மீனாவின் கல்யாணம்

Friday, 27 February, 2009

Views

தற்போது விஜயகாந்துடன் இணைந்து நடிக்கும் "மரியாதை" திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக ஆஸ்திரேலியாவில் இருக்கும் மீனா இது பற்றி கூறியதாவது.. 'இந்த கல்யாணத்தைப் பற்றி இப்போது என்னால் அதிகம் சொல்ல முடியாது. இதற்கு முன்பு எனக்கு பல வாய்ப்புகள் வந்தாலும், இது போல வித்தியாசமாக எதுவும் அமைந்ததில்லை. யாருக்கும் இது போன்ற ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருக்காது. ஏன் எனக்கே கிடைத்ததில்லை."

மேலும் இது பற்றி தெரிந்து கொள்ள வரும் திங்கள் இரவு 7:30க்கு சன் தொலைக்காட்சியைப் பார்க்கவும்.

1500 எபிசோடுகளுக்கும் மேல் (வயிற்றை)கலக்கிய ஆனந்தம் இன்றுடன் (நல்ல வேளையாக)நிறைவடைந்தது.
சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில், பட்டுக் கோட்டை ப்ரபாகரின் இயக்கத்தில், மேலும் மீனாவின் கல்யாணத்தில் அவருடன் இணைந்து நடித்திருப்போர், யுவராணி(அநியாயத்துக்கு மெலிந்திருக்கிறார்), டெல்லி குமார், மற்றும் பலர்.
சீரியல்லயாவது கல்யாணம் ஆனா சரிதானுங்கக்கோவ்..

2 மச்சீஸ் சொல்றாங்க:

குடுகுடுப்பை said...

என்னது ஆனந்தம் முடிஞ்சுருச்சா? நான் சன் டிவி கட் பண்ணி ஒரு வருசந்தான் ஆகுது.நான் பத்து வருசம் முடியாதுன்னு பயந்து போய் கட் பண்ணிட்டேன்.

சென்ஷி said...

ஹா ஹா ஹா :))

Post a Comment

தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு.

Blog Widget by LinkWithin
 
சோம்பேறி. Design by Pocket