நேற்று சன் டிவியில் நார்னியாவை எல்லாரும் கதையில் ஒன்றி நான்கோடு ஐந்தாம் குழந்தையாக பார்த்துக் கொண்டிருந்த போது, நான் மட்டும் விழுந்து விழுந்து சிரித்த படி பார்த்துக் கொண்டிருந்தேன். காரணம் Epic movie.

நம்மூரில் சூப்பர் டென், லொள்ளு சபாவில் ஒரு படத்தைக் கலாய்ப்பது போல, திரைப் படத்தோடு நில்லாமல், தொலைக் காட்சி நிகழ்ச்சி, பேட்டி, விளம்பரம் என்று ரவுண்டு கட்டிக் கலாய்க்கும் வகைப் படம் இது. Scary movie என்று பெயர் வைத்து திகில் படங்களையும், Disaster movie எனப் பெயரிட்டு உலகம் அழியப் போகுது எனப் பூச்சாண்டி காட்டும் படங்களையும் போல நெஞ்சில் நீங்கா இடம் பிடித்த காவியப் படங்களை நக்கலடிக்கும் படம் இந்த Epic movie.
எனக்குத் திரை விமர்சனம் செய்யத் தெரியாதென்பதால், நீங்களே 'டைரக்டர் அங்க நிக்கிறாரு, பின்னிட்டாங்க, பிரிச்சு மேஞ்சுட்டாங்க' எல்லாம் சேர்த்துக் கொள்ளவும். நான் கதையை மட்டும் சொல்கிறேன். கதையும் உங்களுக்குத் தெரிந்திருக்கும் என்பதால், எந்தெந்த படங்கள் கலாய்க்கப் பட்டிருக்கின்றன என்று மட்டும் சொல்கிறேன்.
விதிவசத்தால் ஒன்று சேர்க்கப் பட்ட நான்கு அநாதைகளின் காவியப் பயனம் என்ற அறிமுகத்துடன் படம் தொடங்குகிறது.
டாவின்சி கோட் ஸ்டைலில் அறிமுகமாகும் கடைக் குட்டி லூஸி, குற்றுயிரும் குலையுயிருமாகக் கிடக்கும் தன் தாத்தா கொடுத்த க்ளூ ஒன்றும் புரியாமல், "நான் இன்னும் புத்தகம் படிக்க வில்லை. வேறு க்ளூ கொடுங்கள்" என்று கேட்கிறாள். தாத்தாவும் தலை கீழாக நின்று குட்டிக்கரனம் அடித்து விளக்கி(யே) இறந்து போகிறார். வில்லன் ஸைலஸிடமிருந்து தப்பி நூல் பிடித்தாற் போல் ஒவ்வொரு படியாய் முன்னேறி, "lame" ஒரு ஏழு எழுத்து வார்த்தை என சரியாக(?) கண்டுபிடித்து சாக்லேட் தொழ்ற்சாலை பயனத்திற்கான நுழைவுச் சீட்டை வெல்கிறாள்.
இதே போல் சூஸன் பாம்புகள் சூழ்ந்த விமானத்திலிருந்து எறியப் படும் போதும்(Snakes in the Plane), எட்வர்ட் அனாதை விடுதியிலிருந்து எறியப் படும் போதும்(Problem Child என்று நினைக்கிறேன்), பீட்டர் x menனால் தாக்கப் பட்டு வீழும் போதும் டிக்கெட் பெறுகிறார்கள்.
நான்கு பேரையும் வரவேற்க்கும் சாக்லேட் தொழ்ற்சாலை அதிபர், என்

வெற்றியின் ரகசியம் மனித உறுப்புகளை சாக்லெட்டுடன் சேர்ப்பது தான் என்று சொல்லி, லூஸியின் இதயத்தை நோண்டி Little hearts packetடில் போடுகிறார். இவரிடமிருந்து தப்ப ஒரு அலமாரிக்குள் ஒளிகிறாள் நான்சி. அது தான் நார்னியா.
அங்கே அவளைப் பார்க்கும் தம்னஸ்(பாதி மனிதன், பாதி ஆடு), அவள் பெற்றோர்கள் இருவரும் மனிதர்கள் எனத் தெரிந்து அருவருப்படைந்தாலும், குளியலறை, கழிவறை கூட விடாமல் அவரது வீட்டை சுற்றிக் காட்டுகிறார்(இதே போல ஒரு டிவி ஷோ ஏதோ ஒரு ஹிந்தி சேனலில் பார்த்திருக்கிறேன்.)

"உனக்கு ஆபத்து.. உடனே இங்கிருந்து போ.. விவரம் இதில் இருக்கு" என்று சொல்லி வீடியோ காமெரா போன்ற ஒன்றை அவள் கையில் கொடுக்கிறார். அதில் வில்லி பற்றிய தகவல் இருக்கிறது. இது ஒரு நொடியில் வெடித்து விடும் என்று சொல்லி விட்டு, அவள் சுதாரிக்கும் முன் வெடிக்கிறது.(mission impossible)

லூஸியைத் தொடர்ந்து வரும் எட்வர்ட் வில்லி தரும் சரக்கிற்காகவும், அவ
னைத் திருமணம் செய்து கொண்டு ராஜா ஆக்குகிறேன் என்று சொல்வதாலும், நன்பர்களைக் கூட்டி வர சம்மதிக்கிறான்.
அவனையும், அவனைத் தொடர்ந்து வரும் சூஸன், பீட்டரையும் லூஸி தம்னஸ் வீட்டிற்க்கு அழைத்து செல்கிறாள். அங்கு அவர் கைது செய்யப் பட்டதாகவும், "நீங்கள் நால்வரும் ஒரே பிரசவத்தில் பிறந்த சகோதர, சகோதரிகள் என்றும் அவர் மனைவி(அல்லது கனவன்) பீவர் சொல்கிறது.(நால்வரில் இருவர் வெள்ளையர், ஒருவர் மெக்ஸிக்கன், ஒருவர் நீக்ரோ.. இங்கே நிற்கிறார் டைரக்டர்)
அங்கிருந்து எஸ்ஸான எட்வர்டும் வில்லி மூலம் இதைத் தெரிந்து கொண்டு

திருந்துகிறான். நல்லவனாக இருந்தால் நல்லா இருக்க முடியுமா? சிறையில் அடைக்கப் படுகிறான். எட்வர்டின் சிறைத் தோழனாக வரும் Pirates Of caribean, புகழ் Jack Swallows(!) ஒரு பாடலுக்கு நயன்தாரா சேச்சி வகைப் பெண்களுடன் குத்தாட்டம் போட்டு விட்டு எட்வர்டை White Bitchசிடம் போட்டுக் கொடுத்து விட்டு உயிர் விடுகிறார்.
மீதி நாளை..