Views
ஆமெனில், நீங்கள் நிறைய தமிழ், தெலுங்கு படங்கள் பார்க்கிறீர்கள். உடம்புக்கு நல்லதல்ல. ஒரு நிஜ ஜீரோ டு ஹீரோ(நம்மூர்ல பல படங்கள்ல ரௌடி தானே ஹீரோ) பத்தி சொல்றேன் கேளுங்க. சே.. படிங்க..
எங்க ஊர்ல ஒரு பையன் (பேரு பாஸ்கர்னு வச்சுக்கோங்க), கடவுள் பக்தி அதிகம். ரொம்ப ஏழைப்பட்ட பய. அவனுக்கு பத்து வயசு இருக்கும் போதே அவங்க அம்மா செத்துப் போய்ட்டாங்க.. ரெண்டே மாசத்துல அவங்க அப்பா வேற ஒரு கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க. கல்யாணம் பண்ணினா என்ன ஆகும்.. ஒரு வருஷத்துல குழந்தை பொறந்துச்சு. அதனால குடும்ப செலவ சமாளிக்க முடியல.
நம்ம பயவுள்ள படிப்பை நிறுத்திட்டு தினக் கூலி வேலைக்குப் போக ஆரம்பிச்சான். ரொம்ப அப்புரானிப் பயலா இருக்கப் போயி, மொத்த சம்பளத்தையும் அவங்க சின்னத்தா(சித்தி) கையில குடுத்துருவான். எந்தக் கெட்ட பழக்கமும் கிடையாது. தொடர்கதை ஆரம்பிக்கும் முந்தி போடுவாங்களே அது மாதிரி இது தான் முன் கதை சுருக்கம்.
எங்க அம்மா வேலை பாக்குற ஸ்கூல்ல தான் அவங்க சின்னத்தா ஆயாவா இருக்காங்க. ஆயான்னா ஜெண்டில் மேன் படத்துல மனோரமா பாக்குமே அதே வேலை தான்.
கம்பெனில இவனுக்கு தொடர்ந்தாப்புல நாலு நாள் லீவு கிடைச்சிருக்கு. நம்ம பயலுக்கு தான் பக்தி ஜாஸ்தியாச்சே! திருப்பதிக்கு போகலாம்னு முடிவு பண்ணி அவங்க சின்னத்தா கிட்ட காசு கேட்டிருக்கான். அவங்களுக்கு வந்துச்சே கோவம்.
'பண்டாரப் பரதேசிப் பயலே! நீ போகலனா சாமி ஊர விட்டு ஓடிப் போயிடுமா? நீ ஒன்னும் கோயிலுக்குப் போய் சாமியக் காப்பாத்த வேணாம்' அப்படினு கத்த ஆரம்பிச்சுட்டாங்க.
பாத்துக்கிட்டிருந்த எங்கம்மாவுக்கு ரொம்பப் பாவமா போச்சு. அவனக் கூப்புட்டு 600 ரூவா குடுத்து கோயிலுக்கு போயிட்டு வாடானு சொல்லி அனுப்பி வச்சாங்க.
கோயிலுக்குப் போனவன் நேரா எங்க வீட்டுக்கு தான் வந்தான். எங்கம்மா அவன வாசல்லயே நிறுத்தி 'கோயில்ல இருந்து வந்ததும் நேரா உங்க வீட்டுக்கு தான் போவனும். அப்ப தான் புண்ணியம் உங்க குடும்பத்துக்கு வந்து சேரும்' அப்படினு சொன்னாங்க.
உடனே அவன் 'தெரியும். அதனால தான் இங்க வந்தேன்'னு சொன்னதும் உருகிப் போய்ட்டோம். லட்டு இன்ன பிற பிரசாதங்கள் எல்லாம் குடுத்துட்டு அவன் வழக்கமா உக்கார்ற வராண்டா மாடிப்படியில போய் உக்காந்துகிட்டான்.
போன வரியில குடுத்த லட்டுக்காகவா, அதுக்கு முந்தின வரியில சொன்ன டயலாக்குக்காகவானு தெரியல; இதுவரை அவன் கிட்ட பேசாத நான் 'உள்ள வந்து உக்காருங்கன்ணே'ன்னு சொன்னேன். வெக்கத்தோட 'நான் போய்ட்டு வரேன்'னு சொல்லிட்டுப் போய்ட்டான். ரொம்ப கூச்ச சுபாவமாம்.
