Sin cityயும் நான் கடவுளும்

Wednesday, 20 May, 2009

Views

படத்தின் இறுதிக் காட்சி முடிந்து கார்ட் போட ஆரம்பித்ததும், திரும்பவும் முதல் காட்சியிலிருந்து பார்க்கத் தூண்டிய முதல் படம் சின் சிட்டி தான் என்று நினைக்கிறேன். உண்மையிலேயே எனக்கு வன்முறையைப் பார்த்து பயமில்லை. அருவருப்பு தான் என்று இந்தப் படத்தைப் பார்த்த பிறகு தான் புரிந்தது. படம் முழுக்க அவ்வளவு ரசனைக்குரிய வன்முறை.

இதன் திரைக்கதையில் பயன்படுத்தி இருக்கும் உத்தியை, Occurance of the same event என்று சொல்வதா, life cycle என்பதா என்று புரியவில்லை. (திருமலையில் மாமனாரைப் பார்த்து விஜய் சொல்லும் 'டேய்.. வாழ்கை ஒரு வட்டம்டா. மேல இருக்குறவன் கீழ வருவான்' அல்ல. ஓம் ஷாந்தி ஓமில் ஷாருக் சொல்லும் தொடங்கிய இடத்திற்கு திரும்ப வரும் வாழ்கை வட்டம்)

கதை மொத்தம் (ஒன்றுக்கொன்று சம்மந்தப்பட்ட, ஆனால் ஒன்றை ஒன்று பாதிக்காத) நான்கு ட்ராக்களில் பயனிக்கிறது.

1) உலகை ரட்சிக்க வந்ததாக எண்ணும் ஒரு தொடர் கொலைகாரனின் ஒரு நிமிடக் காதல்.

2) ஒரு நேர்மையான போலீஸ் கிழவருக்கும் அவரால் காப்பாற்றப்பட்ட, காப்பாற்றப்படும் குழந்தைக்குமான காதல்.

3) சந்தித்து சில மணி நேரங்களேயான காதலிக்காக பல கொலைகள் செய்து விட்டு, இறுதியில் உயிரிழக்கும் ஒரு மனப்பிறழ்வடைந்தவனின் காதல்.

4) உலகைப் பற்றி அதிகமாகக் கவலை கொள்ளும் ஒருவனின் இரு காதல்கள்(ஒரே நேரத்தில்). அதில் ஒருவரான விலை மாதுக்கள் தலைவி, அவன் உதவியுடன் தங்களைப் பாதுகாக்கப் போராடி வெல்லும் ஒரு விருவிருப்பான கதை.

1) உலகை ரட்சிக்க வந்ததாக எண்ணும் ஒரு தொடர் கொலைகாரனின் மற்றொரு நிமிடக் காதல்.

நான் கடவுள் படத்தின் க்ளைமாக்ஸ் தான் sin city பட ஆரம்பக் காட்சியும் க்ளைமாக்ஸும்.

முதல் காட்சியில் வரும் பெயரற்ற கதாபாத்திரம்(Pearl harbour புகழ் Josh harnett) பார்ட்டியின் போது தனியாக ஒதுங்கும் ஒரு பெண்ணிடம், சிகரெட் கொடுத்து அறிமுகப் படுத்திக் கொண்டு, அவளுக்காகவே அந்த பார்ட்டிக்கு வந்ததாக சொல்கிறார். 'நீ எதிலிருந்தோ ஓடிக் கொண்டிருந்தாய். இப்போது அதை எதிர்கொள்ளத் தயாராகி விட்டாய். ஆனால் தனியாக அதை எதிர்கொள்ள நீ விரும்பவில்லை' என்கிறார்.

ஆம் என்று சொல்லும் அவளிடம் தன் காதலை சொல்லி அணைத்து முத்தமிட்டபடியே அவளைத் துரத்திய அந்த ஒன்றிலிருந்து விடுவிக்கிறார். அதாவது சுட்டுக் கொன்று விடுகிறார்(வாழவே முடியாதவர்களுக்கு நான் தரும் வரம் மரணம்)

இறுதிக் காட்சியில் தனது நண்பர்களுக்கு(நான்காவது ட்ராக்கில்) துரோகம் செய்த ஒரு பெண்ணிடம் முன் போலவே ஜோஷ், சிகரெட்டுடன் அறிமுகப்படுத்திக் கொள்வதுடன் படம் நிறைவடைகிறது(வாழவே கூடாதவர்களுக்கு நான் தரும் மரணம் தண்டனை)

