நைஜீரியா ராகவனுக்கு ஒரு பகிரங்க உதவி

Tuesday 31 March, 2009

Views

முன் குறிப்பு: இது ஒரு சோதனைப் பதிவு. என்ன சோதனை என்று கண்டுபிடிப்பவர்களுக்கு, என் வசதிக்கு பொற்கிழியோ, கேப்பைக் களியோ தர முடியாவிட்டாலும், இதயத்தில் இடம் நிச்சயம் உண்டு.

என்ன பதிவிடுவது என்று மண்டை காய்ந்து புலம்பியிருந்த நன்பர் ராகவனுக்கு என்னால் இயன்ற சில டிப்ஸ்.

1) அரசியல் பதிவிடுவதற்க்கு நீங்கள் புலம்புமளவு, உங்களுக்கு விஷயம் தெரிந்திருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. நகைச்சுவையாக எழுத விரும்பினால், நமது அரசியல்வாதிகளின் சென்ற மாத அறிக்கையையும், இந்த மாத அறிக்கையையும் அட்சரம் பிசகாமல் பிரசுரித்து விட்டு ஒரு புன்னகையை(ஸ்மைலி) மட்டும் இணைத்து விடுங்கள். 'அது போன மாசம். நாஞ்சொல்றது இந்த மாசம்' என்பதைத் தலைப்பாகவோ, இறுதியில் பன்ச்சாகவோ வைத்துக் கொள்ளலாம்.

சீரியசாக பதிவிட விரும்பினால், அதே அறிக்கைகளில் :-)க்கு பதில், 'மக்கள் என்ன மண்னாங்கட்டியா?' போன்ற நாலு வசவுகளை இனைத்துக் கொள்ளுங்கள். 'டேய்.. ங்கோ**** பசங்களா' போன்ற வார்த்தைகள் இனைத்திருந்தால் கூடுதல் நலம். அதே வார்த்தையைத் தலைப்பில் சேர்க்கும் தில் உங்களுக்கு இருந்தால், மிகக் கூடுதல் நலம். சூடான இடுகையில் இடம் பிடித்து விடலாம்.

2) 'சக பதிவர்கள் யாராவது காணாம போயிட்டா அவங்களைப் பற்றி எதாவது எழுதலாம்' என்று காத்துக் கொண்டிருப்பதாக எழுதியிருந்தீர்கள். அதெப்படி அவர்களாகக் காணாமல் போவார்கள். நாம் தான் ஆவன செய்து, அவர்களை விரட்டி விட்டு 'நண்பா! எங்கே நீ?' என்று பதிவிட வேண்டும்.

3) கவிதை எழுதுவது சப்ப மேட்டர். நீங்கள் கவிதையென்றால் காத தூரம் ஓடுவேன் என்று குறிப்பிட்டுள்ளதால், அதை இப்போதைக்கு விட்டு விடுவோம்.

4) ஏதாவது ஆப்பிரிக்க, அண்டார்டிக்க கொலை ஸாரி கலைப் படங்களை டிவிடியில் பார்த்து விட்டு திரை விமர்சனம் எழுதுங்கள். முழுப்படமும் பார்த்து மண்டை காய வேண்டிய அவசியமில்லை. Fast forward செய்து ஓட விட்டு, அரை மணிக்கொரு முறை பாஸ் செய்து, சப் டைட்டிலில் என்ன வசனம் வருகிறதோ அதைக் குறிப்பிட்டு 'அங்கன தான் நிக்காரு டைரடக்கரு' என்ற ரீதியில் எழுதலாம்

தமிழ் படமென்றால் ட்ரைலரோ, போஸ்டரோ மட்டும் பார்த்தால் போதும். அதில் எல்லாப் பதிவர்களாலும் சிலாகிக்கப்படும் ஒரு வி.ஐ.பியைப் பற்றி திட்டி உங்கள் மேதாவித்தனத்தைக் காட்டிக் கொள்ளலாம். உதாரணமாக, 'காதல் படமென்றால் ரொமாண்டிக்காகத் தான் இசையமைக்க வேண்டுமென ஏ.ஆர்.ரஹ்மானுக்கு யாரோ தப்பாக சொல்லிக் கொடுத்திருக்கலாம்' என்று எழுதினால், ரஹ்மானை விட நீங்கள் புத்திசாலி என்று படிப்பவர்கள் நினைத்துக் கொள்வார்கள்.

4) சரக்குள்ள பதிவு தான் எழுதுவேன் என்று அடம் பிடிப்பத்தால், 'சரக்குள்ள பதிவு' என்று தலைப்பிட்டு, உள்ளே பதிவில் கீழ்கண்ட சரக்குகளின் படங்களை வெளியிடலாம்.
















5) 'பார்ப்பீனியம் என்றால் என்ன?' என்று தலைப்பிட்டு, பதிவில் 'என்ன? எனக்குத் தெரியவில்லை. அதனால் தான் உங்களைக் கேட்கிறேன். தயவுசெய்து யாராவது விளக்குங்கள்' என்று பதிவிட்டுப் பாருங்கள்.

பிறகு புற்றீசல் போல, இரண்டு க்ரூப்பிலிருந்தும் வரும் கருத்துரைகளுக்கு 'ஹேய்.. நோ.. நோ பேட் வேர்ட்ஸ்', 'மம்மி பாவம்', 'டாடியும் பாவம்', 'மீ? ஐ ஆம் ஈட்டிங் ஒன்லி ஃபுட்ஸ்', 'டோட்டல் ஃபேமிலி டேமேஜ்', 'மீ அவா நோ' போன்ற பதில்களை முதலில் வரிசைக்கிரகமாகவும், பின்பு ரேண்டமாகவும் போட்டு வாருங்கள். நிச்சயம் எல்லா கருத்துரைகளுக்கும் பொருந்தும் அளவு பதில் சொல்லியிருப்பீர்கள்.

6) ஏதாவது பேட்டி வெளியிடலாம். 'ரஜினிகாந்த் நைஜீரியா வரட்டும். அவரைப் பேட்டியெடுத்துப் பதிவிடுகிறேன்' என்றெல்லாம் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. சென்ற பேட்டியில் பேசியதையே திரும்பத் திரும்ப வேறு வார்த்தைகளால் பேசிக் கொண்டிருக்கும் பிரபலங்களின் பேட்டியை விட, அன்றாட வாழ்வில் நம்மை சுற்றி வலம் வரும் யாராவது ஒருவரின் பேட்டி சுவாரசியமாக இருக்கும். (பிரபலங்களும் பாவம் தான். ஒரே கேள்வியை கேட்டுக் கொண்டிருந்தால் ஒரே பதிலை தான் சொல்லிக் கொண்டிருப்பார்கள்.)

திநகர் பேருந்து நிலையத்தில் பிச்சையெடுத்துக் கொண்டிருக்கும் ஒரு பத்து வயது மதிக்கத் தக்க சின்னப் பெண் சொன்ன கதை இருக்கிறதே! அந்தக் அழகான களையான குட்டி கருப்பு முகமும், அதற்கு மிகப் பொருத்தமான பாப் கட் சிகையும், அவள் அழகைப் பற்றி நாங்கள் பேசிக்கொண்டதும் சட்டையைக் கடித்துக் கொண்டே வெட்கத்துடன் சிரித்த சிரிப்பும், 'உங்க அப்பா எங்க?' என்ற கேள்விக்கு குலை நடுங்க வைக்கும் அந்தக் கதையை, இரும்புக் கம்பத்தைக் கட்டிக் கொண்டே புன்னகையும் வெட்கமும் மாறாமல் சொன்ன விதமும் எந்தத் திரைப் படத்திலும் இதுவரை வராதது.

கற்பனை வறட்சியால் நமது கலாச்சாரத்துக்கு ஒத்தே வராத ஆங்கில, ஜப்பானிய திரைப்படங்களின் கதைகளை உருவும் இயக்குனர்களும், அழகான மலையாள திரைப்படங்களில் மசாலா சேர்க்கிறேன் என்ற பெயரில் கேவலப்படுத்தி உயிரை வாங்கும் இயக்குனர்களும், காதைக் கிழிக்கும் அட்டர் ஃப்ளாப்பான தெலுங்குப் படங்களை மொழிபெயர்த்து நம் முழியைப் பெயர்க்கும் இயக்குனர்களும் மேற்கூறிய யோசனையைப் பின்பற்றலாம்.

டிவிடி வாங்க ஆகும் 25 ரூபாய் கூட செலவு செய்ய வேண்டியதில்லை. ஐந்து ரூபாயும் கொஞ்சம் புன்னகையும் போதும்.

23 மச்சீஸ் சொல்றாங்க:

நாமக்கல் சிபி said...

குட் போஸ்ட்!

//டிவிடி வாங்க ஆகும் 25 ரூபாய் கூட செலவு செய்ய வேண்டியதில்லை. ஐந்து ரூபாயும் கொஞ்சம் புன்னகையும் //

♫சோம்பேறி♫ said...

மிகவும் நன்றி சிபி.

அப்பாவி முரு said...

பின்னுறியேப்பா!?

♫சோம்பேறி♫ said...

நன்றிங்க அப்பாவி முரு.. நெசமாத்தான் சொல்றீங்களா?

பாலா said...

//பிறகு புற்றீசல் போல, இரண்டு க்ரூப்பிலிருந்தும் வரும் கருத்துரைகளுக்கு 'ஹேய்.. நோ.. நோ பேட் வேர்ட்ஸ்',//

இது ஒரு சேம்பிள்தான்..!! Quote போடனும்னா.. உங்க பதிவை அப்படியே இங்க காப்பி-பேஸ்ட் பண்ணனும். ஹா.. ஹா.. கலக்கல்!

♫சோம்பேறி♫ said...

நன்றி பாலா.. அம்பூட்டு நல்லாவா எழுதிருக்கேன்.

என் எச்சரிக்கையை மீறி, நீங்கள் இன்னும் sin city பற்றி எழுதாததால் அடுத்த பதிவில் அதைப் பற்றி நானே எழுதப் போகிறேன்.

இராகவன் நைஜிரியா said...

தம்பி என்னாது ... பயங்கர கொலை வெறில இருக்க போலிருக்கு.

எதைப் பற்றியும் எழுதாமயே, எனக்கு சில பின்னூட்டங்கள் திட்டி வருகின்றன. அதுவே சமயத்துல டென்ஷன் ஏத்துது. இதுல இது மாதிரி போடச் சொல்றீயளே... நியமா?

சோம்பேறியா இருந்துகிட்டே இந்த பின்னு பின்றீங்களே, சுறு சுறுப்பா இருந்தா என்னா பின்னுவீங்க...

இராகவன் நைஜிரியா said...

தமிழ் மணம், தமிழிஷ் இரண்டுலும் ஓட்டு போட்டாச்சுபா..

♫சோம்பேறி♫ said...

கொலை வெறில இருக்குறது நெசம் தான். ஆனா உங்க மேல இல்ல.

எதைப் பற்றியும் எழுதாமயே திட்டு வாங்குறதுக்கு, கன்னா பின்னானு பதிவெழுதிட்டு திட்டு வாங்குறது பரவால்லை தானே..

சோம்பேறிக்கு அர்த்தம் நான் எந்த வேலையும் செய்ய விரும்பவில்லை என்பதல்ல. பிடிக்காத எதையும் செய்யப் பிடிக்க வில்லை என்பது தான். ஸோ, மனசுக்குப் பிடிச்ச மாதிரி வேலைன்னா வெளுத்து வாங்குவோம்ல.

உங்க பேரை உபயோகிக்கும் முன் உங்களிடம் கேட்கலாம் என்று உங்கள் profieலில் இ மெயில் ஐடி தேடினேன். கிடைக்கல.

வோட்டுக்கு நன்றி..

நிகழ்காலத்தில்... said...

)\\ 'சக பதிவர்கள் யாராவது காணாம போயிட்டா அவங்களைப் பற்றி எதாவது எழுதலாம்' என்று காத்துக் கொண்டிருப்பதாக எழுதியிருந்தீர்கள். அதெப்படி அவர்களாகக் காணாமல் போவார்கள். நாம் தான் ஆவன செய்து, அவர்களை விரட்டி விட்டு 'நண்பா! எங்கே நீ?' என்று பதிவிட வேண்டும்.\\

இது வேற இருக்கா...

வாழ்த்துக்கள்...

♫சோம்பேறி♫ said...

இன்னும் எவ்வளவோ இருக்கு தெய்வமே.. வாழ்த்துக்களுக்கு நன்றி..

குடந்தை அன்புமணி said...

ம்! நிறைய கத்துக்க வேண்டியிருக்கு!

♫சோம்பேறி♫ said...

ஆமாங்க அன்பு மணி.. ஆனா கத்துக் கொடுக்க தான் யாரும் இல்ல.

http://urupudaathathu.blogspot.com/ said...

நான் இங்கன தான் இருக்கேன்..

http://urupudaathathu.blogspot.com/ said...

அவ்வ்வ்...
இப்படி கூட பதிவு போடலாமா??

http://urupudaathathu.blogspot.com/ said...

சரக்கு பதிவு ஜூப்பர்ர்ர்ர்ர்ர்........

♫சோம்பேறி♫ said...

நன்றி அணிமா.. காப்பி ரைட்டெல்லாம் கிடையாது. நீங்களும் சரக்கு ஐடியாவை follow பண்ணலாம்.

இராகவன் நைஜிரியா said...

// கொலை வெறில இருக்குறது நெசம் தான். ஆனா உங்க மேல இல்ல. //

கேட்கவே ரொம்ப சந்தோஷமா இருக்குங்க..

// உங்க பேரை உபயோகிக்கும் முன் உங்களிடம் கேட்கலாம் என்று உங்கள் profieலில் இ மெயில் ஐடி தேடினேன். கிடைக்கல. //

பத்திரிக்கைகளில் ... கிசு.. கிசு எழுதறமாதிரிங்க...

பேர பாத்தா சந்தோஷமா இருக்கு.. அதனால பர்மிஷன் தேவையில்லை.

♫சோம்பேறி♫ said...

ஹா.. ஹா.. ஓகே ராகவன். இன்னொரு பதிவுல உங்களையும் நயன்தாராவையும் சேர்த்து எழுதிடறேன்.

இராகவன் நைஜிரியா said...

// சோம்பேறி said...

ஹா.. ஹா.. ஓகே ராகவன். இன்னொரு பதிவுல உங்களையும் நயன்தாராவையும் சேர்த்து எழுதிடறேன்.//

வூட்ல குழப்பத்த உண்டு பண்ணக்கூடாது.. ரொம்ப தப்பு..

அது சரிங்க இந்த நயந்தாரா யாருங்க?

♫சோம்பேறி♫ said...

நயன்தாரா யார்னு இங்கே முதல் ஆளா ஒருத்தர் பின்னூட்டி இருக்காரே, அவர் கிட்ட கேளுங்க.. படம் வரைந்து பாகம் குறித்து விளக்குவார்.

Thamiz Priyan said...

கலக்கல்ங்க!

♫சோம்பேறி♫ said...

மிகவும் நன்றிங்க தமிழ் பிரியன்

Post a Comment

தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு.

Blog Widget by LinkWithin
 
சோம்பேறி. Design by Pocket