Views
முதல் பக்கத்திலேயே 'திறந்த வீட்டுக்குள் நாய் தான் நுழையும்' என்ற வாசகம் காறித் துப்பினாலும், 'கடவுள் மட்டும் காலிங் பெல் அடிச்சிட்டா வருவார்' என்று சமாதானப்படுத்திக் கொண்டு அடுத்த பக்கத்தைத் திறந்தேன். அதில் 'அடுத்த பக்கத்தையும் திருப்பினால் ரத்தம் கக்கி சாவாய்' என்று சிவப்பு மையில் எழுதப்பட்டிருந்தது. உயிர் மேல் உள்ள ஆசையால், அடுத்த பக்கத்தை விட்டு விட்டு, அதற்கடுத்த பக்கத்தைத் திறந்தேன்.
தமிழ் தானா!? லாரி டயரில் நசுங்கிய தவளை போன்ற அஷ்ட கோனலான எழுத்து. கஷ்டப்பட்டு வாசித்தால், மொழியும் தமிழ் போல் இல்லை. உங்களுக்கு இட்ல எய்ன பாஷை தெரியுமா? ஜெயம் படத்தில் புகைவண்டிக்கு பின்னால் எழுதப்பட்டிருக்குமே.. (இட்லன்ந்த = இந்த) அதில் எழுதப்பட்டிருந்தது.
என்னுடைய ராஜதந்திரம் அனைத்தும் வீணாகப் போகிறது என்று தெரியாமல், பொருமையாக எல்லா 'ட்ல'க்களையும் பேனாவால் அடித்து விட்டு படிக்க ஆரம்பித்தேன். ங்கொக்கா மக்க.. படிச்சு முடிச்சதும் வந்த கடுப்புல டைரியத் தூக்கி எறிஞ்சேன் பாருங்க. இன்னும் எங்க இருக்குதுன்னு கண்டுபுடிக்க முடியல. கண்டுபுடிச்சதும் முதல் வேலையா அதை ஏழுகடல் தாண்டி ஏழு மலை தாண்டி ஏதாவது அரசியல்வாதியோட தேர்தல் அறிக்கைக்குள்ள மறைச்சு வச்சிடனும்.
பின்ன, அவ பஸ்ல டிக்கட் எடுத்தது, பல் தேச்சதுனு ஒன்னு விடாம எழுதி வச்சிருந்தா, கஷ்டப்பட்டு டாவின்சி கோட் டாம் ஹேங்க்ஸ் ரேஞ்சுக்கு ஃபீல் பண்ணி டீகோட்(decode) பண்ணி படிச்ச எனக்கு காண்டாவாதா? சுவாரசியமா ஒரு விஷயம் கூடவா அவ வாழ்கைல நடக்கல? இந்த லட்சனத்துல அந்தக் கால ஹீரோயின் போல 'அப்பப்பா.. அதை என் வாழ்நாளில் மறக்க முடியாது'னு செல்ஃப் கமெண்ட் வேற. ஒரு வேளை வருஷத்துக்கு ஒருக்க தான் பல் தேப்பா போல! அதான் மறக்க முடியல.
அப்புறம், ப்ராக்டிகல் எக்ஸாம்ல இருபத்தைஞ்சுக்கு முட்டை மார்க் எடுத்திருந்ததைப் பத்தி எழுதியிருந்ததப் படிச்சதும் எனக்குள்ல ஒரு கவிதை ஊற்றெடுத்தது. (இக்கவிதையை வைரமுத்து பாணியில், ஒவ்வொரு வரியையும் இரண்டு முறை, மெய் எழுத்துக்களில் அழுத்தம் கொடுத்து, அடித் தொண்டையிலிருந்து ஏற்ற இறக்கத்துடன் படிக்கவும். முடியலைனா சாதாரணமாகவாவது படிக்கவும்.)
பரிச்சையை வச்சுகிட்டு
படிக்காம
பதினாறு
பக்கத்துக்கு
பல் விளக்குனதைப்
பத்தி எழுதினா
பாஸாக முடியுமா?
கவித சூப்பர்ல.. இதே போல் இன்னும் நிறைய கவிதைகள் தோன்றின. அவற்றை அச்சில் ஏற்றுவதற்கு ஆவன செய்து கொண்டிருக்கிறேன். அதற்கு முன்னோட்டமாக, என் மாஸ்டர் பீஸ் எனக் கருதும் ஒன்றை மட்டும் மேலே அளித்திருக்கிறேன்.
இந்தக் கவிதையை அவியலுக்கு பரிசலோ, குவியலுக்கு வாலோ, டரியலுக்கு குசும்பனோ, புதுசாக மறியல் எழுதப் போகும் வருங்கால பிரபலங்களோ பயன்படுத்தி கொல்லலாம் சே கொள்ளலாம். என் கவிதையால், உங்கள் ஃபாலோயர்கள் எண்ணிக்கை ஒரே நாளில் ஐநூறாக உயராவிட்டால் மீசையை எடுத்துவிடுறேன். (வளர்ந்ததும்)
நான் பின் வீட்டு ஜன்னலைப் பார்த்து ஜொள்ளுடன் சிரித்துக் கொண்டிருந்த போது எடுத்த புகைப்படம் ஒன்று இருக்கிறது. அதை க்ராபிக்ஸில் நிலா, பூ, கடல் என்று ஏதாவது ஒரு கருமத்தைப் பார்த்து சிரிப்பது போல மாற்றி புத்தகத்தின் முன் அட்டையில் போட்டு விடலாம்.
ஒரு முறை என் தம்பி என் தட்டிலிருந்த சிக்கன் பீஸைத் திருடியதும், நான் கோபமாக புருவத்தை நெரித்த போது எடுத்த புகைப்படத்தின் பிண்ணனியில், குண்டுகள் வெடிப்பது போல் மாற்றி அதைப் பின் அட்டையாக்கி விடலாம்.
மொட்டை மாடியில்
சுட்டெரிக்கும்
மொட்டை வெயிலில்
பட்டப் பகலில்
பட்டை
போட்டுக் கொண்டு
மட்டை ஆனபோது
எடுத்த புகைப்படத்தை புல்வெளியில் படுத்திருப்பது போல மாற்றி நடுப்பக்கமாக்கி விடலாம். மேற்கண்ட சுட்டெரிக்கும் கவிதையை, அதே பக்கத்தில் பிரசுரித்து விட்டால் புக் ஸேல் சும்மா பிச்சுக்கும்ல.
புத்தகத்தோட தலைப்பைக் கேட்டீங்க அசந்துடுவீங்க.
குழந்தை
குட்டியுடன்
குடும்ப இஸ்திரியாக
குடுமிச் சண்டை போடுபவரின்
குறிப்பேடு
'தலைப்பே கவிதையா!! தெய்வமே எங்கயோ போய்டீங்க..' அப்படினு நீங்க கரையறது தெரியுது. கூல் டவுன். கூல் டவுன். (இதை யார் வேண்டுமானாலும் டெம்ப்ளேட் பின்னூட்டமாக உபயோகப்படுத்திக் கொள்ளலாம். (சந்தேகமில்லாமல் இங்கே மட்டுமே))
உங்கள் மேலான பாராட்டுக்களை பின்னூட்டத்திலும், பரிசுப் பொருள்களை கூரியரிலும் அனுப்பி வைத்தால், புத்தகத்தின் பக்கங்களில் நூறை அதிகரித்த புண்ணியம் செய்தவராவீர்கள்.
தும்பிக்கையுடன் ஸாரி நம்பிக்கையுடன் சோம்பேறி
13 மச்சீஸ் சொல்றாங்க:
:))
மொத்த வலைப்பூவையும் ஆக்கிரமித்துக் கொள்ளுமளவு, மிகப் பெரியதாக பின்னூட்டி மற்றவர்களைப் பின்னூட்ட விடாத, பிரபல பதிவர் சென்ஷியின் நுண்ணரசியலை கண்டித்து உள்பக்கமாக வெளிநடப்பு செய்கிறேன்.
:-௦))௦
'சமர்ப்பணம்: இந்த கவிதைகளுக்கு காரணமான என் சகோதரிக்கும், தொலைந்துபோன அவரின் டயரிக்கும்' அப்படின்னு போடுவிங்களா?
சித்ரா
//ஒரு முறை என் தம்பி என் தட்டிலிருந்த சிக்கன் பீஸைத் திருடியதும், நான் கோபமாக புருவத்தை நெரித்த போது எடுத்த புகைப்படத்தின் பிண்ணனியில், குண்டுகள் வெடிப்பது போல் மாற்றி அதைப் பின் அட்டையாக்கி விடலாம். //
விஜயகாந்த் பாணியில் ...
//பரிசுப் பொருள்களை கூரியரிலும் அனுப்பி வைத்தால் //
அட்ரஸ் அனுப்புங்க...
-விஜய்
இதையும் மைன்ட்ல வச்சுக்கறேன் சித்ரா. இதுக்கு மேல கவிதை எதுவும் புதுசா தோனாததுனால, குறைந்தபட்சம் ஐநூறு பேருக்காவது சமர்ப்பனம்னு போட்டு புத்தகத்தோட பக்கத்தை அதிகரிக்கலாம்னு இருக்கேன். (உங்க பேர் அதுல கண்டிப்பா இருக்கு.)
/*விஜயகாந்த் பாணியில் ...*/
அட.. படம் கூட எடுக்கலாம் போல! அமெரிக்க, சிங்கை நண்பர்கள் யாராவது தயாரிப்பளாராக விரும்பினால் நான் இயக்குனராக தயார்.
/*அட்ரஸ் அனுப்புங்க... -விஜய் */
ஹை.. வொர்க் அவுட் ஆகிடுச்சு. வொர்க் அவுட் ஆகிடுச்சு. விஜய் உங்க மெயிலுக்கு இம்மீடியட்டா அட்ரஸ் அனுப்பப்படும். (ஏதும் கோபம் இருந்தா பேசி தீர்த்துக்கலாம். ஆட்டோ கீட்டோ அனுப்பிடாதீங்கோஓஓஓஓ..)
'தலைப்பே கவுஜையா!! எங்கயோ போய்டீங்க..'
(தெய்வத்தை நிந்தித்த பாவம் எனக்கெதுக்கு?)
/--ஏன் இன்றைய பணிகளை நாளை செய்ய வேண்டும்? நாளை மறுநாள் இருக்கும் போது:-) --/
சோம்பேறி என்ற பெயருக்கேற்ற அருமையான தலைப்பு. ஏனோ தெரியவில்லை இந்த தலைப்பு எனக்கு மிகவும் நெருக்கமாக தெரிகிறது.
//ஆட்டோ கீட்டோ அனுப்பிடாதீங்கோஓஓஓஓ //
ஆட்டோ கிடையாது ....சுமோ வரும்......
விஜய்
ஹையோ.. ரொம்ப நன்றி அறிவிலி. புத்தகத்தில் நூறு பக்கங்கள் அதிகரிக்கப் பட்டது.
****
நன்றி கிருஷ்ன பிரபு. இப்படி இருக்க மனசாட்சி விரும்பினாலும், பெரும்பாலானோரின் பணசாட்சி வாழ விடுவதில்லை.
****
நோ விஜய். நீங்க ரொம்ப ஓவரா ஃபீல் பண்றீங்க. சுமோ அனுப்பி என்னைத் தூக்குறதுக்கு நான் என்ன அஞ்சா நெஞ்சர் மாதிரி 120kg திருமலை நாயக்கர் மஹாலா? வெறும் 53.5kg தாஜ்மஹால் தான். எனக்கு மீன் பாடி வண்டியே ஜாஸ்தி.
:)
புன்னகைக்கும், வாக்களித்ததற்கும் மிகவும் நன்றி பிரபல பதிவர் :) இராகவன் நைஜிரியா :) அவர்களே!
:)-
படம் மிக அழகு அருமை
Post a Comment
தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு.