சுண்டி இழுத்த விளம்பரங்கள்

Friday, 13 March, 2009

Views

முன்குறிப்பு: லக்கிலுக் aka யுவகிருஷ்னாவின் சுண்டி இழுக்கும் விளம்பர உலகம் புத்தக விமர்சனத்தை காண இங்கே க்ளிக்கினால், இங்கேயே தான் இருப்பீர்கள் என்பதால் தொடர்ந்து படிக்கவும்.

நேற்று எந்திரத்தனமாக தொலைக் காட்சியில் சேனல்களை மாற்றிக் கொண்டிருந்த போது, இரு சகோதரிகள் ஆங்கிலப் பட பாணியில் சண்டைப் போட்டுக் கொள்வதைப் பார்த்ததும் என் அப்பா 'அதை வை. ஏதோ இங்லிஷ் படம் போடுறான்' என்றார்.

இல்லப்பா.. அது பஜாஜ் DTS SI பைக் விளம்பரம்..
அட முட்டாப் பயபுள்ளைகளா.. பைக்குக்கா இப்படி அடிச்சுக்குதுங்க..
பைக்ல வர பையனுக்கும் சேத்து தான்பா..
அப்ப சரி.. அடிச்சுக்க வேண்டியது தான்.

எங்க ஊர் லோக்கல் நகைக் கடை விளம்பரம் கோலிவுட் தரத்துக்கு(தீபா வெங்கட் வருகிறார்) இருக்கும் போது, இண்டர்னேஷனல் பிராண்ட் ஹாலிவுட் தரத்தில் இருப்பதில் சந்தேகமே இல்லை. சில சமயங்களில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை விட, விளம்பரங்கள் சுவாரஸ்யமாக இருக்கின்றன.

திரைப்படத்தில் கதாநாயகர்கள் முக்கால் மணி நேரம் மூச்சு விடாமல் அறிவுரைக்கும் போது ஏற்படாத உணர்வை, இந்தியா பாகிஸ்தான் எல்லையில் உள்ள முள் வேலியின் ஊடே இந்திய சிறுவனும், பாக்கிஸ்தானிய சிறுவனும் கால் பந்து விளையாடும் ஏர்டெல் விளம்பரம் ஏற்படுத்தி விடுகிறது. இப்போதுள்ள ஏர்டெல் விளம்பரமும் சான்ஸே இல்லை. பிச்சு உதறியிருக்கிறார்கள்.

சிறு வயதில் நான் மிகவும் ரசித்து சிரித்த ஒரு போலோ விளம்பரம்(என்று நினைக்கிறேன்). ஹிந்தி டப்பிங் தான்.

புகை வண்டியில் ஒரு அம்மாவும், ஏழு வயது பையனும் பயனம் செய்கிறார்கள்.
(1940 திரைப்பட பாணியில்)
அம்மா: (கொஞ்சலாக)கண்ணா.. ஸ்வெட்டர் போட்டுகோ..
சிறுவன்: வேண்டாம்..

அம்மா: (அதட்டலாக)கண்ணா.. ஸ்வெட்டர் போட்டுகோ..
சிறுவன்: வேண்டாம்..

அம்மா: (கோபமாக)கண்ணா.. ஸ்வெட்டர் போட்டுகோ..

(ரயில் குகைக்குள் செல்கிறது.. இருட்டில், குழப்பத்தில், கூட வரும் ஒரு 40 வயது மதிக்கத் தக்க சக பயணி ஒருவருக்கு ஸ்வெட்டரை மாட்டி விடுகிறார்.)

சக பயணி: (அழுகையுடன்)வேண்டாம்..

சிறிது நேரம் கழித்து..

அம்மா: கண்ணா.. பாத்ரூம் போ..
(என்று சொல்லிவிட்டு பையனின் பேண்டைக் கழட்ட வரும் போது மீண்டும் குகை. இருட்டு)
சக பயணி: (அழுகையுடன்)வேண்டாம்..

ஹஹா.. ஹா.. ஹையோ.. ஹஹஹா.. நீங்க என்னங்க சிரிக்கவே மாட்டேங்கறீங்க.. ஸ்வெட்டருடன் அந்த பயணி பரிதாபமாக பார்க்கும் போது அம்மா டக்கென ஜன்னல் பக்கம் திரும்பி கொடுக்கும் ரீயாக்ஷனையும், "கண்ணா.. பாத்ரூம் போ" என்று சொல்லும் போது அந்த குட்டிப் பையன் போலோ சுவைத்துக் கொண்டே, குகையைப் பார்த்து ஒரு சிரிப்பு சிரிப்பானே அதையும் பார்த்திருந்தால் நிச்சயம் சிரித்திருப்பீர்கள்.

சூரியன் FMமில் இன்று காலை நான் கேட்ட விளம்பரம்:

Mr. சந்திரன் நீங்க ஒரு பொறாமை பிடிச்சவரு.. என்னைப் பத்தி மேனேஜர் கிட்ட பல தடவ புகார் பண்ணிருக்கீங்க. ஆனாலும் உங்க நண்பராகி, உங்க கூட பைக்ல வர விரும்புறேன்.
ஆமா Mr.இந்திரன். நீங்க ஒரு வெக்கம் கெட்டவரு. என் promotionனை ரெண்டு தடவை தடுத்திருக்கீங்க.. ஆனாலும் உங்க நண்பராக விரும்புறேன். இன்னிக்கு நீங்க என் பைக்ல வாங்க. நாளைக்கு நான் உங்க பைக்ல வர்றேன்.

கருத்து: பெட்ரோலை சேமியுங்கள்!

இதை சிரிக்காமல் சொல்வதற்கு எத்தனை டேக் வாங்கினார்களோ?

சென்ற வருடங்களில், ஹலோ பன்பலை என்று நினைக்கிறேன்.. அதில் இரவு 12 மணியளவில் நாய், வங்கி, செருப்பு ஏன் விளம்பரத்துகே விளம்பரம் போடுவார்கள். இப்பொழுதும் போடுகிறார்களா என்று தெரியவில்லை. வார்த்தைகள் முழுதும் சரியாக நினைவில் இல்லை.

முதல்வர் : சே! நைட் ட்யூட்டி முடிஞ்சு வரப்போ ரொம்ப போர் அடிக்குதுப்பா!
இரண்டாமவர்: ஏம்பா? உங்க ஏரியால நாயே கிடையாதா?
முதல்வர் : என்னது நாயா!!! அப்படின்னா என்ன?
இரண்டாமவர்: ஆமா. நாயி. நம்ம நைட் வேலை முடிஞ்சு வரப்போ தெரத்தி, தெரத்தி கடிக்க வரும். நாம ஜாலியா ஓடலாம்.
முதல்வர் : அப்படியா!!! ரொம்ப நன்றி சந்திரன். இன்னிகே 4 நாய் வாங்கி எங்க ஏரியால விட்டுடுறேன்.

முதல்வர் : சந்திரன்! ஏன் ரொம்ப கவலையா இருக்கீங்க?
இரண்டாமவர்: எங்க வீடு பூராவும் பணமா இருக்கு.. பீரோ, கிச்சன், ஸோஃபா எங்க பாத்தாலும் ஒரே பணமா இருக்கு.. என்ன பண்றதுன்னே தெரியல..
முதல்வர் : ஏன் உங்க பணத்தை நீங்க பேங்க்ல போட்டு வைக்கக் கூடாது?
இரண்டாமவர்: என்னது பேங்கா!!! அப்படின்னா என்ன?
முதல்வர் : ஆமா. பேங்க். நம்ம பணத்தை அவங்க கிட்ட குடுத்து வச்சுட்டு வேணுங்கறப்போ வாங்கிக்கலாம். சில சமயம் நமக்கு வேலை வைக்காம அவங்களே நம்ம பணத்தைத் தூக்கிட்டு எங்கயாவது ஓடிடுவாங்க..
இரண்டாமவர்: அப்படியா!!! ரொம்ப நன்றி சந்திரன். இன்னிகே என் பணத்தை எல்லாம் பேங்க்ல போட்டுடறேன்.

