அதிக ஹிட்ஸ் பெற டிப்ஸ்

Tuesday, 10 March, 2009

Views

1) இயற்கையிலேயே, நீங்கள் சாலையில் போகிறவர் கூப்பிட்டு செவிட்டிலறைந்தாலும் சிரித்துக் கொண்டே இன்னொரு கண்ணத்தைக் காட்டும் சாத்வீகவாதியாக இருக்கலாம். ஆனால் பதிவராகி விட்டால், அநியாயத்தைக் கண்டு பொங்கி எழ வேண்டும்.

உதாரணமாக உங்கள் வீட்டின் செப்டிக் டேங்கில் அடைப்பு என்றால், 'போங்கடா நீங்களும் உங்க அரசாங்கமும்' என்று தலைப்பிட்டு செப்டிக் டேங்கின் புகைப்படத்துடன் பதிவிடலாம்.

2) பின்வரும் வாக்கியங்கள் இறுதியில் 'இப்போதும் கண்டுகொள்ளவில்லையா?' என்று சேர்த்துப் படிக்கவும்.
அ. பிரபலமாகி விட்ட ஏதாவது ஒரு பழம்பெரும் பதிவரைப் பற்றி ஆஹா, ஓஹோ என புகழ்ந்து, 'என்னை உங்கள் சிஷ்யனாக ஏற்றுக் கொள்ளுங்கள்' என்ற ரீதியில் பதிவிட்டு, அவர் பெயரையே தலைப்பாக்கி, அவர் வலைப்பூவைப் பின் தொடருங்கள்.
ஆ. தலைப்புடன், உங்கள் வலைப்பூவின் முகவரியை அவர் பதிவில் பின்னூட்டுங்கள்.
இ. மின்னஞ்சலில் உங்கள் பதிவை காப்பி பேஸ்ட் செய்து அனுப்பி, உங்கள் கருத்து என்ன என்று கேளுங்கள்.
ஈ. வேறு வழியே இல்லை. ஆப்பிளையோ, ஆரஞ்சையோ வாங்கிக் கொண்டு நேராக அவர் வீட்டுக்கு கணினியுடன் சென்று பின்னூட்டம் வாங்கி விடுங்கள்.
உ. அப்படியும் பின்னூடம் போட மறுத்து விட்டாரா? மனம் தளராமல் வேறொரு பதிவரை வைத்து 'அ'விலுருந்து ரகளையை மறுபடி ஆரம்பிக்கவும்.

3) Profileலில் female என்று க்ளிக் செய்து கொள்ளலாம். பெண் பதிவர்கள் எண்ணிக்கை புலி போல் அருகி வருவதால், பெண்ணியத்தை ஊக்குவிப்பதற்காக நிச்சயம் ஆதரவளிப்பார்கள்.

Profileலோடு நிறுத்தி விடாமல் உங்கள் ஜாரியின் அல்லது பெண்ஜாதியின் அணுபவங்களைத் தொகுத்து 'சுமாராக இல்லாவிட்டாலும் சூப்பராக இருக்கும் ஃபிகரின் அனுபவங்கள்' என்று பதிவெழுதலாம். என் ஆள் சூப்பர் ஃபிகர் இல்லையே என்று கேட்கக் கூடாது. உலகில் இரண்டு வகைப் பெண்கள் தான் இருக்கிறார்கள். ஒன்று அழகாக இருப்பவர்கள். இரண்டாவது அழகாக இருப்பதாக நினைத்துக் கொள்பவர்கள்.

4) லேட்டஸ்ட் ட்ரென்ட் என்னவோ அதைப் பின்பற்ற வேண்டும். உதாரணமாக யாராவது கலைமாமணி விருது கொடுத்தால், நீங்கள் கொலைமாமணி விருது கொடுக்க வேண்டும். யாராவது 'ஆயாவிடம் சில சந்தேகங்கள்' கேட்டால், நீங்கள் 'பாயாவிடம் சில சந்தேகங்கள்' கேட்க வேண்டும்.

'பாயா எப்படி பதில் சொல்லும்?' என்றெல்லாம் கேட்கக் கூடாது. ஆயா மட்டும் பதில் சொல்லப் போகிறாரா என்ன?

