Views
பொதுவாக டிவிடியில் படம் பார்க்கும் பொழுது, எனக்குப் பிடிக்காத காட்சிகளை fast forward செய்து விடுவது வழக்கம். ஆனால் முழுப்படத்தையும் fast forwardடியே பார்த்தது இது தான் இரண்டாவது முறை. (முதல் படம் 'பிரிவோம்.. சந்திப்போம்..'. மோசமான படம் என்பதற்காக அல்ல. திரைக்கதையின் வேகம் அப்படி. X20யில் fast forward செய்தும் படம் வேகமாக நகர வில்லை).
ஆரம்பக் காட்சியிலேயே 1977ன் அழகு தெரிந்து விட்டது. அறிமுகக் காட்சியிலேயே சரத் உடம்பில் மண்ணென்னை ஊற்றிக் கொண்டு, என்னைக் கொளுத்து கொளுத்து என்று சொல்லும் போது அவர் கையிலிருக்கும் தீக்குச்சியைப் பிடுங்கிக் கொளுத்தி விடலாமா என்றாகி விட்டது.
The League of Extraordinary Gentleman(LXG) திரைப்படம் பார்த்திருக்கிறீர்களா? அதில் வரும் Dorian என்பவருக்கு பதில், அவருடைய ஓவியத்துக்கு வயதாகும். அவரை எந்த ஆயுதத்தாலும் சாகடிக்க முடியாது. அவர் புகைப் படத்தை எப்போது நேருக்கு நேர் பார்க்கிறாரோ அப்போது தான் அவருக்கு மரணம்.
இந்தப் படத்திலும் 'சரத் நியூஸ் பேப்பரில் எதையோ பார்த்ததும் இறந்து விடுகிறார்' என்று கேள்விப் பட்டதும், LXG போல ஏதோ இருக்கும் என்று நினைத்து, கடைசி வரை பொருமையாக X20யில் பார்த்துக் கொண்டிருந்த நான்..
கதாநாயகி வரும் போது நம்ம்ம்ம்ம்பி ப்ளே பட்டனை அழுத்தினேன். சரத்தும் அவரும் பார்க்கும் போதெல்லாம் போல இடித்துக் கொள்கிறார்கள்(நன்றி: அருணாச்சலம் என்று கூட போட வில்லை). காதல் வந்து விடுகிறதாம். எங்க ஊர் பிள்ளைகளை இடித்தால் செருப்பு தான் வருகிறது.
நமீதா இன்னும் ஒரு வருடத்திற்குக் குளிக்கவே தேவையில்லை. அந்தக் குளி குளித்திருக்கிறார் படத்தில். அவர் கைகள் ஒவ்வொன்றும் ரம்பா தொடை போல இருக்கின்றன(நன்றி: விவேக்). உடைகளை மட்டும் குறைத்தால் போதாது ஆத்தா; கொஞ்சம் உடம்பையும் குறைங்க..
அப்பா சரத் செய்தித் தாளில் அப்படி எதைப் பார்த்து பயந்து செத்துப் போனார்னு சொல்ல மறந்துட்டேனே.. அவர் மனைவியின் புகைப்படத்தைப் பார்த்து.
இயக்குனர் எக்ஸ்.தாமிரா வலைப்பூவின் வாசகராய் இருப்பாரோ?
நான் ஏன் பின்னூட்டுவதில்லை
திரட்டிகளில் சரியாக இணைத்துக் கொள்ளாததாலோ, word verification enable செய்திருந்ததாலோ தெரியவில்லை, என் பத்தாவது பதிவு வரை 'தமிழில் டைப் செய்வது எப்படி?' என்று கேட்டு கூட எனக்கு பின்னூட்டம் வந்ததில்லை. ஏன், நானே கூட எனக்குப் பின்னூட்டிக் கொண்டதில்லை.
offlineனில் கூட நமக்குப் படிக்க பொருமையில்லாத சில பதிவுகளில் ஆஹா ஓஹோ எனப் புகழ்ந்து வரும் பின்னூட்டங்களைப் பார்த்திருக்கிறீர்களா? பலருக்கும் followerராக (சமயங்களில் அடிப்பொடியாக) இருப்பதாலோ, பல பதிவுகளிலும் கன்னா பின்னாவென்று பின்னூட்டுவதாலோ தான் இவர்களுக்கெல்லாம் பின்னூட்டங்கள் வருகிறதோ என்று எனக்கு சந்தேகம் வந்ததால், என் கோபம், வருத்தம், மகிழ்ச்சி என்று எதையும் யார் வலைப்பூவிலும் பதிவதில்லை. followவும் செய்வதில்லை.
