சிரிப்பாய் சிரித்த கலைஞரின் சிரிப்பதிகாரம்

Monday, 6 April, 2009

Views

சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்வது என்றால் என்ன என்று, நேற்று இரவு 7:30க்கு சிரிப்பொலியில் சிரிப்பதிகாரம் நிகழ்ச்சி பார்த்த பிறகு தான் புரிந்தது. ஒரு நிமிடம் ஜெயா டிவி பார்த்துக் கொண்டிருக்கிறோமோ என்ற சந்தேகம் வந்து விட்டது.

வசனங்களில் அவ்வளவு உள்குத்து. உதாரணத்துக்கு 'குடும்பம்னாலே பிரச்சனை தான்'
மிகவும் நல்ல நிகழ்ச்சி. நல்ல நகைச்சுவையாக போய்க் கொண்டிருந்தது. ஜெகன் மோகினி, சகலகலாவல்லவன், திருவிளையாடல் திரைப்படங்களின் சில காட்சிகளை ரீ மிக்ஸ் செய்திருந்தார்கள்.

திருவிளையாடல் படத்தில் பானபத்திரருக்கு உதவுவதற்காக, சிவன் விறகு விற்பவராக வருவாரே அந்தக் காட்சி ரீமிக்ஸ் செய்யப் பட்டிருந்தது.

சிவாஜி தலையில் விறகுக் கட்டை சுமந்த படி விற்று வருகிறார். தலைப்புக்குதவாத காரணத்தால் மற்றதை எல்லாம் விட்டு விட்டு, நேரடியாக குத்து வசனத்துக்குப் போகலாம்.

'எனக்கு ரெண்டு பசங்க தாயி. ஆனைக்குட்டி மாதிரி ஒருத்தன் அழகா ஒருத்தன்.

'ஏம்பா ரெண்டு பசங்க இருந்துமா இந்த வேகாத வெயில்ல விறகு வித்துகிட்டு இருக்க'

'என்ன தாயி பண்றது. ரெண்டுமே தருதலைக் குட்டிங்க. துன்பந்தாளாம விஷம் கூட குடிச்சுப் பாத்துட்டேன். அது கூட உள்ள போகாம தொண்டையிலேயே நிக்குது.'

இப்போது அதே காட்சியில் டப்பிங் கலைஞர்கள் பேசியது.

திருட்டு டிவிடி விற்பவராக வருகிறார் சிவாஜி(மு.க.அழகிரியின் டிவிடி பிசினஸ் மதுரை அறிந்தது. குறைந்தபட்சம் பெரியார் நிலையம் அறிந்தது).

'எனக்கு ரெண்டு பசங்க தாயி. ஒருத்தன் போலீஸா இருக்கான். ஒருத்தன் வக்கீலா இருக்கான்.'

'ஏம்பா ரெண்டு பசங்க இருந்துமா இந்த வேகாத வெயில்ல டிவிடி வித்துகிட்டு இருக்க'

'என்ன தாயி பண்றது. ரெண்டுமே தருதலைக் குட்டிங்க. ஒன்னோட ஒன்னு அடிச்சிக்குதுங்க.. உண்ணாவிரதம் இருப்பேன்னு கூட சொல்லிப் பாத்துட்டேன். ம்ம்ம்.. குடும்பம்னாலே பிரச்சனை தான்.'

இது முதல்வருக்கு ஆதரவாக இருக்கிறதா? எதிராக இருக்கிறதா?

அந்த நேரத்தில் முதல்வர் மானாட மயிலாட பார்த்துக் கொண்டிருப்பார் என்ற தைரியத்தில், அவருக்கு எதிராக ஒளிபரப்பப் பட்டதா?

அல்லது, அவரைப் பார்த்து பரிதாபப்பட்டு அவருக்கு ஆதரவாக ஒளிபரப்பப் பட்டதா?

எனக்குத் தெரியவில்லை. உங்களுக்கு எப்படி தெரிகிறது?

15 மச்சீஸ் சொல்றாங்க:

Anonymous said...

ஹா ஹா ... நல்ல நகைச்சுவை .....பதிவு ...Vijay

Anonymous said...

ஹா ஹா ... நல்ல நகைச்சுவை .....பதிவு ..ஓட்டு போட்சு....Vijay

சோம்பேறி said...

நன்றி விஜய். கலைஞருக்கு எவ்வளவு விசிறிகள் பாருங்கள். நூத்தி சொச்சம் ஹிட்ஸ்க்கு பிறகும் நீங்களும் நானும் மட்டும் தான் ஓட்டு போட்டிருக்கிறோம்.

சோம்பேறி said...

ஆனாலும் என் அடுத்த பதிவு மு.க.அழகிரியைப் பற்றி தான்.

Anonymous said...

ok go ahead...Vijay

Suresh said...

. நல்ல நகைச்சுவை

Suresh said...

i want to be ur follower but no following lists, super a eluthuringa time iruntha namma kadaipakkam vanga

சோம்பேறி said...

நன்றி சுரேஷ். உங்கள் கடைப் பக்கம் பல முறை வந்திருக்கிறேன். ஆனால் நான் யாருக்கும் பின்னூட்டுவதில்லை. ஏன் என்று அடுத்ததற்கு அடுத்த பதிவில் சொல்கிறேன்..

அதே பதிவில் followers gadgetடையும் இணைக்கிறேன்.

Anonymous said...

இதை பார்த்தும் சிரிபிர்கள் http://vinothkumarm.blogspot.com/2009/04/meenakshi-amman-temple-is-one-of.html

சோம்பேறி said...

ஏங்க அனானி.. மீனாக்ஷி அம்மன் கோவில் இந்தியாவின் 7 அதிசயங்களில் ஒரு இடத்தை பிடித்ததில் என்ன அதிசயம்?

இதில் சிரிப்பதற்கு என்ன இருக்கிறதென்று எனக்குப் புரிய வில்லை.

பதிவின் கீழே சிரித்துக் கொண்டிருந்த ஸ்மைலிகளைப் பார்த்த போது தான் எனக்கு சிரிப்பு வந்தது.

லிங்க் மாற்றிக் கொடுத்து விட்டீர்கள் என்று நினைக்கிறேன் அல்லது.. கலைஞரும் மீனக்ஷி அம்மனும் ஒன்று என்று சொல்ல வருகிறீர்களோ?

ttpian said...

நான் தேர்தலில்..காங்கிரசை வீழ்த்துவது இருக்கட்டும்:வேறு என்ன செய்யலாம்?
நெஞ்சு கொதிக்கிரது

சோம்பேறி said...

என்ன செய்யலாம்? ஏதோ சீரியசாக சொல்ல வருகிறீர்கள் என்று புரிகிறது. என்ன என்று தான் புரியவில்லை.

விஷ்ணு. said...

//Anonymous said...

இதை பார்த்தும் சிரிபிர்கள் http://vinothkumarm.blogspot.com/2009/04/meenakshi-amman-temple-is-one-of.html //


சந்தோஷத்தை தான் அனானி சிரிப்பு என்று சொல்லிவிட்டார் போல.

//
அந்த நேரத்தில் முதல்வர் மானாட மயிலாட பார்த்துக் கொண்டிருப்பார் என்ற தைரியத்தில், அவருக்கு எதிராக ஒளிபரப்பப் பட்டதா?

அல்லது, அவரைப் பார்த்து பரிதாபப்பட்டு அவருக்கு ஆதரவாக ஒளிபரப்பப் பட்டதா?//

இசையருவில "வாழ்க்கையில் ஆயிரம் தடைகல்லப்பா" பாட்டு கேட்டு கொண்டிருந்திருப்பார்.

//'என்ன தாயி பண்றது. ரெண்டுமே தருதலைக் குட்டிங்க. //

அய்யகோ தமிழ் நாட்டின் தலைசிறந்த மகன்களை வஞ்சிப்பது தமிழ் இனத்திக்கே அடுக்குமா? இல்லை இந்த தமிழ் மண் தான் தாங்குமா?

சோம்பேறி said...

/*விஷ்ணு. said...
சந்தோஷத்தை தான் அனானி சிரிப்பு என்று சொல்லிவிட்டார் போல.*/

அடாடா! ரொம்ப ஸாரி அனானி. நான் ஏதோ கலைஞர் தான் அனானியாக வந்து என்னை அலைக் கழிக்கிறார் என்று தவறாக நினைத்து விட்டேன்.

தெளிவு படுத்தியமைக்கு நன்றி விஷ்ணு.

/*இசையருவில "வாழ்க்கையில் ஆயிரம் தடைகல்லப்பா" பாட்டு கேட்டு கொண்டிருந்திருப்பார்*/

ஆக மொத்தம் நமக்காக எதுவும் செய்யப் போவதில்லை

/*அய்யகோ தமிழ் நாட்டின் தலைசிறந்த மகன்களை வஞ்சிப்பது தமிழ் இனத்திக்கே அடுக்குமா?*/

ஆஹா.. அவங்க மகன்கள்னு வக்கீலையும் போலீசையும் சொன்னா.. நீங்க வேற யாரையோ நினைச்சு ரொம்ப ஃபீல் பண்றீங்களே!

/*இல்லை இந்த தமிழ் மண் தான் தாங்குமா?*/

இவங்களையே தாங்கும் போது, நம்மைத் தாங்காதா?

Anonymous said...

என்னத்தப்பு சொல்றது..,ஐயா...அப்பிடி புள்ளகள தான் நல்லா நெனச்ச பாராட்டி சீராட்றாரு. பாவம் விறகு விக்க வந்த வெயில்ல மண்ட கொளம்பி போய் புள்ளகள பத்தி உண்மைய சொல்லிப்புட்டாரு.இருந்தாலும்,,நாளக்கி ஒரு யான குட்டி புள்ள மதுரைக்கு எம்பியாயிட்ட..........சாமி..சக்கரகட்டிய எனன சொல்லுவாரு தெரியுமா...பெற்ற பெரிதினும் பெரிதுவக்கும் தன் மகனை எம்பி என்று கேட்ட தந்தை...வள்ளுவர் கோபிச்சுக்க படாது.மன்னிக்கவும்

Post a Comment

தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு.

Blog Widget by LinkWithin
 
சோம்பேறி. Design by Pocket