'அந்த' குஜிலி ஆண் பதிவர் இவர்தான் - ஆதாரங்களுடன் Exclusive

Monday 25 May, 2009

Views

முன் குறிப்பு : இது ரொம்ப சீரியஸான பதிவு. எனவே முகத்தை நாயகன் ஜே.கே.ரித்தீஷ் எம்.பி. அவர்கள் போல சீரியஸாக வைத்துக் கொண்டு, அரிக்காவிட்டாலும் தாடையை சொறிந்து கொண்டு படிக்கவும் (பட்ஜெட் இடமளித்தால் ஒரு பஞ்சுமிட்டாய் கலர் சட்டை மற்றும் கூளிங் க்ளாஸுடன் படிக்கவும்..)

ஒரு இடத்தில் திருட்டு நடந்து விட்டால், முதலில் 'எவன்டா எடுத்தது?' என்று சவுண்டு விடுவது அந்த திருடனாகத் தான் இருக்கும். யெஸ்.பாலபாரதியின் பதிவிலும் சரி, குசும்பனின் பதிவிலும் சரி உணர்ச்சிவசப்பட்டு ஓவராக சவுண்டு விட்டது, நாகேஷ் படத்தை ப்ரொபைலில் வைத்துக் கொண்டு கமல்ஹாசன் வேலை செய்து வரும் 'அந்த' பதிவர் தான்.

(இதற்கு முன் 'வாயில் உமிழ்ந்தால் முத்தமா?' என்று அன்னியன் ரெமோ ரேஞ்சுக்கு பீல் பண்ணி கவிதையெழுதி வந்தவர் சமீப காலமாக 'வாஷ் பேஸினில் உமிழ்ந்தால் குத்தமா?' என்று அம்பி ரேஞ்சுக்கு பம்முகிறார்.)

க்ரைம் பிரான்ச் உயர் அதிகாரி என்ற முறையில் சொல்கிறேன் (யாருக்குத் தெரியப் போவுது) அணைத்து குற்றவாளிகளிடமும் காணப்படும் பொதுவான குணங்களில் மற்றொன்று, 'எங்கப்பன் குதுருக்குள்ள இல்லீங்கோ' என்று கூவுவது தான். சமீப காலமாக இவரது இடுகைகளில் பின்வரும் தொனிகள் தேவையில்லாமல் தினிக்கப்படுகின்றன என்று கீனாக அப்ஸர்வ் செய்து வருபவர்களுக்கு தெரிந்திருக்கும்.

1) எனக்கு இன்னும் திருமணமாகவில்லை. சத்தியமாக குழந்தைகள் எதுவும் இல்லை. (இனியும் திருமணம் செய்து கொள்வதாக இல்லை. ஆனால் எங்கள் குடும்ப ஜோதிடர் கொடுத்த நீலக்கல் மோதிரத்தைப் போட்டுக் கொண்டால் இன்னும் ஏழு மாதத்தில் நான்கு குழந்தைகள் பிறக்கும் என்று சொல்லியிருக்கிறார்)

2) என்னிடம் தொலைபேசியோ, கைபேசியோ, கால்பேசியோ கிடையாது. இனி வாங்கினாலும் உபயோகிப்பதாக இல்லை. (உபயோகிக்கவும் தெரியாது. நான் அஞ்சாப்பையே ஆறு வருஷம் படிச்சேன். தவிர, சில வருடங்களுக்கு முன் வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருண்டுகொண்டிருந்த ஒரு உருவமில்லாத உருண்டையை எடுத்ததிலிருந்தே வாய் பேச வருவதில்லை)

3) இதுவரை நடந்த எந்த பதிவர் சந்திப்பிலும் நான் கலந்து கொண்டதில்லை. கலந்து கொண்ட சந்திப்புகளில் எந்தப் பதிவரையும் சந்தித்ததில்லை. (சென்னை பதிவர் சந்திப்புக்கு நான் சென்ற போது மெரினாவில் தண்ணியில்லா குட்டைக்கு அருகில் நிற்பதாக சொல்லப்படும் காந்தித் தாத்தா கூட கம்பை ஊன்றியவாறு டி.ஐ.ஜி அலுவலகம் பக்கமாகப் போய் விட்டார்)

4) என்னிடம் கணினி இல்லை. பொருளாதார வீழ்ச்சி காரணமாக எங்கள் அலுவலகத்திலிருந்த கணினிகள் பிடுங்கப் பட்டு கால்குலேட்டரும், டைப்ரைட்டரும் திணிக்கப்பட்டுள்ளன. எங்க ஊர் பிரவுசிங் செண்டரில் உள்ள கணினியில் இனைய வசதி கிடையாது. தற்செயலாக கிடைக்கும் கணினிகளில் யாருக்கும் மெயில் அனுப்புவதில்லை. உரையாடியிலும் உரையாடுவதில்லை.

(முக்கியமாக ஏதாவது பெண்களின் மெயில் ஐடி தென்பட்டால், என் நாட்ரான் ஆன்டி(anti அல்ல aunty) வைரஸ் கீய்ங்க் கீய்ங்க் என்று அலறி கணினியை ரீ-ஸ்டார்ட் செய்து விடும்)



அநியாயத்தை பாத்தீங்களா மக்களே! நான் கொடுத்திருக்கும் க்ளூக்களை வைத்து உங்களால் அவர் யாரென்று கண்டுபிடிக்க முடிந்திருக்கும். இல்லையென்றால், கடைசியாக ஒரே ஒரு க்ளூ.. அவர் பெயர் செ-யில் ஆரம்பித்து ஷி யில் முடியும். நடுவில் ன் தவிர ஒன்றுமே கிடையாது.

இது தவிர வேறு தடயங்களை நீங்கள் கண்டுபிடித்தால், தயவுசெய்து நான் வாழ் நாள் உறுப்பினராக இருக்கும் முடிஞ்சு போனதை சொறிஞ்சு விடுவோர் சங்கத்திற்கோ, வெந்த புண்ணில் விரல் பாய்ச்சுவோர் சங்கத்திற்கோ, வினையை வெத்தலை பாக்கு வச்சு விருந்துக்கு அழைப்போர் சங்கத்திற்கோ, sombery@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உடனடியாகத் தெரியப்படுத்தவும்.

உபயோகமான துப்பு கொடுப்பவர்களுக்கு, (சங்கங்கள் இப்போது அபராததில் ஓடிக் கொண்டிருப்பதால்) சங்கத்தில் அமௌண்ட் சேர்ந்ததும் பரிசுப் பொருட்கள் உடனடியாக அனுப்பப்படும்.

*.*.*.*.*.*.*.*.*.*.*.*.*

பின்னெச்சரிக்கை (சென்ஷிக்கு மட்டும்) - த பாரு சென்ஷி நைனா.. மருவாதையா நான் கேட்ட Almond சாக்லேட்டை 24 அவர்ஸுக்குள்ள அனுப்பி வைக்கிற. இல்லாங்காட்டி தாம்பரத்துல தாலி அறுத்தது, ட்வின் டவர்ஸை ப்ளைட் வுட்டு இடிச்சது, அல்லாத்தையும் செஞ்சது நீ தாங்கற உண்மையையும் போட்டு உடைக்க வேண்டியது வரும். சாக்கிரத.

57 மச்சீஸ் சொல்றாங்க:

கார்க்கிபவா said...

ஹிஹிஹிஹி

♫சோம்பேறி♫ said...

இப்படி பொத்தாம் பொதுவா சிரிச்சு வச்சா எப்படிங்க கார்க்கி? நம்புறீங்களா இல்லையா! சென்ஷிய நாலு வசவு வஞ்சுட்டாவது போங்க..

Cable சங்கர் said...

haa..haa..haa..

சென்ஷி said...

சந்தோசம்... மகிழ்ச்சி!

கண்ணா.. said...

//ஒரு இடத்தில் திருட்டு நடந்து விட்டால், முதலில் 'எவன்டா எடுத்தது?' என்று சவுண்டு விடுவது அந்த திருடனாகத் தான் இருக்கும். யெஸ்.பாலபாரதியின் பதிவிலும் சரி, குசும்பனின் பதிவிலும் சரி உணர்ச்சிவசப்பட்டு ஓவராக சவுண்டு விட்டது, நாகேஷ் படத்தை ப்ரொபைலில் வைத்துக் கொண்டு கமல்ஹாசன் வேலை செய்து வரும் 'அந்த' பதிவர் தான்//

சென்ஷி மேல் ஏன் இந்த கொலைவெறி......

♫சோம்பேறி♫ said...

என்ன கேபிள் ஷங்கர் இது. சென்ஷிய நீங்களாவது திட்டுங்களேன்..

(இந்த மூத்த பதிவருங்க எல்லாருமே இப்படித் தான் முதலாளி. குத்துங்க முதலாளி குத்துங்க)

சென்ஷி said...

/பின்னெச்சரிக்கை (சென்ஷிக்கு மட்டும்) - த பாரு சென்ஷி நைனா.. மருவாதையா நான் கேட்ட Almond சாக்லேட்டை 24 அவர்ஸுக்குள்ள அனுப்பி வைக்கிற. இல்லாங்காட்டி தாம்பரத்துல தாலி அறுத்தது, ட்வின் டவர்ஸை ப்ளைட் வுட்டு இடிச்சது, அல்லாத்தையும் செஞ்சது நீ தாங்கற உண்மையையும் போட்டு உடைக்க வேண்டியது வரும். சாக்கிரத.//

இதை நான் எதிர்பார்க்கலை :))

♫சோம்பேறி♫ said...

/*சென்ஷி said...
சந்தோசம்... மகிழ்ச்சி!*/

கடைசியா கேக்குறேன் சென்ஷி. சாக்லேட் அனுப்ப முடியுமா முடியாதா?

♫சோம்பேறி♫ said...

/*Kanna said...

சென்ஷி மேல் ஏன் இந்த கொலைவெறி.....*/

பின்னெச்சரிக்கையை once more படிச்சுப் பாருங்க கண்ணா.. கொலை வெறிக்கான காரணம் புரியும்.

♫சோம்பேறி♫ said...

/*சென்ஷி said...

இதை நான் எதிர்பார்க்கலை :))*/


அதான் சோம்பேறி!! :-)

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

எனக்கு முதல்லயே ஒரு டவுட்டு உண்டு சென்ஷி மேல. இப்பதான் கன்ஃபர்ம் ஆச்சு :)

மனுநீதி said...

இந்த தனிமனித தாக்குதலை நான் வன்மையாக கண்டிக்கிறேன். :P

யாராவது சோம்பேறிய தாக்கி ஒரு பதிவு போடுங்கப்பா :)

ALIF AHAMED said...

தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு.
//

!

ALIF AHAMED said...

எனக்கு இன்னும் திருமணமாகவில்லை.
//

ஆவாது:)


//
சத்தியமாக குழந்தைகள் எதுவும் இல்லை.
//

டவுட்டாகிது :)

அறிவிலி said...

//தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு.//

தீவிர சென்ஷி ஆதரவு பின்னூட்ட மென்முறையாளன்.

♫சோம்பேறி♫ said...

/*ஜ்யோவ்ராம் சுந்தர் said...
எனக்கு முதல்லயே ஒரு டவுட்டு உண்டு சென்ஷி மேல. இப்பதான் கன்ஃபர்ம் ஆச்சு :)*/

நீங்களாவது நம்புறீங்களே! டேங்க்ஸ் சுந்தர். (ஹை.. ஆப்பரேஷன் சென்ஷி வொர்க் அவுட் ஆகிடுச்சு)

/*மனுநீதி said...
இந்த தனிமனித தாக்குதலை நான் வன்மையாக கண்டிக்கிறேன். :P*/

நோ மனு நீதி. நோ.. சென்ஷி தனியாள் இல்ல. தமிழ் நாடு..

/*மின்னுது மின்னல் said...
தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு.
//
! */

ஹி. ஹி. ஹி.

♫சோம்பேறி♫ said...

/*மின்னுது மின்னல் said...
எனக்கு இன்னும் திருமணமாகவில்லை.
//
ஆவாது:)
டவுட்டாகிது :)*/

சே.. பாவம்.. அப்படியெல்லாம் சாபம் குடுக்காதீங்க.. (எனக்கும் அதே டவுட் தான்.)

/*தீப்பெட்டி said...
:)))*/

:))))))))))

/*அறிவிலி said...
தீவிர சென்ஷி ஆதரவு பின்னூட்ட மென்முறையாளன்.*/

அடுத்த பதிவு நீங்க செஞ்ச ஹவாலா மோசடி பத்தி தான் அறிவிலி.

அமிர்தவர்ஷினி அம்மா said...

what is this senshi

=உங்களுக்கு இப்படியெல்லாம் ரசிகர் மன்றம் இருக்கா?

♫சோம்பேறி♫ said...

/*அமிர்தவர்ஷினி அம்மா said...
what is this senshi
=உங்களுக்கு இப்படியெல்லாம் ரசிகர் மன்றம் இருக்கா?*/

அதானே! பாருங்களேன்.. எனக்கும் அதே டவுட் தான்..

Unknown said...

almond என்ன பிஸ்தா இன்னும் என்ன ஃப்ளேவர்ல்லாம் இருக்கோ அத்தனை சாக்லேட்டிலேயும் ஒவ்வொண்ணு அனுப்புறேன், இன்னும் இதே மாதிரி 4 பதிவு ப்ளீஸ் ;-)

இராகவன் நைஜிரியா said...

சோம்பேறின்னு பேர் வச்சுகிட்டு இப்படி எல்லாம் பத்த வைக்கிறயே பரட்டை... சுறு சுறுப்புன்னு பேர் வச்சுகிட்டா எப்படி எல்லாம் செய்வ.

அல்மாண்ட் சாக்லேட்டுக்காகவா இந்த பில்டப்.... இல்ல இதுவும் ஒரு கோட் வேர்ட்டா?

♫சோம்பேறி♫ said...

ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ.. நிச்சயமா ராஜா | KVR!!!!!!!

♫சோம்பேறி♫ said...

என்னங்க ராகவன்.. பச்சப் புள்ளையை பாத்து கேக்கிற கேள்வியா இது? நெசமாவே சாக்லேட்டு தான்..

Karthikeyan G said...

நம்புகிறேன்.

♫சோம்பேறி♫ said...

ரொம்ப நன்றி கார்த்திகேயன்ஜி. success..

அறிவிலி said...

ஹவாலா எந்த கடைலங்க கெடைக்கும்?

மொதல்ல நான் மோசடிய பண்ணிர்றேன், அப்பறமா நீங்க உண்மை கதையே எழுதலாம்.

வேத்தியன் said...

:-)))))

♫சோம்பேறி♫ said...

/*அறிவிலி said...
ஹவாலா எந்த கடைலங்க கெடைக்கும்?*/


திருநெல்வேலி இருட்டுக் கடைல நிறைய கிடைக்கும். (தோடா.. இப்படி கேட்டா நீங்க அப்பாவினு நம்பிடுவோமா?)

♫சோம்பேறி♫ said...

/*வேத்தியன் said...
:-)))))*/

:-)))))))))))))))

லக்கிலுக் said...

சென்ஸி சொல்லி போட்ட பதிவு மாதிரி இருக்கே? :)

மனுநீதி said...

அடுத்து சோம்பேறி Vs சோம்பேறியின் மனசாட்சி (இருக்குதுல்ல :P) உரையாடல் பதிவ எதிர்பாக்கிறேன் :)

அதுல பல உண்மைகள் வெளிவரும்னு நம்புறேன் :D

♫சோம்பேறி♫ said...

ஏன் லக்கிலுக் உங்களுக்கு இப்படியெல்லாம் தோனுது? அவர் பின்நவீனத்துவ பாஷைல சொல்லி, அது எனக்கு புரிஞ்சு, பதிவிடுறது எல்லாம் நடக்குற காரியமா?

அவர்கிட்ட கலாய்ச்சுக்கவானு கேட்டேன். சரினு சொன்னார். அவ்ளோ தான்.

இது சென்ஸி சொல்லி போட்ட பின்னூட்டம் மாதிரி இருக்கே? :-)

♫சோம்பேறி♫ said...

கம்பெனி ரகசியம் வெளியே வராது மனுநீதி.. நீங்க ஏதோ சொன்னீங்களே!! ஆங்.. மனசாட்சினா என்னங்க?

Maduraikkarathambi said...

அண்ணே, நான் பதிவுக்கு புதுசுண்ணே. சென்ஷி அண்ணே என்ன பண்ணார்னு இந்த வாரு வாருறீங்க... எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்....இது நீங்களா போட்டீங்களா? இல்ல சென்ஷி அண்ணே சொல்லி போட்டீங்களா?

மதுரைக்காரத்தம்பி
http://maduraikarathambi.blogspot.com/

abarnashankar,usa said...

somberi annae!
konjam surusuruppa micha ragasiaththayum sollidunga!
nan vena bar rae(choclate bar not ----)
vaangiththaraen!
anbudan
abarna
usa

♫சோம்பேறி♫ said...

மதுரைக்கார தம்பி! லக்கி லுக்குக்கு சொன்னதையே உங்களுக்கும் ரிப்பீட்டிக் கொள்கிறேன்.. சென்ஷி என் நண்பர்.

♫சோம்பேறி♫ said...

/*abarnashankar,usa said...

somberi annae!
konjam surusuruppa micha ragasiaththayum sollidunga!
nan vena bar rae(choclate bar not ----)
vaangiththaraen!*/


அதுக்கு இன்னும் நிறையே செலவாகுமே அபர்னா!!

King Viswa said...

என்ன ஒரு கொலைவெறி? என்ன வில்லத்தனம்?

Rajes kannan said...

ஏப்பு, சென்ஷி அந்த பயபுள்ள கேக்குற சாகலேட்ட குடுத்து தொலப்பா.

Anonymous said...

yaru?

Anonymous said...

யாரு சென்ஷியா..

Anonymous said...

பாவம் அது ஒரு பச்ச மண்ணய்யா...

குப்பன்.யாஹூ said...

நான் ஒன்றும் காந்தி அல்ல. நான் உங்களை தவறாக சொல்ல வில்லை.

ஆனால் இந்த மாதிரி சக பதிவர்களை கேலி செய்தல், சண்டை இடல் போன்ற பதிவுகளை தவிர்க்கலாமே.

இன்றைய மாணவர் தலைமுறை அல்லது நமது பிள்ளைகளை கணினி பக்கம் (பதிவு பக்கம்) விடுவதற்கு இந்த மாதிரி பதிவுகள் தயக்கம் ஏற்படுத்துகின்றன.

இந்த மாதிரி பதிவுகள் தொடரும் வரை, புதிய பருவ பதிவர்கள் வருகை குறையும் அல்லது இருக்காது என்பது அடியேனின் கருத்து.

மீண்டும் மீண்டும் துபாய், சிங்கப்பூர், அமெரிக்க, சென்னை அலுவலகங்களில் உள்ள இருபடி ஐந்து வயது தாண்டிய குறிப்பிட்ட பதிவர்கள் மட்டுமே உலா வருவர்.

குப்பன்_யாஹூ

Anonymous said...

அதை போய் திருடன்கிற..

கேரளப்பெண்கள்... said...

யாரு எங்க சென்ஷியை பழி சொல்லுறது.. பதிவுலகில் உருப்படியா எதாவது எழுதணுன்னா ஒழுங்கா எழுதப்பழகுங்க..

Anonymous said...

இப்படி ஒப்புக்கொண்டா சரியா மன்னிப்பு கேட்க வேண்டாமா...

Anonymous said...

சென்ஷி எங்கிருந்தாலும் பஞ்சாயத்து மேடைக்கு வரவும்..

Anonymous said...

இதுல இருக்கிற பின்னூட்டம் எல்லாம் சென்ஷிதான் போடச்சொன்னாரு அதனால நான் பொறுப்பல்ல...

தமிழன்-கறுப்பி... said...

சென்ஷி என்னய்யா இது கூத்து...

♫சோம்பேறி♫ said...

/*King Viswa said...
என்ன ஒரு கொலைவெறி? என்ன வில்லத்தனம்? */

ஹா ஹா ஹா.. (பி.எஸ்.வீரப்பா ஸ்டைலில் சிரிக்கவும்)

/*சிங்கை கண்ணன். said...
ஏப்பு, சென்ஷி அந்த பயபுள்ள கேக்குற சாகலேட்ட குடுத்து தொலப்பா */

அப்பூடி சொல்லுங்க கண்ணன்..

♫சோம்பேறி♫ said...

/*Anonymous said...
இதுல இருக்கிற பின்னூட்டம் எல்லாம் சென்ஷிதான் போடச்சொன்னாரு அதனால நான் பொறுப்பல்ல... */

யாரு சென்ஷியா? பாவம் அது ஒரு பச்ச மண்ணய்யா..

/*கேரளப்பெண்கள்... said...
யாரு எங்க சென்ஷியை பழி சொல்லுறது.. பதிவுலகில் உருப்படியா எதாவது எழுதணுன்னா ஒழுங்கா எழுதப்பழகுங்க.. */

சரிங்க கேரளப்பெண்களே!

/*குப்பன்_யாஹூ said...
இந்த மாதிரி சக பதிவர்களை கேலி செய்தல், சண்டை இடல் போன்ற பதிவுகளை தவிர்க்கலாமே.*/

இதில் யாருடனும் நான் சண்டை இட வில்லையே குப்பன்_யாஹூ.. இந்த இடுகை மூலம், நான் கேலி செய்ய முனைந்திருப்பது யாரை என்று கொஞ்சம் உங்கள் நேரத்தை ஒதுக்கி மறுபடியும் வாசித்துப் பார்த்தால் புரியும்.

உங்கள் அக்கரைக்கு நன்றி..

♫சோம்பேறி♫ said...

/*தமிழன்-கறுப்பி... said...
சென்ஷி என்னய்யா இது கூத்து...*/


:-))))))))))))))

கிரி said...

//குப்பன்_யாஹூ

மீண்டும் மீண்டும் துபாய், சிங்கப்பூர், அமெரிக்க, சென்னை அலுவலகங்களில் உள்ள இருபடி ஐந்து வயது தாண்டிய குறிப்பிட்ட பதிவர்கள் மட்டுமே உலா வருவர்.//

:-))))))

Ashok D said...

சோம்பேறி நல்லாதானே இருந்திங்க.. இப்போ என்னாச்சு?

♫சோம்பேறி♫ said...

/*கிரி said...

//குப்பன்_யாஹூ
மீண்டும் மீண்டும் துபாய், சிங்கப்பூர், அமெரிக்க, சென்னை அலுவலகங்களில் உள்ள இருபடி ஐந்து வயது தாண்டிய குறிப்பிட்ட பதிவர்கள் மட்டுமே உலா வருவர்.//

:-)))))) */

!


/*D.R.Ashok said...
சோம்பேறி நல்லாதானே இருந்திங்க.. இப்போ என்னாச்சு?*/

சும்மா தான்.. :-)

கோபிநாத் said...

வாழ்க மாப்பி ;))

வாழ்க அவன் புகழ் ;))

விக்னேஷ்வரி said...

:)

Post a Comment

தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு.

Blog Widget by LinkWithin
 
சோம்பேறி. Design by Pocket