வலையுலக சூப்பர் ஸ்டார் யார்? - லாஜிக்கலான தீர்(ப்பு)வு

Friday, 3 July, 2009

Views

இதில் யாருக்காவது மாற்றுக் கருத்து இருந்தால், பின்னூட்டத்தில் சொல்லுங்கள். என் தரப்பு ஞாயத்தை விளக்குகிறேன்.


(படத்துக்கும் இடுகைக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. பெரிதாக்கிப் பார்த்து டைம் வேஸ்ட் பண்ண வேண்டாம்)


ஒன்றிலிருந்து ஒன்பதுக்குள் ஒரு எண்ணைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். (உதாரணமாக 2)

விடையை மூன்றால் பெருக்கவும். (2 x 3 = 6)

அதை மூன்றைக் கூட்டவும். (6 + 3 = 9)

மீண்டும் விடையை மூன்றால் பெருக்கவும். (9 x 3 = 27)

விடையாகக் கிடைக்கும் இரண்டிலக்க எண்ணின், இரண்டு இலக்கங்களையும் கூட்டவும். (2 + 7 = 9)

உங்களுக்கு விடையாகக் கிடைத்த எண்ணிற்க்கு நேரே உள்ளவர் தானே, உங்கள் மனதில் இருக்கும் செலிப்ரிட்டி?


1. சோமாறி சே... சோம்பேறி

2. எஸ். ராம கிருஷ்ணன்

3. சாரு நிவேதிதா

4. ஜெய மோஹன்

5. நாகார்ஜூனன்

6. ஆமிர் கான்

7. பைத்தியக்காரன்

8. Fake IPL player

9. சக்கரை சுரேஷ்

10. சோம்பேறி (ஹி ஹி.. திரும்பத் திரும்ப வந்தாலாவது என் பேரை சொல்ல மாட்டீகளானு ஒரு நப்பாசை தான்)

62 மச்சீஸ் சொல்றாங்க:

நட்புடன் ஜமால் said...

இந்த 9 பெயர்களில் ஒன்று சொல்ல வேண்டுமா

அல்லது வலையிலேயே சூப்பர் ஸ்டார் சொல்ல வேண்டுமா ...

☀நான் ஆதவன்☀ said...

விடையாக எனக்கு மூன்றிலக்க எண் வருகிறது....நான் என்ன செய்யனும் ஃபொரபஸர்?

இப்படிக்கு
நல்லா படிச்சு வீணா போனவன்

Karthikeyan G said...

ha ha ha ha

கரெக்டா இருக்கே..

Karthikeyan G said...

சக்கர இனிகர சக்கர
அதில் எறும்புக்கு என்ன அக்கறை?

☀நான் ஆதவன்☀ said...

அண்ணே உங்க கொல வெறி எப்ப அடங்கும்...

இப்படிக்கு
கசாப்புகடைகாரன்

நட்புடன் ஜமால் said...

நமக்கு தெரிஞ்சி சக்கரை தான்ப்பா ...

Vijay Anand said...

// 1. சோமாறி சே... சோம்பேறி
5. சோம்பேறி
10. சோம்பேறி //

இது எல்லாம் டூ மச் ...ப்பா

♫சோம்பேறி♫ said...

இல்லை ஜமால். உங்கள் மனதிலிருக்கும் செலிப்ரிட்டியின் பெயர், உங்களுக்கு விடையாகக் கிடைத்த எண்ணிற்கு நேராக இருக்கும். சந்தேகமிருந்தால், சோதித்துப் பார்த்துக் கொள்ளுங்கள்.

யார் சூப்பர் ஸ்டார் நீங்கள் சொல்ல வேண்டிய கட்டாயமில்லை. சொன்னாலும் குத்தமில்லை.

Anonymous said...

இப்பதான் சண்டையெல்லாம் முடிஞ்சு அமைதி திரும்பியிருக்கு(????) மறுபடியுமா? :-(

சித்ரா

♫சோம்பேறி♫ said...

/* ☀நான் ஆதவன்☀ said...
விடையாக எனக்கு மூன்றிலக்க எண் வருகிறது....நான் என்ன செய்யனும் ஃபொரபஸர்? */

மூன்றையும் கூட்டுங்கய்யா..

இப்படிக்கு
ஒன்னாங்க்ளாஸ் வாத்தியார்


/* அண்ணே உங்க கொல வெறி எப்ப அடங்கும்...
இப்படிக்கு
கசாப்புகடைகாரன் */

உங்களை வெட்டி பொலி போட்டதுக்கு அப்புறம் தான் அடங்கும்..
இப்படிக்கு
நெச கசாப்புகடை ஓனர்

♫சோம்பேறி♫ said...

/* Karthikeyan G said...
ha ha ha ha
கரெக்டா இருக்கே..
சக்கர இனிகர சக்கர
அதில் எறும்புக்கு என்ன அக்கறை? */

அது.. :-) (ஓய்ய்ய்ய்ய்... ஆரைப் பாத்து ஜி எறும்புனு சொல்றீங்க?)

♫சோம்பேறி♫ said...

/*நட்புடன் ஜமால் said...
நமக்கு தெரிஞ்சி சக்கரை தான்ப்பா ... */

அது... :-)

♫சோம்பேறி♫ said...

/* Vijay Anand said...
// 1. சோமாறி சே... சோம்பேறி
5. சோம்பேறி
10. சோம்பேறி //

இது எல்லாம் டூ மச் ...ப்பா */


ஹி ஹி ஹி. இட்ஸ் ஆல் இன் த கேம்.. இதெல்லாம் கண்டுக்கக் கூடாது விஜய்..

♫சோம்பேறி♫ said...

/* Anonymous said...

இப்பதான் சண்டையெல்லாம் முடிஞ்சு அமைதி திரும்பியிருக்கு(????) மறுபடியுமா? :-(
சித்ரா */சித்ரா.. ஆர் யு சீரியஸ்? இனி இது போன்ற பதிவுகள் வராது.. இந்த இடுகையை நீக்கி விடவா?

Anonymous said...

து சும்ம்மா உங்க லேபிளுக்காகப் போட்டது :-) சன் டிவி ஸ்டைல்ல போன வாரம் 'பரபரப்பான, சண்டை வாரம் ' (ஆமா இப்பவும் அப்படி சொல்றாங்களா?). நமக்கும் பொழுது போகணுமில்லையா? :-)

சித்ரா

உப்பு உமா said...

என் பேரை சேர்க்காமல் விட்டதற்காக என் கண்டனங்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

மிளகாய் தூள் துரை said...

அப்ப எங்க பேரு இல்லையா ஆவ்வ்வ்வ்வ்வ்வ்

இட்லி பொடி பொன்னுத்தாயி said...

எனக்குள்ள இரண்டு பேரும்(உப்பு,மிளகாய் தூள்) கலந்திருக்காங்க...எனக்கு தான் 9ஆவது இடம் தரனும் சொல்லிட்டேன்

பாரு சவேதா said...

பின்குறிப்பு: சர்க்கரையின் எழுத்தை படித்த பின்பு தான் அவரது பக்கத்து வீட்டு நாய் தூக்கு மாட்டியும் இறக்காமல் தூக்க மாத்திரை போட்டு இறந்து போனது. பூனை கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டது

பிராந்தன் said...

பாரு சவேதா தன் நாய்க்கு முத்தம் கொடுக்க முயன்றதால் தான் அவர் வீட்டு நாய் கோபப்பட்டு அவர் வீட்டு ஹாலில் கக்கா போனது என்று நாங்களும் சொல்லலாம்.

அன்புடன் அருணா said...

எனக்கு விடை 0 வருதே!!!

♫சோம்பேறி♫ said...

/* Anonymous said...
அது சும்ம்மா உங்க லேபிளுக்காகப் போட்டது :-) நமக்கும் பொழுது போகணுமில்லையா? :-) சித்ரா*/

ஓக்கே.. ஓக்கே.. நானும் சும்மா தான் சித்ரா கேட்டேன் :-)

(ஆத்தா தாயி.. ஒரு ஸ்மைலி போட்டிருக்கக் கூடாதா)

♫சோம்பேறி♫ said...

மதிப்பிற்குரிய உப்பு உமா, மிளகாய் தூள் துரை, இட்லி பொடி பொன்னுத்தாயி, பாரு சவேதா மற்றும் பிராந்தன்..

நன்றாக எழுதினால், உங்களுக்கும் வாய்ப்பளிக்கப் படும். அதை விட்டுட்டு சக்கரை மேல உள்ள பொறாமைல பொங்காதீக..

♫சோம்பேறி♫ said...

அன்புடன் அருணா,

அவுட் ஆஃப் சிலபஸாக வரும் எல்லா பதிலுக்கும் சோம்பேறி தான் விடை :-)

கார்க்கிபவா said...

ஹிஹிஹி..மேட்டர் பழசுன்னாலும் சரியா யூஸ் பண்ணியிருக்கிங்க.. இப்ப நீங்க சக்கரை டாப்புன்னு சொல்றீஙக்ளா, ஆப்பட்டிக்கிறீஙக்ளா?

என் வேலை முடிஞ்சுது

anujanya said...

:)

♫சோம்பேறி♫ said...

/* கார்க்கி said...
ஹிஹிஹி..மேட்டர் பழசுன்னாலும் சரியா யூஸ் பண்ணியிருக்கிங்க.. */

நன்றி கார்க்கி..

/* இப்ப நீங்க சக்கரை டாப்புன்னு சொல்றீஙக்ளா, ஆப்பட்டிக்கிறீஙக்ளா? */

அதாகப்பட்டது கார்க்கி.. 'உளன் எனில் உளன்.. இலன் எனில் இலன்'/*அனுஜன்யா said...
:) */

:-))))))) அனுஜன்யா...

அறிவிலி said...

உங்களுக்கு(ம்) நல்ல வாசிப்பு அனுபவம் இருக்கிறது.

இப்படிக்கு சக்கரையை தண்ணீரில் கரைப்போரை எதிப்போர் சங்கம்.

அறிவிலி said...

ஆ..ஆ.. மறந்துட்டேன்...

திரும்பவும் சூப்பர் ஸ்டாரை வம்புக்கு இழுக்கிறீர்கள்.
பழச மறந்துட்டீங்களா?

idea mani said...

இந்த கோவை ஐடியா மணி ய மறந்துபோடீகலாக்கு www.jollytimepass.blogspot.com வந்து பருங்கன்ன தலைவர் படம் மாத்ரி டாப் பு

♫சோம்பேறி♫ said...

/* அறிவிலி said...
உங்களுக்கு(ம்) நல்ல வாசிப்பு அனுபவம் இருக்கிறது */

நன்றி அறிவிலி..

/* பழச மறந்துட்டீங்களா? */

அவ்வ்வ்.. இனிமே சூப்பர் ஸ்டார் யாருனு கேட்டா சின்னக் குழந்தை யாரு பேரை சொல்லுதுனு பாப்போம்..

♫சோம்பேறி♫ said...

/* idea mani said...
இந்த கோவை ஐடியா மணி ய மறந்துபோடீகலாக்கு www.jollytimepass.blogspot.com வந்து பருங்கன்ன தலைவர் படம் மாத்ரி டாப் பு */

ஓக்கே.. ஓக்கே.. விரைவில் ஐடியா தேவைப்படும். காண்டாக்ட் செய்கிறேன் மணி..

சின்ன குழந்தை said...

சூப்பர்ஸ்டார் சக்கரை சுரேஷ்தான்

♫சோம்பேறி♫ said...

அது.. :-)

அப்பூடி சொல்லுங்க சின்ன குழந்தை..

பாத்துக்கோங்க பாஸூ..

வெற்றி-[க்]-கதிரவன் said...

சோம்பேறி நீங்க நல்லவரா இல்ல கெட்டவரா ? (டொண்ட டொண்ட டொண்ட டுயன் டொண்ட டுயன் )

♫சோம்பேறி♫ said...

நல்லவன் கெட்டவன் என்பதை அளக்கும் அளவுகோல் காலத்தால் என் கையிலிருந்து பிடுங்கப் பட்டிருக்கிறது பித்தன்.

குடுகுடுப்பை said...

இது இன்றைய வேலை.

Suresh said...

சோம்பேறி இது நல்ல நகைச்சுவை பதிவு :-)
ஸ்ப்பா கண்ண கட்டுதே..

#/* இப்ப நீங்க சக்கரை டாப்புன்னு சொல்றீஙக்ளா, ஆப்பட்டிக்கிறீஙக்ளா? */

அதாகப்பட்டது கார்க்கி.. 'உளன் எனில் உளன்.. இலன் எனில் இலன்'#

சத்தியமா இலன் தான் கார்க்கி ;)

நம்ம எல்லாம் சும்ம மொக்கை போடுறோம் இது எல்லாம் எழுத்தே இல்லைனு எங்களுக்கு தெரியாத

இப்படி பெரிய எழுத்தாளர்கள் பெயர் பட்டியலில் என் பெயர் இணைத்தது அவர்களை அவமானப்படுத்துவது தலை ..

எனக்கு ரொம்ப நெருடலா இருக்கு, அதை தவிற நகைச்சுவையை ரசித்தேன் ;) சோம்பேறி

நன்றி
பெரிய இலக்கிய வாசிப்பு அனுபவமோ எழுத்து அனுபவமோ சுத்தமா இல்லாத சக்கரை சுரேஷ்

Suresh said...

அண்ணே எனக்கு 10 வருது அதை கூட்டினால் 1 வருது... அக மொத்தம் அண்ணே சோம்பேறி தான் வருது.

அது எப்படி வரும் என்று பார்த்தால் ?

தப்பா கூட்டி இருக்கேன் என்ன செய்ய நான் கணக்குல எப்பவுமே வீக்
இப்படி பல பேரு வீக்கா இருப்பாங்க என்று தான் 1,5, 10 ;) நம்ம அண்ணே பெயரா ?

நல்ல ஐடியா

(நகைச்சுவைக்கு :-) சொன்னது நம்ம கணக்குல மட்டும் தான் எப்பவும் அரியர்ஸ் வைக்காம இருந்தது)

சென்ஷி said...

;)

நல்லா இருக்குது. இப்ப நீங்க பிரபல பதிவர்ன்னு சொல்லித்தான் நாங்க தெரிஞ்சுக்க வேண்டிய நிலையில சூப்பர் ஸ்டார் சக்கர சார் இல்லை.

சக்கர சுரேஷ் சாரே அவரை நான் அவ்வளவு வொர்த் இல்லைன்னு சொல்றதைப் பார்க்கும்போது எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல.

இதைப்பார்த்தாவது அவரது எழுத்தை படிக்காம பின்னூட்டிட்டு ஓடுற எதிர் நெஞ்சங்கள் அவரளவு முடியாட்டியும் கொஞ்சமாச்சும் மனசாட்சியோட நடந்துப்பாங்கன்னு நினைக்குறேன்.

சக்கர சுரேஷ் சாரோட இலக்கிய அனுபவத்தை அளக்கறதுக்கு இன்னும் தனியா யாரும் ஸ்கேல் கண்டுபிடிக்கலை. அதனால இவருக்கு ஏதும் தெரியாதுன்னு உங்ககிட்ட இருக்குற கால்குலேட்டர் வச்சு தப்புக்கணக்கு போட்டுடாதீங்க.

சோம்பேறி, நீங்க லாஜிக்கலா யோசிக்காம இப்படி ஒரு பதிவு போட்டிருந்தாலும் நச்சுன்னு கரெக்டா ஒரு உண்மையை வலையுலகத்துக்கு தெரியப்படுத்திட்டீங்க..

வாழ்க சக்கர சார்.. வளர்க அவர் பணி..

இவண்
-சென்ஷி

Suresh said...
This comment has been removed by the author.
Anonymous said...

Ha Ha Ha.....
Pls visit here
http://simpleblabla.blogspot.com/2009/03/blog-post_02.html

♫சோம்பேறி♫ said...

/* குடுகுடுப்பை said...
இது இன்றைய வேலை. */

ஹி ஹி.. பின்ன இந்த மாதிரி முக்கியமான வேலையையெல்லாம் ஒத்தி போட முடியுங்களா?

♫சோம்பேறி♫ said...

/* Suresh said...
சோம்பேறி இது நல்ல நகைச்சுவை பதிவு :-) */

நன்றி சுரேஷ். நீங்களும் நல்ல ஜாலியா சந்தோஷமா எழுதுறீங்க.

ஆனால் உங்கள் வலைப்பூவில், என்னுடைய கமெண்ட்டுகளை மட்டும் நீங்கள் அனுமதிப்பதில்லை. அனுமதித்த கமெண்ட்டுகளுக்கு பதில் சொல்வதில்லை என்பதால், உங்களுக்கு பின்னூட்டுவதிலுள்ள சுவாரசியம் குறைந்து விட்டது.

மற்றபடி உங்கள் வலைப்பூவை நாளுக்கு நாற்பது முறை திறந்து பார்க்கிறேன்.

/* சத்தியமா இலன் தான் கார்க்கி ;) */

இப்படியெல்லாம் சொன்னா அடி விழும் சக்கரை. நான் அடுத்த போஸ்ட் 'தயவுசெய்து எழுதுவதை நிறுத்தி விடுங்கள் சக்கரை' என்று எழுதலாமென யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

/* இப்படி பெரிய எழுத்தாளர்கள் பெயர் பட்டியலில் என் பெயர் இணைத்தது அவர்களை அவமானப்படுத்துவது தலை .. */

இதென்ன கோராமை! காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு பாஸ்.. என் கண்ணுக்கு நீங்க கோல்டன் கலர்ல தான் தெரியுறீங்க..

/* Suresh said...
அண்ணே எனக்கு 10 வருது அதை கூட்டினால் 1 வருது... அக மொத்தம் அண்ணே சோம்பேறி தான் வருது.*/

சரி தான்.. உங்க கண்ணுக்கு நான் கோல்டன் கலர்ல தெரியுறேன் போல!

/* (நகைச்சுவைக்கு :-) சொன்னது) */

இது நகைச்சுவைனு நீங்க தனியா வேற சொல்லனுமா? நீங்க என்ன சொன்னாலும் கோவிச்சுக்க மாட்டேன் மிஸ்டர்.சுகர். உங்கள் அப்பாவித்தனத்துக்கு நான் பெரிய ப்ரொஃபைலர் ஃபேன்.

♫சோம்பேறி♫ said...

/* சென்ஷி said...
;)
நல்லா இருக்குது. இப்ப நீங்க பிரபல பதிவர்ன்னு சொல்லித்தான் நாங்க தெரிஞ்சுக்க வேண்டிய நிலையில சூப்பர் ஸ்டார் சக்கர சார் இல்லை. */

கரெக்ட்..

/* சக்கர சுரேஷ் சாரே அவரை நான் அவ்வளவு வொர்த் இல்லைன்னு சொல்றதைப் பார்க்கும்போது எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல. */

தன்னடக்கம்னு சொல்லனும் சென்ஷி.

/* வாழ்க சக்கர சார்.. வளர்க அவர் பணி.. */

நீங்க சொன்ன எல்லாத்துக்கும் ஒரு பெரீய்ய்ய்ய்ய ரிப்பீட்ட்ட்டேய்ய்ய்..

♫சோம்பேறி♫ said...

/* Anonymous said...
Ha Ha Ha.....
Pls visit here
http://simpleblabla.blogspot.com/2009/03/blog-post_02.html */

நன்றி அனானி. எனக்கு வந்த குறுஞ்செய்தி இந்த லிங்கில் இருப்பது போல தான் இருந்தது.

நாலு நல்ல விஷயம் எழுதனும்னா எதுவுமே தப்பில்ல.

Suresh said...

/ஆனால் உங்கள் வலைப்பூவில், என்னுடைய கமெண்ட்டுகளை மட்டும் நீங்கள் அனுமதிப்பதில்லை. அனுமதித்த கமெண்ட்டுகளுக்கு பதில் சொல்வதில்லை என்பதால், உங்களுக்கு பின்னூட்டுவதிலுள்ள சுவாரசியம் குறைந்து விட்டது.

மற்றபடி உங்கள் வலைப்பூவை நாளுக்கு நாற்பது முறை திறந்து பார்க்கிறேன்./
தலை என்ன சொல்லுறீங்க ஆடி போய்ட்டேன்

எனது பிளாகில் அப்புருவலே இல்லை நீங்க எந்த பிளாக்கு பின்னூட்டம் போட்டீர்கள் ..

சக்கரையில் கமட் மாடுரேஷ்ன் இல்லை, மற்றும் அனானி கமெண்டுகள் போட முடியாது..

அப்பால என்னால முடிந்த வரை அனைவருக்கும் பதில் சொல்லுவது அட்லிஸ்ட் ஒரு நன்றி சொல்லுவது உண்டு... இது வரை வந்த பின்னூட்டங்கள் 3000 என்றால் 1500+ எனது பின்னூட்டங்கள் நன்றி, மற்றும் பதில் சொல்லுவது உண்டு

ஆனால் நடுவில் ஒரு பதிவு போட்டு பின்னூட்டங்கள் போடமுடியாத காரணத்தையும் சொல்லிவிட்டேன்

Suresh said...

/மற்றபடி உங்கள் வலைப்பூவை நாளுக்கு நாற்பது முறை திறந்து பார்க்கிறேன்/

நீங்க நம்ம மேல வைச்சிக்கிற நம்பிக்கைக்கு நன்றி

Suresh said...

/இப்படியெல்லாம் சொன்னா அடி விழும் சக்கரை. நான் அடுத்த போஸ்ட் 'தயவுசெய்து எழுதுவதை நிறுத்தி விடுங்கள் சக்கரை' என்று எழுதலாமென யோசித்துக் கொண்டிருக்கிறேன்./

இதுவும் நல்ல யோசனை நானும் அதை தான் யோசித்து கொண்டு இருக்கிறேன் ;) ஹா ஹா எதுக்கு தொந்தரவு

Suresh said...

/என் கண்ணுக்கு நீங்க கோல்டன் கலர்ல தான் தெரியுறீங்க../

/சரி தான்.. உங்க கண்ணுக்கு நான் கோல்டன் கலர்ல தெரியுறேன் போல!/

வைரமா மின்னுறிங்க ;)

நன்றி அண்ணே பார்த்து நமக்கு கண் சரியில்லைனு கூட்டிட்டு போய்ட போறாங்க

Suresh said...

/உங்கள் அப்பாவித்தனத்துக்கு நான் பெரிய ப்ரொஃபைலர் ஃபேன்./

ஸ்ப்பா என்னை வாழ்க்கையில் முதன் முதலில் அப்பாவி என்று கூறிய உங்களை என்ன சொல்லி பாராட்டுவது...

ஏனா நான் ஒரு அறுந்த வாலு...

Suresh said...

/மாற்றுக் கருத்து இருந்தால், பின்னூட்டத்தில் சொல்லுங்கள். என் தரப்பு ஞாயத்தை விளக்குகிறேன்./

கொஞ்சம் விளக்குங்க நண்பா

Suresh said...

ஏனா எனக்கே மாற்று கருத்து இருக்கு ;) அதுக்கு தான் விளக்கம்

S.A. நவாஸுதீன் said...

எனக்கு நம்பர் பத்து தான் வருது தல

♫சோம்பேறி♫ said...

/* வைரமா மின்னுறிங்க ;) */

நன்றி சக்கரை.. :-)

/* நான் ஒரு அறுந்த வாலு... */

அறுந்த வால்பையன்னு நீங்க இன்னொரு ப்ளாக்கும் க்ரியேட் பண்ணிடுங்க சக்கரை..


/* எனது பிளாகில் அப்புருவலே இல்லை நீங்க எந்த பிளாக்கு பின்னூட்டம் போட்டீர்கள். சக்கரையில் கமட் மாடுரேஷ்ன் இல்லை, மற்றும் அனானி கமெண்டுகள் போட முடியாது.. */

இல்லை சுரேஷ்.. சரி பார்த்து விட்டேன்.

'பதிவுலக போதை - பதிவர்களுக்கு எச்சரிக்கை !'(http://www.sakkarai.com/2009/06/blog-post_22.html) இந்தப் பதிவில் சுரேஷ் குமாரின் பின்னூட்டங்களுக்குக் கீழே எனது இந்தப் பின்னூட்டம் இருந்தது.

(♫சோம்பேறி♫ said...
/*. நான் செலிபிரட்டி என்று ஒரு பதிவர் சொன்னதை கேட்டு எனக்கு சிரிப்பு தான் வந்தது... */
உங்களுக்கு பிஞ்சு மனசு பாஸ்.. எதை சொன்னாலும் சீரியஸாவே எடுத்துக்குறீங்க.. :-)
அடிக்கடி பதிவிடுங்க.. )

என் ஐடியோட தான் கமெண்ட் பண்ணினேன். ஹ்ம்ம்ம்ம்.. பரவாயில்லை. உங்க ப்ளாக்.. உங்க இஷ்டம்..

♫சோம்பேறி♫ said...

/* S.A. நவாஸுதீன் said...
எனக்கு நம்பர் பத்து தான் வருது தல */

அட.. யூ டூ. எனக்கும் அந்த ஆன்ஸர் தான் வந்தது. நன்றி நவாஸ்..

Suresh said...

/இல்லை சுரேஷ்.. சரி பார்த்து விட்டேன்.

'பதிவுலக போதை - பதிவர்களுக்கு எச்சரிக்கை !'(http://www.sakkarai.com/2009/06/blog-post_22.html) இந்தப் பதிவில் சுரேஷ் குமாரின் பின்னூட்டங்களுக்குக் கீழே எனது இந்தப் பின்னூட்டம் இருந்தது.

(♫சோம்பேறி♫ said...
/*. நான் செலிபிரட்டி என்று ஒரு பதிவர் சொன்னதை கேட்டு எனக்கு சிரிப்பு தான் வந்தது... */
உங்களுக்கு பிஞ்சு மனசு பாஸ்.. எதை சொன்னாலும் சீரியஸாவே எடுத்துக்குறீங்க.. :-)
அடிக்கடி பதிவிடுங்க.. )

என் ஐடியோட தான் கமெண்ட் பண்ணினேன். ஹ்ம்ம்ம்ம்.. பரவாயில்லை. உங்க ப்ளாக்.. உங்க இஷ்டம்../

அது மிக தற்செயலாக நடந்த ஒன்று டெலியிட் செய்தவுடன் ,அப்புறாம் யார் அந்த ஐடி... என்று பார்த்தேன்

உங்களுக்கு பின்னூட்டம் போடலாம் என்று நினைத்தேன் சரி பழைய போஸ்ட் என்று விட்டுவிட்டேன் மற்ற படி ஒன்றும் இல்லை

♫சோம்பேறி♫ said...

ஓக்கே சுரேஷ். நோ ப்ராப்ளம் அட் ஆல்.. ஜஸ்ட் லீவ் இட் :-)

விக்னேஷ்வரி said...

படத்துக்கும் இடுகைக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. பெரிதாக்கிப் பார்த்து டைம் வேஸ்ட் பண்ண வேண்டாம் //

வரவர சோம்பேறிக்கு குசும்பு அதிகமாயிடுச்சு.

♫சோம்பேறி♫ said...

நன்றி விக்னேஷ்வரி! :-)

rapp said...

avvvvvvvvvvvvv...............:):):)

வால்பையன் said...

செலிபரட்டிகளுக்கு கட் அவுட் வைக்கணும்!
எல்லோரும் என் அக்கவுண்டுக்கு பணம் அனுப்புங்க!

Post a Comment

தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு.

Blog Widget by LinkWithin
 
சோம்பேறி. Design by Pocket