ரூம் போட்டு யோசிக்கனும் - உரையாடல் போட்டிக்காக

Saturday, 6 June 2009

Views

அன்பு மக்களே! உரையாடல் போட்டிக்காக இதுவரை வெளிவந்த கதைகளில் நான்கைந்தைத் தவிர எதுவும் என்னைப் பெரிதாகக் கவரவில்லை. எழுதியவர்களைப் பற்றிய இமேஜை மறந்து விட்டு, எழுத்தைப் பார்த்து கதைகளைத் தேர்ந்தெடுக்கும் பட்சத்தில், நம்மைப் போன்ற இளம் பதிவர்களும் நன்றாக எழுதினால் வெற்றி பெற வாய்ப்பிருப்பதாகவே தோன்றுகிறது.

எனவே நானும் போட்டியில் கலந்து கொள்ள முடிவு செய்து விட்டேன். நீங்களும் கலந்து கொள்ள விரும்பினால், சைடிலுள்ள பொம்மையைக் க்ளிக்கி போட்டியின் விதிமுறைகளைத் தெரிந்து கொள்ளலாம். அம்பூட்டு தூரம் போக சோம்பேறித்தனப் படுபவர்கள் இங்கே க்ளிக்கி விவரங்களை அறியலாம்.
இதுவரை சில பதிவர்கள் உரையாடல் போட்டிக்காக எழுதியுள்ள கதைகளை விட அவர்கள் வலைப்பூவில் எழுதப்பட்ட மற்ற கதைகள் அருமையாக உள்ளன. என்னைப் போன்ற இளம் (சரி.. சரி..) பதிவர்களுக்கும் வாய்ப்பளிக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில், அவர்கள் வேண்டுமென்றே பாடாவதியாக எழுதியிருக்கிறார்களா, இல்லை போட்டியென்றால் இப்படிப்பட்ட கதை தான் சரியாக இருக்கும் என்று நினைத்து அப்படி எழுதியிருக்கிறார்களா என்று தெரியவில்லை.

எதுவாக இருந்தாலும் பாடாவதியாக எழுதிய அனைவருக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றிகள். நன்றாக எழுதியிருக்கும் நான்கைந்து பேருக்கு 'கர்ர்ர்ர்ர்ர்ர்' மற்றும் 'நாங்களும் வருவோம்ல'

உரையாடல் போட்டிக்கு 'சிறுகதை எழுதுவது எப்படி' என்று ரூம் போட்டு யோசிப்பதற்காக, நாளை (ஞாயிறு) மதியம் நாகரீகத்தின் தொட்டில் வெனிஸுக்கு கிளம்புகிறேன். (நேரம் ஒத்துழைத்தால் நாகரீகக் கட்டில் பாங்காங்கிற்கு போகவும் எண்ணமுண்டு). வரும் போது யாராருக்கு செண்ட் பாட்டில், சாக்லேட், பிஸ்கோத்து வேணுமோ கை தூக்குங்க.. ஓகே டன். டாட்டா.. பை பை. சீ யூ..

29 மச்சீஸ் சொல்றாங்க:

Raju said...

அப்டியே யார் யார் எகழுதுன கவிதைகள் பிடிக்கலைனு சொன்னா, கொஞ்சம் பொறி பறக்கும்.
எங்களுக்கும் கொஞ்சம் பொழுதுபோகும்ல...!

Raju said...

ஸாரி...கதைகள்...!

♫சோம்பேறி♫ said...

தோடா.. உங்களுக்கு பொறி பறக்கும் டக்ளஸ். எங்களுக்கு பொறி கலங்குமே அப்பு. (நல்லா கேக்குறாருய்யா டீட்டெய்லு)

அகநாழிகை said...

சோம்பேறித்தனமில்லாமல் கதைப்போட்டி முடிவதற்குள் எழுதி அனுப்ப வாழ்த்துக்கள்.

‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்

பழமைபேசி said...

முன்கூட்டிய வாழ்த்துகள்!

சென்ஷி said...

சோம்பேறி வெற்றிகரமாக சுற்றுப்பயணம் சென்று வர வாழ்த்தி போஸ்டர் ஒட்டிக்கொள்வது சென்ஷி

(பி.கு. எனக்கு சாக்லேட் வாங்கி வர முடியுமா! :)) )

சென்ஷி said...

//எழுதியவர்களைப் பற்றிய இமேஜை மறந்து விட்டு, எழுத்தைப் பார்த்து கதைகளைத் தேர்ந்தெடுக்கும் பட்சத்தில், நம்மைப் போன்ற இளம் பதிவர்களும் நன்றாக எழுதினால் வெற்றி பெற வாய்ப்பிருப்பதாகவே தோன்றுகிறது.//

ஐ எஸ் ஐ முத்திரை குத்திக்கிட்டுத்தான்யா ரவுடியிசமே ஆரம்பிக்கறாய்ங்க :)))

மனுநீதி said...

@சென்ஷி - சோம்பேறி உங்கள தாக்கி சாக்லேட்காக ஒரு பதிவு போட்ட மாதிரி நீங்களும்
சாக்லேட்காக அவர பத்தி ஒரு பதிவு போட்டா எங்களுக்கெல்லாம் கொஞ்சம் என்டர்டைன்மென்ட் கெடைக்கும் :)

அப்புறம் சோம்பேறி எல்லாரையும் கலாய்ச்சிட்டதால உங்க கதைக்கு பயங்கர வரவேற்பு இருக்கும்னு நெனைக்கிறேன் :P

டைட்டில உரையாடல் போட்டிக்குன்னு போட்ட ஒடனே ஒருவேல இதையே போட்டிக்கு அனுப்ப போரீங்கலோனு நெனச்சேன் :)

சென்ஷி said...

பின்னூட்டத்துல, தனிப்பதிவுல யாரு யாரெல்லாம் சோம்பேறிய கலாய்க்க தயாரா இருக்கீங்கன்னு லிஸ்ட் போட்டு இப்பவே வச்சுக்குவோம் டக்ளஸ், மனுநீதி. சோம்பேறி கதை எழுதி பப்ளிஷ் ஆகட்டும். அப்புறம் வச்சுக்கறேன் கச்சேரிய :-)

கதை எழுதாம மொக்கைய போட்டுட்டு லொள்ளைப் பாரு.. எகத்தாளத்தப் பாரு

வெற்றி-[க்]-கதிரவன் said...

டாஸ்மார்க்ல ரெண்டு புள்ள வாங்கி போத குறைய குறைய அடிச்சே ஒரு கதை சிக்கமாட்டேன்கித்து.... அதனால... வரும்போது பாரின் சரக்கு வாங்கிகினுவா அப்பனாச்சும் கதை கிடைக்குதான்னு பாக்குறேன்

♫சோம்பேறி♫ said...

/* "அகநாழிகை" said...
சோம்பேறித்தனமில்லாமல் கதைப்போட்டி முடிவதற்குள் எழுதி அனுப்ப வாழ்த்துக்கள்.
‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன் */

/* பழமைபேசி said...
முன்கூட்டிய வாழ்த்துகள்! */


மிகவும் நன்றி திரு. பொன்.வாசுதேவன் மற்றும் திரு. பழமைபேசி..

மொக்கை போட்டிருக்கிறேன் என்று கடுப்பாகாமல், நான் சொல்ல வந்ததில் சரியானதை மட்டும் எடுத்துக் கொண்டு நீங்கள் என்னை வாழ்த்தியதே வெற்றி பெற்று விட்ட உணர்வைத் தருகிறது.

சென்ஷி said...

//மொக்கை போட்டிருக்கிறேன் என்று கடுப்பாகாமல், நான் சொல்ல வந்ததில் சரியானதை மட்டும் எடுத்துக் கொண்டு நீங்கள் என்னை வாழ்த்தியதே வெற்றி பெற்று விட்ட உணர்வைத் தருகிறது.//

அய்யோடா! இங்க பார்றா... உத்தம புத்திரரை :)

♫சோம்பேறி♫ said...

/* சென்ஷி said...
சோம்பேறி வெற்றிகரமாக சுற்றுப்பயணம் சென்று வர வாழ்த்தி போஸ்டர் ஒட்டிக்கொள்வது சென்ஷி */

அப்போ நீங்க வெனிஸ் வரலியா?

/* (பி.கு. எனக்கு சாக்லேட் வாங்கி வர முடியுமா! :)) ) */

பி.கு. : பிம்பிலிக்கி பியாபி :))

/* ஐ எஸ் ஐ முத்திரை குத்திக்கிட்டுத்தான்யா ரவுடியிசமே ஆரம்பிக்கறாய்ங்க :))) */

நாங்களும் 'இளம்' ரௌடி தான்.

/* பின்னூட்டத்துல, தனிப்பதிவுல யாரு யாரெல்லாம் சோம்பேறிய கலாய்க்க தயாரா இருக்கீங்கன்னு லிஸ்ட் போட்டு இப்பவே வச்சுக்குவோம் டக்ளஸ், மனுநீதி. சோம்பேறி கதை எழுதி பப்ளிஷ் ஆகட்டும். அப்புறம் வச்சுக்கறேன் கச்சேரிய :-)

கதை எழுதாம மொக்கைய போட்டுட்டு லொள்ளைப் பாரு.. எகத்தாளத்தப் பாரு */

அடப் பாவி! ஃப்ளைட்டுக்கு நேரமாச்சுனு அவசரமா கிளம்பிக்கிட்டுருந்த என்னைக் கூப்பிட்டு எழுத ஐடியா குடுத்துட்டு கோத்து விடுறதைப் பாரு.. கொலை வெறியைப் பாரு..

/* அய்யோடா! இங்க பார்றா... உத்தம புத்திரரை :) */

நோ.. ஐ ஆம் அ எம் ஜி ஆர் ஃபேன்.. இதயக்கனி என்று திட்டவும்.

♫சோம்பேறி♫ said...

/* மனுநீதி said...
@சென்ஷி - சோம்பேறி உங்கள தாக்கி சாக்லேட்காக ஒரு பதிவு போட்ட மாதிரி நீங்களும்
சாக்லேட்காக அவர பத்தி ஒரு பதிவு போட்டா எங்களுக்கெல்லாம் கொஞ்சம் என்டர்டைன்மென்ட் கெடைக்கும் :) */

ஹல்ல்ல்ல்லோ.. குற்றம் செய்தவரை விட செய்யத் தூண்டியவருக்கே அதிக தண்டனை. அவர் என்னைக் கலாய்ச்சா உங்களைத் தாக்கி தான் எதிர் பதிவு போடுவேன்.

/* அப்புறம் சோம்பேறி எல்லாரையும் கலாய்ச்சிட்டதால உங்க கதைக்கு பயங்கர வரவேற்பு இருக்கும்னு நெனைக்கிறேன் :P */

ஆஹா.. இதை நான் யோசிக்கவே இல்லையே! எல்லார்கிட்டயும் ஒரு பகிரங்க மன்னிப்பு கேட்டுடவா?

/* டைட்டில உரையாடல் போட்டிக்குன்னு போட்ட ஒடனே ஒருவேல இதையே போட்டிக்கு அனுப்ப போரீங்கலோனு நெனச்சேன் :) */

நீங்க லேபிளைப் பாத்திருக்கனும் மனுநீதி

♫சோம்பேறி♫ said...

/* பித்தன் said...
டாஸ்மார்க்ல ரெண்டு புள்ள வாங்கி போத குறைய குறைய அடிச்சே ஒரு கதை சிக்கமாட்டேன்கித்து.... அதனால... வரும்போது பாரின் சரக்கு வாங்கிகினுவா அப்பனாச்சும் கதை கிடைக்குதான்னு பாக்குறேன். */

சப்ப மேட்டர் தல. உங்க பட்ஜெட் என்னான்னு சொல்லுங்க. மண்டபத்துல கதை எழுதித் தரதுக்கு ஆளுங்க ரெடியா இருக்காங்க.

எனிவே சரக்கோடு சந்திப்போம்..

சென்ஷி said...

//
அடப் பாவி! ஃப்ளைட்டுக்கு நேரமாச்சுனு அவசரமா கிளம்பிக்கிட்டுருந்த என்னைக் கூப்பிட்டு எழுத ஐடியா குடுத்துட்டு கோத்து விடுறதைப் பாரு.. கொலை வெறியைப் பாரு..//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :-(

நான் யார்கிட்டயும் சேட்டிங்க் செய்யறதில்லைன்னு பாட்டி மேல சத்தியம் செஞ்சுட்டு வந்திருக்கேன். பாட்டி உயிரோட இருக்குறவரைக்கும் சோம்பேறியை யாரும் நம்பப்போறதில்லை :-)

♫சோம்பேறி♫ said...

பாவம் சென்ஷி உங்க பாட்டி!!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வெனீஸா.. நம்பறமாதிரி இல்லையே.. :))

ஆகாய நதி said...

வாழ்த்துகள்!

♫சோம்பேறி♫ said...

/* முத்துலெட்சுமி/muthuletchumi said...
வெனீஸா.. நம்பறமாதிரி இல்லையே.. :)) */

தமிழக வெனிஸ் எங்க பக்கத்து ஊர் ராஜபாளையத்துக்கு போறேன்.

(கம்பெனி ரகசியத்தை இப்படி போட்டு உடைச்சுட்டீங்களேக்கா.. கொஞ்சம் பில்ட் அப் குடுக்க விட மாட்டீங்களே!)

♫சோம்பேறி♫ said...

நன்றிகள்! ஆகாய நதி..

Anonymous said...

தமிழக வெனிஸ் எதுன்னு யோசிச்சிட்டு,பின்னூட்டத்துக்கு வந்தா முத்துலெட்சுமிக்கு பதில் சொல்லிட்டிங்க. குடுத்த பில்டப்புக்கு ஏத்த மாதிரி நல்ல கதையோட வாங்க. (ஆமா, நெசமா எழுதப்போறிங்களா? இல்லையா? லேபிளைப் படிச்சா சந்தேகமா இருக்கு.)

சித்ரா

♫சோம்பேறி♫ said...

/* நெசமா எழுதப்போறிங்களா? இல்லையா? லேபிளைப் படிச்சா சந்தேகமா இருக்கு */

காசா பணமா கழுத ஒரு கதை தானே! எழுதிட்டா போச்சு..

/* குடுத்த பில்டப்புக்கு ஏத்த மாதிரி நல்ல கதையோட வாங்க. */

அவ்வ்வ்வ்வ்.. இதை தான் ஓவர் பில்ட்-அப் உடம்புக்காவாதுனு சொல்லுவாய்ங்களோ? நல்ல கதைக்கு நான் எங்க போவேன்?

தீப்பெட்டி said...

//குடுத்த பில்டப்புக்கு ஏத்த மாதிரி நல்ல கதையோட வாங்க//

அப்போ இது கதை இல்லையா?

:(

Karthikeyan G said...

நீங்கள் எழுத இருக்கும் சிறுகதை மேற்கத்திய சிந்தனையாளர்களும், கீழை நாட்டு தத்துவ அறிஞர்களும் கதி கலங்கி பித்தேறி அலையும்படி மிக டெர்ரராக அமைய வாழ்த்துக்கள்.

♫சோம்பேறி♫ said...

/* தீப்பெட்டி said...
அப்போ இது கதை இல்லையா? */

ஹைய்யோ தீப்பெட்டி. இது கதை தான். ஒரு வரிக் கதை, ஒரு எழுத்துக் கதை போல இது ஒரு எழவும் இல்லாத கதை. அதான் தோழர் பைத்தியக்காரன் பரிசோதனைகள் செய்யலாம்னு சொல்லிருக்காரே.

♫சோம்பேறி♫ said...

/*Karthikeyan G said...
நீங்கள் எழுத இருக்கும் சிறுகதை மேற்கத்திய சிந்தனையாளர்களும், கீழை நாட்டு தத்துவ அறிஞர்களும் கதி கலங்கி பித்தேறி அலையும்படி மிக டெர்ரராக அமைய வாழ்த்துக்கள். */

உங்கள் பின்னூட்டம் தான் என்னை டெரராக்குகிறது கார்த்திகேயன் ஜி.

Anonymous said...

//ஹைய்யோ தீப்பெட்டி. இது கதை தான். ஒரு வரிக் கதை, ஒரு எழுத்துக் கதை போல இது ஒரு எழவும் இல்லாத கதை. அதான் தோழர் பைத்தியக்காரன் பரிசோதனைகள் செய்யலாம்னு சொல்லிருக்காரே.//

ஆஹா... அப்ப இதுதான் போட்டிக்கான கதையா? முன், பின், பக்கவாட்டு நவினத்துவம் - இந்த மாதிரி எதுவுமில்லாமல் புதுசா இருக்கே? பரிசோதனைகள் செய்யலாம்ன்னு சொன்னதுக்காக அவரை இப்படியா சோதிக்கிறது? :-)))

சித்ரா

♫சோம்பேறி♫ said...

நன்றி சித்ரா. :-)

சித்ரா சொல்லவருவது என்னவென்றால்:

'சோம்பேறி! நீங்க இலக்கியவாதி ஆயிட்டீங்க..'

Post a Comment

தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு.

Blog Widget by LinkWithin
 
சோம்பேறி. Design by Pocket