இவ்ளோ நேரம் சொன்னது, விட்டத்தைப் பாத்துக் கிட்டே 'நடந்தது என்னன்னா'னு சொல்லிட்டு சினிமால ஃப்ளாஷ் பேக் போடுவாங்களே, அது மாதிரி நாலு வருஷத்துக்கு முந்தி நடந்தது.
போன மாசம் அவன தற்செயலா மாட்டுதாவனி பஸ் ஸ்டாண்டுல பாத்தோம். அம்மா தான் அடையாளம் காட்டுனாங்க. என்னால கண்டுபிடிக்கவே முடியல.
'என்னம்மா.. எப்படி இருந்தவன் இப்படி ஆயிட்டான்'னு கேட்டேன்.
'பைய பேசு. இப்போ அவன் ____யோட ஆளுகிட்ட அடியாளா இருக்கான்'னு சொன்னாங்க.
'என்னம்மா.. ____யே அந்தக் கட்சிக்கு அடியாள் மாதிரி தான். அப்ப இவன் அடியாளோட அடியாளோட அடியாளா?'னு கேட்டேன். மொறைச்சு பாத்த எங்கம்மா பஸ் ஏறுற வரை வாயைத் தொறக்கக் கூடாதுனு எங்க குலசாமி மேல சத்தியம் வாங்கிக் கிட்டாங்க.
சினிமா ரௌடிக்கும் இவனுக்கும் குறைஞ்சது, ஆறு இல்லை நூறு வித்தியாசம் இருந்தது.
சிக்ஸ் பேக் எல்லாம் இல்ல. தொண்டையில இருந்து வயிறு வரைக்கும் சிங்கிள் பேக் தான். முந்தி இவன் சைக்கிள்ல வந்தா என்னடா சைக்கிள் மட்டும் தனியா வருது. ஆளக் கானோமேனு தேடுவோம். அவ்வளவு ஒடிசலா இருந்தான். இப்போ இவனுக்கு மட்டுமே தனியா ஒரு டாட்டா சுமோ தேவைப்படும் போல ஊதிப் போய் இருக்கான்.
சினிமாவுல வர்ற ரௌடி மாதிரி தலையில காரக் கொழம்பெல்லாம் கொட்டிக்கிட்டு வரல. முந்தி எண்ணெய் காணாம செம்பட்டை உறிஞ்சி போயிருந்த தலையைக் கூட நீட்டா வாரி, அம்பானிக்கு அக்கா மவன் மாதிரி இருக்கான்.
நான் இப்போ என்ன பண்ணிகிட்டு இருக்கேன்னு கேட்டான். வேலை இல்லாம வெட்டியா தான் இருக்கேன்னு தெரிஞ்சா, 'எனக்கு அடியாளா சேந்துக்கோனு சொல்லிடுவானோ'னு பயந்து, 'ஏபிசி கம்பெனியில பிபிசியா இருக்கேன்'னு ஏதோ உளறி வச்சேன்.
மாட்டுதாவனி பஸ் ஸ்டாண்டுல அவனைத் தெரியாதவங்க யாருமே கிடையாது போல. டீக் கடை, புரோட்டாக் கடை, பூக்கடைனு ஒரு கடை விடாம எங்களக் கூட்டிட்டுப் போய், எல்லா கடையிலயும் ஃப்ரீ அக்கவுண்ட் ஓப்பன் பண்ணிக் குடுத்துட்டான்.
அவன் அருமை பெருமை எல்லாம் எடுத்து விடுறதா நினைச்சு ஒப்புதல் வாக்குமூலம் குடுக்க ஆரம்பிச்சான். அவன் எதிர்பாத்த ரியாக்ஷன் நான் குடுக்கலனு நினைச்சானோ என்னவோ, ஒரு பெரும்புள்ளி பேரை சொல்லி அவரைப் போட்டது நாங்க தான் தெரியுமானு சொன்னான். எனக்கு அதிர்ச்சியோ, பயமோ இல்ல. இவ்வளவும் பண்ணிட்டு சுதந்திரமா சுத்திட்டு இருக்காங்களேனு ஆச்சரியம் தான். (அவனை சந்தோஷப்படுத்த விரும்பாததனால, அதையும் காட்டிக்கல.)
கிளம்பும் போது எங்கம்மா கிட்ட அவன் பாக்கெட்ல இருந்த ரெண்டாயிரத்தி சொச்ச ரூபாயை எண்ணிக் கூட பாக்காம எடுத்துக் குடுத்தான். ஒவ்வொரு தடவ பாக்கும் போதும் இப்படித் தானாம்.
நாங்க கிளம்பும் போது என்ன நினைச்சானோ தெரியல. பக்கத்தில இருந்த புரோட்டா கடையில ஆயிரம் ரூபா வாங்கி இதை எங்க சின்னத்தா கிட்ட குடுத்துடுங்கனு சொன்னான்.
'போயிட்டு வர்றேன் அண்ணே'ன்னு சொல்லிட்டு வானு அம்மா சொன்னாங்க. எனக்கென்னவோ அவனை அண்ணன்னு கூப்பிட மனசு வரல.
சொல்ல மறந்துட்டேனே. இப்போ ஒரு கோயில் கட்டிக் கிட்டு இருக்கானாம். நான் சொல்லல.. பயவுள்ளைக்கு பக்தி ஜாஸ்தினு.
27 மச்சீஸ் சொல்றாங்க:
Really good Real Story...
Keep Post more ...
Vijay.
கலக்கல்.. உண்மையிலேயே ரவுடியா எப்படி மாறுனாங்கறத விட அவனைப்பத்தின விவரங்கள்,நகைச்சுவை ததும்ப வைக்குது.
மெய்யாலுமே ரவுடிங்க சினிமாவுல வர்ற மாதிரி இருக்க மாட்டாங்கன்னு இப்ப மறுபடி உங்க எழுத்து மூலமா ப்ரூவ் ஆகிடுச்சு :-)
வாழ்த்துகளுக்கு ஊக்கத்திற்கு நன்றி விஜய். என் முதல் முயற்சி.(உங்கள் பழைய பின்னூட்டத்திற்கும் பதிலளித்திருக்கிறேன்.)
நன்றி சென்ஷி.
பின்னூட்டமெல்லாம் தெளிவா போடுறீங்க. ஏன் உங்க பதிவுகள்ல மட்டும் 'வாயில துப்பினா முத்தமா'னு கேட்டு, டர்ராக்குறீங்க.
பாத்தேன் ... மீக்க நன்றி ...Vijay
//சோம்பேறி said...
நன்றி சென்ஷி.
பின்னூட்டமெல்லாம் தெளிவா போடுறீங்க. ஏன் உங்க பதிவுகள்ல மட்டும் 'வாயில துப்பினா முத்தமா'னு கேட்டு, டர்ராக்குறீங்க.
//
அவ்வ்வ்வ்.. இதுக்கு நீங்க அங்க வந்து கமெண்டு போட்டு கேட்டிருந்தா ஒரு கமெண்டு எக்ஸ்ட்ராவா வந்திருக்குமுல்ல. இப்ப பாருங்க. இங்க நான் 2 கமெண்டு போடவேண்டியதாகிடுச்சு :-)
/*Anonymous said...
பாத்தேன் ... மீக்க நன்றி ...Vijay*/
நான் தான் நன்றி சொல்லனும் விஜய்.
/*சென்ஷி said...
இங்க நான் 2 கமெண்டு போடவேண்டியதாகிடுச்சு :-)*/
என்ன செய்ய சென்ஷி? உங்க பதிவுல, நான் சொல்ல நினைக்கிறதையெல்லாம் வேற யாராவது சொல்லிட்டு போயிடுறாங்க.(அப்போவே சொல்லிருந்தா இங்க ரெண்டு பின்னூட்டம் கிடைச்சிருக்காதுல்ல. எப்படி என் ராஜ தந்திரம். நோட் பண்ணுங்கப்பா..)
நாளைக்கே ஏன் செய்யனும் நாளை மறுநாள் இருக்கே// அய்யோ நல்ல ஐடியா இது.. :)
சோம்பேறியா இருந்தாலும் நீளமா டைப்படிச்சிருக்கீங்க பின்ன கமெண்டுக்கெல்லாம் பதிலும் குடுக்கறீங்க .. :)
பரிசல்காரன்னு பேர் வச்சுகிட்டு ஒருத்தர் படகோட்டாம பதிவெழுதிட்டு இருக்கார். அவரை நிறுத்த சொல்லுங்க. நான் நிறுத்துறேன்.
கேப்ஷனைப் படிச்சுட்டு மனசு மாறி நாளை மறுநாள் பின்னூட்டிக்கலாம்னு போகாம இன்னிக்கே பின்னூட்டினதுக்கு நன்றி முத்துலெட்சுமி-கயல்விழி.
செம சுவாரசியமா இருந்துது..கொஞ்சம் டெரராவும் நிறைய நகைச்சுவையாவும்! :-)
ஆஹா.. என்னோட டெரர் உங்களுக்கு நகைச்சுவையா இருந்ததா? நன்றி சந்தனமுல்லை.
அவன் ரவுடி ஆனதுக்கு சித்திதான் காரணமா???? கமலஹாசன் ரேஞ்சுக்கு தான் யோசிக்கிறீங்க.
------க்கு ப்ளாக் படிக்கிற பழக்கம் இருக்காம்...அதுனால உசாரும்மா கண்ணு
அவ்வ்வ் எல்லார் ப்ளாக்கையும் படிக்கவேண்டியது ஆனா பின்னூட்டம் மட்டும் போடமாட்டீங்க இல்ல...
/*அவன் ரவுடி ஆனதுக்கு சித்திதான் காரணமா???? கமலஹாசன் ரேஞ்சுக்கு தான் யோசிக்கிறீங்க.*/
ஆளவந்தானை சொல்றீங்களா.. வர வர கமல் நான் திங்க் பண்ண திங்க் பண்ண சுட்டுடுறாரு.
/*------க்கு ப்ளாக் படிக்கிற பழக்கம் இருக்காம்...அதுனால உசாரும்மா கண்ணு*/
ம்ம்கும்.. அவர் பேரை எழுத்து கூட்டி வாசிக்கவே அவருக்கு ஒரு வாரம் ஆவும். அவரு என் ப்ளாகை படிக்கிறாரா.
/*அவ்வ்வ் எல்லார் ப்ளாக்கையும் படிக்கவேண்டியது ஆனா பின்னூட்டம் மட்டும் போடமாட்டீங்க இல்ல...*/
அதெல்லாம் இல்ல ஆதவன். தோ.. தோ.. பின்னூட்டமிட ஆரம்பிச்சாச்சு.
ரவுடிகள் பிறப்பதில்லை... உண்டாக்கப் படுகின்றார்கள் என்கிறீர்கள்... அப்படித்தானே...
நல்லா எழுதியிருகீங்க...
\\/*அவ்வ்வ் எல்லார் ப்ளாக்கையும் படிக்கவேண்டியது ஆனா பின்னூட்டம் மட்டும் போடமாட்டீங்க இல்ல...*/
அதெல்லாம் இல்ல ஆதவன். தோ.. தோ.. பின்னூட்டமிட ஆரம்பிச்சாச்சு.\\
ம்.. இந்த பயம் இருக்கட்டும். எல்லோருக்கும் பின்னூடமிடனும்...
/*நல்லா எழுதியிருகீங்க...*/
பாராட்டுக்கு நன்றி.
/*ம்.. இந்த பயம் இருக்கட்டும். எல்லோருக்கும் பின்னூடமிடனும்...*/
காசா பணமா.. கழுத பின்னூட்டம் தானே! போட்டுட்டா போச்சு. இனிமே தமிழ் மணம் ஏதாவது அறிவிப்பு வெளியிட்டால் கூட கூடி கும்மி விடலாம். ஸ்டார்ட் மீசிக்.
//கல்யாணம் பண்ணினா என்ன ஆகும்.. ஒரு வருஷத்துல குழந்தை பொறந்துச்சு.//
ஆனாலே ஆகிடுமா?
ஸாரிங்க..பெரிய ஆளுங்க சகவாசம்-லாம் வச்சிருக்கீங்க போல...தெரியாம கேட்டேன்...
:o)
ஆனா நல்லா எழுதியிருக்கீங்க ...
//
நான் இப்போ என்ன பண்ணிகிட்டு இருக்கேன்னு கேட்டான். வேலை இல்லாம வெட்டியா தான் இருக்கேன்னு தெரிஞ்சா, 'எனக்கு அடியாளா சேந்துக்கோனு சொல்லிடுவானோ'னு பயந்து, 'ஏபிசி கம்பெனியில பிபிசியா இருக்கேன்'னு ஏதோ உளறி வச்சேன்.
//
சோம்பு அண்ணே,
நீங்க சேராட்டி விடுங்க அண்ணே...அடியாள் அண்ணனோட அட்ரசு மெயில் பண்ணுங்க...அப்படியே என்னைய இன்ட்ரட்யூஸ் பண்ணி ஒரு லெட்டரும் குடுங்க...நான் போய் சேந்துக்கறேன்...பேங்கரெல்லாம் மஞ்ச நோட்டீஸ் குடுத்துட்டு "பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்...அய்யய்யோ அய்யய்யோ"ன்னு போயிட்டானா...இங்க தொழில் ரொம்ப டல்லடிக்குது! :0))
மருத பக்கம் எல்லாம் நம்ப பயக தான்...தெரிஞ்சா ஏரியா..கொஞ்சம் எடுத்து சொல்லுங்கண்ணே..
//சொல்ல மறந்துட்டேனே. இப்போ ஒரு கோயில் கட்டிக் கிட்டு இருக்கானாம். நான் சொல்லல.. பயவுள்ளைக்கு பக்தி ஜாஸ்தினு.//
இந்த கடைசி வரிகள படிச்சு நல்லா சிரிச்சேன்.
அருமையான narration. இன்னொரு blog ஆரம்பிச்சு கொஞ்சம் சீரியஸ் கதைகளையும் எழுதலாமே.
தொடர்ந்து எழுத என் வாழ்த்துக்கள்.
/*Its Me The Monk said...
பெரிய ஆளுங்க சகவாசம்-லாம் வச்சிருக்கீங்க போல.*/
அல்ல்லோ.. அப்போ நாங்க பெரிய ஆளு இல்லையா..
/*ஆனா நல்லா எழுதியிருக்கீங்க*/
நன்றி Monk.
/*அது சரி said...
கொஞ்சம் எடுத்து சொல்லுங்கண்ணே..*/
எத்தனை அண்ணன்.... போற போக்கைப் பாத்தா அவருக்கு அடியாள் தேவைப் படாது. எனக்குத் தான் பாதுகாப்புக்கு அடியாள் தேவைனு நினைக்கிறேன்.
அவர்கிட்ட தான் சேருவேன்னு அடம்பிடிச்சா, உங்களுக்கு Introduction letter எல்லாம் வேண்டாம். அவரைப் பத்தி பெருமையா எழுதிருக்கேன்னு சொல்லி இந்தப் பதிவோட print out copyயோட போய் நில்லுங்க. நல்ல்ல்ல்ல்லா கவனிப்பாங்க.
முழுக்க முழுக்க சீரியசா என்னால எழுத முடியாதுனு நினைக்கிறேன். ஒரு தொடரை ஆரம்பிக்கலாம்னு நினைச்சேன். அதுக்கு முன்ன ஒரு பரிசோதனை முயற்சி தான் இது.
வாழ்த்துக்களுக்கு நன்றி உள்ளத்தில் இருந்து..
அட சூப்பரா இருக்கு :)
"பரிசல்காரன்னு பேர் வச்சுகிட்டு ஒருத்தர் படகோட்டாம பதிவெழுதிட்டு இருக்கார். அவரை நிறுத்த சொல்லுங்க. நான் நிறுத்துறேன்"
கர்நாடகத்தை காவேரி தண்ணீர் விட சொல்லு அவரை படகோட்டா சொல்றோம்.
சோம்பேறி நல்வர கேட்டவரா????
//
'போயிட்டு வர்றேன் அண்ணே'ன்னு சொல்லிட்டு வானு அம்மா சொன்னாங்க. எனக்கென்னவோ அவனை அண்ணன்னு கூப்பிட மனசு வரல.
//
அற்புதம்!
Karthikeyan G said...
அட சூப்பரா இருக்கு :)
ரொம்ப நன்றி கார்த்திகேயன்:-)
/*♠புதுவை சிவா♠ said...
கர்நாடகத்தை காவேரி தண்ணீர் விட சொல்லு அவரை படகோட்டா சொல்றோம்.*/
சோனியா அக்காவை என்னை பிரதமராக்க சொல்லுங்க.. நான் கர்நாடகத்தை காவேரி தண்ணீர் விட சொல்றேன்.
/*சோம்பேறி நல்வர கேட்டவரா????*/
ISI, BSI, அக்மார்க், பூமார்க் முத்திரைகள் குத்தப்பட்ட நல்லவர்(நம்பி பிரதமராக்கலாம்)
நல்லாத்தான்யிருக்கு... fasta….
வேகமா படிக்க வெக்கிறீங்க
ஓ.. ரொம்ப நன்றி. உபயோகமான feed back. பதிவு நீளமாயிருக்கே, வேகம் குறைஞ்சுடுமோனு ரெண்டா பிரிச்சுடலாமானு யோசிச்சேன்.
nice story......
visit my blog .
http://my-e-mail.blogspot.com
I hope you will like my blog..
Post a Comment
தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு.