மூத்த பதிவர்களின் முத்தம் வேண்டுமா?

Friday, 8 May, 2009

Views

நான் மற்றவர்கள் வலைப்பூக்களில் கும்மியடிக்காததாலோ என்னவோ சில பெரியமனதுக்காரர்களைத் தவிர எனக்கு பின்னூட்டுபவர்களில் பெரும்பாலானோர் அனானிமஸாகவும், கூகுள் கணக்கோடும் வரும் நண்பர்களே!

பெருந்தலைகளைத் திரும்பிப் பார்க்க வைக்க என்ன செய்யலாம் என்று யோசித்த போது எனக்கு சிக்கிய சில யோசனைகளை உங்களுக்கு சொல்கிறேன்.(நீங்கள் பின்பற்றி, வொர்க் அவுட் ஆனால் பிறகு நானும் பின்பற்ற ஆரம்பிக்கிறேன்.)

தாமிரா - தங்கமணிகளை சமாளிக்க பத்து யோசனைகள் என்ற தலைப்பில் சில யோசனைகள் தரலாம். யோசனைகள் வேலை செய்தால் உங்களுக்குக் கோவில் கட்டினாலும் கட்டுவார்.

நாமக்கல் சிபி - நவயுக தெய்வம் நயன்தாரா; (கேபிள் ஷங்கர் மற்றும் லோஷனுக்கு நமீதா என எடிட்டிக் கொள்ளவும்)

மாதவராஜ் - எதிர் வாக்களிப்பவர்களை எதிர்கொள்வது எப்படி?

நான் ஆதவன் - சேட்டனிண்ட சேட்டைகள்(A அல்ல U)

வால் பையன் - 'பகுத்தறிவாளர்களுக்கு ஒரு ஆப்பு' அல்லது 'ராவாக அடிப்பது எப்படி' என்ற தலைப்பில் எழுதலாம்.

உண்மைத்தமிழன் - ஒரு எழுத்துக்கதை எழுதுவது எப்படி என்ற தலைப்பில், 'காவல் கோட்டம்' அளவு ஒரு ஆயிரத்து சொச்ச பக்க நாவலை பதியவும்.

லக்கிலுக் - இந்த ஃபிகருக்கு எத்தனை மார்க் போடலாம்? என்று தலைப்பிடலாம். கருணாநிதியைக் கொஞ்சம் காரசாரமாகத் திட்டி பதிவிட்டால் அவர் வலைப்பூவில் உங்களுக்காக தனிப் பதிவிட்டு உங்களைப் பட்டுக் குஞ்சத்தால் கொஞ்சுவார்.

குசும்பன் - இவர் எழுதிய எதிர் கவுஜைக்கு, எதிர் எதிர் கவுஜை எழுதலாம். 'திருநெல்வேலிக்கே அல்வாவா?' என்று கேட்டு பின்னூட்ட வாய்ப்பிருக்கிறது.

ஜ்யோவ்ராம் சுந்தர் - தலைக்கு மேல் கைகளைத் தூக்கி ஒரு கும்பிடு போட்டு விட்டு, கணினியில் உ லாபம் என்று டைப்பவும். ஃபுல்லாக சரக்கடிக்கவும். பிகர்கள் இருக்கும் திசையிலுள்ள ஜன்னலை திறந்து விட்டுக் கொள்ளவும்.

இப்போது உங்கள் உள்ளத்தில் என்னவெல்லாம் தோன்றுகிறதோ, அதையெல்லாம் உள்ளத்தை அள்ளித்தா படத்தில் கவுண்டமணி ஆர்மோனியப் பெட்டியை வாசிப்பது போல, முழங்கையால் கணினியின் பொத்தான்களை கண்டபடி அழுத்தி டைப்பித் தள்ளிவிடவும். சோலி முடிஞ்சது.

இது தலைப்பிற்கு மட்டுமே! அவரைப் போல் பதிவெழுதுவது எப்படி என்று ஒரு புத்தகமெழுதலாம் என்றிருக்கிறேன்.

(இதையே மடக்கி மடக்கி கவிதை வடிவில் டைப்பினால் சென்ஷியின் பின்னூட்டத்தையும் பெற்று விடலாம்)

தூயா - வாயில் நுழையாத பதார்த்தத்துக்கு, வாயில் நுழையாத பெயரை வைத்து 'செய்வது எப்படி' என்று தலைப்பிடுங்கள்.

பரிசல்காரன் - இவர் பதிவிற்கு எதிர் பதிவிடலாம். அவரது வலைப் பூவில் 'இதெல்லாம் உனக்கு தேவையா' என்று கேட்டுக் கொண்டாலும், நம் பதிவில் ஜூப்பர் என்றே பின்னூட்டுவார். (இவரது பதிவில் முதல் பின்னூட்டம், காதலி/காதலனின் முதல் முத்தம் போல என்று குறிப்பிட்டிருந்தார். தலைப்பின் காரணம் இப்போது புரிகிறதா?)

டோண்டு ராகவன் - 'இங்கே தான் பிராமணன்' என்று தலைப்பிடலாம். ரொம்ப நாளாக எங்கே பிராமணன் என்று கேட்டு, அந்தத் தலைப்பிலேயே பதிவிட்டுக் கொண்டிருக்கிறார்.

அல்லது 'டோண்டு ராகவன் பெயரில் எனக்கு வந்த போலி பின்னூட்டம்' என்று தலைப்பிடலாம். பதிவைப் படிக்கிறாரோ இல்லையோ, 'நான் அவன் இல்லை' என்று பின்னூட்டி விட்டுப் போவார்.(அடி பலம் போல)

நர்சிம் - அடியார்க்கு நல்லார் உரை எழுத மறந்த ஏதாவது ஒரு சங்க கால பாடலுக்கு 'யாராவது விளக்கம் கொடுத்து உதவுங்களேன்' என்று தலைப்பிடலாம்.

இட்லிவடை - அனானியாக ஏதாவது பின்னூட்டம் வந்தால் இட்லிவடை என்று திருப்திப் பட்டுக் கொள்ளவும்.

அப்படியும் கல்லா கட்டவில்லையா.. தொடர் பதிவெழுத அழைப்பு விடுப்பது போல, நாளுக்கு ஐந்து பதிவர்களைப் பின்னூட்ட அழைப்பு விடுக்கலாம்.

பின் குறிப்பு: இதில் பாதிக்கு மேற்பட்டோர் எனக்குப் பின்னூட்டியிருக்கிறா(றீ)ர்கள். எனவே உங்களுக்கு சிரிப்பு வராவில்லை என்பதற்காக இதை சீரியஸாக எடுத்துக் கொள்ளாமல், சோக்காகவே எடுத்துக் கொள்ளவும்.

அதி முக்கிய அறிவிப்பு: சோம்பேறியைப் பின்னூட்ட வைக்க, சோம்பேறியின் அக்கவுண்டுக்கு பணம் அனுப்பலாம். மேலதிக விபரங்களுக்கு 'sombery@gmail.com'

107 மச்சீஸ் சொல்றாங்க:

Suresh said...

:-)

Suresh said...

தமிழ்ஷ் பற்றி ஒரு பதிவு

தமிழ்ஷின் மோசடி-பிரபல பதிவரின் சீப் மூவ் ?

http://www.sakkarai.com/2009/05/blog-post_09.html

படித்து வோட்ட போடுங்க

அறிவிலி said...

இல்லாட்டி எல்லாரையும் ஓரே நேரத்துல இப்படி சோம்பேறி மாதிரி வம்பிழுக்கலாம்.

மத்ததுக்கெல்லாம் அவங்கவங்க மட்டும்தான் வருவாங்க. இதுக்கு எல்லாரும் வருவாங்க.
(பின்னூட்டுவாங்களான்னு தெரியாது)

/'\சோம்பேறி/'\ said...

/*Suresh said... :-)*/

புன்னகைப்பானுக்கு நன்றி சுரேஷ்.

/*படித்து வோட்ட போடுங்க*/

:-))


/*அறிவிலி said...
இல்லாட்டி எல்லாரையும் ஓரே நேரத்துல இப்படி சோம்பேறி மாதிரி வம்பிழுக்கலாம்.*/

எல்லாரையும் எங்க அறிவிலி வம்புக்கிழுத்திருக்கேன்? யார்கிட்டயும் உதை படாமல் இருந்தால் பிறகு எல்லாரையும் வம்பிக்கிழுக்கலாம்னு இருக்கேன்.

/*இதுக்கு எல்லாரும் வருவாங்க.
)(பின்னூட்டுவாங்களான்னு தெரியாது)*/

தமிழ்மணத்தின் மோசடி - பிரபல மென்பொருளின் சீப் மூவ்? என்னுடைய இடுகை தமிழ்மணத்தில் போய் சேரவில்லை.:-((

நான் ஆதவன் said...

//இது தலைப்பிற்கு மட்டுமே! அவரைப் போல் பதிவெழுதுவது எப்படி என்று ஒரு புத்தகமெழுதலாம் என்றிருக்கிறேன்.//

டாய்ய்ய்ய்ய்ய் ஆட்டோவை ஸ்டார்ட் பண்ணுடுடா...விடுடா ஸ்ரீவில்லிபுத்தூருக்கு..

நான் ஆதவன் said...

//டோண்டு ராகவன் - 'இங்கே தான் பிராமணன்' என்று தலைப்பிடலாம். ரொம்ப நாளாக எங்கே பிராமணன் என்று கேட்டு, அந்தத் தலைப்பிலேயே பதிவிட்டுக் கொண்டிருக்கிறார்.//

டாப்ப்ப்ப்ப் இது தான்...சிரிச்சு முடியல சோம்பேறி :)

நான் ஆதவன் said...

//பெருந்தலைகளைத் திரும்பிப் பார்க்க வைக்க என்ன செய்யலாம்//

நான் ஆதவன்?????

இம்புட்டு கொல வெறி இருக்கும்ன்னு தெரிஞ்சிருந்தா உங்க "சாவு"காசமே வேண்டாம்னு விட்டுருப்பேன்...
(நான் மனசுகுள்ள சந்தோஷப்படல...படல...படல...இது சத்தியம்)

/'\சோம்பேறி/'\ said...

/*டாய்ய்ய்ய்ய்ய் ஆட்டோவை ஸ்டார்ட் பண்ணுடுடா...விடுடா ஸ்ரீவில்லிபுத்தூருக்கு..*/

அதை எழுதியது நானில்லை. என் அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டுள்ளது.

