Views
ஷா ஊரில் பிள்ளைகளே இல்லாதது போல் தினமும், அவன் ஊரிலிருந்து எங்கள் ஊருக்கு (குறுக்கு வழியில் 7 கிமீ, பேருந்தில் வந்தால் 18 கிமீ) பிரயாணம் செய்து தவறாமல் வந்து விடுவான். ஷா என்ற ஷாருக் என்ற பொறம்போக்கு மீது நான் இப்போது பெருங் காண்டில் இருப்பதால், கெட்ட வார்த்தை பிரயோகத்தைத் தவிர்க்கும் பொருட்டு அவனைப் பற்றி வேறொரு கூலான சந்தர்ப்பத்தில் எழுதுகிறேன்.
வழக்கமாக, காலை 8 மணிக்கு எங்கள் வீட்டில் நான் ஷா இருவரும் சாப்பிட்டு விட்டு, பீர் வீட்டில் மூவரும் காப்பி அருந்தி விட்டு, அபி வீட்டில் ஐவரும்(அபி அப்பாவையும் சேர்த்து. அநியாயத்திற்கு ஜாலியான மனிதர்) தம்மடித்து விட்டு, நால்வரும் பேருந்து நிலையத்தை அடையும் போது 8.30 ஆகி விடும்.
அபி மாநிறத்துக்கு ஒரு படி குறைவாக இருப்பான். மிக மிக வசீகரமான கண்கள். அதனால் தானோ என்னவோ எல்லாப் பெண்களையும் கண்களால் மட்டுமே காதலிப்பான். இவன் டாவடிக்கும் பெண்கள் பெயர் எல்லாம் லட்சுமி என்றே முடியும். தற்செயலாகத் தான் அப்படி அமைந்து விடுகிறது என்று தலையிலடித்து சத்தியம் செய்கிறான். உண்மையாகத் தான் இருக்க வேண்டும். பெரும்பாலும் பேருந்தில் தொங்கிக் கொண்டும், திருவிழா கூட்டத்திலும், மிகச் சில சமயங்களில் அலுவலகங்களிலும் காதலிக்கும் அவனுக்கு அந்தப் பெண்களின் பெயரைக் கேட்டுத் தெரிந்து கொள்வது சாத்தியமில்லாதது.
இதுவரை எந்தப் பெண்ணிடமும் இவன் போய் காதலை சொன்னது இல்லை. அவர்கள் வந்து சொல்லவும் இவன் சந்தர்ப்பம் கொடுத்தது இல்லை. அந்தப் பெண் திருமண அழைப்பிதழை இவன் கையில் கொடுத்து விட்டு, 'தயவு செஞ்சு கல்யாணத்துக்கு வந்துடாதீங்க' என்று அழுது கொண்டே சொல்வது தான் அவர்கள் பேசிக் கொள்ளும் முதலும் கடைசியுமான வார்த்தையுமாக இருக்கும்.
கொஞ்சம் தைரியமான பெண்ணென்றால், 'வீட்டில் திருமண ஏற்பாடு நடக்கிறது. நாம் ஓடிப் போய் விடலாமா' என்று கேட்டே விடுவார்கள். அபி தங்கைக்கு இரண்டு லட்சம் ரொக்கமும், இருபத்தைந்து பவுன் நகையும் போட்டு திருமணம் செய்து வைத்திருக்கிறார்கள். அதில் பாதியையாவது தன் திருமணத்தில் வசூலித்து விட வேண்டும் என்ற தீர்மாணத்தில் இருப்பதால், அந்தப் பெண் மனம் புண் படாத அளவு, நயமாக எடுத்து சொல்லி திருப்பி அனுப்பி விடுவான். அடுத்த நாளிலிருந்து வேறு பெண்ணைப் பார்க்க ஆரம்பித்து விடுவான்.
காதலைப் புத்தகத்தோடும், பெண்களை அதன் சேப்டர்களுடனும் ஒப்பிட்டு பேசுவான். ஏன் யாரையும் காதலிப்பதில்லை என்று கேட்டால், 'புத்தகத்தை ஆரம்பத்திலிருந்தே தலைகீழாக படிக்க ஆரம்பித்து விட்டேன்' என்பான்.
ஒரு நாள் எங்கள் வீட்டில் யாருமில்லாத போது பீர் அடித்த படி, ஷா அவனுடைய குஜால் கதைகளை சொல்லிக் கொண்டிருந்த போது வாயை வைத்துக் கொண்டு சும்மா இல்லாமல், நீ ஏன் அடுத்த கட்டத்துக்கு போவதில்லை என்று அபியிடம் கேட்டு விட்டேன்.
அதற்கு அபி, 'ஒரு புள்ளையைப் பிடிச்சிருந்தா பாக்கறேன். நான் பாக்குறது தெரிஞ்சதும் அந்தப் புள்ள பண்ற அலும்பலை ரசிக்கிறேன். அதைக் காதல்னு நினைச்சுகிட்டு என் கிட்ட வந்து பேசினா, அடுத்த நாள் வேற புள்ளையைப் பாக்க ஆரம்பிக்கிறேன். மத்தபடி, ஷா போல அடுத்த கட்டமெல்லாம் வேணும்னா நான் ரூட்டு கிட்ட போய்க்குவேன்' என்றான்.
(ரூட் என்பது பொதுவாக பாலியல் தொழிலாளிகளைக் குறிக்கும் எங்கள் வட்டாரச் சொல்லா, அல்லது எங்கள் ஊர் பிரபல பாலியல் தொழிலாளி பரமேஷ்வரி அக்காவின் செல்லப் பெயரா என்று எனக்குத் தெரியவில்லை.)
எனக்குத் தெரிந்து, ஷா அவனுடன் பழகும் எந்தப் பெண்ணிடமும் அந்த அளவு வரம்பு மீறியதில்லை. அவன் தோழிகளை ரூட்டுடன் ஒப்பிட்டு பேசியதும் ஷாக்கு குப்பென கோபம் வந்து விட்டது. கால் கால் என்று கத்த ஆரம்பித்து விட்டான். ஷாக்கு ஆரம்பத்திலிருந்தே அபியின் இந்தப் போக்கு பிடிக்காது. இப்போது எல்லாக் கோபத்தையும் ஒட்டு மொத்தமாகக் கொட்டி விட்டான்.
அபியை அவ்வளவு எளிதில் கோபப்படுத்த முடியாது. புன்னகை மாறாமல் 'கூல் மச்சி' என்று சொல்லி வந்தவன், 'காதலிக்க வைச்சு கழுத்தறுக்குற sadist நீ. என்னைப் பத்தி பேச வந்துட்ட' என்று ஷா சொன்னதும் பொருமையை இழந்து விட்டான்.
அவனும் பதிலுக்கு விளாச ஆரம்பித்து விட்டான். இங்கு எழுத முடியாத அளவு காரசாரமாக சண்டையிட்டுக் கொண்டார்கள். அடித்துக் கொள்வார்களோ என்று பயம் வந்து விட்டது எனக்கு. 'பணக்காரத் திமிருல நாளுக்கு ஒரு புள்ள கூட சுத்துற' என்ற ரீதியில் அபி ஏதோ சொன்னதும், கோபம் தாங்காமல் பீர் பாட்டில்களை உடைத்து விட்டு மறுவார்த்தை பேசாமல் வேகமாகக் கிளம்பி விட்டான். ஓவர் மப்பில் பைக்கை ஏதாவது லாரியில் விட்டு விடுவானோ என்ற பயத்தில், அபியிடம் கை காட்டிவிட்டு ஷாவைக் கொண்டு போய் வீட்டில் விட்டு வந்தேன்.
அபியை சேடிஸ்ட் என்ற வார்த்தையும், ஷாவை பணக்காரத் திமிர் என்ற வார்த்தையும் அதிகம் காயப்படுத்தி விட்டன. இந்த சம்பவத்துக்குப் பிறகு இருவரும் பேசிக் கொள்வதில்லை. நானும் ஒருவரைப் பற்றி மற்றவரிடம் பேசுவதில்லை. நான் அவர்களை சந்திப்பதும் வெகுவாகக் குறைந்து விட்டது. அவர்கள் பிரிந்திருக்காவிட்டால் ஷாவும் என் ஆள் கேட்டியைக் காதலித்திருக்க மாட்டான். நானும் வலைப்பூ எழுத வந்திருக்க மாட்டேன்.
ஷா எத்தனையோ பெண்களிடம் வரம்பு மீறியிருந்தாலும் 'இது காதல் அல்ல' என்று ஆரம்பத்திலேயே தெளிவாக சொல்லி விடுவான். ஆனால் அபி எந்தப் பெண்ணின் ஆடை நுனியைக் கூட இதுவரைத் தொட்டதில்லை என்றாலும், அவன் பார்க்கும் பார்வையும், புன்னகையையும் எந்தப் பெண்ணும் காதல் என்று அர்த்தம் செய்து கொள்ளும்படி தான் இருக்கும்.
இருவரில் யார் மீது அதிகம் தவறோ, அவனை சமாதானப்படுத்தி மற்றவனுடன் பேச வைக்க முயற்ச்சிக்கலாம் என்று நினைக்கிறேன். ஆனால் யார் மீது அதிகம் தவறென்று எனக்குத் தெரியவில்லை. உங்களுக்குத் தெரிந்தால் தயவுசெய்து சொல்லுங்களேன்.
