ஏ.. நீ ரெண்டாப்பு படிச்சியாய்யா..

Monday, 27 April, 2009

Views

எங்க பக்கத்து வீட்டு குட்டி சக்திக்கு நாளைக்கு பரிட்சையாம். 'உன் கூட வெளையாடிக்கிட்டு இருந்தா நான் எப்ப படிக்கறது'னு சொல்லி வீட்டுப் பக்கமே வர்றதில்ல. அவ நல்லா பரிட்சை எழுத என் வாழ்த்துக்கள்(ஆதவன் எங்க இருக்கீங்க. வந்து வாழ்த்துங்க)

செம போர். நிஜமா சொல்றேன் இவ மட்டும் இல்லைனா நான் என்னிக்கோ ஒரு உருப்படியான வேலையில சேந்து கோடிக் கணக்குல இல்லன்னாலும் ஆயிரக்கணக்குலயாவது(அட.. நூத்துக் கணக்குலயாவது) சம்பாரிச்சிருப்பேன். அடுத்து ரெண்டாப்பு போறாளாம். அலப்பரை தாங்க முடியல. வர்ற ஆத்திரத்துக்கு பேசாம ஏதாவது வேலைக்குப் போயிடலாமானு இருக்குது.

'ஏ.. நீ ரெண்டாப்பு படிச்சியாய்யா.. இப்ப மட்டும் ரெண்டாப்பு படிச்சிருந்த.. செத்துருப்ப.. ரெட்டை ஸ்கேலால முட்டிக்கு முட்டி தட்டிடுவாங்க தெரியுமா.. நல்ல வேளை தப்பிச்ச' அப்படிங்கறா.

இது கூட பரவாயில்ல. நேத்து என் கிட்ட வந்து 'உன் ரெண்டாப்பு புஸ்தகம் எனக்கு தர்றியாய்யா'னு கேக்குறா..

நான் போன வருஷம் பண்ணின ப்ராஜெக்ட் ரிப்போர்டே எங்க இருக்குதுனு தெரியல. ரெண்டாப்பு புத்தகத்துக்கு எங்க போக?

எப்ப பாத்தாலும் சுட்டி டிவி தான். அவ மட்டும் பாத்தா கூட பரவாயில்ல. அவ கூட சேந்து நானும் 'குதிங்க', 'குள்ள நரி திருடக் கூடாதுனு சொல்லுங்க', 'கோமாளித்தனமா டான்ஸ் ஆடுங்க'னு டோரா சொல்றதையெல்லாம் செய்யனும். இல்லைனா அடுத்த நாள் காலையில வந்து தூங்க விடாம பாடா படுத்துவா.

(நல்லா தூங்கிட்டு இருக்கும் போது அவ என் மேல வந்து பொத்துனு விழுந்ததும் 'சக்தீஈஈ'னு கத்தியே பழகிடுச்சா.. இப்ப பஸ்ல கூட்டத்துல யாராவது இடிச்சாலும் 'அய்யோ..அம்மா..' என்று கத்தாம 'சக்தி'னே கத்திடுறேன்.)

இந்த சுட்டி டிவிக்காரங்களும் ஒரு தடவ போட்ட எபிசோடையே திரும்ப திரும்ப போட்டுகிட்டு இருப்பாங்க. ஏன் பாத்ததையே திரும்பத் திரும்ப பாக்குறனு கேட்டா 'அப்பா மட்டும் நேத்து பாத்த செய்தியையே தினமும் பாக்குறாங்க'னு கேப்பா.

எங்கப்பாவும் என்னவோ எலெக்ஷன்ல எம்.பி. ஆகப் போற மாதிரி சன் செய்திகள், கலைஞர் செய்திகள் இவ்ளோ ஏன், செய்தி வாசிக்கற புள்ளையே திரும்ப பாக்காத ____ செய்திகளைக் கூட விடாம பாப்பாரு.

சக்தி என்னிக்காவது கையில பூவோட வந்தான்னா நான் தொலைஞ்சேன்னு அர்த்தம். எனக்கு பவுடர், கண்மை, பொட்டு, லிப்ஸ்டிக், மஸ்காரா எல்லாம் போட்டு விட்டு தலை வாரி, பூ வைச்சு சந்திரமுகி ஜோதிகா மாதிரி ஆக்கிடுவா..

இவளை மாதிரி சென்னைல எங்க மாமா வீட்டுப் பக்கத்தில, ஸாம்னு ஒரு குட்டிப் பையன் இருக்கான். அவனத் தனியாளா சமாளிக்க முடியாம ஒரு நாள் அவன் அம்மா என்னையும் சர்ச்சுக்குக் கூப்பிட்டுப் போனாங்க.

பிரார்த்தனை பண்றவங்க முக்காடைப் பிடிச்சு இழுக்கிறது, பாதிரியாரை இமிடேட் பண்றதுனு சின்னமலை சர்ச்சே திரும்பிப் பாக்குறளவு நாங்க அடிச்ச லூட்டில, அவங்கம்மா சர்ச்சை விட்டு பாதியிலேயே வெளி நடப்பு செஞ்சு, எங்க பொடனியில அடிச்சு வீட்டுக்கு இழுத்துகிட்டு வந்துட்டாங்க.

அவன் எல்.கே.ஜி படிக்கிறான். இப்போ எக்ஸாம் முடிஞ்சிடுச்சாம். அவனுக்கும் என் பிலேட்டட் வாழ்த்துக்கள்.

போன் பண்ணி அவனை வாழ்த்தலாம்னா என் கூட பேச ஆரம்பிச்சதும் 'எப்போ வருவ'னு கேட்டு அழ ஆரம்பிச்சுடுவான், அப்புறம் என்னால இங்க இருக்க முடியாது. ஏதாவது இன்டர்வியூவை சாக்கா வச்சு சென்னை போக வேண்டியது வரும். அப்புறம் வேலை ஏதாவது கிடைச்சுடுச்சுன்னா அங்கேயே தங்க வேண்டியது வரும். சக்தியப் பாக்காமலும் இருக்க முடியாது:-(

21 மச்சீஸ் சொல்றாங்க:

ரிஷி (கடைசி பக்கம்) said...

:-))

சோம்பேறி said...

:-))))))))))

நன்றி ரிஷி..

Anonymous said...

:)
Vijay

அறிவிலி said...

அதென்ன ஆதவன் மட்டும்தான் வாழ்த்தனுமா?

ஆல் தி பெஸ்ட் சக்தி குட்டி.

அறிவிலி said...

கொஞ்ச நாளா ஒரே அரசியல் இடுகையா இருக்கவும், கண்டிச்சு "கா" வுடலாம்னு இருந்தேன்.

இப்ப மனச மாத்திக்கிட்டேன்.

சோம்பேறி said...

/*Anonymous said...
:) Vijay*/

:-))) நன்றி விஜய். உங்க ரெண்டு பசங்களுக்கும் என் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்./*அறிவிலி said...
ஆல் தி பெஸ்ட் சக்தி குட்டி.*/

வாழ்த்துக்கு நன்றி அறிவிலி. எக்ஸாம் முடிஞ்சு சக்தி வந்ததும் அவகிட்ட சொல்லிடுறேன்.

இன்னிக்கு கூட திரு.கருணாநிதி உண்ணாவிரதம் இருப்பதைக் கலாய்த்து உண்ணும் விரதம்னு பதிவிடலாம்னு தான் நினைச்சேன். நீங்க சொன்ன மாதிரி ஒரே அரசியல் இடுகையா இருக்கேனு ஒரு சேஞ்சுக்காக இந்தப் பதிவு.

சென்ஷி said...

:-))

//'ஏ.. நீ ரெண்டாப்பு படிச்சியாய்யா.. இப்ப மட்டும் ரெண்டாப்பு படிச்சிருந்த.. செத்துருப்ப.. ரெட்டை ஸ்கேலால முட்டிக்கு முட்டி தட்டிடுவாங்க தெரியுமா.. நல்ல வேளை தப்பிச்ச' அப்படிங்கறா.//

நல்லா எழுதறீங்க!!

