ஏன்யா? உங்களுக்கெல்லாம் மனசாட்சியே கிடையாதா?

Monday 27 July, 2009

பல பிரபலங்களும் வந்தால் தான், தங்களின் விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு, நட்சத்திர அந்தஸ்து கிடைக்குமென நினைக்கிறார்களோ என்னவோ, அவர்களை வரவழைப்பதற்காகவே, பல நூற்றாண்டுகளுக்கு முன், அவர்கள் தும்மிய துப்பிய படங்களையெல்லாம் வலை வீசித் தேடிப் பிடித்து, எல்லா விருதுகளையும் அவர்களுக்கே கொடுக்கிறார்கள்.

சிறந்த பின்னனி பாடகிக்கான, இசையருவியின் தமிழிசை விருது, ஸ்ருதிஹாசனுக்கு 'அடியே கொல்லுதே' பாடலுக்காக கொடுக்கப்பட்டதைக் கூட மன்னித்து விடலாம். 'வேர் இஸ் த பார்ட்டி.. ஆங்.. உங்க ஊட்ல பார்ட்டி' பாடலுக்காக, சிம்புவுக்கு சிறந்த பாடலாசிரியர் விருது கொடுக்கப்பட்டதைத் தான், டன் கணக்கில் இஞ்சிமரப்பா சாப்பிட்டும் ஜீரணிக்க முடியவில்லை.

கமலுக்கு தசாவதாரத்துக்காக சிறந்த கதாநாயகன் விருது கொடுக்கப்பட்டது. அவர் சார்பாக, ஸ்ருதிஹாசன் பெற்றுக் கொண்டார். ஹ்ம்ம்ம்.. நானென்னவோ விருதென்பது புதியவர்களை அடையாளப்படுத்தி, ஊக்குவிப்பதற்க்குத் தானென நினைத்துக் கொண்டிருக்கிறேன்.

பட். ஓக்கே. எல்லா விருதுகளையும் வீணடிக்கவில்லை. ராபர்ட், ஜேம்ஸ் வசந்தன், கண்கள் இரண்டால் பாடலைப் பாடியவர் (பெயர் மறந்து விட்டது) என விருதுக்குத் தகுதியான சிலருக்கும் கொடுத்திருந்தார்கள்.

ராபர்ட், விபத்தில் உடைந்த காலில் கட்டோடு, சூயிங்கம் மென்றபடி, வந்து சிறந்த நடன அமைப்பாளருக்கான விருதைப் பெற்றுக் கொண்டார். ஸ்டேஜ் ஃபியரை மறைப்பதற்காக சூயிங்கம் மென்று கொண்டிருந்தார் போல. ஆனாலும், பேட் மேனர்ஸாகத் தான் பட்டது.

டி.எம்.எஸ் நிகழ்ச்சியை ரொம்ப ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். விட்டிருந்தால் சனா கான், அனுயாவோடு ஸ்டேஜில் ஏறி ஒரு குத்து டான்ஸ் போட்டிருப்பார் போல. அவருக்கு விருது கொடுக்கப்பட்ட போது, தங்கப்ப தக்கம் சிவாஜி போல குரலை இறுக்கிக் கொண்டு, கஷ்டப்பட்டு வரவழைத்துக் கொண்ட கர்வத்துடன், 'பெரியவங்கள்லயிருந்து சின்னவங்க வரையிலும் என்னை ரசிக்காதவங்க யாருமில்ல. ஐ'ம் த பெஸ்ட்' என்ற ரீதியில் பேசினார்.

அவரது ரசிகர்கள் ரசித்திருக்கக் கூடும். அவரது குழைவான குரல் எனக்குப் பிடிக்காது என்பதால், எனக்கு அவர் பேசியது டூ மச்சாகத் தான் தோன்றியது.

*.*.*.*.*.*.*.*.*

ஸ்ரீவில்விப்புத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்டம் நேற்று முன்தினம் (சனிக்கிழமை) வெகு விமரிசையாக நடந்து முடிந்தது. ஆண்டாளின் பர்த் டேயை க்ராண்டாகக் கொண்டாடும் பொருட்டு, பத்து நாட்களுக்கு முன்பிருந்தே, கோவில் வாசலில், ஷங்கர் ரேஞ்சுக்கு பிரம்மாண்டமாக, அழகாக பந்தலிட்டு, மாலை வேளைகளில் இசை நிகழ்ச்சி, சொற்பொழிவு என்று களை கட்டிக் கொண்டிருந்தது.

கோவில் பிரசாத ஸ்டால் அருகே, ஒரு கையில் சுதர்சனமும், ஒரு கையில் சங்கும், மற்ற இரு கைகளால் புல்லாங்குழல் வாசித்துக் கொண்டும், காட்சி தரும் வேணு கோபாலரின் அரிதான சிலையை ஒட்டடை கூட அடிக்காமல் வைத்திருக்கிறார்கள். ஹ்ம்ம்ம்..

தேரோட்டத்தை எல்லா லோக்கல் சேனல்களிலும் நேரடியாக ஒளிபரப்பினார்கள். வழக்கம் போல ஆண்டாள் ஜொலித்தார்.

ஹேப்பி பர்த் டே டு யூ ஆண்டாள்.. வீ லவ் யூ..

இந்த போஸ்டை இன்னும் அஞ்சு நிமிஷத்துல தூக்கிடுவேன். கமான்.. ஹரி அப்..

Friday 17 July, 2009



சந்தனமுல்லை மற்றும் நவாஸூதீன் சுவாரஸியமான வலைப்பூவிற்கான விருதை எனக்கும் கொடுத்திருக்கிறார்கள். சந்தோஷம். என் விருதை நானே வைத்துக் கொண்டு, மற்ற பதிவர்களுக்கு வேறு விருதுகள் கொடுக்கிறேன்.

யாராருக்கு எதெது பொருந்துதோ, புடிச்சிருக்கோ அள்ளிக்கிட்டு போங்க..

சிட்டுக் குருவி விருது : ஜொள்ளு, குஜால் பதிவெழுதும் பதிவர்களுக்கு.


கழுகு விருது : சுட்டி டிவியில் வரும் டோரா புஜ்ஜியிலும், விஜய் படங்களிலும் கூட லாஜிக் தேடும் பதிவர்களுக்கு.

கிங்ஃபிஷர் விருது : சரக்கு பற்றியே எழுதும் பதிவர்களுக்கு.


மயில் விருது : உள்ளே மேட்டர் ஒன்றும் இல்லாவிட்டாலும், பார்க்க அழகாக தோற்றமளிக்கும் வலைப்பூக்களுக்கு

சண்ட கோழி விருது : அடிக்கடி சர்ச்சைக்குள்ளாகும் வலைப்பூவிற்கு. (இந்த விருதை டோட்டல் தமிழ்மணத்திற்கே கொடுக்க பரிந்துரைக்கிறேன்)


எஸ்.ஜே சூர்யா இயக்கத்தில், சிம்புவுக்கு ஜோடியாக நடிக்கும் படம் முழுக்க, நமீதாவை சுடிதாரில் பார்த்து விடுவது கூட சாத்தியமாகி விடும். தனி நபர் தாக்குதல் இல்லாத தமிழ்மணத்தை பார்க்கவே முடியாது போல.

சக்கரைக்குப் போட்டி வந்திருப்பது, கார்க்கியின் வலைப்பூ ஹேக் செய்யப்பட்டது தவிர, நான் ஊரில் இல்லாத இந்த ஒரு வாரத்தில் ஜூடாக ஏதாவது நடந்திருந்தால், பின்னூட்டத்தில் லிங்க் கொடுக்கவும். அழிக்கப்பட்ட ஜூடான இடுகைகளைப் பின்னூட்டங்களுடன் காப்பி செய்து வைத்திருப்பவர்கள், எனக்கு மெயிலவும். இதுவரை அழிக்கப்பட்ட அனைத்து சண்டைகளையும் (வித் கமெண்ட்ஸ்) காப்பி செய்து வைத்திருக்கிறேன். பிரதியுபகாரமாக அவையனைத்தும் உங்களுக்கு மெயில் செய்யப்படும்.

சென்னை சென்றிறங்கியதும் முதன் முதலில் என் கண்ணில் பட்டது, ஜோதி தியேட்டரிலிருந்த மகா மெகா சைஸ் நாடோடிகள் திரைப்பட பேனர் தான். ஜோதி தியேட்டரில் இப்போது ஷகிலா படங்கள் போடுவதில்லையா.. அல்லது திருட்டுத்தனமாக ஓட்டுகிறார்களா என தெரியவில்லை. எதிரிலிருந்த பொட்டிக்கடையில் நமது பதிவர்கள் யாராவது தென்படுகிறார்களா என்று தேடிப்பார்த்தேன். இல்லை. ஹ்ம்ம்ம்.. அப்போ நிஜமாவே நாடோடிகள் தான் ஓடுது போல..

முடிஞ்சு போனதை சொறிஞ்சு விடுறதுனா என்ன?

Thursday 9 July, 2009


சத்யம் ராமலிங்க ராஜூவுடன் சமீபத்தில் நான் எடுத்த பேட்டி பதிவின் இறுதியில்...

சத்யத்தின் வீழ்ச்சி எங்கு ஆரம்பமானது என்ற அதிகாரப்பூர்வமில்லாத கிசுகிசுவைப் படிக்க ஆர்வமுள்ளவர்கள் தொடர்ந்து படிக்கவும். பேட்டி மட்டும் போதும் என்று சொல்பவர்கள், ஸ்க்ரோல் டவுன் செய்து, நேராக பதிவின் இறுதிக்கு செல்லவும்.

கிசுகிசு

சத்யம் தன்னை வஞ்சித்து விட்டதாக உலக வங்கி, சத்யத்துடனான உறவை முறித்துக் கொண்டது அனைவருக்கும் தெரிந்தது. ஆனால் உண்மையில், உலக வங்கியின் காவாளித்தனமும், ஒரு கருப்பாடின் மொள்ளமாரித்தனமும் தான், சத்யத்தின் முதல் வீழ்ச்சிக்கு காரணமாம்.

உலக வங்கிக்கு சத்யம் செய்து கொண்டிருந்த ப்ராஜெக்டின் ரிப்போர்ட்டை, முறைப்படி சத்யம் வெளியிடும் முன்பே, வேறு ஒரு கருப்பு ஆடு மலிவான விலைக்கு உலக வங்கிக்கு விற்று விடவே, முறைப்படி வந்த ரிப்போர்டை, பெரும்பொருள் கொடுத்து வாங்க உலக வங்கி மறுத்து விட்டது. மேலும் இன்று தன்னிடம் விற்ற அந்த ப்ளாக் ஷீப், நாளை தன் எதிரணியிடம் தன் ரகசியங்களைக் கொடுத்து விட்டால், தன் கதி அதோ கதி தான் என்றுணர்ந்து, சத்யத்துக்கு பெப்பே காட்டி விட்டது.

2003னில் 10 மில்லியன் டாலரில் ஆரம்பித்து, 2007லில் 100 மில்லியன் டாலராக வளர்ந்திருந்த அந்த கான்ட்ராக்டை, 'உங்கள் சென்னை அலுவலகக் கணினி, எங்கள் வாஷிங்டன் அலுவலகத்தின் நாற்பது கணினிகளின் தகவல்களைத் திருடி விட்டது' என்று காரணம் காட்டி, ராஜூவுக்கு டாட்டா காட்டி விட்டு, ரத்தன் டாட்டாவுடன் கூட்டு சேர்ந்து கொண்டது.

நீதி : நீ புத்திசாலினு நினைக்கிறது தப்பில்ல. அது ஓரளவு உண்மையா கூட இருக்கலாம். ஆனா இந்த உலகத்திலேயே, நீ மட்டும் தான் புத்திசாலினு நெனச்சுடக் கூடாது.

சோக்கு

ரெண்டு பேர், அம்பதாவது மாடியிலயிருந்து குதிக்க ரெடியா நின்னாங்களாம்..

நம்பர் 1 : இதோட நூறாவது தடவையா குதிக்கிறேன். நான் ஒரு கின்னஸ் ரெக்கார்ட் ஹோல்டர். நீங்க?


நம்பர் 2 : நான் ஒரு சத்யம் ஷேர் ஹோல்டர்

பேட்டி


பொருப்பு அறிவித்தல்

ராமலிங்க ராஜூவைத் தாக்கி வரும் பின்னூட்டங்கள் சர்வ நிச்சயமாக அனுமதிக்கப்பட மாட்டாது. (நான் மட்டும் தான் தாக்குவேன். அங்ங்ங்ங்)

எனக்கும் வாசகர்கள் கடிதம் வந்திருச்சுடோய்ய்ய்ய்.. (மவனே.. கீசிடுவேன்)

Tuesday 7 July, 2009

(முன் குறிப்பு : உங்களுக்கு சிரிப்பு வரவில்லை என்பதற்காக சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டாம். யாரையும் புண்படுத்தும் நோக்கமல்ல.)


டியர் சோம்பேறி,

நீங்க ரொம்ப நல்லா எழுதுறீங்க மச்சி. முக்கியமா "என்னைப் பாத்தா $&*%$&*& மாதிரி இருக்கா" கதை படிச்சு படிச்சு வயிறே புண்ணாக்காகிடுச்சு. புரோட்டா குமாரின் உருவம் மனதில் இன்னும் நிற்குது.

