மருத்துவர் ராமதாஸிடம் சில சந்தேகங்கள்

Wednesday, 4 March, 2009

Views

முன்குறிப்பு: இப்பதிவின் நோக்கம் யாரையும் காயப்படுத்துவது இல்லை. மீறி காயம் பட்டு விட்டால் மருத்துவர். ராமதாஸிடமே போய் ப்ளாஸ்த்திரி போட்டுக் கொள்ளவும்.

1) வணக்கம் ஐயா.. கருனாநிதி என்ன தவறு செய்தாலும் நீங்கள் எதிர்ப்பு தெரிவிப்பீர்களாமே.. உளியின் ஓசையை மட்டும் ஏன் கண்டு கொள்ளவில்லை?

2) உங்க கூட்டாளி கருனாநிதி கவித எழுதுவதால் கலைஞர் என்று போட்டுக் கொள்கிறாரே.. பதிவு எழுவதும் ஒரு கலை தானே. நானும் கலைஞர் போட்டுக்கலாமா? அவர் அதிமுகவிற்கு கட்சி மாறப் போவதாக வதந்திகள் கிளம்புதே.. உண்மையா?

3) நாளை பின்ன நீங்க கட்சி மாறி புரட்சித் தலைவி ஜெயலலிதாவைப் பார்த்தால், இதைக் கொஞ்சம் கேட்டு சொல்லிடுங்க..

புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் வாரிசு என்பதால் புரட்சி தலைவி என்று போட்டுக் கொள்கிறாரே, நாளை நானும் புரட்சி தளபதி ஜே.கே.ரித்தீஷ் கையில் காலில் விழுந்து அவரது வாரிசு ஆகிவிட்டால், என்ன அடை மொழி போட்டுக் கொள்ளலாம்?

4) சினிமாவிலிருந்து முதல்வராக முயற்சிக்கும் விஜய காந்த் கருப்பு எம்.ஜி.ஆர் என்று அடைமொழி வைத்துக் கொள்ளும் போது, அமெரிக்க ஜனாதிபதியாக முயற்சிக்கும் நடிகர் கார்த்திக் சிவப்பு ஒபாமா என்றும், பிரதமராக முயலும் எங்க ஊர் MLA மாநிற இந்திரா காந்தி என்று அடைமொழி வச்சிக்கலாங்களா?

5) ஆயிரம் பேரைக் கொன்னா அரை வைத்தியன்னு சொல்றாங்க..

இது வரை கத்தியின்றி, ரத்தமின்றி லட்சம் பேருக்கு மேல் சாவடித்த இயக்குனர் பேரரசுக்கு ஏன் ஒரு டாக்டர் பட்டம் கொடுக்க வில்லை? பொறாமை தானே?

இதையெல்லாம் ஏன் உங்களிடம் கேட்கிறேன் என்றால்.. உங்களைப் போன்ற திறமையான மருத்துவர்கள் அரசியலுக்குப் போய் விட்டால் தமிழ் நாட்டை யார் காப்பாற்றுவது? என்னை யார் காப்பாற்றுவது?

விஷயம் என்னன்னா ரெண்டு வாரமா நகக்கண்ணில் ஊசியால் குத்துவது போல தாங்க முடியாத வலி. அலோபதி, ஹோமியோபதி எல்லா பதியும் பாத்தாச்சு. அக்குபங்சர், டிங்சர் எல்லாம் பண்ணியாச்சு. நாரப் பயபுள்ளைக ரத்தப் பரிசோதனை செய்து விட்டு, வலியை அடக்குவதற்க்கு broofanனையும், காரணமே இல்லாமல் Paracetamolலையும் குடுத்துட்டு 500 ரூபாய் புடுங்கிக்கிட்டாய்ங்க. மேற்கொண்டு ஸ்கேன் வேற எடுக்கனும்னு சொல்லி பீதியைக் கெளப்புகிறாய்ங்க..

நேச்சுரொபதி டாக்டர்கள் ப்ரிஸ்க்ரிப்ஷனில் ஆப்பிள், ஆரஞ்சுனு எழுதிக் குடுத்து கடியைக் கிளப்புகிறாய்ங்க..

மாத்ருபூதத்திற்கு அடுத்து எனக்குத் தெரிந்த பிரபலமான மருத்துவர் நீங்கள் தான் என்பதால் தான் உங்களிடம் கேட்கிறேன். நீங்களும் எங்க ஊர் மருத்துவர்கள் போல MBBS படிக்கும் போது 'நகக்கண் வலியை குணப்படுத்துவது எப்படி?' என்ற கேள்வியை சாய்ஸில் விட்டிருந்தால் நான் டாக்டர். விஜயிடம் தான் போய் கேட்க வேண்டும். அவருக்குக் கண்டிப்பாகத் தெரிந்திருக்கும்.

17 மச்சீஸ் சொல்றாங்க:

உருப்புடாதது_அணிமா said...

ஆட்டோக்கு சொல்லிடலாமா??

அட்ரஸ் ப்ளீஸ்....

சோம்பேறி said...

என் இளையராஜா பத்தின பதிவை பாத்திருந்தா, நீங்க ஆட்டோ இல்லை ஆம்புலன்ஸையே கொண்டு வந்துருபீங்க..

உருப்புடாதது_அணிமா said...

அருமையான கேள்விகள்....

சோம்பேறி said...

நன்றிங்க.. இளையராஜாவைப் பத்தி தானே சொல்றீங்க..

உருப்புடாதது_அணிமா said...

.///சோம்பேறி சொன்னது…

என் இளையராஜா பத்தின பதிவை பாத்திருந்தா, நீங்க ஆட்டோ இல்லை ஆம்புலன்ஸையே கொண்டு வந்துருபீங்க..////


இப்போதானே படிக்க ஆரம்பிச்சிருக்கேன்..
சீக்கிரம் அனுப்பிவைக்கிறேன்..

உருப்புடாதது_அணிமா said...

சீக்கரம் இந்த WordVerificationந தூக்குங்க...
இல்லனா கண்டிப்பா ஆட்டோ வரும்...

சோம்பேறி said...

இப்போ ஓகேவா?

உருப்புடாதது_அணிமா said...

TEST

உருப்புடாதது_அணிமா said...

இது நல்ல புள்ளைக்கு அழகு...

உருப்புடாதது_அணிமா said...

.///ஏன் இன்றைய பணிகளை நாளை செய்ய வேண்டும்? நாளை மறுநாள் இருக்கும் போது...///


சரியான கேள்வி...
அதுதானே????

உருப்புடாதது_அணிமா said...

//நகக்கண்ணில் ஊசியால் குத்துவது போல தாங்க முடியாத வலி. ///

சரி சரி..
உண்மைய சொல்லுங்க..
வலி நகத்துலயா? இல்ல கண்ணுலயா??

velumani1 said...

உங்களையெல்லாம் வீட்ல கண்டிச்சு வளத்திருந்தா இத நாங்க படிக்க வேண்டி இருந்திருக்காது. ஹீம்........

சோம்பேறி said...

**velumani1 சொன்னது…

உங்களையெல்லாம் வீட்ல கண்டிச்சு வளத்திருந்தா இத நாங்க படிக்க வேண்டி இருந்திருக்காது. ஹீம்........
**

இதுக்கு மேட்டர் குடுத்ததே எங்க அப்பா தானுங்கோவ்..


**
//நகக்கண்ணில் ஊசியால் குத்துவது போல தாங்க முடியாத வலி. ///

சரி சரி..
உண்மைய சொல்லுங்க..
வலி நகத்துலயா? இல்ல கண்ணுலயா??**

அய்யோ.. நிஜமாவே முழு விரலும் வலிக்குதுங்க.. எங்க அப்பத்தா கனிணியும், டிவி ரிமோட்டும் தான் காரணம்னு சொல்லி ரெண்டுக்கும் தடா போட்டுட்டாங்க..

Anonymous said...

அவர் திண்டிவனத்தில் தொழில் செய்த போது காசுக்கு எவ்வளவு அலைவார் என்று பெரிசுகளை கேட்டால் தெரியும்!

நட்புடன் ஜமால் said...

இதுக்கு இன்னிக்கே பின்னூட்டம் போடனுமா

அதான் நாளை மறு நாள் இருக்கே ...

சோம்பேறி said...

**பெயரில்லா சொன்னது…

அவர் திண்டிவனத்தில் தொழில் செய்த போது காசுக்கு எவ்வளவு அலைவார் என்று பெரிசுகளை கேட்டால் தெரியும்!**


அப்படியா.. இது போல இன்னும் 4 பதிவு போட்டா, இன்னும் பல விஷயங்கள் வெளி வரும் போல..


**நட்புடன் ஜமால் சொன்னது…

இதுக்கு இன்னிக்கே பின்னூட்டம் போடனுமா**

நீ என் ஜாதி ராஜா.. கை குடுங்க முதல்ல.. அது என்னங்க நட்புடன் ஜமால்? நாங்க மட்டும் அருவாளும் கையுமாவா அலையுறோம்.

சென்ஷி said...

**நட்புடன் ஜமால் சொன்னது…

இதுக்கு இன்னிக்கே பின்னூட்டம் போடனுமா**

கலக்கல் :)

Post a Comment

தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு.

Blog Widget by LinkWithin
 
சோம்பேறி. Design by Pocket