ஆரம்ப காலத்தில் நான்கு முறை பின்னூட்டியிருக்கிறேன்.(யாருக்குமே பின்னூட்டாத இட்லி வடை பதிவில், தன் லிங்கை என் பதிவில் பின்னூட்டி பார்க்க சொன்ன ஒரு நண்பரின் பதிவில், ஒரு பதிவரின் பழைய பதிவில், அணிமாவிற்கு word verification பற்றிய அறிவுறைக்கு நன்றி சொல்ல ஒன்று)
இப்போது என் வலைப்பூவின் தரம் ஓரளவு தெரிந்து விட்டதால், இனி பல கடைகளில் புகுந்து விளையாடலாம் என முடிவு செய்து விட்டேன். முதல் ஐந்து பின்னூட்டங்களை 1977 படத்துக்கு விமர்சனம் எழுதிய அஞ்சா நெஞ்சர்களுக்கு இட்டு கௌரவிக்கலாம் என நினைக்கிறேன். வடிவேலு பாணியில் 'சாவடிக்கறவனா வீரன். சாவடி அடிச்ச பிறகும் உசுரோட இருக்கறவன் தான் வீரன்'.
இது வரை எழுதிய 28 பதிவுகளிலும் பின்னூட்டிய அன்பு நண்பர்கள் அணைவருக்கும் என் நன்றி. நீங்கள் பாராட்டிய ஒவ்வொரு வார்த்தையையும் உண்மையாக உணர்கிறேன். உங்கள் ஒவ்வொருவருக்கும் தனிப் பட்ட முறையில் நன்றி சொல்லும் விதமாக, அடுத்தப் பதிவிடும் வரை, உங்கள் பெயரை சைட் பாரில் டிஸ்ப்ளே செய்திருக்கிறேன்.
(இதை 25வது பதிவாக ஏற்றம் செய்ய நினைத்திருந்தேன். நாசமாய் போன ஞாபக மறதி காரணமாக கொஞ்சம் தாமதமாகி விட்டது. ஞாபகப் படுத்தியதற்கு நன்றி சக்கரை சுரேஷ்)
இதுவரை இங்கு வருகை தந்த, பின்னூட்டிய, வாக்களித்த, என்னை follow செய்யும் மற்றும் செய்த(followersஸாக இருந்து இப்போது எஸ் ஆன) அனைவருக்கும் என் மனப்பூர்வமான நன்றிகள்.
திரட்டிகளில் இணைக்காத என் எல்லா பழைய பதிவுகளையும் படித்து விட்டு பாராட்டிய பெயரில்லா நண்பர்
படித்ததுடன் தன் எதிர் கருத்தைப் பதிந்த ___(யார் பேரையாவது விட்டுடுவேனோனு பயம் தான்)
அனானியாக வந்து தொடர் ஆதரவு தரும் விஜய்
ரஜினியைக் கலாய்த்ததற்காக 'கா' விட்டு வெளிநடப்பு செய்த ____
தனது ஆரோக்யமான கருத்தைப் பல விவாதத்திற்குறிய பழைய பதிவுகளிலும் பதிந்த ______
எனக்கு முதலில் பின்னூட்டிய மற்றும் word verificationனைத் தூக்கி விடும் படி அறிவுரைத்த அணிமா
என்னை நம்பியோ, எனக்கு ஊக்கமளிக்க நினைத்தோ என்னை முதலில் follow செய்தவர்கள் _____
இவர்கள் எழுவருக்கும் என் ஸ்பெஷல் நன்றி(உங்கள் பின்னூட்டங்களைத் சமீபத்தில் தான் பார்த்தேன். பதிலளித்திருக்கிறேன்).
யாருக்கு உறுத்த வேண்டும் என்று நினைத்து எழுதினேனோ அவர்களில் ஒருவரையாவது சென்றடைந்து விட்டது என்ற திருப்தியைக் கொடுத்த எதிர் வாக்காளர்களுக்கு மிகவும் ஸ்பெஷல் நன்றி.
இதுவரை 48, 49, 50 என்று குட்டி ஒன்னாப்பு குழந்தைகள் போல் கணிதம் கற்றுக் கொள்ளவோ, 'எறும்புக்கு ஏப்பம் வருமா? கொசுவுக்குக் கொட்டாவி வருமா?' என்ற மாபெரும் சம்மந்தமில்லா சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்வதற்கோ யாரும் எனக்குப் பின்னூட்டியதில்லை என்று பெருமையுடன் சொல்லிக் கொள்கிறேன்.
இனியும் அது போன்ற பின்னூட்டங்களை மட்டுறுத்த நேர்ந்தால் நண்பர்கள் தயவுசெய்து கோபித்துக் கொள்ளாதீர்கள். ஒரு பதிவருக்கு மகிழ்ச்சி அளிப்பது கருத்துரைகளின் எண்ணிக்கை அல்ல. கருத்துரையிட்டவர்களின் எண்ணிக்கையும், (சில சீரியசான பதிவுகளில்) கருத்துகளின் ஆழமும் தான்.
மேலும் பண்படுத்தும் அறிவுரைகளும், பண்பாக இடித்துரைக்கும் எதிர்கருத்துகளும் ஒரு பதிவருக்கு கூடுதலாக மட்டற்ற மகிழ்ச்சியைக் கொடுக்கும் என்பது என் கருத்து.
மீண்டும் அனைவருக்கும் என் நன்றிகள்.
16 மச்சீஸ் சொல்றாங்க:
ஓ... நன்றி அறிவித்தலா...
வெரி குட். அம்பி ரொம்ப நல்லா எழுதியிருக்கே..
சரி 1977 பாக்காதே, பாக்கதே என்று பலரும் அடிச்சுகிட்டாங்களே அப்புறம் ஏன் பார்த்தீங்க.. போதத நேரம்.. காசு கொடுத்து சூனியம் வச்சுகிறது என்பது இதுதானோ?
நான் தான் முதல் பின்னூட்டம்.
// உடைகளை மட்டும் குறைத்தால் போதாது ஆத்தா; கொஞ்சம் உடம்பையும் குறைங்க.. //
ஓஹோ.. இதுக்காகத்தான் இரண்டாவது தடவை படம் பார்த்ததா?
ஒரு முக்கியமான விசயம். உங்க பதிவை எனக்கு சொன்னது தம்பி அணிமாத்தான். வாழ்க தம்பி அணிமா..
//அந்தக் குளி குளித்திருக்கிறார்//
வேகமா ஒட்டி பாத்துருக்க மாட்டீங்களே.
/*இராகவன் நைஜிரியா said...
சரி 1977 பாக்காதே, பாக்கதே என்று பலரும் அடிச்சுகிட்டாங்களே*/
நான் கடவுள் படத்தையே தொங்க விட்டு தோரணம் கட்டுனவங்களாச்சே நம்ம பயபுள்ளைக. அதனால வலைப்பூக்கள்ல வர்ற விமர்சனங்களை நம்பறதில்லை.
நான் கடவுள் படம் இருந்த டிவிடியில 1977 வந்தது. அதனால தான் பாத்தேன்.(டிவிடிலயும் பல சீன்கள் கட். ஒரிஜினல்லயாவது சென்சார் இல்லாம வருதானு பாப்போம்.)
/*அறிவிலி said...
வேகமா ஒட்டி பாத்துருக்க மாட்டீங்களே.*/
எப்படி இருந்த நமீ. இப்படி ஆயிட்டாங்க.. ஆனாலும் ஸ்லோ மோஷன்ல தான் பாத்தேன்.(பழம் விட்டாச்சா)
வாழ்த்துகள் சோம்பேறி...
குங்குமத்துக்காக....
(பலாப்பழம்)
நல்ல நகைச்சுவை வருகிறது உங்களுக்கு. தொடர்ந்து எழுதுங்கள்!
சொந்த செலவள சூனியம் - 1977 movie -
Vijay
/*அறிவிலி said...
வாழ்த்துகள் சோம்பேறி...
குங்குமத்துக்காக....
(பலாப்பழம்)*/
குங்குமம் பற்றிய வாழ்த்துக்களுக்கு நன்றி அறிவிலி. பெரிய பழம் விட்டதுக்கு ரொம்ப நன்றி.
மேலும் நர்சிம் பதிவில் என்னை வாழ்த்தியிருக்கும் பைத்தியக்காரன், தமிழன் கருப்பி மற்றும் வித்யாவுக்கும் என் நன்றிகள்.
சொல்ல மறந்துவிட்டேனே.. பதிவிட்டதற்கு நன்றி நர்சிம்.
/*ஜ்யோவ்ராம் சுந்தர் said...
நல்ல நகைச்சுவை வருகிறது உங்களுக்கு. தொடர்ந்து எழுதுங்கள்!*/
நன்றி ஜ்யோவ்ராம் சுந்தர் உங்கள் ஊக்கத்துக்கும், பாராட்டுக்கும்.
இதையும் சொல்ல மறந்துட்டேன். குங்குமத்துக்காக அண்ணாச்சிக்கும், காதலனுக்கும் என் வாழ்த்துக்கள்.
/*Anonymous said...
சொந்த செலவள சூனியம் - 1977 movie -
Vijay*/
பெருங்கொடுமை விஜய்.
:)
/*♥ தூயா ♥ Thooya ♥ said...
:)*/
என்ன தூயா.. இவ்வளவு அளவு பெருசா பின்னூட்டினா, மத்தவங்க பின்னூட்ட இடம் வேண்டாமா?
///*ஜ்யோவ்ராம் சுந்தர் said...
நல்ல நகைச்சுவை வருகிறது உங்களுக்கு. தொடர்ந்து எழுதுங்கள்!*///
ரிப்பீட்டே :-)
நன்றி சென்ஷி
Eppadi thale
Post a Comment
தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு.