செல்லாத்தா.. டௌண்டு டன் டன்.. செல்ல மாரியாத்தா

Friday, 29 May 2009

Views

நீங்கள் 'ஏன் இன்றைய பணிகளை நாளை செய்ய வேண்டும்? நாளை மறுநாள் இருக்கும் போது' என்று நினைப்பவரா?


காலடியில் விழுந்து கிடக்கும் தொலைக்காட்சி ரிமோட்டை குனிந்து எடுக்க சோம்பேறித்தனப்பட்டு, பக்கத்து ரூமிலிருப்பவரை தொலை பேசி அழைப்பவரா?


வாந்தியா, வயிற்றுப்போக்கா? (சே.. ஸாரி.. ஒரு ஃப்ளோல வந்துடுச்சு.. கம்மிங் டு த பாய்ன்ட்..)

அழைப்பு மணி அடித்தால் தூக்கத்தை துறந்து விட்டு, எழுந்து போய் கதவைத் திறக்க வேண்டியிருக்கிறதே என்று ரூம் போட்டு அழுபவரா? இது உங்களுக்கான பதிவு தான்.


உங்களுக்கு மேற்கூறிய தகுதிகள் இல்லையென்றாலும் பரவாயில்லை. 'ஏன் படிச்ச' என்று யாரும் பொடனியில் வந்து அடிக்கப் போவதில்லை. இது உங்களுக்கான பதிவும் தான்.

அழைப்பு மணியை அழுத்தியவர்களுக்கேற்ற பாடலை ஒலிபரப்பும் தொழில் நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டால், யாராருக்கு என்னென்ன பாடலை ஒலிபரப்பலாம்?

1) சர்க்கரை, காபிப் பொடி, நியூஸ் பேப்பர் கடன் வாங்க வரும்(பெரும்பாலும் திரும்ப வராது) பக்கத்து வீட்டு மாமிகள் அழைப்பு மணியை அழுத்தியதும் 'பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன் ஐயனே என் ஐயனே..' பாடல் ஒலிக்கும் படி செய்யலாம்.

இது ரோஷக்காரர்களுக்கு மட்டுமே பொருந்தும். சிலர் 'அட! இந்த காலிங் பெல் நல்லாருக்கே! எங்க வீட்டுல ரெண்டு நாள் மாட்டிட்டு திருப்பிக் குடுத்திடறேனே!' என்று சொல்லி அதையும் கடனாக வாங்கிக் கொண்டு போகும் அபாயமும் நேரலாம்.

2) மளிகை, பால், கேபிள் வாடகை வசூலிக்க வருபவர்களுக்கு 'ஆயிரம். ரெண்டாயிரம். பிம்பிலிக்கி பியாபி.. மாமா பிஸ்கோத்து' என்று உங்கள் குரலிலேயே ஏதாவது பதிவு செய்து ஒலிபரப்பலாம்.

3) விற்பனைப் பிரதிநிதிகள் வந்தால் 'ரேய்.. ஒதலவா.. நேனே சந்திரமுகி.. லக லக லக லக..' ஆணாக இருந்தால் இதை மட்டுமே திரும்பத் திரும்ப ஒலிபரப்பலாம்.

விற்பனைப் பிரதிநிதி பெண்ணாக இருந்தால் 'ரா ரா.. சரசக்கு ரா ரா' என்பதை மட்டுமே திரும்பத் திரும்ப ஒலிபரப்பலாம்.

4) வேண்டா விருந்தாளி வந்தால் 'போயா உன் மூஞ்சியில கைய வைக்க! உன் நெஞ்சிலுள்ள மஞ்சா சோத்தில் நெய்யை வைக்க'(சத்தியமாக இப்படி ஒரு பாடல் இருக்கிறது)

அதே விருந்தாளி அழகான தனது மகளுடன் வந்திருந்தால் 'மணமகளே.. மருமகளே வா. வா.'

5) மாரியம்மன் கோவிலில் கூழ் ஊத்துவதற்க்கு நிதி கேட்டு வருபவர்களுக்கு 'இறைவனிடம் கையேந்துங்கள்.. அவன் இல்லையென்று சொல்லுவதில்லை' பாடலை தேர்வு செய்யலாம். இஸ்லாமியராக மதம் மாறி விட்டோம் போல என்று நாலு வசவு வைது விட்டு போய் விடுவார்கள்.

ஆலய நிதி சம்மந்தமாக வரும் மற்ற மதத்தினருக்கு 'செல்லாத்தா.. டௌண்டு டன் டன்.. செல்ல மாரியாத்தா டௌண்டு டன் டன்..' பாடலை ஒலிபரப்பலாம். பாடலுக்கு முன்பு குலவை சத்தமும் இருந்தால் கூடுதல் நலம்.

6) நம் தூக்கத்தைக் கெடுப்பதற்காக, அழைப்பு மணியை அழுத்தி விட்டு ஓடி விடும் பக்கத்து வீட்டு வாண்டுக்கு 'குட்டிப் பிசாசே.. குட்டிப் பிசாசே.. உன்னால தூங்கலயே!'

அந்த வாண்டு மீது ஓங்கி அப்பும் அளவு கோபம் வந்தால் டி.ஆரின் 'ங்கொப்பன் மவனே! ங்கொப்பன் மவனே! டண்டனக்கா.. ஏ.. டண்டனக்கா..' என்ற பாடலைத் தேர்வு செய்யலாம்.

எப்பூடீ?

முக்கிய அறிவிப்பு : அன்பு மக்களே! சங்கமம் பேருந்து போட்டிக்காக பொள்ளாச்சி டூ மதுரை என்ற படைப்பை மிகச் சில மாற்றங்களுடன் அனுப்பியிருக்கிறேன். இந்த http://tamil.blogkut.com/contest/poll/poll0409.php லிங்கில் போய் அதைப் படித்துப் பார்த்து உங்களுக்கு பிடித்திருந்தால் வாக்களிக்கலாம்.

வோட் போடாதவங்க வோட் போடுங்க.. ஏற்கனவே வோட் பண்ணிட்டேன்னு சொல்றவங்க, தெரியாத்தனமா 5க்கு பதிலா 1ல வோட் பண்ணிட்டேன்னு சொல்றவங்க, கள்ள வோட் போடுங்க.. (சும்மா.. லுலுலாகாட்டிக்கும்) நன்றி..

முக்கிய பின்குறிப்பு : போட்டியில் ஜெயிக்கும் மூன்று படைப்புகளுக்கு ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பரிசுகள் வழங்கப்படும்

19 மச்சீஸ் சொல்றாங்க:

வெட்டிப்பயல் said...

//முக்கிய பின்குறிப்பு : போட்டியில் ஜெயிக்கும் மூன்று படைப்புகளுக்கு ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பரிசுகள் வழங்கப்படும்//

நிஜமாவா?

நான் ஒரு படைப்புக்குனு தானே நினைச்சேன்...

வெட்டிப்பயல் said...

பதிவு கலக்கல் :)

Tech Shankar said...

அய்யோ. இவங்க அலும்பு தாங்கலயே..

சென்ஷி said...

'ங்கொப்பன் மவனே! ங்கொப்பன் மவனே! டண்டனக்கா.. ஏ.. டண்டனக்கா..'

மனுநீதி said...

/ தெரியாத்தனமா 5க்கு பதிலா 1ல வோட் பண்ணிட்டேன்னு சொல்றவங்க, கள்ள வோட் போடுங்க.//

ஏதோ சொந்த அனுபவம் மாதிரி தெரியுது :)

அப்புறமா மாமா(சொந்த மாமா:P) பொண்ணோட வந்து கதவ தட்டுனா "மாமா உன் பொண்ண கொடு " பாட்ட போடலாம் அப்புறம் பொண்ணு தனியா வந்தா "எம்மாடி ஆத்தாடி உன்ன எனக்கு தரியாடி" போடலாம் . மேற்கொண்டு எதாவது தோணினா மறுபடியும் வரேன் :)

♫சோம்பேறி♫ said...

அட.. ஆமாங்க.. நீங்களும் தொழில் முறை போட்டியை எல்லாம் மனசுல வச்சுக்காம எனக்கு ஒரு ஓட்டை போட்டுடுங்க.. நன்றிங்க வெட்டி:)
*.*.*.*.*

ஹி ஹி.. கொஞ்சம் கஷ்டப்பட்டு தாங்கிக்கோங்க.. நன்றிங்க தமிழ் நெஞ்சம்..
*.*.*.*.*

நன்றி சென்ஷி.. (இன்னாப்பா சொல்ல வர?)

மனுநீதி said...

//தமிழில் பெயர் வைத்தால் நெட் பில்லில் சலுகை உண்டெனில் தயவுசெய்து தெரியப் படுத்தவும் //

ஆமா அப்படியே எனக்கும் தெரியபடுதுங்க. நல்ல வேலை எங்கப்பாம்மா எனக்கு தமிழ்ல பேர் வச்சாங்க. அப்படியே income tax exemption எதாவது தராங்கலானும் கேட்டு சொல்லுங்க :)

♫சோம்பேறி♫ said...

/* ஏதோ சொந்த அனுபவம் மாதிரி தெரியுது :) */

ஆமாங்க.. நேத்து சேட்ல வந்து தெரியாம 1 க்ளிக் பண்ணிட்டேன். என்ன பண்றதுனு கேட்டாங்க.. அதான் அவங்களுக்கு வேற சிஸ்டம்ல இருந்து இன்னொரு வோட் பண்ணுங்கனு சொன்னேன்..


/*அப்புறமா மாமா(சொந்த மாமா:P) பொண்ணோட வந்து கதவ தட்டுனா "மாமா உன் பொண்ண கொடு " பாட்ட போடலாம் அப்புறம் பொண்ணு தனியா வந்தா "எம்மாடி ஆத்தாடி உன்ன எனக்கு தரியாடி" போடலாம் . மேற்கொண்டு எதாவது தோணினா மறுபடியும் வரேன் :)*/

மனு நீதி உங்களுக்கு அனுபவம் போல. எத்தனை மாமா பொன்னுங்க இருக்காங்க?
/*அப்படியே income tax exemption எதாவது தராங்கலானும் கேட்டு சொல்லுங்க :)*/

இது கொஞ்சம் ஓவர்...

மனுநீதி said...

//உங்களுக்கு அனுபவம் போல. எத்தனை மாமா பொன்னுங்க இருக்காங்க?//

ஒண்ணு கூட இல்லீங்க :(

இந்த சிட்டுவேஷனுக்கு "என் சோக கதைய கேளு " பாட்டு கரெக்டா இருக்கும்னு நெனைக்கிறேன்

S.A. நவாஸுதீன் said...

உங்களின் ஒவ்வொரு பதிவும் மனதிற்கு நல்ல மருந்து. ரொம்ப நகைச்சுவையா இருக்கு. உங்களை வலைச்சரம் மூலம் எனக்கு அறிமுகம் செய்து வாய்த்த அமித்து அம்மாவுக்கு ரொம்ப நன்றி.

அப்புறம் அஞ்சு மார்க் போட்டுட்டேனுங்க

Kabilan said...

சென்ஷி,

நல்ல நகைச்சுவையான தொகுப்புங்க!
வாழ்த்துக்கள்!

♫சோம்பேறி♫ said...

/*மனுநீதி said...
இந்த சிட்டுவேஷனுக்கு "என் சோக கதைய கேளு " பாட்டு கரெக்டா இருக்கும்னு நெனைக்கிறேன்

ஐய்ய்ய்யோ,, பாஆஆவம்.. :-)

/*S.A. நவாஸுதீன் said...
உங்களின் ஒவ்வொரு பதிவும் மனதிற்கு நல்ல மருந்து. ரொம்ப நகைச்சுவையா இருக்கு. உங்களை வலைச்சரம் மூலம் எனக்கு அறிமுகம் செய்து வாய்த்த அமித்து அம்மாவுக்கு ரொம்ப நன்றி. */

நன்றி வலைச்சரம்.. ரொம்ப நன்றி அமித்து அம்மா.. ரொம்ப ரொம்ப நன்றி நவாஸுதீன்

/* அப்புறம் அஞ்சு மார்க் போட்டுட்டேனுங்க*/

இதுக்கு தனி நன்றிங்கோ..

/*Kabilan said...
சென்ஷி,
நல்ல நகைச்சுவையான தொகுப்புங்க!
வாழ்த்துக்கள்! */

அவ்வ்வ்வ்வ்.. நன்றி..

வெற்றி-[க்]-கதிரவன் said...

-:)

அறிவிலி said...

நான் உங்க வீட்டுக்கு வரும்போது கதவ போட்டு மட.. மடன்னு தட்டுவேன். மணியே அடிக்க மாட்டேன்.

♫சோம்பேறி♫ said...

என்ன அறிவிலி இப்படி நினைச்சுட்டீங்க.. நீங்க வந்தா எவ்ளோ சூப்பரான பாட்டு போடலாம்னு நினைச்சேன் தெரியுமா.. (ஆஹா.. வீக் நெஸ் லீக் ஆயிடுச்சே!)


நன்றி பித்தன்.. :-))))

சென்ஷி said...

//Kabilan said...

சென்ஷி,

நல்ல நகைச்சுவையான தொகுப்புங்க!
வாழ்த்துக்கள்!
//

கபிலன் என்னால் இந்தளவு மொக்கையெல்லாம் போட முடியாது. இந்த பதிவு சோம்பேறியோடது.

ஆனாலும் ஹி..ஹி.. நிம்பிள்ட்டேந்து பாராட்டு கெட்சதூல பஹூத் ஹூஷ் ஹோ கய்யா..

ஷுக் ரஹோ!

Anonymous said...

ஏன் Template மாறி போச்சு ?
விஜய்

விக்னேஷ்வரி said...

நல்ல ரிங்டோன்ஸ். :)

♫சோம்பேறி♫ said...

/*Anonymous said...
ஏன் Template மாறி போச்சு ?
விஜய்*/

சும்மா தான். அது லோடாக லேட் ஆகுது.

/*விக்னேஷ்வரி said...
நல்ல ரிங்டோன்ஸ். :) */

நன்றிங்க விக்னேஷ்வரி..

Post a Comment

தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு.

Blog Widget by LinkWithin
 
சோம்பேறி. Design by Pocket