/*
டாப்ப்ப்ப்ப் இது தான்...சிரிச்சு முடியல சோம்பேறி :)*/

நன்றி. இதை நான் தானுங்கோ எழுதினேன்.

சோம்பேறி said...

/*இம்புட்டு கொல வெறி இருக்கும்ன்னு தெரிஞ்சிருந்தா உங்க "சாவு"காசமே வேண்டாம்னு விட்டுருப்பேன்...*/

நான் பொறந்து நாலு மாசம் தானே ஆகுது. என் தலையோட கம்பேர் பண்ணினா நீங்க பெருந்தலை தானே..

Suresh said...

//டோண்டு ராகவன் - 'இங்கே தான் பிராமணன்' என்று தலைப்பிடலாம். ரொம்ப நாளாக எங்கே பிராமணன் என்று கேட்டு, அந்தத் தலைப்பிலேயே பதிவிட்டுக் கொண்டிருக்கிறார்.//

டாப்ப்ப்ப்ப் இது தான்...சிரிச்சு முடியல சோம்பேறி :)

நானும் இதற்க்கு தான் விழுந்து விழுந்து சிரித்தேன்

அறிவிலி said...

////*இதுக்கு எல்லாரும் வருவாங்க.
)(பின்னூட்டுவாங்களான்னு தெரியாது)*/

தமிழ்மணத்தின் மோசடி - பிரபல மென்பொருளின் சீப் மூவ்? என்னுடைய இடுகை தமிழ்மணத்தில் போய் சேரவில்லை.:-((///


இந்த சதி வேலையில் எனக்கு பங்கு இல்லை. நீங்கள் ஏற்கெனவே கேள்விபட்டது போல் நான் சூதுவாது தெரியாதவன்.

இராகவன் நைஜிரியா said...

ம் ... நடக்கட்டும்.. நடக்கட்டும்.

ரொம்ப நல்லா இருந்துச்சு.. (உண்மையாதாங்க)

சோம்பேறி said...

/*நானும் இதற்க்கு தான் விழுந்து விழுந்து சிரித்தேன்*/

மீ டூ.. சேம் பின்ச்.. ஆனால் விழுந்ததில் எனக்கு முன் பற்கள் இரண்டும் உடைந்துவிட்டது. நீங்க கொஞ்சம் ஜாக்கிரதையா சிரிங்க சுரேஷ்.

/* இந்த சதி வேலையில் எனக்கு பங்கு இல்லை.*/

பிரபல மென்பொருளாளர் அறிவிலியின் காஸ்ட்லி மூவ். என்னுடைய இடுகை தமிழ்மணத்தில் போய் சேரவில்லை.:-((

இது ஓக்கேவா? :-)

சோம்பேறி said...

/*இராகவன் நைஜிரியா said...
ரொம்ப நல்லா இருந்துச்சு.. (உண்மையாதாங்க)*/

Welcome back இராகவன்.. Thanks..

நீங்க எப்பவும் தமிழ் மணத்தில ஓட்டு போட்டுட்டு போவீங்களே.. எங்க இப்போ ஓட்டு போடுங்க பாப்போம். உங்களுக்கு ஐநூறு ரூபாயும், அஞ்சப்பர் பிரியானியும் வாங்கித் தரேன்.

சென்ஷி said...

கும்மி வரலைங்கறதுக்காக ஒரு பதிவா!

சொல்லி விட்டுருந்தா வூடு கட்டி அடிச்சுருப்பேனே..

இப்ப பிசியாக்கீறதால நைட்டு வந்து கும்முறேன் :))

SUREஷ் said...

ஓட்டுப் போட்டாச்சுதல..,

Suresh Kumar said...

எப்படியாவது பின்னூட்டம் வந்தா சரி தல

அறிவிலி said...

//பிரபல மென்பொருளாளர் அறிவிலியின் காஸ்ட்லி மூவ். என்னுடைய இடுகை தமிழ்மணத்தில் போய் சேரவில்லை.:-((

இது ஓக்கேவா? :-)//

பிரபல வன்பொருளாளர் அறிவிலி முயற்சியால் தமிழ்மணத்தில் சோம்பேறியின் இடுகை போய் சேர்ந்தது.

இது ஒக்கே.

சோம்பேறி said...

/*கும்மி வரலைங்கறதுக்காக ஒரு பதிவா!*/

சே.. அப்படியெல்லாம் இல்ல. சும்மா சோக்குக்காக.. பிஸி ஷெட்யூலிலும் இங்கு வந்ததற்கு நன்றி.

/*SUREஷ் said...
ஓட்டுப் போட்டாச்சுதல..,*/

நன்றி SUREஷ். சேது சமுத்திர திட்டம் நிறைவேறியதும், உங்களுக்கு ஆவன அனுப்பப்படும்.

/*Suresh Kumar said...
எப்படியாவது பின்னூட்டம் வந்தா சரி தல*/

:-)))))))))))))

சோம்பேறி said...

/*பிரபல வன்பொருளாளர் அறிவிலி முயற்சியால் தமிழ்மணத்தில் சோம்பேறியின் இடுகை போய் சேர்ந்தது.*/

நிஜமாவா? நன்றி அறிவிலி..:-)

தீப்பெட்டி said...

கலக்கல் பாஸ்............

லக்கிலுக் said...

என்னுடைய லிப் டூ லிப் முத்தம் உங்களுக்கு :-)

நான் ஆதவன் said...
This comment has been removed by the author.
நான் ஆதவன் said...

//லக்கிலுக் said...

என்னுடைய லிப் டூ லிப் முத்தம் உங்களுக்கு :-)
//

இது தேவையா??? சோம்பேறி தற்கொலை பண்ணிக்கிறதுக்கு ஆயிரம் வழி இருக்கும் போது இந்த மாதிரி தலைப்பை வச்சு ரிஸ்க் எடுக்கலாமா??

நான் ஆதவன் said...

கும்மி ஸ்டார்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்...எங்கே எங்க தல சென்ஷி???? தல வாங்க வாங்க

நான் ஆதவன் said...

//லக்கிலுக் said...

என்னுடைய லிப் டூ லிப் முத்தம் உங்களுக்கு :-)
//

லக்கி அண்ணே சோம்பேறி பல் விளக்க சோம்பறித்தனமா இருந்ததால ஒரு மாசமா பல்லு விளக்கலையாம்...பரவாயில்லையா??

சென்ஷி said...

//லக்கி அண்ணே சோம்பேறி பல் விளக்க சோம்பறித்தனமா இருந்ததால ஒரு மாசமா பல்லு விளக்கலையாம்...பரவாயில்லையா??///

எலேய் ஆதவா.. சோம்பேறி கணக்கு வச்சுக்க சோம்பேறித்தனப்பட்டு ரெண்டு வருசத்துக்கு முன்னாடி சொன்ன வார்த்தைப்பா அது... :)

சென்ஷி said...

இதுக்குத்தான் பைத்தியக்காரன் கூட சேராதேன்னு சொல்லிட்டு இருந்தேன். இப்ப பாருங்க. எடுத்ததுக்கெல்லாம் முத்தம் கொடுக்க கிளம்பிட்டாரு மனுசன் :)

சென்ஷி said...

//நான் ஆதவன் said...

//லக்கிலுக் said...

என்னுடைய லிப் டூ லிப் முத்தம் உங்களுக்கு :-)
//

இது தேவையா??? சோம்பேறி தற்கொலை பண்ணிக்கிறதுக்கு ஆயிரம் வழி இருக்கும் போது இந்த மாதிரி தலைப்பை வச்சு ரிஸ்க் எடுக்கலாமா??
//

ரிப்பீட்டே...

அட லக்கி முத்தம் கொடுக்க வர்றாருன்னு படிச்சதுமே கோமாவுல விழுந்துட்டாரு மனுசன்..

சென்ஷி said...

//நான் ஆதவன் said...

கும்மி ஸ்டார்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்...எங்கே எங்க தல சென்ஷி???? தல வாங்க வாங்க
//

வந்துட்டேன் தம்பி வந்துட்டேன். உன் பாசம் புல்லரிக்க வைக்குது. அதுக்குன்னு நீயும் முத்தம் கொடுக்க கிளம்பி வந்துடாதே

சென்ஷி said...

//லக்கிலுக் said...

என்னுடைய லிப் டூ லிப் முத்தம் உங்களுக்கு :-)
//

இங்க கொண்ட வச்சுருக்கறவங்களுக்கு பெட்ரோமாக்ஸ் லைட்டு கொடுக்கறதில்லை லக்கி :)

சென்ஷி said...

லக்கியின் அடுத்த புத்தகம்

லிப் டு லிப் கிஸ் அடிப்பது எப்படி!

(கலர் போட்டோக்களுடன். ஆனால் எல்லாமே லக்கி போட்டோதான்)

Anonymous said...

அப்பா சாமீ தாங்க முடியலே....
விஜய

சென்ஷி said...

லக்கியின் பின்னூட்டம் கண்டு குசும்பனின் குமுறல்...

அவரு அப்படித்தான் எனக்கும் முத்தம் கொடுக்க கிளம்புனாரு. அப்புறமா கஷ்டப்பட்டு நானும் பல்விளக்கலைங்கற உண்மைய சொல்லி தப்பிச்சேன். ஆன்ன்னா ஊன்ன்னா முத்தம் கொடுக்க வந்துடறாங்க

சென்ஷி said...

இன்றைய சன் டிவியின் சிறப்புப்பார்வையில்....

லக்கியின் முத்தம்.. பேதியில் பதிவர்கள்!!

சென்ஷி said...

மடிப்பாக்கம் அண்ணாச்சியின் முத்த லீலைகள்

இந்தவாரம் குங்குமத்தில்

வாங்கிவிட்டீர்களா :)))

சென்ஷி said...

ஜூவியின் ஸ்பெசல் ரிப்போர்ட்... கழுகாரின் பார்வையில் லக்கியின் உதடுகள்..

தாங்குமா தமிழ்நாடு

நான் ஆதவன் said...

//(கலர் போட்டோக்களுடன். ஆனால் எல்லாமே லக்கி போட்டோதான்)//

ப்ளாக் அண்ட் வொயிட்டும் கலர் போட்டா தான் என்கிற உங்கள் உள்குத்து விளங்கவில்லை குருவே

சென்ஷி said...

குமுதம் இந்த வாரம்

லக்கியின் சூடான முத்தத்தை பெறப்போகும் அதிர்ஷ்டசாலி அன்றே சாகலாம். நோ வைகுண்ட சான்ஸ்

நான் ஆதவன் said...

//
இங்க கொண்ட வச்சுருக்கறவங்களுக்கு பெட்ரோமாக்ஸ் லைட்டு கொடுக்கறதில்லை லக்கி :)//

எப்படி தல் இப்படியெல்லாம்...முடியல

சென்ஷி said...

லக்கியின் முத்த போராட்டம் வெற்றி பெருமா.. சன் டிவியில் ஒரு நேர்முக வர்ணனை ஆரம்பம்

சென்ஷி said...

லக்கியின் முத்தப்போராட்டம் கண்டு தமிழ்நாடு குலுங்கி குலுங்கி அழுதது. நமீதா பஞ்சாப்பிற்கே தப்பி ஓட்டம்

நான் ஆதவன் said...

//
அவரு அப்படித்தான் எனக்கும் முத்தம் கொடுக்க கிளம்புனாரு. அப்புறமா கஷ்டப்பட்டு நானும் பல்விளக்கலைங்கற உண்மைய சொல்லி தப்பிச்சேன். ஆன்ன்னா ஊன்ன்னா முத்தம் கொடுக்க வந்துடறாங்க//

அடிக்கிற கும்மிய பாத்தா உங்களுக்கு நிறைய கிடைச்சிருக்கும் போல சென்ஷி

நான் ஆதவன் said...

முத்தம் முடிவுக்கு வர தலைவர் உண்ணாவிரதம்

சென்ஷி said...

நமீதாவின் நான்சென்ஸ் பேட்டி... லக்கியை பற்றி எக்ஸ்க்ளூசிவ்வாக...

இந்த லக்கி ரொம்போ மோஷம்.. ஆம்புலைங்கலுக்கு உம்மா தருது.. ஷேம் ஷேம்

சென்ஷி said...

லக்கியின் முத்தம் பற்றி மனோதத்துவ ஆராய்ச்சி செய்யப்படுமா.. அகில உலக மனோதத்துவ மருத்துவ பைத்தியக்காரர்களின் கூட்டத்தில் சலசலப்பு

நான் ஆதவன் said...

முத்தம் முடிவுக்கு வந்தது- தமிழக அரசு

முத்தம் முடிவுக்கு வரவில்லை. அது புரளி-லக்கி

முத்தத்தில் பயங்கர ஆயுதம் பயன்படத்தபடாது - லக்கி உறுதி

சென்ஷி said...

//அடிக்கிற கும்மிய பாத்தா உங்களுக்கு நிறைய கிடைச்சிருக்கும் போல சென்ஷி//

அட பின்னூட்டம் படிச்சதுக்கே இந்த எஃபெக்ட் தூக்குது தம்பி

சென்ஷி said...

வலையுலகில் முதன் முறையாக பத்துலட்சம் ஹிட்சுக்கு மேல் வாங்கிய லக்கியின் பதிவுக்கு சென்றால் மானிட்டரே உங்களுக்கு முத்தம் தரும்.

சென்ஷி said...

மானிட்டர் முத்தம் தராது போனால் நெப்போலியன் அல்லது எம்.சி டிரை செய்யவும்

நான் ஆதவன் said...

//சென்ஷி said...

லக்கியின் முத்தப்போராட்டம் கண்டு தமிழ்நாடு குலுங்கி குலுங்கி அழுதது. நமீதா பஞ்சாப்பிற்கே தப்பி ஓட்டம்
//

தல அது குஜராத்...இந்த விசயத்தில நீங்க வீக்ன்னு காண்விச்சுட்டீங்க

சென்ஷி said...

சாரு ஆவேசம். லக்கியா இப்படி! தன்னுடைய அடுத்த புத்தகத்தில் இதைப்பற்றிய சிந்தனைகளை தெளிக்கப்போவதாக பாரீசில் பத்திரிகையாளர் முன் பேட்டி

நான் ஆதவன் said...

//சென்ஷி said...

மானிட்டர் முத்தம் தராது போனால் நெப்போலியன் அல்லது எம்.சி டிரை செய்யவும்
//

எங்களை போல என்.ஆர்.ஐக்கு லோக்கல் சரக்கு கிடைக்காது..ஏற்பாடு செய்யவும்

நான் ஆதவன் said...

லக்கி ஒரு முன் நவீனத்துவத்திற்கு ஒரு எடுத்துகாட்டு - சாரு பேட்டி

சென்ஷி said...

//தல அது குஜராத்...இந்த விசயத்தில நீங்க வீக்ன்னு காண்விச்சுட்டீங்க//

தம்பி அது ஊர விட்டு ஓடுனதுல அதுக்கு தலை கால் மாத்திரமில்ல் ஊரும் எதுன்னு புரியலை.. இந்த மாதிரி விசயத்துல நீ கிங்காச்சே

சென்ஷி said...

//லக்கி ஒரு முன் நவீனத்துவத்திற்கு ஒரு எடுத்துகாட்டு - சாரு பேட்டி//

மாப்பி.. அது முன் நவீனம் இல்லை.. முத்த நவீனம்

சென்ஷி said...

//எங்களை போல என்.ஆர்.ஐக்கு லோக்கல் சரக்கு கிடைக்காது..ஏற்பாடு செய்யவும்//

லேப்டாப்பை தண்ணீரில் ஊற வைத்து கட்டையால் அடிக்கவும்

நான் ஆதவன் said...

முத்தம் கொடுத்தது லக்கி அல்ல ...அது அதிஷ. முகமூடி அணிந்து ஏமாற்றினார்...குபீர் தகவல்

சென்ஷி said...

லக்கியின் முத்தத்தால் ஆபத்து பதிவர்களுக்கா.. பதிவுக்கா.. பாலமன் சாப்பையா தலைமையில் வெட்டி மன்றம்

நான் ஆதவன் said...

அது நா இல்லப்பா சொல்டேன். சும்மானாங்காட்டியும் புளுவினா அத்தெல்லாம் நம்பி மெர்சலாகாப்பா - அதிசா குமுறல் பேட்டி

சென்ஷி said...

முத்தம் தர ஏத்த இடமாய் லிப்பை தேர்ந்தெடுத்தது ஏன்.. லக்கி முதன்முறையா தனது பதிவில் எழுதப்போகிறார். பின்னாளில் புத்தகமா வரப்போவதால் முடிவு எழுதப்போவதில்லை..

கிழக்கு பதிப்பகத்தை இன்றே அணுகுங்கள்..

முத்தம் தர ஏத்த இடம்!

நான் ஆதவன் said...

//சென்ஷி said...

லக்கியின் முத்தத்தால் ஆபத்து பதிவர்களுக்கா.. பதிவுக்கா.. பாலமன் சாப்பையா தலைமையில் வெட்டி மன்றம்
//

அது கம்யூட்டர் மானிட்டருக்கே என என் தீர்பை சொல்லிக்கிறேன் - சாலமன் சாப்பையா

நான் ஆதவன் said...

//
முத்தம் தர ஏத்த இடம்!//

கிழக்கு பதிப்பகம் மொட்டை மாடி

சென்ஷி said...

//நான் ஆதவன் said...

அது நா இல்லப்பா சொல்டேன். சும்மானாங்காட்டியும் புளுவினா அத்தெல்லாம் நம்பி மெர்சலாகாப்பா - அதிசா குமுறல் பேட்டி
//

இதுக்குத்தான் ஆதவன் வேணுங்கறது. கரெக்டா கைப்புள்ளையை போட்டு கொடுத்துட்டியே :)

சென்ஷி said...

//நான் ஆதவன் said...

//
முத்தம் தர ஏத்த இடம்!//

கிழக்கு பதிப்பகம் மொட்டை மாடி
/

அங்க இடம் இல்லைன்னா ஏதாச்சும் முடி முளைச்ச மாடிக்கு போயிக்குங்க

சென்ஷி said...

//நான் ஆதவன் said...

முத்தம் கொடுத்தது லக்கி அல்ல ...அது அதிஷ. முகமூடி அணிந்து ஏமாற்றினார்...குபீர் தகவல்
//

அதிஷாவா அப்படி.. தடுமாறுகிறதா தமிழ்மணம்...

சென்ஷி said...

அதீதனா.. அதிஷாவா..

மீண்டும் குழப்பத்தில் சன் டிவி..

சென்ஷி said...

காமக்கதைகளில் முத்தத்தின் பங்கு.. விளக்க வருகிறார் குருஜி சுந்தர்.

நான் ஆதவன் said...

முத்தம் என்றதும் ஒரு இசை தான். இத்தாலிய இசையோடு மெசபட்டோமியாவின் தாளத்தையும் சேர்க்கும் போது வரும் இசையின் சத்தமும் முத்ததின் சத்தமும் ஒன்றே. இந்த இசையைப் பற்றி பகிற இந்தியாவில் லக்கியும் நானும் மட்டுமே உள்ளோம்-சாரு விளக்கம்

சென்ஷி said...

அடுத்த பதிவர் சந்திப்பில் முத்தச்சலனம் அலசப்படுமா.. எதிர்பார்ப்பில் முத்தம் மறுப்போர் குழு
புதுவை

நான் ஆதவன் said...

//அதிஷாவா அப்படி.. தடுமாறுகிறதா தமிழ்மணம்...//

சரக்கு இருந்தா இப்படி தான் தடுமாறும்

சென்ஷி said...

முத்தத்தை தன்னுடைய தனிப்பட்ட சொத்தாக வளர்க்க முயல்கிறார் லக்கி.. நான் கொடுக்கும் எந்த முத்தமும் யாருக்கும் போய் சேர்வதில்லை - பதிவர் சக்கர சுரேஷ் மெரீனாவில் ஆவேசம்

நான் ஆதவன் said...

எனக்கு யாரும் முத்தம் கொடுக்க வருவதில்லை. இதற்கு லக்கியே காரணம் - சக்கரை சுரேஷ் திடுக் தகவல்

நான் ஆதவன் said...

//முத்தத்தை தன்னுடைய தனிப்பட்ட சொத்தாக வளர்க்க முயல்கிறார் லக்கி.. நான் கொடுக்கும் எந்த முத்தமும் யாருக்கும் போய் சேர்வதில்லை - பதிவர் சக்கர சுரேஷ் மெரீனாவில் ஆவேசம்//

செகண்ட் கேப்பில முந்தீட்டீங்க தல

சென்ஷி said...

ஆமாம். நான் நேற்று இஸ்ரேலுக்கு அனுப்பி வைத்த ஃபிளையிங் கிஸ் கூட நடுவானில் மறைந்தது..

- டோண்டு ராகவன்

நான் ஆதவன் said...

போடுங்கம்மா ஓட்டு "உதடு" சின்னத்தை பார்த்து

சென்ஷி said...

தமிழ்மணத்தில் முத்த இடுகைகள் தனியாக ஒதுக்கி வைக்கப்படும்..

நான் ஆதவன் said...

நான் என்றால் ஒட்டாது

நாம் என்றால் இரு உதடுகள் ஒட்டும்

லக்கி என்றால் நான்கு உதடுகள் ஒட்டும்

நான் ஆதவன் said...

ஐய்யா...என் முத்தம் இளமை விகடனில்.....புதிய பதிவர்கள் கொண்டாட்டம்

நான் ஆதவன் said...

கமல் படத்தில் நடிக்க லக்கிக்கு அழைப்பு - தினபந்தி

நான் ஆதவன் said...

பத்து பைசாவுக்கு தேறாத முத்தம் - லக்கி குமுறல் பதிவு

நான் ஆதவன் said...

இரண்டு முத்தம் கொடுத்தா அவன் என்ன பெரிய ஆளா...பல்பேந்திரன் காண்டு பேட்டி

நான் ஆதவன் said...

தல இருக்கீகளா???

சென்ஷி said...

வந்துட்டோமய்யா

சென்ஷி said...

சோதனை பின்னூட்டம்

(ஒழுங்கா நெட் ஒர்க் ஆகுதான்னு பார்க்க)

சோம்பேறி said...

/*தீப்பெட்டி said...
கலக்கல் பாஸ்............*/

நன்றி தீப்பெட்டி.

/*லக்கிலுக் said...
என்னுடைய லிப் டூ லிப் முத்தம் உங்களுக்கு :-)*/

நன்றி லக்கி. (ஆனாலும் child abuse பத்தி எழுதின நீங்களே இப்படி பண்ணலாமா?)

/*Anonymous said...
அப்பா சாமீ தாங்க முடியலே....
விஜய*/

மீ டூ விஜய். (உங்களை மெயில் அனுப்பி கூப்பிட்டாதான் வருவீங்களா? என் மேல கோபமோனு பயந்துட்டேன்.)


ஆதவன் சென்ஷி முடியல. ஏதோ ஆர்வக் கோளாருல இப்படி ஒரு பதிவைப் போட்டுட்டேன். மண்ணிச்சு விட்டுடுங்க..

நான் ஆதவன் said...

மேலுதட்டில் கொடுத்தால் லக்கிக்கு அதிர்ஷ்டம்
கீலுதட்டில் கொடுத்தால் லக்கிக்கு குஷ்டம்
- சுப்பையா வாத்தியார் ஆருடம்

சென்ஷி said...

//நான் ஆதவன் said...

நான் என்றால் ஒட்டாது

நாம் என்றால் இரு உதடுகள் ஒட்டும்

லக்கி என்றால் நான்கு உதடுகள் ஒட்டும்
/

கலக்கல் :))

நான் ஆதவன் said...

//ஏதோ ஆர்வக் கோளாருல இப்படி ஒரு பதிவைப் போட்டுட்டேன். மண்ணிச்சு விட்டுடுங்க..//

தமிழ்ல பிடிக்காத ஒரே வார்த்தை

நான் ஆதவன் said...

ஓகே மன்னிப்பு கிராண்டட்...இப்ப போறோம் ஆனா திரும்ப...

நான் ஆதவன் said...

வர மாட்டோம்ன்னு சொல்ல வந்தேன்

சென்ஷி said...

அடடா

என்னப்பா இப்படி அதுக்குள்ள முடிச்சுட்ட

சோம்பேறி said...

நன்றி.. நன்றி.. நன்றி..

லக்கிலுக் said...

:-(

அறிவிலி said...

என்னடா 98 கமெண்ட் இருக்கே, பதிவுலகமே திரண்டு வந்து சோம்பேறிக்கு முத்தம் குடுக்குதோன்னு பாத்தா ரெண்டு பேரு மட்டும் கும்மு கும்முன்னு கும்மிட்ருக்காங்க.

நான் இப்பத்தான் ரிட்டர்ன் வரேன், முடிச்சுட்டேன்னா எப்படி?

அறிவிலி said...

//நான் ஆதவன் said...
எனக்கு யாரும் முத்தம் கொடுக்க வருவதில்லை. இதற்கு லக்கியே காரணம் - சக்கரை சுரேஷ் திடுக் தகவல்//

ப்ர்ர்ர்ர்..... ஜூப்பரு.... உங்களுக்கு என்னோட முத்தம்.

சோம்பேறி said...

/*ரெண்டு பேரு மட்டும் கும்மு கும்முன்னு கும்மிட்ருக்காங்க.*/

ஆமாங்க அறிவிலி. அவங்க பதிவைப் பத்தி கும்மினாலும் பரவாயில்லை. பின்னூட்டத்தைப் பத்தியில்ல கும்மிருக்காங்க.

சென்ஷி said...

கும்முறதுன்னு முடிவு செஞ்சுட்டா நாங்க பதிவு பின்னூட்டமுன்னு வித்தியாசம் பார்க்கறதில்லை.

சென்ஷி said...

