறி

/* இது போன்ற குட்டி கதை, கவிஜகளை அவ்வப்போது எழுதவும். */

ஓக்கே
சித்ரா
நிச்சயமாக..

/* // மற்ற பகுதிகளை நேரம் கிடைக்கும்போது விமர்சிப்பேன்...!!!! //
வெய்ட்டிங். */

அது சும்மா.. தொடரும் எண்ணமில்லை. (நம்மல்லாம் யாரு? எவ்ளோ பிஸி..)

/* உண்மையை சொன்னதுக்கும், கடமையை சரிவர செஞ்சதுக்கும் பாராட்டுகள்.
சித்ரா */

பாராட்டுக்கு டேங்க்ஸ் சித்ரா.

சங்கா said...

கலக்கல்! இதுக்காகவே நானும் ஒரு கதை எழுதி இம்சையாரை விமர்சனம் பண்ணச் சொல்லி, இம்சை பண்றதுன்னு முடிவு பண்ணீட்டேன்னேன், என்ன நான் சொல்றது? ரெடி, ஸ்டார்ட் திங்கிங்!!!

Anonymous said...

/உணர்வுபூர்வமாகவே
அணுகப்பட்டுவரும் கவிதைகளை
தொழில்ரீதியிலான
பார்வையோடு அணுகி
எலலா
சந்தர்ப்பங்களுக்கும்
சூழ்நிலைகளுக்கும்
உடனடியாகக்
கவுஜை
புனைவதை பரவலாக்குதல்//

கவி மடத்துல இப்படித்தானே சொல்லியிருந்தாங்க. அப்ப, நீங்க எழுதினது கவிதையா? கவுஜயா?

சித்ரா

♫சோம்பேறி♫ said...

அட.. கண்டிப்பா கலந்துக்கோங்க சங்கா.. (நீங்க புதுசா வலைப்பூ ஆரம்பிச்சிருக்கிறதே போட்டியில கலந்துக்க தான்னு நெனச்சசென்.. ஸ்டார்ட் ரைட்டிங்)

♫சோம்பேறி♫ said...

தொழில் ரீதியாக பார்க்கையில், இது கவுஜ மாதிரி தான் சித்ரா தெரியுது. (இந்த கவி மடம் எங்க இருக்கு? எனக்கு தெரிஞ்ச ஒரே மடம் பாண்டி மடம் தான்.)

செந்தழல் ரவி said...

பாண்டி மடம் ஏர்வாடியில் உள்ளதா எரவாடியில் உள்ளதா ?

♫சோம்பேறி♫ said...

ஏர்வாடி.. இல்லை. எரவாடி.. ம்ஹூம்.. மதுரை.. இல்ல இல்ல. அது எங்கயோ ஸ்வீடன் பக்கமோ துபாய் பக்கமோ இருக்கு.

(ஸாரி ரவி. நான் ஜாக்ரஃபியில் வீக். அதுக்காக என் கதைக்கு ஃபெய்ல் மார்க் போட்டுடாதீங்கோஓஓஓ..)

மனுநீதி said...

என்ன சோம்பேறி ஸ்வீடன் துபாய்லாம் தெரிஞ்சுக்கிட்டு ஜியாக்ரபில வீக்னு சொல்றீங்க. ஆனாலும் ரொம்ப தான் தன்னடக்கம். :) :)

♫சோம்பேறி♫ said...

வாட் இஸ் திஸ் மனுநீதி? எனக்கு வெனிஸ்க்கு வழி காட்டின உங்களுக்கு நான் ஜாக்ரஃபில எவ்ளோ வீக்னு தெரியாதா?

" உழவன் " " Uzhavan " said...

//செந்தழலாரின் விமர்சனத்துக்கு என்னுடைய மதிப்பெண் 80 / 100//

செந்தழலார் படிக்கும்போது, இவ்வளவு மதிப்பெண் வாங்கினாரானு தெரியல.. இந்த மார்க்கை பார்த்தவுடனே ரொம்ப சந்தோசப்பட்டிருப்பார் செந்தழலார் :-)

கடைசியா போட்ட கவிதைதாண்ண சூப்பரோ சூப்பர் :-)

♫சோம்பேறி♫ said...

அதான் படிக்கும்போது எல்லாத்துலயும் பெயில்னு ஓப்பன் ஸ்டேட்மெண்ட் குடுத்துருக்காரே உழவரே :-)

/* கடைசியா போட்ட கவிதைதாண்ண சூப்பரோ சூப்பர் :-) */

ரொம்ப நன்றிங்க உழவரே! உங்க செருப்பு கடிச்ச கதை கூட ஜூப்பருங்கோ..

அறிவிலி said...

//அதிஷாவின் ஒரு வரிக் கதையோ, அறிவிலியின் ஒரு எழுத்து கதையோ, சோம்பேறியின் ஒரு எழவும் இல்லாத கதையோ போட்டியில் பங்கு பெற்றிருந்தால் சென்டம் வாங்கியிருக்க வாய்ப்பிருக்கிறது)//

அடடே...அப்படியா...

♫சோம்பேறி♫ said...

அட.. ஆமாமுங்கோ.. நீங்களும் ட்ரை பண்ணுங்கோ..

Suresh said...

:-) படிச்சி படிச்சி சிரிச்சிட்டேன் இது சோம்பேறி ஸ்டெயில் ;)

Suresh said...

, நடுமண்டையில் நட்டுவாக்காலி போட்டது போல வாயில் நுரை தள்ளி விட்டது.

ஹா ஹா

Suresh said...

/பதிவிட்ட பொழுதினும் பெரிதுவக்கும் தன் பதிவு டிஸ்டிங்க்ஷனில் பாஸ் எனக் கேட்ட மனசு./

ஹா ஹ உங்க பின்னூட்ட பதில்கள் கூட சிரிப்பு வெடி தான்

Suresh said...

நீங்க குறள் திருக்குறள் ரசிகர் போல

Post a Comment

தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு.

Blog Widget by LinkWithin
 
சோம்பேறி. Design by Pocket