என்னைப் பாத்தா @&$%^ மாதிரி இருக்கா?

Thursday, 23 April 2009

Views

கொலை வெறி என்பார்களே, அதில் எனக்கு விஜயகாந்த் போல கண்ணமெல்லாம் துடிக்க ஆரம்பித்து விட்டது. புரோட்டா குமார் வீட்டில் இருந்ததால், அவன் அம்மா முன் அவனைக் கெட்ட வார்த்தையில் திட்டவோ, கையில் கிடைத்த பொருளால் ஆத்திரம் தீர அடிக்கவோ முடிவில்லை.

மாதவி வீட்டிற்குப் போவதற்கு பொருள் வேண்டும் என்று கண்ணகியிடம் கேட்கப்பட்ட போது, அவளுக்கு கோவலனை வெட்டிப் போட வேண்டும் போல் கொலை வெறி வந்திருந்தாலும், சமூக மதிப்பீடுக்காக பல்லைக் கடித்துக் கொண்டு, புன்னகைத்துக் கொண்டே பணம் எடுத்துக் கொடுத்திருப்பாளே! அது போன்ற புன்னகையுடன், அவனுக்கு மட்டும் தெரியும் படி காறித் துப்பி விட்டு கிளம்பி வந்து விட்டேன்.

என் ஐம்பது ரூபாய் நஷ்டத்தை விளக்க, கண்ணகி அக்காவை வம்புக்கிழுத்தது உங்களுக்கு கொஞ்சம் அதிகப்படியான உருவகமாகத் தான் தோன்றும். ஸ்விஸ் வங்கியில் ஆயிரம் பில்லியன் திருட்டுப் போயிருந்தால், அது உங்களுக்கு ஒரு சுவாரசியமான செய்தி. அதுவே, உங்களுடைய ஆயிரம் ரூபாய் திருட்டுப் போயிருந்தால்..

அவனவனுக்கு அவனவன் கஷ்டம் தான் பெரிது. அதிலும் குறிப்பாக இவன் மீது கொலை வெறி வரக் காரணம், அட்டர் ஃப்ளாப்பான எல்லா பிசினஸுக்குமே இவன் தான் பிள்ளையார் சுழி போட்டவன் என்பதால் மட்டும் அல்ல.

நேற்று வரை நாங்கள் லோடுகளுக்கு பில் போடுவதில்லை என்பதால் மற்றவர்களை விட ஒரு நாளைக்கு குறைந்தது, இரண்டாயிரத்து சொச்சம் லாபம் கிடைக்கும். கைபேசி கட்டணம் மட்டும் மாதம் ஐம்பது ரூபாய் அதிகமாய் வரும். மற்ற படி ஒரு பைசா கூட முதலீடு செய்யத் தேவையில்லை.

இப்போது தேர்தல் நெருங்கி விட்டதால், அரசியல்வாதியான எங்கள் பார்ட்டியை அவர் எதிரிகள் கண் கொத்திப் பாம்பாக நோட்டம் விட்டுக் கொண்டிருக்கிறார்களாம். பில் போடாமல் பொருள் கொடுத்து, ரிஸ்க் எடுக்க முடியாது என்று சொல்லி விட்டார். இதனால் நாளுக்கு இருநூறு ரூபாய் நஷ்டம். டீலர்களும் ட்ரிப்பும் அதிகரிக்க அதிகரிக்க இந்த இருநூறு ரூபாய், முன்னூறு நானூறு என்று அதிகரித்துக் கொண்டே போகுமென்பதால், நால்வர் மொபைலும் ஸ்விட்ச் ஆஃபில் தான் இருக்கிறது.

மற்றவர்களைப் போல் இந்த இரு டீலர்களையும் கைபேசியிலேயே அனானியாக டீல் பண்ணியிருந்தால், இந்த இருநூறு ரூபாய் நஷ்டமும் வந்திருக்காது.

ஒன்னும் புரியலைல்ல. அது தான் எனக்கும் வேணும். ஏன்னா இது கொஞ்சம் இல்லீகல். யார் கிட்டயாவது புலம்பனும் போல இருந்தது. அதனால தான் உங்க கிட்ட மட்டும் சொல்றேன். நீங்க எதையும் மனசுல போட்டு குழப்பிக்காதீங்க. முக்கியமா போலீஸ்ல போட்டுக் குடுத்துடாதீங்க..

இதற்கு முன் நேர்மையாக (போலீஸ் உத்தியோகம் பார்க்கவில்லை) கூரியர் அனுப்பும் கவர் பிசினஸ் தான் செய்து வந்தோம். இதில் அளவுக்கதிக லாபம் கிடைப்பதால் அதை அப்படியே கைவிட்டு விட்டோம். அதில் ஒருவர் எங்களிடம் மொத்தமாக ஐந்தாயிரம் கவர்கள் வாங்கி விட்டு, பணம் நாளை தருகிறேன் என்றே இழுத்தடித்துக் கொண்டிருந்தார்.

நஷ்டத்தை கைக் காசிலிருந்து கொடுப்பதை விட அவரிடம் கொஞ்சம் கறாராகக் கேட்டு வாங்கி வா என்று புரோட்டா குமாரிடம் சொன்ன போது அவன் கூலாக 'அந்தாளு ஊரை விட்டு ஓடிப்போய் மாசக்கணக்குல ஆச்சே. அதான் பீர் இருக்கான்ல' என்றான்.

(பீர் (எ) ரன்பீர் தான் எங்கள் நண்பர் வட்டத்திலேயே வசதியானவன். இவன் தொழில்களுக்கு முதலில் முதல் போடும் இ.வா. அவன் தான். இப்போது என்னை விட கொலை வெறியுடன் பீர், குமாரைத் தேடிக் கொண்டிருக்கிறான். எதற்கு என்பது தேவையில்லாதது தான், என்றாலும் கடைசியில் சொல்கிறேன்.)

பொருப்பில்லாமல் 'பீர் இருக்கான்ல' என்று சொன்ன போது கூட எனக்குக் கொலை வெறி வரவில்லை. இவ்வளவுக்கும் ஊரை விட்டு ஓடிப்போனவன் இந்த செவிட்டு எழவு புரோட்டா குமார் பிடித்த கஸ்டமர் தான். செவிட்டு எழவு என்பது எங்கம்மா அவனுக்கு வைத்த செல்லப் பெயர். காதெல்லாம் ஒழுங்காகத் தான் கேட்கும். வேண்டுமென்றே தப்பு தப்பாக, கேட்ட கேள்விக்கு சம்மந்தமில்லாமல் பதில் சொல்வான் என்பதால் இப்பெயர்.

ஒரு முறை ஒரு குழந்தைக்கு மொட்டை போட்டு காது குத்தும் வைபவத்திற்காக கோவிலுக்கு வந்திருந்த கேட்டியிடம் 'என்ன இந்தப் பக்கம்' என்று கேட்டிருக்கிறான். அவள் 'மொட்டை போட' என்றதும் 'என்னது? புரோட்டா போடவா!' என்று கேட்டிருக்கிறான். (சோக் அடிக்கிறாராமாம்.. இதுக்கு நாங்க சிரிக்கோனுமாமாம்.)

இவனுக்கு செவிட்டு எழவு குமார், கொக்கி குமார், குவாட்டர் குமார், டோங்ரே குமார், மாயக்கா குமார் என ஆயிரத்தெட்டு பெயர்கள் இருந்தாலும் கேட்டி வைத்த காரணத்தால் புரோட்டா குமார் என்ற பெயராலேயே விளிக்கப்பட்டு வருகிறான்.

இன்னும் இரண்டு வருடத்தில், அவன் ஆள் கல்லூரிப் படிப்பை முடிப்பதற்குள் அவன் ஒரு சொந்த வீடு கட்டியாக வேண்டும். 'இல்லையென்றால் டாட்டா காட்டி விட்டுப் போய் விடுவேன்' என்ற கண்டிஷனோடு தான் அவள் அவன் காதலையே ஏற்றாள்.

அதற்காக காளான் வளர்ப்பு, தேன் கூடு வளர்ப்பு முதல் திருட்டு டிவிடி வாடகைக்கு விடுவது, டேட்டா என்ட்ரி வரை அவன் முயற்சிக்காத பிசினஸே இல்லை. முதல் போடுவதற்கு இளிச்சவாயர்கள் நாங்கள் மூவரும் இருக்கும் போது அவனுக்கென்ன?

இது வரை இவன் தொடங்கிய எல்லா பிசினஸுமே பெருங் காமெடியாகத் தான் முடிந்திருக்கிறது. அதிலும் அவன் வளர்த்த தேனீக்கள் அவன் அண்ணியைக் கொட்டி விட, அவர் வரதட்சனைக் கொடுமை என்று காவல் நிலையத்தில் புகார் கொடுக்க, இவனை காவல் நிலையத்தில் பப்பி ஷேமாக குந்த வைத்து கும்மி விட்டார்கள்.

அதிசயமாக இப்போது செய்து கொண்டிருக்கும் பிசினஸ் தான் நன்றாகப் போய்க் கொண்டிருந்தது. இது இல்லீகல் என்று சில நாட்களுக்கு முன்பு தான் தெரிந்தது. நிறைய பணம் பார்த்து பழகி விட்டதால் 'நான் ஒருவன் திருந்தி விட்டால் இந்தியா முன்னேறி விடுமா?' என்ற டிபிகல் சமாதானத்துடன் தொடர்ந்து கொண்டிருக்கிறேன்.

இதையே வேறு யாராவது செய்வது தெரிந்திருந்தால், 'சீ.. சோத்தையா தின்றானுங்க இவனுங்க' என்ற தலைப்பில் அவர்களைப் பற்றி இதே வலைப்பூவில் எழுதியிருக்கக் கூடும். (அரசியல்வாதியாக இருக்கும் எங்கள் பார்ட்டியின் கட்சி தேர்தலில் வென்று விட்டால் தங்கம், வைரம் என்று பெரிய அளவில் ஸ்மக்லிங் செய்யலாம் என்று சொல்லியிருக்கிறார்)

புரோட்டா குமாருக்கு சினிமா பித்து அதிகம். நண்பர்கள் யாரிடமாவது தொலைபேசினால் அழைப்பை ஏற்றதும் ஹலோ என்று சொல்ல மாட்டான். சமீபத்தில் பார்த்த சினிமாவின் பன்ச் டையலாகை தான் சொல்வான். சிவாஜி வந்த புதிதில்,

யாரோ: ஹலோ

குமார்: கூல்

யாரோ: எப்படி இருக்க?

குமார்: கூல்

யாரோ: எங்கடா இருக்க?

குமார்: கூல்

ரெண்டு கெட்ட வார்த்தையில் திட்டும் வரை இதே கூல் தான் ரிப்பீட் ஆகிக் கொண்டிருக்கும்.

நேற்று குமார் பீரின் கைபேசிக்கு அழைத்திருக்கிறான். பீருடைய மொபைலின் கெட்ட நேரத்துக்கு குமார் அருந்ததியா பார்த்திருக்க வேண்டும். அவன் அம்மா காதில் மொபைலை வைத்தது தான் தாமதம், 'அடியேஏஏஏஏஏஏஏய் அருந்ததி' என்று குமார் பிளிறிய பிளிறில் மொபைலை எங்கே எறிந்தார்கள் என்றே தெரியவில்லை. தேடி எடுக்கும் போது பீஸ் பீஸாகி இருந்திருக்கிறது. மவனே அவன் வரட்டும் என்று கருவிக் கொண்டிருக்கிறான்.

கதை முடியப் போகுது.. கொலை வெறி எதுக்குனு இன்னும் சொல்லலையே! இந்த குமார் நாதாரி தியேட்டர் கட்டப் போறானாம். அதுக்கு நான் பணம் தரனுமாம்.. என்னைப் பாத்தா ____ ____ மாதிரி இருக்கா?

14 மச்சீஸ் சொல்றாங்க:

Anonymous said...

Anonymous said...

//கொலை வெறி எதுக்குனு இன்னும் சொல்லலையே! இந்த குமார் நாதாரி தியேட்டர் கட்டப் போறானாம். அதுக்கு நான் பணம் நொட்டனுமாம். என்னைப் பாத்தா ____ ____ மாதிரி இருக்கா? //
அது உங்கள பார்த்த தன் தெரீயும்--விஜய்
போட்டோ அட்டச் பன்னுங்க பாஸ்...

♫சோம்பேறி♫ said...

அட.. அது உங்களைப் பாத்து கேக்கல விஜய். அந்த குமாரைப் பார்த்து கேட்டேன்.

Anonymous said...

ஒ அப்படியா ...அப்ப சரி .....
குமார் பாவ்ம்
விஜய்

நிகழ்காலத்தில்... said...

\\(புள்ளி விவரங்கள் பிடிக்காதவர்கள் இந்த பாராவை ஸ்கிப் செய்து விடவும்) வழக்கமாக நாங்கள் லோடுகளுக்கு பில் போடுவதில்லை. இதனால் மற்றவர்களை விட, ஒரு மூடைக்கு 24 ரூபாய் வீதம் ஒரு லோடுக்கு 672 ரூபாய் லாபம் கிடைக்கும். ஒரு ட்ரிப்புக்கு 672 என்றால் ஒரு நாளைக்கு குறைந்தது, இரண்டாயிரத்து சொச்சம். நான்கு பார்ட்னர்களும்(நான், குமார், அபி, பீர்) ஆளுக்கு ஐநூறு பிரித்து எடுத்துக் கொள்வோம். கைபேசி கட்டணம் மட்டும் மாதம் ஐம்பது ரூபாய் அதிகமாய் வரும். மற்ற படி ஒரு பைசா கூட முதலீடு செய்யத் தேவையில்லை.\\

வருமானவரி அலுவலகத்தில் இருந்து வர்றோம்.
இப்படி தன் வாயேலேயே எல்லாத்தையும் சொல்ற
நீ(ங்க) எவ்வளவு நல்லவன். எடு எல்லாத்தையும்.!

♫சோம்பேறி♫ said...

ஆஹா.. தெய்வமே! நீங்க நல்லா இருப்பீங்க.. ஒரு வளரும் தொழிலதிபரை முடக்கிடாதீங்க..

('புள்ளி விவரங்கள் பிடிக்காதவர்கள்' இந்த பாராவை ஸ்கிப் செய்து விடவும் அப்படினு சொல்றதுக்கு பதில் 'வருமானவரி அலுவலர்கள்'னு சொல்லி இருக்கனுமோ? தப்பு பண்ணிட்டேனே! தப்பு பண்ணிட்டேனே!)

Bharathiselvan said...

eppadi than evlavu thairiyamo...theriyalai....
nenga kalakuinga........

appuram oru vishayam.....
nanum kavithai elutha arambichutean..
vanthu paruinko.....
http://mannaibharathi.blogspot.com

♫சோம்பேறி♫ said...

/*eppadi than evlavu thairiyamo...theriyalai.... nenga kalakuinga.....*/

தைரியமெல்லாம் இருந்தா ஏன் அனுபவம் அப்படிங்கற லேபிலை சிறுகதைனு மாத்தறேன்.

/*appuram oru vishayam.....
nanum kavithai elutha arambichutean..
vanthu paruinko.....*/

கவிதைக்காக வலைப்பூ ஆரம்பித்தமைக்கு வாழ்த்துக்கள். நிச்சயம் வருகிறேன்.

asp.laxi said...

my dad sent me this link days ago...dunno y i was procrastinating but bet this is the most hilarious thing i have read for the week....i can't stop thinkn and laughn about the arundati thingy :)

keep writing..am gonna read the rest of ur blog.

♫சோம்பேறி♫ said...

First of all my hearty thanks to your dad for introducing my blog to you.

Thanks for your procrastination, as it made you to comment today, where no one is here(just kidding)

Thanks a lot for your encouragement.

மனுநீதி said...

ரொம்ப வித்தியாசமான நடையிலே எழுதுறீங்க . நல்லா இருக்கு.

அப்புறம் அந்த சங்கிலி தொடர் தொடருமா இல்ல அவளோ தானா?

♫சோம்பேறி♫ said...

உள்ளத்திலிருந்து நன்றி மனுநீதி.

சங்கிலி தொடர் நிச்சயம் தொடரும். இதைக் கூட அதன் தொடர்ச்சியாகத் தான் எழுத ஆரம்பித்தேன். சொல்ல வந்ததிலிருந்து அதிகம் டைவர்ட் ஆகி விட்டதால் சிறுகதையாகி விட்டது.

http://urupudaathathu.blogspot.com/ said...

ரொம்ப சின்ன கதையா இருக்கே???

( அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்)

♫சோம்பேறி♫ said...

குடுத்த காசுக்கு மேல கூவிட்டேனோ? ஆமா.. அணிமா நீங்க முழுசா படிச்சீங்களா இல்லையா?

விக்னேஷ்வரி said...

வயிறு வலிக்க சிரிக்க வச்சிட்டீங்க.

Post a Comment

தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு.

Blog Widget by LinkWithin
 
சோம்பேறி. Design by Pocket