ஏன்யா? உங்களுக்கெல்லாம் மனசாட்சியே கிடையாதா?

Monday, 27 July, 2009

Views

பல பிரபலங்களும் வந்தால் தான், தங்களின் விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு, நட்சத்திர அந்தஸ்து கிடைக்குமென நினைக்கிறார்களோ என்னவோ, அவர்களை வரவழைப்பதற்காகவே, பல நூற்றாண்டுகளுக்கு முன், அவர்கள் தும்மிய துப்பிய படங்களையெல்லாம் வலை வீசித் தேடிப் பிடித்து, எல்லா விருதுகளையும் அவர்களுக்கே கொடுக்கிறார்கள்.

சிறந்த பின்னனி பாடகிக்கான, இசையருவியின் தமிழிசை விருது, ஸ்ருதிஹாசனுக்கு 'அடியே கொல்லுதே' பாடலுக்காக கொடுக்கப்பட்டதைக் கூட மன்னித்து விடலாம். 'வேர் இஸ் த பார்ட்டி.. ஆங்.. உங்க ஊட்ல பார்ட்டி' பாடலுக்காக, சிம்புவுக்கு சிறந்த பாடலாசிரியர் விருது கொடுக்கப்பட்டதைத் தான், டன் கணக்கில் இஞ்சிமரப்பா சாப்பிட்டும் ஜீரணிக்க முடியவில்லை.

கமலுக்கு தசாவதாரத்துக்காக சிறந்த கதாநாயகன் விருது கொடுக்கப்பட்டது. அவர் சார்பாக, ஸ்ருதிஹாசன் பெற்றுக் கொண்டார். ஹ்ம்ம்ம்.. நானென்னவோ விருதென்பது புதியவர்களை அடையாளப்படுத்தி, ஊக்குவிப்பதற்க்குத் தானென நினைத்துக் கொண்டிருக்கிறேன்.

பட். ஓக்கே. எல்லா விருதுகளையும் வீணடிக்கவில்லை. ராபர்ட், ஜேம்ஸ் வசந்தன், கண்கள் இரண்டால் பாடலைப் பாடியவர் (பெயர் மறந்து விட்டது) என விருதுக்குத் தகுதியான சிலருக்கும் கொடுத்திருந்தார்கள்.

ராபர்ட், விபத்தில் உடைந்த காலில் கட்டோடு, சூயிங்கம் மென்றபடி, வந்து சிறந்த நடன அமைப்பாளருக்கான விருதைப் பெற்றுக் கொண்டார். ஸ்டேஜ் ஃபியரை மறைப்பதற்காக சூயிங்கம் மென்று கொண்டிருந்தார் போல. ஆனாலும், பேட் மேனர்ஸாகத் தான் பட்டது.

டி.எம்.எஸ் நிகழ்ச்சியை ரொம்ப ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். விட்டிருந்தால் சனா கான், அனுயாவோடு ஸ்டேஜில் ஏறி ஒரு குத்து டான்ஸ் போட்டிருப்பார் போல. அவருக்கு விருது கொடுக்கப்பட்ட போது, தங்கப்ப தக்கம் சிவாஜி போல குரலை இறுக்கிக் கொண்டு, கஷ்டப்பட்டு வரவழைத்துக் கொண்ட கர்வத்துடன், 'பெரியவங்கள்லயிருந்து சின்னவங்க வரையிலும் என்னை ரசிக்காதவங்க யாருமில்ல. ஐ'ம் த பெஸ்ட்' என்ற ரீதியில் பேசினார்.

அவரது ரசிகர்கள் ரசித்திருக்கக் கூடும். அவரது குழைவான குரல் எனக்குப் பிடிக்காது என்பதால், எனக்கு அவர் பேசியது டூ மச்சாகத் தான் தோன்றியது.

*.*.*.*.*.*.*.*.*

ஸ்ரீவில்விப்புத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்டம் நேற்று முன்தினம் (சனிக்கிழமை) வெகு விமரிசையாக நடந்து முடிந்தது. ஆண்டாளின் பர்த் டேயை க்ராண்டாகக் கொண்டாடும் பொருட்டு, பத்து நாட்களுக்கு முன்பிருந்தே, கோவில் வாசலில், ஷங்கர் ரேஞ்சுக்கு பிரம்மாண்டமாக, அழகாக பந்தலிட்டு, மாலை வேளைகளில் இசை நிகழ்ச்சி, சொற்பொழிவு என்று களை கட்டிக் கொண்டிருந்தது.

கோவில் பிரசாத ஸ்டால் அருகே, ஒரு கையில் சுதர்சனமும், ஒரு கையில் சங்கும், மற்ற இரு கைகளால் புல்லாங்குழல் வாசித்துக் கொண்டும், காட்சி தரும் வேணு கோபாலரின் அரிதான சிலையை ஒட்டடை கூட அடிக்காமல் வைத்திருக்கிறார்கள். ஹ்ம்ம்ம்..

தேரோட்டத்தை எல்லா லோக்கல் சேனல்களிலும் நேரடியாக ஒளிபரப்பினார்கள். வழக்கம் போல ஆண்டாள் ஜொலித்தார்.

ஹேப்பி பர்த் டே டு யூ ஆண்டாள்.. வீ லவ் யூ..

26 மச்சீஸ் சொல்றாங்க:

S.A. நவாஸுதீன் said...

பல நூற்றாண்டுகளுக்கு முன், அவர்கள் தும்மிய துப்பிய படங்களையெல்லாம் வலை வீசித் தேடிப் பிடித்து, எல்லா விருதுகளையும் அவர்களுக்கே கொடுக்கிறார்கள்.

கெளப்புற தூசியில நமக்குத்தான் தும்மல் தும்மலா வருது.

S.A. நவாஸுதீன் said...

சிம்புவுக்கு சிறந்த பாடலாசிரியர் விருது கொடுக்கப்பட்டதைத் தான், டன் கணக்கில் இஞ்சிமரப்பா சாப்பிட்டும் ஜீரணிக்க முடியவில்லை.

என் ரிமோட் உடைஞ்சது தான் மிச்சம் இத பார்த்துட்டு

rapp said...

//பல பிரபலங்களும் வந்தால் தான், தங்களின் விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு, நட்சத்திர அந்தஸ்து கிடைக்குமென நினைக்கிறார்களோ என்னவோ, அவர்களை வரவழைப்பதற்காகவே, பல நூற்றாண்டுகளுக்கு முன், அவர்கள் தும்மிய துப்பிய படங்களையெல்லாம் வலை வீசித் தேடிப் பிடித்து, எல்லா விருதுகளையும் அவர்களுக்கே கொடுக்கிறார்கள்.//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.............இதுக்கு டைரக்டாவே என்னையெல்லாம் திட்டிருக்கலாம்:):):) ஹி ஹி, இட்ஸ் ஆல் இன் தி கேம், கேட் ஆன் தி வால் :):):)

இப்படிக்கு அதிபயங்கரமாக வாங்கினாலும் அசராதோர் சங்கம்:):):)

rapp said...

//
அவரது ரசிகர்கள் ரசித்திருக்கக் கூடும். அவரது குழைவான குரல் எனக்குப் பிடிக்காது என்பதால், எனக்கு அவர் பேசியது டூ மச்சாகத் தான் தோன்றியது.//

:):):)

//வேணு கோபாலரின் அரிதான சிலையை ஒட்டடை கூட அடிக்காமல் வைத்திருக்கிறார்கள்//

:(:(:(

♫சோம்பேறி♫ said...

/* S.A. நவாஸுதீன் said...
கெளப்புற தூசியில நமக்குத்தான் தும்மல் தும்மலா வருது. என் ரிமோட் உடைஞ்சது தான் மிச்சம் இத பார்த்துட்டு */

ப்ச்.. கரெக்ட் நவாஸ்.. எல்லாம் நம்ம கெரகம்..


/* rapp said...
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.............இதுக்கு டைரக்டாவே என்னையெல்லாம் திட்டிருக்கலாம்:):):) ஹி ஹி, இட்ஸ் ஆல் இன் தி கேம், கேட் ஆன் தி வால் :):):)
இப்படிக்கு அதிபயங்கரமாக வாங்கினாலும் அசராதோர் சங்கம்:):):) */


ஹி ஹி.. சத்தியமா அப்படி நெனச்சு எழுதல ராப்.. நேத்து அந்தப் ப்ரொக்ராம் பாத்து கொஞ்சம் கடுப்பாகிப் போச்சு. இலைமறை காயா என்னை பிரபலம்னு சொன்னதுக்காக, மறைவா உங்களுக்கு பொட்டி அனுப்பி வைக்கிறேன். தலைமறைவாயிராதீங்க.

இப்படிக்கு
பொய் பேசினா தலையில கொம்பு முளைச்சுடும்னு நம்புவோர் சங்கம்

அறிவிலி said...

சே..ச்..சே... உங்களுக்கும் நமக்கும் ரசனையே ஒத்து வர்லியே...எனக்கு டி.எம்.எஸ் பாடுன நெறய பாட்டு புடிக்கும்...

அதுக்காக இப்ப பாட சொல்லி கேக்க சொல்லக்கூடாது.

ஆண்டாள் பர்த்டேல ரொம்ப பிஸியா? ரொம்ப நாளா ஆளையே காணோம்......

♫சோம்பேறி♫ said...

/* எனக்கு டி.எம்.எஸ் பாடுன நெறய பாட்டு புடிக்கும்... */

எனக்குக் டி.எம்.எஸ் பாடியதில் எண்ணி மூன்று பாடல்கள் பிடிக்கும். அதில் ஒன்று, பொன்னெழில் பூத்தது புதுவானில் (கலங்கரை விளக்கம்) இதை ரொம்ப நாளாகத் தேடிக் கொண்டிருக்கிறேன். யாருக்காவது எங்க இருக்குதுனு தெரிஞ்சா லிங்க் குடுங்க ப்ளீஸ்..

/* ரொம்ப நாளா ஆளையே காணோம்...... */

:-)

அப்பாவி முரு said...

விருதைப் பற்றி காரசாரமாக இடுக்கையிடும் நண்பருக்கு, நான் வழங்கிய விருது http://abbavi.blogspot.com/2009/07/blog-post_19.html

பித்தன் said...

சோமஸ்..

அதிகம் நெட் பக்கம் வருது இல்ல போல... ஒரே லவ்ஸ்ஸா -:) சேமமா இருங்கோ

D.R.Ashok said...

nice som's

♫சோம்பேறி♫ said...

/* அப்பாவி முரு said...
விருதைப் பற்றி காரசாரமாக இடுக்கையிடும் நண்பருக்கு, நான் வழங்கிய விருது http://abbavi.blogspot.com/2009/07/blog-post_19.html */

விருதுக்கு ரொம்ப நன்றி அப்பாவி முரு.

/* பித்தன் said...
சோமஸ்.. சேமமா இருங்கோ */

:-) எல்லாம் உங்க ஆசீர்வாதம்.

D.R.Ashok said...
nice som's

நன்றி அஷோக்.. :-)

☀நான் ஆதவன்☀ said...

//ஸ்டேஜ் ஃபியரை மறைப்பதற்காக சூயிங்கம் மென்று கொண்டிருந்தார் போல. ஆனாலும், பேட் மேனர்ஸாகத் தான் பட்டது.//

அவர் பல பேர் முன்னால மேடையில ஆடின அனுபவம் உள்ளவர். அதுனால அது ஸ்டேஜ் ஃபியராக இருக்க வாய்ப்பில்லை. கண்டிப்பாக ஒரு அசட்டுத்தனம் தான்.

இவண்
மொக்கை பதிவிலும் குத்தம் குறை கண்டுபிடிப்போர் சங்கம்

Suresh said...

மச்சான் உன் பதிவை எதிர்ப்பாத்து காத்து இருந்தேன் ..

நல்ல வேளை நீங்க சொன்ன கொடுமை எல்லாம் நான் பார்க்கவில்லை கரண்ட் கட்..

சித்ரா said...

கூல் டவுன். கூல் டவுன். ஏன் இந்த கொடுமைய எல்லாம் பாக்கணும்? அப்பறம் டென்ஷன் ஆவணும்? (தலைப்பை பாத்ததும்,வலையுலகை நோக்கி கேள்வி கேக்கறிங்கன்னு நெனைச்சிட்டேன்) :-)

//காட்சி தரும் வேணு கோபாலரின் அரிதான சிலையை ஒட்டடை கூட அடிக்காமல் வைத்திருக்கிறார்கள்.//

ஹ்ம்ம்ம்..பதிவர்ன்னா இதை போட்டோ புடிச்சி போட வேணாமா? :-))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

சரியா சொன்னீங்க சித்ரா இப்படி வேணு கோபாலை போட்டோ எடுத்துப்போடாம .. என்ன ப்ரபல பதிவர் சோம்பேறி எல்லாம்..?

குடுத்தது தான் குடுத்தாங்க சிம்பு கையில் மைக்கையாவது குடுக்காம இருக்கலாமில்ல சும்மா சும்மா தூக்கிகொடுத்து பேசவைக்கிறாங்க.. நம்மமேல கருணயே இல்ல காம்பியர் ரெண்டு பேருக்கும்.

டி.எம்.எஸ் ஏறி ஆடுவாரோன்னு நான் நினைச்சாப்பலயே நீங்களும் நினைச்சிருக்கீங்களே..

அவரு பாட்டு எனக்குபிடிக்கும் ஆனா அவர் பேசினது எனக்குப்பிடிக்கல..

ஆனா எல்லா ப்ரபலங்களுக்கும் ( வேணா சிலபல) இந்த தன்னயே புகழ்ந்துக்கிற வியாதி உண்டு போல.. இல்லாட்டி வயசானதால கொஞ்சம் என்ன பேசன்னு தடுமாறிட்டாரா இருக்கும்.. அவர் ஸ்டைல் செய்தாரே அதை சொல்லல..

கிறுக்கன் said...

அவ்வளவு அழகான கிருஷ்னர ரசிக்கிறதை விட்டுவிட்டு
ஒட்டடைய போய் .....கவலபடாதீங்க நாங்க போய் சுத்தம் செய்ரோம்...

[பி]-[த்]-[த]-[ன்] said...

சித்ரா vum soms sum onnuthaanaa?

♫சோம்பேறி♫ said...

/* ☀நான் ஆதவன்☀ said...
கண்டிப்பாக ஒரு அசட்டுத்தனம் தான்.
இவண்
மொக்கை பதிவிலும் குத்தம் குறை கண்டுபிடிப்போர் சங்கம் */

ஆம்.. அப்படித் தான் இருக்கும்.

இவண்
சிங்கிளாக சிங்கியடிக்கும் சங்கத்து சிங்கம்


/* Suresh said...
மச்சான் உன் பதிவை எதிர்ப்பாத்து காத்து இருந்தேன் .. */

ரொம்ப நன்றி மாப்ள. ஃபுல் பாட்டில் ஃபுல்லா குடிச்ச மாதிரி இருக்கு..

/* நல்ல வேளை நீங்க சொன்ன கொடுமை எல்லாம் நான் பார்க்கவில்லை கரண்ட் கட்.. */

என் கெரகம்.. நான் போய் மாட்டிக்கிட்டேன்.

♫சோம்பேறி♫ said...

/* சித்ரா said...
கூல் டவுன். கூல் டவுன். ஏன் இந்த கொடுமைய எல்லாம் பாக்கணும்? அப்பறம் டென்ஷன் ஆவணும்? */

எனக்கும் உங்களுக்கும் டைம் பாஸாக வேணாமா? அதுக்கு தான்.. :-)

/* (தலைப்பை பாத்ததும்,வலையுலகை நோக்கி கேள்வி கேக்கறிங்கன்னு நெனைச்சிட்டேன்) :-) */

சே.. சே..

/* ஹ்ம்ம்ம்..பதிவர்ன்னா இதை போட்டோ புடிச்சி போட வேணாமா? :-)) */

முக்கியமான வேலையாக, அதி முக்கியமானவருடன் போயிருந்ததால், புகைப்படமெடுக்க முடியாமல் போய் விட்டது.. ஸாரி. நெக்ஸ்ட் டைம் தனியாகப் போகையில், இன்ச் பை இன்ச்சாக படமெடுத்து வருகிறேன்.

/* முத்துலெட்சுமி/muthuletchumi said...
நம்மமேல கருணயே இல்ல காம்பியர் ரெண்டு பேருக்கும். */

அவ்வ்வ்.. நீங்களும் பாத்தீங்களா?

/* டி.எம்.எஸ் ஏறி ஆடுவாரோன்னு நான் நினைச்சாப்பலயே நீங்களும் நினைச்சிருக்கீங்களே.. */

க்ரேட் மைண்ட்ஸ் திங்க் அலைக்..

/* அவர் ஸ்டைல் செய்தாரே அதை சொல்லல..*/

ஹா ஹா ஹா..

♫சோம்பேறி♫ said...

/* கிறுக்கன் said...
அவ்வளவு அழகான கிருஷ்னர ரசிக்கிறதை விட்டுவிட்டு
ஒட்டடைய போய் .....கவலபடாதீங்க நாங்க போய் சுத்தம் செய்ரோம்...*/

சரி செஞ்சுட்டா சரி தான்..

/*[பி]-[த்]-[த]-[ன்] said...
சித்ரா vum soms sum onnuthaanaa? */

பித்தன் யூ டூ?

சென்ஷி said...

படிச்சுட்டேன் :)

விக்னேஷ்வரி said...

இந்த முறையும் நான் தேரோட்டத்தை மிஸ் பண்ணிட்டேன். :(

♫சோம்பேறி♫ said...

/* சென்ஷி said...
படிச்சுட்டேன் :) */


சரி சென்ஷி.. நெட் வொர்க் ஆக ஆரம்பிச்சுடுச்சு போல?


/* விக்னேஷ்வரி said...
இந்த முறையும் நான் தேரோட்டத்தை மிஸ் பண்ணிட்டேன். :( */

ஓ? ப்ச்.. பரவாயில்ல விக்னேஷ்வரி.. நெக்ஸ்ட் டைம் பாத்துக்கலாம்.. எப்போ ஊருக்கு வரீங்க?

S.A. நவாஸுதீன் said...

எங்கே நண்பா போயிட்டீங்க. ரொம்ப நாளாக் காணோமே.

Bogy.in said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

இவன்
http://www.bogy.in

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

Post a Comment

தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு.

Blog Widget by LinkWithin
 
சோம்பேறி. Design by Pocket