அதிஷாவின் வலைப்பூவை படிப்பது எப்படி?

Wednesday, 29 April 2009

Views

முன் குறிப்பு: யார் மனமாவது புண்பட்டதாக அறியப்படும் பட்சத்தில் இந்த இடுகை அழிக்கப்படும்.

அதிஷாவின்(பெயர் மாற்றப்பட்டுள்ளது) செம ஹாட் மச்சி, இன்பக் கதைகள் இன்ஃபினிட்டி(இந்தப் பெயர்களும் மாற்றப்பட்டுள்ளது) மாதிரி இடுகைகள் என்றாலே அனைவருக்கும் உள்ளுக்குள் அலாதி பிரியம்.

(இன்பக்கதைகள் இன்ஃபினிட்டி என்றால் என்னவென்றோ, அதிஷா என்றால் த்ரிஷாவின் தங்கச்சியா என்றோ நீங்கள் கேட்டால் இந்த பதிவு உங்களுக்கல்ல. உட்கார்ந்த இடத்திலேயே ஓட முடியாவிட்டாலும் பொடி நடையாக நடந்தாவது போய் விடுங்கள்)

என்னதான் அப்படிப்பட்ட பதிவுகளின் மேல் ஆசை இருக்கும் அளவுக்கு அதை படிப்பதற்கோ, அது போல் எழுதுவதற்கோ தைரியம் இருப்பதில்லை. ஸேம் ப்ளட் என்று சொல்லும் பட்சத்தில் இது உங்களுக்கு ஏற்ற பதிவுதான்.

யாம் பெற்ற இன்பக்கதைகள் பெறுக இவ்வையகம்.

* உங்கள் வீட்டிலோ அலுவலகத்திலோ உள்ளதிலேயே இருட்டான ஈசான மூலையைத் தேடிப் பிடித்து போய் அமர்ந்து கொள்ளுங்கள். உங்களிடம் மடிக்கணினி இருந்தால் பாத்ரூமில் போய் அமர்ந்து கொள்ளலாம். இது ஒரு பாதுகாப்பு யுக்தி அல்லது ராஜதந்திரம்.

* சோம்பேறி போன்ற அப்புரானிப் பதிவர்களின் தல புராணம், ஜல புராணம் போன்ற இடுகைகளைப் படிப்பது போல் பாசாங்கு செய்து கொண்டிருக்கவும். யாரும் உங்கள் பக்கத்திலேயே வரமாட்டார்கள். இது தான் சமயம். கப்பென
அதிஷா ஆன்லைனை திறந்து விடவும். (தொழில்முறை போட்டி காரணமாகவும், இதைப் படித்து முடிக்கும் முன் அங்கு ஓடி விடக் கூடாது என்பதற்காகவும் முகவரி தவறாகக் கொடுக்கப்பட்டுள்ளது)

* எப்படியோ உங்களை வலைப்பூவுக்குள் அழைத்து சென்றாகிவிட்டது. அடுத்த கட்டம் கொஞ்சம் டெக்னிக்கலாக இருப்பது போல் தோன்றினாலும், முக்கியமான கட்டம்.

சின்னப்புள்ளைத்தனமாக ஆன்லைனிலேயே படிக்கக் கூடாது. Save as போட்டு HTML file ஆக்கிக் கொள்ள வேண்டும். இப்போது bit_files, bit.html என்று இரண்டு ஃபைல்கள் உங்கள் கணினியில் இருக்கும். அதில் bit_filesஸில் நுழைந்து எடக்கு மடக்கான புகைப்படங்களை டெலிட்டி விடவும்.

அந்தப் படங்களுக்காகத் தான் அந்த வலைப்பூவிற்கே செல்கிறீர்கள் என்றால், அந்தப் படங்களை கட் செய்து, யாரும் சீண்டாத program files, E books போன்ற பகுதிகளுக்குள் மறைத்து வைத்துக் கொள்ளவும்.

