Views
நம் உடலில் அயோடினின் அளவு ஒரு மில்லி உயர்ந்தாலும் ஆரோக்யத்தைக் கெடுக்கும். நம் ஜீரன மண்டலத்துக்கு அயோடினை எப்படி வெளியேற்றுவது என்று தெரியாது. எனவே, அயோடின் உப்பை பயன்படுத்துவதால் 4 நோய்கள் குணமாகுமென்றால், 40 நோய்கள் புதிதாக வரும்.
மாற்று: இந்து உப்பு என்று பாக்கிஸ்தானில் விளையும் ஒருவகை உப்பு, கடல் உப்பை விட சிறந்தது (குறைவான பாதிப்பையே ஏற்படுத்தும். சுவையில் எந்தக் குறையும் இருக்காது). இது எல்லா நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும்.
2) நான் ஸ்டிக் தவா - 100% கேன்சர் வர வாய்ப்பு இருக்கிறது. தோசை ஒட்டாமல் வருவதற்காக இதில் உபயோகப் படுத்தப்படும் கெமிக்கல் கோட்டிங்கை தினமும் தோசையுடன் சுரண்டி சுரண்டி சாப்பிடுவதால் விரைவில் கேன்சர் வரும்.
கேன்சருக்கு சில டிப்ஸ்: ஆரஞ்சு சாறு தொடர்ந்து சாப்பிட்டு வர தொண்டையில் கேன்சர் மறையும் வாய்ப்பு இருக்கிறது. உணவுக்குப் பதில் திராட்சை (அ) திராட்சை சாறு மட்டுமே சாப்பிட்டு வந்தால் ஆறு மாதங்களில் கத்தியின்றி ரத்தமின்றி மற்ற இடங்களிலுள்ள கேன்சரும் கண்டிப்பாக மறையும்.
3) டீ - அளவோடு அருந்தும் வரை பிரச்சனை இல்லை. அதிகமாக தேநீர் அருந்துவதால் சாதாரன வயிற்றுப் போக்கு முதல் பலப் பல பிரச்சினைகள் வர வாய்ப்பிருக்கிறது. கீழே எறிய வேண்டிய வஸ்துவில் நிறமும், துவர்ப்பும் சேர்த்து 200 ரூபாய் கொடுத்து பருகி வருகிறோம்.
சிறுகுடலுக்கும் பெருங்குடலுக்கும் இடையே கேட் போன்ற ஒரு வால்வ் உள்ளது. வழக்கமாக நாம் உண்ணும் உணவு சிறுகுடலில் ரசமாகி அதன் சக்திகள் உறிஞ்சப்படும் வரை, அந்த வால்வ் திறக்காது. தேநீர் அந்த வால்வை வலுவிலக்க செய்து விடும். சக்திகளும் உறிஞ்சப் படாமல் வெளியேற்றப் படும்.
வெள்ளையர் காலத்தில் நமக்கு அறிமுகப் படுத்தப் பட்ட தேநீர் முதல் தரமானது(ஒரு மாதம் இலவசம் என்ற டகால்டி வேலை செய்து தான் அதை நமக்கு விற்றிருக்கிறார்கள்). இப்போது இரண்டாம், மூன்றாம் தரமும் போய் டஸ்ட் டீயைத் தான் நாம் பருகி வருகிறோம்(இந்த லட்சனத்தில் சூப்பர் டஸ்ட் டீ என்ற கொடுமை வேறு)
அவர்கள் சும்மா இருந்தாலும் மக்கள் சும்மா இருக்க விடாமல், தேனீரில் ரிங் ரிங்காக வர வேண்டும் என்று வற்புறுத்தியதன் விளைவாக, இப்போது அதிகம் நிறத்தையும் சேர்த்து வருகின்றனர். இதனால் லிவர்(liver) சம்மந்தப்பட்ட நோய்கள் வர வாய்ப்பிருக்கிறது.
சில டிப்ஸ்: இஞ்சி சிறு குடல் உறிஞ்சிகளை ஆரோக்யமாக வைத்துக் கொள்ளும்.
