நான் கடவுள் - அட கத்திரிக்குப் பிறந்த பயபுள்ளைகளா!

Wednesday, 25 February, 2009

Viewsநான் கடவுள் படத்தை ரொம்ப எச்சரிக்கையுடன் தான் பார்க்கப் போனேன். தரை டிக்கட்டிலோ, பெஞ்சு டிக்கெட்டிலோ க்ளோசப்பில் பார்த்தால் பயந்து விடுவேன் என்பதால், 20 ரூபாய் அதிகமாக செலவு செய்து பால்கனியில் அமர்ந்து தான் பார்த்தேன்.

ஆனால் இந்த கத்திரிக்குப் பிறந்த பயபுள்ளைகள் பாதி காட்சிகளை வெட்டித் தள்ளி விட்டார்கள். மீதி காட்சிகளில் பீப், பீப் என்று பீப்பீ ஊதியிருக்கிறார்கள்.

அதுவும் முக்கியமாக, நீதிமன்றத்தில் நாயரை என்ன செய்தாய் என்று ருத்ரனிடம்(ஆர்யா என்று சொல்ல மனது வர வில்லை) கேட்கும் கேள்விக்கு அவர் பீஈஈஈப் என்று பதில் சொல்கிறார். நீதிபதி அதிர்ச்சியாகி, ஆப்பரேஷன் தியேட்டரில் பேஷண்டை போட்டுத் தள்ளிய டாக்டரைப் போல கண்ணாடியைக் கழட்டுகிறார்.

நாயர் மட்டுமல்ல, தாண்டவன், பூஜா என்று எல்லோர் முடிவிலும் கத்தரி புகுந்து விளையாடியிருக்கிறது.

கடைசி காட்சியில் தாண்டவனிடம் அடிபட்ட காயங்களுடன் வரும் பூஜாவைப் பார்த்து இளகிய மனம் படைத்த ஆண்களுக்கு மாரடைப்பு வரும் என்று பதறி அதற்கு முன்பே end கார்ட் போட வில்லை புன்னியவான்கள்.

படத்திற்கு வர பயப்படுகிறவர்கள் வன்முறைக்கு அடுத்ததாக சொல்லும் காரணம், பரிதாப உணர்ச்சிக்கு ஆட்பட விரும்பவில்லை. படத்தில் வரும் உருப்படிகளே "ஜாலியா பிச்சை எடுத்தோமா! சந்தோஷமா இருந்தோமானு இருக்கனும்" என்ற attitudeடில் தான் இருக்கிறார்கள். படம் முழுக்க ஒரு மெல்லிய, அழகான, சிந்திக்க வைக்கும், சில நேரங்களில் சுருக்கென தைக்கும் நகைச்சுவை இழையோடுகிறது. அவர்கள் பிரிக்கப் படும் ஒரே காட்சியில் மொத்த பாரத்தையும் மனதில் ஏற்றி விடுகிறார். சரி மக்கா.. மெகா சீரியல் பாத்து அழுவுறதுக்கு அந்த கண்ணீரை எல்லாம் சேத்து வச்சிக்கோ..

காவல் நிலையத்தில் எம்.ஜி.ஆர், சிவாஜி எல்லாரும் ஆடும் காட்சியில் நயன்தாராவின் யம்மாடி, ஆத்தாடிக்கு விசில் சத்தம் காதைக் கிழித்து விட்டது. என்னவோ வில்லு படத்துக்கு நயன்தாரா தான் கதை, திரைக்கதை எழுதி இயக்கியது போல, அவரால் தான் படம் ஓட வில்லை என்று கூவிய ஜோதிட ரத்னாக்கள் கவனத்துக்கு: நூறு வில்லு, ஆயிரம் ஏகன், லட்சம் சத்யம் வந்தாலும் தானைத் தலைவி நயன்தாரவின் கால் சுட்டு விரலைக் கூட அசைக்க முடியாது.

பூஜா தாய்ப் பாசத்தைப் பற்றி ஆர்யாவுக்கு வகுப்பெடுக்கும் காட்சியில், "அம்மா தான் முதல்ல" என்றதும் தியேட்டரில் 'புரட்சித் தலைவி வாழ்க' என்று ஒரு கோஷம்.

கமர்ஷியலாக படம் எடுத்தால், உலக மொழி படங்களை பர்மா பஜாரில் வாங்கிய டிவிடியில் பார்த்து விட்டு 'எப்பதான் தமிழ் சினிமா முன்னேறப் போவுதோ' என்று புலம்புவது. உலக தரத்துக்கு நல்ல படம் எடுத்தால் எச்சரிக்கை நோட்டீஸ் விட்டு தயாரிப்பாளருக்கு பீதியைக் கிளப்புவது. உங்கள மாதிரி ஆளுங்க இருக்குறப்போ சீக்கிரமே தமிழ் சினிமா முன்னேறிடும் மக்கா..

3 மச்சீஸ் சொல்றாங்க:

ரங்கன் said...

இன்னும் பயிற்சி.. வேண்டுமோ...?! ;)

உங்க திரை விமர்சனத்தை பத்திதான் சொல்றேன்...

நல்ல முயற்சி.. வாழ்த்துக்கள்.

சோம்பேறி said...

ஆம் ரங்கன். முதல் முயற்சி. வாழ்த்துக்களுக்கு நன்றி.

சென்ஷி said...

:-)

Post a Comment

தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு.

Blog Widget by LinkWithin
 
சோம்பேறி. Design by Pocket