IPLலில் மொள்ளமாரித்தனம் - ஒரு டெம்ப்ளேட் இடுகை

Saturday 16 May 2009

Views

நான் கிரிக்கெட்டே பாக்குறது இல்லைங்க. எனக்கு புடிக்காது. ஏன்னா எனக்குப் புரியாது. இப்போ சியர் கேர்ல்ஸ் வர்றதுனாலயும், ஷாருக்கான் ஏதோ காமெடி பண்றாருனு முரளிகண்ணன் சொல்றதாலயும், ப்ரீத்தி ஜிந்தா எல்லாருக்கும் கட்டிப்புடி வைத்தியம் பண்றாங்கனு கேள்விப்பட்டதாலயும் ஒரே ஒரு நாள் பாத்தேன்.

எது இண்டியன் டீம், எது அமெரிக்கன் டீம்னு கூட எனக்கு கண்டுபுடிக்க தெரியல. நான் பரவாயில்ல.. என் கூட குப்ப கொட்டுற பிரகஸ்பதிங்களுக்கு எது ஸ்டெம்ப், எது பேட்னு கூட தெரியல. ஆனாலும் நாங்க கண்டுபுடிச்ச சில உண்மைகளை உங்க முன்னால போட்டு உடைக்கிறதுனு முடிவு பண்ணிட்டேன்.

மொள்ளமாரித்தனங்கள்:

1) கைல ball வச்சுகிட்டே No ballனு சொல்றாங்க

2) Overனு சொல்லிட்டு ஓவர் மேல ஓவரா போட்டுகிட்டே இருக்காங்க

3) All outனு சொன்னாங்க. ஆனா பத்து பேரு தான் அவுட் ஆனாங்க.

4) ஒரு ஓவருக்கு ஆறு பந்துனு சொன்னாங்க. ஆனா ஒரே பந்தை தான் வச்சிருந்தாங்க. (ஸ்பான்ஸர்ஸ் கவனிக்க)

5) ஒரு பேட்ஸ் மேன் அவுட்னா அம்பயர் ஒரு கையைத் தூக்குறாங்க. அப்போ ரெண்டு கையை தூக்கினா ரெண்டு பேட்ஸ் மேனும் அவுட் தான? ஆனா சிக்ஸ்னு சொல்றாங்க.

உங்களுக்கும் எங்களைப் போல ரத்தமெல்லாம் கொதிக்குதா? நானும் என்னோட நண்பர்களும் ரெண்டு அங்குல நீளத்துல ஒரு பேட் வாங்கி வச்சிருக்கோம். அதுல எங்க ஊர் நாட்டாமை உட்பட எல்லாரும் கையெழுத்து போட்டு வச்சிருக்கோம்.

நீங்களும் இந்த வேள்வியில் பங்கெடுக்க விரும்பினா வந்து கையெழுத்து போடலாம். ஸ்ரீவி வரைக்கும் வரமுடியாதேனு வருத்தப்படுறவங்க, பின்னூட்டத்துல உங்க பேரை வடை அல்லது அடைமொழியோட சொல்லிட்டு போங்க. உங்க கையெழுத்தை நானே போட்டுடுறேன்.

பின் குறிப்பு: இன்னிக்கு டெம்ப்ளேட் மாத்தினேன். அதை சோதனை பண்றதுக்காக, எனக்கு வந்த கைபேசி குறுஞ்செய்தியை கொஞ்சம் ஆல்டர் பண்ணி போட்ட டெம்ப்ளேட் இடுகை இது. நீங்க சீரியஸா எதையாவது எதிர்பார்த்து வந்திருந்தா ஐ ஆம் ஜோ ஜாரி.

20 மச்சீஸ் சொல்றாங்க:

சென்ஷி said...

:)

SUREஷ் said...

இருக்கும் ஆனா இருக்காது...,

டெஸ்ட் மேட்சை வைச்சும் டெஸ்ட் போடலாம் டி20 வச்சும் டெஸ்ட் போடலாம்..,

KRICONS said...

இந்த டெம்பிளேட் நல்லா இருக்கும்... ஆனா தேதி மாதம் வர வேண்டிய இடத்தில undefined தான் வரும். தேதி செட்டிங்கை மாற்றி பார்க்கவும் சரி வர வில்லை என்றால் டெம்பிளேடை மாற்றவும்...

அப்படியே நம்ம கையெழுத்தையும் சேர்த்துக்கோங்க...

Muralidharan said...

mudiyala

விஷ்ணு. said...

டெம்பிளேட் நல்லாயிருக்கு

pappu said...

eppatingka idelam. வீட்டில சும்மா இருக்கீங்களா? ஒரு வேலை பாக்குறதாலதானோ?

Kanna said...

ரசித்தேன்...

எல்லாவற்றையும் விட உங்கள் லோகோ மொழியை மிக ரசித்தேன்

//ஏன் இன்றைய பணிகளை நாளை செய்ய வேண்டும்? நாளை மறுநாள் இருக்கும் போது:-) //

:))

நெல்லைத்தமிழ் said...

ஒரு பேட்ஸ் மேன் அவுட்னா அம்பயர் ஒரு கையைத் தூக்குறாங்க. அப்போ ரெண்டு கையை தூக்கினா ரெண்டு பேட்ஸ் மேனும் அவுட் தான? ஆனா சிக்ஸ்னு சொல்றாங்க.


உங்களுக்கு கிரிக்கெட் தெரியாதாக்கும்..

♫சோம்பேறி♫ said...

/*சென்ஷி said... :)*/

ஒத்துக்குறேன் சென்ஷி. நீங்க பிரபல பதிவர்னு ஒத்துக்குறேன்.

/*SUREஷ் said...
டெஸ்ட் மேட்சை வைச்சும் டெஸ்ட் போடலாம் டி20 வச்சும் டெஸ்ட் போடலாம்..,*/

என்னத்தங்க SUREஷ்..

டெஸ்ட்னு சொல்றாங்க. ஆனா யாருமே உக்காந்து எழுதாம அங்கிட்டும் இங்கிட்டும் ஓடிகிட்டிருக்காங்க. டி20னு சொல்றாங்க. ஒரு டீ கூட குடிக்க மாட்டெங்கறாங்க. யாருக்கும் குடுக்கவும் மாட்டேங்கறாங்க. அநியாயம்.

/*KRICONS said...
இந்த டெம்பிளேட் நல்லா இருக்கும்... ஆனா தேதி மாதம் வர வேண்டிய இடத்தில undefined தான் வரும். தேதி செட்டிங்கை மாற்றி பார்க்கவும் சரி வர வில்லை என்றால் டெம்பிளேடை மாற்றவும்...
அப்படியே நம்ம கையெழுத்தையும் சேர்த்துக்கோங்க...*/

கையெழுத்துக்கு ரொம்ப நன்றிங்க. எல்லா தேதி ஆப்ஷனையும் ட்ரை பண்ணி பார்த்தேன். வேலை செய்யல:-(


/*Muralidharan said...
mudiyala*/

மீ டூ முரளிதரன். அநியாத்தைத் தாங்க முடியல.

/*விஷ்ணு. said...
டெம்பிளேட் நல்லாயிருக்கு*/

நன்றி விஷ்ணு. டெம்பிளேட் மட்டும் தான் நல்லாயிருக்கு என்று சொல்லாததற்கு:-)


/*pappu said...
eppatingka idelam. வீட்டில சும்மா இருக்கீங்களா? ஒரு வேலை பாக்குறதாலதானோ?*/

இதுவே பெரிய வேலை தானேங்க பப்பு.


/*Kanna said...
எல்லாவற்றையும் விட உங்கள் லோகோ மொழியை மிக ரசித்தேன் :))

நன்றிங்க கண்ணா.. இன்னிக்கே பின்னூட்டினதுக்கு ஸ்பெஷல் நன்றி.*/


/*நெல்லைத்தமிழ் said...
உங்களுக்கு கிரிக்கெட் தெரியாதாக்கும்..*/

சீட்டுக்கட்டு தெரியும், புத்தூர் கட்டு தெரியும்.. ஏன் அணைக்கட்டு கூட தெரியும்ம். கிரிக்கட்டுனா என்னங்க?

மதுவதனன் மௌ. said...

டெம்லேற் நல்லாருக்கு. ஆனா திகதியை கொஞ்சம் கவனியுங்கோ..

பனையூரான் said...

சொல்லிவேலை இல்லை நல்லா இருக்கு

♫சோம்பேறி♫ said...

/*மதுவதனன் மௌ. said...
டெம்லேற் நல்லாருக்கு. ஆனா திகதியை கொஞ்சம் கவனியுங்கோ..*/


நன்றி மதுவதனன். திகதியை மறுபடியும் சரி செய்ய முயற்சி செய்து பார்க்கிறேன்.

/*பனையூரான் said...
சொல்லிவேலை இல்லை நல்லா இருக்கு*/

நன்றிங்க பனையூரான். இனிமே சொல்லிட்டா போச்சு.

KATHIR = RAY said...

kooru ketta kuppa

♫சோம்பேறி♫ said...

ஹி. ஹி.. நன்றிங்க கூறு நிறைஞ்ச சுப்பரே! என் கேள்விக்கு பதில்கள் இருக்கா?

மின்னுது மின்னல் said...

ஒத்துக்குறேன் சென்ஷி. நீங்க பிரபல பதிவர்னு ஒத்துக்குறேன்.
//


:)
:)

♫சோம்பேறி♫ said...

ஓகே ஓகே ஓகே மின்னல். நீங்க தான் இணைய சூப்பர் ஸ்டார். போதுமா?

Vijay Anand said...

// தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு. //

நேரிய பேர் திட்டி திட்டி , இந்த திருகுரல் போட்டிஇங்கல....

டெம்ப்ளேட் சூப்பர்...

Vijay Anand said...
This comment has been removed by the author.
♫சோம்பேறி♫ said...

சே.. சே.. இல்ல அந்த குறளை நான் எனக்கு சொல்லிக்கிட்டேன். டெம்ப்ளேட் எனக்கும் ரொம்ப பிடிச்சிருக்கு விஜய்.

D.R.Ashok said...

செம்ம ஜொக்குப்பா... comments சேத்துதான்

Post a Comment

தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு.

Blog Widget by LinkWithin
 
சோம்பேறி. Design by Pocket