குங்குமத்தில் நான்

Friday, 10 April 2009

Views

முன் குறிப்பு: குங்குமப் பொட்டு வைத்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு கட்டையைக் கொடுக்க வில்லை. நிஜமாகவே குங்குமம் வார இதழில் வந்த எனது பதிவு.

முதலில் என் வலைப்பூவின் முழுப்பக்க வண்ண விளம்பரத்திற்கு குங்குமம் நிர்வாகத்துக்கு நன்றி.
(இது நான் இல்லை. சுனைனா. இதற்கடுத்து என்னுடையது.)

(இது வடகரை வேலன் அண்ணாச்சி. சே. அவரது படைப்பு.)
(இது பூக்காதலனுடையது)

(படத்தை க்ளிக் செய்து பெரிதாக்கிப் பார்க்கலாம். அப்படியும் தெளிவாகத் தெரியாவிட்டால் மன்னிக்கவும். என் காமெரா அப்படி.)

கணினித் துறையில் குப்பை கொட்டிக் கொண்டிருந்தாலும், கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு வரை எனக்கு வலைப்பூக்கள் பற்றி எதுவும் தெரியாது.

குங்குமம் போன்ற ஒரு வெகுஜன ஊடகம், சிலருக்கே அறிமுகமான வளரும் ஊடகமான வலைப்பூக்களை விளம்பரப்படுத்துவது ஆரோக்கியமான விஷயம். உங்கள் ஊக்கத்திற்கு நன்றி.

சின்ன வருத்தம்: நான் பல பிள்ளைகளிடம் மணிக்கணக்காக கடலை போட்டு, PHd ரேஞ்சுக்கு ஆராய்ச்சி செய்து எழுதிய ஒரு டெலி பேங்கரின் அனுபவங்கள் போன்ற பதிவுகளை விட்டு விட்டு, எனக்கு வந்த குறுஞ்செய்தியை ஆல்டர் செய்து எழுதிய பதிவைப் பிரசுரித்திருக்கிறீர்களே..

19 மச்சீஸ் சொல்றாங்க:

Ungalranga said...

அட.. யாருமே பாராட்டலியா..?

பரவாயில்லை.. நான் பாராட்டுகிறேன்.. வாழ்த்துக்கள்!!

கலக்குங்க.(எத?ன்னு கேக்க கூடாது)

♫சோம்பேறி♫ said...

அட ஆமாங்க ரங்கன்.. குவாட்டரும் கோழி பிரியாணியும் வாங்கித் தந்தா தான் வாழ்த்துவாங்க போல. வாழ்த்துக்கு நன்றி.

Anonymous said...

வாழ்த்துகள்

♫சோம்பேறி♫ said...

வாழ்த்துக்களுக்கு நன்றி க்ளோபன்

☀நான் ஆதவன்☀ said...

வாழ்த்துகள் சோம்பேறி. உங்கள் இயல்பான நகைச்சுவை உணர்வுக்கு கிடைத்த வெற்றி இது. இன்னும் கவனிக்கப்பட்டுகொண்டிருக்கிறீர்கள்...ஆதலால் தொடரட்டும் உங்கள் பணி :))

நீங்க சொன்ன மாதிரி உங்க "டெலிபேங்கர்ஸ்" எனக்கு பிடிச்ச பதிவு..

Anonymous said...

வாழ்த்துக்கள். பிரியாணி ok. குவாட்டர் எனக்கு வேண்டாம். நீங்களே வச்சுக்குங்க.

இப்படிக்கு,

உங்க பழைய பதிவுகளையும் படிச்சு பாராட்டின அனானி. (நேத்தைய பதிவுல என்னை நினைவு வச்சி நன்றி சொன்னதுக்கு, உங்களுக்கும் நன்றிங்கோ.)

♫சோம்பேறி♫ said...

நன்றி ஆதவன். 'எனக்கு வாழ்த்துவதும் வாழ்த்தப்படுவதும் மிகவும் பிடிக்கும்'னு ஓப்பன் ஸ்டேட்மெண்ட் கொடுத்தவரை இன்னும் ஆளைக் காணோமேனு பார்த்தேன். வந்துட்டீங்க.

அந்த டெலி பேங்கர்ஸ் பதிவுக்கு 'குஜிலியின் குஜாலான அனுபவங்கள்'னு தலைப்பு வச்சிருக்கனும்.

♫சோம்பேறி♫ said...

வாய் விட்டு கத்துமளவு, என்னை மிகவும் சந்தோஷப்படுத்திய முதல் கருத்துரை உங்களது.

என் பதிவு எந்த அளவு உங்களுக்குப் பிடித்திருந்தால் பழைய பதிவுகள் அணைத்தையும் ஒரே நாளில் படித்திருப்பீர்கள். அதனால் தான் நன்றி பதிவில் முதல் பெயராக(?!!!) உங்களைக் குறிப்பிட்டிருந்தேன்.

இன்னும் தொடர்ந்து படிக்கிறீர்கள் என்று தெரிந்து மிகவும் மகிழ்ந்தேன்.

வாழ்த்துக்களுக்கு நன்றி

குவாட்டர் வேண்டாமா?(ஐ லேடீஸ் லேடீஸ்).

அறிவிலி said...

//சோம்பேறி said...
அட ஆமாங்க ரங்கன்.. குவாட்டரும் கோழி பிரியாணியும் வாங்கித் தந்தா தான் வாழ்த்துவாங்க போல. வாழ்த்துக்கு நன்றி.//

கா

☀நான் ஆதவன்☀ said...

//சோம்பேறி said...

நன்றி ஆதவன். 'எனக்கு வாழ்த்துவதும் வாழ்த்தப்படுவதும் மிகவும் பிடிக்கும்'னு ஓப்பன் ஸ்டேட்மெண்ட் கொடுத்தவரை இன்னும் ஆளைக் காணோமேனு பார்த்தேன். வந்துட்டீங்க.//

ஆஹா என்னையயும் வாட்ச் பண்றீங்க போல...

Anonymous said...

//இன்னும் தொடர்ந்து படிக்கிறீர்கள் என்று தெரிந்து மிகவும் மகிழ்ந்தேன்.//

ஹி..ஹி..நானும் உங்களை போலத்தான், சோம்பேறி.:-) பின்னூட்டம் போடலைன்னாலும், தொடர்ந்து படிக்கிறேன்.

//குவாட்டர் வேண்டாமா?(ஐ லேடீஸ் லேடீஸ்).//

ஐயய்யோ, கண்டு பிடிச்சிட்டிங்களே? இதத்தான் 'நுணலும் தன் வாயால் கெடும்'ன்னு
சொன்னாய்ங்களோ? ;-))

சித்ரா

♫சோம்பேறி♫ said...

/*அறிவிலி said... கா*/

ஆஹா அறிவிலி. நேத்து நர்சிம் பதிவைப் பாத்து, நீங்க என்னை வாழ்த்தலைன்னா எனக்கு விஷயமே தெரிஞ்சிருக்காது.

/*நான் ஆதவன் said...
ஆஹா என்னையயும் வாட்ச் பண்றீங்க போல...*/

ஆமாங்க ஆதவன்.. சங்கத்து சிங்கத்த தெரியாம இருக்குமா..

♫சோம்பேறி♫ said...

நன்றி சித்ரா. கண்டிப்பா தொடர்ந்து படிக்கனும். திடீர்னு பரிட்சை வச்சு கேள்வி கேப்பேன்.

Anonymous said...

//திடீர்னு பரிட்சை வச்சு கேள்வி கேப்பேன்.//

இதென்ன? உங்க பதிவை படிச்சிட்டு பாராட்டினதுக்கு தண்டனையா? :- ))

சித்ரா

♫சோம்பேறி♫ said...

ஹையையோ சித்ரா.. அதெல்லாம் இல்ல. நீங்க வந்தா மட்டும் போதும்.. வந்தா மட்டும் போதும்.

Anonymous said...

வாழ்த்துகள்.....சோம்பேறி....

Friday பதிவுல என்னை நினைவு வச்சி நன்றி சொன்னதுக்கு, உங்களுக்கும் நன்றி......

Sorry for delay (Friday,Saturday & Sunday holidays)...
Vijay

Anonymous said...

வாழ்த்துக்கள் & நன்றி.

நீங்க பேர்லதான் சோம்பேறி. நான் உண்மையிலேயே சோம்பேறி பாருங்க. நீங்க 10ஆந்தேதி போட்ட பதிவுக்கு நான் 13ஆம் தேதி பின்னூட்டம் போடுறேன்.

♫சோம்பேறி♫ said...

வாழ்த்துகளுக்கு நன்றி விஜய்.

அழகிரி பத்தின பதிவுகளுக்கு கூட தைரியமா பின்னூட்டுற தொடர் ஆதரவாளராச்சே நீங்க. உங்களுக்கு நன்றி சொல்லாம இருக்க முடியுமா?

எனக்கும் உங்களைப் போல வாரத்துக்கு மூனு நாள் லீவ் கிடைக்குற வேலைல சேரனும்னு ஆசை தான். என்ன செய்ய? வேலை கிடைக்க மாட்டேங்குதே!

********

வாழ்த்துக்களுக்கு நன்றி வடகரை வேலன் அண்ணாச்சி.

நீங்க என் பேருக்கு ஏத்த மாதிரி இருக்கீங்களோ இல்லையோ! உங்க பேருக்கு ஏத்த மாதிரி ரெண்டு அண்ணிகள் கூட ஜம்முனு போஸ் குடுத்துருக்கீங்க(குங்குமம் கார்ட்டூன் உங்களை உக்கார வச்சு பாத்து பாத்து வரைஞ்சாங்களோ!)

பூக்காதலன் said...

தனி பதிவிட்டு வாழ்த்திய தங்களுக்கும் மற்ற நண்பர்களுக்கும் நன்றி.

Post a Comment

தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு.

Blog Widget by LinkWithin
 
சோம்பேறி. Design by Pocket