இதன் முதல் பாகத்தை இங்கே படிக்கலாம்.
8 மச்சீஸ் சொல்றாங்க:
முதல் பாகத்தை இன்னும் படிக்கலை. படிச்சுட்டு கருத்து சொல்றேன்
//இருவரில் யார் மீது அதிகம் தவறோ, அவனை சமாதானப்படுத்தி மற்றவனுடன் பேச வைக்க முயற்ச்சிக்கலாம் என்று நினைக்கிறேன். ஆனால் யார் மீது அதிகம் தவறென்று எனக்குத் தெரியவில்லை. உங்களுக்குத் தெரிந்தால் தயவுசெய்து சொல்லுங்களேன்.//
இப்பவே கண்ண கட்டுதே ?
இது தான் போட்டு வாங்கர்ர்த்த....
விஜய்
(பார்ப்பதற்க்கு அபிஷேக் பச்சன் போல் வாட்ட சாட்டமாக இருப்பான்)
அமிதாபச்சன் + ஜெயபாதுரி - Talent = அபிஷேக்பச்சன். ( தமாஷு தல )
அப்புறம் நண்பர்களுக்கிடையில் சில சந்தர்ப்பங்களில் வீண் விவாதம் முற்றி பிரச்சனை வரத்தான் செய்யும். மீண்டும் ஒரு சூழலை ஏற்படுத்துங்கள் இருவரும் சந்தித்துக் கொண்டு தங்கள் தவறை தாமே உணர்வதற்கு.
/*சென்ஷி said...
முதல் பாகத்தை இன்னும் படிக்கலை. படிச்சுட்டு கருத்து சொல்றேன் */
அடக் கொடுமையே!? :-(
சரி படிச்சுட்டு வாங்க.. :-)
/*Anonymous said...
இப்பவே கண்ண கட்டுதே ?
இது தான் போட்டு வாங்கர்ர்த்த....
விஜய்*/
வொய் கண்ணு கட்டிங்? யா.. திஸ் இஸ் கால்ட் த கிவ் அண்ட் டேக் பாலிஸி..
/*S.A. நவாஸுதீன் said...
அமிதாபச்சன் + ஜெயபாதுரி - Talent = அபிஷேக்பச்சன். ( தமாஷு தல ) */
என்னங்க நவாஸுதீன் இப்படி சொல்லிட்டீங்க? அபிஷேக்கின் உடல் மொழி, நகைச்சுவை உணர்வு, குரல் வளம் (Bluff master என்ற படத்தில் செமையாக ஒரு ராப் பாடல் கூட பாடியிருக்கிறார்) எல்லாம் எனக்கு ரொம்ப பிடிக்கும்.
/* அப்புறம் நண்பர்களுக்கிடையில் சில சந்தர்ப்பங்களில் வீண் விவாதம் முற்றி பிரச்சனை வரத்தான் செய்யும். மீண்டும் ஒரு சூழலை ஏற்படுத்துங்கள் இருவரும் சந்தித்துக் கொண்டு தங்கள் தவறை தாமே உணர்வதற்கு. */
நன்றி நவாஸ் :-)
mmmmm.....
ஆ! ஒரே ஃபீலிங்க்ஸா இருக்கே!
//ஷாவும் என் ஆள் கேட்டியைக் காதலித்திருக்க மாட்டான். நானும் வலைப்பூ எழுத வந்திருக்க மாட்டேன்.//
உங்களுக்கு மட்டுமில்ல, எங்களுக்கும் வில்லனா வந்தது இந்த 'ஷா' தானா? :-))) சரி என்னதான் முடிவு செஞ்சிங்க?
சித்ரா
/* நான் ஆதவன் said...
mmmmm..... */
வாட் mmmmm? பாடுறீங்களோ?
/* Anonymous said...
ஆ! ஒரே ஃபீலிங்க்ஸா இருக்கே! */
வந்ததே லேட்..
/* உங்களுக்கு மட்டுமில்ல, எங்களுக்கும் வில்லனா வந்தது இந்த 'ஷா' தானா? :-))) */
சரி.. சரி.. இது சபை..
/*சரி என்னதான் முடிவு செஞ்சிங்க? */
இது சம்மந்தமா லட்சோப லட்சம் பேரின் பின்னூட்டமும் மெயிலும் குவியுது.. அதெல்லாத்தையும் படிச்சுப் பாத்துட்டு தான் முடிவுக்கு வரனும். நீங்க ஒரு முடிவுமே சொல்லலையே சித்ரா :-(
50 வது பதிவிற்கு வாழ்த்துக்கள் சோம்பேறி :)
Post a Comment
தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு.