அப்போ இனிமேல் நந்த லாலா தானா?

Thursday, 12 February, 2009

Views


வாரணம் ஆயிரம் படத்திற்குப் பிறகு "நான் கடவுள்" தான் திரையரங்கிற்கு சென்று பார்க்க வேண்டும் என்று முடிவு செய்திருந்தேன். ஆனால் சந்திரமுகி வேட்டயபுரம் அரண்மனைக்கு கூப்பிட்டது போல அரண்டு போய் யாருமே கூட வர மறுக்கிறார்கள்.. இது போதாதென்று பதிவர் சகாக்கள் வேறு கோஸ்ட் ரைடரில் ஏறும் முன்பு எச்சரிப்பது போல பெண்கள், குழந்தைகள்(இதனால் தான் நான் போக யோசிக்கிறேன்:-)), இளகிய மணம் படைத்த ஆண்கள், வயதானவர்கள் தவிர்த்து விடவும் என்று பூச்சாண்டி காட்டுகிறார்கள்.

எனக்கு நிஜமாகவே ஏன் என்று புரிய வில்லை. அன்றாடம் நாளிதழில் "நான்கு வயது சிறுமியை வன்கலவி செய்து, தலையை சுவற்றிலடித்து கொலை." என்று புகைப்படத்துடன் சர்வ சாதாரணமாக வெளியிடுகிறார்கள். இதைப் பார்த்து எத்தனை கர்ப்பினிகளுக்கு கரு கலைந்தது? எத்தனை இளகிய மணம் படைத்த ஆண்கள் மன நிலைப் பிறழ்வடைந்தார்கள்?

*******************************************

ப்ரியா மணி, மது பாலா போன்ற நடிகைகள் தான் வேண்டும் என்று அமீர் போல அடம் பிடிக்காமல் கதைக்கு பொருத்தமான நாயகியைத் தேர்வு செய்திருக்கிறார் மிஷ்கின். எனக்கு இளைய ராஜாவின் இசை பிடிக்காது என்பதால் பாடல்கள் ப
ற்றி நோ கமெண்ட்ஸ். நான் கடவுள் படத்தின் பாடல்கள் பிடித்திருந்தது என்று சொல்பவர்கள் நந்த லாலா பாடல்களை கேட்க இங்கே செல்லவும்.

அப்போ இனிமேல் மிஷ்கினின் நந்த லாலா தானா?

********************************

சென்ற பதிவில் உலகமே காரித் துப்பிய Epic movie(நார்னியா) பற்றி ஏன் எழுதினேன் என்று சொல்கிறேன்..

Snakes in the Plane, Samuel Jackson பாத்திரத்தில் நடித்திருப்பவர் பாம்புகளிடமிருந்து மக்களைக் காப்பாற்றாமல், "I've had it with these motherf***in' snakes on this motherf***in' plane!" என்ற ஒரே வசனத்தை திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டு இருக்கிறார். இது ஆங்கிலத் திரைப் படமாகையால், பொறுக்க முடியாத கதாநாயகி சூஸன் ஏன் அதையே திரும்பத் திரும்ப சொல்கிறாய்.. என த(தி)ட்டிக் கேட்கிறாள். ஏனென்றால் இணையப் பதிவர்களுக்கு நான் இந்த வசனம் பேசியது பிடித்திருக்கிறது என்று சொல்லி அவளை விமானத்திலிருந்து எறிகிறார்.

வில்லு படத்தை விமர்சித்த ஒரு பதிவர், விஜயும் பிரபு தேவாவும் இணைந்து பட்டையைக் கிளப்பியுள்ளார்கள் என்று பாராட்டியிருந்தார். இதைப் பார்த்து புல்லரித்துப் போய் வில்லு 2010 என்று இதே படத்தை ரீமிக்ஸ் செய்தால், நம்ம கதி என்னாவது? (என் தம்பி அதி தீவிர விஜய் ரசிகன். நெற்றியில் விஜய் என்று பச்சை மட்டும் தான் குத்திக் கொள்ளவில்லை. அவனே இந்தப் படத்தை இன்னொரு முறை பார்க்க முடியாது என்று சொல்லிவிட்டான்.)


வில்லு படத்துக்கே விமர்சனம் எழுதும் போது இந்த படத்துக்கு எழுதக் கூடாதா?

1 மச்சீஸ் சொல்றாங்க:

சென்ஷி said...

//வில்லு படத்துக்கே விமர்சனம் எழுதும் போது இந்த படத்துக்கு எழுதக் கூடாதா?//

அதானே :))

Post a Comment

தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு.

Blog Widget by LinkWithin
 
சோம்பேறி. Design by Pocket