முதல்வர் : சந்திரன்! ஏன் ரொம்ப கவலையா இருக்கீங்க? வியாரமெல்லாம் எப்படி போகுது?
இரண்டாமவர்: யாரும் கடைப் பக்கமே வர்றதில்லை. ஈ ஓட்டிட்டு இருக்கேன். என்ன பண்றதுன்னே தெரியல..
முதல்வர் : ஏன் உங்க வியாபாரத்தை பத்தி நீங்க விளம்பரம் பண்ணக் கூடாது?
இரண்டாமவர்: என்னது விளம்பரமா!!! அப்படின்னா என்ன?
முதல்வர் : ஆமா. விளம்பரம். பணம் குடுத்தா நம்ம கடையைப் பத்தி டிவி, ரேடியோ, நியூஸ் பேப்பர் எல்லாத்துலயும் ஆஹா, ஓஹோனு புகழ்ந்து பேசுவாங்க..
இரண்டாமவர்: அப்படியா!!! ரொம்ப நன்றி சந்திரன். இன்னிகே என் கடையைப் பத்தி எல்லாத்துலயும் விளம்பரம் பண்ணிடறேன்.

10 மச்சீஸ் சொல்றாங்க:

உருப்புடாதது_அணிமா said...

1 ST????

உருப்புடாதது_அணிமா said...

Yeah....

சோம்பேறி said...

/*உருப்புடாதது_அணிமா சொன்னது…

1 ST????

உருப்புடாதது_அணிமா சொன்னது…

Yeah....*/
இது என்ன அணிமா? நானே கேள்வி நானே பதிலா?

குடுகுடுப்பை said...

இன்னும் ரெண்டுநாள் கழிச்சு படிக்கிறேன்

அறிவிலி said...

எனக்கு புடிச்சது "வெற்றி பெற்றவர்கள் விரும்பும் பாக்கு... ரோஜா பாக்கு"
இதுக்குத்தான் விளம்பர ஏஜென்சி எல்லாம் தேவையில்லை, ஒரு கேமரா இருந்தா போதும்,நம்மளே எடுத்துக்கலாம்.

சோம்பேறி said...

|/*குடுகுடுப்பை சொன்னது…
| இன்னும் ரெண்டுநாள் கழிச்சு படிக்கிறேன்*/

ரொம்ப நன்றிங்க.. அப்படியாவது ஹிட்ஸ்ல ஒன்னு ஏறட்டும்.

|/*அறிவிலி சொன்னது…
| எனக்கு புடிச்சது "வெற்றி பெற்றவர்கள் |விரும்பும் பாக்கு... ரோஜா பாக்கு"
| இதுக்குத்தான் விளம்பர ஏஜென்சி எல்லாம் |தேவையில்லை, ஒரு கேமரா இருந்தா |போதும்,நம்மளே எடுத்துக்கலாம்.*/

பூக்கடைக்கு விளம்பரம் தேவையானு நினைச்சிருப்பாங்க.. போட்டி அதிகமானதும், அவங்களும் ஷங்கர் பட ரேஞ்சுக்கு எடுக்க ஆரம்பிச்சுடுவாங்க. ஆமா.. அது நிஜாம் பாக்கு இல்ல?

Newspaanai said...

தங்கள் பதிவை www.newspaanai.com இல் சேர்த்து பலருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். www.newspaanai.com தமிழ் சோசியல் பூக்மர்கிங் சைட் தங்கள் பதிவில் newspaanai பட்டனை சேர்த்து பதிவுகளை www.newspaanai.com ல் எளிதாக சேர்க்கலாம். மேலும் விபரங்களுக்கு கீஷே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும். http://www.newspaanai.com/easylink.php#blogger நன்றி.

பார்சா குமார‌ன் said...

ஆமாம். அது நிஜாம் பாக்கு

அறிவிலி said...

ஆம், நிஜாம் பாக்குதான்..நான்தான் தவறாக எழுதிவிட்டேன்.

சென்ஷி said...

:-)

Post a Comment

தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு.

Blog Widget by LinkWithin
 
சோம்பேறி. Design by Pocket