5) பிரபல பதிவர்கள் பதிவில் பின்னூட்டும் போது மறந்து கூட ஸ்மைலியோ, ரிப்பீட்டோ போட்டு ஆமாஞ்சாமி போட்டு விடக் கூடாது. என்ன சொன்னாலும் மறுத்துப் பேச வேண்டும்.

உதாரணமாக காந்தியைக் கொன்றது கோட்சே என்று பதிவிட்டிருந்தால், 'இல்லை. காந்தியை சுட்டது எங்க பின் வீட்டு ஆயா தான். வீடியோ ஆதாரம் இருக்கிறது' எனலாம். 'எவன்டா இந்த லூசுப்பய' என்று பலர் திரும்பிப் பார்க்க வாய்ப்பிருக்கிறது.

மேலும், 'வலையுலக சுப்பிரமணிய சுவாமி' என்று தமிழ்மணமோ, இட்லி வடையோ, குசும்பனோ ஏன் சோம்பேறியோ கூட விருது தர வாய்ப்பிருக்கிறது.

பதிவின் நீளம் கருதி மீதி நாளை..

23 மச்சீஸ் சொல்றாங்க:

ஆண்ட்ரு சுபாசு said...

யோவ் என்னையா பதிவு இது ..இதெல்லாம் ஒரு பதிவு .....

(எப்படி நாங்க உங்கள்ட இருந்தே ஆரம்பிபோம்ல...)

கார்த்திகைப் பாண்டியன் said...

எப்படிண்ணே இப்படி யோசிக்கிறீங்க.. அதுக்காகவே நாங்க பின்னூட்டம் போடுவோம்ல.. நல்லா இருக்கு நண்பா..

மோனி said...

___பதிவின் நீளம் கருதி மீதி நாளை.. ___

''ஏன் இன்றைய பணிகளை நாளை செய்ய வேண்டும்? நாளை மறுநாள் இருக்கும் போது''

நிதானமா போடுங்க பிரதர் ...
நல்லாவே இருக்கு இந்த பதிவு ...

இராகவன் நைஜிரியா said...

என்னத்த சொல்றது...

பதிவு டாப் டக்கர், சூப்பர், பிரமாதம், அழகோ அழகு...

(நான் நல்லா பின்னூட்டம் போட்டு இருக்கேன். அதனால அப்ப அப்ப வந்து எனக்கும் பின்னூட்டம் போடனும்)

J J Reegan said...

innaaamaaa yosikreega...

சோம்பேறி said...

/*ஆண்ட்ரு சுபாசு சொன்னது…
யோவ் என்னையா பதிவு இது ..இதெல்லாம் ஒரு பதிவு .....
(எப்படி நாங்க உங்கள்ட இருந்தே ஆரம்பிபோம்ல...)*/

சபாசு சுபாசு.. ஆனா இதையே, லட்சம் ஹிட்ஸ் பாத்த பழம் பெற்ற பதிவர்கள் பதிவுல போய் இப்படி சொன்னா ரெஸ்பான்ஸ் கிடைக்கும். நானெல்லாம் என் பதிவையே படிக்கறது கிடையாது..

/*கார்த்திகைப் பாண்டியன் சொன்னது…
எப்படிண்ணே இப்படி யோசிக்கிறீங்க.. அதுக்காகவே நாங்க பின்னூட்டம் போடுவோம்ல.. நல்லா இருக்கு நண்பா..*/

/*J J Reegan சொன்னது…
innaaamaaa yosikreega...*/

கொசுவர்த்தி சுருளை தண்ணில கலக்கி குடிச்சுட்டு யோசிச்சா, அப்படியே அருவியா கொட்டுது தம்பி.. ரசிச்சதுக்கு நன்றி .. கார்த்திகைப் பாண்டியன் மற்றும் J J Reegan.

/*மோனி சொன்னது…
___பதிவின் நீளம் கருதி மீதி நாளை.. ___
''ஏன் இன்றைய பணிகளை நாளை செய்ய வேண்டும்? நாளை மறுநாள் இருக்கும் போது''
நிதானமா போடுங்க பிரதர் ...
நல்லாவே இருக்கு இந்த பதிவு ...*/

இன்னிக்கே மீதி பதிவையும் போடுங்கனு போராட்டம் பண்ணுவீங்கனு பாத்தா, இப்படி சொல்லிட்டீங்க.. நல்லாவே இருக்குனு வஞ்சப் புகழ்ச்சி அணியில சொல்றீங்களோ?

/*இராகவன் நைஜிரியா சொன்னது…
என்னத்த சொல்றது...
பதிவு டாப் டக்கர், சூப்பர், பிரமாதம், அழகோ அழகு...
(நான் நல்லா பின்னூட்டம் போட்டு இருக்கேன். அதனால அப்ப அப்ப வந்து எனக்கும் பின்னூட்டம் போடனும்)*/

கண்ணா.. கடமையை செய்.. பலனை எதிர்பார்க்காதே!

உருப்புடாதது_அணிமா said...

எவன்டா இந்த லூசுப்பய' ?????

எப்படி???

உருப்புடாதது_அணிமா said...

//////////Profileலில் female என்று க்ளிக் செய்து கொள்ளலாம். பெண் பதிவர்கள் எண்ணிக்கை புலி போல் அருகி வருவதால், பெண்ணியத்தை ஊக்குவிப்பதற்காக நிச்சயம் ஆதரவளிப்பார்கள்.////////
இந்த ஐடியா நல்லா இருக்கே??

ஆண்ட்ரு சுபாசு said...

/*ஆண்ட்ரு சுபாசு சொன்னது…
யோவ் என்னையா பதிவு இது ..இதெல்லாம் ஒரு பதிவு .....
(எப்படி நாங்க உங்கள்ட இருந்தே ஆரம்பிபோம்ல...)*/

சபாசு சுபாசு.. ஆனா இதையே, லட்சம் ஹிட்ஸ் பாத்த பழம் பெற்ற பதிவர்கள் பதிவுல போய் இப்படி சொன்னா ரெஸ்பான்ஸ் கிடைக்கும். நானெல்லாம் என் பதிவையே படிக்கறது கிடையாது..
//

நன்றி அண்ணா ...அப்படியே அந்த மாதிரி பதிவர் நாலு பேரு பேரை இட்டு ...சுட்டியும் குடுத்தா ..உங்கள் உயிரினும் மேலான வாசகர்களுக்கு நல்லா இருக்கும்.

சோம்பேறி said...

/*உருப்புடாதது_அணிமா சொன்னது…
எவன்டா இந்த லூசுப்பய' ?????
எப்படி???*/

சூப்பரப்பு. ஆப்பரேஷன் சக்சஸ்..

/*உருப்புடாதது_அணிமா சொன்னது…

//////////Profileலில் female என்று க்ளிக் செய்து கொள்ளலாம். பெண் பதிவர்கள் எண்ணிக்கை புலி போல் அருகி வருவதால், பெண்ணியத்தை ஊக்குவிப்பதற்காக நிச்சயம் ஆதரவளிப்பார்கள்.////////
இந்த ஐடியா நல்லா இருக்கே??*/

நீங்க தான் அவசரப் பட்டு உங்க வலைப்பூவில், நைஜீரியா ராகவன் கூட எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுட்டீங்களே! ஆனாலும் நண்பர் ராகவன், இரு நூத்திசொச்சம் கருத்துரைகள் வாங்கிட்டு என்னையும் பின்னூட்ட சொல்றது அவருக்கே கொஞ்சம் ஓவரா தெரியலையா?

ஆண்ட்ரு சுபாசு சொன்னது…

நன்றி அண்ணா ...அப்படியே அந்த மாதிரி பதிவர் நாலு பேரு பேரை இட்டு ...சுட்டியும் குடுத்தா ..உங்கள் உயிரினும் மேலான வாசகர்களுக்கு நல்லா இருக்கும்.*/

நாலு பேர் எதுக்கு? இன்னும் சில வருடங்கள் கழித்து உங்கள் உயிரினும் மேலான சோம்பேறியே பழம் பெற்று விடுவார். அது வரை காத்திருங்கள் தம்பி.

