தீ - நான் கொஞ்சம் மென்டல்(நமீதா ஸ்பெஷல்)

Wednesday, 18 March, 2009

Views

உன்னிடம் இருப்பதை நீ உலகத்திற்கு காட்டு.. இந்த உலகம் உன்னை நேசிக்கும்.. - சொன்னவர் நமீதா.

நமீதா சொன்னதை தான் செய்வார். செய்வதை தான் சொல்வார். சினிமா நடிகை ருச்சி தேவியாக வரும் நமீதா, எவ்வளவு லாங் ஷாட்டில் காட்டப் பட்டாலும் க்ளோஸ் அப்பில் தான் தெரிகிறார். அவ்வளவு பிரம்மாண்டமாக இருக்கிறார்.
முதல் முறை சந்திக்கும் போது, நமீதா சுந்தர்.சி நெஞ்சில் விரல்களை மடக்கி குத்துகிறார். பிறகு பிறாண்டுகிறார். பிறகு கடித்து வைக்கிறார். பிறகே 'நீ நெஞ்சு தைரியம் பிடிச்சவன் தான்' என்று சொல்லி கட்சியில் சேர்த்துக் கொள்கிறார்.

'உங்களால் தான் அரசியலில் முன்னுக்கு வந்தேன்' என்று நமீதாவிடம் ஆளாளுக்கு வழியும் போது, 'ஒரு நடிகையால் எப்படி? நல்லா பூ சுத்துறாங்களே' என்று நினைத்தேன். மேற்படி காட்சியை பார்த்த பிறகு தான் புரிந்தது, எல்லா தொண்டர்களையும் இப்படி தேர்வு செய்திருப்பதால் தான், இந்த உப்புமா கட்சியில் இத்தனை பேர் அடித்து பிடித்து சேந்திருக்கிறார்கள் என்று..

ஒவ்வொரு முறையும் background blur effectடுடன், இடி மின்னல் வெட்ட, பயங்கரமான பிண்ணனி இசையுடன், ஸ்லோ மோஷனில் நடந்து வந்து சம்பவ இடத்தை அடையவே நாயகன் சுந்தர்.சிக்கு ஐந்து நிமிடம் ஆகிறது. இங்கே கூட பாருங்கள். நீங்கள் ஒரு நிமிடம் நமீதா பற்றி படித்து விட்டு, நான்கு நிமிடங்கள் அவர் புகைப் படத்தைப் பார்த்து முடித்த பிறகு, சாவகாசமாக ஐந்து நிமிடம் கழித்து நான்காவது பாராவில் தான் வந்து சேர்ந்திருக்கிறார்.

சூப்பர் மேனைக் கூட க்ரிப்டன் கிரக க்ரிஸ்டலால் சாவடித்து விடலாம். சுந்தர்.சியை எதனாலும் சாவடிக்க முடியாது போல. பொன்னம்பலம் அவர் உயரத்தில் இருக்கும் ஒரு சுத்தியலால், சுந்தர்.சியின் நெற்றிப் பொட்டிலேயே பொட்டென்று போட்டு சேற்றுக்குள் அமுக்கிவிட்டுப் போய் விடுகிறார். அவர் போனதும் சுந்தர்.சி அசால்டாக எழுந்து போய் தெருக் குழாயில் குளித்து விட்டு சாமியாக அவதாரமெடுக்கிறார்.

ஆனால் ஒரு கல்லால், ஒரே ஒரு அடி வாங்கிய அவர் குழந்தைகளும், மனைவியும் பொட்டென்று போய் சேர்ந்து விடுகிறார்கள். அது எந்த கிரகத்திலிருந்து கொண்டு வரப் பட்ட கல்லோ! நீதி மன்றத்திலும், சட்டக் கல்லூரி வளாகத்திலும், ஜாதிக் கலவரம் செய்பவர்கள் கையிலும் இந்த மாதிரிக் கல் கிடைக்காத வரை நலம்.

படத்தில் சுந்தர்.சி அடிக்கடி சொல்லும் பன்ச் வசனம் 'நான் கொஞ்சம் மென்டல்'. 'வந்து பாத்த நான் தான்டா மென்டல்' என்று திரையரங்கில் நான்கைந்து பேர் கத்துகிறார்கள்.(மொத்தம் இருந்ததே அவ்வளவு பேர் தான். மழைக்கு ஒதுங்கினது குத்தமாய்யா!)

அமைதிப் படை, நந்தா, நான் கடவுள் என்று பல படங்களை பகடி செய்திருக்கிறார்கள். ஓரளவாவது அந்தப் படங்கள் அளவு நன்றாக எடுத்திருந்தால், தழுவல் என்று சொல்லியிருக்கலாம். ஆனால் காப்பியடிக்கிறேன் என்ற பெயரில் காமெடி அல்லவா செய்திருக்கிறார்கள்.

