லூஸாப்பா நீங்கல்லாம்?

Tuesday, 26 May 2009

Views

நேத்து எங்க சித்தப்பாவோட ட்ரீட்மெண்ட்டுக்காக ஒரு மெண்டல் ஹாஸ்பிட்டல் போயிருந்தோம். என் சித்தப்பா பார்க்க அசப்பில் பைத்தியக்காரன் போல் இருப்பார். நோ.. நோ.. ஆக்சுவலி ஐ மீன் தோழமைக்குரிய பதிவர் திரு பைத்தியக்காரன் அவர்கள் போல் இருப்பார் என்று சொல்ல வந்தேன்.

எங்க சித்தப்பா சாதாரணமா நார்மலா தான் இருப்பார். ஆனா குழந்தைகளைப் பாத்தா வெறி புடிச்சுடும். (சில வகை பெண்களைப் பாத்தா எனக்கும் பைத்தியம் பிடிக்கும் :-) அது வேற விஷயம்). என் சித்தப்பா ஏன் அப்படி ஆனாங்க அப்படிங்கறது ஐநூறு பக்க நாவல் எழுதுற அளவு பெரிய விஷயம். ஷார்ட்டா சொல்லனும்னா விவாகரத்து. இப்போ வியாதி ஆரம்ப கட்டத்துல இருக்குறதுனால ஈஸியா குணப்படுத்திடலாம்னு டாக்டர் சொல்லிருக்காங்க.

பெரும்பாலும் இந்த ஹாஸ்பிட்டலுக்கு வர்றவங்க, ஆரம்ப கட்ட நோயாளிகளா தான் இருப்பாங்க. ஆனா நேத்து ஹாஸ்பிடல்ல நான் பாத்த பையன் (பத்து வயசு இருக்கும்) ரொம்ப அப்நார்மலா பிஹேவ் பண்ணிட்டு இருந்தான். சேர் மேல ஏறி நிக்குறது. திடீர்னு வித்தியாசமான சத்தம் குடுக்குறது, பக்கத்துல இருக்குறவங்க பையை நோண்டுறது, முறைச்சுப் பாக்குற அவங்க முகத்துக்கு ரொம்ப பக்கத்துல இவன் முகத்தை கொண்டு போய் அவங்களை இமிடேட் பண்றதுனு ராவடி பண்ணிட்டு இருந்தான்.

அவனைக் கூட்டிட்டு வந்த பெரியவர்கிட்ட கம்பவுண்டர் போய் 'கொஞ்சம் உங்க பையனை பாத்துக்கோங்க ஸார்'னு புகார் பண்ணினாரு. கம்பவுண்டர் பேசி முடிக்கிற வரை இதுவரை நடந்த எல்லாத்தையும் அமைதியா பாத்துகிட்டு இருந்தவர், திடீர்னு கம்பவுண்டரைத் தள்ளி விட்டுட்டு ஓட்டமா ஓடிப்போய் அவன் தலையில நச் நச்னு குட்ட ஆரம்பிச்சுட்டாரு. அப்புறம் ரெண்டு பேரும் ஒருத்தர் முகத்தை ஒருத்தர் பாத்ததும், சத்தமா கெக்கே பிக்கேனு சிரிச்சுட்டு, கட்டிப் பிடிச்சு கொஞ்சிக்க ஆரம்பிச்சுட்டாங்க. ரெண்டு பேர் முகமுமே கொஞ்சம் டிஸ்லெக்சிக்கா தான் இருந்தது.

(படத்தைப் பெரிதாக்கிப் பார்க்க அது மேல க்ளிக்காதீங்க. அதோட சைஸே அவ்ளோ தான்.)

நான் என் சித்தப்பாகிட்ட 'இந்த ரெண்டு பேருல யார் லூசுனு கண்டுபுடி பாக்கலாம்'னு சொன்னேன். பக்கத்துல இருந்து பாத்துகிட்டிருந்த ஒரு அம்மா 'எக்ஸ்க்யூஸ் மீ'னு கேட்டாங்க. ஒரு ஆர்வத்துல நானும் அதையே அவங்ககிட்டயும் ரிப்பீட்டிட்டு வாயைக் கூட மூடல. அவங்க 'வாட் த ஹெல்' ஆச்சு போச்சுனு ஹாஸ்பிட்டலே அதிர்ற அளவு கத்த ஆரம்பிச்சுட்டாங்க.

சத்தத்தைக் கேட்டுட்டு ஓடி வந்த அந்த so called லூஸுங்க ரெண்டு பேரும் சொன்னதுக்கப்புறம் தான் தெரிஞ்சது. அவங்க ரெண்டு பேரும் இந்த அம்மாவோட மகனும் அப்பாவுமாம். இந்த அம்மாவுக்கு ஹிஸ்டீரியாவாம். அதாவது சின்ன விஷயத்துக்குக் கூட பயங்கரமா கோபப்பட்டு கத்துவாங்களாம். அதுக்கு ட்ரீட்மெண்ட் எடுத்துக்க தான் அப்பாவும் புள்ளையும் இவங்களைக் கூட்டிட்டு வந்திருக்காங்களாம். அட கொய்யாக்களா!!

எல்லாரும் எவ்வளவோ சமாதானம் சொல்லியும் அந்தம்மா அடங்குற மாதிரி தெரியல. ஸாரி கேட்டப்புறமும் விடாம, காது பிச்சுக்கற அளவு அம்பது டெஸிபெல்ல அலற ஆரம்பிச்சுட்டாங்க. எனக்கு வந்த ஆத்திரத்துல ரத்தம் குப்புனு பாதத்துல இருந்து உச்சந்தலைக்கு ஏறி, அந்தம்மா கொறவளைய கடிச்சுடலாம்னு அவங்க மேல பாயப் போகும் போது, ஒரு நாலஞ்சு பேர் ஓடி வந்து என்னை ஒரே அமுக்கா அமுக்கிட்டாங்க. நர்ஸ் அக்கா அவங்க கைக்கு கிடைச்ச இடத்துல சதக்னு ஊசியைக் குத்திட்டாங்க.

பதறி வாயடைச்சுப் போய் நின்னுகிட்டிருந்த அந்தம்மாகிட்ட எங்க சித்தப்பா 'என் மகன் கொஞ்சம் லூசு. சாதாரணமா நார்மலா தான் இருப்பான். ஆனா சத்தமா கத்துற பெண்களைப் பாத்தா வெறி புடிச்சுடும். (குழந்தைகளைப் பாத்தா எனக்கும் பைத்தியம் பிடிக்கும்:-( அது வேற விஷயம்)

அவன் ஏன் அப்படி ஆனான் அப்படிங்கறது ஐநூறு பக்க நாவல் எழுதுற அளவு பெரிய விஷயம். ஷார்ட்டா சொல்லனும்னா காதல் தோல்வி. வியாதி ஆரம்ப கட்டத்துல இருக்குறதுனால ஈஸியா குணப்படுத்திடலாம்னு டாக்டர் சொல்லிருக்காங்க' அப்படினு சொன்னது என் காதுல விழல அல்லது காதுல விழுந்ததுனு நான் நம்ப விரும்பல.

31 மச்சீஸ் சொல்றாங்க:

சென்ஷி said...

:))

நல்லாயிருக்குது. அப்புறம் வந்து விலாவரியா பின்னூட்டுறேன். இல்லைன்னா மெயில் அனுப்பறேன்

லோகு said...

நல்லாயிருக்கு

லோகு said...

template super...

Anonymous said...

நீங்க 'சிறுகதை, நகைச்சுவை'ன்னு லேபில் போட்டிருந்தாலும் மனசுக்கு ஏனோ உறுத்தலா இருக்கு.

சித்ரா

சுந்தர் said...

ஐந்நூறு பக்கம் பின்னூட்டம் போடலாம் போல இருக்கு

nila said...

யாருக்கு பைத்தியம்னு எனக்கு கடைசி வரை புரியலீங்க... கொஞ்சம் சொல்லுங்களேன்

♫சோம்பேறி♫ said...

/*சென்ஷி said...
:))
நல்லாயிருக்குது. அப்புறம் வந்து விலாவரியா பின்னூட்டுறேன். இல்லைன்னா மெயில் அனுப்பறேன்*/

ஓகே சென்ஷி.. சங்கமம் பத்தியும் கொஞ்சம் கேட்டு சொல்லுங்க.. என்னோட ஒரு ஓட்டு கூட விழலைனா நல்லா இருக்காது.

/*லோகு said...
நல்லாயிருக்கு
template super... */

ரொம்ப நன்றிங்க லோகு..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

பதிவைப்படிச்சு லூசாட்டம் நானும் சிரிச்சிட்டேன் போதுமா ..இப்ப நிம்மதியா..:)

♫சோம்பேறி♫ said...

/*Anonymous said...
நீங்க 'சிறுகதை, நகைச்சுவை'ன்னு லேபில் போட்டிருந்தாலும் மனசுக்கு ஏனோ உறுத்தலா இருக்கு.
சித்ரா */

ஏன் சித்ரா? நீங்க சீரியஸா வருத்தப்படுறீங்களா.. இல்ல.. நான் அந்த லூசுனு சொல்லி காமெடி பண்றீங்களானு புரியல. எதாயிருந்தாலும் நன்றி..


/*தேனீ - சுந்தர் said...
ஐந்நூறு பக்கம் பின்னூட்டம் போடலாம் போல இருக்கு*/

ஹைய்யோ.. ரொம்ப நன்றி சுந்தர்..


/*nila said...
யாருக்கு பைத்தியம்னு எனக்கு கடைசி வரை புரியலீங்க... கொஞ்சம் சொல்லுங்களேன்*/

இந்த உலகத்தில இருக்குற எல்லாருமே பைத்தியம் தாங்க நிலா. இந்தக் கதையில கொஞ்சம் பெரிய லூசுனா கதையை சொலிட்டு வந்தவன் தான்.

♫சோம்பேறி♫ said...

/*முத்துலெட்சுமி/muthuletchumi said...
பதிவைப்படிச்சு லூசாட்டம் நானும் சிரிச்சிட்டேன் போதுமா ..இப்ப நிம்மதியா..:) */

ரொம்ப நன்றிங்க முத்துலெட்சுமி.. நீங்க பொய் சொல்ல மாட்டீங்கனு எனக்குத் தெரியும். :-)

सुREஷ் कुMAர் said...

இடுகை செம சூப்பர்.. ஆமா உண்மையில் யாருக்கு ட்ரீட்மென்ட் குடுக்க போனீங்க..?

அறிவிலி said...

//பெரும்பாலும் இந்த ஹாஸ்பிட்டலுக்கு வர்றவங்க, ஆரம்ப கட்ட நோயாளிகளா தான் இருப்பாங்க. //

அப்படி தெரியலியே...

:-)

♫சோம்பேறி♫ said...

/*சுரேஷ் குமார் said...
இடுகை செம சூப்பர்.. ஆமா உண்மையில் யாருக்கு ட்ரீட்மென்ட் குடுக்க போனீங்க..?*/

நன்றி சுரேஷ் குமார்.. யாருக்கு ட்ரீட்மென்ட் என்பது படிப்பவர்கள் யூகத்துக்கு..



/*அறிவிலி said...
//பெரும்பாலும் இந்த ஹாஸ்பிட்டலுக்கு வர்றவங்க, ஆரம்ப கட்ட நோயாளிகளா தான் இருப்பாங்க. //
அப்படி தெரியலியே... :-) */

அங்க தான் வச்சிருக்கேன் ட்விஸ்ட்.. :-)

Suresh said...

சூப்பர் சூப்பர் சூப்பர்

Karthikeyan G said...

Super.. சிறுகதை போட்டிக்கு அனுப்புங்கள். வெற்றி வாய்ப்பு உண்டு.

போட்டிக்கு அனுப்ப இன்னும் சிறந்த சிறுகதைகள் உங்களிடம் ஸ்டாக் இருக்கோ.. :-)

♫சோம்பேறி♫ said...

நன்றி.. நன்றி.. நன்றி.. சுரேஷ்..

நன்றி கார்த்திகேயன்ஜி. வேறு கதை அனுப்பலாம் என்று இருக்கிறேன்..

மனுநீதி said...

//அங்க தான் வச்சிருக்கேன் ட்விஸ்ட்.. :-)//

அங்கயா வச்சிருக்கீங்க :)

பாருங்க அது தெரியாம நான் இங்க வந்து படிச்சிட்டிருக்கேன் :P

♫சோம்பேறி♫ said...

ஆஹா மனுநீதி. உங்களை தான் ரொம்ப அப்புரானினு நினைச்சேன்.. நீங்களும் ஆரம்பிச்சுட்டீங்களா சேட்டையை.. :-)

கலையரசன் said...

காமடியா ஆரம்பிச்சு, கோவமா இல்ல, காமடியாகவே முடிச்சிருக்கீங்க!
சோம்பேறிதன படாம அப்படியே
நம்ம பக்கங்களுக்கும் வாங்க

♫சோம்பேறி♫ said...

நன்றி கலையரசன். வருகிறேன்.

சென்ஷி said...

//மனுநீதி said...

//அங்க தான் வச்சிருக்கேன் ட்விஸ்ட்.. :-)//

அங்கயா வச்சிருக்கீங்க :)

பாருங்க அது தெரியாம நான் இங்க வந்து படிச்சிட்டிருக்கேன் :P
//

ஹா ஹா ஹா...

செம்ம கலக்கல் கமெண்ட் :))

abarnashankar,usa said...

intha mathiri kathaya padikkum bothu mattum enakku lesa veri pidikkum.
apparam nan kalla vote pottiduvaen
abarna

Anonymous said...

சூப்பர் அப்பு ....
இப்ப எங்க இருக்கீங்க ....கீழ்பக்கம் இல்ல .....?
விஜய்

♫சோம்பேறி♫ said...

/*சென்ஷி said...
ஹா ஹா ஹா...
செம்ம கலக்கல் கமெண்ட் :)) */

ஓஓஓஹோ... :-)


/*abarnashankar,usa said...
intha mathiri kathaya padikkum bothu mattum enakku lesa veri pidikkum.
apparam nan kalla vote pottiduvaen
abarna */

ஏங்க அபர்னா? அம்பூட்டு மோசமாவா இருக்கு. நல்ல ஓட்டுல நாலும் கள்ள ஓட்டுல நாலும் போட்டுட்டு போங்க..

/*Anonymous said...
சூப்பர் அப்பு ....
இப்ப எங்க இருக்கீங்க ....கீழ்பக்கம் இல்ல .....?
விஜய்*/

இல்லீங்க விஜய். டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு வந்துட்டேன். (எப்பவும் முதல் ஆளா வருவீங்க. இன்னிக்கு கடைசி ஆளா வந்திருக்கீங்க!!!)

Anonymous said...

நேத்து லீவ் போட்டு ரெஸ்ட்
விஜய்

♫சோம்பேறி♫ said...

Ok விஜய்..

Anonymous said...

இவங்களோட பிரச்சனைக்கு பின்னால இருக்கற கண்ணீர், கவலைகள், வலிகள் எல்லாம் பாத்திருக்கேன். அதனால வந்த உறுத்தல். நிச்சயமா உங்களை சொல்லலை.
:-))

chitra

♫சோம்பேறி♫ said...

ஓ. ஓக்கே.. ஓக்கே..

விக்னேஷ்வரி said...

ஹிஹிஹி.... ரொம்ப நல்லா இருக்கு.

☀நான் ஆதவன்☀ said...

loosaappa niiiiiiiiiiii

Athisha said...

இன்னைக்கே கருத்து சொல்லணுமா இல்ல அடுத்த மாசம் சொன்னா போதுமா..ஆஆஆஆவ்

Post a Comment

தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு.

Blog Widget by LinkWithin
 
சோம்பேறி. Design by Pocket