ஏன் விளை நிலங்களை ஃப்ளாட் போட்டு விற்கக் கூடாது?

Sunday, 25 January, 2009

Viewsவரவு:

ஒரு கூடை தக்காளி(15 கிலோ) = ரூ. 15
17 கூடை தக்காளி = ரூ. 255

செலவு:

தக்காளி பறிக்க கூலி = ரூ. 160
கமிஷன் = ரூ. 26
கூடை இறக்குபவர் கூலி = ரூ. 17
சந்தை வரை டெம்போ வாடகை = ரூ. 119

கை இருப்பு = ரூ. -67(255-322)

கூலி வேலைக்கு வந்த பத்மா, செல்வி மணிக்கு ஒரு முறை குடித்த டீ, வெயிலை ஈடுகட்ட உபயொகப்படுத்திய எனது ஃபேர் அண்ட் லவ்லி பற்றி எல்லாம் புலம்ப விரும்பவில்லை. ஆனால் விருந்தாளியாக போயிருந்த என் உழைப்பு?

255 கிலோ தக்காளிகளில், தக்காளிக் காய்களைத் தனியாக எடுத்து வைக்க வேண்டும்(நாளைக்கே விலை ஏறி விடாதா என்ற நப்பாசை தான்). அழுகிய, சொத்தைப் பழங்களைத் தனியாக எடுத்து வைக்க வேண்டும்(இதையும் விலை கொடுத்து வாங்கும் அடிமட்ட மக்கள் இருக்கிறார்கள். குண்டுத் தக்காளிகளைக் கூடையின் மெற்பகுதியிலும், அடிப்பகுதியிலும் அடுக்க வேண்டும்.(ஏனென்றால், சந்தையில் கீழே கொட்டும் போது அடியில் இருக்கும் காய்களே முதலில் தெரியும்).

இது ஒரு நாள் பாடு தான். இந்த மாதிரி ஒரு நாட்களுக்காக எத்தனை மாதங்கள் கண் விழித்து தண்ணீர் திருப்பி, களை பறித்து, தொலைக் காட்சித் தொடர்களை தியாகம் செய்து, வெயிலில் வதங்கி கஷ்டப் பட்டிருப்பார்கள். இந்த லட்சணத்தில் கரண்ட் வேறு.. வரும்... ஆனா வராது...

சரி.. லாபம் வரும் போது அனுபவிக்கிறோம். நம்ம பயபுள்ளைகள் தானே சாப்பிட்டுட்டு போறாங்க என்றும் விட முடியாது. ஏனென்றால், மதுரையில், எங்கள் கிராமத்தில் இன்னும் ஒரு கிலோ தக்காளி விலை 12 ரூபாய் தான்.

இப்போ சொல்லுங்க.. ஏன் விளை நிலங்களை ஃப்ளாட் போட்டு விற்கக் கூடாது?

பன்ச் டயலாக் பேசி விட்டு மேலே எழுதக் கூடாது தான். ஆனாலும், இதை சொல்லியே ஆக வேண்டும்.

கிண்டி கத்திப் பாராவில் ஒரு பேருந்தில் செவ்வணக்கம் வைத்து விட்டு, ஏதோ மாநாட்டுக்காக உண்டியல் குலுக்கிய படி ஒரு தோழர் சொன்ன தகவல், விவசாயிகளிடம் இரண்டு ரூபாய்க்கு வாங்கப் படும் வெங்காயம், வெளி நாடுகளுக்கு இரண்டே கால் ரூபாய்க்கு அனுப்பப் படுகிறதாம். ஆனால் அதே வெங்காயம் உள்ளூர் மார்கெட்டில் 28 ரூபாய்க்கு விற்கப் படுகிறதாம்.

நான் பிதா மகன் லைலா போல "எக்ஸ்க்யூஸ் மீ.. ஒன் ருபீ" என்று ரொம்ப நேரமாக நீட்டிக் கொண்டிருந்தேன். ஆனால் அவர் பேச்சை முடித்து விட்டு கலெக்ஷனை ஆரம்பிக்குமுன், பேருந்து கிளம்பி விட்டது..

2 மச்சீஸ் சொல்றாங்க:

குடுகுடுப்பை said...

விவசாயத்துக்கு சலுகை கொடுத்தா தப்பு, அதே தொழில்முனைவோருக்கு கொடுத்தா சரி.

சோம்பேறி said...

இன்னும் சில வருடங்களில் உலகமே விவசாயிகளை நம்பி தான் இருக்கும் என்று எதிலோ படித்தேன். இந்தியா இப்போதே விழித்துக் கொண்டால் நலம். கருத்துக்கு நன்றி குடுகுடுப்பை.

Post a Comment

தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு.

Blog Widget by LinkWithin
 
சோம்பேறி. Design by Pocket