தொலைக்காட்சியில் தோன்ற சில (விபரீத) யோசனைகள்

Friday 6 March, 2009

Views

1. நமது அழகுக்கும், திறமைக்கும் கதா நாயகன் வாய்ப்பே கொடுக்க க்யூ கட்டி நின்றாலும் மறுத்து விட்டு, வடிவேலுக்கு அல்லக்கையாக தான் நடிப்பேன் என்று அடம் பிடிக்க வேண்டும். குறைந்தபட்சம் 24 மணி நேரம் தொலைக்காட்சியில் தோன்றலாம். மக்கள் தொலைக்காட்சியில் தோன்ற விரும்பினால், ரஷ்ய மொழி திரைப்படத்தில் நடிக்க முயற்சிக்கலாம்.

2. நெடுந்தொடரில் கதா நாயகனாக நடிக்க விரும்பும் ஆண்கள் பேக்கு போலவும், வில்லனாக விரும்பும் ஆண்கள் பத்து கொலைகள் செய்து விட்டு சிறைக்கு சென்று வந்தவர் போலவும் முகத்தை வைத்துக் கொள்ளுங்கள். இதே போல் கதாநாயகியாக விரும்பும் பெண்கள் பிறந்ததிலிருந்து சிரித்ததே இல்லை என்பது போலவும், வில்லி வாய்ப்பை விரும்புபவர்கள் சாணியை மிதித்தது போலவும் முகத்தை வைத்துக் கொள்ளுங்கள்.

ஏற்கனவே வெள்ளித்திரையில் தோன்றி விட்டால் பிரச்சனையே இல்லை. நீங்கள் படப்பிடிப்பு இடைவேளையில் உணவருந்திக் கொண்டிருக்கும் போதோ, ஓய்வறையில் சி**ர் கழித்துக் கொண்டிருக்கும் போதோ குண்டுக்கட்டாக தூக்கி செல்லப்படுவீர்கள்.

3. தொலைக்காட்சித் தொடரில் தோன்றிய பிறகு அடுத்த கட்டம் மானாட மயிலாட, ஜோடி நம்பர் 1 போன்ற நிகழ்ச்சிகளில் தோன்றுவது தான். நான்கு திரைப்படத்தில் நடித்து விட்டால் நடுவராகக் கூட வர வாய்ப்பிருக்கிறது.
4. இருபது நகைச்சுவை துனுக்குகளை பார்க்காமல் மனப்பாடமாக சொல்லப் பழகிக் கொண்டால், அசத்தப் போவது யாரு, கலக்கப் போவது யாரு மாதிரி நிகழ்ச்சிகளில் தோன்றலாம். நமது மொக்கை ஜோக்குகளுக்கு சிறப்பு விருந்தினராக வந்திருக்கும் பிரபலத்தை சிரிக்க(சிரிப்பது போல நடிக்க) வைத்து நமக்குள் தூங்கிக் கொண்டிருக்கும் sadist மிருகத்திற்க்கு தீனி போட்டுக் கொள்ளலாம்.

5. ஜாரியு(ஃபிகரு)டன் அலைபேசியில் மணிக்கனக்கில் மொக்கை போட்டு பழக்கமிருக்கிறதா?(அது தான் பொழப்பேவா?) இந்த ஒரு தகுதி போதும் நீங்கள் வர்ணனையாளராவதற்க்கு. இல்லையென்றாலும் பரவாயில்லை.. எங்கேருந்து பேசுறீங்க, என்ன பண்றீங்க, என்ன பாட்டு(நகைசுவை துனுக்கு) வேணும்? யாருக்கு டெடிக்கேட் பண்ணனும் என்ற நான்கு கேள்விகளை மனப்பாடமாகக் கேட்கத் தெரிந்தால் போதும். பர்ஸனாலிட்டி முக்கியமில்லை. மாறு வேடமிட்டு மறைத்துக்கொள்ளலாம்.

6. ஐம்பது கிலோ எடையுள்ள பாறாங்கல்லை வைத்துக் கொண்டு பல்டி அடிக்கத் தெரிந்தால், தில் தில் மனதில் மற்றும் சவால் போன்ற நிகழ்ச்சிகளில் தோன்றலாம்.(முயற்சியில் விபரீதமாக ஏதாவது நடந்து விட்டால், சம்மந்தப்பட்ட தொலைக்காட்சி நஷ்ட ஈடு கொடுக்குமா என்று தெரிந்தவர்கள் பின்னூட்டவும்)

7. சொல்லாமல் கொள்ளாமல் வீட்டை விட்டு ஓடி விட்டால், பொதிகையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பில் வரலாம்.

இது தவிர சித்த வைத்தியம், பாலியல் வைத்தியம், ராசிக்கல் ஜோதிடம், டெலி ஷாப்பிங் மாதிரி சொந்த செலவில் டைம் ப்ளாட் வாங்கி கொள்வது உங்கள் வசதி வாய்ப்பைப் பொருத்தது.

இது தவிர உங்களுக்கு வேறு யோசனைகள் இருந்தால் பகிர்ந்து கொள்ளவும். (அதான் எல்லாத்தையும் நீயே சொல்லிட்டியே!)

13 மச்சீஸ் சொல்றாங்க:

ஓஜஸ் said...

You have a good humour sense. hats off

♫சோம்பேறி♫ said...

**Personal சொன்னது…

You have a good humour sense. hats off**

Thanks a lot. I'm not worth for the word 'hats off'. But yes. Of course, the word gives me the strength to write my next post.

Anonymous said...

U LEFT OUT ONE MORE, DISCUSSION PANEL MEMBERS, LIKE THE RETIRED CRICKET PLAYERS

http://urupudaathathu.blogspot.com/ said...

நல்ல ஐடியாவா கீதுப்பா...

இப்படி தான் நீ ட்ரை பண்ணினுக்கீரியா??

♫சோம்பேறி♫ said...

**GANESHH சொன்னது…

U LEFT OUT ONE MORE, DISCUSSION PANEL MEMBERS, LIKE THE RETIRED CRICKET PLAYERS**

அவங்களை இன்னொரு பதிவுல பாத்துக்கலாம்.


**உருப்புடாதது_அணிமா சொன்னது…

நல்ல ஐடியாவா கீதுப்பா...

இப்படி தான் நீ ட்ரை பண்ணினுக்கீரியா??**

ஹாய் அணிமா.. கல்யாணமாம்ல.. வாழ்த்துக்கள். உங்களைப் பற்றிய நைஜீரியா ராகவனோட பதிவையும், அதன் பின்னூட்டங்களையும் பார்த்தேன். விட்டா ரசிகர் மன்றமே ஆரம்பிசுடுவாங்க போல.. எனக்கும் ஒரு உறுப்பினர் கார்ட் ரெடி பண்ணி வச்சுடுங்க..

நான் ஏழாவது யோசனையை முயற்சி செய்யலாம்னு இருக்கேன்.

Unknown said...

நெடுந்(தொல்லை)தொடர் !

சின்னப் பையன் said...

//Personal சொன்னது…
You have a good humour sense. hats off
//

repeattee....

சின்னப் பையன் said...

//(தமிழில் பெயர் வைத்தால் நெட் பில்லில் சலுகை உண்டு எனில் தயவு செய்து தெரியப் படுத்தவும்)
//

:-))))

Anonymous said...

நன்றாக அனுபவித்து நிகழ்ச்சிகளைக் கவனித்து எழுதியுள்ளீர்கள்.

♫சோம்பேறி♫ said...

**ச்சின்னப் பையன் சொன்னது…

//(தமிழில் பெயர் வைத்தால் நெட் பில்லில் சலுகை உண்டு எனில் தயவு செய்து தெரியப் படுத்தவும்)
//

:-)))) **

ஹாய் சின்னப் பையரே! நீங்கள் சிரிப்பதைப் பார்த்தால், 'அடுத்த மாதத்திலிருந்து உன் நெட் பில்லை என் முகவரிக்கு அணுப்பிவிடு' என்று சொல்வது போல இருக்கிறது! ஆனால் உங்கள் முகவரி கொடுக்க மறந்து விட்டீர்கள் என்று நினைக்கிறேன்.

தொப்பியைத் கழற்றியதற்க்கும்(Hats off) நன்றி!

**சாந்தி சொன்னது…

நன்றாக அனுபவித்து நிகழ்ச்சிகளைக் கவனித்து எழுதியுள்ளீர்கள்.**

வேறு வழி இல்லை சாந்தி.. என் வீட்டில் எல்லாருமே தொலைக் காட்சிப் பிரியர்கள்.

அறிவிலி said...

எங்கியாவது அடிதடி,பிரச்னை,கலாட்டா நடந்தால் போய் நிற்கலாம்.டிவி காரர்கள் பேட்டியில் எவன் எவனோ செஞ்ச அக்குரும்புக்கெல்லாம் "அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமா?" அப்படின்னு கேள்வி கேக்கலாம்.

சென்னையில் எல்லா சினிமாவும் முதல் நாள் முதல் காட்சி போனால், திரை விமர்சனத்தின் முடிவில் "ஒரு தடவ பார்க்கலாம்" என்று காட்டுவார்கள்.

♫சோம்பேறி♫ said...

**அறிவிலி சொன்னது…
எங்கியாவது அடிதடி,பிரச்னை,கலாட்டா நடந்தால் போய் நிற்கலாம்.டிவி காரர்கள் பேட்டியில் எவன் எவனோ செஞ்ச அக்குரும்புக்கெல்லாம் "அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமா?" அப்படின்னு கேள்வி கேக்கலாம்.**

ஆமாங்க அறிவிலி.. சுனாமி வந்தப்போ சன்டிவி செய்திகளிலில் ஒருவர் ரொம்ப உணர்ச்சிவசப்பட்டு "இந்த சுனாமிக்கு காரணம் ஜெயலலிதா தாங்க" என்று சொல்லி அந்த சோகத்திலும் சிரிக்க வைத்தார்.

**சென்னையில் எல்லா சினிமாவும் முதல் நாள் முதல் காட்சி போனால், திரை விமர்சனத்தின் முடிவில் "ஒரு தடவ பார்க்கலாம்" என்று காட்டுவார்கள்.**

திருவண்ணாமலை படம் முதல் காட்சி முடிந்து வெளியே வந்த ஒருவர் "படம் ரொம்ம்ம்ம்ப நல்லாயிருக்கு" என்று சொன்ன தொனி இருக்கிறதே, பேரரசு மட்டும் அதைப் பார்த்திருந்தால் நாண்டு கொண்டு செத்திருப்பார்.

சென்ஷி said...

//திருவண்ணாமலை படம் முதல் காட்சி முடிந்து வெளியே வந்த ஒருவர் "படம் ரொம்ம்ம்ம்ப நல்லாயிருக்கு" என்று சொன்ன தொனி இருக்கிறதே, பேரரசு மட்டும் அதைப் பார்த்திருந்தால் நாண்டு கொண்டு செத்திருப்பார்.//


:)))

Post a Comment

தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு.

Blog Widget by LinkWithin
 
சோம்பேறி. Design by Pocket