அந்த புகைப்படத்தில் ஷகிலாவோ, சில்க் ஸ்மிதாவோ அல்லது நான்கு இன்ச்சுக்கும் குறைவாக பப்பரப்பா என்று உடுத்திக் கொண்டு பாப்பாக்களோ இருந்தால் வெற்றி உங்களுக்கே..! பல பிட்டுகள் உத்திரவாதம்.

* இப்போது படங்கள் எதுவும் இல்லாத அந்தப் பக்கங்களை எவ்வளவு சின்னதாக்க முடியுமோ அவ்வளவு சின்னதாக்கி ப்ரிண்ட் அவுட்(மினி ஜெராக்ஸ்) எடுத்துக் கொள்ளவும். (அந்தப் பக்கங்களைப் படிக்க பூதக் கண்ணாடி உங்கள் சொந்த செலவில் தான் வாங்கிக் கொள்ள வேண்டும். சர்வ நிச்சயமாக கம்பெனியிலிருந்து தரப்பட மாட்டாது)

* ப்ரிண்ட் அவுட் எடுத்த பக்கங்களை உங்கள் மினரல் வாட்டர் பாட்டிலில் சூயிங்கம் ஒட்டியோ, டோப்பாவுக்குளோ, ஷூ ஹீல்ஸுக்குள்ளோ அயன் பட சூர்யா போல மறைத்து வைத்துக் கொள்ளவும். முடிந்தால் ஒரு பத்து உலக பட டிவிடிக்கள் வாங்கி புதிதாக முயற்சிக்கவும். (கம்பெனியே அபராதத்தில் தான் ஓடிக்கொண்டிருக்கிறது என்பதால், டிவிடிக்கள் கம்பெனியிலிருந்து தரப்பட மாட்டாது)

* ஆற அமர அமர்ந்து கொண்டு ஒரு நீண்ட நெடிய பெருமூச்சு விட்டுக்கொள்ளவும்(சம்பிரதாயமாமாம்). மூச்சு விடாவிட்டால் கணினியில் இருந்து ஒரு கை வந்து உங்கள் பொடனியில் தட்டி மூச்சுவிட சொன்னாலும் சொல்லும்.

* இப்போது தேர்வெழுதும் போது பிட் அடிக்கும் லாவகத்துடன், யாராவது பார்க்கிறார்களா என்று கவனித்துக் கொண்டே கேப் கிடைக்கும் போதெல்லாம், ப்ரிண்ட் அவுட் எடுக்கப்பட்ட தாள்களை சரக் சரக்கென்று உருவி படிக்கவும். (இதற்குப் பெயர் தான் பிட் இடுகையோ!)

* ஸ்ஸ்ஸ்ஸப்பாடா ஒருவழியா படிக்க ஆரம்பிச்சாச்சா! பின்னூட்டங்கள் ஆரம்பிக்கும் முன்னால் அதாவது தலைப்பு துவங்கி சரியாக இரண்டு வரிகளுக்குள் நிச்சயம் ஒரு மிக நீண்ட பிட்டு கட்டாயம் இடம் பெறும். (ஒருவேளை பதிவு ஏமாற்றினாலும், பின்னூட்டத்தில் நிச்சயம் ஒரு துண்டு பிட்டாவது தேறும்.)

* பதிவை முழுமையாக படித்தபின் மறுபடியும் அதிஷா ஆன்லைனைத் திறந்து, அதில் 'இதெல்லாம் ஒரு பொழப்பா! தூ.. வந்துட்டானுங்க' என்று பின்னூட்டி விட்டு, அது குறித்து இந்து பொந்து ஆயாவூட்டு சந்து என எதில் வேண்டுமானாலும் எழுதி நீங்கள் தல புராணம் எழுதியதன் மூலம் இழந்த ஹிட்ஸை மீட்கலாம்.

அல்லது அதே பதிவை கதாபாத்திரங்களின் பெயர், ஊர் மட்டும் கொஞ்சம் ஆல்டர் செய்து, கிட்டத் தட்ட அதே தலைப்பில் பதிவிட்டு சூடான இடுகைக்கும் போகலாம்.

