ஜே.கே.ரித்தீஷ், ஷங்கர், பன் பிக்சர்ஸ் இணைந்து மிரட்டும்

Saturday 7 March, 2009

Views

பன் பிக்சர்ஸ் தயாரிப்பில், ஷங்கர் இயக்கத்தில், பிப்ரவரி 32டில் திரையில் 'புரட்சித் தளபதி' எதிர்பார்க்கப் படுகிறது. வழக்கமான ஷங்கரின் 'ராபின் ஹூட் கான்செப்ட்' தான். நாயகன் சிறு வயதிலிருந்தே அரசியல்வாதியான தன் தாத்தா கவுண்டமணி செய்யும் அநியாயங்களைத் தட்டி கேட்கிறார். 'இந்த கொசு தொல்லை தாங்க முடியலடா நாராயணா!' என்று நாயகனை வெளிநாட்டிற்கு(ஆப்கானிஸ்தான்) அனுப்புகிறார்.

பல வருடங்களுக்குப் பின் இந்தியா திரும்பும் நாயகனை வரவேற்க, சூப்பர் ஜாரிகள் சகிதம் செல்கிறார் மாமா.. ஸாரி.. தாத்தா கவுண்டமணி. கட்டினால் தமிழ் பிகரைத் தான் கட்டுவேன் என ஒத்தைக் காலில் நிற்கும் நாயகன், கோவில் வாசலில் தேங்காய் பொருக்கிக் கொண்டிருக்கும், அக்மார்க் தமிழ் பெண்ணான ஏஜ்ஜலினா ஜூலியைப் பார்த்ததும் இன்னொரு காலைத் தரையில் வைக்கிறார். ஆரம்பத்தில் அவர் காதலை ஏற்க மறுக்கும் நாயகி, தன் காதலை நிரூபிக்க மவுண்ட் ரோட்டில் நிர்வாணமாக ஓடப் போவதாக நாயகன் சொன்னதும், அரண்டு போய் சம்மததைத் தெரிவித்து விடுகிறார்.
"யம்மா இங்க வா வா.. ஆச முத்தம் தா தா.." என்று ஒரு டூயட் பாடி விட்டு வீட்டிற்கு வரும் நாயகனுக்கு அதிர்ச்சி. கவுண்டமணி பினாமியாக இருந்த அரசியல்வாதி தலைமறைவாக, அவர் அந்த சொத்தை ஆட்டையைப் போடுகிறார். ஏழை மக்களுக்கு உதவும் பொருட்டும், தலைமறைவானவர் திரும்பி வருமுன் சொத்து முழுவதையும் செலவு செய்யும் பொருட்டும் கலை சேவை செய்ய முடிவெடுக்கிறார்.

நல்ல படத்தில் நடித்தால் ஏழை மக்கள் தினமும் நான்கு காட்சிகள் பார்த்து பரம ஏழைகளாகி விடுவார்கள் என்ற நல்லெண்ணத்தில், தன்னாலேயே Preview show கூட பார்க்க முடியாத ஒரு படத்தில் நடிக்கிறார். The Punishment என்று caption கொடுத்து, 'யாரும் வந்து விடாதீர்கள்' என எச்சரிக்கை விடுக்கிறார். இவ்வளவு செய்தும் திரையரங்கில் கூட்டம் அம்ம, விகடனில் The Punishment என்பதற்கு விளக்கமும் கொடுக்கிறார்.

தனது ரசிகர் மன்றத் தலைவர்களுக்கு ஒரு இரு சக்கர வாகனமும்(மாட்டு வண்டி அல்ல பைக்), மாதம் 50000 ரொக்கமும் வழங்குகிறார். தன் வீட்டு வாசலில் ஒரு ஆராய்ச்சி மணியும், புகார் பெட்டியும் வைத்து அதில் முறையிடும் ஏழைகளுக்கு உதவுகிறார்.

ஹாலிவுட்டிலுள்ள நலிந்த கலைஞர்களை உய்விக்க, பில்லியன் கணக்கில் செலவழித்து Cellular, Bad boys உட்பட 12 படங்களின் காப்புரிமையை வாங்குகிறார். பெருந்தன்மையுடன் தாத்தா கவுண்டமணியை கதாநாயகனாக்கி விட்டு, பன்ச் வசனங்கள் மட்டுமே பேசும் ஒரு சப்பை பாத்திரத்தில் நடிக்கிறார். ஆப்பரேட்டர் கூட இல்லாத திரையரங்கில் 150 நாட்கள் ஓடும் அந்த படம் ஆஸ்காருக்கு பரிந்துரைக்கப் படுகிறது.

ஆஸ்கர் வாங்க அமெரிக்கா செல்லும் நாயகனுக்கு, அங்கு recession பிரச்சனை தலை விரித்து ஆடுவது தெரிய வருகிறது. இரும்புத்தடியில் விளக்கென்னை தடவி recessionனை ஓட ஓட அடித்து விரட்டுகிறார். நாயகி ஏஞ்சலினாவின் புடவையை உருவி, பள்ளத்திலிருக்கும் பொருளாதாரத்தைத் தூக்கி விடுகிறார்.

நாயகன் வெற்றியுடன் திரும்பி நடக்கையில் பின்னனியில் graphicsஸில் கையில் திருவோட்டுடன் "மம்மி.. டாடி.. சம்படி ஹெல்ப்" எனக் கூவிய படி பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் கிழவி, கிரெடிட் கார்ட் இயந்திரத்துடனும், மடிக்கணினியுடனும் பிச்சை எடுக்கிறார்.

புல்லை மேய்ந்து கொண்டிருந்த எருமை மாடு, கோட் சூட்டுடன் பிட்சா(Pizza) சாப்பிடுகிறது. நாயகன் வீட்டு வாசலில் இருக்கும் புகார் பெட்டியில் புகார்கள் ஏதும் இல்லாமல், மரத்திலிருந்து ஒரு பலாப்பழம் புகார் பெட்டி மேல் விழுந்து உடைவதுடன் படம் நிறைவடைகிறது.

7 மச்சீஸ் சொல்றாங்க:

அறிவிலி said...

எவ்வளவு தாங்க செய்வாரு அவுரு? இப்பத்தான் அவரு எடுக்கற டிவி சீரியலபத்தி இங்க எச்சரிக்கை உட்டுட்டு வந்தா நீங்க இப்படி சொல்றீங்களே?

♫சோம்பேறி♫ said...

**அறிவிலி சொன்னது…

எவ்வளவு தாங்க செய்வாரு அவுரு? இப்பத்தான் அவரு எடுக்கற டிவி சீரியலபத்தி இங்க எச்சரிக்கை உட்டுட்டு வந்தா நீங்க இப்படி சொல்றீங்களே?**

அவரை வச்சு நீங்க காமெடி, கீமெடி பண்ணலையே! நிஜமாவே சீரியல்ல வர்றாரா.. இல்ல நீங்க எதுவும் கட் அண்ட் பேஸ்ட் வேலை செஞ்சுருக்கீங்களா.. இப்போ நட்சத்திர கிரிக்கெட் மேட்ச் விளையாடிக்கிட்டு இருக்காருங்க.. அவரு பெரிய All rounderங்க..

மணிகண்டன் said...

ரித்தீஷின் வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கபடுவதை மிகவும் வரவேற்கிறேன். இந்த செய்தியை சொன்ன உங்களுக்கு எனது நன்றி.

♫சோம்பேறி♫ said...

**மணிகண்டன் சொன்னது…

ரித்தீஷின் வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கபடுவதை மிகவும் வரவேற்கிறேன். இந்த செய்தியை சொன்ன உங்களுக்கு எனது நன்றி.**

நன்றி எல்லாம் எதுக்கு? எல்லாம் 'இருந்தாக்க அள்ளிக் குடு'னு நம்ம தலைவர் சொல்லிக் கொடுத்த பாடம் தான்.

Anbu said...

அருமையாக இருக்கிறது அண்ணா!!! ஒரேசிரிப்புத்தான்

♫சோம்பேறி♫ said...

/*பெயரில்லா சொன்னது…

சோம்பேறி பணி சிறக்க வாழ்த்துகள்.
ரிட்டிஷ் வாழ்க்கை வரலாறு, ****** வரலாறு என்று வரும் போல் இருக்கே.
பூலோக ஸிநிமா பூதம் ரிட்டீஷ் பற்றி எழுதியது அருமை.
அடுத்தது என்ன சோம்பேறி தே க்ரேட்.*/

பெயரிலி நண்பரே! உங்கள் கோபம் என் மீதா, ரித்தீஷ் மீதா என்று தெரியவில்லை. எதுவாக இருந்தாலும் கொஞ்சம் நாகரீகமான வார்த்தைகளை உபயோகிப்பது நல்லது. உங்கள் கமென்டை அப்படியே பிரசுரிக்க முடியாமைக்கு வருந்துகிறேன்.

/*Anbu சொன்னது…

அருமையாக இருக்கிறது அண்ணா!!! ஒரேசிரிப்புத்தான்*/

உங்கள் ரசனைக்கு மிக நன்றி அன்பு தம்பி.

சென்ஷி said...

ஒரே வார்த்தைதான் சொல்ல முடியும். கலக்கல் :)

வயிறு வலிக்க சிரிக்க வைச்சுட்டீங்க

Post a Comment

தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு.

Blog Widget by LinkWithin
 
சோம்பேறி. Design by Pocket