தமிழினத் திருவிழா நல்கிய அஞ்சா நெஞ்சர் அழகிரி

Saturday 24 January, 2009

Views

நேற்று மதுரை ஆரப்பாளையத்திலிருந்து மாட்டு தாவனி பேருந்து நிலையம் வந்து சேர்வதற்குள் ஒன்றரை மணி நேரமாகி விட்டது. திரும்பிய பக்கமெல்லாம் பேனரில் மு.க.அழகிரி அவர் பருமனில் ஒரு மாலை அணிந்து கொண்டு சிரித்துக் கொண்டிருந்தார்(ஒரு பேனரில் குடும்பத்துடன்). நான் பேருந்தில் நகர்ந்து கொண்டிருந்ததால், ஒவ்வொரு பேனரிலும் கொட்டை எழுத்திலிருந்த, என்னால் படிக்க முடிந்த, நினைவிலிருக்கும் ஒரு சில வாசகங்கள் மட்டும்..

தென் தமிழகமே!!(பெரும்பாலும் எல்லா பேனரிலும் இந்த வாசகம் இருந்தது)

திருமங்கலத்தை வெற்றி கொண்ட ஆற்றல் அரசரே!!

ஜனவரி தந்த முகவரியே!!(இதன் அர்த்தம் எனக்கும் புரியவில்லை.)

பாராளுமன்றதை மாற்றி அமைக்கும் சக்தியே!!(அப்போ நாம?)


"இன்று தென் தமிழகத் தலைவனே.. நாளை பாராளுமன்றத் தலைவரே"(புகைப் படதிலுள்ள வரிகளைப் படிக்க முடியாதவர்களுக்கு)

திருமங்கலத்தில் இருந்த இந்த பேனரில் நீங்க நல்லா இருக்கோனும் என்ற M.G.R. பாடல் remix செய்யப் பட்டிருந்தது.

என்ன விசேஷம் என்று இன்னும் புரிய வில்லையா?

ஜனவரி 30 அன்று தமிழினத் திருவிழா என்று பேனரில் போட்டிருந்தது.. (மு.க.அழகிரியின் பிறந்த நாளுங்கோ!!).தமிழ் புத்தாண்டை சித்திரை ஒன்றிலிருந்து தை ஒன்றுக்கு மாற்றியது வரை தான் எனக்குத் தெரியும். ஏற்கனவே சித்திரை 1, தை 1 என்ற இரண்டு விடுமுறை தினங்களை தை ஒன்றாக மட்டும் குறைத்ததில் எனக்கு ரொம்பவே வருத்தம். இதில் இது வேறா?

நான் புகைப் படம் எடுப்பதை வாயெல்லாம் பல்லாக பார்த்துக் கொண்டிருந்த அக்காவிடம் "இந்த கண்ணாடி போட்ட குண்டு அங்கிள் யாரு?" என்று கேட்டு கடியைக் கிளப்ப எழுந்த ஆசையை அடக்கிக் கொண்டேன்.(தனியாகப் போயிருந்த காரனத்தால்)

திருமங்கலத்தை 50 கி.மீ வேகத்தில் கடந்து செல்லும் போது எதிர்பட்ட இன்னொரு பேனரில் ஜெயலலிதாவின் புகைப் படமும் அம்மா, தாயே என்ற வாசகங்களும் கண்ணில் பட்டன. ஏதாவது பிச்சைக் காரர்கள் சங்கமாக இருக்குமோ?

6 மச்சீஸ் சொல்றாங்க:

Raju said...

நல்லா கவனிச்சிருக்காய்ங்கே...

♫சோம்பேறி♫ said...

எல்லாம் மதுரைல மட்டும் தான். போகப் போக கவனிப்பு குறைஞ்சிடுச்சு.

விக்னேஷ்வரி said...

ஹாஹாஹா..... மதுரைக்காரைங்க பண்ற அலும்பு தாங்க முடியல.

சென்ஷி said...

ஹா ஹா ஹா ...

உங்க அலும்புக்கு எல்லையே இல்லை :)

Anonymous said...

//ஜெயலலிதாவின் புகைப் படமும் அம்மா, தாயே என்ற வாசகங்களும் கண்ணில் பட்டன. ஏதாவது பிச்சைக் காரர்கள் சங்கமாக இருக்குமோ? //

HA HA HA LMAO :)))))))))

shrek

Anonymous said...

//"இந்த கண்ணாடி போட்ட குண்டு அங்கிள் யாரு?" என்று கேட்டு கடியைக் கிளப்ப எழுந்த ஆசையை அடக்கிக் கொண்டேன்//

:))))

Post a Comment

தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு.

Blog Widget by LinkWithin
 
சோம்பேறி. Design by Pocket