சர்வம் கும்மியாய நமஹ

சென்ஷி said...

மீ த 100 :)

தமிழ்நெஞ்சம் said...


தன் மகனை நனைய விடாமல் தடுத்து தான் நனையும் தாய் - அன்னையர் தின வாழ்த்துகள் - 2009

Anonymous said...

பதிவு வழக்கம்போல கலக்கல். இதை நீங்க திங்கள்(அ)செவ்வாய்ல போட்டு இருந்திங்கன்னா மத்த பதிவர்களும் வந்து 'முத்தம்' குடுத்திருப்பாங்கல்ல. :-)

சென்ஷி, நான் ஆதவன் ரெண்டு பெரும் அடிச்ச கும்மியில நேத்தைய பொழுது இனிமையா கழிந்தது. நீங்களும் கும்மியில கலந்துக்குவிங்கன்னு பாத்தேன். உங்களை ஆளையே காணோம்.

சித்ரா

சோம்பேறி said...

/*லக்கிலுக் said...
:-(*/

அழுவாதீங்க லக்கி. ருத்ரன் அங்கிள் கிட்ட சொல்லி பிஸ்கட்டும் சாக்லேட்டும் வாங்கித் தர சொல்றேன்.

/*சென்ஷி said...
கும்முறதுன்னு முடிவு செஞ்சுட்டா நாங்க பதிவு பின்னூட்டமுன்னு வித்தியாசம் பார்க்கறதில்லை.
சர்வம் கும்மியாய நமஹ*/

சென்ஷியாய நமஹ..

/*தமிழ்நெஞ்சம் said...
தன் மகனை நனைய விடாமல் தடுத்து தான் நனையும் தாய் - அன்னையர் தின வாழ்த்துகள் - 2009*/

வாழ்த்துகளுக்கு நன்றி தமிழ்நெஞ்சம். படம் அழகு. உங்களுக்கும் எனது இதயம் கனிந்த அன்னையர் தின வாழ்த்துகள்.

/*இதை நீங்க திங்கள்(அ)செவ்வாய்ல போட்டு இருந்திங்கன்னா மத்த பதிவர்களும் வந்து 'முத்தம்' குடுத்திருப்பாங்கல்ல. :-)*/

ஐயகோ.. ஏன் சித்ரா.. எனக்கு கல்யாணமே ஆகக் கூடாதுனு முடிவோட இருக்கீங்க போல?

/*சென்ஷி, நான் ஆதவன் ரெண்டு பெரும் அடிச்ச கும்மியில நேத்தைய பொழுது இனிமையா கழிந்தது. நீங்களும் கும்மியில கலந்துக்குவிங்கன்னு பாத்தேன். உங்களை ஆளையே காணோம்.*/

எனக்கும் இனிமையா தான் கழிந்தது. ஆனாலும் சென்ஷியும், ஆதவனும் லக்கி, சக்கரைனு ரெண்டு ஒன்னும் தெரியாத அப்பாவி குழந்தைகளைப் போட்டு கும்மி எடுத்துட்டாங்க.

அவங்க child abuseனு ருத்ரன் டாக்டர்கிட்ட கம்ப்ளைண்ட் பண்ணிடுவாங்களோனு பயம் வந்துடுச்சா. அதான் நான் எஸ்ஸாகிட்டேன்.

ஆக்சுவலி நான் இப்போ பொள்ளாச்சில friend வீட்டுல இருக்கேன். அதான் கும்ம முடியல.

RATHI SELVAN said...

அடேங்கப்பா.... எப்படி தான் யோசிக்கிரிங்களோ .. தெரியலைப்பா... கலங்குறீங்க சோம்பேறி... பிரமாதம்...

சோம்பேறி said...

ரொம்ப நன்றிங்க ரதி செல்வன்.

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

நான் இப்பத்தான் பார்த்தேன்..

ஏதோ கிடைக்குற நேரத்துல எது கண்ணுக்குப் படுதோ அதைப் படிச்சிட்டு பிடிச்சிருந்தா பின்னூட்டம் போட்டுட்டு ஓடிக்கிட்டிருக்கோம்..

வரலை.. வரலைன்னுல்லாம் சொல்லாதீங்க பிரதர்.. ஏன்னா நேரமில்லை..

சோம்பேறி்ன்னு பேரை வேற வைச்சிருக்கீங்களா.. அதான் ஒண்ணும் சொல்ல முடியலை..

வாழ்க வளமுடன்

சோம்பேறி said...

நன்றி உண்மைத் தமிழன்(15270788164745573644).

/* வரலை.. வரலைன்னுல்லாம் சொல்லாதீங்க பிரதர்.. ஏன்னா நேரமில்லை..*/

சரிங்க. புரியுது. சும்மா விளையாட்டுக்கு தான் சொன்னேன். சீரியஸா எடுத்துக்காதீங்க.

/*சோம்பேறி்ன்னு பேரை வேற வைச்சிருக்கீங்களா.. அதான் ஒண்ணும் சொல்ல முடியலை..*/

சோமாறினு பெயரை மாத்திட்டு தகவல் அணுப்புறேன். வந்து சொல்ல வந்ததை சொல்லிட்டு போங்க:-)

வாழ்க வளமுடன்:-)

Post a Comment

தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு.

Blog Widget by LinkWithin
 
சோம்பேறி. Design by Pocket