* இப்படி ஒரு வழியாக பிட்டு இடுகையை சே அதிஷாவின் இன்பக் கதைகள் இன்ஃபினிட்டி இடுகைகளைப் படித்து முடித்ததும் பரங்கிமலை ஜோதி ஆண்டவரை வணங்கி, வயிறு நிறைய பட்டை சாராயத்தைப் போட்டுக் கொண்டு பேசாமல் தனியாகப் படுத்து உறங்கவும்.

ஜோதி ஆண்டவரின் அருள் உங்களுக்கு சொந்தமாகுமாகிறதோ இல்லையோ, உங்களுக்கு பல நல்ல விஷயங்களைக் கற்றுக் கொடுத்த புண்ணியத்துக்கு எனக்கு நிச்சயம் கிடைக்கும்.

****************

பின் குறிப்பு அல்லது எச்சரிக்கை: உங்கள் நண்பர்கள் யாராவது இன்பக் கதைகள் இன்ஃபினிட்டி படிக்கிறார்களா என்று கேட்டுப் பார்க்கவும். அவர் பதில் சொல்லாமல் உங்களைப் பார்த்து வழிசலாக சிரித்தால் திருப்பி சிரித்து விடாதீர்கள். மீறி சிரித்தால் வரும் பின்விளைவுகளுக்கு கம்பெனி பொறுப்பாகாது.

*****************

இந்த பதிவுக்கு கிடைக்கும் வரவேற்ப்பை பொறுத்து அடுத்ததாக அதஷா போல எழுதுவது எப்படி என்றொரு பதிவும் இடலாம் என்கிற எண்ணமும் உண்டு.

****************

36 மச்சீஸ் சொல்றாங்க:

SUREஷ்(பழனியிலிருந்து) said...

நல்லவேளை உதவி செய்தீர்கள்.

♫சோம்பேறி♫ said...

எல்லாம் யாம் பெற்ற இன்பக்கதைகள் பெறுக இவ்வையகம் என்ற உயர்ந்த எண்ணம் தான்.

Suresh said...

ha a haa nalla sirithaen, atutha pathivu sikirama podunga

Suresh said...

avaru appadi padam podura nalae antha pakkam poga mudiayal karanam nanbargal enna da scene pakuriyanu solita .. apprum thaniya irukum pothu parkalame nu neenga sollalam, thaniya irukum pothu athae ithuku parkanam ;)

Suresh said...

unga mini xerox college la bit niyabagam vanthuduchu ada adhisa bit illama ;) paritcha bit

Suresh said...

//யாரும் சீண்டாத program files, E books போன்ற பகுதிகளுக்குள் மறைத்து வைத்துக் கொள்ளவும்.//

நாங்க எல்லாம் system ;) endra folder kula poduvom po

♫சோம்பேறி♫ said...

சிரிப்புக்கு நன்றி சுரெஷ்.

என் பேரையும் வலைப்பூ கேப்ஷனையும் பார்த்த பிறகும் அடுத்த பதிவை சீக்கிரம் போடுங்கனு சொல்றீங்களே! இன்னுமா இந்த உலகம் என்னை நம்பி கிட்டு இருக்கு.

Suresh said...

nalla humours i am following ur blog from now

Suresh said...

//என் பேரையும் வலைப்பூ கேப்ஷனையும் பார்த்த பிறகும் அடுத்த பதிவை சீக்கிரம் போடுங்கனு சொல்றீங்களே! இன்னுமா இந்த உலகம் என்னை நம்பி கிட்டு இருக்கு.//

haa haa ennana nanum ungala mathiri naalai marunal neenga potta athai naalai marulauku marunal vanthu padikum maga sombari so time lag correct than irukum ;) nanba

♫சோம்பேறி♫ said...

முடியல Suresh. தமிழ்ல டைப் பண்ணக் கூடாதா?

☀நான் ஆதவன்☀ said...

