உஷார்.. மக்களே உஷார்..(18+ மட்டுமே)

Monday, 30 March, 2009

Views

முன் குறிப்பு: நீங்கள் 18 வயதிற்குட்பட்டவரா? கடைசி செய்தி உங்களுக்கானதல்ல. முதல் இரண்டு விஷயங்களை மட்டும் படித்து விட்டு எஸ் ஆகி விடும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

பயங்கரவாதத்தை ஒழித்து விடுவோம் - பா.. காமெடி ஸாரி சூளுரை


கொசுறு காமெடி ஸாரி செய்தி: வருன் காந்தி மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்ததற்கு அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையே காரணம் என்று பாஜக செய்தி தொடர்பாளர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.
**********

சிரிக்க மட்டும்

விஜய் தன் மகனிடம்: தம்பி! நீ ஒழுங்கா சாப்பிட்டா, உன்னை வில்லு படத்துக்குக் கூட்டிட்டு போவேன்.
மனைவி சங்கீதா: பெத்த புள்ளைய கொல்லப் பாக்குறியே! நீயெல்லாம் ஒரு மனுஷனா?

விஜய் ரசிகர்கள்(என்று யாராவது இருந்தால்) தயவுசெய்து கோபித்துக் கொள்ளாமல், முறையே அஜித், மகள், ஏகன், ஷாலினி என்று எடிட் செய்து படித்துக் கொள்ளவும்.

**********-----------------**********
உஷார்.. மக்களே உஷார்..

உங்களை எப்படி எல்லாம் ஏமாற்றலாம் என்று கடந்த ஒரு வாரமாக பதிவர்கள் ரூம் போட்டு யோசித்துக் கொண்டிருக்கிறார்கள்.

யாராவது விடைபெறுகிறேன் பதிவர்களே என்று பதிவிட்டால், 'அண்ணே! போவாதீங்கண்ணே! உங்களை விட்டா எங்களுக்கு யாருண்ண்ணே இருக்கா' என்று ஒப்பாரி வைக்காமல், 'இத இத இதத் தான் எதிர்பார்தோம்.(ஒழிஞ்சதுடா சனி!)' என்று பின்னூட்டவும்.

இதற்குப் பின் அவர் அலுவலகம் கிளம்பும் முன் வீட்டிலிருந்து கூட யாருக்கும் டாட்டா சொல்லி விடைபெற மாட்டார்.

**********

18+ மட்டுமே

நீங்கள் பதினெட்டு வயதுக்கு மேற்பட்டவரா?


தேர்தல் நெருங்குகிறது. தயவு செய்து வாக்களியுங்கள்!

ரூம் போட்டு யோசித்ததில் எனக்கு சிக்கிய யோசனை. முந்திய நாளே ஏமாற்றி விட்டு அட்வான்ஸ் முட்டாள்கள் தின வாழ்த்துக்கள் சொல்வது. (ஹை.. வொர்க் அவுட் ஆயிடிச்சி.. வொர்க் அவுட் ஆயிடிச்சி..)

(வலம்புரி ஜான் ஸ்டைலில் படிக்கவும்) நன்பர்களே! இந்த மாதிரி அரசியல்வாதிகளும், நடிகர்களும் இருக்கும் வரை நாளை மட்டுமல்ல; வருடத்தின் எல்லா நாட்களுமே முட்டாள் தினம் தான்.

(இதை சோம்பேறி ஸ்டைலில் படிக்கவும்)அட்வான்ஸ் முட்டாள்கள் தின வாழ்த்துக்கள் மக்களே!

26 மச்சீஸ் சொல்றாங்க:

Anonymous said...

'இத இத இதத் தான் எதிர்பார்தோம்.(ஒழிஞ்சதுடா சனி!)'

Anonymous said...

'இத இத இதத் தான் எதிர்பார்தோம்.(ஒழிஞ்சதுடா சனி!)' ( ----- Super appu

சோம்பேறி said...

என் பழைய பதிவுகளைப் படித்திருப்பதை அறிந்து நெகிழ்கிறேன் அனானி நன்பரே! மிக மிக நன்றி! (அரசியல்வாதிகளைப் போல நீங்கள் விஜய் ரசிகரா, பாஜக தொண்டரா என்றெல்லாம் கேட்க மாட்டேன்.:-))))

Anonymous said...

மிக்க நன்றி .... எனது ஒட்டு உண்டு .....Villu Comedy super ....

Anonymous said...

voted already ...Keep posting more....

சோம்பேறி said...

நன்றி அனானி நன்பரே! ஆமா.. நன்றி எதுக்கு?

Anonymous said...

நன்றி இக்கு நன்றி ...... :)

இராகவன் நைஜிரியா said...

நாளைக்குத்தான் ஓட்டு போடலாம் என்று நினைச்சேன். இருந்தாலும் ஓட்டு போடுவதை தள்ளி போட முடியாது என்பதால் இன்னிக்கே தமிழ் மணம், தமிழிஷ் இரண்டிலும் ஓட்டு போட்டுட்டேன்.

நான் ஆதவன் said...

ஓஓஓஓ அந்த செய்தி வாசிக்கிறது நீங்க தானா???

சோம்பேறி said...

ங்கொக்கமக்க அனானி. நீங்க நல்லவரா? கெட்டவரா?(தெரியலயேப்பா என்று சொல்லி கடியைக் கிளப்பக் கூடாது) அன்னியன் விக்ரம் மாதிரி ஒரு கமெண்ட்ல திட்ரீக.. ஒன்னுல பாராட்ரீக.. ஒன்னுல வோட் போட்டேன்ரீக.. முடியல..

இல்ல அஞ்சுமே வேற வேற அனானியா?

/*இராகவன் நைஜிரியா said...
நாளைக்குத்தான் ஓட்டு போடலாம் என்று நினைச்சேன். */

ராகவன். நீங்க ரொமப நல்லவருங்க.. எதுக்கு குழப்பம். நாளைக்கும் ஒரு ஓட்டு போட்டுட்டு போய்டுங்க.

சோம்பேறி said...

/*நான் ஆதவன் said...
ஓஓஓஓ அந்த செய்தி வாசிக்கிறது நீங்க தானா???*/

அப்படியும் வச்சிக்கலாம்..

Anonymous said...

5 Anonymous are same person.....My name is Vijay...Sorry for confusing u...

டக்ளஸ்....... said...

\\விஜய் தன் மகனிடம்: தம்பி! நீ ஒழுங்கா சாப்பிட்டா, உன்னை வில்லு படத்துக்குக் கூட்டிட்டு போவேன்.
மனைவி சங்கீதா: பெத்த புள்ளைய கொல்லப் பாக்குறியே! நீயெல்லாம் ஒரு மனுஷனா?

விஜய் ரசிகர்கள்(என்று யாராவது இருந்தால்) தயவுசெய்து கோபித்துக் கொள்ளாமல், முறையே அஜித், ஏகன், ஷாலினி என்று எடிட் செய்து படித்துக் கொள்ளவும்.\\

அஜித்துக்கு மகன் இல்லங்கோ..மகள் தானுங்கோ...
அத மறந்திட்டீங்கோ பாசு...
உங்களுக்கும் என் மனமார்ந்த உள்ளம்கனிந்த அட்வான்ஸ் முட்டாள்
தின வாழ்த்துக்கள்...

சோம்பேறி said...

/*Anonymous said...
5 Anonymous are same person.....My name is Vijay...Sorry for confusing u...*/

ஸாரியெல்லாம் எதுக்கு விஜய்? உங்க பேரைப் போட்டிருந்தா கொஞ்சமா குழம்பியிருப்பேன்.

/*டக்ளஸ்....... said...
அஜித்துக்கு மகன் இல்லங்கோ..மகள் தானுங்கோ...*/

அஜித்கு மகள்னு தெரியுங்க டக்ளஸ். இங்கே சொல்ல மறந்துட்டேன். இப்போ சேத்துடறேன். வாழ்த்துக்களுக்கு நன்றிங்கோ..

நாஞ்சில் பிரதாப் said...

//விஜய் ரசிகர்கள்(என்று யாராவது இருந்தால்) தயவுசெய்து கோபித்துக் கொள்ளாமல், முறையே அஜித், மகள், ஏகன், ஷாலினி என்று எடிட் செய்து படித்துக் கொள்ளவும்//


புள்ளையை கிள்ளிவிட்டு தொட்டிடலையும் ஆட்டிவிடுறீங்க...

பதிவு நல்லாருந்துச்சு...

சோம்பேறி said...

/*நாஞ்சில் பிரதாப் said...
புள்ளையை கிள்ளிவிட்டு தொட்டிடலையும் ஆட்டிவிடுறீங்க...*/

பதிவுலகில் இதெல்லாம் சகஜமப்பா!!

/*பதிவு நல்லாருந்துச்சு...*/

பாராட்டுக்கு நன்றி நாஞ்சில் பிரதாப்.

உருப்புடாதது_அணிமா said...

Super!!!

உருப்புடாதது_அணிமா said...

Unga day kku Advance Wishes...

சோம்பேறி said...

/*உருப்புடாதது_அணிமா said...
Super!!!*/

நன்றி அணிமா...

/* Unga day kku Advance Wishes...*/

உங்க எங்க என்று சொன்னால் உதடுகள் கூட ஒட்டாது. நம்ம என்று சொன்னால் தான் உதடுகள் கூட ஒட்டும்.

Suresh said...

நண்பரே, உங்க பதிவு மிகவும் அருமை

சோம்பேறி said...

/*Suresh said...
நண்பரே, உங்க பதிவு மிகவும் அருமை*/

(கற்றது தமிழ் ஆனந்தி ஸ்டைலில் படிக்கவும்) நெசமாத்தான் சொல்றீங்களா?

குடுகுடுப்பை said...

நல்லா இருக்கு சோக்கும் சோம்பேறித்தனமும்

சோம்பேறி said...

/*குடுகுடுப்பை said...
நல்லா இருக்கு சோக்கும் சோம்பேறித்தனமும்*/

மிகவும் நன்றி குடுகுடுப்பை..

கனகலிங்கம் கோபிகிருஷ்ணா. said...

நல்ல பதிவு...
//விஜய் ரசிகர்கள்(என்று யாராவது இருந்தால்)//
பிரமாதம் போங்கள்...

ராஜ நடராஜன் said...

நான் 18-க்கு வந்தேன் இன்று. 18+க்கு வரவில்லை நேற்று.(நிறைய ஆட்கள் ஏப்ரல் 1 பதிவு போடுவாங்கன்னு நேற்று விரதம்:))

சோம்பேறி said...

மிகவும் நன்றி கனகலிங்கம் கோபிகிருஷ்ணா..

ஆஹா ராஜ நடராஜன்.. அடுத்த வருடம் ஒரு மாதத்திற்கு முன்பே ஏமாற்றி விட்டு, அட்வான்ஸ் ஏப்ரல் ஃபூல் என்று சொல்ல வேண்டும் போல.

Post a Comment

தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு.

Blog Widget by LinkWithin
 
சோம்பேறி. Design by Pocket