**********

பலராலும் வெறுக்கப்படும் தோற்றமுடைய அதிபலசாலி மார்வ் (இவரை வேறு எந்தப் படத்திலும் பார்த்ததில்லை அல்லது அடையாளம் காண முடியவில்லை), அவரை விரும்புவதாக சொல்லும் கோல்டி என்ற பெண்ணுடன் தூங்கிக் கொண்டிருக்கும் போது, அவள் கொலை செய்யப் படுகிறாள். அவரைத் துரத்தும் காவல் துறையிடமிருந்து தப்பும் மார்வ், தன்னைக் கொல்ல முயல்பவன் மூலம், படிப்படியாக கோல்டியைக் கொன்றவனை அடைகிறார்.

ஹாரி பாட்டருக்கும், எமினெமுக்கும் பிறந்தது போல் தோற்றமளிக்கும் கெவின் என்ற அந்த கொலையாளி மார்வைத் தாக்கி, மனித தலைகளால் அலங்கரிக்கப் பட்ட அறையில் சிறைப்படுத்தி விடுகிறான். அவன் மனித உடல்களைத் தின்பவன் என்று சிறையில் அவருடன் அடைக்கப் பட்டிருக்கும் அவனுடைய பரோல் அதிகாரிச்சி மூலம் தெரிந்து கொள்கிறார் மார்வ். அவனில்லாத சமயம் அங்கிருந்து தப்புகிறார்.

மறுபடியும், ஆயுதங்கள் சகிதம் கொலைகாரன் இருப்பிடத்துக்கு சென்று, அவனையும் அவனை ஆதரித்த பாதிரியாரையும் கொல்கிறார். அடுத்த நாள் மார்வ் அவருக்கு அளிக்கப் படும் மரண தண்டனையை அலட்சியமாக ஏற்றுக் கொண்டு சாகிறார்.

கெவினை மார்வ் கொல்லும் விதம் அழகாக ஃப்ளூரசண்ட் வெள்ளை நிறத்தில் நிழலாகக் காட்டப்படாமல், அப்படியே காட்டப்பட்டிருந்தால் வாந்தியில் தியேட்டரே நாறியிருக்கும். (நான் யாரையாவது கொலை செய்ய நேர்ந்தால் நிச்சயம் இப்படித் தான் செய்வேன்)

மார்வ் கெவினின் முழங்கை வரை கைகளையும், முழங்கால் வரை கால்களையும் வெட்டி விட்டு, அவனை 'உயிருடன்' அவன் வளர்க்கும் நாயால் சாப்பிட வைக்கிறார். அவனும் புன்னகை மாறாமல் சிறு அலறல் கூட இல்லாமல் அவனுடன் உரையாடும் மார்வை கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டே இரு(ற)க்கிறான். (இந்தக் காட்சியை பேரரசு இயக்கியிருந்தால் எப்படி இருக்கும் என்று தயவுசெய்து நினைத்துப் பார்த்து விடாதீர்கள்)

நாய் மிச்சம் வைக்கும் கெவினின் தலையை எடுத்துக் கொண்டு அவனை ஆதரித்த பாதிரியாரிடம் பல காவல்களையும் கடந்து செல்கிறார். பாதிரியார் சொல்கிறான், 'நர மாமிசம் உண்பது அவனை வெண்ணிற ஒளியால் நிரப்பியது. கடவுளுக்கு வெகு அருகில் அவனைக் கொண்டு சென்றது. அவன் உண்பது அவர்கள் உடலை மட்டுமல்ல. ஆத்மாக்களையும் தான். அவன் கொல்வது யாராலும் கண்டுகொள்ளப்படாத விலை மாதுக்களை மட்டுமே.'

ஸ்டைலாக புகைத்தபடியே அவன் சொல்லும் கதையைக் கேட்டு விட்டு மார்வ் அவன் கழுத்தை ரம்பத்தால் அறுத்துக் கொன்று கொண்டிருக்கும் போது, காவலாளிகளிடம் சிக்கி சிறைச்சாலை செல்கிறார் (வேலை முடிந்து விட்டதால், அவருக்கு தப்பும் எண்ணமும் இல்லை)

கெவின் என்ற அந்தக் கொலைகாரனை நான் கடவுள் ருத்ரனோடு ஒப்பிடுவதற்கு ஒரே காரணம் அவனும் கடவுள் பெயரால் நர மாமிசம் உண்பவன் என்பது மட்டுமே! மற்ற படி அதி பலசாலி மார்வையே வீழ்த்தி விடுமளவு சூப்பர் ஹீரோவாக சித்தரிக்கப் பட்டிருப்பதாலோ, இறுதி வரை அவன் வாயைத் திறந்து ஒரு வார்த்தை கூட பேசுவதில்லை என்பதாலோ அல்ல.

பின் எச்சரிக்கை: சின் சிட்டியின் சில காட்சிகள் பார்க்கும் போது எனக்கு நான் கடவுளின் ஞாபகம் வந்ததே இந்த இடுகைக்கான காரணம். அந்த சில காட்சிகளை மட்டும் உங்களோடு பகிர்ந்திருக்கிறேன். ஏதாவது தப்பு இருந்தால் மன்னித்து விட்டு விடுங்கள். அத விட்டுட்டு நாகரிகக் கோமாளி, நாகரிகமில்லாத காவாளினு பின்னூட்டிடாதீங்கப்பு.

20 மச்சீஸ் சொல்றாங்க:

Anonymous said...

'நான் கடவுள்' மட்டுமே பாத்திருக்கேன். 'சின் சிட்டி' பாக்கல. அதனால சொல்ல ஒன்னும் இல்லை. ரசனைக்குரிய வன்முறைன்னு ஒன்னு இருக்கா? பினா வானா பதிவர் ஆவதற்கான முயற்சியா? :-))) பாத்துக்குங்க. ஸ்மைலி போட்டிருக்கேன்.

சித்ரா

♫சோம்பேறி♫ said...

/*ரசனைக்குரிய வன்முறைன்னு ஒன்னு இருக்கா?*/

ஆமாங்க நிச்சயமா இருக்கு. இந்தப் படத்தைப் பாத்தா உங்களுக்குப் புரியும்னு நினைக்கிறேன். ரத்தம் கூட ஃப்ளூரஸண்ட் வெள்ளை கலர்லயும், வில்லனுடைய ரத்தம் மஞ்சள் கலர்லயும் தான் காட்டிருக்காங்க.

/*பினா வானா பதிவர் ஆவதற்கான முயற்சியா? :-))) பாத்துக்குங்க. ஸ்மைலி போட்டிருக்கேன்.*/

ஹி ஹி.. அதெல்லாம் இல்ல. ஒரு முன்னெச்சரிக்கை தான். நீங்க ஸ்மைலி போடலைன்னாலும் உங்களைத் தப்பா நினைக்க மாட்டேன் சித்ரா:-)

தேனீ - சுந்தர் said...

படம் ரசனைகுரியதா , என தெரிய வில்லை, ஆனால் உங்கள் விமர்சனம் , கண்டிப்பாக ரசனைக்கு உரியதே..,,

சென்ஷி said...

இன்று இரவு சின்சிட்டி படம் பார்த்துட்டு நான் என்னோட கருத்தை சொல்றேன்.

//ஆமாங்க நிச்சயமா இருக்கு. இந்தப் படத்தைப் பாத்தா உங்களுக்குப் புரியும்னு நினைக்கிறேன். ரத்தம் கூட ஃப்ளூரஸண்ட் வெள்ளை கலர்லயும், வில்லனுடைய ரத்தம் மஞ்சள் கலர்லயும் தான் காட்டிருக்காங்க.//

கரப்பானையும், கொசுவையும் கொஞ்சம் மனசுக்குள்ள யோசிச்சு பாருங்க...

ஆக பயணம், திரை விமர்சனம், அனுபவம், மொக்கை எல்லாம் வந்தாச்சு. அடுத்து கவிதை எழுத வேண்டியதுதான் பாக்கி போல :-))))

♫சோம்பேறி♫ said...

/*தேனீ - சுந்தர் said...
படம் ரசனைகுரியதா , என தெரிய வில்லை, ஆனால் உங்கள் விமர்சனம் , கண்டிப்பாக ரசனைக்கு உரியதே..,,*/

ரொம்ப ரொம்ப நன்றிங்க தேனீ - சுந்தர்../*இன்று இரவு சின்சிட்டி படம் பார்த்துட்டு நான் என்னோட கருத்தை சொல்றேன்.*/

ஹையையோ.. நீங்க எல்லாம் அந்தப் படத்தைப் பாக்கக் கூடாது. அது 18+.

/*கரப்பானையும், கொசுவையும் கொஞ்சம் மனசுக்குள்ள யோசிச்சு பாருங்க... */

கொசுவை அடிக்க எனக்கு பயமோ, அருவெருப்போ கிடையாது சென்ஷி. :-)

/*அடுத்து கவிதை எழுத வேண்டியதுதான் பாக்கி போல :-)))) */

அடப் பாவமே! போன இடுகையில பிரசுரித்த கவிதைகளிலிருந்து, ஒரு புத்தகமே ரெடி பண்ணிட்டேன். நீங்க அதைப் படிக்காம தான் ஸ்மைலி போட்டுட்டு போனீங்களா? :-(

ஆக்சுவலி, நான் இப்போ தமிழவனோட, 'ஜி.கே எழுதிய மர்ம நாவல்' அப்படினு ஒரு புத்தகத்தைப் படிச்சுகிட்டு இருக்கேன். அதைப் பத்தி எழுதலாம்னு இருக்கேன்.

Vijay Anand said...

அய்யோ கவிதையா ...
i am escape....
கடை ஒரு வருஷம் லீவ்...
விஜய்

Karthikeyan G said...

இந்த படத்தில் 'குத்து' ரம்யா நடித்திருக்கிறாரா?
This is kannda film. Am i correct?

madmax said...

சோம்பேறி,sin city பற்றிய தங்கள் புரிதல் தவறானது.
படத்தின் ஆரம்பத்தில் Josh Hartnett பேசும் முக்கிய வாக்கியம் "அவள் கொடுத்த காசோலையை காலையில் பணமாக மாற்ற வேண்டும்" (I'll cash her cheque in the morning.) அதற்கு முன்னர் வந்த வசனங்கள் எல்லாம் இப்பொது வேறு அர்த்ததில் புரியும் நமக்கு. அந்த பெண் வாழ விருப்பமில்லாமல் தற்கொலை செய்யவும் தைரியமில்லாமல் தன்னைக் கொல்லவே பணம் கொடுத்து ஆளை ஏற்பாடு செய்கிறார். அதைப் போலவே படத்தின் கடைசியில் வரும் பெண்ணும். படத்தின் tag line மிக பொருத்தமாக இருக்கும் - சின் சிட்டியில் சரியான இடத்தில் தேடினால் எதுவும் கிடைக்கும்.

இதை போலவே படத்தின் பிற கதைகளும் தங்கள் புரிதலிலிருந்து கொஞ்சம் வேறுபடுகிறது. மீண்டும் பாருங்கள் கண்டிப்பாக இன்னும் அதிகமாக் பிடிக்கும்.

சின் சிட்டி காமிக் புத்தகங்கள் கிடைத்தால் படித்துப் பாருங்கள். அற்புதமான புத்தகங்கள். சிலருக்கு சுத்தமாக பிடிக்காது சிலர் கோவில் கட்டுவார்கள். நீங்கள் கோவில் கட்டும் ரகம் என தோன்றுகிறது.

Saravana Kumar MSK said...

நானும் இப்படத்தை பற்றி எழுதி இருக்கிறேன் தல. :)
செம படம்..

http://msk-cinema.blogspot.com/2009/03/sin-city-2005.html

♫சோம்பேறி♫ said...

/*Vijay Anand said...
அய்யோ கவிதையா ...
i am escape....
கடை ஒரு வருஷம் லீவ்...
விஜய்*/

ஹைய்யோ விஜய். ஓடாதீங்க.. நில்லுங்க.. நில்லுங்க.. அது நேத்தே முடிஞ்சிடுச்சு. இனிமே எழுத மாட்டேன். ஓடாதீங்க.. ப்ளீஸ்..

/*Karthikeyan G said...
இந்த படத்தில் 'குத்து' ரம்யா நடித்திருக்கிறாரா?
This is kannda film. Am i correct? */

இன்னும் இல்லைங்க கார்த்திகேயன்ஜி. விரைவில் சுடப்படலாம். (அவர் நடிப்பதாக இருந்தால் நான் இதன் ரீ மேக்குக்கு இயக்குனராக விரும்புகிறேன்.)

/*Saravana Kumar MSK said...
நானும் இப்படத்தை பற்றி எழுதி இருக்கிறேன் தல. :)*/

நான் நீங்க எழுதினப்பவே படிச்சுட்டேங்க. ரொம்ப நல்லா எழுதிருக்கீங்க சரவணன். ஆனா ஏங்க சுருக்கமா முடிச்சிடீங்க...

♫சோம்பேறி♫ said...

டியர் madmax

/*சோம்பேறி,sin city பற்றிய தங்கள் புரிதல் தவறானது.*/

நான் கடவுள் என்னை அதிகம் தாக்கியதாலோ என்னவோ, எல்லாப் படங்களும் அதன் சாயலிலேயே தெரிகின்றன.

/*கடைசியில் வரும் பெண்ணும். படத்தின் tag line மிக பொருத்தமாக இருக்கும்*/

I'll cash her cheque in the morning என்பதற்கு ஏதாவது பூடகமான அர்த்தம் இருக்குமோ என்று நினைத்தேன். கடைசியில் வரும் பெண்ணை பற்றிய உங்கள் புரிதலை கொஞ்சம் விளக்கமாக சொல்லியிருந்தால் புரிந்திருக்கும்.

/*மீண்டும் பாருங்கள். காமிக் புத்தகங்கள் கிடைத்தால் படித்துப் பாருங்கள். */

கரும்பு திண்ணக் கூலியா? நிச்சயம் திரும்பப் பார்க்கிறேன். காமிக்ஸ் புத்தகங்களும் கிடைத்தால் படிக்கிறேன். வேறொரு கோணம் பிடிபடலாம்.

Karthikeyan G said...

//நான் கடவுள் என்னை அதிகம் தாக்கியதாலோ என்னவோ, எல்லாப் படங்களும் அதன் சாயலிலேயே தெரிகின்றன.
//

நீங்கள் அதை திருப்பி தாக்கியிருந்தால் அப்படி தெரியாது.
:-)

♫சோம்பேறி♫ said...

வொய் திஸ் கொல வெறி கார்த்திகேயன்ஜி? ஒரு வார்த்தை கூட சீரியஸா பேச விட மாட்டீங்க போல :-)

madmax said...

சோம்பேறி (ஏதோ திட்டுவது போலிருக்கிறது!!)

படத்தின் முதல் காட்சியில் நடந்ததே கடைசியிலும் நடக்க இருக்கும். தன் தோழிகளுக்கு துரோகம் செய்த விலை மாது,தன்னை எப்படியும் கொன்று விடுவார்கள் அதற்கு பதில் தானே தன்னைக் கொல்ல Josh Hartnetஐ ஏற்பாடு செய்கிறாள்.

தன்னை தானே கொல்ல ஆள் வைக்க முடிவது, அருவருப்பான உருவம் உடையவனுக்கு காதலி கிடைப்பது, பெண்ணை உன்பவனுக்கு பாதுகாப்பு கொடுப்பவன், தன்னை பற்றி கவலைப் படாமல் சிறு பெண்ணை காப்பாற்றுபவன் இப்படி எது/எப்படி பட்ட மனிதர்கள் வேண்டுமானாலும் sin cityஇல் கிடைப்பார்கள். tag line இப்படி பொருந்துகிறது.

♫சோம்பேறி♫ said...

ஓ.. பொருமையாக மறுபடி வந்து விளக்கியதற்கு நன்றி மேட் மேக்ஸ். மிகவும் நல்ல புரிதல்.

உங்க பெயரும் திட்டுவது போல தாங்க இருக்கு!!! சேம் பின்ச்:-)

அறிவிலி said...
This comment has been removed by the author.
அறிவிலி said...

Good review. Will come back after seeing the movie. Thanks

(sorry for petering)

♫சோம்பேறி♫ said...

அதெல்லாம் முடியாது அறிவிலி.. ஏன் லேட்? உங்க பேச்சு கா.

Kripa said...

You Are Posting Really Great Articles... Keep It Up...

We recently have launched a website called "Nam Kural"... We want the links of your valuable articles to be posted in our website...

தாங்கள் எங்கள் வலைபக்கத்திலும் சேர்ந்து தங்களின் வலைப்பக்கங்களை மேலும் பல இணைய பயனாளிகளுக்கு கொண்டு செல்லுங்கள். எங்கள் வலை முகவரி,
http://www.namkural.com.

நன்றிகள் பல...

- நம் குரல்

D.R.Ashok said...

Interesting man.. படம் பாக்க தூண்டரீங்க... torrentla கிடைக்குமா???

Post a Comment

தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு.

Blog Widget by LinkWithin
 
சோம்பேறி. Design by Pocket