உதாரணமாக, ஷாயாஜி ஷிண்டே JP என்பவரிடம் 'உனக்கு பதில் ஒரு நாய்க்கு கூட MLA சீட் கொடுப்பேன்' என்று சொல்கிறார். சொன்னால் நம்ப மாட்டீர்கள்.. நாய் குறைப்பது போன்ற சத்தம் கேட்டு ஷிண்டே குனிந்து பார்த்தால், சுந்தர்.சி நாயைப் போலவே கைகள் இரண்டையும் முன்னால் வைத்துக் கொண்டு, ஷிண்டேயின் காலடியில் போய் குத்த வைத்து அமர்ந்திருக்கிறார். அமைதிப் படையை இதற்கு மேல் ஒருவரால் கேவலப்படுத்த முடியுமா? (முழு நீள பகடி வகை ஹாலிவுட் திரைப்படம் Epic movieயைப் பற்றி எனது இந்தப் பதிவில் காணலாம்.)

ஆனாலும், நிச்சயம் இது ஒரு வித்தியாசமான படம். வன்முறையில்லாத வன்முறை என்று 'Life is beautiful' திரைப்படத்தை சிலாகித்திருக்கும் ஹாலிவுட் பாலா இந்தப் படத்தைப் பார்த்திருந்தால் காமெடியில்லா காமெடி என்று பாராட்டியிருப்பார். காட்சிக்கு காட்சி தொண்டை வறள தண்ணீர் குடித்து, தண்ணீர் குடித்து சிரித்தோம்.

உதாரணமாக, புகை பிடிக்க மறுக்கும் ஒரு கல்லூரி மாணவனை சீனியர் மாணவர்கள், நான்கைந்து பேர் முன்னிலையில் நிர்வானப்படுத்தி சிகரெட்டால் சூடு வைத்து விடுகிறார்கள். கோபமாக அங்கு வரும் சுந்தர்.சி பேராசிரியர்கள், மாணவ மாணவியரின் பெற்றொர் உட்பட, மொத்த கல்லூரியையும் ஒன்று கூட்டி, அவர்கள் முன் அந்த மாணவனை மறுபடி நிர்வானப்படுத்தி 'பாருங்க! எப்படி சூடு வச்சிருக்காங்கனு' என்று கொந்தளிக்கிறார். அவனும் தலையிலடித்துக் கொள்ளாமல், F TVயில் மாடல் போஸ் கொடுக்கிறான்.

இதே படத்தில் ஜே.கே.ரித்தீஷ் நடித்து, விஜய.டி.ராஜேந்தர் இயக்கியிருந்தால், (வலை)உலக அளவில் பெரிதாகப் பேசப் பட்டிருக்கும். ஹாலிவுட்டில் இருந்திருக்க வேண்டிய இயக்குனர் கிச்சாவின் கெட்ட நேரமோ, நம் கெட்ட நேரமோ தெரியவில்லை, இங்கே தமிழ் நாட்டில் வந்து மாட்டிக் கொண்டார்.

இந்த மாதிரி மொக்கை படங்களுக்கு அரை மணிக்கொரு முறை விளம்பரம் செய்து கொண்டிருந்தால், சன் டிவியின் மீதுள்ள நம்பகத்தன்மை குறைந்து, நாளை அவர்கள் நிஜமாகவே நல்ல படத்தை விளம்பரப் படுத்தினாலும், நிராகரிக்கப் பட வாய்ப்பு இருக்கிறது.
*************************

நமீதாத்துவம்
வாழ்கையில் சின்ன சின்ன விஷயங்கள் தான் பெரிய மாற்றங்களைக் கொண்டு வரும். உதாரணமாக நமீதா இவ்ளோ பெரிய ஆளானதுக்கு அவங்களோட சின்ன சின்ன ட்ரெஸ் தானே காரணம்.
************************

அறிவிப்பு : மேல் வலது மூலையில் 'தமிழகத்தைக் கலக்கும் காமெடி ஸ்டார் யாரு' என்ற வாக்கெடுப்பில் தங்கள் கருத்தைப் பதிய விரும்புபவர்கள் பதியலாம்.

13 மச்சீஸ் சொல்றாங்க:

Mr.Maanga Madayan said...

சூப்பர்.. என்னமா எழுதறீங்க.. கொன்னுட்டீங்க.. நல்ல வேளை. சுந்தர். சி இதை படிக்கலை.. தூக்கு போட்டு செத்து இருப்பாரு

அறிவிலி said...

விமர்சனம் நல்லா இருந்தது. படம் பாக்கற ரிஸ்க்லேர்ந்து காப்பாத்திட்டீங்க.

//மேல் வலது மூலையில் 'தமிழகத்தைக் கலக்கும் காமெடி ஸ்டார் யாரு' என்ற வாக்கெடுப்பில் தங்கள் கருத்தைப் பதிய விரும்புபவர்கள் பதியலாம். //

சாரி... ரஜினி பெயர் இதில் வேண்டுமா????
அரசியல விஷயங்களில் குளறுபடி செய்தாலும்,
நான் அவருடைய விசிறி கிடையாது என்றாலும,
மனம் ஒப்பவில்லை.

சோம்பேறி said...

/*Mr.Maanga Madayan சொன்னது…
சூப்பர்.. என்னமா எழுதறீங்க.. கொன்னுட்டீங்க.. நல்ல வேளை. சுந்தர். சி இதை படிக்கலை.. தூக்கு போட்டு செத்து இருப்பாரு

அறிவிலி சொன்னது…
விமர்சனம் நல்லா இருந்தது. படம் பாக்கற ரிஸ்க்லேர்ந்து காப்பாத்திட்டீங்க.*/

நன்றி Mr.மாங்கா மற்றும் அறிவிலி. அடுத்த படத்தையாவது உருப்படியாக எடுக்கிறார்களா என்று பார்ப்போம்.

/*சாரி... ரஜினி பெயர் இதில் வேண்டுமா???? அரசியல விஷயங்களில் குளறுபடி செய்தாலும், நான் அவருடைய விசிறி கிடையாது என்றாலும, மனம் ஒப்பவில்லை.*/

சினிமாவைப் பொருத்த வரை எனக்கு ரஜினியைப் பிடிக்கும் அறிவிலி. சரியான முடிவெடுக்கும் திறனில்லாத ரஜினி, அவருக்கு செட்டாகாத அரசியலில் மாட்டிக் கொண்டு தன்னையும், நம்மையும் துன்பப் படுத்திக் கொள்ளக்கூடாது அல்லவா.. 'என்னைப் போல் மற்றவர்களும் நினைக்கிறார்களா' என்று தெரிந்து கொள்ளத் தான் இந்த வாக்கெடுப்பு. இது உங்களைப் புன்படுத்தியிருந்தால் சாரி..

எனக்கென்னவோ, ராமராஜன் பெயரை நீக்கி விட்டு, கார்த்திக் பெயரை சேர்த்திருக்கலாம் என்று தோன்றுகிறது.

உள்ளத்தில் இருந்து.. said...

அசத்தல் பதிவு சோம்பேறி.

அதுவும் நமீதா பத்தின வரிகள் மிக அருமை. நமிதாவுக்கு சங்கம் எதாவது ஆரம்பிக்கிற திட்டம் எதாவது இருக்கா?

முரளிகண்ணன் said...

ஆனால் ஒரு கல்லால், ஒரே ஒரு அடி வாங்கிய அவர் குழந்தைகளும், மனைவியும் பொட்டென்று போய் சேர்ந்து விடுகிறார்கள். அது எந்த கிரகத்திலிருந்து கொண்டு வரப் பட்ட கல்லோ! நீதி மன்றத்திலும், சட்டக் கல்லூரி வளாகத்திலும், ஜாதிக் கலவரம் செய்பவர்கள் கையிலும் இந்த மாதிரிக் கல் கிடைக்காத வரை //

அட்டகாசம் :-))))))

Loganathan said...

தமிழகத்தை கலக்கும் எவர் க்ரீன் காமெடி ஸ்டார் யாரு? போட்டியில் எங்கள் தலைவர் டாக்டர், இளைய தளபதி, மாமியாருக்கு சோப்பு போட்ட மாவீரர் விஜய்யை சேர்க்காததை வன்மையாக கண்டிக்கிறேன்....

சோம்பேறி said...

/*உள்ளத்தில் இருந்து.. சொன்னது…
அசத்தல் பதிவு சோம்பேறி.
அதுவும் நமீதா பத்தின வரிகள் மிக அருமை. நமிதாவுக்கு சங்கம் எதாவது ஆரம்பிக்கிற திட்டம் எதாவது இருக்கா?*/

உள்ளத்தில் இருந்து நன்றி. நமீதா சங்கமா! 'நமீதா முன்னேற்றக் கழகம்' என்று ஒரு கட்சியே ஆரம்பிக்கும் திட்டம் இருக்கிறது. நிதிக்காக காத்திருக்கிறேன். உறுப்பினராக விரும்புபர்கள் நிதியுடன் என்னை சந்திக்கலாம்.

/*முரளிகண்ணன் சொன்னது…
//ஜாதிக் கலவரம் செய்பவர்கள் கையிலும் இந்த மாதிரிக் கல் கிடைக்காத வரை //
அட்டகாசம் :-))))))*/

நன்றி முரளிகண்ணன். நீங்கள் அன்னப் பறவை போல.

/*Loganathan சொன்னது…
தமிழகத்தை கலக்கும் எவர் க்ரீன் காமெடி ஸ்டார் யாரு? போட்டியில் எங்கள் தலைவர் டாக்டர், இளைய தளபதி, மாமியாருக்கு சோப்பு போட்ட மாவீரர் விஜய்யை சேர்க்காததை வன்மையாக கண்டிக்கிறேன்....*/

இப்போ தானே அவர் சுய ரூபம் தெரிய ஆரம்பித்திருக்கிறது. விரைவில் ஹிட் லிஸ்டில் சேர்வார்.

D R Sharath said...

The review was hilarious.

But .... sorry ... I did not like Rajini's name in the list. Ofcourse, I am a Rajini fan.

If u have added Rajini's name in the list for his political stance (as mentioned in comments section above), then you may need to add almost all the politicians and many other film actors too in that list.

சோம்பேறி said...

/*D R Sharath சொன்னது…

The review was hilarious.

But .... sorry ... I did not like Rajini's name in the list. Ofcourse, I am a Rajini fan.*/

Thank you for your comment on my review. Though am not a Rajini fan, I admire his mannerism. Thats why i can not tolerate the way he spoiling his own fame.

As mentioned earlier, my intention is not to defame him by showcasing the poll, i just wanted to know the people's opinion. So the poll will be removed in an hour anyway.

Anonymous said...

சோம்பேறி,

நல்ல விமர்சனம்தான். ஆனா, இப்பேர்பட்ட படத்தை எல்லாம் அதிகம் விளம்பரம் பண்ணா, நாளைக்கு சன் டிவி உண்மையான நல்ல படம் கொடுத்தா யாரும் பாக்க மாட்டாங்கன்னு சொன்னீங்களே...

எனக்கு தெரிஞ்சு அவங்க நல்ல படம் கொடுக்கற மாதிரி எனக்கு தெரியலை...கொடுத்த லிஸ்ட் பாத்தாலே தெரியும்.

ஆனா உங்களுக்கு காமெடி ரொம்ப இயல்பா வருதுங்க, மிக ரசித்தேன். அப்புறம் இந்தப் படத்துல ஒரு உலகப் புகழ் பெற்ற வசனம் ஒன்னு சுந்தர் சீ, பொன்னம்பலத்துகிட்ட பேசுவாரே, அதை உட்டுட்டீங்க....

nTamil said...

Hi,

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை www.ntamil.com ல் சேர்த்துள்ளோம்.

இதுவரை இந்த www.ntamil.com இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.

நட்புடன்
nTamil குழுவிநர்

சோம்பேறி said...

/*எனக்கு தெரிஞ்சு அவங்க நல்ல படம் கொடுக்கற மாதிரி எனக்கு தெரியலை...கொடுத்த லிஸ்ட் பாத்தாலே தெரியும்.*/

பாராட்டுக்கு நன்றிங்க. சூர்யாவோட அயனாவது நல்லா வரும்னு நினைக்கிறேன்.

/* அப்புறம் இந்தப் படத்துல ஒரு உலகப் புகழ் பெற்ற வசனம் ஒன்னு சுந்தர் சீ, பொன்னம்பலத்துகிட்ட பேசுவாரே, அதை உட்டுட்டீங்க....*/

நீங்கள் படம் பார்க்காமல், விளம்பரத்தை மட்டுமே பார்த்து விட்டு இப்படி கேட்கிறீர்கள் என்று நினைக்கிறேன். படத்தில் இதை விட கேனைத்தனமான வசனங்கள் எவ்வளவோ இருக்கின்றன. பதிவின் நீளம் கருதி அவற்றை எல்லாம் குறிப்பிட முடியவில்லை.

சென்ஷி said...

//படத்தில் சுந்தர்.சி அடிக்கடி சொல்லும் பன்ச் வசனம் 'நான் கொஞ்சம் மென்டல்'. 'வந்து பாத்த நான் தான்டா மென்டல்' என்று திரையரங்கில் நான்கைந்து பேர் கத்துகிறார்கள்.(மொத்தம் இருந்ததே அவ்வளவு பேர் தான். மழைக்கு ஒதுங்கினது குத்தமாய்யா!)//

நீங்க ரொம்ப தைரியசாலிதான். என்னோட டிவிடி காறித்துப்பி வெளியில தள்ளிடுச்சு இந்த படத்தை :-))

Post a Comment

தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு.

Blog Widget by LinkWithin
 
சோம்பேறி. Design by Pocket