ஒரு ட்ரம்ஸ் வயலின் வாசிக்கிறது அல்லது ஷ்ஷ்ஷங்கர் சேரனான கதை

Friday 19 June, 2009

Views

எனக்கு பணக்காரர்கள் மீது வெறுப்பு வந்ததற்கு, இங்கே சொல்ல முடியாத பல காரணங்கள் இருந்தாலும், ஷங்கர் பட ஹீரோ போல, அவர்கள் பணத்தைக் கொள்ளையடித்து விட்டு, அவர்கள் அனைவரையும் கொன்றுவிட வேண்டும் என்ற கொலை வெறி வர காரணம், இயக்குனர் ஷங்கர் அல்ல எங்க கனேசன் அண்னன் தான்.

ஐந்தாம் வகுப்பு கோடை விடுமுறையின் போது தான் கனேசன் அண்னன் எனக்கு அறிமுகமானார். கிரிக்கெட் விளையாடும் போது பந்து அடிக்கடி இவர் வேலை பார்க்கும் கம்பெனிக்குள் போய் விழுந்து விடும். கேப்டனை விட அதி முக்கிய பொருப்பான பந்து பொறுக்கிப் போடும் பணியை நான் செய்து கொண்டிருந்ததால், அவரை அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அவர் பேச்சு கிரிக்கெட்டை விட சுவாரசியமாக இருந்ததால், முழு நேரமாக அந்த கம்பெனியிலேயே, நாளுக்கு ஐந்து ரூபாய் சம்பளத்தில் எடுபிடி வேலையில் சேர்ந்து விட்டேன். மற்றவர்கள் போல் குழந்தைகள் உலகத்துக்குள் நுழைய முயற்சிக்காமல், அவர் உலகத்துக்கு என்னை இழுத்து சென்றார்.

எனக்கு நிறைய கெட்ட வார்த்தைகளும் அதற்கு அர்த்தமும் கற்றுத் தந்தார். என் வயதுக்கு புரியுமளவு A ஜோக்குகள் சொல்வார். அதில் எனக்கு மிகவும் பிடித்த, இப்போது நினைத்தாலும் சிரிப்பு வரும் ஒன்றை மட்டும் சொல்கிறேன். இல்லை. வேண்டாம். என் மீது பகுத்தறிவாளர் என்ற முத்திரை குத்தப்படலாம்.

நாம இப்படி இருக்குறதுக்கு இந்தப் பணக்கார @&*$@*&கள் தான் காரணம் என்பார். எங்கள் ஊரைப் பொருத்த வரை அவர் சொல்வது உண்மை தான். இரண்டு தலைமுறைக்கு முன்பு வரை எங்கள் ஊரில் இரண்டே பிரிவினர் தான். 'நான் நாசமாய் போனாலும் பரவாயில்லை. மற்ற மூவரும் முன்னேற விட மாட்டேன்' என்று குல தெய்வம் கோவிலில் சத்தியம் செய்து கொண்ட நான்கு மேல் தட்டு பங்காளிகள். ஆட்டு மந்தைகள் போல அவர்களிடம் பதினைந்து ரூபாய்க்கு தினக்கூலி வேலை பார்த்த கீழ் தட்டு முட்டாள் மக்கள்.

(அந்த பதினைந்து ரூபாயையும் வடை, டீ என்று அன்றே செலவு செய்து விட்டு அவசரத் தேவைகளுக்கு வட்டிக்கு வாங்கிக் கொண்டிருப்பார்கள். கொஞ்சம் வசதியாக, சூப்பர்வைசர்களாக ஐம்பது, நூறு என்று வாங்குபவர்கள் சரக்கு, வடை என்று செலவழிப்பார்கள்)

எங்களுக்கு முந்தைய தலைமுறையில் தான் வெளிநாட்டில் கழிவறை கழுவியும், ஒட்டகத்தைக் குளிப்பாட்டியும் சில கீழ் வர்க்கத்தினர், தங்கள் பிள்ளைகளைப் படிக்க வைத்து நடுத்தர வர்க்கம் என்று புதிதாக ஒன்றைப் புகுத்தினர்.

என் அப்பா இதில் எந்த வகையிலும் சேராமல், பக்கத்து ஊரிலிருந்த மில்லில் மாத சம்பளத்துக்கு வேலை பார்த்து வந்தார். அவரது மேலாளரிடம் ஹிட்லர் பிச்சை எடுக்க வேண்டுமாம். ஒன்னுக்கு போனால் கூட அவரது மேலாளர் முறுக்கிய ஈர கயிற்றால் அடித்து இழுத்து வந்து, 'வேலையைப் பாருடா' என்பாராம். ஆனாலும் என் அப்பா உணர்ச்சி வசப்படாமல், எப்படி பணத்தைப் போல உழைப்பும் ஒரு மூலதனம் என்பதை லாஜிக்கலாக கம்யூனிஸ்ட்தனமாக விளக்குவார். அடிக்கடி மாநாடு, ஊர்வலம் என்று என்னையும் அழைத்துக் கொண்டு போய் பிரியானி வாங்கித் தருவார்.

