ஸ்ரீவில்லிப்புத்தூருக்கு வாங்க_/'\_

Monday, 4 May, 2009

Views

முந்தைய இடுகையில் குறிப்பிட்டிருந்த சோமியம்மன் கோவில் தவிர ஸ்ரீவில்லிப்புத்தூர் வரும் போது பார்வையிடப் பரிந்துரைக்கப்படும் மற்ற தலங்கள்:

(நேற்று கொடுக்க மறந்த சோமியம்மன் கோவில் கோபுரம்)

# ஆண்டவனையே டாவடித்த ஆண்டாளின் One and Only ஆண்டாள் கோவில். ஆண்டாள் அலங்காரப் பிரியை என்பதால், திருவிழா சமயங்களில் ஆண்டாளின் அலங்காரம், கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். இந்தக் கோவில் கோபுரம் தமிழக அரசின் சின்னம் என்பது காந்தியை சுட்ட விஷயம் தெரியாதவர்களுக்குக் கூட தெரியும். (எனக்கே தெரிஞ்சிருக்கே!)


இந்தக்
கோவிலைப் பற்றி உங்களுக்கு ஏற்கனவே நிறைய தெரிந்திருக்கும் என்பதாலும், இதைத் தவிர எனக்கு வேறோன்றும் தெரியாதென்பதாலும் அடுத்த தலம் பற்றி பார்க்கலாம்.

# நீங்கள் அமைதி விரும்பியாக இருந்தால் கட்டு சோறு கட்டிக் கொண்டு, சென்பகத்தோப்பு ராக்காச்சி அம்மன் கோவிலுக்குப் போகலாம்.

இயற்கை விரும்பியாக இருந்தால், அங்கிருந்து காட்டுப் பாதை வழியே நடந்து காட்டழகர் கோவிலுக்கு செல்லலாம்.
(சயனத்தில் பெருமாள் - நன்றி சாரு நிவேதிதா)
காட்டழகர் பெருமாளின் அம்சம். இந்தக் கோவிலுக்கு பின் உள்ள மலையின் வடிவம் பெருமாளே படுத்திருப்பது போன்று இருக்கும்.

(ரயில் நிலையத்திலிருந்து ஆண்டாள் கோவிக் கோபுரமும் சோமியம்மன் கோவில் கோபுரமும்)

# ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து இரண்டு மைல் தொலைவில் திருவண்ணாமலை, என்ற மலைக் கோவில் இருக்கிறது. இந்தக் குன்றில் கொண்டாட்டத்தில் இருப்பவர் குமரனல்ல. அவர் மாம்ஸ் கோவிந்த சாமி.


இங்கே
வெளிப் பிரகாரத்தில் இருக்கும் சாமியின் செருப்புகளால் அடித்துக் கொண்டால், பிரச்சனைகள் தீரும் என்று ஒரு ஐதீகம். பதினைந்து அடி உயரத்தில், ஒரே கல்லில் செய்த விநாயகர் சிலை, குளத்தடியிலிருந்து கண்டெடுக்கப்பட்டு அடிவாரத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது.

# ஸ்ரீவியிலிருந்து பதினைந்து மைல் தொலைவில் சதுரகிரி மலை இருக்கிறது. இந்த மலையடிவாரத்தில் இருக்கும் தானிப்பாறை அருவியில் குளித்து விட்டு, மலை மேல் ஏழு மைல் ஏறிப் போனால் மூல ஸ்தானத்தில் இருக்கும் சுந்தர மகாலிங்கம் ஸ்வாமிகளை தரிசிக்கலாம்.


ஆடி
அமாவாசை என்றால் மிகவும் விசேஷம். மற்ற நாட்களில் பெரிதாகக் கூட்டம் எதுவும் இருக்காது. மூலிகைகள் நிரம்பியது. ராமர்பிள்ளை என்று ஒருவர் மூலிகை பெட்ரோல் தயாரிப்பதாக சொல்லி டகால்டி வேலை செய்தாரே, அந்த மூலிகை இந்த மலையில் தான் கிடைத்ததாக சொன்னார்.

இங்கே 24 மணி நேர இலவச சத்திரங்களில் சாப்பாடு (குறைந்தபட்சம் பழைய சோறு தாளிதமாவது), கடுங்காப்பி, சுக்குக் காப்பி என்று ஏதாவது கொடுக்கப் பட்டுக் கொண்டே இருக்கும். (வாழ்க்கை வெறுத்துப் போய் விட்டால், லூசுத்தனமாக தற்கொலை முயற்சி எதுவும் செய்யாமல் பேசாமல், இங்கே வந்து விடுங்கள்)

விக்கிமேப்பியாவின் வழிகாட்டி

# ஸ்ரீவியிலிருந்து பதினாறு மைல் தொலைவில் அடர்ந்த காட்டுக்குள் நீர் காத்த அய்யனார் கோவில் இருக்கிறது. வன தேவதைகள் ஸ்பெஷலான இந்தக் கோவில், அருவி ஆறு என நீர் வளங்கள் நிறைந்தது. இங்கு சாமி கும்பிட வருபவர்களை விட, குளித்து விட்டு கடா வெட்டி சாப்பிட வருபவர்கள் தான் அதிகம்.

பெரும்பாலானோர் மப்பில் இருப்பார்களென்பதால், பெண்கள் யாரும் தனியாகப் போக வேண்டாம். நான் அழைத்துக் கொண்டு போகிறேன்(சந்தேகமில்லாமல் பெண்களை மட்டுமே!)

# பழங்கள், ஸ்வீட், சிப்ஸ், குளிர்பானங்கள் எல்லாம் வாங்குமளவு உங்கள் பட்ஜெட்டில் இடம் இருந்தால் எங்கள் வீட்டுக்கு கூட வரலாம். எங்கள் தெரு முக்கில் இருக்கும் பிள்ளையார் கோவிலில் சிறப்பு தரிசனத்துக்கு ஏற்பாடு செய்கிறேன்.

42 மச்சீஸ் சொல்றாங்க:

Vijay Anand said...

புதுச ஒரு வேலை ஆரம்பிப்பது மாதிரீ இருக்கு....

// பழங்கள், ஸ்வீட், சிப்ஸ், குளிர்பானங்கள் எல்லாம் வாங்குமளவு உங்கள் பட்ஜெட்டில் இடம் இருந்தால் எங்கள் வீட்டுக்கு கூட வரலாம்.//

குளிர்பானங்கள் என்றால் பீர் ஆ அல்லது பெப்சி, கோக் ?
ஒரு டிக்கெட்டா போடுஇங்க ....

சோம்பேறி said...

உங்கள் சித்தம் என் பாக்கியம். ஃப்ரீயா கிடைச்சா ஃபினாயிலைக் கூட வேண்டாம்னு சொல்ல மாட்டேன் விஜய்:-))

Vijay Anand said...

ஓகே... பீர்ரோடு வந்து பார்க்குறன்

சோம்பேறி said...

♥ty Welcome:-)))))

சென்ஷி said...

கோபுர தரிசனம் கோடி புண்ணியம்ன்னு சொல்லுவாங்க. அழகா போட்டோல்லாம் போட்டு எழுதறீங்க.. நிறைய்ய புண்ணியம் ஸ்டாக்ல ஏறியிருக்கும்ன்னு நினைக்குறேன்!

சென்ஷி said...

//சோம்பேறி said...

உங்கள் சித்தம் என் பாக்கியம். ஃப்ரீயா கிடைச்சா ஃபினாயிலைக் கூட வேண்டாம்னு சொல்ல மாட்டேன் விஜய்:-))
//

ஆமாம். அதை பாத்ரூம் கழுவ யூஸ் பண்ணுவாங்க. தப்பா நினைக்காதீங்க :)

கொற்கை said...

Nalla ezuthiyirukkeenga.

Innum koncham sollaal thevalai.

Who is kaattazagar? His temple pic please.

Who is Somiyammaan? Is it paarvathi?

சோம்பேறி said...

/*நிறைய்ய புண்ணியம் ஸ்டாக்ல ஏறியிருக்கும்ன்னு நினைக்குறேன்!*/

ஹப்ப்பாடா.. ஐயாம் வெரி ஹேப்பி..

/*ஆமாம். அதை பாத்ரூம் கழுவ யூஸ் பண்ணுவாங்க. தப்பா நினைக்காதீங்க :)*/

ஆமாங்கோ.. ஆரும் தப்பா நினைச்சுப் புடாதீங்கோ.. மக்களுக்கு தெளிவு படுத்துனதுக்கு நன்றி சென்ஷி.

துளசி கோபால் said...

வந்தேனே ரெண்டு ரெண்டரை மாசம் முந்தி.

ஆண்டாளைத்தவிர வேறொன்னையும் பார்க்கலை(-:

சோம்பேறி said...

பாராட்டுக்கு நன்றி கொற்கை.

சோமியம்மன் என்ற வைத்தியநாத ஸ்வாமி தலம் பற்றி எனக்கு தெரிந்தவரை முந்தைய பதிவில் குறிப்பிட்டுருக்கிறேன். ஒரு எட்டு போய் பார்த்து விடவும்.

காட்டழகர் பெருமாளின் அம்சம். இந்தக் கோவிலுக்கு பின் உள்ள மலையின் வடிவம் பெருமாளே படுத்திருப்பது போன்று இருக்கும். அந்த மலையின் படத்தை சாரு ஆன்லைனிலிருந்து சுட்டு இடுகையில் இணைத்திருக்கிறேன்.

சோம்பேறி said...

கண்டிப்பா திரும்ப வாங்க துளசி கோபால்..

விக்னேஷ்வரி said...

கோவிலுக்குள்ள புகைப்படம் எடுக்க அனுமதிக்குறாங்களா என்ன...
நானும் ஸ்ரீவில்லிபுத்தூர் தான். ஆனா, பக்கத்துல இருக்குற நிறைய ஊர்களுக்கு / கோவில்களுக்குப் போனதில்லை. நல்ல பதிவு.

விஷ்ணு. said...

சிவகாசில இருந்தப்ப வாரம் வாரம் ஆண்டாள் அம்மன் கோவிலுக்கும் மடவார்வளாகம் கோவிலுக்கும் போவேன். இங்க சென்னை வந்தப்புரம் அந்த நினைவுகள் மட்டுமே உடனிருக்கு.

உருப்புடாதது_அணிமா said...

ஆன்மீகம் ஆன்மீகம் ( அபிராமி அபிராமி ஸ்டைலில் படிக்கவும்)

உருப்புடாதது_அணிமா said...

சோம்பேறி , இனிமேல் ஆன்மீக புயல் என்று அழைக்கப்ப்டுவார்...

உருப்புடாதது_அணிமா said...

//பெரும்பாலானோர் மப்பில் இருப்பார்களென்பதால், பெண்கள் யாரும் தனியாகப் போக வேண்டாம். நான் அழைத்துக் கொண்டு போகிறேன்(சந்தேகமில்லாமல் பெண்களை மட்டுமே!)///

துனைக்கு நானும் இப்பவே துண்ட போட்டுக்கிறேன்..

உருப்புடாதது_அணிமா said...

//இந்தக் கோவிலைப் பற்றி உங்களுக்கு ஏற்கனவே நிறைய தெரிந்திருக்கும் என்பதாலும், இதைத் தவிர எனக்கு வேறோன்றும் தெரியாதென்பதாலும்///

இஃகி இஃகி... அதுதாணே பார்த்தேன்..

சோம்பேறி said...

/*விக்னேஷ்வரி said...
கோவிலுக்குள்ள புகைப்படம் எடுக்க அனுமதிக்குறாங்களா என்ன...*/

யாரும் பார்க்காத போது க்ளிக்கி விடுவது தான். பாராட்டுக்கு நன்றி விக்னேஷ்வரி.

/*விஷ்ணு. said...
சிவகாசில இருந்தப்ப வாரம் வாரம் ஆண்டாள் அம்மன் கோவிலுக்கும் மடவார்வளாகம் கோவிலுக்கும் போவேன். */

அதனாலென்ன? அடுத்த முறை சிவகாசி வரும்போது, சேத்து மாத்து மற்ற கோவில்களையும் பாத்துட்டுப் போங்க.

சோம்பேறி said...

/*உருப்புடாதது_அணிமா said...
சோம்பேறி , இனிமேல் ஆன்மீக புயல் என்று அழைக்கப்ப்டுவார்...*/

மிக்க மகிழ்ச்சி. இன்று முதல் நீர் 'பதிவருக்கு பட்டம் தந்த பின்னூட்ட சூறாவளி' என்று அணைவராலும் அன்போடு அழைக்கப்படுவீர். யாரங்கே! யாரங்கே! யாரடா அங்கே..

