அன்றும் இன்றும்

Friday 20 March, 2009

Views

முன் குறிப்பு(எச்சரிக்கை): இது முந்தைய நமீதா ஸ்பெஷல் பதிவின் தொடர்ச்சி அல்ல. 'அன்றைய சில்க் ஸ்மிதா, ஜெய மாலினியை இன்றைய நமீதா, நயன் தாராவுடன் ஒப்பிட்டு எழுதப்பட்ட பதிவு' என்று எதிர்பார்த்து ஏமாற வேண்டாம்.

'இந்தியா நிஜமாகவே வளர்ச்சி அடைந்திருக்கிறதா' என்று என்னை சிந்திக்க வைத்த, 09.12.1990இல் வெளிவந்த கல்கி இதழில் இருந்து சில பக்கங்களும், என் கருத்தும்..

மாறியிருப்பது

1) வைகாசி பொறந்தாச்சு திரைப்பட விமர்சனம் - சி.ஆர்.கே.

கதைக்கு சம்பந்தமில்லாத ஒரு தலைப்பை முடிவு செய்து விட்டு, அதை நியாயப்படுத்த முயற்சி செய்வது வழக்கமாகி விட்டது. ஒரு மஞ்சள் நீராடல் பாடலில் 'வைகாசி பொறந்தாச்சு' என்கிற வரியை இடம் பெறச் செய்து, தலைப்பை நியாயப்படுத்த முயற்சி..

எத்தனை பேர் சூழ்ந்து கொண்டு, எத்தனை வகையான ஆயுதங்களைக் கொண்டு தாக்கினாலும் அவர்கள் அனைவரையும் புரட்டிப் புரட்டி எடுப்பது கதா நாயகனின் அடிப்படைத் தகுதி. ப்ளஸ் டூ மாணவனான நாயகனைத் தாக்க வருபவர்கள் உரமேறிப் போன முரட்டு ஆட்கள்!

இப்படி எதிர்பாராத தாக்குதலுக்கு உள்ளாகி விடும் அந்த இளைஞனின் பார்வையில் MGR, ரஜினி, கமல் படப் போஸ்டர்கள் தென்பட, உடனே அத்திரைப்பட சண்டைக் காட்சிகள் அவன் மனக் கண்ணில்(ஏன் திரையிலும் தான்) தெரிய, அந்தந்த பாணியில் சண்டையிட, அந்த காட்சிகள் அவன் மனக்கண்ணில் தோன்ற போதிய அவகாசம் அளித்து அடிக்க வந்தவர்கள் காத்திருக்கிறார்கள்!

பெண்கள் கூட்டம் சூழக் கதா நாயகி அம்மன் கோயில் 'ஆத்தா.. ஆத்தா.." என்று பாடிக் கொண்டு ஆடுவது வெற்றிப் படங்களுக்கு மற்றும் ஒரு முக்கிய அம்சம்! உச்சகட்டக் காட்சியே அப்படியொரு நடனத்தைத் தொடந்து தான்.

சட்டம், போலிஸ் எதைப் பற்றியும் கவலைப் படாமல் அடியாட்களைக் கூப்பிட்டு, "அவனைத் தீர்த்துக் கட்டிவிட்டு வா" என்று உத்தரவிடுவது தான் வில்லனுக்கு இலக்கணம். இப்படத்தின் வில்லனும் அதற்கு விலக்கு அல்ல.

முடிவில் அதர்மம் தோற்று, தர்மம் ஜெயிக்க வேண்டும். ஜெயித்து விடுகிறது. -- சி.ஆர்.கே.

இன்று: இப்போதுள்ள திரைப்படங்களில் ஒரே ஒரு மாற்றம். கதா நாயகி "ஆத்தா.. ஆத்தா" என்று ஆடாமல் "---- ----" என்று ஆடுகிறார்.

------------********************-------------

மாற்ற முடியாதது
1)

ரூம் போட்டு யோசிப்போர் சங்கம்?!
************

2)
சுண்டி இழுத்த விளம்பர உலகம்?!
***********

3) தராசு - நீங்கள் கேட்டவை

கேள்வி : 'தி.மு.க. கருணாநிதி குடும்பத்தாரின் புரொப்ரைட்டர் ஷிப் நிறுவனம் ஆகி விட்டது' என்று ராமகிருஷ்ணன் குற்றம் சாட்டுகிறாரே?
தராசு பதில் : அதாவது தேவலாம். அவர் சேந்திருக்கும் அ.தி.மு.க. ஜெ.யின் 'ஸோல் புரொப்ரைட்டர் ஷிப்' ஆச்சே!

No comments

------------********************-------------

மாற வேண்டியது

1)
ஆட்டோ சங்கரும் முதல்வருக்குக் கடிதம் எழுதியிருப்பார். மனு என்று நினைத்து கடிதத்தைப் படித்துப் பார்க்காமலேயே, முதல்வர் ராக்கெட் விட்டு விளையாடியிருப்பார்.
***********

2)
மாற வேண்டியது பெயர் மட்டும் அல்ல.

5 மச்சீஸ் சொல்றாங்க:

மனுநீதி said...

'யார் தான் நாங்கள்' செய்தி துணுக்கு உண்மையிலே மனதை என்னவோ செய்தது .

பழைய செய்திகளை படிப்பதே ஒரு அலாதி சுகம் தான். தொடர்ந்து இந்த மாதிரி பதிவுகள அவ்வப்போது போடுங்கள்.

♫சோம்பேறி♫ said...

எனக்கும் 'யார்தான் நாங்கள்' படித்ததும் கஷ்டமாகி விட்டது. இப்போது இந்த நிலைமை மாறியிருக்கிறதா என்று யாராவது சொன்னால் நன்றாக இருக்கும்.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//
இப்படி எதிர்பாராத தாக்குதலுக்கு உள்ளாகி விடும் அந்த இளைஞனின் பார்வையில் MGR, ரஜினி, கமல் படப் போஸ்டர்கள் தென்பட, உடனே அத்திரைப்பட சண்டைக் காட்சிகள் அவன் மனக் கண்ணில்(ஏன் திரையிலும் தான்)//

அப்படி போடு....

♫சோம்பேறி♫ said...

ஆடி வெள்ளி என்ற படத்தில் யானை கூட சினிமா போஸ்டர்களைப் பார்த்து சண்டை போடும் என்று நினைக்கிறேன் SUREஷ்.

சென்ஷி said...

யார்தான் நாங்கள்.. இப்போதைய சூழலில் மீண்டும் பதிவு செய்யப்பட வேண்டிய ஒன்றுதான் :((

Post a Comment

தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு.

Blog Widget by LinkWithin
 
சோம்பேறி. Design by Pocket