முடிஞ்சு போனதை சொறிஞ்சு விடுறதுனா என்ன?

Thursday 9 July, 2009

Views


சத்யம் ராமலிங்க ராஜூவுடன் சமீபத்தில் நான் எடுத்த பேட்டி பதிவின் இறுதியில்...

சத்யத்தின் வீழ்ச்சி எங்கு ஆரம்பமானது என்ற அதிகாரப்பூர்வமில்லாத கிசுகிசுவைப் படிக்க ஆர்வமுள்ளவர்கள் தொடர்ந்து படிக்கவும். பேட்டி மட்டும் போதும் என்று சொல்பவர்கள், ஸ்க்ரோல் டவுன் செய்து, நேராக பதிவின் இறுதிக்கு செல்லவும்.

கிசுகிசு

சத்யம் தன்னை வஞ்சித்து விட்டதாக உலக வங்கி, சத்யத்துடனான உறவை முறித்துக் கொண்டது அனைவருக்கும் தெரிந்தது. ஆனால் உண்மையில், உலக வங்கியின் காவாளித்தனமும், ஒரு கருப்பாடின் மொள்ளமாரித்தனமும் தான், சத்யத்தின் முதல் வீழ்ச்சிக்கு காரணமாம்.

உலக வங்கிக்கு சத்யம் செய்து கொண்டிருந்த ப்ராஜெக்டின் ரிப்போர்ட்டை, முறைப்படி சத்யம் வெளியிடும் முன்பே, வேறு ஒரு கருப்பு ஆடு மலிவான விலைக்கு உலக வங்கிக்கு விற்று விடவே, முறைப்படி வந்த ரிப்போர்டை, பெரும்பொருள் கொடுத்து வாங்க உலக வங்கி மறுத்து விட்டது. மேலும் இன்று தன்னிடம் விற்ற அந்த ப்ளாக் ஷீப், நாளை தன் எதிரணியிடம் தன் ரகசியங்களைக் கொடுத்து விட்டால், தன் கதி அதோ கதி தான் என்றுணர்ந்து, சத்யத்துக்கு பெப்பே காட்டி விட்டது.

2003னில் 10 மில்லியன் டாலரில் ஆரம்பித்து, 2007லில் 100 மில்லியன் டாலராக வளர்ந்திருந்த அந்த கான்ட்ராக்டை, 'உங்கள் சென்னை அலுவலகக் கணினி, எங்கள் வாஷிங்டன் அலுவலகத்தின் நாற்பது கணினிகளின் தகவல்களைத் திருடி விட்டது' என்று காரணம் காட்டி, ராஜூவுக்கு டாட்டா காட்டி விட்டு, ரத்தன் டாட்டாவுடன் கூட்டு சேர்ந்து கொண்டது.

நீதி : நீ புத்திசாலினு நினைக்கிறது தப்பில்ல. அது ஓரளவு உண்மையா கூட இருக்கலாம். ஆனா இந்த உலகத்திலேயே, நீ மட்டும் தான் புத்திசாலினு நெனச்சுடக் கூடாது.

சோக்கு

ரெண்டு பேர், அம்பதாவது மாடியிலயிருந்து குதிக்க ரெடியா நின்னாங்களாம்..

நம்பர் 1 : இதோட நூறாவது தடவையா குதிக்கிறேன். நான் ஒரு கின்னஸ் ரெக்கார்ட் ஹோல்டர். நீங்க?


நம்பர் 2 : நான் ஒரு சத்யம் ஷேர் ஹோல்டர்

பேட்டி


பொருப்பு அறிவித்தல்

ராமலிங்க ராஜூவைத் தாக்கி வரும் பின்னூட்டங்கள் சர்வ நிச்சயமாக அனுமதிக்கப்பட மாட்டாது. (நான் மட்டும் தான் தாக்குவேன். அங்ங்ங்ங்)

43 மச்சீஸ் சொல்றாங்க:

சென்ஷி said...

நீங்க விஜயகாந்த ரசிகருங்களா !!!!!!!!!!!!!!1

rapp said...

//ராமலிங்க ராஜூவைத் தாக்கி வரும் பின்னூட்டங்கள் சர்வ நிச்சயமாக அனுமதிக்கப்பட மாட்டாது. (நான் மட்டும் தான் தாக்குவேன். அங்ங்ங்ங்)//

ஆமாம் கமன்ட் மாடரேஷன் இல்லாதப் பதிவுலக் கூட, ஸ்பெஷல் எபெக்டோட சோம்பேறி பின்னூட்டங்களைத் தூக்கிடுவார்.

rapp said...

//பொருப்பு அறிவித்தல்//

ஸ்மால் ஸ்பெல்லிங் மிஸ்டேக், தட் இஸ் நாட் பொருப்பு, அது பருப்பு அறிவித்தல்.

rapp said...

super, super, super:):):)

சந்தனமுல்லை said...

பேட்டியும் சோக்கும் - :-)))))

வால்பையன் said...

”சத்ய”மா நீங்க சொல்றெதெல்லாம் உண்மையா!?

குடுகுடுப்பை said...

ஒன்னு மட்டும் உறுதி இரண்டாவது கார்ட்டூன் மட்டும் உண்மை. 30 பேரு குடும்பத்தோட சுத்தி உட்காந்திருக்காங்க ஆபிஸ்ல நான் மட்டும் தனியாய் தமிழனாய்.

தினேஷ் said...

Golti kalata

♫சோம்பேறி♫ said...

/* சென்ஷி said...
நீங்க விஜயகாந்த ரசிகருங்களா !!!!!!!!!!!!!!1 */

ரசிகர் இல்ல சென்ஷி வெறியர்.. அங்ங்ங்ங்..



/* rapp said...
ஸ்பெஷல் எபெக்டோட சோம்பேறி பின்னூட்டங்களைத் தூக்கிடுவார். */

நாங்கல்லாம்.. விஜயகாந்த் ஃபேனாக்கும்..

/* ஸ்மால் ஸ்பெல்லிங் மிஸ்டேக், தட் இஸ் நாட் பொருப்பு, அது பருப்பு அறிவித்தல். */

அவ்வ்வ்வ்வ்..

/* super, super, super:):):) */

நன்றி.. நன்றி.. நன்றி..

♫சோம்பேறி♫ said...

/* சந்தனமுல்லை said...
பேட்டியும் சோக்கும் - :-))))) */

உங்கள் பின்னூட்டத்துக்கு :-))))))))))))))))


/* வால்பையன் said...
”சத்ய”மா நீங்க சொல்றெதெல்லாம் உண்மையா!? */

அந்த நிறுவனத்தில் பணிபுரியும் நன்பர்கள் மூலமாக, காத்துவாக்கில் கேள்விப்பட்டது. பாதியாவது உண்மையாக இருக்கக் கூடும்.. அதாகப்பட்டது, தெரியலீங்கோஓஓஓஓஓ

மனுநீதி said...

உங்க பதில இப்ப தான் பாத்தேன் அதான் போன கமன்ட டெலீட் பண்ணிட்டேன். அப்புறம் வழக்கமான சோம்பேறியின் பதிவுகள சமீப காலமா காணோமே என்ன விஷயம்?

ரவி said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

ரொம்ப ரசிச்சேன்

♫சோம்பேறி♫ said...

/* வருங்கால முதல்வர் said...
ஆபிஸ்ல நான் மட்டும் தனியாய் தமிழனாய். */

ப்ச்.. எல்லாம் சீக்கிரம் சரியாயிரும் குடுகுடுப்பையாரே..! டோண்ட் வொர்ரி..


/* சூரியன் said...
Golti kalata */

நன்றி சூரியன்.. :-)

♫சோம்பேறி♫ said...

/*மனுநீதி said...
வழக்கமான சோம்பேறியின் பதிவுகள சமீப காலமா காணோமே என்ன விஷயம்? */

ப்ச்.. முன்னெல்லாம் மத்த வலைப்பூக்கள் பக்கம் அதிகமா போக மாட்டேன். இப்போ முழு நேர வேலையே அது தான்.

அவங்களோட எழுத்துக்கள் என்னையும் தாக்கிடுச்சு போல. கொஞ்ச நாள் லீவ் எடுத்துகிட்டா எல்லாம் சரியாயிரும்னு நினைக்கிறேன் மனுநீதி.


/* செந்தழல் ரவி said...
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
ரொம்ப ரசிச்சேன் */

ரொம்ப நன்றி செந்தழல் ரவி :-)

(வொய் அவ்வ்வ்? நீங்களும் சத்யம் ஷேர் ஹோல்டரோ?)

வெற்றி-[க்]-கதிரவன் said...

///வருங்கால முதல்வர் said...
ஒன்னு மட்டும் உறுதி இரண்டாவது கார்ட்டூன் மட்டும் உண்மை. 30 பேரு குடும்பத்தோட சுத்தி உட்காந்திருக்காங்க ஆபிஸ்ல நான் மட்டும் தனியாய் தமிழனாய்.
//

-:))))))))))))))))))) உங்க கவுஜைய ஒன்னு எடுத்து விடுங்க.... அப்பறம் பாருங்க ரிசல்ட

குடுகுடுப்பை said...

♫சோம்பேறி♫ said...

/* வருங்கால முதல்வர் said...
ஆபிஸ்ல நான் மட்டும் தனியாய் தமிழனாய். */

ப்ச்.. எல்லாம் சீக்கிரம் சரியாயிரும் குடுகுடுப்பையாரே..! டோண்ட் வொர்ரி..

//

யோவ் சரியாயிரும்னா பயமா இருக்கு சோம்பேறி சார்

நசரேயன் said...

//ராமலிங்க ராஜூவைத் தாக்கி வரும் பின்னூட்டங்கள் சர்வ நிச்சயமாக அனுமதிக்கப்பட மாட்டாது. (நான் மட்டும் தான் தாக்குவேன். அங்ங்ங்ங்)//

அம்புட்டு நல்லவரா நீங்க

☀நான் ஆதவன்☀ said...

உண்மையாவா சொல்றீங்க???

கார்டூன்ஸ் & கமெண்ட்ஸ் சூப்பர்

♫சோம்பேறி♫ said...

/* பித்தன் said...
உங்க கவுஜைய ஒன்னு எடுத்து விடுங்க.... */

ஏன் பித்தன், பின் பழமைத்துவத்தை எடுத்துவிட்டா தெறிச்சு ஓடிட மாட்டாங்க?


/* குடுகுடுப்பை said...
யோவ் சரியாயிரும்னா பயமா இருக்கு சோம்பேறி சார் */

அவ்வ்வ்வ்.. இப்படி அம்பியாவும் அந்நியனாவும் மாறி மாறி பேசினா நான் என்ன பதில் சொல்றது?!

♫சோம்பேறி♫ said...

/* நசரேயன் said...
அம்புட்டு நல்லவரா நீங்க */

எம்புட்டு நல்லவருனு லேபிளைப் பாத்தாவது தெரிஞ்சுக்கோங்க நசரேயன்.

(உங்களுக்கு ஆயுசு நூறு நசரேயன். இப்போ தான் உங்க காதல் கடிதங்களை :-) படிச்சுட்டு இருந்தேன்..)

நன்றி ஆதவன் :-)

/* ☀நான் ஆதவன்☀ said...
உண்மையாவா சொல்றீங்க??? */

நதிமூலம், ஆதிமூலம், ஆதிமூலத்தோட மூலம், கிசுகிசுமூலம் இதெல்லாம் உண்மையானு ஆராயக் கூடாது ஆதவன்.

சொன்னா அப்படியானு கேட்டுட்டு, நாலு பேருகிட்ட 'யாருகிட்டயும் சொல்லிடாத'னு சொல்லி, பத்த வச்சுட்டு போய்கிட்டே இருக்கனும்.

/* கார்டூன்ஸ் & கமெண்ட்ஸ் சூப்பர் */

டேங்க்சு பா..

Karthikeyan G said...

ராஜுவின் சத்யம் நிறுவன விழ்ச்சிக்கும், விஷாலின் சத்யம் பட தோல்விக்கும் இடையே எதாவது மர்ம முடிச்சு இருக்கா?

இங்கே இருவருமே தெலுங்கர்கள், இருவருமே சோம்பேறியின் ப்ளாகில் comment போடுவதில்லை என்பதையும் உங்களுக்கு நினைவுறுத்த விரும்புகிறேன்.

மிகவும் ரகசியத்துடன்,
ராஜேஷ்குமார் நாவல்கள் படித்து புத்திசாலி detective ஆனோர் சங்கம்.

♫சோம்பேறி♫ said...

/* Karthikeyan G said...
இங்கே இருவருமே தெலுங்கர்கள், இருவருமே சோம்பேறியின் ப்ளாகில் comment போடுவதில்லை என்பதையும் உங்களுக்கு நினைவுறுத்த விரும்புகிறேன். */

தவிர,

1. இருவரும், பெயருக்கும் செயலுக்கும் சம்மந்தமில்லாமல் நடந்து கொள்பவர்கள்
2. சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொண்டவர்கள்
3. என் அப்பாயிண்ட்மெண்டுக்காக காத்திருப்பவர்கள்.
4. இவர்கள் இருவர் மீதுமே பலர் கொலை வெறியில் இருக்கிறார்கள்..

(மூன்றாவது பாயிண்டுக்கும் நான்காவது பாயிண்டுக்கும் சம்மந்தமில்லை.)

இவண்,
அஸால்ட் கேள்விகளுக்கு அசத்தலாக பதில் சொல்வோர் சங்கம்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

கடைசி வரி நல்லருக்கு..:)

வெட்டிப்பயல் said...

வழக்கம் போல சூப்பர் :)

♫சோம்பேறி♫ said...

/* முத்துலெட்சுமி/muthuletchumi said...
கடைசி வரி நல்லருக்கு..:) */


'அப்போ மத்த வரியெல்லாம்'னு கேக்க மாட்டேன். ஸ்மைலியோட எஸ்ஸாகாம கருத்து சொன்னதுக்கு டேங்க்ஸ் கா..


/* வெட்டிப்பயல் said...
வழக்கம் போல சூப்பர் :) */

வழக்கம் போல நன்றி பாலாஜி. :-)

விஜய் ஆனந்த் said...

:-)))...

அப்போ நீங்க 'சத்யம்'ல வேல பாக்கலியா???

அது சரி(18185106603874041862) said...

சத்யம் ஷேர் ஹோல்டரெல்லாம் கோமணத்தோட திரியுறாய்ங்கன்னு நெனச்சேன்....இன்னுமா கோட் சூட்டோட திரியறாய்ங்க??

இப்படிக்கு,
லீமன் ப்ரதர்ஸ் ஷேர் ஹோல்டர்

சித்ரா said...

:-)))) பேட்டியும், படங்களும் சூப்பர். எங்க நண்பர் ஒருத்தர் கிட்டத்தட்ட இந்த நிலைமையில்தான் இருக்கார். (இந்த நிறுவனத்தின் முன்னாள் ஊழியர்ன்னு தனியா வேற சொல்லனுமா?)


@குடுகுடுப்பை

//30 பேரு குடும்பத்தோட சுத்தி உட்காந்திருக்காங்க ஆபிஸ்ல நான் மட்டும் தனியாய் தமிழனாய்.//

:-))) நாங்க இருந்த apartment தான் நினைவுக்கு வருது.

*இயற்கை ராஜி* said...

ha..a..ha...

♫சோம்பேறி♫ said...

/* விஜய் ஆனந்த் said...
:-)))...
அப்போ நீங்க 'சத்யம்'ல வேல பாக்கலியா??? */

இல்லை விஜய் ஆனந்த். ஆனா விஷால் & ப்ரதர்ஸ் தயாரிப்பில் வரப்போற சத்யம் - II வில் வேலை பார்க்க முயற்சி செய்துகிட்டு இருக்கேன்.


/* அது சரி said...
இன்னுமா கோட் சூட்டோட திரியறாய்ங்க?? */

இவங்க கவரிமான் மாதிரி. கோட்ல மடிப்பு கலைஞ்சாலும், அங்கயே மாண்டு மடிஞ்சுருவாங்க போல..

♫சோம்பேறி♫ said...

/* சித்ரா said...
:-)))) பேட்டியும், படங்களும் சூப்பர். */

டேங்க்ஸ் சித்ரா. :-)

/* எங்க நண்பர் ஒருத்தர் கிட்டத்தட்ட இந்த நிலைமையில்தான் இருக்கார். */

போட்டோவைக் கொஞ்சம் உத்துப் பாருங்க.. இவரு அவரா இருப்பாரோ?

/* :-))) நாங்க இருந்த apartment தான் நினைவுக்கு வருது. */

இப்போ எல்லாம் ஓக்கே தானே?



/* இய‌ற்கை said...
ha..a..ha... */

நன்றி இயற்கை..

S.A. நவாஸுதீன் said...

"சத்ய"மா சொல்லுங்க தல. இது எல்லாம் நிஜம்தானா?

♫சோம்பேறி♫ said...

நான் சொல்றதையும் சீரியஸா எடுத்துகிட்டு, நெசமானு கேக்குறதப் பாக்கும் போது, மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு.

ஆனா, சத்யமா நெசமானு எனக்குந் தெரியலையேப்ப்ப்பா...

Kathir said...

பாருங்க...
ஒரு கிசுகிசு போட்டா, எத்தனை பேரு அது உண்மையா ன்னு ஆராய்ச்சி பன்றாங்க........

கிசுகிசு படிச்சா, அனுபவிக்கனுங்க..
ஆராயக்கூடாது.....

♫சோம்பேறி♫ said...

/* Kathir said...
கிசுகிசு படிச்சா, அனுபவிக்கனுங்க..
ஆராயக்கூடாது..... */

Well said கதிர். நானும் இப்படிதான் சொல்லனும்னு நினைச்சேன். ஆனால் வெட்டிப்பயல் காப்பிரைட் கேட்டுருவாரோனு பயந்து டயலாக் மாத்திட்டேன்.

kanagu said...

செம காமெடிங்க.. அந்த ரெண்டு படமும்... :)

/*ராமலிங்க ராஜூவைத் தாக்கி வரும் பின்னூட்டங்கள் சர்வ நிச்சயமாக அனுமதிக்கப்பட மாட்டாது. (நான் மட்டும் தான் தாக்குவேன். அங்ங்ங்ங்)*/’

ஹா ஹா ஹா :)

சப்ராஸ் அபூ பக்கர் said...

தலைப்பே அமர்க்களமா இருக்கும் போது பிறகென்ன?......

வாழ்த்துக்கள்.....

♫சோம்பேறி♫ said...

/* kanagu said...
செம காமெடிங்க.. அந்த ரெண்டு படமும்... :)
ஹா ஹா ஹா :) */

ரொம்ப நன்றி கனகு..

/* சப்ராஸ் அபூ பக்கர் said...
தலைப்பே அமர்க்களமா இருக்கும் போது பிறகென்ன?......
வாழ்த்துக்கள்..... */

நன்றிங்க சப்ராஸ் அபூ பக்கர்..

விக்னேஷ்வரி said...

எப்போவும் இருக்குற சோம்பேறியோட லொள்ளு குறைவா இருக்கு.

♫சோம்பேறி♫ said...

நன்றி விக்னேஷ்வரி.. அடுத்த போஸ்ட்ல ஜாஸ்தி பண்ணிடுவோம்.. :-)

சந்தனமுல்லை said...

சோம்பேறி,

விருது கொடுத்திருக்கிறேன்!

http://sandanamullai.blogspot.com/2009/07/blog-post_15.html

வாழ்த்துகளுடனும், நன்றிகளுடனும்
முல்லை!

ஆப்பு said...

அடங்கி போறவன் இல்ல..
அடிச்சிட்டு போறவன்!!

Cinema Virumbi said...

அன்புள்ள சோம்பேறி,

//////ஏன் இன்றைய பணிகளை நாளை செய்ய வேண்டும்? நாளை மறுநாள் இருக்கும் போது :-)//////

இந்த சிந்தனையை இன்றே ஏன் செய்ய வேண்டும்? நாளை என்று ஒரு நாள் இருக்கும் போது :-)

நன்றி!

சினிமா விரும்பி

Post a Comment

தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு.

Blog Widget by LinkWithin
 
சோம்பேறி. Design by Pocket