Views
நான் சமைத்தவை, ரசித்தவை, இது வரை யாரும் ருசிக்காதவை
வெயில் காலம் என்றாலே எங்க வீட்டில் சிலருக்கு கவலை! பின்னே இன்று வென்னீர் கிடைக்காதே. அதனாலேயே வெயில் காலங்களில் திருட்டுத்தனமாக வென்னீர் சமைப்பதுண்டு(!?). இன்று காலையிலேயே வென்னீர் வைப்பது என நினைத்ததை செயல்படுத்தியது கீழே:
வென்னீர்:
தேவையானவை:
1) அடுப்பு(கேஸ் அடுப்பாக இருந்தால் எரி வாயு கண்டிப்பாக இருக்க வேண்டும்)
2) தீப்பெட்டி(உள்ளே கண்டிப்பாக தீக்குச்சி(கள்) இருக்க வேண்டும்)
3) 500 மிலி பிடிக்கும் பாத்திரம்(ஓட்டை எதுவும் இருந்தால் முதற்கண் அடைத்து விடவும். ப்ளாஸ்டிக் பாத்திரத்தைத் தவிர்க்கவும்)
4) குளிர்ந்த நீர்
அப்படியே நில்லுங்க, பால்காரரிமாவது, ரேஷன் கடையிலாவது ஒரு 500 மில்லி லிட்டர் அளவையை ஆட்டை போடுவோம்..
ஹைய்யோ.. கையையும், காலையும் கீழே போடுங்க. ஒரு பேச்சுக்கு அப்படியே நில்லுங்கனு சொன்னா, இப்படியா அய்யனார் கோவில் சிலை மாதிரி போஸ் கொடுத்து கிட்டு நிக்கறது?
இப்போது தேவையான பொருட்கள் ரெடி. நீங்களும் ரெடி.
செய்முறை:
1) முதலில் நீர் குளிர்ச்சியாக இருக்கிறதா என்று சோதனை செய்து பார்க்கவும். சூடாக இருந்தால் குளிர் சாதனப் பெட்டியில் ஒரு அரை மணி நேரம் வைத்து குளிரூட்டவும்.
2) அரை மணிக்குப் பிறகு, நன்றாக குளிர்ந்து விட்டதா என்று சோதனை செய்ய, உங்கள் வீட்டு நாய் மீது 100 மிலி நீரை ஊற்றவும். அது அலறிக் கொண்டு எழுந்து, உங்களைக் கடிக்க வந்தால் நீர் குளிர்ந்து விட்டது எனப் பொருள் கொள்க.
3) இப்போது 500 மிலி அளவையில், 500 மிலி நீரை அளந்து பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைக்கவும்.
4) மறக்காமல் அடுப்பை பற்ற வைக்கவும்.
5) நீரில் முட்டை முட்டையாக வந்த பிறகு(சுமாராக பதினைந்து நிமிடம் கழித்து), இறக்கி விடவும்.
இனி,
நீர் சூடாகி விட்டதா என சோதிக்க, 50 மிலி நீரை எடுத்துக் கொண்டு போய் தூங்கிக் கொண்டிருக்கும் உங்கள் கணவர் முகத்தில் ஊற்றவும்(நாய் பாவமல்லவா.. மேலும் நாய் போல் இவர் கடிக்கவெல்லாம் வர மாட்டார். முகத்தைத் துடைத்துக் கொண்டு பேசாமல் தூக்கத்தைத் தொடர்வார்)
தொட்டுக்க:
பிரியானி வகைகள்
தக்காளி சோஸ்(இதற்கு அர்த்தம் தெரியாததால், தூயா பதிவில் உள்ளது போல அப்படியே)
அம்புட்டு தான்!
10 மச்சீஸ் சொல்றாங்க:
வவ்வ்வ்வ்
வவ் வவ்...வவ்வ்...வவ்வ்
அவ்வ்வ்வ்வ்வ்வ்..
தண்ணி ஊத்தின நாயிதாங்க அழுவுது...கூட நானும் தான்
ஹை! வொர்க் அவுட் ஆயிடுச்சு! வொர்க் அவுட் ஆயிடுச்சு! Girl friendகோ Wifeகோ வலைப்பூவை இனிமே யாரும் காமிச்சுக் குடுக்காதீங்க..
நல்ல வேலை...
நான் இன்னும் கல்யாணம் பண்ணிக்கலை..
பண்ணிக்கொண்டதும் கண்டிப்பா...
காட்ட மாட்டேன்னு சொல்லவந்தேன்...ஹிஹி..
ஆஹா.. சொந்த செலவில சூனியம் வச்சிகறதுனு இதத் தான் சொல்றாய்ங்களோ? விளம்பரம் போச்சே!
ஆஹா...வண்ணாத்துபூச்சி விருதெல்லாம் குடுத்த என்னையேவா கலாய்ப்பது..உங்களுக்கு வெந்நீர் போடும் செய்முறை மறந்து போகட்டும் என சபிக்கிறேன்..
very nice.
kindly send us the details to make hotwater with micro wave oven.
/*♥ தூயா ♥ Thooya ♥ said...
ஆஹா...வண்ணாத்துபூச்சி விருதெல்லாம் குடுத்த என்னையேவா கலாய்ப்பது..உங்களுக்கு வெந்நீர் போடும் செய்முறை மறந்து போகட்டும் என சபிக்கிறேன்..*/
வண்ணத்துப் பூச்சி விருதையே கலாய்த்து எழுதி வைத்திருக்கிறேன். உங்களைப் போல் பின்னூட்டுகிற ஒன்றிரண்டு பேரும் பிச்சிகிட்டு பறந்து போய்டுவீங்களோனு பயந்து போய் publish செய்யாமல் வைத்திருக்கிறேன்.
வெந்நீர் போடும் செய்முறை ஞாபகம் இருக்கும் போதே செய்ய முடியவில்லை. மறந்து விட்டால் விளங்கி விடும். ஏதாவது சாப விமோசனம் இருந்தால் சொல்லுங்கள். செய்து விடுகிறேன்.
/*ஜோசப் பால்ராஜ் said...
very nice.
kindly send us the details to make hotwater with micro wave oven.*/
நன்றி ஜோசப் பால்ராஜ்.
உங்களுக்கு இல்லாததா.. அதற்கு முன், Please Enter your credit card number.
நேத்து ரொம்ப பிஸி.....
சுடு தண்ணி பதிவு சூப்பர்
மக்களே இதை நீங்க யாருக்காவது பயன்படுத்திடாதீங்கப்பா..
Vijay
/*Anonymous said...
நேத்து ரொம்ப பிஸி.....*/
முந்தா நாள் நைட் எட்டரை மணிக்கு இதை publish பண்ணினேன். அதனால miss பண்ணிருப்பீங்க.
/*மக்களே இதை நீங்க யாருக்காவது பயன்படுத்திடாதீங்கப்பா..*/
ஏன் விஜய் யாவாரம் நடக்குற இடத்தில வந்து பொழப்பக் கெடுக்குறீங்க..
நல்ல சமையல் குறிப்பா இல்லை இருக்கு..... தொடருட்டும் உங்கள் பணி!!!!!
Post a Comment
தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு.