Views
வைத்தியநாத சுவாமி மூல சந்நிதானத்தில் தன் மனைவி திருமதி.வைத்தியநாத ஸ்வாமியுடன் (ஸாரி.. அம்மன் பெயர் மறந்து விட்டது) காட்சி தருகிறார். ஸ்வாமியும் அம்மனும் சேர்ந்து தரிசனம் தருவதால், ஸ்வாமி அம்மன் கோயில் என்று அழைக்கப்பட்டு வந்த இத்தலம், இப்போது மருவி சோமியம்மன் கோவில் என்று கிராமத்துப் பெருசுகளால் அழைக்கப்பட்டு வருகிறது.
கோவிலில் அறுபத்து நான்கு நாயன்மார்கள் விக்ரகத்தையும் சேர்த்து சுமார் இருநூற்றி சொச்சம் விக்ரகங்களாவது இருக்கும் (தூண்களில் செதுக்கப்பட்டுள்ள யாழி, நடன நாரீமணிகள் தவிர்த்து)
64 நாயன்மார்களில் ஒருவருக்கு மட்டும் புத்தாடை அணிவித்து அலங்காரம் செய்திருந்தார்கள். காரைக்கால் அம்மையார் மாதிரி பெண்களுக்கு மட்டும் சலுகை போல என்று நினைத்தேன். இல்லையாம். அந்தந்த நட்சத்திரத்துக்கு உகந்த நாயன்மார்களுக்கு மட்டும் சிறப்பு கவனிப்பாம்.
சிவலிங்கத்தைப் பிளந்த படி வெளி வரும் லிங்கோத்பவர் எனப் பெயரிடப்பட்ட விக்கிரகம் ஒன்றைப் பார்த்தேன். என்ன கதையாக இருக்கும் என்று யோசித்துக் கொண்டிருந்த போதே, ஒருவர் வந்து 'ஒரு வாட்டி பிரம்மாவுக்கும் திருமாலுக்கும் யார் பெரியவானு..' என்று பலமுறை கேட்ட கதையை மறு ஒளிபரப்பு செய்ய ஆரம்பித்தார்.
அப்போது வலைப்பூ எழுதுவேன் என்றோ, அதை நீங்கள் படிப்பீர்கள் என்றோ தெரியாததால் அவர் சொன்ன கதையைக் கேட்க விரும்பாமல், "நாக்கு தமிலுலூ ரா லேதண்டி. Just leave it to our imagination buddy" என்று பீட்டர் விட்டு விட்டு எஸ்ஸாகி விட்டேன்.
மறுபடியும் அங்கே செல்ல நேர்ந்தால், அவரைத் தேடிப் பிடித்து நிச்சயம் முழுக் கதையையும் கேட்டு வருகிறேன் (அவர் சொன்னால்). இப்போதைக்கு நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினால் கீழே உள்ள கல்வெட்டைப் படித்து புரிந்து கொள்ள முயற்சி செய்யவும்.
இங்கே முங்குளிப்பான் என்ற வித்தியாசமான கருப்பு இனக்கொக்கு காணக் கிடைக்கிறது. இது வானத்தில் பறந்து கொண்டிருக்கும் போது மீனைக் கண்டால், சர்ரென நீருக்குள் மூழ்கி (முங்கு நீச்சலில்) ஒரே கொத்தில் மீனைக் கவ்விக்கொண்டு பறக்க ஆரம்பித்து விடுமாம். முங்கி குளித்து மீனைக் கவ்வுவதால், முங்கி குளிப்பான் என்று வைத்த பெயர், மருவி முங்குளிப்பான் ஆகிவிட்டது.
இங்குள்ள குளத்தில் நிறைய மீன்கள் இருக்கின்றன. அவைகளுக்கு தீனி போடுவதற்கென்றே வெளியே பொரி விற்கப்படுகிறது.
இனி வரும் காலங்களில் மீன் கூட Pizza தான் சாப்பிடும் போல:-(
தென்காசி டூ மதுரை ரயில் பயனத்தின் போது, ஸ்ரீவி ரயில் நிலையத்தை அடையும் ஒரு இடத்தில், இந்தக் கோவில் கோபுரமும், ஆண்டாள் கோவில் கோபுரமும் அருகருகே இருப்பது போல் தெரிந்தது. எவ்வளவோ முயன்றும், என் கைபேசியில் புகைப்படமெடுக்க முடியவில்லை.
அதற்கு பதிலாக வேறு இரண்டு கோபுரங்கள் கீழே கொடுத்திருக்கிறேன்.. எந்தக் கோவில் கோபுரங்கள்னு கண்டுபிடிங்க பாக்கலாம்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjP__2rhBWjHvbbMVmnwCMP771AZJzOXRDai8y6dhrcSAFUpM5kRHSE6XaEZ9Hyq7os9kliAz-dLNS6vVTHACGpeB39hQmvNCrXEQpqJDhU7L5U009ThwQxli82P23JKWMPEhB03G0csJKR/s400/pudir.jpg)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhEO8UMVw5fH5P9GRSf4kxqL56fyOJ6xgw-HAwmsYUQzfYontFN7D1PaXzA9Ai-imw7eica9zxTUSTVkq05EWxBd7O4Ey9uwoOmki7nlqm6UP4JSxjNy1EuXgyvqtfjsepx3KSE7lJ6y9L-/s400/pudhir1.jpg)
பதிவின் நீளம் கருதி, ஸ்ரீவில்லிப்புத்தூர் வரும் போது பார்வையிடப் பரிந்துரைக்கப்படும் மற்ற தலங்களையும், இடங்களையும் பற்றி மற்றொரு பதிவில் சொல்கிறேன்.
21 மச்சீஸ் சொல்றாங்க:
ஸ்ரீவில்லிப்புத்தூர் சோமியம்மன் கோவில் பத்தி பதிவு...
சோ நோ கமெண்ட்ஸ் ..
Ok Vijay:-)
எனக்கென்னவோ விஜய் ஆனந்தும் சோம்பேறியும் ஒன்னோன்னு ஒரு டவுட்டு...
அமீரக புனைவுப் புலி சென்ஷியை உண்மையை கூறி இதில் இழுத்ததை கடுமையாக ஆச்சேபித்து நான் வெளிநடப்பு செய்கிறேன்
/*எனக்கென்னவோ விஜய் ஆனந்தும் சோம்பேறியும் ஒன்னோன்னு ஒரு டவுட்டு...*/
எனக்கும் அதே டவுட்டு தான். விஜயகாந்து பிரதமரானதும் முதல் வேலையா இதைக் கண்டுபுடிக்க சொல்லனும்.
/*அமீரக புனைவுப் புலி சென்ஷியை உண்மையை கூறி இதில் இழுத்ததை கடுமையாக ஆச்சேபித்து நான் வெளிநடப்பு செய்கிறேன்*/
ஹையோ! வேணாம். அவரு பேரை எடுத்துட்டு உங்க பேரை போட்டுட்டா, திரும்ப உள்நடப்பு செஞ்சுடுவீங்களா?
உங்க வலைப்பதிவை முதல் தடவை படிச்சப்போ, வலைப்பதிவு முகவரிய சேமிக்காம விட்டுட்டேன். பிறகு 'sombery' ன்னு தேடுனப்போ, நிஜமாவே ஒரு தெலுகு வலைப்பதிவு வந்தது. :-)
சித்ரா
அட.. அவுனு.. கருப்பு மாதிரி விடாம என்னை சின்ன வயசுல இருந்தே, தெலுங்கு தேசம் துரத்திகிட்டே வருது:-)
Welcome back chithra_/'\_ மாட்லாடலாம் ரண்டி:-)
To நான் ஆதவன்
//
எனக்கென்னவோ விஜய் ஆனந்தும் சோம்பேறியும் ஒன்னோன்னு ஒரு டவுட்டு...//
வேறு வேறு நப்ர்கள்...
நிருபிக்க வேண்டுமா ! ...
சோம்பேறி , நான் ஆதவன் இக்கு தெரிய படுத்தவும்
பதிவு நல்லா இருக்கு .
பின்னூட்டங்கள் சிரிப்பை வரவழைக்கின்றன:)
இனி ஆட்டத்துக்கு போலாமா?
வருங்கால முதல்வர்கள்ன்னு ஒரு கூட்டம் முன்னமே கண்ணுல பட்டதால அங்கே கட்டணமில்லா மெம்பராயிட்டேன்.எனவே சோம்பேறி கட்சில அதுவும் நாளைக்கு செய்ய வேண்டிய வேலையை நாளன்னைக்கு செய்யற கூட்டத்துல...ம்ஹும்!சான்சே இல்ல:)
நல்ல பதிவு
படங்களும் கல்வெட்டுக்கு பக்கத்து வீட்டு எழுத்துக்கள் புரியா விட்டாலும் நல்லாவே இருக்குது.
மரத்துக்குப் பின்னாலே கோபுரமா?அல்லது புதிர் புருடாவா?ஆயிரம் கைகள் மறைத்து நின்றால் ஆதவன் மறைந்து விடும் போல் இருக்குதே!
ஒழுங்கா பின்னூட்டம் போட்டுகிட்டு இருந்தவனை சார்மி கொசு அடிக்கிறான்னு பிலிம் காட்டுனா எப்படி?நான் வாரேன்.
/*Vijay Anand said...
வேறு வேறு நபர்கள்...
நிருபிக்க வேண்டுமா ! ...
சோம்பேறி , நான் ஆதவன் இக்கு தெரிய படுத்தவும்*/
கூல் டவுன் விஜய். இதெல்லாம் போய் நிரூபிச்சுகிட்டு. உங்களுக்கு ஒரு ரகசியம் சொல்றேன் யாருகிட்டயும் சொல்லிடாதீங்க.. நானும், நான் ஆதவனும் வேறு வேறு நபர்கள் அல்ல:-)
/*malar said...
பதிவு நல்லா இருக்கு*/
உளமார்ந்த நன்றிகள் மலர். (நீங்க சோம்பேறிகள் முன்னேற்றக் கழகத்தில் இணைந்திருப்பதிலிருந்தே எவ்வளவு உண்மையாக சொல்கிறீர்கள் என்று தெரிகிறது)
/*உருப்புடாதது_அணிமா said...
நல்ல பதிவு*/
நன்றி அணிமா..
/*ராஜ நடராஜன் said...
சோம்பேறி கட்சில அதுவும் நாளைக்கு செய்ய வேண்டிய வேலையை நாளன்னைக்கு செய்யற கூட்டத்துல...ம்ஹும்!சான்சே இல்ல:)*/
பரவாயில்ல ராஜ நடராஜன். வெளியில இருந்து ஆதரவு தாங்க.
/*படங்களும் கல்வெட்டுக்கு பக்கத்து வீட்டு எழுத்துக்கள் புரியா விட்டாலும் நல்லாவே இருக்குது.*/
நன்றிங்க..
/*மரத்துக்குப் பின்னாலே கோபுரமா?அல்லது புதிர் புருடாவா?ஆயிரம் கைகள் மறைத்து நின்றால் ஆதவன் மறைந்து விடும் போல் இருக்குதே!*/
ஓ.. நோ.. ப்ராமிஸ் மேன்.. நெக்ஸ்ட் டைம் கரெக்டா போட்டோ எடுத்து பப்லிஷ் பண்றேன் பாருங்க..
/*ஒழுங்கா பின்னூட்டம் போட்டுகிட்டு இருந்தவனை சார்மி கொசு அடிக்கிறான்னு பிலிம் காட்டுனா எப்படி?நான் வாரேன்.*/
இங்க பின்னூட்டம் போடுறதா முக்கியம். முதல்ல ஃபெர்கி அக்கா கொசு அடிக்குறதப் போய் பாருங்க.
//அட.. அவுனு.. கருப்பு மாதிரி விடாம என்னை சின்ன வயசுல இருந்தே, தெலுங்கு தேசம் துரத்திகிட்டே வருது:-)//
அட, இது சுவாரஸ்யமா இருக்கும் போல. 'விடாது தெலுங்கு தேசம்' ன்னு ஒரு தொடரோ, இல்ல ஒரு இடுகையோ எழுதுங்க. ஆமா, சங்கிலி தொடர் என்ன ஆச்சு?
சித்ரா
சங்கிலித் தொடர் கண்டிப்பா தொடரும் சித்ரா. ஆனா விடாது தெலுங்கு பத்தி எழுத முடியாது. அது டாப் சீக்ரெட்:-)
?????
:-(((
சித்ரா
இது மடவர்விளாகம் சிவன் கோவில் தானே ?
/*சென்ஷி said... :-)))*/
நீங்க பிரபல பதிவர் தான் ஒத்துக்கறேன். அதுக்காக இப்படி ஸ்மைலியோட எஸ்ஸாகிறது நல்லா இல்ல:-p
/*Anonymous said...
????? :-((( சித்ரா*/
ஸாரி சித்ரா:-((((((((((.. ஏன்னு இங்க சொல்ல முடியாது. ஜிடாக்ல வாங்க சொல்றேன்.
/*ஒரு காசு said...
இது மடவர்விளாகம் சிவன் கோவில் தானே ?*/
ஆமாங்க. எங்க ஊர்ல இது சோமியம்மன் கோவில்னும், வைத்தியநாத ஸ்வாமி கோவில்னும் தான் ஃபேமஸ். அதான் இந்தப் பேரை சொல்லாமலேயே விட்டுட்டேன்.
Post a Comment
தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு.