இந்த போஸ்டை இன்னும் அஞ்சு நிமிஷத்துல தூக்கிடுவேன். கமான்.. ஹரி அப்..

Friday, 17 July, 2009

Viewsசந்தனமுல்லை மற்றும் நவாஸூதீன் சுவாரஸியமான வலைப்பூவிற்கான விருதை எனக்கும் கொடுத்திருக்கிறார்கள். சந்தோஷம். என் விருதை நானே வைத்துக் கொண்டு, மற்ற பதிவர்களுக்கு வேறு விருதுகள் கொடுக்கிறேன்.

யாராருக்கு எதெது பொருந்துதோ, புடிச்சிருக்கோ அள்ளிக்கிட்டு போங்க..

சிட்டுக் குருவி விருது : ஜொள்ளு, குஜால் பதிவெழுதும் பதிவர்களுக்கு.


கழுகு விருது : சுட்டி டிவியில் வரும் டோரா புஜ்ஜியிலும், விஜய் படங்களிலும் கூட லாஜிக் தேடும் பதிவர்களுக்கு.

கிங்ஃபிஷர் விருது : சரக்கு பற்றியே எழுதும் பதிவர்களுக்கு.


மயில் விருது : உள்ளே மேட்டர் ஒன்றும் இல்லாவிட்டாலும், பார்க்க அழகாக தோற்றமளிக்கும் வலைப்பூக்களுக்கு

சண்ட கோழி விருது : அடிக்கடி சர்ச்சைக்குள்ளாகும் வலைப்பூவிற்கு. (இந்த விருதை டோட்டல் தமிழ்மணத்திற்கே கொடுக்க பரிந்துரைக்கிறேன்)


எஸ்.ஜே சூர்யா இயக்கத்தில், சிம்புவுக்கு ஜோடியாக நடிக்கும் படம் முழுக்க, நமீதாவை சுடிதாரில் பார்த்து விடுவது கூட சாத்தியமாகி விடும். தனி நபர் தாக்குதல் இல்லாத தமிழ்மணத்தை பார்க்கவே முடியாது போல.

சக்கரைக்குப் போட்டி வந்திருப்பது, கார்க்கியின் வலைப்பூ ஹேக் செய்யப்பட்டது தவிர, நான் ஊரில் இல்லாத இந்த ஒரு வாரத்தில் ஜூடாக ஏதாவது நடந்திருந்தால், பின்னூட்டத்தில் லிங்க் கொடுக்கவும். அழிக்கப்பட்ட ஜூடான இடுகைகளைப் பின்னூட்டங்களுடன் காப்பி செய்து வைத்திருப்பவர்கள், எனக்கு மெயிலவும். இதுவரை அழிக்கப்பட்ட அனைத்து சண்டைகளையும் (வித் கமெண்ட்ஸ்) காப்பி செய்து வைத்திருக்கிறேன். பிரதியுபகாரமாக அவையனைத்தும் உங்களுக்கு மெயில் செய்யப்படும்.

சென்னை சென்றிறங்கியதும் முதன் முதலில் என் கண்ணில் பட்டது, ஜோதி தியேட்டரிலிருந்த மகா மெகா சைஸ் நாடோடிகள் திரைப்பட பேனர் தான். ஜோதி தியேட்டரில் இப்போது ஷகிலா படங்கள் போடுவதில்லையா.. அல்லது திருட்டுத்தனமாக ஓட்டுகிறார்களா என தெரியவில்லை. எதிரிலிருந்த பொட்டிக்கடையில் நமது பதிவர்கள் யாராவது தென்படுகிறார்களா என்று தேடிப்பார்த்தேன். இல்லை. ஹ்ம்ம்ம்.. அப்போ நிஜமாவே நாடோடிகள் தான் ஓடுது போல..

43 மச்சீஸ் சொல்றாங்க:

Anonymous said...

:-)))) தலைப்பே கலக்கலா இருக்கே. ம்ம்ம்ம் ..... நடத்துங்க ...நடத்துங்க.

Karthikeyan G said...

யாருங்க அந்த ஹரி.. அவர மட்டும் அப்ப சொல்றீங்க..

இவன்,
'கழுகு விருது' contestant.

Anonymous said...

:-))))) தலைப்பே கலக்கலா இருக்கே. ம்ம்ம் ... நடத்துங்க... நடத்துங்க....

சித்ரா

விக்னேஷ்வரி said...

விருது எல்லாமே ஜூப்பர். வர வர சோம்பேறிக்கு குசும்பு அதிகமாயிடுச்சு. ஆனா, இதை இதை இதைத் தான் நான் எதிர்பார்த்தேன்.

யோவ், உங்கூருக்கு தான் வர்றேன். ஏதாவது பொண்ணுங்க காலேஜ் பக்கம் சுத்திக்கிட்டு இருக்காம வந்து பாருங்க. இல்ல, உங்க ஐத்தை பொண்ணு கிட்ட போட்டு குடுத்துடுவேன்.

♫சோம்பேறி♫ said...

/* Karthikeyan G said...
யாருங்க அந்த ஹரி.. அவர மட்டும் அப்ப சொல்றீங்க.. */

அவ்வ்வ்.. உங்களுக்கு சண்டைக்கோழி விருதளிக்கிறேன்.

/* Anonymous said...
:-))))) தலைப்பே கலக்கலா இருக்கே. ம்ம்ம் ... நடத்துங்க... நடத்துங்க....
சித்ரா */

ஹாய் சித்ரா.. ஓக்கே.. நடத்திருவோம்.. (முதல் கமெண்ட் போட்டது உங்க போலியா?)

சந்தனமுல்லை said...

:-))))

சென்ஷி said...

:)

welcome back

rapp said...

கலக்கல்ஸ் ஆப் உங்கூரு :):):) சூப்பரோ சூப்பர் :):):)

//எஸ்.ஜே சூர்யா இயக்கத்தில், சிம்புவுக்கு ஜோடியாக நடிக்கும் படம் முழுக்க, நமீதாவை சுடிதாரில் பார்த்து விடுவது கூட சாத்தியமாகி விடும்.//

இதில் சந்திப்பிழையோ சாந்திப்பிழையோ, இல்ல அதுமாதிரி வேறேதோ பிழையோ இருக்கு. எப்புடி?:):):)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:))
5 நிமிசத்துக்கும் மேல ஆச்சே ஏன் எடுக்கல..
சரியான சோம்பேறி தான் போல..

சென்ஷி said...

//மயில் விருது : உள்ளே மேட்டர் ஒன்றும் இல்லாவிட்டாலும், பார்க்க அழகாக தோற்றமளிக்கும் வலைப்பூக்களுக்கு
//

அப்ப நான் இந்த விருதை எடுத்துக்கறேன்! :)

☀நான் ஆதவன்☀ said...

கிங்ஃபிஷர் விருதை வால் பையனுக்கு பரிந்துரைக்கிறேன்.

சக்திவேல் அண்ணன் பற்றி இன்னும் தெரியாது போலயிருக்கே உங்களுக்கு!

♫சோம்பேறி♫ said...

/* விக்னேஷ்வரி said...
விருது எல்லாமே ஜூப்பர். வர வர சோம்பேறிக்கு குசும்பு அதிகமாயிடுச்சு. */

நன்றி விக்னேஷ்வரி.. வரும்போது கண்டிப்பா மீட் பண்ணுவோம்..

/* சந்தனமுல்லை said...
:-)))) */

:-))))))))) சந்தனமுல்லை..

/* சென்ஷி said...
:)
welcome back */

டேங்க்ஸ் சென்ஷி.. :-) சேம் டூ யூ..

♫சோம்பேறி♫ said...

/* rapp said...
கலக்கல்ஸ் ஆப் உங்கூரு :):):) சூப்பரோ சூப்பர் :):):) */

நன்றியோ நன்றி ஆப் பாரிஸ் ராப்..

/* இதில் சந்திப்பிழையோ சாந்திப்பிழையோ, இல்ல அதுமாதிரி வேறேதோ பிழையோ இருக்கு. எப்புடி?:):):) */

கழுகு விருது காலவரையற்ற நிபந்தனையின்றி உங்களுக்குக் கொடுக்கப்படுகிறது.


/* முத்துலெட்சுமி/muthuletchumi said... :))
5 நிமிசத்துக்கும் மேல ஆச்சே ஏன் எடுக்கல..
சரியான சோம்பேறி தான் போல.. */

ஹி ஹி.. வலைப்பூ கேப்ஷனை இன்னொரு தபா ரிப்பீட்டிக்கிறேன்.

♫சோம்பேறி♫ said...

/* சென்ஷி said...
அப்ப நான் இந்த விருதை எடுத்துக்கறேன்!:)*/

கண்டிப்பா நோ சென்ஷி.. உங்களுக்கு வேற சூப்பர் விருது தரேன்.


/* ☀நான் ஆதவன்☀ said...
கிங்ஃபிஷர் விருதை வால் பையனுக்கு பரிந்துரைக்கிறேன். */

நான் ரிப்பீட்டுகிறேன்..

/* சக்திவேல் அண்ணன் பற்றி இன்னும் தெரியாது போலயிருக்கே உங்களுக்கு! */

ஆல் டீட்ட்டெய்ல்ஸ்ஸ் ஐ நோ.. இன்னிக்கு காலையில முதல் வேலையா அங்கே தான் போய் கமெண்ட் போட்டிருக்கேன்.

அறிவிலி said...

//எதிரிலிருந்த பொட்டிக்கடையில் நமது பதிவர்கள் யாராவது தென்படுகிறார்களா என்று தேடிப்பார்த்தேன்//

இது நிச்சயமாக தனிமனித தாக்குதல்தான். கூடிய விரைவில் எதிர் பதிவு.

சித்ரா said...

ஆ..ஆ .. போலியா? நான் பதிவர் கூட இல்லையேப்பா....

அவ்வ் .... 5 நிமிஷத்துல தூக்கப்போற போஸ்ட்டுக்கு எதுக்கு கமென்ட் போடனும்ன்னு யோசிச்சதில பேரை டைப்ப மறந்து போச்சு. :-)))

சித்ரா said...

/ நன்றி விக்னேஷ்வரி.. வரும்போது கண்டிப்பா மீட் பண்ணுவோம்.. . .//

விக்னேஷ்வரி,
உங்க போஸ்ட்டுக்காக நெறைய பேர் வெய்ட்டிங். ஏமாத்திடாதீங்கோவ்வ்வ்....

அன்புடன் அருணா said...

சோம்பேறி நிறைய யோசிக்கிறாப்புல தெரியுதே!!!

♫சோம்பேறி♫ said...

/* அறிவிலி said...
இது நிச்சயமாக தனிமனித தாக்குதல்தான். கூடிய விரைவில் எதிர் பதிவு. */

இல்லை. இது குழு தாக்குதல். 'உங்களுடைய' எதிர்பதிவை எதிர்பார்க்கிறேன் அறிவிலி.


/* சித்ரா said...
ஆ..ஆ .. போலியா? நான் பதிவர் கூட இல்லையேப்பா.... */

என்ன சித்ரா. அப்போ நிஜமாவே இல்லையா?

/* சித்ரா said...
உங்க போஸ்ட்டுக்காக நெறைய பேர் வெய்ட்டிங். ஏமாத்திடாதீங்கோவ்வ்வ்.... */

:-)

gulf-tamilan said...

5 நிமிடத்திற்கு மேலாகிவிட்டது. இன்னும் தூக்கலே???

PPattian : புபட்டியன் said...

Kewl... கலக்கல்..

பதி said...

;)))))))))))

Thekkikattan|தெகா said...

சட்டுப் புட்டுன்னு தூக்கினா, அடுத்த வூட்டுக்கு போகலாம்ல - எங்களுக்கும் நாலு வூடு இருக்கில்ல... :))

குடுகுடுப்பை said...

இதுல எந்த விருத நான் எடுத்துக்கட்டும்.

மதி.இண்டியா said...

அது சரி , ஹரிங்கறது யாருன்னு கடைசி படைக்கும் சொல்லவே இல்லையே

♫சோம்பேறி♫ said...

/* அன்புடன் அருணா said...
சோம்பேறி நிறைய யோசிக்கிறாப்புல தெரியுதே!!! */

ப்ச்.. ப்ச்.. இல்ல அருணா.. லைட்ட்ட்டாஹ்..

/* gulf-tamilan said...
5 நிமிடத்திற்கு மேலாகிவிட்டது. இன்னும் தூக்கலே??? */

என் பெயரையும், வலைப்பூ கேப்ஷனை மறுக்கா படிக்கவும். :-)

/* PPattian : புபட்டியன் said...
Kewl... கலக்கல்.. */

நன்றி புபட்டியன். :-)


/* பதி said...
;))))))))))) */

:)))))))))))))))))))))))) பதி..

♫சோம்பேறி♫ said...

/* Thekkikattan|தெகா said...
சட்டுப் புட்டுன்னு தூக்கினா, அடுத்த வூட்டுக்கு போகலாம்ல - எங்களுக்கும் நாலு வூடு இருக்கில்ல... :)) */

அவ்வ்வ்வ்.. விட்டா என் ப்ளாகை ஹேக் பண்ணி நீங்கலே பதிவைத் தூக்கிடுவீங்க போல.

/* குடுகுடுப்பை said...
இதுல எந்த விருத நான் எடுத்துக்கட்டும். */

வாழைக்காய் வெட்டுறது பத்தி எழுதுறீங்கள்ல உங்களுக்கு கன்ஃபார்ம்டா சிட்டுக்குருவி விருது தான்.

/* மதி.இண்டியா said...
அது சரி , ஹரிங்கறது யாருன்னு கடைசி படைக்கும் சொல்லவே இல்லையே */

யூ டூ மதி.. சண்டைக்கோழி விருது பகிரப் படுகிறது.

வினோத்கெளதம் said...

அடடா..

நசரேயன் said...

நீங்க ரெம்ப நல்லவருன்னு நான் தான் சொன்னேன்

ஊர்சுற்றி said...

நல்லா கிளப்புறாய்ங்கப்பா பீதிய... :)

♫சோம்பேறி♫ said...

/* வினோத்கெளதம் said...
அடடா.. */

அடடடடா.. (இன்னும் தூக்கலைனு ஃபீல் பண்றீங்களோ வினோத்?)


/* நசரேயன் said...
நீங்க ரெம்ப நல்லவருன்னு நான் தான் சொன்னேன் */

ஓக்கே.. ஓக்கே.. நசரேயன்.. இந்த ஐந்து விருதுகள் மட்டுமல்ல.. நோபல், ஆஸ்கார், ஃபில்ம் ஃபேர் எல்லா விருதுகளும் உங்களுக்கே..


/* ஊர்சுற்றி said...
நல்லா கிளப்புறாய்ங்கப்பா பீதிய... :) */

சும்ம்மா அதிருதுல்ல.. பதறுதுல்ல.. உதறுதுல்ல.. :-))

பித்தன் said...

நேக்கு ஒரு விருது கொடுக்கப்படாதா ?

S.A. நவாஸுதீன் said...

எனக்கு மயில் விருது. உங்க விருது வாங்க என்னோட ப்லோக் பக்கம் வாங்க தல

தேவன் மாயம் said...

விருதுகள் நல்லாயிருக்கு தம்பி!!

SanjaiGandhi said...

கோவை வரும் விக்னேஷ்வரியின் தலைமையில் மயில் விருது சோம்பேறிக்கு வழங்கி கவுர விக்கப் படும். :)

ஆறிப் போன புண்ணை கீறிவிடும் பதிவர்களுக்கு எதும் விருதில்லையா சாமி?

♫சோம்பேறி♫ said...

/* பித்தன் said...
நேக்கு ஒரு விருது கொடுக்கப்படாதா ? */

ஒரு விருதா? உங்களுக்குப் புடிச்ச அத்தனை விருதையும் அள்ளிக்கிட்டு போங்க பித்தன்..


/* S.A. நவாஸுதீன் said...
எனக்கு மயில் விருது. */

உங்களுக்கு மயில் விருது குடுத்தா, உங்க குடும்பத்தைப் பத்தின நெகிழ்வான 32 பதிவை படிச்சவங்க என்னை அடிக்க வந்துருவாங்களே நவாஸ்.

/* உங்க விருது வாங்க என்னோட ப்லோக் பக்கம் வாங்க தல */

கம்மிங் நவாஸ்..

/* தேவன் மாயம் said...
விருதுகள் நல்லாயிருக்கு தம்பி!! */

ரொம்ப நன்றி அண்ணே..

/* SanjaiGandhi said...
மயில் விருது சோம்பேறிக்கு வழங்கி கவுர விக்கப் படும். :) */

டேங்க்ஸ்.. பட். நோ டேங்க்ஸ் சஞ்சய்.. அல்ரெடி எனக்குக் கொடுக்கப்பட்ட பல விருதுகள், வைக்க இடமில்லாமல் விக்கப் பட்டு விட்டன. உங்க டைம் வேஸ்ட் பண்ணி நீங்க வேற தனியா எந்த கவுரயும் விக்க வேண்டாம்.. :-)

/* ஆறிப் போன புண்ணை கீறிவிடும் பதிவர்களுக்கு எதும் விருதில்லையா சாமி? */

நோபல் பரிசே கொடுக்கலாம் பாஸ்.

நாமக்கல் சிபி said...

:)

நாமக்கல் சிபி said...

எல்லோரும் பார்த்துக்குங்க! நான் இங்க பின்னூட்டம் போட்டிருக்கேன்!

♫சோம்பேறி♫ said...

/* நாமக்கல் சிபி said...
:) */


புன்னகைக்கு நன்றி சிபி.. :-))))))))))))))))))))))


/* நாமக்கல் சிபி said...
எல்லோரும் பார்த்துக்குங்க! நான் இங்க பின்னூட்டம் போட்டிருக்கேன்! */

ஏன் சிபி? இங்க கமெண்ட் போட்டா ஏதாவது ரிவார்டு தர்றாங்களா? இது தெரியாம நான் இங்க ஃப்ரீயா பல கமெண்ட் போட்டுட்டேனேப்பா!

(இல்லாட்டி தல சக்தி பேரை யூஸ் பண்ணினதுக்காகவா?)

Anonymous said...

இன்னைக்கு தான் உங்க வலைக்கு வரேன்.. உங்க தலைப்புக்கு நீங்க கொடுத்த விளக்கம் ஜுபெர்று... ரொம்ப நன்னா இருக்கு..

♫சோம்பேறி♫ said...

ரொம்ப நன்றி மயில் :-)

Suresh said...

:-) Super awards

ada chennailaiya irunthinga solla kudathu nan oru velaiya 4 naal chennai vanthu irunthaen...

Nalla viruthu sari sirantha somberi nu oru award potta nan vangi irupaen ;) ungaluku aduthu

thodranthu kalakunga thalai

முகிலன் said...

பின்னூட்டம் மட்டுமே போடுற ஆளுங்களுக்கு விருது எதுவும் இல்லையா?

Post a Comment

தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு.

Blog Widget by LinkWithin
 
சோம்பேறி. Design by Pocket