/*துனைக்கு நானும் இப்பவே துண்ட போட்டுக்கிறேன்..*/

அப்படியாவது வாங்க. நீங்க வந்தா மட்டும் போதும்.(அப்பாடா பஸ் செலவு மிச்சம்)

/*இஃகி இஃகி... அதுதாணே பார்த்தேன்..*/

ம்ம்ம்.. அவசரப்பட்டு ஆன்மீகம் ஆன்மீகம்னு பாட்டு பாடிட்டீங்களோ!

ஒரு காசு said...

அந்த பெரிய கோபுரம் (தமிழக அரசின் சின்னம்) வடபத்ர சாய் கோவில் கோபுரம் - ஆண்டாள் கோவில் கோபுரம் அல்ல.

இரண்டும் அருகருகில் உள்ளதால் இந்த குழப்பம்.

அப்புறம் ஸ்ரீவி மாரியம்மன் கோவில் பூக்குழி ரொம்ப விசேஷம்.

சோம்பேறி said...

/*இரண்டும் அருகருகில் உள்ளதால் இந்த குழப்பம்.*/

ஓ அப்படியா..

/*அப்புறம் ஸ்ரீவி மாரியம்மன் கோவில் பூக்குழி ரொம்ப விசேஷம்*/

ஆமாங்க.. பெரிய மாரியம்மன் கோவில் பூமிதி விழா ரொம்ப விசேஷம்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஓ மிக அழகான ஊர் எப்ப முடியுதோ பாக்கவேண்டிய லிஸ்ட்ல சேத்துக்கிறேன் அதும் அந்த பக்கத்துல சில கோயில்கள் போட்டோ எல்லாம் சூப்பர்.

சோம்பேறி said...

மிகவும் நன்றி முத்துலட்சுமி. கண்டிப்பா வாங்க. பதிவின் நீளம் கருதி, சுற்று வட்டாரத்திலிருக்கும் இன்னும் சில அழகான இடங்களை சேர்க்க முடியவில்லை.

அணைத்து மக்களுக்கும்: இங்கே வருவதற்கு வழியோ, அல்லது வேறு எதுவும் உதவியோ தேவைப் பட்டால் ஒரு மெய்ல் தட்டி விடுங்க..

Anonymous said...

You are a somberi, aren't you?

That is why, you have taken photos with artistic beauty. A man in a hurry cant do that.

Should I congrat you or your camera brand? I hope the first.

You are giving a different meaning to the word Somberi. However, the idea is not new - many great writers have already sung the praise of idlers. Read the essay by R.L.Stevenson: An apology for Idlers.

You are the right person to whom I can recommend the following poem by W.H.Davies. I mean, we (persons like me) often forget W.H.Davies' wisdom; but you haven't! Keep up the tempo of being an idler:Leisure

WHAT is this life if, full of care,
We have no time to stand and stare?—

No time to stand beneath the boughs,
And stare as long as sheep and cows:

No time to see, when woods we pass,
Where squirrels hide their nuts in grass:

No time to see, in broad daylight,
Streams full of stars, like skies at night:

No time to turn at Beauty's glance,
And watch her feet, how they can dance:

No time to wait till her mouth can
Enrich that smile her eyes began?

A poor life this if, full of care,
We have no time to stand and stare.

...

Meantime, I have put up your pic of andaal temple on my desktop. Exhilarating and enervating every day.

Thank you.

From

Amalan

An avuncular advice, if you don't mind.

Keep up the same jovial and irreverent style when writing about temples etc. If not, the anmikavaathis prowling in blogsophere - many are from Tamilnaadu - will kidnap you; and you will become one of them to be shunned by persons like me.

நான் ஆதவன் said...

சாமி பதிவுல குத்தம் குறை கண்டு பிடிச்சா சாமி கண்ண குத்திடும்...அதுனால பதிவு சூப்பர்ன்னு சொல்லிக்கிறேன்.

நான் ஆதவன் said...

//Anonymous said...

You are a somberi, aren't you?

That is why, you have taken photos with artistic beauty. A man in a hurry cant do that. //

சோம்பேறித்தனம் பார்க்காமல் தனக்கு தானே பாராட்டி பின்னூட்டம் போட்டுக்கொண்ட சோம்பேறியாரின் சுறுசுறுப்புத்தனம் வியக்க வைக்கிறது

நான் ஆதவன் said...

//
You are the right person to whom I can recommend the following poem by W.H.Davies. //

அவ்வ்வ்வ்வ்...முடியல

நான் ஆதவன் said...

பை த பை பதிவு நல்லாயிருக்கு...அதை விட தலைப்புல இருக்குற கோவில் சிம்பள் டச்சிங்கா இருக்கு.

இடம் தெரியனும்..அப்பாலிக்கா கேட்டு மெயில் பண்றேன்....வரட்டா

அப்புறம் சக்தி குட்டி ரெண்டாப்பு பாஸானா உங்களுக்கு மொட்டை போடுறதா இந்த கோவிலுக்கு வேண்டியிருக்கேன். குட்டிகிட்ட சொல்லிடுங்க

Anonymous said...

கோபுர தரிசனம். கோடி புண்ணியம்.

//# பழங்கள், ஸ்வீட், சிப்ஸ், குளிர்பானங்கள் எல்லாம் வாங்குமளவு உங்கள் பட்ஜெட்டில் இடம் இருந்தால் எங்கள் வீட்டுக்கு கூட வரலாம். எங்கள் தெரு முக்கில் இருக்கும் பிள்ளையார் கோவிலில் சிறப்பு தரிசனத்துக்கு ஏற்பாடு செய்கிறேன்.//

இந்த பிள்ளையாரையும் ஒரு ஃபோட்டோ எடுத்துப் போடுங்க. நாங்க, எங்க வீட்டுல இருந்தே சாமியப் பாத்துட்டு, இதையெல்லாம் சாப்பிட்டா சிறப்பு தரிசன effect ம், புண்ணியமும் வந்துடாது? :-)

சித்ரா

சோம்பேறி said...

அன்பின் அமலன்,

முதலில், உங்கள் நீளமான பின்னூட்டத்திற்கு நன்றி. இதை மெயிலில் அணுப்பியிருந்தால், சாரு நிவேதிதா போல் நானும் கடிதம் என்று தனிப் பிரிவு ஆரம்பித்து ஃபிலிம் காட்டியிருப்பேன். (ஆனால் ஆதவன் போலவே யாரும் நம்பியிருக்கமாட்டார்கள்.)

புகைப்படங்கள் பற்றிய உங்கள் பாராட்டுக்கு நன்றி. அதில் சில மட்டுமே நான் எடுத்தது.

W.H.Daviesஸின் இந்தப் பாடல் எனக்கு மிகவும் பிடித்தது. இதை (ஒன்பதாம் வகுப்பில் என்று நினைக்கிறேன்) ஆங்கிலத்தில் மனப்பாடப் பகுதியில், அர்த்தம் தெரியாமல் (தெரிந்து கொள்ள விரும்பாமல்) படித்திருக்கிறேன். இப்போது அர்த்தத்துடன் படிக்கையில் புது விதமாகத் தோன்றுகிறது. தன்யனானேன்.

பார்த்திபன் கனவு திரைப்படத்தில், விவேக் ட்ராஃபிக் கான்ஸ்டபிலிடம் லீவ் லெட்டர் சொல்லி எஸ்ஸாவது போல, இந்தப் பாடலை எங்கள் ஊர் கிழவிகளிடம் பீட்டர் விடுவதற்கு பயன்படுத்தியிருக்கிறேன்.

இன்னும் கோவில்கள் பற்றி எழுத ஏதாவது இருக்கிறதா என்று தெரியவில்லை. எழுதுகையில் நிச்சயம் என் எழுத்து முறையை மாற்றிக் கொள்ள மாட்டேன். நன்றி.

சோம்பேறி said...

நான் ஆதவன் said...

/* பதிவு சூப்பர்ன்னு சொல்லிக்கிறேன்.*/

நன்றி.

/* தனக்கு தானே பாராட்டி பின்னூட்டம் போட்டுக்கொண்ட சோம்பேறியாரின் சுறுசுறுப்புத்தனம் வியக்க வைக்கிறது*/

நன்றி. நன்றி. நன்றி.

/* அவ்வ்வ்வ்வ்...முடியல*/

ஆனந்தக் கண்ணீரா ஆதவன். மீ டூ.. நோ. அழப்படாது. கண்ணைத் தொடச்சுக்கோங்க. சிரிங்க. ம்ம்ம்ம்ம்.. இப்போ பாக்க எப்படி இருக்கு.

/* சக்தி குட்டி ரெண்டாப்பு பாஸானா உங்களுக்கு மொட்டை போடுறதா இந்த கோவிலுக்கு வேண்டியிருக்கேன்.*/

ஆஹா.. அவ ரெண்டாப்பு பாஸாமல் இருக்க ஆவன செய்யப்படும். மெயிலில் சந்திப்போம்.

சோம்பேறி said...

/*Anonymous said...

சிறப்பு தரிசன effect ம், புண்ணியமும் வந்துடாது? :-) சித்ரா*/

ம்ம்ஹூம்.. வந்துடாது. கர்ர்ர்ர்.. (யாவாரம் நடக்கும் இடத்தில் வந்து பொழப்பை கெடுக்கும் சித்ராவை வன்மையாகக் கண்டிக்கிறேன்.)

அறிவிலி said...

பரணிதரனுக்கு ஒரு வாரிசா ஆயிரலாம் போல இருக்கே.

சோம்பேறி said...

அவருக்கு வாரிசாகிறதுக்கு நான் புண்ணியம் பண்ணியிருக்கனும். (அவருக்கு சொத்து நிறைய இருக்குதுல்ல.)

அறிவிலி said...

நெறய கோயிலுக்கெல்லாம் போயிருக்காரு, அங்க கெடைக்கறதெல்லாம் வெச்சிருப்பாரு.

என்னல்லாம் கெடைக்கும்னு நிச்சயமா உங்களுக்கு தெரிஞ்சிருக்கும்.

சோம்பேறி said...

நோ ப்ராப்ளம். பாய்ஸ் படத்தில் செந்தில் சொல்வது போல 'இன்பர்மேஷன் இஸ் வெல்த்'

எப்போது என்ன நடக்கும் என்று யாருக்குத் தெரியும்!!

sundar said...

//# பழங்கள், ஸ்வீட், சிப்ஸ், குளிர்பானங்கள் எல்லாம் வாங்குமளவு உங்கள் பட்ஜெட்டில் இடம் இருந்தால் எங்கள் வீட்டுக்கு கூட வரலாம். எங்கள் தெரு முக்கில் இருக்கும் பிள்ளையார் கோவிலில் சிறப்பு தரிசனத்துக்கு ஏற்பாடு //


நீங்க வெறும் கை யோடவ அனுப்ப போகிறீர்கள். புளியமரத்தடி கடைல பால்கோவா வங்கி தராமலா இருப்பீங்க

சோம்பேறி said...

கண்டிப்பா சுந்தர். நீங்க தைரியமா வாங்க. என் கையாலேயே உங்களுக்கு அல்வா ஸாரி.. பால்கோவா கிண்டித் தரேன்.

Anonymous said...

thiruvalli puthiur endu naan adithen. palaya puthakam ondril. eppadi sri vanthatu. . gandhiyai sutta visayam enna vendu sollungo.

/'\சோம்பேறி/'\ said...

/*thiruvalli puthiur endu naan adithen. palaya puthakam ondril. eppadi sri vanthatu. .*/

இங்கிலாந்து பீட்டர்கள் இந்தியா வந்த உடனேயே ஸ்ரீ என்று மாற்றியிருக்கக் கூடும்.

/*gandhiyai sutta visayam enna vendu sollungo.*/

என்னாது.. காந்திய சுட்டுட்டாய்ங்களா!!!!!!! டேய்.. அடைங்கடா கடைகளை.. கொளுத்துங்கடா பஸ்களை..

Kannan said...

Hi..

NIce post..I was born and brought from srivlliputtur..

Though I know all the info above, I haven't shared anybody...


Thanks for sharing our town info..

regards
Kannan S

Anonymous said...

loosu thanama solama konjam paya pakhtiodu sona makkal etrukolvargal.. so u keep manners

Post a Comment

தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு.

Blog Widget by LinkWithin
 
சோம்பேறி. Design by Pocket