சோம்பேறி said...

நன்றி சென்ஷி. உங்க பதிவில் இருக்கும் என் பின்னூட்டத்துக்கு பதில் காணும்.

Anonymous said...

ரொம்ப நன்றி ...விஜய்

சோம்பேறி said...

/*ரொம்ப நன்றி ...விஜய்*/

:-)) Welcome..

Subankan said...

//எப்ப பாத்தாலும் சுட்டி டிவி தான். அவ மட்டும் பாத்தா கூட பரவாயில்ல. அவ கூட சேந்து நானும் 'குதிங்க', 'குள்ள நரி திருடக் கூடாதுனு சொல்லுங்க', 'கோமாளித்தனமா டான்ஸ் ஆடுங்க'னு டோரா சொல்றதையெல்லாம் செய்யனும். இல்லைனா அடுத்த நாள் காலையில வந்து தூங்க விடாம பாடா படுத்துவா.
//

ஆகா அங்கேயுமா??

Same to you சோம்பேறி

SUREஷ் said...

same blood

சோம்பேறி said...

ஆஹா உங்களுக்குமா.. சுபாங்கன் மற்றும் சுரேஷ். இப்போ தான் ரொம்ப சந்தோஷமா இருக்கு.

லோயர் said...

நல்லா எழுத்த்றீங்க்கன்னே ...வாழ்த்துக்கள்

.:: மை ஃபிரண்ட் ::. said...

:-) நல்லா எழுதுறீங்க. :-)

சோம்பேறி said...

/*லோயர் said...
நல்லா எழுத்த்றீங்க்கன்னே ...வாழ்த்துக்கள்*/

வாழ்த்துக்களுக்கு நன்றி அன்புத் தம்பி லோயர்.

/*.:: மை ஃபிரண்ட் ::. said...
:-) நல்லா எழுதுறீங்க. :-)*/

பாராட்டுக்கும், புன்னகைக்கும் மிகவும் நன்றி மை டியர் ஃபிரண்ட்..

நான் ஆதவன் said...

வந்துட்டேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்

குட்டிக்கு வாழ்த்துகள்

நான் ஆதவன் said...

இதாவது பரவாயில்ல..என் அக்கா பொண்ண (நாலு வயசு) "வாடி சாப்பிடலாம்ன்னு" கூப்பிட்டேன். அப்படி கூப்பிட கூடாதாம். "வாங்க நண்பர்களே சாப்பிடலாம்"ன்னு இரண்டு தடவை சொல்லனுமாம் :)

சோம்பேறி said...

ரொம்ப லேட் ஆதவன் நீங்க.. எல்லாரோட வாழ்த்துக்களையும் சக்திகிட்ட சொல்லிட்டு இவங்களுக்கு பதிலுக்கு என்ன சொல்லனு கேட்டேன். அவ 'என்ன சொல்ல?' அப்படினு கேக்குறா..

'அதான் அவங்ககிட்ட என்னனு சொல்லலாம்'னு கேட்டேன். அவ 'அதான் அவங்ககிட்ட என்னனு சொல்லலாம்'?' அப்படினு கேக்குறா.

இது 'கையைப் புடிச்சு இழுத்தியா' வடிவேலு காமெடி மாதிரி போகுதேனு நான் டோர் க்ளோஸ் பண்ணிட்டேன்.

pukalini said...

இழக்கின்றோம்...

Anonymous said...

சக்திக்கு என் வாழ்த்துக்கள்.

//'ஏ.. நீ ரெண்டாப்பு படிச்சியாய்யா.. இப்ப மட்டும் ரெண்டாப்பு படிச்சிருந்த.. செத்துருப்ப.. ரெட்டை ஸ்கேலால முட்டிக்கு முட்டி தட்டிடுவாங்க தெரியுமா.. நல்ல வேளை தப்பிச்ச' அப்படிங்கறா.//

Post a Comment

தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு.

Blog Widget by LinkWithin
 
சோம்பேறி. Design by Pocket