32. உங்களுக்கும் நமீதாவுக்கும் ஒரு இதுவாமே?

Tuesday, 16 June 2009

Views

முப்பதிரண்டு கேள்விகளில் சில எனக்கு உவப்பாக இல்லாததால், வேறு கேள்விகளால் ரீப்ளேஸ் செய்திருப்பதற்காக, தொடரை ஆரம்பித்த நிலாவும் அம்மாவும் அவர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். என்னை அழைத்த சென்ஷிக்கு மன்னிப்பு தமிழில் பிடிக்காத வார்த்தை என்பதால் அவரிடம் மாஃப் கரோ ஜி என்று கேட்டுக் கொள்கிறேன்.

கே : உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?

சோம்பேறி : Its not that i'm lazy. Its just i dont care. இதை யாரும் சரியாகப் புரிந்து கொள்வதில்லை அல்லது எனக்கு புரிய வைக்கத் தெரியவில்லை என்பதால், இந்தப் பெயர் அறவே பிடிக்கவில்லை. பிரபல பதிவர்ர்ர்ர் என்று பெயரை மாற்றிக் கொள்ள இருக்கிறேன்.

நிஜப் பெயர் : என் அப்பா, பிரபல பிண்ணனிப் பாடகருடைய குரலில் மயங்கி எனக்கு இந்தப் பெயர் வைத்தார்கள். எனக்கு பேச வந்ததும் என் குரலைக் கேட்டு அரண்டு எம்.ஆர்.ராதா என்று பெயரிட்டிருக்கலாம் என்று புலம்பினார்களாம்.

கே : உங்களுக்கும் நமீதாவுக்கும் ஒரு இது என்று ஒரு இது வலையுலகில் பரபரப்பாக இதாகிறதே! உண்மையா?

(வழிகிறார்) ஹி ஹி.. ஓரளவு நிஜம் தான்..

கே : எந்த அளவு என்று அளந்து காட்ட முடியுமா?

(உட மாட்டீங்களேடா டேய் என்பது போல் முறைக்கிறார்) எனக்கு அவர் மேல் ஒரு இது என்பது வரை உண்மை

கே : உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

ரொம்ப பிடிக்கும். செம ஸ்டைலிஷாக இருக்கும். என் உதவி இல்லாமல் யாராலும் என் எழுத்தைப் படித்து விட முடியாது. சமயங்களில் என்னாலேயே படிக்க முடியாது.

கே : நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?

(கொஞ்சம் தள்ளி உட்கார்கிறார்) மாட்டேன்.

கே : நீங்கள் வேறு யாராவதாக இருந்தால் உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?

நிச்சயம் மாட்டேன். ஹாய் ஹலோ என்பதுடன் நிறுத்திக் கொள்வேன். அதீத அன்பு காட்டி சாவடிப்பதில் நான் ஒரு தீவிரவாதி.

கே : கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?

கடல் தான் பிடிக்கும். (அண்ணாந்து விட்டத்தைப் பார்க்கிறார்) மிகவும் பிடித்த ஒருவரின் கையைப் பிடித்துக் கொண்டு, ஒவ்வொரு அலை வரும் போதும் குதித்தும், மூழ்கியும் அலைகளை எதிர்கொள்ளும் விளையாட்டு ரொம்ப பிடிக்கும்.

உள்ளே போகும் அலைகளும் வெளிவரும் அலைகளும் சந்திக்கும் சீற்றமிகுந்த இடத்தில் நின்று கொண்டு, கீழே விழுந்து அலைகளால் இழுத்து செல்லப்படும் போதும் ஒருவர் கையை மற்றவர் விடாமல் இறுக பற்றிக் கொண்டிருப்பது...

கே : ('போதும். நிறுத்து' என்பது போல் இடை மறிக்கிறார்) முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

புன்னகை. அதன் விசாலத்தை வைத்து, அவர் எந்த அளவு நம் நட்பை விரும்பிகிறார் என்பதை புரிந்து கொள்ளலாம்.

கே : உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விஷயம் எது?

பிடித்தது : இன்னும் மூன்று மாதங்கள் கழித்து சொல்கிறேன்.
பிடிக்காதது : இன்னும் ஆறு மாதங்கள் கழித்து சொல்கிறேன்.

கே : (ரொம்ப முக்கியம் எங்களுக்கு) யார் பக்கத்தில் இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்?

நமீதா மற்றும் ஆஸ்ட்ரேலியாவிலிருக்கும் என் யக்கா மவ.

கே : திமுக தில்லியில் 16 சீட்கள் பெற்றது பற்றி..

அடங்கொன்னியா.. நெசமாவா? இது தெரியாம போன வாரம் நான் டெல்லி போனப்போ அன்ரிசர்வேஷன்ல பாத்ரூம்ல உக்காந்துகிட்டு வந்தேனேப்பா.. தெரிஞ்சிருந்தா அவங்க கைல கால்ல விழுந்தாவது ஒரு சீட் கேட்டு வாங்கி, அதில ஒண்டிகிட்டு போயிருப்பேன்.

கே : (உன் அரசியல் அறிவுல தீயை வச்சு கொழுத்த என்பது போல் முறைக்கிறார்) தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா? அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்? (டயர்டாகி மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்குகிறார். தண்ணீர் குடிக்கிறார்.)

இல்லை. தெரியாது.

கே : வர்ண பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?

வெளித் தோற்றம் எப்படி இருந்தால் என்ன? வெள்ளை நிற மையுடய பேனாவாக மாற விரும்புகிறேன். தவறுகளைத் திருத்த உதவும் என்பதால்.

கே : (தோடா.. தத்துவவியாதினு நெனப்பு மனசுல) உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு?

சென்ஷியின் 'வாயில் உமிழ்ந்தால் முத்தமா' என்ற கவிதை. ரொம்ப ஆழ்ந்து சிந்திக்க வைத்தது.

(படிக்காதவன் படத்தில் ரஜினி, ஆட்டுத் தலையுடன் குழந்தை பிறந்தது என்று கேள்விப் பட்டதும், ஆட்டுத் தலையோட எப்படி? முதல்ல ஆட்டோட எப்படி? என்று ஆழ்ந்து சிந்திப்பாரே அந்த ரீதியில்.)

கே : கந்தசாமி படத்தில் ஷ்ரேயா அணிந்த ஒரு உடையின் விலை ஒரு கோடியாமே!

(பெருமூச்சு விடுகிறார்) வர வர கர்சீப்பின் விலை அதிகமாகிக் கொண்டே வருகிறது.

கே : வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?

டெல்லி, ஷிம்லா, டார்ஜிலிங் போயிருக்கிறேன். எது அதிகபட்ச தொலைவு என்று தெரியவில்லை. ஷிம்லா மலை உச்சியிலிருந்து சீனா தெரிந்ததால் அது தான் அதிகபட்ச தொலைவு என்று நினைக்கிறேன்.

கே : உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

வாழ்க்கையைப் பற்றிய பயத்தை (யதார்த்தத்தை) எனக்குள் திணிக்க முயல்வது. (ஆனால் துரதிர்ஷ்டவசமாக என்னுடன் பழக ஆரம்பித்த சில நாட்களிலேயே எல்லாரும் அட்வைஸ் அம்புஜங்களாகவும், அறிவுரை ஆறுமுகங்களாகவும் மாறி விடுகிறார்கள்)

கே : உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

யாரையாவது கலாய்க்காவிட்டால் கையெல்லாம் நடுங்க ஆரம்பித்து விடுகிறது :-)

சீரியஸாக பதிலளிப்பது என்றால், ஏராளமான சாத்தான்கள் இருக்கின்றன. நமது நாதாரி சமுதாயம் எதையும் அவ்வளவு சீக்கிரம் தலை தூக்க விடுவதில்லை.

(எந்த நம்பிக்கையில் இப்படி ஒரு கேள்வி கேட்கிறீர்கள் என்று தெரியவில்லை. நான் ரொம்ம்ம்ம்ப நல்லவன் என்ற நமக்கு தெரிந்த யாரும் நம்மைப் பற்றி நம்பாத ஒரு தோற்றத்தை உருவாக்குவதற்கே சிலர் வலைப்பூ எழுதி வருகிறார்கள்(றோம்!?))

கே : எப்படிப்பட்ட திரைப்படம் பிடிக்கும்?

ஜாக்கி சான் படங்கள்

கே : (உஷாராகக் கொஞ்சம் நகர்ந்து உட்கார்கிறார்) உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?

வெனிஸ். தமிழக வெனிஸ் அல்ல நிஜ வெனிஸ். (கிரேக்கத்தில் இருக்கிறது என்று நினைக்கிறேன்)

கே : உங்களுக்கு பிடித்த சத்தம்? பிடிக்காத சத்தம்?

பிடித்தது : பல வருடங்களுக்குப் பிறகு சர்ப்ரைஸாக தொலைபேசி, 'நான் யாருனு கண்டுபுடி பாக்கலாம்' என்று கேட்கும் நண்பர்களின் குரல்.

பிடிக்காதது : பேருந்து, ஆட்டோக்களின் ஹாரன் சத்தங்களைக் கேட்கும் போது, டிரைவரின் பொடனியில் ஒரு போடு போடலாம் போல் இருக்கும். சமயத்தில் ரொம்ப டென்ஷனாகி இளைய தளபதி போல 'ஏஏஏஏஏஏஏய். சைலன்ஸ்' என்று கத்தி விடுவேன்.

கே : பிடித்த விளையாட்டு?

ஷக்தி குட்டியுடன் சொப்பு வைத்து விளையாடுவது.

கே : எப்படி விளையாடுவது?

முதலில் உங்களிடம் இருக்கும் அண்டா குண்டா மற்றும் இன்ன பிற பொம்மைகளையும் சா பூ த்ரீ அல்லது டிக் டாக் டோ போட்டு பிரித்துக் கொள்ளவும்.

அறையை இரண்டாகப் பிரித்து ஆளுக்கு பாதி எடுத்துக் கொண்டு, உங்களுக்குக் கிடைத்த பொருட்களால் உங்கள் இடத்தை அழகாக அடுக்கவும்.

அடுத்து 'அக்கா.. அக்கா.. நாங்க பக்கத்து வீட்டுக்கு புதுசா குடி வந்திருக்கோம். எங்க வீட்டுக்கு வாங்களேன்' என்று மற்றவருக்கு அழைப்பு விடுக்கவும்.

கே : இப்படி மாய்ந்து மாய்ந்து பதிவுகள் எழுதுகிறீரே. நீங்கள் எழுதியதை நீங்களே என்றாவது படித்துப் பார்ப்பதுண்டா?

நோ கமெண்ட்ஸ்.

கே : நீங்கள் பதிவர் ஆகாவிட்டால் என்ன ஆகியிருப்பீர்கள்?

ம்க்கும். நமீதாவின் குழந்தைக்கு அப்பா ஆகியிருப்பேன் என்றால் நம்பவா போகிறீர்கள்?

கே : நீங்கள் தான் அடுத்த பதிவுலக சூப்பர் ஸ்டார் என்று பரவலாக பேசப்படுகிறதே!

(கெக்கெபிக்கே என்று சிரிக்கிறார். உடம்பெல்லாம் புல்லரிக்கிறது) சரியாகக் காதில் விழவில்லை. இன்னொரு முறை சொல்ல முடியுமா?

கே : நீங்கள் தான் அடுத்த பதிவுலக சூப்பர் ஸ்டார் என்று பரவலாக பேசப்படுகிறதே என்று கேட்டேன்.

(ராகமாக) இன்னோரு முறை சொல்லுங்க..

கே : (காண்டாகி முறைக்கிறார். பல்லைக் கடித்தபடி) நீங்கள் தான் அடுத்த பதிவுலக சூப்பர் ஸ்டார் என்று பரலாக பேசப்படுகிறதே!

(ஆமானு சொன்னா அடி விழுமோ என்ற பயத்துடன்) இல்லை. இட்லிவடையின் தாக்கத்தில் இட்டாலிவடை என்று ஒரு பதிவர் வந்தது போல, சோம்பேறி என்ற என் பெயர் தாக்கத்தில் சோமாறி என்று ஒரு பதிவர் எப்போது வருகிறாரோ அன்று தான் நான் சூப்பர் ஸ்டார் என்று ஒப்புக் கொள்வேன்.

கே : நீங்க அழைக்கப் போகும் நபர்கள் யார் யார்? ஏன் உங்களுக்கு அவர்களை பிடித்து உள்ளது. அவர்களை அழைக்கக் காரணம் என்ன?

ஜாக்கி சான் - அழகாக அந்தரத்தில் பல்டி அடிப்பதால் (பல்டி அடித்துக் காட்டுகிறார்)

ரஜினி காந்த் - அழகாக அந்தர் பல்டி அடிக்கிறார் என்பதால் அல்ல.. சாரு நிவேதிதாவை அழைக்க இருப்பதால்..

சாரு நிவேதிதா - லக்கிலுக்கை அழைக்க இருப்பதால்..

நமீதா - என் ஃபாலோயர்கள் அனைவரையும் அழைக்க இருப்பதால்..

55 மச்சீஸ் சொல்றாங்க:

சென்ஷி said...

அய்யோ.. சிரிச்சு சிரிச்சு வயிறு வலி எடுக்குது. முடியலை. இப்படியா கும்முறது.. :)))))

சென்ஷி said...

//பிடித்தது : இன்னும் மூன்று மாதங்கள் கழித்து சொல்கிறேன்.
பிடிக்காதது : இன்னும் ஆறு மாதங்கள் கழித்து சொல்கிறேன்.//

செம்ம ரவுசு :)

♫சோம்பேறி♫ said...

டேங்க்ஸ் சென்ஷி.. :-)

சென்ஷி said...

//கே : எப்படி விளையாடுவது?

முதலில் உங்களிடம் இருக்கும் அண்டா குண்டா மற்றும் இன்ன பிற பொம்மைகளையும் சா பூ த்ரீ அல்லது டிக் டாக் டோ போட்டு பிரித்துக் கொள்ளவும்.

அறையை இரண்டாகப் பிரித்து ஆளுக்கு பாதி எடுத்துக் கொண்டு, உங்களுக்குக் கிடைத்த பொருட்களால் உங்கள் இடத்தை அழகாக அடுக்கவும்.

அடுத்து 'அக்கா.. அக்கா.. நாங்க பக்கத்து வீட்டுக்கு புதுசா குடி வந்திருக்கோம். எங்க வீட்டுக்கு வாங்களேன்' என்று மற்றவருக்கு அழைப்பு விடுக்கவும்.//

க்ளாஸ் ;)

rapp said...

கலக்கல், கலக்கல், கலக்கல்:):):)ஒவ்வொரு பதிலும் சும்மா சூப்பரோ சூப்பர்:):):)

rapp said...

//முதலில் உங்களிடம் இருக்கும் அண்டா குண்டா மற்றும் இன்ன பிற பொம்மைகளையும் சா பூ த்ரீ அல்லது டிக் டாக் டோ போட்டு பிரித்துக் கொள்ளவும்.

அறையை இரண்டாகப் பிரித்து ஆளுக்கு பாதி எடுத்துக் கொண்டு, உங்களுக்குக் கிடைத்த பொருட்களால் உங்கள் இடத்தை அழகாக அடுக்கவும்.

அடுத்து 'அக்கா.. அக்கா.. நாங்க பக்கத்து வீட்டுக்கு புதுசா குடி வந்திருக்கோம். எங்க வீட்டுக்கு வாங்களேன்' என்று மற்றவருக்கு அழைப்பு விடுக்கவும்.//

இவ்ளோ நாள் எனக்கிது தெரியாது. கொயந்தயா இருந்தப்போக் கூட சும்மா எல்லாத்தையும் அடுக்கி கலச்சுன்னு வெள்ளாடறதுதான்.

சென்ஷி said...

//வெளித் தோற்றம் எப்படி இருந்தால் என்ன? வெள்ளை நிற மையுடய பேனாவாக மாற விரும்புகிறேன். தவறுகளைத் திருத்த உதவும் என்பதால்.//

சோம்பேறிக்குள்ள இப்படி ஒரு சோமாறியா :))

☀நான் ஆதவன்☀ said...

யப்பா சாமி முடியல...

சென்ஷி said...

//கே : கந்தசாமி படத்தில் ஷ்ரேயா அணிந்த ஒரு உடையின் விலை ஒரு கோடியாமே!

(பெருமூச்சு விடுகிறார்) வர வர கர்சீப்பின் விலை அதிகமாகிக் கொண்டே வருகிறது.//

LOL :)

சென்ஷி said...

//
ரஜினி காந்த் - அழகாக அந்தர் பல்டி அடிக்கிறார் என்பதால் அல்ல.. சாரு நிவேதிதாவை அழைக்க இருப்பதால்..

சாரு நிவேதிதா - லக்கிலுக்கை அழைக்க இருப்பதால்..//

ஒரே நேரத்துல எல்லோருக்கும் எப்படித்தான் ஆப்பு வைக்குறீங்க :)

☀நான் ஆதவன்☀ said...

மவனே எவனாவது இனி சோம்பேறிய தொடர் பதிவுக்கு கூப்பிடுவீங்க???

சென்ஷி said...

//நான் ஆதவன் said...

மவனே எவனாவது இனி சோம்பேறிய தொடர் பதிவுக்கு கூப்பிடுவீங்க???
//

ஏன்.. ஏன் இந்த கொல வெறி.. ஏதோ நம்ம பயன்னு விட்டுட்டுப்போவியா. அதில்லாம இப்படி அரிவாள தூக்குறது ட்டூ பேட்!

☀நான் ஆதவன்☀ said...

//முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

புன்னகை. அதன் விசாலத்தை வைத்து, அவர் எந்த அளவு நம் நட்பை விரும்பிகிறார் என்பதை புரிந்து கொள்ளலாம்.//

சாவு வீட்ல முதன் முதலா ஒருத்தரைப் பார்த்தீங்கன்னா?

♫சோம்பேறி♫ said...

/* rapp said...
கலக்கல், கலக்கல், கலக்கல்:):):)ஒவ்வொரு பதிலும் சும்மா சூப்பரோ சூப்பர்:):):) */

மிகவும் நன்றி rapp..

/* கொயந்தயா இருந்தப்போக் கூட சும்மா எல்லாத்தையும் அடுக்கி கலச்சுன்னு வெள்ளாடறதுதான். */

நான் இன்னும் கொயந்த தானுங்கோ..

♫சோம்பேறி♫ said...

/* நான் ஆதவன் said...
யப்பா சாமி முடியல...
மவனே எவனாவது இனி சோம்பேறிய தொடர் பதிவுக்கு கூப்பிடுவீங்க??? */

அவ்வ்வ்வ்வ்.. நான் இப்போ இன்னா பன்னுச்சுனு நீங்க டெம்பராவுது? சென்ஷி சொல்றதக் கேட்டு நல்ல புள்ளையா நடக்கப் பாருங்க..

☀நான் ஆதவன்☀ said...

//உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு?

சென்ஷியின் வாயில் உமிழ்ந்தால் முத்தமா என்ற கவிதை. ரொம்ப ஆழ்ந்து சிந்திக்க வைத்தது.//

சீக்கிரம் வெளிய வந்து உங்களுக்கு பிடிச்ச கடல்(ல) குளியல் ஒன்னு போடுங்க

♫சோம்பேறி♫ said...

/* சென்ஷி said...
ஏன்.. ஏன் இந்த கொல வெறி.. ஏதோ நம்ம பயன்னு விட்டுட்டுப்போவியா. அதில்லாம இப்படி அரிவாள தூக்குறது ட்டூ பேட்! */

ஆமா சென்ஷி ஹீ இஸ் டூ பேட். ஒரு தனி பதிவு போட்டு ஆதவனைக் கலாய்ச்சிடலாமா?

♫சோம்பேறி♫ said...

நான் ஆதவன் said...
சாவு வீட்ல முதன் முதலா ஒருத்தரைப் பார்த்தீங்கன்னா? */

அவரு பொனமா படுத்திருந்தா கூட என்னைப் பாத்து சிரிச்சே ஆவனும்.

S.A. நவாஸுதீன் said...

யப்பா சிரிச்சு சிரிச்சு வயிறு புண்ணா போச்சுங்க. ஒவ்வொரு பதிலும் செம கலக்கல். ஆபிஸ்ல எல்லாரும் என்னை ஒரு மாதிரியா பார்க்க வச்சிட்டீங்களே தல. அசத்தலோ அசத்தல்.

வெற்றி-[க்]-கதிரவன் said...

-:)

நட்புடன் ஜமால் said...

32க்கு ஒரு அருமை வடிவம் கொடுத்துட்டியள்

சிரிக்க வைத்ததிற்கு நன்றி

S.A. நவாஸுதீன் said...

முப்பத்தி ரெண்டுல நூத்துக்கு நூறு உங்களுக்கு தான் தல

♫சோம்பேறி♫ said...

/* S.A. நவாஸுதீன் said...
யப்பா சிரிச்சு சிரிச்சு வயிறு புண்ணா போச்சுங்க. */

உங்க 32 பதில்களைப் பார்த்து என் கண்ணெல்லாம் தண்ணியாப் போச்சு நவாஸ்..

/* முப்பத்தி ரெண்டுல நூத்துக்கு நூறு உங்களுக்கு தான் தல */

உங்கள் பதில்களுக்கு நூத்துக்கு நூத்தி முப்பத்திரண்டு. வீட்டுக்கு தொலைபேசும் போது உங்கள் குழந்தைகளைக் கேட்டதாக சொல்லுங்க.

♫சோம்பேறி♫ said...

/* பித்தன் said... -:) */

:-)))))))))))

/* நட்புடன் ஜமால் said...
32க்கு ஒரு அருமை வடிவம் கொடுத்துட்டியள்
சிரிக்க வைத்ததிற்கு நன்றி */

பாராட்டுக்கு நன்றி ஜமால்.

நிகழ்காலத்தில்... said...

32 கேள்விக்கு அல்லாரும் ஒயிங்கா பதில் சொன்னா
நீ இன்னாபா உன்னோட சவுரியத்துக்கு மாத்திகீற.,

பிரபலம்னு நின்ப்பா

ஆனாலும் டமாசா இருக்குதுப்பா

----சோமாறி

♫சோம்பேறி♫ said...

/* நிகழ்காலத்தில்... said...
32 கேள்விக்கு அல்லாரும் ஒயிங்கா பதில் சொன்னா
நீ இன்னாபா உன்னோட சவுரியத்துக்கு மாத்திகீற.,

பிரபலம்னு நின்ப்பா */

அட.. ஆமா தெய்வமே.. பிரபலம் தான். அதான் பேரைக் கூட பிரபல பதிவர்ர்ர்ர்ர்னு மாத்திக்க போறேன்..

/* ஆனாலும் டமாசா இருக்குதுப்பா */

ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்ப்பா.. நன்றிங்கோ..

-----பிரபல பதிவர்ர்ர்ர்ர்

குடுகுடுப்பை said...

கே : (காண்டாகி முறைக்கிறார். பல்லைக் கடித்தபடி) நீங்கள் தான் அடுத்த பதிவுலக சூப்பர் ஸ்டார் என்று பரலாக பேசப்படுகிறதே!

(ஆமானு சொன்னா அடி விழுமோ என்ற பயத்துடன்) இல்லை. இட்லிவடையின் தாக்கத்தில் இட்டாலிவடை என்று ஒரு பதிவர் வந்தது போல, சோம்பேறி என்ற என் பெயர் தாக்கத்தில் சோமாறி என்று ஒரு பதிவர் எப்போது வருகிறாரோ அன்று தான் நான் சூப்பர் ஸ்டார் என்று ஒப்புக் கொள்வேன்.

//

நீங்களே சோமாறி, அப்புறம் பிரபலந்தான்.

வெட்டிப்பயல் said...

//சென்ஷியின் வாயில் உமிழ்ந்தால் முத்தமா//

பார்த்து கொஞ்சம் கமா எல்லாம் போடுங்கப்பா :)

இல்லைனா இப்படி மாத்துங்க, சென்ஷியின், "வாயில் உமிழ்ந்தா முத்தமா?"

வெட்டிப்பயல் said...

Post Kalakal :)

Anonymous said...

பதில்களும், தானே கேள்வி- தானே பதில் எல்லாமே கலக்கல். :-)))))))

//S.A. நவாஸுதீன் said...
முப்பத்தி ரெண்டுல நூத்துக்கு நூறு உங்களுக்கு தான் தல//

கிர்ர்ர்ர்ர்ர் .. இதெல்லாம் ரொம்ப அநியாயம் ;-)))) மொத்தம் 29 கேள்விகள்தான் இருக்கு. அதிலயும் ரீப்ளேஸ் கேள்விகள் வேற.

சித்ரா

Vijay Anand said...

//கே : வர்ண பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?

வெளித் தோற்றம் எப்படி இருந்தால் என்ன? வெள்ளை நிற மையுடய பேனாவாக மாற விரும்புகிறேன். தவறுகளைத் திருத்த உதவும் என்பதால். //

ஆஹா ... என்ன ஒரு ஆழமன கருத்து....

மனுநீதி said...

//கே : நீங்கள் பதிவர் ஆகாவிட்டால் என்ன ஆகியிருப்பீர்கள்?

ம்க்கும். நமீதாவின் குழந்தைக்கு அப்பா ஆகியிருப்பேன் என்றால் நம்பவா போகிறீர்கள்//

ஏன் சோம்பேறி ஒண்ணோட நிறுத்திடீங்க. நல்ல (குடும்ப) கட்டுப்பாடோட (:P) இருக்கீங்க .


//கிரேக்கத்தில் இருக்கிறது என்று நினைக்கிறேன் //

வெனீஸ் இத்தாலியில் இருக்கிறது.

♫சோம்பேறி♫ said...

/* குடுகுடுப்பை said...
நீங்களே சோமாறி */

கிர்ர்ர்ர்ர்.. நான் ரௌடியும் தான்.

/* அப்புறம் பிரபலந்தான். */

இதை ஒத்துக்கிட்டதால சும்மா விடுறேன் குடுகுடுப்பையாரே.. இல்லைனா சோடா பாட்டில் பறந்திருக்கும்.

♫சோம்பேறி♫ said...

/* வெட்டிப்பயல் said...
//சென்ஷியின் வாயில் உமிழ்ந்தால் முத்தமா//
பார்த்து கொஞ்சம் கமா எல்லாம் போடுங்கப்பா :)
இல்லைனா இப்படி மாத்துங்க, சென்ஷியின், "வாயில் உமிழ்ந்தா முத்தமா?"

அட.. ஆமால்ல. ஆனாலும் கொஞ்சம் ஆழமாக (ஒரு 500 அடி) சிந்திந்துப் பார்த்தால், நான் சொன்னதும் உண்மை தானே ஜி. இருந்தாலும் மாற்றி விடுகிறேன்.

/* Post Kalakal :) */

நன்றி பாலாஜி.

♫சோம்பேறி♫ said...

/* Anonymous said...
பதில்களும், தானே கேள்வி- தானே பதில் எல்லாமே கலக்கல். :-))))))) */

டேங்க்ஸ் சித்ரா. :-)

/* கிர்ர்ர்ர்ர்ர் .. இதெல்லாம் ரொம்ப அநியாயம் ;-)))) மொத்தம் 29 கேள்விகள்தான் இருக்கு. அதிலயும் ரீப்ளேஸ் கேள்விகள் வேற. சித்ரா */

32 இருந்தது. யாராவது அடிக்க வந்துடுவாங்களோன்ற பயத்தில கடைசி நேரத்தில மூனு கேள்விய டெலிட் பண்ணிட்டேன்.

(விடுங்க பாஸ். இதையெல்லாம் யாரும் நோட் பண்ணிடக் கூடாதுனு தான் question numbers அழிச்சேன். நீங்க ஷார்ப் தான். இனிமே உஷாரா இருந்துக்கறேன்)

♫சோம்பேறி♫ said...

/* Vijay Anand said...
வெளித் தோற்றம் எப்படி இருந்தால் என்ன? வெள்ளை நிற மையுடய பேனாவாக மாற விரும்புகிறேன். தவறுகளைத் திருத்த உதவும் என்பதால். //
ஆஹா ... என்ன ஒரு ஆழமன கருத்து.... */

பாத்துக்கோங்க மக்களே! கருத்தெல்லாம் சொல்றேன். இனிமே என்னை எல்லாரும் சோம்பேறியானந்தா.. சோம்பேறியானந்தானு கூப்பிடனும். (பசங்க ஜீவா ஸ்டைலில் படிக்கவும்)

♫சோம்பேறி♫ said...

/* மனுநீதி said...
ம்க்கும். நமீதாவின் குழந்தைக்கு அப்பா ஆகியிருப்பேன் என்றால் நம்பவா போகிறீர்கள்//
ஏன் சோம்பேறி ஒண்ணோட நிறுத்திடீங்க. நல்ல (குடும்ப) கட்டுப்பாடோட (:P) இருக்கீங்க . */

அய்யா மனுநீதி.. நமீதா ஒருத்தரோட நிறுத்திட்டேன்னு சொல்றீங்களா! பேபி ஒன்னோட நிறுத்திட்டேன்னு சொல்றீங்களா? எதுவா இருந்தாலும் இது இப்போதைய நிலவரம் தான். யூ டோண்ட் வொர்ரி பேபி.

/* வெனீஸ் இத்தாலியில் இருக்கிறது. */

என் புவியியல் அறிவுல புண்ணாக்கை வைக்க.

Anonymous said...

u are the superstar because i am somari

சென்ஷி said...

//என் புவியியல் அறிவுல புண்ணாக்கை வைக்க.//

அய்யய்யோ.. அப்போ மாட்டுக்கு என்னத்த வைக்குறது??!!

Kathir said...

ரொம்ப நல்லா இருந்ததுங்க...

♫சோம்பேறி♫ said...

/* Anonymous said...
u are the superstar because i am somari */

ரொம்ப நன்றி அனானி.. (ஆத்தா.. நான் சூப்பர் ஸ்டார் ஆயிட்டேன்.)

♫சோம்பேறி♫ said...

சென்ஷி said...
//என் புவியியல் அறிவுல புண்ணாக்கை வைக்க.//
அய்யய்யோ.. அப்போ மாட்டுக்கு என்னத்த வைக்குறது??!!

ஏதோ ரைமிங்கா வருதே சொன்னா, உடனே PHD ரேஞ்சுக்கு ஆராய்ச்சி பண்ண ஆரம்பிச்சுட்டீங்களே!

/* Kathir said...
ரொம்ப நல்லா இருந்ததுங்க... */

நன்றி கதிர். ரொம்ப சந்தோஷமா இருக்குதுங்க..

Anonymous said...

இட்லி வடை உங்களையும் கலாய்ச்சிருக்காங்க பாத்திங்களா? :-) இட்லிவடை உங்க நண்பர்ன்னு நீங்க சொன்னது உண்மையா இருக்கும் போலருக்கே....? :-))))))

சித்ரா

மனுநீதி said...

என்னது சோம்பேறிய கலாய்த்து பதிவா.. தயவு செஞ்சு அந்த லிங்க கொடுங்க.

இதுக்காக நெறைய பேர் வெயிடிங் .. சென்ஷி எங்கே இருக்கீங்க ...

Anonymous said...

இட்லிவடை பொதுவா இந்த '32 கேள்விகள்' தொடர் பதிவை கலாய்ச்சிருக்காங்க. அதில நம்ம 'சோம்பேறி' பேரும் ஒரு இடத்துல இருந்தது. அதனால சும்மா சோம்பேறிய கலாய்க்க, அந்த கமென்ட். :-))

சித்ரா

♫சோம்பேறி♫ said...

/*Anonymous said...

இட்லி வடை உங்களையும் கலாய்ச்சிருக்காங்க பாத்திங்களா? :-) இட்லிவடை உங்க நண்பர்ன்னு நீங்க சொன்னது உண்மையா இருக்கும் போலருக்கே....? :-))))))

சித்ரா */

ஆமாங்க சித்ரா.. பதிலுக்கு இட்லிவடையை செமையா கலாய்ச்சிடலாம்.

(சோம்பேறிங்கற பெயருக்கே இத்தனை மவுசுனா, பிரபல பதிவர்னு பேர் வச்சுகிட்டா 'பிரபல பதிவரின் விதி, பிரபல பதிவரின் சதினு என் பேருல ஒரு நாளைக்கு எத்தனைப் பதிவு வரும்?)

♫சோம்பேறி♫ said...

/*மனுநீதி said...
என்னது சோம்பேறிய கலாய்த்து பதிவா.. தயவு செஞ்சு அந்த லிங்க கொடுங்க.
இதுக்காக நெறைய பேர் வெயிடிங் .. சென்ஷி எங்கே இருக்கீங்க */

மனுநீதி.. வொய் திஸ் கொலை வெறி? விட்டா சென்ஷியோட சேத்து ஆட்டோ ஷங்கர், வெல்டிங் குமாரு, அட்டாக் பாண்டி எல்லாரையும் கூட்டீட்டு வந்துடுவீங்க போல இருக்கே! :-)

Anonymous said...

அட , விஷயமே உங்களுக்கு தெரியாதா? ஏற்கனவே நாந்தான் 'பிரபல பதிவர்'ன்னு ஒருத்தர் வந்துட்டாரே.... இல்ல, அது நீங்கதானா? :-)

சித்ரா

சென்ஷி said...

மீ த 50!

இட்லிவடை லிங்க் கொடுங்க.

♫சோம்பேறி♫ said...

/* Anonymous said...

அட , விஷயமே உங்களுக்கு தெரியாதா? ஏற்கனவே நாந்தான் 'பிரபல பதிவர்'ன்னு ஒருத்தர் வந்துட்டாரே.... இல்ல, அது நீங்கதானா? :-)

சித்ரா */


ம்ம்ஹூம்.. பிரபல பதிவர் யார்னு தெரியாதே சித்ரா.. ஆனா நீங்க ரொம்ப பெரிய பிரபல பதிவர்னு நினைக்கிறேன். எல்லா விஷயத்தையும் விரல் நுனில வச்சிருக்கீங்களே!! :-)

♫சோம்பேறி♫ said...

/* சென்ஷி said...
மீ த 50!
இட்லிவடை லிங்க் கொடுங்க. */

மீ த பெஸ்டு.

சே.. ஸாரி சென்ஷி... சிம்பு படம் பாத்துகிட்டு இருக்கேன். அந்த effect.

பதிலுக்குக் கலாய்ப்போம்ல அப்ப தரேன் லிங்க்.

விக்னேஷ்வரி said...

ஐயோ சிரிச்சு சிரிச்சு வாய் வலிக்குது.

♫சோம்பேறி♫ said...

ரொம்ப நன்றிங்க விக்னேஷ்வரி.. :-)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

கலக்கல் போஸ்ட்..

♫சோம்பேறி♫ said...

Thanks ka.. :-)

Post a Comment

தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு.

Blog Widget by LinkWithin
 
சோம்பேறி. Design by Pocket