//முன் குறிப்பு: யார் மனமாவது புண்பட்டதாக அறியப்படும் பட்சத்தில் இந்த இடுகை அழிக்கப்படும்..//

ஆரம்பமே செம காமெடி...படிச்சுட்டு மூணு மணி நேரம் மூக்கு வலிக்க சிரிச்சேன்..

(மூணு-மூக்கு ஒரு கோர்வைக்காக சேர்க்க பட்டது..உள்குத்து எதுவும் இல்லை)

☀நான் ஆதவன்☀ said...

//என்னதான் அப்படிப்பட்ட பதிவுகளின் மேல் ஆசை இருக்கும் அளவுக்கு அதை படிப்பதற்கோ, அது போல் எழுதுவதற்கோ தைரியம் இருப்பதில்லை. //

மதுரையில இருந்துட்டு நீங்களே இப்படி சொன்னா எப்படி???? வெளிச்சத்த கொடுக்குற சூரியனே இருட்டாயிட்டா என்ன செய்யிறது?????

வேத்தியன் said...

ஆஹா...

சோம்பேறின்னு பேர வச்சுட்டு இப்பிடி கலக்கலா போஸ்ட் பண்ணுறியளே...

சூப்பர் மச்சி...

Vijay Anand said...

நல்ல அட்வைஸ் ...விஜய்

♫சோம்பேறி♫ said...

/*நான் ஆதவன் said...
ஆரம்பமே செம காமெடி...படிச்சுட்டு மூணு மணி நேரம் மூக்கு வலிக்க சிரிச்சேன்..*/

அட.. சீரியஸா தான் ஆதவன் சொல்றேன்.

/*வெளிச்சத்த கொடுக்குற சூரியனே இருட்டாயிட்டா என்ன செய்யிறது?????*/

பதிவோட கடைசியைப் படிச்ச பிறகுமா இப்படி சொல்றீங்க?

/*வேத்தியன் said...
சோம்பேறின்னு பேர வச்சுட்டு இப்பிடி கலக்கலா போஸ்ட் பண்ணுறியளே...
சூப்பர் மச்சி...*/

ரொம்ப நன்றி மச்சி.

சென்ஷி said...

:))

ஒண்ணும் சொல்றதுக்கில்ல...

♫சோம்பேறி♫ said...

மிகவும் நன்றி விஜய். கண்டிப்பா ஃபாலோ பண்ணுங்க.. நோ காப்பி ரைட்ஸ் ப்ராப்ளம் (உங்களை கூகுள் ஐடியோட வர வைக்கிறதுக்கு என்னவெல்லாம் செய்ய வேண்டியிருக்கு)

♫சோம்பேறி♫ said...

ஏன் சென்ஷி??????????????????? ஏன்.. ஏன்.. ஏன்.. Anyway புன்னகைக்கு நன்றி.

Vijay Anand said...
This comment has been removed by the author.
Vijay Anand said...

//(உங்களை கூகுள் ஐடியோட வர வைக்கிறதுக்கு என்னவெல்லாம் செய்ய வேண்டியிருக்கு) //
நானும் சோம்பேறி தான்...

♫சோம்பேறி♫ said...

இன்னிக்கு ஒரே ஒரு நாள் மட்டும் தான் விஜய். நாளையில இருந்து அனானிமஸ் ஆப்ஷன் enable பண்ணிடுவேன்.

தீப்பெட்டி said...

கலக்கிட்ட போ.....

♫சோம்பேறி♫ said...

/*தீப்பெட்டி said... கலக்கிட்ட போ.....

♠புதுவை சிவா♠ said... very nice */

நெசமாத் தான் சொல்றீங்களா..

நன்றி தீப்பெட்டி..

Thanks ♠புதுவை சிவா♠..

Senthil said...

nallathan eluthareenga

பரிசல்காரன் said...

அருமையான பதிவு நண்பா. நல்ல கற்பனை.

http://urupudaathathu.blogspot.com/ said...

ஹா ஹா...

கற்பனை அருமை...

♫சோம்பேறி♫ said...

/*Senthil said...
nallathan eluthareenga*/


மிகவும் நன்றி செந்தில். (நல்லா பின்னூட்டுறீங்க)

/*பரிசல்காரன் said...
அருமையான பதிவு நண்பா. நல்ல கற்பனை.*/


நன்றி பரிசல். நான் வான்ட்டடாக அடல்ட் பதிவு எழுதினாலும், கற்பனை என்று சொல்லி என்னை எலிமென்ட்ரி லிஸ்டில் சேர்க்கிறீர்களே!

யாராவது அனுபவமானு கேளுங்களேம்பா..

/*உருப்புடாதது_அணிமா said... கற்பனை அருமை...*/

யூ டூ அணிமா..

அய்யா நம்புங்க.. நானும் அடல்ட் தான். நானும் அடல்ட் தான்.

Anonymous said...

Sema Nakkal Naina...
Kaalaila thaan athishavoda antha! pathiva padichen...

♫சோம்பேறி♫ said...

டேங்க்ஸ் நைனா..

ஆனாலும் டூ லேட் Sriram நீங்க. சோம்பேறி, நானே அவரு பப்லிஷ் பண்ணும் முந்தியே 'அந்த' பதிவைப் படிச்சுட்டேன்.

Subankan said...

//அல்லது அதே பதிவை கதாபாத்திரங்களின் பெயர், ஊர் மட்டும் கொஞ்சம் ஆல்டர் செய்து, கிட்டத் தட்ட அதே தலைப்பில் பதிவிட்டு சூடான இடுகைக்கும் போகலாம்.//

அதுதானா இது?

//இந்த பதிவுக்கு கிடைக்கும் வரவேற்ப்பை பொறுத்து அடுத்ததாக அதஷா போல எழுதுவது எப்படி என்றொரு பதிவும் இடலாம் என்கிற எண்ணமும் உண்டு.//

இதுக்கு மேல தனியா வேற எழுதணுமா?

//அந்தப் படங்களுக்காகத் தான் அந்த வலைப்பூவிற்கே செல்கிறீர்கள் என்றால், அந்தப் படங்களை கட் செய்து, யாரும் சீண்டாத program files, E books போன்ற பகுதிகளுக்குள் மறைத்து வைத்துக் கொள்ளவும்.//

இதாலதானோ கம்பனி Computer எல்லாம் C Drive full என்று காட்டுது?

வால்பையன் said...

நல்லாருக்குங்க!

தொடர்ந்தால் மகிழ்வேன்!

அறிவிலி said...

//முடியல Suresh. தமிழ்ல டைப் பண்ணக் கூடாதா?//

ஐயையோ....

அறிவிலி said...

இடுகை ஜூப்பரு

♫சோம்பேறி♫ said...

/*Subankan said...
இதுக்கு மேல தனியா வேற எழுதணுமா?
இதாலதானோ கம்பனி Computer எல்லாம் C Drive full என்று காட்டுது?*/

ஆமாங்க.. ஆமா.. (அப்பாடா.. நீங்களாவது என்னை அடல்ட்னு ஒத்துக்கிட்டீங்களே! ரொம்ம்ம்ப நன்றி சுபாங்கன்)


/*வால்பையன் said...
நல்லாருக்குங்க! தொடர்ந்தால் மகிழ்வேன்!*/

நன்றிங்க வால். தொடர்வேன்னு புருடா விடுறதெல்லாம் தேர்தல் வாக்குறுதி போல. நானும் ஞாபகம் வச்சுக்க மாட்டேன். நீங்களும் ஞாபகம் வச்சுக்கக் கூடாது.


/*அறிவிலி said... இடுகை ஜூப்பரு*/

டேங்க்ஸ் அறிவிலி..

KADUVETTI said...

:)))

♫சோம்பேறி♫ said...

:-))))) Thanks KADUVETTI

Post a Comment

தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு.

Blog Widget by LinkWithin
 
சோம்பேறி. Design by Pocket