இராகவன் நைஜிரியா said...

// நீங்க தான் அவசரப் பட்டு உங்க வலைப்பூவில், நைஜீரியா ராகவன் கூட எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுட்டீங்களே! ஆனாலும் நண்பர் ராகவன், இரு நூத்திசொச்சம் கருத்துரைகள் வாங்கிட்டு என்னையும் பின்னூட்ட சொல்றது அவருக்கே கொஞ்சம் ஓவரா தெரியலையா? //

அதுக்காக நீங்க வரமாட்டேன் சொல்வதுதான் ரொம்ப ஓவரு..

ஒரு விசயம் உங்களுக்கு தெரியுமா... அணிமா அங்க சரியாவே விளையாடவில்லை... அவரு கண்டி ஆடி இருந்தா அது 300 எப்பவோ தாண்டியிருக்கும்...

முரளிகண்ணன் said...

கலக்கல் ரகம். அதுவுன் பெண்பதிவர்கள்-புலிகள் மேட்டர் சூப்பர்.

Anonymous said...

எழுதுங்கள் படிக்கப்படும். கேவலமான பிழைப்புப் பிழைத்துத் தான் படிக்கப் பட வேண்டுமா?

SUREஷ் said...

//பெண் பதிவர்கள் எண்ணிக்கை புலி போல் அருகி வருவதால், பெண்ணியத்தை ஊக்குவிப்பதற்காக நிச்சயம் ஆதரவளிப்பார்கள்.//


தமிழ்நாட்டில் பெண்ணியத்தை ஆதரிக்கலாம். புலிகளை ஆதரிக்கக் கூடாது

கீழை ராஸா said...

இவை எதுவும் செட் ஆகலைன்னா
"அதிக ஹிட்ஸ் பெற டிப்ஸ்" என்ற ரீதியில் பதிவெழுதலாம்...

ஆதவா said...

haa.aa. சிரிப்பா இருந்தது!!!!

ஆதவா said...

இப்படி நீங்க சொல்லியும் இந்த பதிவு அதிக ஹிட்ஸ் பெறவில்லைஇ... (அதுக்குத்தான் முழுசா சொல்லணும்!!)

வலைப்பதிவு படிப்பவர்கள் யோசிக்கவேண்டும்... பதிவின் தரம் குறித்து!!!

ஒருவர் இரண்டே வரிகள் தான் எழுதியிருக்கிறார்... அது சூடா போயிட்டு இருக்கு.... கொடுமைய்யா கொடுமை!!

சோம்பேறி said...

/*இராகவன் நைஜிரியா சொன்னது…

// நீங்க தான் அவசரப் பட்டு உங்க வலைப்பூவில், நைஜீரியா ராகவன் கூட எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுட்டீங்களே! ஆனாலும் நண்பர் ராகவன், இரு நூத்திசொச்சம் கருத்துரைகள் வாங்கிட்டு என்னையும் பின்னூட்ட சொல்றது அவருக்கே கொஞ்சம் ஓவரா தெரியலையா? //

அதுக்காக நீங்க வரமாட்டேன் சொல்வதுதான் ரொம்ப ஓவரு..

ஒரு விசயம் உங்களுக்கு தெரியுமா... அணிமா அங்க சரியாவே விளையாடவில்லை... அவரு கண்டி ஆடி இருந்தா அது 300 எப்பவோ தாண்டியிருக்கும்...*/

அடேங்கப்பா.. இவ்வளவு கொலைவெறி ரசிகர்கள் இருக்கும் போது, இன்னும் முளைத்து மூன்று இலை கூட விடாத நான் எதற்கு? கடைப் பக்கம் வராமல் இரு நூற்றி சொச்சம் கருத்துரைகள் என்று எனக்கு எப்படி தெரிந்திருக்கும்?

/*முரளிகண்ணன் சொன்னது…
கலக்கல் ரகம். அதுவுன் பெண்பதிவர்கள்-புலிகள் மேட்டர் சூப்பர்.*/

நன்றி முரளிகண்ணன்..

/*pukalini சொன்னது…
எழுதுங்கள் படிக்கப்படும். கேவலமான பிழைப்புப் பிழைத்துத் தான் படிக்கப் பட வேண்டுமா?*/

ஏன் இவ்வளவு கோபம் புகழினி?

வலைப்பூவின் தரத்தை வைத்து தான் தொடர்ச்சியான வாசகர் வரவு நிர்ணயிக்கப்படுகிறதே தவிர, இப்பதிவில் சொல்லப் பட்டிருப்பது போல் அல்ல. பதிவில் கூறப்பட்டதில் எதை பின்பற்றினாலும், உதை படத்தான் வேண்டும் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

நீங்கள் கேவலமான பிழைப்பு என்று என்னைக் குறிப்பிட்டிருந்தால், இப்பதிவு ஒரு நகைச்சுவைக்காக எழுதப் பட்டது. அவ்வளவே!

எனக்கு வந்த பின்னூட்டங்களில், முதன் முதலாக மாற்றுக்கருத்து தெரிவிக்கப்பட்டிருக்கிறது என்பதில் சந்தோஷமே! நன்றி புகழினி!

/*SUREஷ் சொன்னது…
//பெண் பதிவர்கள் எண்ணிக்கை புலி போல் அருகி வருவதால், பெண்ணியத்தை ஊக்குவிப்பதற்காக நிச்சயம் ஆதரவளிப்பார்கள்.//
தமிழ்நாட்டில் பெண்ணியத்தை ஆதரிக்கலாம். புலிகளை ஆதரிக்கக் கூடாது*/

தமிழக அரசியல் சூழலில், அடுத்த நொடி என்ன நடக்கும் என்று யாராலும் உறுதியாக சொல்ல முடியாது SUREஷ்.

/*கீழை ராஸா சொன்னது…
இவை எதுவும் செட் ஆகலைன்னா
"அதிக ஹிட்ஸ் பெற டிப்ஸ்" என்ற ரீதியில் பதிவெழுதலாம்...*/

/*ஆதவா சொன்னது…

haa.aa. சிரிப்பா இருந்தது!!!!
March 11, 2009 10:42 AM
ஆதவா சொன்னது…

இப்படி நீங்க சொல்லியும் இந்த பதிவு அதிக ஹிட்ஸ் பெறவில்லைஇ... (அதுக்குத்தான் முழுசா சொல்லணும்!!)

வலைப்பதிவு படிப்பவர்கள் யோசிக்கவேண்டும்... பதிவின் தரம் குறித்து!!!

ஒருவர் இரண்டே வரிகள் தான் எழுதியிருக்கிறார்... அது சூடா போயிட்டு இருக்கு.... கொடுமைய்யா கொடுமை!!*/

நன்றி ஆதவா! Elephant one time. Cat one time..

இலைமறை காயாக, நான் சொல்லியிருப்பதையும் புரிந்து கொண்டீர்கள் கீழை ராஸா.. கககபோ..

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

ரகளை!

குடுகுடுப்பை said...

சூப்பர். பிரபல பதிவர் பெயரை வைத்து கூட்டம் சேக்க நானும் பதிவு போட்டிருக்கேன்.

அப்புரம் வலைமாமணி விருதும் கொடுத்திருக்கேன்.ஆனாலும் கூட்டம் வரலை.

சோம்பேறி said...

நன்றி ஜ்யோவ்ராம் சுந்தர்.

Elephant one time. cat one time. நாளையே அந்தப் பதிவர் குடுகுடுப்பையைப் பற்றி பதிவிட நேரலாம்.

சென்ஷி said...

//'பாயா எப்படி பதில் சொல்லும்?' என்றெல்லாம் கேட்கக் கூடாது. ஆயா மட்டும் பதில் சொல்லப் போகிறாரா என்ன?//

:-))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

Profileலில் female என்று க்ளிக் செய்து கொள்ளலாம். பெண் பதிவர்கள் எண்ணிக்கை புலி போல் அருகி வருவதால், பெண்ணியத்தை ஊக்குவிப்பதற்காக நிச்சயம் ஆதரவளிப்பார்கள்.//

நல்லாருக்கே இது... :))

Post a Comment

தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு.

Blog Widget by LinkWithin
 
சோம்பேறி. Design by Pocket