நான் இதுக்கு முன்னாடி இப்படி மெயில் அனுப்பினது ஜாக்கி சானுக்கு மட்டும் தான். நீங்க என்ன மறுபடியும் எழுத வச்சிட்டீங்க. உங்க பதிவுக்கு பின்னூட்டம் போடனும்னு நெனைக்கும் போதெல்லாம், நீங்க குவாட்டர் அடிச்சுட்டு குப்புற விழுந்து கெடப்பீங்களோன்னு நெனச்சு தான் இப்ப மெயில் அனுப்புறேன். நமீதா-வ உங்க "நமீதாவுக்கும் உங்களுக்கும் ஒரு இதுவாமே" போஸ்ட் மூலமா தான் தெரிஞ்சிக்கிட்டேன்.

நீங்க $#%$%ன் வலைப்பூவில் ஒரு அனானி கமெண்ட் எழுதிருப்பீங்க "இனிமே எழுதினே கீசிடுவேன்"-ன்னு, அதே தான் இப்ப உங்களுக்கு நான் சொல்றேன் "மவனே! இனிமே எழுதினே கீசிடுவேன்". இது கடிதம் என்று தயவு செய்து நினைத்து விடாதீர்கள். கட்டளை...

இப்படிக்கு,
Mr. கொலவெறி குப்பன்

மை டியர் குட்டி சாத்தான் ஸாரி.. லொலவெறி குப்பன்,

நான் எப்போதோ எழுதுவதை நிறுத்தி விட்டேன். இப்போதெல்லாம் தட்டச்சுகிறேன்.

*.*.*.*.*.*.*.*.*.*

அன்புள்ள சோம்பேறி,

இரண்டு ஆண்டுகளாக உங்களை வாசிக்கிறேன். உருப்படியாக ஒன்றும் இருந்ததில்லை. ஆனாலும் சுவாரஸ்யத்துக்கு குறைவில்லை. விரைவில் உருப்படியாக எழுத ஆரம்பிப்பீர்கள் என்று எதிர்பார்க்கிறேன். நிகழுமா?

கு. கந்தசாமி, ஸ்பெய்ன்

அன்புள்ள கந்தசாமி,

நான் எழுத ஆரம்பித்தே ஆறு மாதங்கள் தான் ஆகிறது. ஒருவேளை இன்னும் நாற்பது வருடங்கள் கழித்து நீங்கள் எதிர்பார்க்கும் படியான விபரீதமெதுவும் நிகழலாம்.

பை த வே, ஸ்பெயினிலிருந்து வரும் போது, சாக்லேட்டும், செண்ட் பாட்டிலும் வாங்கி வருவீர்களென எதிர்பார்க்கிறேன். நிகழுமா?

*.*.*.*.*.*.*.*.*.*

மதிப்பிற்குரிய சோம்பேறி,

உங்கள் எழுத்துக்கள் பெரும்பாலும் மொக்கையாகவும் சப்பையாகவும் இருந்தாலும், சைட் பாரிலிருந்த ஜூஜூ பொம்மையின் அழகை ரசிப்பதற்காகவே, உங்கள் வலைப்பூவை நாளுக்கு நாற்பது முறை திறந்து பார்ப்பதுண்டு. ஏன் அதை இப்போது தூக்கிவிட்டீர்கள்? மறுபடி வைத்தால் சந்தோஷப்படுவேன். வைக்காவிட்டால் நிச்சயம் ரூம் போட்டு அழ மாட்டேன். அவ்வ்வ்வ்..

அப்புறம் உங்கள் வலைப்பூவை விட, வலைப்பூ கேப்ஷனிலிருக்கும் ஸ்மைலி அழகாக உள்ளது. நீங்க ரொம்ப அழகா சிரிக்கிறீங்க.

இப்படிக்கு,
Mr. அவ்வ்வ்வ்

திரு. அவ்வ்வ்வ்,

வாசகர் சந்தோஷம் தான் எனக்கு முக்கியம். :-) உரையாடல் போட்டியில் வென்றவுடன் (வெளங்கீரும்) :-) அந்த பொம்மையை பழைய இடத்தில் மீண்டும் காணலாம். :-)


*.*.*.*.*.*.*.*.*.*

அன்புள்ள சோம்பேறி,

உங்கள் ப்ரொஃபைல் புகைப்படத்தில், நீங்கள் குப்புறப் படுத்துத் தூங்கும் அழகை நாளெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கலாம். உங்கள் முழு மொகரையையும் பார்க்க பேராவல்.

பேரண்புடன்,
Miss. நமீ

உங்கள் அட்ரஸை மட்டும் மெயிலுங்க நமீ.. நீங்கள் அண்டார்ட்டிகாவில் இருந்தாலும் அஞ்சே நிமிஷத்தில வந்து உங்களை சந்திக்கிறேன்.

*.*.*.*.*.*.*.*.*.*

அன்புள்ள சோம்பேறி,

வணக்கம். நீங்கள் வலைப்பூ எழுதும் முன்பிருந்தே உங்களைப் படித்துக் கொண்டிருக்கிறேன். (10000 BC?)

பிறர் பதிவுகளில் பின்னூட்டுவதில்லை என்று பதிவெல்லாம் போட்டு சொன்னீர்கள். திடீரென்று ஒவ்வொருவர் வலைப்பூவிற்கும் வாண்டடாகப் போய் வம்பிழுக்கிறீர்கள். (ஆனால் அதில் எனக்கு சந்தோசம்தான்)

உங்கள் வெற்றி எதுவென்றால் மாதத்துக்கு ஒருவராவது சோம்பேறி ரோதனை தாங்காமல் தான் நான் பதிவுலகை விட்டு விடைபெறுகிறேன் என்று எஸ்ஸாவது தான்.

பி.கு : உங்கள் இடுகையை முடிக்கும்போது கொட்டாவியுடன் சோம்பேறி என்று நீங்கள் சொல்லுவது அவ்வளவு பிடிக்கும் எனக்கு. அதைப் படித்ததும் கொட்டாவி விட்டுட்டு, உங்கள் ப்ரொஃபைல் புகைப்படத்தில் இருப்பது போல குப்புற படுத்துத் தூங்கி விடுவேன்.

வாழ்க வளமுடன்

:-)

கொட்டாவியுடன் சோம்பேறி
*.*.*.*.*.*.*.*.*.*

டேய் டோமரு!

எங்கடா என் ஐநூறு ரூவா? செல்லை ஸ்விச் ஆஃப் பண்ணி வச்சுட்டா விட்டுருவோமா? நீ offlineல தான் ஒளிஞ்சிருக்கனு தெரியும். மரியாதையா வந்து பணமாவோ, சரக்காவோ கடனைத் திருப்பிக் குடுத்துட்டு போ. இல்ல.. ஆட்டோ தான் வரும்.

The user is offline. Will never come online. Please dont disturb him.

வலையுலக சூப்பர் ஸ்டார் யார்? - லாஜிக்கலான தீர்(ப்பு)வு

Friday 3 July, 2009

இதில் யாருக்காவது மாற்றுக் கருத்து இருந்தால், பின்னூட்டத்தில் சொல்லுங்கள். என் தரப்பு ஞாயத்தை விளக்குகிறேன்.


(படத்துக்கும் இடுகைக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. பெரிதாக்கிப் பார்த்து டைம் வேஸ்ட் பண்ண வேண்டாம்)


ஒன்றிலிருந்து ஒன்பதுக்குள் ஒரு எண்ணைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். (உதாரணமாக 2)

விடையை மூன்றால் பெருக்கவும். (2 x 3 = 6)

அதை மூன்றைக் கூட்டவும். (6 + 3 = 9)

மீண்டும் விடையை மூன்றால் பெருக்கவும். (9 x 3 = 27)

விடையாகக் கிடைக்கும் இரண்டிலக்க எண்ணின், இரண்டு இலக்கங்களையும் கூட்டவும். (2 + 7 = 9)

உங்களுக்கு விடையாகக் கிடைத்த எண்ணிற்க்கு நேரே உள்ளவர் தானே, உங்கள் மனதில் இருக்கும் செலிப்ரிட்டி?


1. சோமாறி சே... சோம்பேறி

2. எஸ். ராம கிருஷ்ணன்

3. சாரு நிவேதிதா

4. ஜெய மோஹன்

5. நாகார்ஜூனன்

6. ஆமிர் கான்

7. பைத்தியக்காரன்

8. Fake IPL player

9. சக்கரை சுரேஷ்

10. சோம்பேறி (ஹி ஹி.. திரும்பத் திரும்ப வந்தாலாவது என் பேரை சொல்ல மாட்டீகளானு ஒரு நப்பாசை தான்)
Blog Widget by LinkWithin
 
சோம்பேறி. Design by Pocket