நுரையீரலுக்கு அடுத்த பெரிய உள்ளுருப்பான, லிவர் பிரச்சினைகள் குணமாக மஞ்சள் கரிசலாங்கண்ணி இலைகளில் நான்கைந்தை தினமும் மென்று துப்பலாம்.
வயிற்றுப்போக்குக்கு ஒரு டம்ளர் நிறைய ஆரஞ்சு சாறு எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒவ்வொரு சொட்டாக அடி நாக்கில் விட்டு ஐந்து நொடிகளுக்குப் பிறகு உமிழ்நீருடன் விழுங்குங்கள். வாந்தியும், வயிற்றுப்போக்கும் நிச்சயம் நிற்கும்.
இதில் மருந்து ஆரஞ்சு சாறு அல்ல. உங்கள் உமிழ்நீர்(saliva) தான். ஜீரண மண்டலத்துடுக்கு, உமிழ்நீரைப் போன்ற அற்புதமான மருந்து வேறு கிடையாது. (ஒரு முத்தத்தில் 0.7 கிராம் புரோட்டீன், 0.45 கிராம் கொழுப்பு, 0.19 கிராம் வேதியல் பொருள் உள்ளது. 0.50 வகையான பேக்டீரியாக்கள் சாகும்(இதனால் தான் கமல் ஹாசன் இவ்வளவு ஆரோக்கியமாய் இருக்கிறாரோ?))
இவ்வளவு மெனக்கெட முடியாதவர்கள் காலம்காலமாக சொல்லப் படும் ஓமத்திரவம் தேன் கலவையை சாப்பிடலாம்.
பதிவின் நீளம் கருதி, இப்போதைக்கு இவ்வளவு தான் மக்களே! இது தவிர வேறு ஏதாவது நோய்களுக்கு விளக்கம் கேட்க விரும்பினால் கேட்கலாம். எனக்குத் தெரிந்தால் சொல்கிறேன். மூலம் போன்ற சொல்ல வெட்கப்படும் நோய்களைப் பற்றி அனானியாகவாவது வந்து கேளுங்கள். விளக்கக் காத்திருக்கிறேன். தனி மடலில் தொடர்பு கொள்ள sombery@gmail.com.
நான் இதுவரை 18+ எதுவும் எழுதியதில்லை. இனி எழுதப் போவதும் இல்லை என்று நினைக்கிறேன். ஏனென்றால் நானே 18- தான்(அனானியா இருக்குறதுல என்னா ஒரு சௌகரியம்). தயவு செய்து 18+ கேள்விகள் எதுவும் கேட்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
பின்குறிப்பு: நேற்று என்னுடைய 18+ பதிவு சும்மா ஜாலிக்காக ஏப்ரல் ஃபூல் பண்ணுவதற்காக இட்டது. அது ஆயிரக்கணக்கான ஹிட்ஸ் மற்றும் சூடான இடுகையில் இடம் பெற்றது மனதை சந்தோஷப் படுத்துவது போல் தெரிந்தாலும், ஆழ் மனதை அதாவது sub conscious mindடை(தோடா! மேஜர் சுந்தர ராஜன்னு நினைப்பு) வெட்கமும் வேதனையும் அடைய செய்து விட்டது.
வழக்கமாக சரக்கு வைத்துக் கொண்டே மொக்கை போடும் ஒரு பதிவர் அதிசயமாக நேற்று ஒரு பயனுள்ள பதிவிட்டுருந்தார். அதை புறந்தள்ளி விட்டு என் பதிவு சூடான இடுகையில் இடம் பிடித்தது, மேலும் வருத்தி விட்டது.
வழக்கமாக இரண்டு நாட்களுக்கு ஒரு பதிவிடவே சோம்பேறித்தனப் படும் நான், இந்தக் குற்ற உணர்ச்சியின் விளைவாகவே, இரவோடு இரவாக இதைத் தட்டச்சியிருக்கிறேன். தூக்க மப்பில் தவறாக ஏதாவது தட்டச்ச வாய்ப்பிருப்பதால், காலையில் எழுந்ததும் ஒரு முறை சரிபார்த்து விட்டு பதிவேற்றம் செய்கிறேன். குட் நைட் மக்களே!
22 மச்சீஸ் சொல்றாங்க:
பதிவைவிட அந்த 18+ ஏற்படுத்திய உங்கள் மனஉளைச்சல் நயமாக இருக்கிறது ;)
சரி, மூலத்துக்கு என்ன வைத்தியம் இருக்கிறது?
நல்ல பதிவு ... Voted Already...Vijay
நல்ல பதிவு சோம்ஸ், நானும் ஆரோக்கியத்துக்கு மாறனும்னு ஆசை மட்டும் படறேன்.ஆனா நாளை மறுநாள் தொல்லை தாங்க முடியல
நல்ல டிப்ஸ் நன்றி
/*Anonymous said...
பதிவைவிட அந்த 18+ ஏற்படுத்திய உங்கள் மனஉளைச்சல் நயமாக இருக்கிறது ;)
சரி, மூலத்துக்கு என்ன வைத்தியம் இருக்கிறது?*/
வேதனையைப் புரிந்து கொண்டதற்கு மிகவும் நன்றி நண்பரே!
மூலத்திற்கு: காலை வெரும் வயிற்றில், குப்பைமேனி இலையை அம்மியில் அரைத்து, பெரிய நெல்லிக்காய் அளவு உருட்டிக் கொண்டு, கறந்த பாலில் கரைத்து சப்பிடலாம்.
துத்தி இலையை விழுதாக அரைத்து நெல்லிக்காய் அளவு மோரில் கலந்து சாப்பிடலாம்.
கடுமையான மூலம் இருந்தால்(கட்டி வந்து குதத்திற்கு வெளியே துறுத்திக் கொண்டு நிற்குமளவு), துத்தி இலையை கசக்கி இளஞ்சூடான விளக்கெண்னையுடன் சேர்த்து அரைத்து குதத்தில் கட்டிக் கொள்ளலாம். அடுத்த நாள் கட்டி காணாமல் போய் விடும்)
/*Anonymous said...
நல்ல பதிவு ... Voted Already...Vijay*/
மிகவும் நன்றி விஜய். இது போன்ற பதிவுகள் பலரை சென்றடைய வேண்டும்.
/*குடுகுடுப்பை said...
நல்ல பதிவு சோம்ஸ், நானும் ஆரோக்கியத்துக்கு மாறனும்னு ஆசை மட்டும் படறேன்.ஆனா நாளை மறுநாள் தொல்லை தாங்க முடியல*/
நன்றி குடுகுடுப்பை. கொஞ்சம் கொஞ்சமாக ஆரோக்யமான வழ்வு வாழ பழக்கப் படுத்திக் கொள்ளுங்கள்.
/*ஆ.ஞானசேகரன் said...
நல்ல டிப்ஸ் நன்றி*/
மிகவும் நன்றி ஞானசேகரன்.
புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைபூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதயுடன்)
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ....
இவன்
உலவு.காம்
என்ன கொடுமை சோம்பேறி இது...புத்தருக்கு ஒரு போதி மரம் உங்களுக்கு ஒரு 18+ஆ????
நல்லா தூக்கம் வர என்ன மருந்து உட்கொள்ள வேண்டும் .
//உணவுக்குப் பதில் திராட்சை (அ) திராட்சை சாறு மட்டுமே சாப்பிட்டு வந்தால் ஆறு மாதங்களில் கத்தியின்றி ரத்தமின்றி மற்ற இடங்களிலுள்ள கேன்சரும் கண்டிப்பாக மறையும்.//
கேன்சர் மறையுதோ இல்லையோ மனிதன் மறைந்து விடும் சாத்தியம் இருக்கிறது.உணவுல Balanced food இருந்தால் மட்டுமே சுகாதாரம் சாத்தியம்.புரோட்டின்,கார்போஹைட்ரேட்,கொழுப்பு,பைபர்,சோடியம் போன்றவை அளவாக இருக்க வேண்டும்.
அளவுகள் ஆள் ஆளுக்கு வித்தியாசப் படும்.
ஒல்லியாக இருப்பவருக்கு புரோட்டின் சத்து அதிகம் தேவைப் படும்.
குண்டாக இருப்பவர்களுக்கு புரோட்டின்,கார்போஹைட்ரேட் குறைத்து காய்கறி,பழ வகைகளை அதிகப் படுத்த வேண்டும்.
குறைந்த ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு உப்பு அதிகம் Plus vice versa.
உண்பதுடன் உடல்பயிற்சிகள் கட்டாயம்.
உபயோகமான பதிவென்பதால் I would like to break this taboo.
ஒரு ஆராய்ச்சி காபி குடிக்காதே சாயா அடி என்கிறது.
இன்னொரு ஆராய்ச்சி காபியே சாலச் சிறந்தது என்கிறது.
மற்றது ரெண்டையும் தொடாதே என்கிறது.
மீண்டும் சதுரத்தின் துவக்கத்திற்கு எதைக் குடித்தாலும்(கவனிக்க குடித்தாலும்)இதயம்,நுரையீரலுக்கு ஆக்சிஜன் அதிகம் அனுப்பு.
//வெள்ளையர் காலத்தில் நமக்கு அறிமுகப் படுத்தப் பட்ட தேநீர் முதல் தரமானது(ஒரு மாதம் இலவசம் என்ற டகால்டி வேலை செய்து தான் அதை நமக்கு விற்றிருக்கிறார்கள்). இப்போது இரண்டாம், மூன்றாம் தரமும் போய் டஸ்ட் டீயைத் தான் நாம் பருகி வருகிறோம்(இந்த லட்சனத்தில் சூப்பர் டஸ்ட் டீ என்ற கொடுமை வேறு)//
வெள்ளையன் காலத்திலும் நல்லதெல்லாம் கப்பல் கட்டிட்டு டஸ்ட் மட்டுமே தாத்தா,பாட்டிகளுக்கு கொடுத்திருப்பான்.
//அவர்கள் சும்மா இருந்தாலும் மக்கள் சும்மா இருக்க விடாமல், தேனீரில் ரிங் ரிங்காக வர வேண்டும் என்று வற்புறுத்தியதன் விளைவாக, இப்போது அதிகம் நிறத்தையும் சேர்த்து வருகின்றனர். இதனால் லிவர்(liver) சம்மந்தப்பட்ட நோய்கள் வர வாய்ப்பிருக்கிறது.//
வளைகுடா மக்கள் கட்டஞ்சாயா மட்டுமே அருந்துகிறார்கள்.காபின்னு அரபி காபி,டர்கீஷ் காபின்னு டிகாக்சன் தூளோடு குடிக்கிறார்கள்.எல்லாமே Tradionala Drinks.
//சில டிப்ஸ்: இஞ்சி சிறு குடல் உறிஞ்சிகளை ஆரோக்யமாக வைத்துக் கொள்ளும்.//
உபயோகமாத்தான் தெரியுது.
//மாற்று: இந்து உப்பு என்று பாக்கிஸ்தானில் விளையும் ஒருவகை உப்பு, கடல் உப்பை விட சிறந்தது (குறைவான பாதிப்பையே ஏற்படுத்தும். சுவையில் எந்தக் குறையும் இருக்காது). இது எல்லா நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும்.//
ஒரு பாகிஸ்தான் டாக்டர் சொன்னது கடையில பாகிஸ்தான் பேர் போட்ட எந்த மசாலாவும் வாங்கி விடாதே.எல்லாமே கலப்படம் என்றார்.அப்புறம் படிப்பவர்கள் இஷ்டம்.
//காலை வெரும் வயிற்றில், குப்பைமேனி இலையை அம்மியில் அரைத்து, பெரிய நெல்லிக்காய் அளவு உருட்டிக் கொண்டு, கறந்த பாலில் கரைத்து சப்பிடலாம்.
துத்தி இலையை விழுதாக அரைத்து நெல்லிக்காய் அளவு மோரில் கலந்து சாப்பிடலாம்.//
அதென்னங்க எந்த வைத்தியர் பார்த்தாலும் என்ன மாதிரி மரமண்டுகளுக்கு தெரியாத பொருள் அல்லது கடையில விற்காத பொருளாப் பார்த்து வைத்தியம் சொல்றீங்க:)
//ஜீரண மண்டலத்துடுக்கு, உமிழ்நீரைப் போன்ற அற்புதமான மருந்து வேறு கிடையாது. (ஒரு முத்தத்தில் 0.7 கிராம் புரோட்டீன், 0.45 கிராம் கொழுப்பு, 0.19 கிராம் வேதியல் பொருள் உள்ளது.//
மருந்துச் செலவு மிச்சம்:)
//ஏனென்றால் நானே 18- தான்(அனானியா இருக்குறதுல என்னா ஒரு சௌகரியம்)//
தொலைக்காட்சில வர்றதுக்கு ட்ரெய்னிங்க் பீரியட்ல இருக்குறீங்களாக்கும்:)
//வழக்கமாக இரண்டு நாட்களுக்கு ஒரு பதிவிடவே சோம்பேறித்தனப் படும் நான், இந்தக் குற்ற உணர்ச்சியின் விளைவாகவே, இரவோடு இரவாக இதைத் தட்டச்சியிருக்கிறேன்.//
உங்களையெல்லாம் சோம்பேறின்னு சொல்லிகிட்டா நானெல்லாம் சோ.....சோ...சோ...சோம்பேறிக்கு சோம்பேறி கடைசி பெஞ்ச் லிஸ்ட்:)
பதிவுக்கு நன்றி.
/*நான் ஆதவன் said...
என்ன கொடுமை சோம்பேறி இது...புத்தருக்கு ஒரு போதி மரம் உங்களுக்கு ஒரு 18+ஆ????*/
ஏதாவது செய்யனும் பாஸ் என்று தோன்றியதால் மட்டுமே இந்தப் பதிவு. மற்றபடி இதைத் தவிர வேறெந்த உபயோகமான விஷயமும் எனக்குத் தெரியாதென்பதால், நாளையிலிருந்து என் வழக்கமான பணி தொடரும்.
/*Anonymous said...
நல்லா தூக்கம் வர என்ன மருந்து உட்கொள்ள வேண்டும் .*/
தூக்கம் மனம் சம்மந்தப் பட்டது என்பதால், தியானம் தான் மிகச் சிறந்த வழி.
ராஜ நடராஜன்,
முதலில் மிகவும் உபயோகமான உங்கள் கருத்துக்களுக்கு மிக மிக நன்றி.
ஒரு ஏழைக்கு கேன்சர் வந்து, மருத்துவர்கள் கைவிட்ட(அதிக பணம் கேட்டு கை நீட்டிய) நிலையில், ஒரு இயற்கை மருத்துவரின் வழிகாட்டலின் பேரில், ஒரு திராட்சைத் தோட்டத்தில் காவலாளியாக சேர்ந்தாராம். மூன்று நேரமும் திராட்சைகளையே சாப்பிட்டு வந்தவருக்கு, ஆறு மாதங்களில் கேன்சர் குணமாகி விட்டதாம்.
ஒரு வேளை அவருக்கு நீங்கள் சொன்னபடி வாகான உடல் வாகு இருந்திருக்க வேண்டும்.
காப்பி, டீ ஏன் அமுதமாகவே இருந்தாலும் அளவோடு அருந்தினால் பிரச்சனை இல்லை.
குப்பை மேனி இலையெல்லாம் புதர் போல பல இடங்களில் மண்டிக் கிடக்கும். உங்கள் வீட்டில் ஒரு தொட்டியில் நட்டு வைத்தால், அதிகம் நீரூற்ற வேண்டிய அவசியமில்லாமல், அதி வேகமாக வளரும். சில நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்.
மிகச்சிறந்த பதிவு :)
Post a Comment
தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு.