மு.க.அழகிரிக்கு சில டிப்ஸ்(அரசியலில் அல்ல)

Tuesday, 7 April, 2009

Views

முன்குறிப்பு: அழகிரி மக்கள் ஆதரவை நம்பி தேர்தலில் நிற்கவில்லை என்பதும், அரசியலில் அவர் ஒரு புதிய trend setter என்பதும் ஊருலகத்துக்கே தெரியுமென்பதால், தேர்தலில் வெல்ல அவருக்கு டிப்ஸ் தரப் போவதில்லை(இதனால் தான் எந்த மதுரைக்காரப் பதிவரும் அவரைப் பற்றி எழுதுவதில்லையோ?!)

மதுரைக்காரவய்ங்க யாராச்சும் இருக்கீகளா.. சென்ற மாதம் மதுரை பெரியார் நிலையத்திலிருந்து அண்ணா நகர் செல்லும் வழியில், ஒரு மெகா சைஸ் பேனரைப் பார்த்தேன். அதில் 'மு.க.அழகிரியின் பிறந்தநாளை முன்னிட்டு 58 விளையாட்டுகள் ஒரே அரங்கத்தில்(ஒரே நேரத்தில் என்று ஞாபகம்) நிகழ்த்தி கின்னஸ் முயற்சி' என்று போட்டிருந்தது.

அப்படி ஏதாவது நிகழ்ந்ததா? கின்னஸில் இடம் கிடைத்ததா? இனிமேல் தான் நடக்கப் போகிறதா? பிறந்த நாளை ஒரு வாரத்திற்கு முன்பாகவே அலப்பரையாகக் கொண்டாட ஆரம்பித்தவர், இன்னும் கொண்டாட்டங்களை முடித்துக் கொள்ள வில்லையா?

இல்லையென்றால் 2010 ஜனவரியில் வரும் பிறந்த நாளுக்கு இப்போதே அலப்பரை கொடுக்க ஆரம்பித்து விட்டார்களா? அல்லது மாதம் ஒரு பிறந்த நாள் கொண்டாடுகிறாரா?

இந்தப் பதிவில் நான் குறிப்பிட்டிருந்த வாசகங்கள் உடைய பல 2009 பிறந்தநாள் வாழ்த்து போஸ்டர்கள் அழிக்க, கிழிக்கப் பட வில்லை. அடுத்தப் பிறந்த நாளுக்கு அவர் தொண்டர்களே, அதன் மேல் வேறு போஸ்டர்கள் ஒட்டினால் தான் உண்டு போல.
(மூன்று மாதங்களுக்கு முன் "இன்று தென் தமிழகத் தலைவனே.. நாளை பாராளுமன்றத் தலைவரே" என்ற வாசகமடங்கிய இந்த பிறந்த நாள் வாழ்த்து பேனரை காமெடி என்று நினைத்தேன்.)

தவிர ஊரில் யாருக்காவது கல்யாணம், காது குத்து என்றால் கூட மணமக்களை விடப் பெரிய சைஸில் இவர் படம் தான் இருக்கிறது என்பதால் சமீப காலமாக பேனர்களைப் படிப்பதில் உள்ள ஆர்வம் குறைந்து விட்டது.

இந்த கின்னஸ் பேனர் ரொம்பவே பெரியதாய் இருந்ததால் கவனத்தை ஈர்த்தது. 'அவர் பாடு தொண்டர்கள் பாடு.. என்னவோ செய்து விட்டுப் போகட்டும்' என்றெல்லாம் சும்மா இருந்து விட முடியாது. மதுரைக்கு தென் தமிழகத்தின் தலைநகரம் என்ற அந்தஸ்து பெற்றுக் கொடுத்திருப்பவருக்கு, நாமும் ஏதாவது செய்ய வேண்டாமா.

ஒரே நேரத்தில் பல விதமான போட்டிகளை ஒரே மைதானத்தில் கொண்டாடினால் சங்ங்ங்ங்ங்கடமா இருக்காது? அதனால் தான் விளையாட்டுகளைத் தொடங்கும் முன் அவருக்கு சில டிப்ஸ்:

1) இட நெருக்கடி காரணமாக ஜாவ்லின் எறிபவர்கள் தெரிந்தோ தெரியாமலோ பார்வையிட வந்திருக்கும் சீப்(cheap என்று படிக்காமல் chief என்று படிக்கவும்) கெஸ்ட் மீது எறிந்து விட்டால் கின்னஸில் இடம் பிடிக்க முடியாது. மருத்துவமனையில் தான் இடம் கிடைக்கும். எனவே, சிறப்பு விருந்தினர்கள் விளையாட்டுகளைத் தொலைக்காட்சியிலேயே பார்த்துக் கொள்ளவும்.

2) ஆண்கள் பிரிவில் கபடி விளையாடுபவர்களையும், பெண்கள் பிரிவில் கபடி விளையாடுபவர்களையும் அருகருகே விளையாட விட்டு, அவர்கள் குழப்பத்தில் எசகு பிசகாக அணி மாறி நுழைந்து, அவர்களுக்குள் பற்றிக் கொண்டு விட்டால்(நம்ம பயபுள்ளைகளுக்கு தான் இடிச்சாலே காதல் வந்துடுமே!) அடுத்த சுற்று விளையாட ஆளில்லாமல் போகுமென்பதால், ஆண்கள் பெண்கள் என்று படத்துடன் board மாட்டி, மைதானத்தை இரண்டாகப் பிரித்து விடவும்.

3) கால் பந்து, கூடைப் பந்து, வாலி பால் விளையாடுபவர்களிடமிருந்து, ஷாட்புட் விளையாடுபவர்களை எவ்வளவு தூரம் தள்ளி விளையாட வைக்க முடியுமோ அவ்வளவு தள்ளி வைக்கவும். காற்றடைத்த பந்து என்று நினைத்து ஷாட்புட்டை எட்டி உதைத்து விட்டால்(கோர்ட் கேஸ் பற்றியெல்லாம் கவலை இல்லை என்றாலும்) விழா நாயகர் நஷ்ட ஈடு தர நேரலாம்.

4) அதே போல், கிரிக்கெட், டென்னில், ஷட்டில் காக் விளையாடுபவர்களிடமிருந்து நீளம் தாண்டுபவர்களை தள்ளி வைத்து விடுங்கள். பந்து என்று நினைத்து லாங் ஜம்பில் பறந்து வருபவர்களை நொங்கி விட வாய்ப்பிருக்கிறது.
5) ஓட்டப் போட்டியில் கலந்து கொள்பவர்களை ட்ரெட் மில்லில் நின்ற இடத்திலேயே ஓட வைக்கவும். இட நெருக்கடியைக் குறைக்க இது உதவும் என்பதால் மட்டும் அல்ல. 58 போட்டிகள் நடத்தியதற்கு கின்னஸில் இடம் கிடைக்கிறதோ இல்லையோ, ஓட்டப் போட்டியின் புதிய பரிமானத்தை வெளிக் கொண்டு வந்ததற்காக நிச்சயம் கிடைக்கும்.

இத்தனைப் பிரச்சனைகளுக்கும் காரணமான இந்த எழவெடுத்த கால் பந்து, ஷாட்புட், ஈட்டி எறிதல் போன்ற விளையாட்டுகளைத் தவிர்த்து விட்டு, கோலி, செதுக்கு சப்பை, பம்பரம்(இதன் மூலம் விஜயகாந்த் உங்கள் கட்சியில் சேர வாய்ப்பிருக்கிறது), மங்காத்தா(இதன் மூலம் நான் உங்கள் கட்சியில் சேர வாய்ப்பிருக்கிறது) போன்ற 58 விளையாட்டுகளைத் தேர்ந்தெடுத்தல் நலம்.

