மீனாவின் கல்யாணம்

Friday, 27 February, 2009

தற்போது விஜயகாந்துடன் இணைந்து நடிக்கும் "மரியாதை" திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக ஆஸ்திரேலியாவில் இருக்கும் மீனா இது பற்றி கூறியதாவது.. 'இந்த கல்யாணத்தைப் பற்றி இப்போது என்னால் அதிகம் சொல்ல முடியாது. இதற்கு முன்பு எனக்கு பல வாய்ப்புகள் வந்தாலும், இது போல வித்தியாசமாக எதுவும் அமைந்ததில்லை. யாருக்கும் இது போன்ற ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருக்காது. ஏன் எனக்கே கிடைத்ததில்லை."

மேலும் இது பற்றி தெரிந்து கொள்ள வரும் திங்கள் இரவு 7:30க்கு சன் தொலைக்காட்சியைப் பார்க்கவும்.

1500 எபிசோடுகளுக்கும் மேல் (வயிற்றை)கலக்கிய ஆனந்தம் இன்றுடன் (நல்ல வேளையாக)நிறைவடைந்தது.
சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில், பட்டுக் கோட்டை ப்ரபாகரின் இயக்கத்தில், மேலும் மீனாவின் கல்யாணத்தில் அவருடன் இணைந்து நடித்திருப்போர், யுவராணி(அநியாயத்துக்கு மெலிந்திருக்கிறார்), டெல்லி குமார், மற்றும் பலர்.
சீரியல்லயாவது கல்யாணம் ஆனா சரிதானுங்கக்கோவ்..

நான் கடவுள் - அட கத்திரிக்குப் பிறந்த பயபுள்ளைகளா!

Wednesday, 25 February, 2009நான் கடவுள் படத்தை ரொம்ப எச்சரிக்கையுடன் தான் பார்க்கப் போனேன். தரை டிக்கட்டிலோ, பெஞ்சு டிக்கெட்டிலோ க்ளோசப்பில் பார்த்தால் பயந்து விடுவேன் என்பதால், 20 ரூபாய் அதிகமாக செலவு செய்து பால்கனியில் அமர்ந்து தான் பார்த்தேன்.

ஆனால் இந்த கத்திரிக்குப் பிறந்த பயபுள்ளைகள் பாதி காட்சிகளை வெட்டித் தள்ளி விட்டார்கள். மீதி காட்சிகளில் பீப், பீப் என்று பீப்பீ ஊதியிருக்கிறார்கள்.

அதுவும் முக்கியமாக, நீதிமன்றத்தில் நாயரை என்ன செய்தாய் என்று ருத்ரனிடம்(ஆர்யா என்று சொல்ல மனது வர வில்லை) கேட்கும் கேள்விக்கு அவர் பீஈஈஈப் என்று பதில் சொல்கிறார். நீதிபதி அதிர்ச்சியாகி, ஆப்பரேஷன் தியேட்டரில் பேஷண்டை போட்டுத் தள்ளிய டாக்டரைப் போல கண்ணாடியைக் கழட்டுகிறார்.

நாயர் மட்டுமல்ல, தாண்டவன், பூஜா என்று எல்லோர் முடிவிலும் கத்தரி புகுந்து விளையாடியிருக்கிறது.

கடைசி காட்சியில் தாண்டவனிடம் அடிபட்ட காயங்களுடன் வரும் பூஜாவைப் பார்த்து இளகிய மனம் படைத்த ஆண்களுக்கு மாரடைப்பு வரும் என்று பதறி அதற்கு முன்பே end கார்ட் போட வில்லை புன்னியவான்கள்.

படத்திற்கு வர பயப்படுகிறவர்கள் வன்முறைக்கு அடுத்ததாக சொல்லும் காரணம், பரிதாப உணர்ச்சிக்கு ஆட்பட விரும்பவில்லை. படத்தில் வரும் உருப்படிகளே "ஜாலியா பிச்சை எடுத்தோமா! சந்தோஷமா இருந்தோமானு இருக்கனும்" என்ற attitudeடில் தான் இருக்கிறார்கள். படம் முழுக்க ஒரு மெல்லிய, அழகான, சிந்திக்க வைக்கும், சில நேரங்களில் சுருக்கென தைக்கும் நகைச்சுவை இழையோடுகிறது. அவர்கள் பிரிக்கப் படும் ஒரே காட்சியில் மொத்த பாரத்தையும் மனதில் ஏற்றி விடுகிறார். சரி மக்கா.. மெகா சீரியல் பாத்து அழுவுறதுக்கு அந்த கண்ணீரை எல்லாம் சேத்து வச்சிக்கோ..

காவல் நிலையத்தில் எம்.ஜி.ஆர், சிவாஜி எல்லாரும் ஆடும் காட்சியில் நயன்தாராவின் யம்மாடி, ஆத்தாடிக்கு விசில் சத்தம் காதைக் கிழித்து விட்டது. என்னவோ வில்லு படத்துக்கு நயன்தாரா தான் கதை, திரைக்கதை எழுதி இயக்கியது போல, அவரால் தான் படம் ஓட வில்லை என்று கூவிய ஜோதிட ரத்னாக்கள் கவனத்துக்கு: நூறு வில்லு, ஆயிரம் ஏகன், லட்சம் சத்யம் வந்தாலும் தானைத் தலைவி நயன்தாரவின் கால் சுட்டு விரலைக் கூட அசைக்க முடியாது.

பூஜா தாய்ப் பாசத்தைப் பற்றி ஆர்யாவுக்கு வகுப்பெடுக்கும் காட்சியில், "அம்மா தான் முதல்ல" என்றதும் தியேட்டரில் 'புரட்சித் தலைவி வாழ்க' என்று ஒரு கோஷம்.

கமர்ஷியலாக படம் எடுத்தால், உலக மொழி படங்களை பர்மா பஜாரில் வாங்கிய டிவிடியில் பார்த்து விட்டு 'எப்பதான் தமிழ் சினிமா முன்னேறப் போவுதோ' என்று புலம்புவது. உலக தரத்துக்கு நல்ல படம் எடுத்தால் எச்சரிக்கை நோட்டீஸ் விட்டு தயாரிப்பாளருக்கு பீதியைக் கிளப்புவது. உங்கள மாதிரி ஆளுங்க இருக்குறப்போ சீக்கிரமே தமிழ் சினிமா முன்னேறிடும் மக்கா..

ஏன் இளையராஜாவிற்கு ஆஸ்கார் விருது கிடைக்க வில்லை?

Monday, 23 February, 2009


கிடைக்கவும் கிடைக்காது. ரஹ்மானுக்கு இந்த விருது கிடைத்ததற்க்கு அவர் ஒரு ஹாலிவுட் திரைப் படத்திற்கு இசையமைத்ததே காரணமாக இருந்தாலும், ஒரு ஹாலிவுட் இயக்குனரை திரும்பிப் பார்க்க வைத்தது எது?

பெரும்பாலான மன நல மருத்துவர்கள, மன அழுத்ததைக் குறைக்க, 80களில் வந்த இளையராஜா பாடல்களைப் பரிந்துரை செய்கிறார்கள். ஏன் இப்போதெல்லாம் இளையராஜா இசையமைப்பதில்லையா? அல்லது இவ்வளவு நாள் கிணற்றுத் தவளையாக இருந்த நமக்கு இப்போது எல்லா வகையான இசையும் ஒரே க்ளிக்கில் கிடைப்பது தான் காரணமா? நிச்சயமாக இல்லை, அவரது 'பூவே செம்பூவே', 'ராஜ ராஜ சோழன் நான்' மாதிரிப் பல பாடல்கள் இன்றும் ரசிக்கும்படி தான் இருக்கின்றன(என்னை உருக்கியது இசையா, பாடல் வரிகளா என்று யோசிக்க முடியாத அளவுக்கு உருக்கியிருக்கின்றன). அது போல ஒரு பாடல் இன்று வராதா என்ற ஏக்கம் கூட இதை எழுத ஒரு காரணமாக இருக்கலாம்.

இளைய ராஜா தன்னை அப்டேட் செய்து கொள்வதில்லை, விரும்பவில்லை அல்லது தெரியவில்லை. இசை ஞானி என்ற அடை மொழியை மேஸ்ட்ரோ என்று மாற்றியது முற்றிலும் சரி. முக்காலமும் அறிந்தவர் தான் ஞானியாக முடியும். நிகழ் கால மக்கள் ரசனையையே இவரால் புரிந்து கொள்ள முடியவில்லையே!? (இப்போது எல்லாரும் ஸ்பானிஷ் வகை இசையை ரசிக்க ஆரம்பித்திருக்கிறார்கள் என்று ரஹ்மான் குடியரசு தினத்தன்று கொடுத்த ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.)

அதற்காக நம்ம ஊர் இசையை குறை சொல்லவில்லை. நான் கடவுள் படத்தின் பாடல்கள் ஏதோ மாரியத்தா கோவிலில் கூழ் ஊத்தும் போது போடும் பாடல்கள் போல் இருக்கிறது. ராகம் பரவாயில்லை. தாளம் தான் டொண்டக்கு டொண்டன் என்று இருக்கிறது. இவரது 'பருவமே புதிய பாடல் பாடு' என்ற பாடலின் தாளம் நேர்த்தியானது. வெறும் டக் டக் என்ற ஷூ சத்தம் தான் என்றாலும் அசத்தியிருப்பார். அதே போல் 'ஹே ராம்' படத்தின் 'நீ பார்த்த பார்வைக்கு ஒரு நன்றி' என்ற பாடலில் பியானோ மட்டுமே ஒலித்துக் கொண்டிருக்கும். பல முறை திரும்பத் திரும்ப கேட்ட பாடல் அது.

தாளம் என்றால் காதுக்குள் புகுந்து கபடி ஆட வேண்டும். (உதாரணம்: சக்கரைக்கட்டி படத்தில் வரும் டாக்ஸி)

தாளத்திற்கு மிருதங்கமோ, ட்ரம்ஸோ தான் உபயோகிக்க வேண்டும் என்பதில்லை. (உதாரனம் : சிவாஜி படத்தில் வரும் ஸ்டைல் பாடலில் சில இடங்கள்). மைக்கேல் ஜாக்ஸனின் 'கோஸ்ட்' என்ற பாடலின் பாணியில் இது அமைந்திருந்தது. (பாணி நகல் அல்ல. ஆனாலும் அது போன்ற ஒரு பாடல் தமிழில் வர இத்தனை ஆண்டுகள் தேவைப் பட்டிருக்கிறது.)

படத்தில் இரண்டு பாடல்கள் மட்டுமே இடம் பெற்றிருப்பதாலோ என்னவோ மற்ற பாடல்களை பாலா கண்டு கொள்ளவில்லை. தன்னால் எப்படிப் பட்ட பாடலையும் காட்சியமைப்பின் மூலம் பிரமாதப்படுத்த முடியும் என்ற தன்னம்பிக்கையும் காரணமாக இருந்திருக்கலாம்.(பிச்சைப் பாத்திரம் பாடல் இதற்கு உதாரணம்.).

ஹர ஹர மஹாதேவ் பாடல் தேறியிருப்பதன் காரணம், உடுக்கை போன்ற வித்தியாசமான இசைக் கருவிகளை பயன்படுத்தியிருப்பதாக இருக்கலாம்.

நந்த லாலாவின் கானா உலக நாதனை இசை அமைப்பாளராக்கியிருக்கலாம்.

அப்போ இனிமேல் நந்த லாலா தானா?

Thursday, 12 February, 2009


வாரணம் ஆயிரம் படத்திற்குப் பிறகு "நான் கடவுள்" தான் திரையரங்கிற்கு சென்று பார்க்க வேண்டும் என்று முடிவு செய்திருந்தேன். ஆனால் சந்திரமுகி வேட்டயபுரம் அரண்மனைக்கு கூப்பிட்டது போல அரண்டு போய் யாருமே கூட வர மறுக்கிறார்கள்.. இது போதாதென்று பதிவர் சகாக்கள் வேறு கோஸ்ட் ரைடரில் ஏறும் முன்பு எச்சரிப்பது போல பெண்கள், குழந்தைகள்(இதனால் தான் நான் போக யோசிக்கிறேன்:-)), இளகிய மணம் படைத்த ஆண்கள், வயதானவர்கள் தவிர்த்து விடவும் என்று பூச்சாண்டி காட்டுகிறார்கள்.

எனக்கு நிஜமாகவே ஏன் என்று புரிய வில்லை. அன்றாடம் நாளிதழில் "நான்கு வயது சிறுமியை வன்கலவி செய்து, தலையை சுவற்றிலடித்து கொலை." என்று புகைப்படத்துடன் சர்வ சாதாரணமாக வெளியிடுகிறார்கள். இதைப் பார்த்து எத்தனை கர்ப்பினிகளுக்கு கரு கலைந்தது? எத்தனை இளகிய மணம் படைத்த ஆண்கள் மன நிலைப் பிறழ்வடைந்தார்கள்?

*******************************************

ப்ரியா மணி, மது பாலா போன்ற நடிகைகள் தான் வேண்டும் என்று அமீர் போல அடம் பிடிக்காமல் கதைக்கு பொருத்தமான நாயகியைத் தேர்வு செய்திருக்கிறார் மிஷ்கின். எனக்கு இளைய ராஜாவின் இசை பிடிக்காது என்பதால் பாடல்கள் ப
ற்றி நோ கமெண்ட்ஸ். நான் கடவுள் படத்தின் பாடல்கள் பிடித்திருந்தது என்று சொல்பவர்கள் நந்த லாலா பாடல்களை கேட்க இங்கே செல்லவும்.

அப்போ இனிமேல் மிஷ்கினின் நந்த லாலா தானா?

********************************

சென்ற பதிவில் உலகமே காரித் துப்பிய Epic movie(நார்னியா) பற்றி ஏன் எழுதினேன் என்று சொல்கிறேன்..

Snakes in the Plane, Samuel Jackson பாத்திரத்தில் நடித்திருப்பவர் பாம்புகளிடமிருந்து மக்களைக் காப்பாற்றாமல், "I've had it with these motherf***in' snakes on this motherf***in' plane!" என்ற ஒரே வசனத்தை திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டு இருக்கிறார். இது ஆங்கிலத் திரைப் படமாகையால், பொறுக்க முடியாத கதாநாயகி சூஸன் ஏன் அதையே திரும்பத் திரும்ப சொல்கிறாய்.. என த(தி)ட்டிக் கேட்கிறாள். ஏனென்றால் இணையப் பதிவர்களுக்கு நான் இந்த வசனம் பேசியது பிடித்திருக்கிறது என்று சொல்லி அவளை விமானத்திலிருந்து எறிகிறார்.

வில்லு படத்தை விமர்சித்த ஒரு பதிவர், விஜயும் பிரபு தேவாவும் இணைந்து பட்டையைக் கிளப்பியுள்ளார்கள் என்று பாராட்டியிருந்தார். இதைப் பார்த்து புல்லரித்துப் போய் வில்லு 2010 என்று இதே படத்தை ரீமிக்ஸ் செய்தால், நம்ம கதி என்னாவது? (என் தம்பி அதி தீவிர விஜய் ரசிகன். நெற்றியில் விஜய் என்று பச்சை மட்டும் தான் குத்திக் கொள்ளவில்லை. அவனே இந்தப் படத்தை இன்னொரு முறை பார்க்க முடியாது என்று சொல்லிவிட்டான்.)


வில்லு படத்துக்கே விமர்சனம் எழுதும் போது இந்த படத்துக்கு எழுதக் கூடாதா?

நார்னியாவும் நாறினநியாவும் - 2

Wednesday, 4 February, 2009

எட்வர்ட் White Bitchசினால் ஏமாற்றப் பட்டார் என்று தெரிய வரும்போது காமெராவுடன் ஒரு கும்பல் வந்து குதித்து, "எட்வர்ட் சொல்லு.. என்னைக் கிருக்கானாக்கிட்டான்கானு சொல்லு.. காமேராவப் பாத்து சொல்லு" என்று நமைச்சல் கொடுக்கும் 'ட்யூட்', எட்வர்ட் ஒரு அப்பு அப்பிய பிறகு தான் அடங்குகிறார். நம்ம அம்மா டிவியின் கிச்சுகிச்சு.காம், மருத்துவர் ஐயா டிவியின் பலி ஆடு போன்ற ஒரு நிகழ்ச்சி இது.
என்னைக் கிறுக்கனாக்கிட்டாங்கனு சொல்லு..
மற்ற மூன்று பேரும், தங்கள் சகோதரனை மீட்க உதவி கோரி அஸ்லானை சந்திக்கும் முன், பயிற்சி பெற ஹாரி பாட்டரிடம் செல்கிறார்கள். சரியாக குறி தவறி அடித்து பெரும்பாலானவர்களைத் தீர்த்துக் கட்டிய பின், நீங்கள் அஸ்லானை சந்திக்கும் தகுதி பெற்று விட்டீர்கள் என்று சான்றிதழ் கொடுத்து விடையனுப்புகிறார் ஹாரி.
(ஹாரி பாட்டர்!!!!)
அஸ்லானின் இடத்தை அடைந்தவுடன், சன் டிவியில் விஜய சாரதி திரும்பிப் பார்க்காமல் ரிவர்ஸிலேயே நடந்து கொண்டு ஒரு நிகழ்ச்சி நடத்தினாரே அது போல அந்த இடத்தின் அருமை, பெருமைகளை ஒருவர் விளக்குகிறார். பட்டாப்பட்டி ட்ராயரைக் கூட ஆல்டர் செய்து டைட்டாக போட்டுக் கொண்டு 'வேர் இஸ் த பார்டி' என்று கேட்கும் ஹீரோக்கள் அவரது உடையைக் காப்பியடிக்கக் கூடும் என்பதால், அவரது புகைப் படத்தை நான் வெளியிடப் போவதில்லை.

நம்ம ஊரு பண்ணையார்களிடம்(இப்போது அரசியல்வாதிகள்) ஏதாவது உதவி கேட்டுப் போனால் பதிலுக்கு உன்னைக் கொடு என்று கேட்பார்களே, அது போல அஸ்லான் கேட்கிறார்(பீட்டர் உட்பட). கலாச்சார சீரழிவு என்று படப்பெட்டியைத் தூக்கிக் கொண்டு ஓட ஆளில்லாத ஆங்கிலப் படமாகையால் நால்வரும் சம்மதிக்கிறார்கள். வாக்கு தவறாமல் அஸ்லானும் போரிட்டு எட்வர்டை மீட்டுக் கொடுத்து விட்டு, உயிர் விடுகிறார். நல்ல வேளை உயிர்தெழவில்லை.
(நல்ல வேளை)
பீட்டர் மன்னனாகப் போகிறான் என்றுத் தெரிந்ததும், முதல் காட்சியில் அவனை நிராகரித்த X-Menனின் காதலி, பீட்டரின் காதலியாகிறாள். என்னால் நினைத்த உருவத்திற்க்கு மாற முடியும், உனக்கு எப்படி இருந்தால் பிடிக்கும் என கேட்கிறாள். மோனோலிஸா போன்ற புருவம், குண்டான கன்னம், குண்டு மாமியின் கைகள், ஒரு நீல குண்டு ப்ரிட்னி ஸ்பியர்ஸ் போல என்கிறான்.
(எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்)
நால்வரும் White Bitchச்சை எதிர்த்துப் போரிட முடிவு செய்கிறார்கள். அஸ்லானின் படையும், X-Men குழுவும் பீட்டர் குழுவுடன் கூட்டணி சேர்கிறார்கள். நாளை போர் என்பதால் இன்று பார்ட்டி என்று முடிவாகிறது. சரக்கு இல்லாமல் பார்ட்டியா? சூஸன் தண்ணியடித்து விட்டு குடம் குடமாக கூட்டணிகள் மீது வாந்தியெடுக்க, அவர்கள் அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுகிறார்கள்.
(ஆதரவு வாபஸ்)
நட்டாற்றில் விடப் பட்ட நால்வரும் போர்க்களத்தில் ஒரு ரிமோட் கன்ட்ரோலைக் கண்டெடுக்கிறார்கள்(Click). ரிமோட்டில் Pause செய்து விட்டு எதிரிகள் அனைவரையும் போட்டுத் தள்ளுகிறார்கள்.
(ரிமோட்)
வில்லியை மன்னித்து விட்டேன் என்று பீட்டர் வசனம் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது வழக்கம் போல் ஜாக் ஸ்பேரோ(Swallows) உயிர்தெழுந்து வந்து, Pirates of the Carribean: The dead Man's Chestடில் வரும் பெரிய சக்கரத்தை ஓட்டத் தெரியாமல் ஓட்டி வந்து வில்லி மேல் ஏற்றிக் கொன்று பழிவாங்குகிறார்.
சரியாக குறி தவறி அடித்தல், குடம் குடமாக பக்கத்தில் இருப்பவர் மேல் வாந்தி எடுத்தல் மற்றும் (யக்) போன்ற ஏற்கனவே பார்த்து சலித்துப் போன காமெடிகளைத் தவிர்த்துப் பார்தால் படம் ஓகே தான்.

ஆனால் நம்ம இந்திர லோகத்தில் நா.அழகப்பன் ரேஞ்சுக்குப் படத்தைக் கிழித்திருக்கிறார்கள். டாவின்சி கோட் பற்றிய காட்சிகளில் கிறிஸ்துவ இறையான்மையைக் காயப் படுத்தியதற்க்காகவும், A சான்றிதழ் கொடுக்கப்பட வேண்டிய இப்படத்திற்க்கு PG-13(13 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள், பெற்றொருடன் பார்க்கலாம்) சான்றிதழ் கொடுக்கப் பட்டதால், குழந்தைகளோடு பார்த்துத் தொலைக்க நேர்ந்ததாலும் இந்தப் படத்தை காறித் துப்பாதவர்களே இல்லை என்றாலும் Box Officeஸில் $39,666,075 அள்ளியிருக்கிறது. நார்னியாவின் Box Office: $291,685,219. ஒரே ஒரு இலக்க வித்தியாசம் தான்.

இருந்தாலும், இந்தப் படத்தைப் பற்றி ஏன் எழுதினேன் என்று அடுத்த பதிவில் சொல்கிறேன்.

Epic movie - நார்னியா மற்றும் நாறினநியா

Monday, 2 February, 2009

நேற்று சன் டிவியில் நார்னியாவை எல்லாரும் கதையில் ஒன்றி நான்கோடு ஐந்தாம் குழந்தையாக பார்த்துக் கொண்டிருந்த போது, நான் மட்டும் விழுந்து விழுந்து சிரித்த படி பார்த்துக் கொண்டிருந்தேன். காரணம் Epic movie.

நம்மூரில் சூப்பர் டென், லொள்ளு சபாவில் ஒரு படத்தைக் கலாய்ப்பது போல, திரைப் படத்தோடு நில்லாமல், தொலைக் காட்சி நிகழ்ச்சி, பேட்டி, விளம்பரம் என்று ரவுண்டு கட்டிக் கலாய்க்கும் வகைப் படம் இது. Scary movie என்று பெயர் வைத்து திகில் படங்களையும், Disaster movie எனப் பெயரிட்டு உலகம் அழியப் போகுது எனப் பூச்சாண்டி காட்டும் படங்களையும் போல நெஞ்சில் நீங்கா இடம் பிடித்த காவியப் படங்களை நக்கலடிக்கும் படம் இந்த Epic movie.

எனக்குத் திரை விமர்சனம் செய்யத் தெரியாதென்பதால், நீங்களே 'டைரக்டர் அங்க நிக்கிறாரு, பின்னிட்டாங்க, பிரிச்சு மேஞ்சுட்டாங்க' எல்லாம் சேர்த்துக் கொள்ளவும். நான் கதையை மட்டும் சொல்கிறேன். கதையும் உங்களுக்குத் தெரிந்திருக்கும் என்பதால், எந்தெந்த படங்கள் கலாய்க்கப் பட்டிருக்கின்றன என்று மட்டும் சொல்கிறேன்.

விதிவசத்தால் ஒன்று சேர்க்கப் பட்ட நான்கு அநாதைகளின் காவியப் பயனம் என்ற அறிமுகத்துடன் படம் தொடங்குகிறது.

டாவின்சி கோட் ஸ்டைலில் அறிமுகமாகும் கடைக் குட்டி லூஸி, குற்றுயிரும் குலையுயிருமாகக் கிடக்கும் தன் தாத்தா கொடுத்த க்ளூ ஒன்றும் புரியாமல், "நான் இன்னும் புத்தகம் படிக்க வில்லை. வேறு க்ளூ கொடுங்கள்" என்று கேட்கிறாள். தாத்தாவும் தலை கீழாக நின்று குட்டிக்கரனம் அடித்து விளக்கி(யே) இறந்து போகிறார். வில்லன் ஸைலஸிடமிருந்து தப்பி நூல் பிடித்தாற் போல் ஒவ்வொரு படியாய் முன்னேறி, "lame" ஒரு ஏழு எழுத்து வார்த்தை என சரியாக(?) கண்டுபிடித்து சாக்லேட் தொழ்ற்சாலை பயனத்திற்கான நுழைவுச் சீட்டை வெல்கிறாள்.

இதே போல் சூஸன் பாம்புகள் சூழ்ந்த விமானத்திலிருந்து எறியப் படும் போதும்(Snakes in the Plane), எட்வர்ட் அனாதை விடுதியிலிருந்து எறியப் படும் போதும்(Problem Child என்று நினைக்கிறேன்), பீட்டர் x menனால் தாக்கப் பட்டு வீழும் போதும் டிக்கெட் பெறுகிறார்கள்.

நான்கு பேரையும் வரவேற்க்கும் சாக்லேட் தொழ்ற்சாலை அதிபர், என் வெற்றியின் ரகசியம் மனித உறுப்புகளை சாக்லெட்டுடன் சேர்ப்பது தான் என்று சொல்லி, லூஸியின் இதயத்தை நோண்டி Little hearts packetடில் போடுகிறார். இவரிடமிருந்து தப்ப ஒரு அலமாரிக்குள் ஒளிகிறாள் நான்சி. அது தான் நார்னியா.


அங்கே அவளைப் பார்க்கும் தம்னஸ்(பாதி மனிதன், பாதி ஆடு), அவள் பெற்றோர்கள் இருவரும் மனிதர்கள் எனத் தெரிந்து அருவருப்படைந்தாலும், குளியலறை, கழிவறை கூட விடாமல் அவரது வீட்டை சுற்றிக் காட்டுகிறார்(இதே போல ஒரு டிவி ஷோ ஏதோ ஒரு ஹிந்தி சேனலில் பார்த்திருக்கிறேன்.)

"உனக்கு ஆபத்து.. உடனே இங்கிருந்து போ.. விவரம் இதில் இருக்கு" என்று சொல்லி வீடியோ காமெரா போன்ற ஒன்றை அவள் கையில் கொடுக்கிறார். அதில் வில்லி பற்றிய தகவல் இருக்கிறது. இது ஒரு நொடியில் வெடித்து விடும் என்று சொல்லி விட்டு, அவள் சுதாரிக்கும் முன் வெடிக்கிறது.(mission impossible)

லூஸியைத் தொடர்ந்து வரும் எட்வர்ட் வில்லி தரும் சரக்கிற்காகவும், அவனைத் திருமணம் செய்து கொண்டு ராஜா ஆக்குகிறேன் என்று சொல்வதாலும், நன்பர்களைக் கூட்டி வர சம்மதிக்கிறான்.


அவனையும், அவனைத் தொடர்ந்து வரும் சூஸன், பீட்டரையும் லூஸி தம்னஸ் வீட்டிற்க்கு அழைத்து செல்கிறாள். அங்கு அவர் கைது செய்யப் பட்டதாகவும், "நீங்கள் நால்வரும் ஒரே பிரசவத்தில் பிறந்த சகோதர, சகோதரிகள் என்றும் அவர் மனைவி(அல்லது கனவன்) பீவர் சொல்கிறது.(நால்வரில் இருவர் வெள்ளையர், ஒருவர் மெக்ஸிக்கன், ஒருவர் நீக்ரோ.. இங்கே நிற்கிறார் டைரக்டர்)

அங்கிருந்து எஸ்ஸான எட்வர்டும் வில்லி மூலம் இதைத் தெரிந்து கொண்டு திருந்துகிறான். நல்லவனாக இருந்தால் நல்லா இருக்க முடியுமா? சிறையில் அடைக்கப் படுகிறான். எட்வர்டின் சிறைத் தோழனாக வரும் Pirates Of caribean, புகழ் Jack Swallows(!) ஒரு பாடலுக்கு நயன்தாரா சேச்சி வகைப் பெண்களுடன் குத்தாட்டம் போட்டு விட்டு எட்வர்டை White Bitchசிடம் போட்டுக் கொடுத்து விட்டு உயிர் விடுகிறார்.


மீதி நாளை..
Blog Widget by LinkWithin
 
சோம்பேறி. Design by Pocket