நார்னியாவும் நாறினநியாவும் - 2

Wednesday 4 February, 2009

Views

எட்வர்ட் White Bitchசினால் ஏமாற்றப் பட்டார் என்று தெரிய வரும்போது காமெராவுடன் ஒரு கும்பல் வந்து குதித்து, "எட்வர்ட் சொல்லு.. என்னைக் கிருக்கானாக்கிட்டான்கானு சொல்லு.. காமேராவப் பாத்து சொல்லு" என்று நமைச்சல் கொடுக்கும் 'ட்யூட்', எட்வர்ட் ஒரு அப்பு அப்பிய பிறகு தான் அடங்குகிறார். நம்ம அம்மா டிவியின் கிச்சுகிச்சு.காம், மருத்துவர் ஐயா டிவியின் பலி ஆடு போன்ற ஒரு நிகழ்ச்சி இது.
என்னைக் கிறுக்கனாக்கிட்டாங்கனு சொல்லு..
மற்ற மூன்று பேரும், தங்கள் சகோதரனை மீட்க உதவி கோரி அஸ்லானை சந்திக்கும் முன், பயிற்சி பெற ஹாரி பாட்டரிடம் செல்கிறார்கள். சரியாக குறி தவறி அடித்து பெரும்பாலானவர்களைத் தீர்த்துக் கட்டிய பின், நீங்கள் அஸ்லானை சந்திக்கும் தகுதி பெற்று விட்டீர்கள் என்று சான்றிதழ் கொடுத்து விடையனுப்புகிறார் ஹாரி.
(ஹாரி பாட்டர்!!!!)
அஸ்லானின் இடத்தை அடைந்தவுடன், சன் டிவியில் விஜய சாரதி திரும்பிப் பார்க்காமல் ரிவர்ஸிலேயே நடந்து கொண்டு ஒரு நிகழ்ச்சி நடத்தினாரே அது போல அந்த இடத்தின் அருமை, பெருமைகளை ஒருவர் விளக்குகிறார். பட்டாப்பட்டி ட்ராயரைக் கூட ஆல்டர் செய்து டைட்டாக போட்டுக் கொண்டு 'வேர் இஸ் த பார்டி' என்று கேட்கும் ஹீரோக்கள் அவரது உடையைக் காப்பியடிக்கக் கூடும் என்பதால், அவரது புகைப் படத்தை நான் வெளியிடப் போவதில்லை.

நம்ம ஊரு பண்ணையார்களிடம்(இப்போது அரசியல்வாதிகள்) ஏதாவது உதவி கேட்டுப் போனால் பதிலுக்கு உன்னைக் கொடு என்று கேட்பார்களே, அது போல அஸ்லான் கேட்கிறார்(பீட்டர் உட்பட). கலாச்சார சீரழிவு என்று படப்பெட்டியைத் தூக்கிக் கொண்டு ஓட ஆளில்லாத ஆங்கிலப் படமாகையால் நால்வரும் சம்மதிக்கிறார்கள். வாக்கு தவறாமல் அஸ்லானும் போரிட்டு எட்வர்டை மீட்டுக் கொடுத்து விட்டு, உயிர் விடுகிறார். நல்ல வேளை உயிர்தெழவில்லை.
(நல்ல வேளை)
பீட்டர் மன்னனாகப் போகிறான் என்றுத் தெரிந்ததும், முதல் காட்சியில் அவனை நிராகரித்த X-Menனின் காதலி, பீட்டரின் காதலியாகிறாள். என்னால் நினைத்த உருவத்திற்க்கு மாற முடியும், உனக்கு எப்படி இருந்தால் பிடிக்கும் என கேட்கிறாள். மோனோலிஸா போன்ற புருவம், குண்டான கன்னம், குண்டு மாமியின் கைகள், ஒரு நீல குண்டு ப்ரிட்னி ஸ்பியர்ஸ் போல என்கிறான்.
(எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்)
நால்வரும் White Bitchச்சை எதிர்த்துப் போரிட முடிவு செய்கிறார்கள். அஸ்லானின் படையும், X-Men குழுவும் பீட்டர் குழுவுடன் கூட்டணி சேர்கிறார்கள். நாளை போர் என்பதால் இன்று பார்ட்டி என்று முடிவாகிறது. சரக்கு இல்லாமல் பார்ட்டியா? சூஸன் தண்ணியடித்து விட்டு குடம் குடமாக கூட்டணிகள் மீது வாந்தியெடுக்க, அவர்கள் அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுகிறார்கள்.
(ஆதரவு வாபஸ்)
நட்டாற்றில் விடப் பட்ட நால்வரும் போர்க்களத்தில் ஒரு ரிமோட் கன்ட்ரோலைக் கண்டெடுக்கிறார்கள்(Click). ரிமோட்டில் Pause செய்து விட்டு எதிரிகள் அனைவரையும் போட்டுத் தள்ளுகிறார்கள்.
(ரிமோட்)
வில்லியை மன்னித்து விட்டேன் என்று பீட்டர் வசனம் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது வழக்கம் போல் ஜாக் ஸ்பேரோ(Swallows) உயிர்தெழுந்து வந்து, Pirates of the Carribean: The dead Man's Chestடில் வரும் பெரிய சக்கரத்தை ஓட்டத் தெரியாமல் ஓட்டி வந்து வில்லி மேல் ஏற்றிக் கொன்று பழிவாங்குகிறார்.
சரியாக குறி தவறி அடித்தல், குடம் குடமாக பக்கத்தில் இருப்பவர் மேல் வாந்தி எடுத்தல் மற்றும் (யக்) போன்ற ஏற்கனவே பார்த்து சலித்துப் போன காமெடிகளைத் தவிர்த்துப் பார்தால் படம் ஓகே தான்.

ஆனால் நம்ம இந்திர லோகத்தில் நா.அழகப்பன் ரேஞ்சுக்குப் படத்தைக் கிழித்திருக்கிறார்கள். டாவின்சி கோட் பற்றிய காட்சிகளில் கிறிஸ்துவ இறையான்மையைக் காயப் படுத்தியதற்க்காகவும், A சான்றிதழ் கொடுக்கப்பட வேண்டிய இப்படத்திற்க்கு PG-13(13 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள், பெற்றொருடன் பார்க்கலாம்) சான்றிதழ் கொடுக்கப் பட்டதால், குழந்தைகளோடு பார்த்துத் தொலைக்க நேர்ந்ததாலும் இந்தப் படத்தை காறித் துப்பாதவர்களே இல்லை என்றாலும் Box Officeஸில் $39,666,075 அள்ளியிருக்கிறது. நார்னியாவின் Box Office: $291,685,219. ஒரே ஒரு இலக்க வித்தியாசம் தான்.

இருந்தாலும், இந்தப் படத்தைப் பற்றி ஏன் எழுதினேன் என்று அடுத்த பதிவில் சொல்கிறேன்.

1 மச்சீஸ் சொல்றாங்க:

சென்ஷி said...

//இந்தப் படத்தை காறித் துப்பாதவர்களே இல்லை என்றாலும் Box Officeஸில் $39,666,075 அள்ளியிருக்கிறது. நார்னியாவின் Box Office: $291,685,219. ஒரே ஒரு இலக்க வித்தியாசம் தான்.//

நான் பார்த்துட்டு துப்பிக்கறேன்.. என்னோட ஃபேவரைட் கலெக்சன் இந்த படம்

Post a Comment

தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு.

Blog Widget by LinkWithin
 
சோம்பேறி. Design by Pocket