உங்கள் தந்தை தமிழ் புத்தாண்டை தை மாதத்திற்கும், சித்திரை மாதத்திற்கும் மாற்றி விளையாடுவது போலவே, ஹாக்கிக்கு பதில் மங்காத்தாவை தேசிய விளையாட்டாக மாற்ற சொல்லி மன்மோஹன் சிங்கிற்கு கடிதம் எழுதினாலும் எழுதுவார். தேர்தல் சமயத்தில், இது பல விளையாட்டு வீரர்களைப் புண்படுத்தி விட்டது என்று திடீர் ஞானோதயம் வந்து ஹாக்கியையே திரும்ப தேசிய விளையாட்டாக்கி விடுவார் என்பது வேறு விஷயம்.

கின்னஸில் இடம் கிடைத்து விட்டால், மங்காத்தாவை அடுத்த முறை ஒலிம்பிக்கில் சேர்க்க வாய்ப்பிருக்கிறது. அப்போது ஐடியா கொடுத்த எனக்கும் ஒரு தங்கப்ப தக்கம் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

தமிழ் மணத்தில் வாக்களிக்க..
தமிழ் மணத்தில் எதிர் வாக்களிக்க..

9 மச்சீஸ் சொல்றாங்க:

கும்மாச்சி said...

நல்ல டிப்ஸ் தான், அப்படியே நம்ம டிப்ச்யும் படிச்சு பிடிச்ச வோட்ட போடுங்க

http://kummachi.blogspot.com/2009/04/blog-post_07.html

சோம்பேறி said...

நல்லா இருந்தது கும்மாச்சி. ஆனாலும் நம்ம ஹீரோ அஞ்சா நெஞ்சரை இப்படி வெல்டிங் கபாலி, மாட்டுகுமார்னு side artist கூட சேர்த்துட்டீங்களே!

டக்ளஸ்....... said...

\\மதுரைக்காரவய்ங்க யாராச்சும் இருக்கீகளா..\\
அட்ரஸ் குடுங்க பாசு..!
ஆட்டோ அனுப்பனும்...

சோம்பேறி said...

மதுரையாங்க நீங்க.. நெஜமாவே அப்படி ஏதாவது நடந்ததா?

ஆட்டோக்கு Waiting.. என் அட்ரஸ்:

சோம்பேறி
நம்பர் 10, விவேகானந்தர் தெரு,
மதுரை மெய்ன் ரோட்,
மதுரை குறுக்கு சந்து,(மதுரை பேருந்து நிலையம் அருகில்)
மதுரை

திருப்பி சொல்லனுமா?

Anonymous said...

ரொம்ப நல்ல டிப்ஸ் ....விஜய்
..Voted

சோம்பேறி said...

நன்றி விஜய்.

Anonymous said...

ஆட்டோவுல பாசக்கார பய அட்டாக்பாண்டி ( மேல அழகிரி பேனர்ல பம்பத் தல படம் இருக்கே) அவரே தான். அய்யோ நான் கெளம்புரேன் சாமிகளா...........தா.கிருஷ்ணன் கூட நான் தொனைக்குலாம் போகலப்பு,,,ஜுட்டடடடடடடடடடடடடடடடடடடட

Anonymous said...

அட்டாக்பாண்டி...அழகிரி புண்ணியத்தில இப்போ மதுரை மாவட்ட வேளாண்விற்பனைக்குழு தலைவருங்கோ...அழகிரி மதுரை எம்பி ஆகிட்டா...அப்புறம்..ங்கொப்புரானே..அட்டாக்பாண்டி க்கு ராணுவ ஆலோசகர் பதவி கூட கெடக்கலாமப்பு. ஏன்னா..தினகரன் ஆபிச அடிச்சு நொறுக்கி 5 நிமிசத்துல 3 பேர காலி பண்ணுன மகாபராக்கிரமசாலிப்பு எங்க அண்ணன் அட்டாக்கு.ஜாக்கிரத..யாரும் பேசப்புடாது.

சோம்பேறி said...

ஆமா? அது யாரு அது அழகிரி.. என் ஐடியைத் திருடி யாரோ தலைவரைப் பத்திப் பதிவிட்டிருக்காங்க..

மீ டூ த எஸ்கேப்பூ.
மீ டூ த எஸ்கேப்பூ.

Post a Comment

தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு.

Blog Widget by LinkWithin
 
சோம்பேறி. Design by Pocket