ஆனால் கனேசன் அண்ணா எந்தக் கூட்டத்திலும் கலந்து கொள்வதில்லை. முதலாளிக்கு வாங்கிப் போகும் டீயில் கண்டதைக் கலப்பது, காயப் போடப் பட்டிருக்கும் முதலாளி மற்றும் அவர் மகன்களின் ஆடைகளில் செந்தட்டி எனப்படுமொரு வகை அரிப்பு ஏற்படுத்தும் செடியைத் தேய்த்து விடுவது என்று ஏதாவது செய்து அவர் வக்கிரத்தைத் தீர்த்துக் கொள்வார்.

குழந்தைகள் நலத்துறை அதிகாரிகளுக்கு (லஞ்சம் தர) பயந்து இருபது குழந்தைத் தொழிலாளர்களை பத்துக்கு பத்து அளவு கழிவறையில் அடைத்து வைத்து, அதில் நான்கு குழந்தைகள் நசுங்கி மூச்சு முட்டி இறந்தது போன்ற சம்பவங்களைப் பற்றி கேள்விப் பட்ட பிறகு அவர் செய்வது சரியென்றே பட்டது. வளர்ந்ததும் புலன் விசாரனை விஜயகாந்த் போல உடையணிந்து கொண்டு அந்த நாலு பேரையும் சுட்டுக் கொன்றுவிட வேண்டுமென முடிவு செய்து, அந்த வருட திருவிழாவிலிருந்தே ரெய்ன் கோட், ஷூ, கண்ணாடி, தொப்பி, தொப்பியில் மாட்டிக் கொள்ள இறகு எல்லாம் சேகரிக்க ஆரம்பித்தேன்.

ஆனால் கோடை விடுமுறை முடிந்து பள்ளி, டியூஷன், தேன் கூட்டுக்கு தீ வைத்து தேனெடுப்பது, பனியாரக் கிழவி வீட்டுக் கொல்லையில் கொடுக்காய்புளி பழம் திருடுவது, தவளை, கரட்டாண்டிகளைக் கொன்று விட்டு 'அய்யோ அண்ணே.. இப்படி அநியாயமா எங்களை விட்டுட்டுப் போயிட்டியே' என்று தலையிலடித்துக் கொண்டு அழுவது என்று வாழ்க்கை பிஸி ஆகி விட்டது.

என் அப்பாவும் வட்டி தொழில் ஆரம்பித்து, அது சக்கை போடு போட்டு நாங்களும் அந்தப் பணக்கார நாய்களில் ஒருவராகி விட்டதாலோ என்னவோ, ஷங்கர் பட ஹீரோவாகியிருக்க வேண்டிய நான், ஆட்டோக்ராஃப் பட ஹீரோவாகி உங்களுக்கு என் சுயசரிதையை சொல்லிக் கொண்டிருக்கிறேன் :-(

கதை முடிந்தது. இதற்கு மேல் படிக்காதீர்கள்.

நான் பள்ளிப் படிப்பு முடிக்கும் போது தான் தெரிந்தது, பல வருடங்களுக்கு முன் கனேசண்ணனின் காதலி அந்த நான்கில் ஒரு பணக்காரரைத் திருமணம் செய்து கொண்டு, இவரைக் கழட்டி விட்டு விட்டாராம். அதற்குப் பிறகு இவர் திருமணமே செய்து கொள்ளவில்லையாம்.

உங்களை கெஞ்சி கேட்டுக் கொள்கிறேன். தயவுசெய்து இதற்கு மேல் படிக்காதீர்கள்.

நான்கு வருடங்களுக்கு முன்பு தான் அவரைத் திருவிழாவில் பார்த்தேன். முன்னை விட கொஞ்சம் பூசினார் போல் இருந்தார். அக்னி சட்டி எடுத்துக் கொண்டு பல்லைக் கடித்தபடி பரவசமாக ஆடிக் கொண்டே வந்தவர், என்னைப் பார்த்ததும் ஆட்டத்தை நிறுத்தாமல் பல்லைக் கடித்தவாறு 'எப்ப வந்த? இங்க தான் இருக்கியா' என்று கேட்டார்.

எனக்கு ஆச்சரியமாகப் போய் விட்டது. (என்னை அடையாளம் கண்டு கொண்டார் என்பதற்காக அல்ல. எங்கள் உறவு அப்படி.) அவருக்கு கடவுள் பக்தி அறவே கிடையாது. அவரது A ஜோக்குகளில் அதிகம் சிக்கி சின்னாபின்னமாவது கடவுள்கள் தான். பொதுவாக எல்லாரையுமே ஏதாவது கெட்ட வார்த்தையை அடைமொழியாகக் கொண்டு தான் அழைப்பார் என்றாலும், கடவுளை அவருக்குத் தெரிந்ததிலேயே ஆகச் சிறந்த கெட்ட வார்த்தையால் தான் அழைப்பார்.

இப்போது கடவுள் நம்பிக்கை வந்திருக்கிறது. கொஞ்சம் ஊட்டமாகவும் இருக்கிறாரே என்று அப்போழுதே மைல்டாக சந்தேகம் வந்தது. இப்போது இரண்டு வருடங்களுக்கு முன்பு தான் ஊர்ஜிதமானது. இவரும் இவர் காதலியும் 'பழையபடி' ராசியாகி விட்டார்களாம். (நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போதே அவருக்கு நாற்பது வயதிருக்கும். அந்தம்மாவைப் பற்றித் தெரியவில்லை).

இவர்கள் விஷயம் அந்தப் பணக்காரருக்குத் தெரிந்து அவர் கண்டிக்க, அந்த அம்மா அவரிடமிருந்து லம்பாக பணம், நகை என்று லவட்டிக் கொண்டு கனேசன் அண்ணனுடன் ஊரை விட்டே ஓடிப் போய் விட்டார்களாம். அந்தப் பணக்காரரும் அவமானம் தாங்காமல் தற்கொலை செய்து கொண்டாராம்! ஹூம்ம்ம்ம்.. ஹீரோ ஹீரோ தான்..

58 மச்சீஸ் சொல்றாங்க:

Kathir said...

//மனசாட்சி இல்லாமல் லேபிள் வைத்தல் //

சூப்பர்.....

Vijay Anand said...

//ஜோக்குகளில் அதிகம் சிக்கி சின்னாபின்னமாவது கடவுள்கள் தான். பொதுவாக எல்லாரையுமே ஏதாவது கெட்ட வார்த்தையை அடைமொழியாகக் கொண்டு தான் அழைப்பார் என்றாலும், கடவுளை அவருக்குத் தெரிந்ததிலேயே ஆகச் சிறந்த கெட்ட வார்த்தையால் தான் அழைப்பார். //

பாவம் கடவுள்....

கார்க்கிபவா said...

லேபிள் அருமை..

இப்படிக்கு,

லேபிளை மட்டும் படிப்போர் சங்கம்.

♫சோம்பேறி♫ said...

/* Kathir said...
//மனசாட்சி இல்லாமல் லேபிள் வைத்தல் //
சூப்பர்..... */

நன்றி கதிர். இப்படி ஒரு வார்த்தையில் பின்னூட்டி விட்டு எஸ்ஸாவதற்குப் பெயர் மனசாட்சியே இல்லாமல் பின்னூட்டுதல் :-)

(பதிவுலக வேந்தர்கள் இதை பின்னூட்ட டுபுரித்தனம் என்றும் கூறுவர்..)

♫சோம்பேறி♫ said...

/* Vijay Anand said...
// கடவுளை அவருக்குத் தெரிந்ததிலேயே ஆகச் சிறந்த கெட்ட வார்த்தையால் தான் அழைப்பார். //
பாவம் கடவுள்.... */

விடுங்க பாஸ். அதான் தமிழ் பட வில்லன் மாதிரி, கடைசில சரண்டர் ஆயிட்டாருல (அதனால தான் பாவம்னு சொல்றீங்களோ!)

♫சோம்பேறி♫ said...

/* கார்க்கி said...
லேபிள் அருமை..
இப்படிக்கு,
லேபிளை மட்டும் படிப்போர் சங்கம். */

நன்றி கார்க்கி.. :-)

(இதுவும் ஒருவகை பின்னூட்ட டுபுரித்தனம் அல்லது மனசாட்சியே இல்லாமல் பின்னூட்டுதல்.)

இப்படிக்கு,
லேபிள் வைத்த சிங்கம். :-)

சென்ஷி said...

ஹா ஹா ஹா...

செம்ம காமெடிங்கோ உங்ககூட!

☀நான் ஆதவன்☀ said...

எந்த கம்யூனிஸ்ட் கூட்டத்தில பிரியாணி போடுறாங்க? கதை வுடாதீங்க..

இப்படிக்கு
கண்ணில் மாட்டிய இரண்டு லைனை படிப்போர் சங்கம்

rapp said...

இப்டித்தாங்க இந்த பணக்காரங்களுக்கு புத்தியப் புகட்டனும். இப்டி வெளக்குமாரால வெளக்குறாப்டி வெளக்கினா, அவங்க கண்ணாலம் கட்ரதுக்கே யோசிப்பாங்கல்ல.

Karthikeyan G said...

Chanceless.. Super ji.

♫சோம்பேறி♫ said...

/* சென்ஷி said...
ஹா ஹா ஹா...
செம்ம காமெடிங்கோ உங்ககூட! */

நன்றி சென்ஷி. (இவ்ளோ சீரியசான கதையை காமெடினு சொல்லி புட்டீங்களே!)

♫சோம்பேறி♫ said...

/* ☀நான் ஆதவன்☀ said...
எந்த கம்யூனிஸ்ட் கூட்டத்தில பிரியாணி போடுறாங்க? கதை வுடாதீங்க.. */
இப்படிக்கு
கண்ணில் மாட்டிய இரண்டு லைனை படிப்போர் சங்கம் */

இப்படி தெரிஞ்சே ஒன்னு ரெண்டு தப்பு விடலைனா, அனுபவமானு கேட்டுருவீங்களோனு ஒரு பயம் தான்.

இப்படிக்கு
wide ballலிலும் சிக்சர் அடிப்போர் சங்கம்.

♫சோம்பேறி♫ said...

/* rapp said...
இப்டித்தாங்க இந்த பணக்காரங்களுக்கு புத்தியப் புகட்டனும். இப்டி வெளக்குமாரால வெளக்குறாப்டி வெளக்கினா, அவங்க கண்ணாலம் கட்ரதுக்கே யோசிப்பாங்கல்ல. */

நூதனமான முறையில பின்னூட்டி என்னை மண்டை காய வைக்கிறீங்களே ராப்! எனக்கு வெளங்கலைங்க.. என்னை தான் திட்டுறீங்களோ? :-(

மனுநீதி said...

- என்ன பின்னூட்டமிடலாம் என மல்லாக்க படுத்து யோசிப்போர் சங்கம்

♫சோம்பேறி♫ said...

/* Karthikeyan G said...
Chanceless.. Super ji. */

ஹைய்யோ.. ரொம்ப நன்றி ஜி.. :-)

ஆனாலும், 'இந்த சிறுகதை மேற்கத்திய சிந்தனையாளர்களும், கீழை நாட்டு தத்துவ அறிஞர்களும் கதி கலங்கி பித்தேறி அலையும்படி மிக டெர்ரராக இருக்கிறது.' என்று பின்னூட்டி இருக்கலாமே ஜி.. :-(

சென்ஷி said...

இதெல்லாம் ஒரு கதை... செம்ம கேவலமா இருக்குது..

நான் லேபிள் நல்லாயிருக்குன்னு சொன்னேன்.. :)

மனுநீதி said...

//எனக்கு வெளங்கலைங்க.. என்னை தான் திட்டுறீங்களோ? :-( //

எனக்கு நிச்சயமா உங்கள திட்ற மாதிரி தான் தெரியுது :P


- பின்னூட்டமிட்டாலும் இன்னும் மல்லாக்கவே படுத்திருப்போர் சங்கம்

Karthikeyan G said...

இந்த சிறுகதை மேற்கத்திய சிந்தனையாளர்களும், கீழை நாட்டு தத்துவ அறிஞர்களும் கதி கலங்கி பித்தேறி அலையும்படி மிக டெர்ரராக இருக்கிறது.

Done :)

♫சோம்பேறி♫ said...

/* மனுநீதி said...
- என்ன பின்னூட்டமிடலாம் என மல்லாக்க படுத்து யோசிப்போர் சங்கம் */

1. தெய்வமே! எங்கேயோ போயிட்டீங்க!
2. இந்த நூற்றாண்டின் சிறந்த சிறுகதை!
3. உரையாடல் போட்டிக்கு அனுப்பலாமே!
4. இடுகையை விட சைட் பாரில் இருக்கும் ஜூஜூ பொம்மை அழகாக இருக்கிறது.
5. :-)

இப்படிக்கு,
குப்புற படுத்துக் கொண்டு பின்னூட்டமிட ஐடியா கொடுப்போர் சங்கம்.

♫சோம்பேறி♫ said...

/*சென்ஷி said...
இதெல்லாம் ஒரு கதை... செம்ம கேவலமா இருக்குது..
நான் லேபிள் நல்லாயிருக்குன்னு சொன்னேன்.. :) */


தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு.

அய்யோ.. அம்மா.. சுடுதே! :-)

♫சோம்பேறி♫ said...

/*மனுநீதி said...
எனக்கு நிச்சயமா உங்கள திட்ற மாதிரி தான் தெரியுது :P
- பின்னூட்டமிட்டாலும் இன்னும் மல்லாக்கவே படுத்திருப்போர் சங்கம் */

:-)

இப்படிக்கு,
நார வசவு வாங்கினாலும் பதிலுக்கு ஸ்மைலி போட்டு விட்டு எஸ்ஸாவோர் சங்கம்.

♫சோம்பேறி♫ said...

/* Karthikeyan G said...
இந்த சிறுகதை மேற்கத்திய சிந்தனையாளர்களும், கீழை நாட்டு தத்துவ அறிஞர்களும் கதி கலங்கி பித்தேறி அலையும்படி மிக டெர்ரராக இருக்கிறது.
Done :) */

நன்றி கார்த்திகேயன் ஜி.. இருந்தாலும் நடு நடுவுல மானே, தேனே சே.. ஸாரி.. பினா வானா எழுத்தாளரே, இலக்கியவாதியே எல்லாம் சேத்திருக்கலாம்.. :-(

(நோ ஜி.. நோ பேட் வேர்ட்ஸ். வீ ஆர் ஃப்ரண்ட்ஸ்)

சென்ஷி said...

தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு.

நல்லவேளை நான் போன் செஞ்சு திட்டலாமுன்னு நெனைச்சேன். உங்க குரலை ஞாபகப்படுத்திட்டீங்க :))

உக்கார்ந்து யோசிப்போர் சங்கத்திலிருந்து சென்ஷி

☀நான் ஆதவன்☀ said...

//
இப்படி தெரிஞ்சே ஒன்னு ரெண்டு தப்பு விடலைனா, அனுபவமானு கேட்டுருவீங்களோனு ஒரு பயம் தான்.

இப்படிக்கு
wide ballலிலும் சிக்சர் அடிப்போர் சங்கம்.//

இப்படி பதில போட்டதுனால நீங்க கம்யூனிஸ ஊர்வலத்தில சாம்பார் சாதம் சாப்பிடலைன்னு ஆயிடுமா?

இப்படிக்கு
அடுத்த பதில் பின்னூட்டம் வந்தால் கண்டுக்காத சங்கம்

rapp said...

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...........................நாங்க பாராட்டுறது திட்டுற மாதிரி இருக்கா? அதாவது, நூதனமா, பணக்காரங்களுக்கு புத்தியப் புகட்டுற நீதி போதனை கதை மாதிரி இருக்குன்னு சொல்ல வர்றேங்க(இதுக்கு நாலு வார்த்தை திட்டிருக்கலாம்ங்கரீங்களா?:):):)).

வெட்டியாபீசர்,
இஸ்திரி பொட்டி,
பாரீஸ்

rapp said...

இந்த சிறுகதை மேற்கத்திய சிந்தனையாளர்களும், கீழை நாட்டு தத்துவ அறிஞர்களும் கதி கலங்கி பித்தேறி அலையும்படி மிக டெர்ரராக இருக்கிறது.

rapp said...

தெய்வமே! எங்கேயோ போயிட்டீங்க!
இந்த நூற்றாண்டின் சிறந்த சிறுகதை!
உரையாடல் போட்டிக்கு அனுப்பலாமே!

rapp said...

இடுகையை விட சைட் பாரில் இருக்கும் ஜூஜூ பொம்மை அழகாக இருக்கிறது.

rapp said...

:-)

மனுநீதி said...

//தெய்வமே! எங்கேயோ போயிட்டீங்க//

அவரு எங்கயோ போய்ட்டா இங்க பதிவெழுதறது யாரு :P

அபூர்வ சகோதரர்கள் ஜனகராஜ் எடத்துல சோம்பேறிய வச்சு பாத்தா இப்படி எல்லாரும் பாராட்றது எங்க போய் முடியும்னு தெரியும் :) :)


- திணுசு திணுசா மொக்கை போடுவோர் சங்கம்

♫சோம்பேறி♫ said...

/* சென்ஷி said...
உக்கார்ந்து யோசிப்போர் சங்கத்திலிருந்து சென்ஷி

☀நான் ஆதவன்☀ said...
அடுத்த பதில் பின்னூட்டம் வந்தால் கண்டுக்காத சங்கம் */

:-)

எத்தனை சங்கங்கள் அசிங்கப்படுத்தினாலும் ஸ்மைலி போட்டு எஸ்ஸாகும் சிங்கம்.

♫சோம்பேறி♫ said...

/* rapp said...
கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...........................நாங்க பாராட்டுறது திட்டுற மாதிரி இருக்கா? அதாவது, நூதனமா, பணக்காரங்களுக்கு புத்தியப் புகட்டுற நீதி போதனை கதை மாதிரி இருக்குன்னு சொல்ல வர்றேங்க(இதுக்கு நாலு வார்த்தை திட்டிருக்கலாம்ங்கரீங்களா?:):):)).

வெட்டியாபீசர்,
இஸ்திரி பொட்டி,
பாரீஸ் */

சே.. சே.. இல்லீங்க ராப். புரிஞ்சுடுச்சு.. இதுவே போதும். மேற்கொண்டு நாலு வார்த்தையிலயும் திட்டிடாதீங்க.

சோம்பேறி
வருங்கால இஸ்திரி பொட்டி,
ஸ்ரீவி கிளை


/* rapp said...
இந்த சிறுகதை மேற்கத்திய சிந்தனையாளர்களும், கீழை நாட்டு தத்துவ அறிஞர்களும் கதி கலங்கி பித்தேறி அலையும்படி மிக டெர்ரராக இருக்கிறது.
தெய்வமே! எங்கேயோ போயிட்டீங்க!
இந்த நூற்றாண்டின் சிறந்த சிறுகதை!
உரையாடல் போட்டிக்கு அனுப்பலாமே!
இடுகையை விட சைட் பாரில் இருக்கும் ஜூஜூ பொம்மை அழகாக இருக்கிறது.
:-) */

டெம்ப்ளேட் பின்னூட்டங்களை பயன் படுத்தியவர்கள் எனது அக்கவுண்ட் எண்ணிற்க்கு பாரிஸ் டாலரை பேக் செய்யவும் :-)

♫சோம்பேறி♫ said...

/* மனுநீதி said...
//தெய்வமே! எங்கேயோ போயிட்டீங்க//
அவரு எங்கயோ போய்ட்டா இங்க பதிவெழுதறது யாரு :P
அபூர்வ சகோதரர்கள் ஜனகராஜ் எடத்துல சோம்பேறிய வச்சு பாத்தா இப்படி எல்லாரும் பாராட்றது எங்க போய் முடியும்னு தெரியும் :) :)
- திணுசு திணுசா மொக்கை போடுவோர் சங்கம் */

ஆஹா..

இப்படிக்கு
தப்பான டெம்ப்ளேட்டை, குடுத்துட்டு தலையை சொறிவோர் சங்கம்

Karthikeyan G said...

"அகர முதல வெழுத்தெல்லா மாதி பகவன் முதற்றே யுலகு."

இவன்,
சம்பந்தம் சம்பந்தம் இல்லாமல் பின்னூட்டம் போடுவோர் சங்கம்

♫சோம்பேறி♫ said...

/* Karthikeyan G said...
"அகர முதல வெழுத்தெல்லா மாதி பகவன் முதற்றே யுலகு."
இவன்,
சம்பந்தம் சம்பந்தம் இல்லாமல் பின்னூட்டம் போடுவோர் சங்கம் */

கவிதை நல்லாருக்கு கார்த்திகேயன் ஜி. நீங்க எழுதினதா?

இப்படிக்கு,
சம்மந்தமில்லாமல் பின்னூட்டம் வந்தாலும் 'சிக்கிட்டான்யா.. சிக்கிட்டான்யா..' என்று பதில் சொல்வோர் சங்கம்.

சென்ஷி said...

இன்னா பதிவு போட்டாலும் ஒருத்தர்
சூப்பர் சொல்லி விடல்


சோம்பேறி எதை எழுதுனாலும் சூப்பர்ன்னு சொல்லுவோர் சங்கம்

Karthikeyan G said...

//கவிதை நல்லாருக்கு கார்த்திகேயன் ஜி. நீங்க எழுதினதா?//

இல்லை. இது எங்க பெரியப்பா பையன் எழுதியது.

நான் எழுதியது அடுத்த பின்னூட்டத்தில்.....

இப்படிக்கு,
வெட்டி சஸ்பென்ஸ் கொடுப்பவர்கள் சங்கம்.

சென்ஷி said...

//நாங்க பாராட்டுறது திட்டுற மாதிரி இருக்கா? அதாவது, நூதனமா, பணக்காரங்களுக்கு புத்தியப் புகட்டுற நீதி போதனை கதை மாதிரி இருக்குன்னு சொல்ல வர்றேங்க//

ஓ.. அந்த இத்துனூண்டு பின்னூட்டத்துல இம்மாம் மேட்டர் இருக்குதா.... இதையே பதிவாக்கியிருந்தா எனக்காச்சும் புரிஞ்சுருக்கும் :)

சென்ஷி said...

//டெம்ப்ளேட் பின்னூட்டங்களை பயன் படுத்தியவர்கள் எனது அக்கவுண்ட் எண்ணிற்க்கு பாரிஸ் டாலரை பேக் செய்யவும் :-)//

டாலரில் உள்ள படத்தில் ஈபிள் டவர் போட்டதாகவும், மற்றும் கறுப்பு கயிறில் இணைக்கப்பட்டதாகவும் இருத்தல் மிக்க நலம் :)

rapp said...

//
டாலரில் உள்ள படத்தில் ஈபிள் டவர் போட்டதாகவும், மற்றும் கறுப்பு கயிறில் இணைக்கப்பட்டதாகவும் இருத்தல் மிக்க நலம் :)//

சிகப்பு கயித்தில் கோத்துவிட்டு, மலையாள சேட்டன்கிட்ட மந்திரிச்சி கொடுத்தா பரவாயில்லையா?:):):)

♫சோம்பேறி♫ said...

/* சென்ஷி said...
சோம்பேறி எதை எழுதுனாலும் சூப்பர்ன்னு சொல்லுவோர் சங்கம்
ஓ.. அந்த இத்துனூண்டு பின்னூட்டத்துல இம்மாம் மேட்டர் இருக்குதா. :) */

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்..

இப்படிக்கு,
சாவடி அடிச்சாலும் சங்கத்தை கலைக்காத சிங்கம்.

♫சோம்பேறி♫ said...

/* Karthikeyan G said...
இல்லை. இது எங்க பெரியப்பா பையன் எழுதியது.
நான் எழுதியது அடுத்த பின்னூட்டத்தில்.....
இப்படிக்கு,
வெட்டி சஸ்பென்ஸ் கொடுப்பவர்கள் சங்கம். */

அடங்கொன்னியா! வள்ளுவர் உங்க கஸினா? நெக்ஸ்ட் டைம் வரும் போது உங்க ப்ரதர் கிட்டயிருந்து ஒரு ஆட்டோக்ராஃப் ப்ளீஸ்.. (கவிதையெல்லாம் வேண்டாம்.)

இப்படிக்கு
ஔவையார் எங்க ஆயானு சொன்னாலும் அப்பாவித் தனமாக நம்புவோர் சங்கம்

♫சோம்பேறி♫ said...

/* rapp said...
//டாலரில் உள்ள படத்தில் ஈபிள் டவர் போட்டதாகவும், மற்றும் கறுப்பு கயிறில் இணைக்கப்பட்டதாகவும் இருத்தல் மிக்க நலம் :)//
சிகப்பு கயித்தில் கோத்துவிட்டு, மலையாள சேட்டன்கிட்ட மந்திரிச்சி கொடுத்தா பரவாயில்லையா?:):):) */

எப்படி இருந்தா என்ன? தங்கத்தில் இருந்தால் சரி.

இப்படிக்கு,
ஃப்ரீயா குடுத்தா பினாயிலையும் குடிப்போர் சங்கம்

☀நான் ஆதவன்☀ said...

//இப்படிக்கு,
சாவடி அடிச்சாலும் சங்கத்தை கலைக்காத சிங்கம்.

இப்படிக்கு
ஔவையார் எங்க ஆயானு சொன்னாலும் அப்பாவித் தனமாக நம்புவோர் சங்கம்

இப்படிக்கு,
ஃப்ரீயா குடுத்தா பினாயிலையும் குடிப்போர் சங்கம்

இப்படிக்கு,
வெட்டி சஸ்பென்ஸ் கொடுப்பவர்கள் சங்கம்//

இப்படி வெட்டிதனமா பொழுதுபோக்குறதுக்கு வெக்கமா இல்லை உங்களுக்கு

இப்படிக்கு
நல்ல நல்ல சங்கங்களை கண்டு காண்டாகும் சங்கம்

Karthikeyan G said...

சங்கம் வைத்து டமில்லை வளர்க்கும் அண்ணன் சோம்பேரி வால்க.

இப்படிக்கு,
தமிழ் காட்டாறு சோம்பேரி ரசிகர்கள் சங்கம்.

சப்ராஸ் அபூ பக்கர் said...

தொடருங்கள் உங்கள் பயணத்தை......

http://safrasvfm.blogspot.com

அட...இங்கேயும் கொஞ்சம் வாங்க....

♫சோம்பேறி♫ said...

/*☀நான் ஆதவன்☀ said...

இப்படிக்கு
நல்ல நல்ல சங்கங்களை கண்டு காண்டாகும் சங்கம் */

ஹ ஹ ஹா.. வெத்தி.. வெத்தி



/* Karthikeyan G said...
சங்கம் வைத்து டமில்லை வளர்க்கும் அண்ணன் சோம்பேரி வால்க.
இப்படிக்கு,
தமிழ் காட்டாறு சோம்பேரி ரசிகர்கள் சங்கம். */

சங்கத்து சிங்கம் வாழ்க..

♫சோம்பேறி♫ said...

/* சப்ராஸ் அபூ பக்கர் said...
தொடருங்கள் உங்கள் பயணத்தை......
http://safrasvfm.blogspot.com
அட...இங்கேயும் கொஞ்சம் வாங்க.... */

நன்றிங்க.. சரிங்க..

S.A. நவாஸுதீன் said...

உங்க பதிவு பக்கம் வந்துட்டு போனா கொஞ்சம் ரிலாக்ஸ் ஆயிடறேன் தல. படிக்காத படிக்காதன்னு சொல்லி முழுசையும் படிக்க வச்சிட்டீங்க.

மனசாட்சி இல்லாமல் லேபிள் வைத்தல் - சூப்பரோ சூப்பர்

S.A. நவாஸுதீன் said...

முதல் பந்திலேயே 50 போட்டுட்டேனா!!!

Kathir said...

//(பதிவுலக வேந்தர்கள் இதை பின்னூட்ட டுபுரித்தனம் என்றும் கூறுவர்..)//

அவ்வ்வ்வ்வ்வ்வ்......

இப்படிக்கு,
இதைப் பற்றியெல்லாம் தெரியாத அப்பாவி பயபுள்ளைக சங்கம்....

Kathir said...
This comment has been removed by the author.
Kathir said...

////இன்னா பதிவு போட்டாலும் ஒருத்தர்
சூப்பர் சொல்லி விடல்


சோம்பேறி எதை எழுதுனாலும் சூப்பர்ன்னு சொல்லுவோர் சங்கம்//

வேணாம்...
வலிக்குது.....

:))

♫சோம்பேறி♫ said...

/* S.A. நவாஸுதீன் said...
சூப்பரோ சூப்பர் */

ரொம்ப சந்தோஷம் நவாஸ்... நன்றி.

/* முதல் பந்திலேயே 50 போட்டுட்டேனா!!! */

யெஸ் நவாஸ். இந்த அடுத்த பந்தில 51 போட்டுட்டீங்க

இப்படிக்கு,
ராமானுஜருக்கு கணிதம் சொல்லிக் கொடுத்தவர்கள் சங்கம்

♫சோம்பேறி♫ said...

/* Kathir said...
//(பதிவுலக வேந்தர்கள் இதை பின்னூட்ட டுபுரித்தனம் என்றும் கூறுவர்..)//
அவ்வ்வ்வ்வ்வ்வ்......
இப்படிக்கு,
இதைப் பற்றியெல்லாம் தெரியாத அப்பாவி பயபுள்ளைக சங்கம்.... */

ஹி ஹி..

இப்படிக்கு,
அப்பாவிகளை (மட்டுமே) அழ வைக்கும் சங்கம்


/* சோம்பேறி எதை எழுதுனாலும் சூப்பர்ன்னு சொல்லுவோர் சங்கம்//
வேணாம்...
வலிக்குது.....
:)) */

வலிக்குதுனு சொல்லிட்டு :)) இப்படி சிரிக்கிறீங்க பாஸ். இடுக்கன் வருங்கால் நகுக???

Anonymous said...

6. இடுகையைவிட லேபில் சிறப்பாக இருக்கிறது. :-)))

அடேயப்பா!!! பின்னூட்டத்திலேயே எவ்வளவு சங்கங்கள் முளைச்சிருக்கு! 'சங்கம் வைத்து தமிழ் வளர்த்தோம்' என்பதை மறக்காமல், இப்பவும் சங்கம் வைத்து தமிழ் வலையுலகை வளர்க்கும் சிங்கங்கள் வாழ்க!

சித்ரா

♫சோம்பேறி♫ said...

/*Anonymous said...

6. இடுகையைவிட லேபில் சிறப்பாக இருக்கிறது. :-)))*/

ஓக்கே.. ஓக்கே.. இனிமே சீரியஸா எதுவுமே எழுத மாட்டேன்.

/*தமிழ் வலையுலகை வளர்க்கும் சிங்கங்கள் வாழ்க!*/
சங்கத்துல உங்களுக்கும் ஒரு பொருளாளர் போஸ்ட் போட்டுத் தரவா சித்ரா?

இப்படிக்கு,
சராமாரியாக சங்கங்கள் வைக்கும் சங்கம்

♫சோம்பேறி♫ said...

Thanks Anoch.. Will check your site.

Post a Comment

தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு.

Blog Widget by LinkWithin
 
சோம்பேறி. Design by Pocket